அவுஸ்திரேலியாவை வீழ்த்தி முத்தரப்பு கிண்ணத்தை வென்றது இந்திய அணி!!

india

அவுஸ்திரேலிய A அணிக்கெதிரான இறுதிச் சுற்றில் 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய A அணி முத்தரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றி சம்பியன் பட்டம் வென்றது.

தென்ஆபிரிக்கா சென்ற இந்திய A அணி முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்றது. மூன்றாவது அணியாக அவுஸ்திரேலிய A அணி விளையாடியது.

லீக் சுற்றில் அசத்திய இந்தியா (2 வெற்றி), அவுஸ்திரேலியா (3 வெற்றி) அணிகள் பிரிட்டோரியாவில் இறுதிச்சுற்றில் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் புஜாரா துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 243 ஓட்டங்கள் எடுத்தது.

அரைசதம் கடந்து ஷிகர் தவான் 62 ஓட்டங்களும், கார்த்திக் 73 ஓட்டங்களும் எடுத்தனர். சுரேஷ் ரெய்னா 17 ஓட்டங்களும், அம்பதி ராயுடு 34 ஓட்டங்களும், விரிதிமன் சகா 31 ஓட்டங்களும் எடுத்தனர்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய அவுஸ்திரேலிய அணி 46.3 ஓவரில் 193 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

அணித்தலைவர் ஆரோன் பின்ச், ஹென்ரிக்ஸ் தலா 20 ஓட்டங்களும், டிம் பெய்ன் 47 ஓட்டங்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் நதீம் 3 விக்கெட்டும், முகமது சமி 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இளம் இந்திய அணி முத்தரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றி கிண்ணத்தை வென்றது.

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய மகா கும்பாபிஷேகம்..!

naraவவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா எதிவரும் 16-09-2013 அன்று நடைபெறவுள்ளது.

சிலவருடங்களாக இடம்பெற்றுவந்த ஆலாய புனருத்தான வேலைகள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ள நிலையில் கும்பாபிஷேக நிகழ்வுகள் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கும்பாபிஷேகத்திற்கான கிரியைகள் இமாதம் 30ம் திகதி (30-08-2013) அன்று ஆரம்பமாகவுள்ளது.

முக்கிய கிரியைகள் விபரம்:

யந்திர பூசை : 30-08-1013 வெள்ளிக்கிழமை கலை 9 மணி.

கர்மாரம்பம் : 11-09-2013 புதன்கிழமை கலை 8 மணி.

யாகாரம்பம் : 14-09-2013 சனிக்கிழமை மாலை 5 மணி.

பிம்பஸ்தாபனம் : 14-09-2013 சனிக்கிழமை இரவு 9.30 தொடக்கம் 11 மணி வரை.

எண்ணைக்காப்பு : 15-09-2013 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை.

கும்பாபிஷேகம் : 16-09-2013 திங்கட்கிழமை காலை 5.45 மணி தொடக்கம் 6.30 மணி வரை.

இவ் உற்சவங்கள் அனைத்தும் சிவஸ்ரீ முத்துஜெயந்திநாதக்குருக்கள் தலைமையில் நடைபெறும்.

 

Untitled-1

வவுனியாவில் மாணவர்களிடையே மோதல் ஒருவர் காயம்..!!

schoolவவுனியாவில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்கள் மோதி கொண்டதால் ஒரு மாணவர் காயமடைந்துள்ளார் . இச் சம்பவம் வவுனியா வைரவபுளியங்குளத்தில் இடம் பெற்றுள்ளது.

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது கடந்த திங்கட்கிழமை மாலை கலை, வர்த்தக பிரிவு மாணவர்களுக்கிடையே ஏற்ப்பட்ட வாய் தகராறு பின்னர் கை கலப்பாக மாறியுள்ளது.

இதில் கலை பிரிவை சேர்ந்த மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு எட்டு தையல் போடப்பட்டுள்ளது.

இதேவேளை அண்மையில் யாழ் பல்கலைகழக வவுனியா வளாக மாணவர்களுக்கிடையே இடம் பெற்ற கைகலப்பில் நான்கு மாணவர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச திரைப்பட விழாவில் பரதேசி படத்துக்கு 8 விருதுகள்..!!

paradesi

லண்டனில் ஒக்டோபர் மாதம் 12ம் திகதி முதல் 18ம் திகதி வரை நடைபெற இருக்கும் 2013ம் ஆண்டுக்கான லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் பரதேசி திரைப்படம் 8 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதர்வா, வேதிகா, தன்ஷிகா நடிப்பில், பாலா இயக்கத்தில் வெளிவந்த படம் பரதேசி. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வலியையும், வேதனையையும் எதார்த்தமாகப் பதிவு செய்திருப்பார் பாலா.

ரெட் டீ என்கிற நாவலைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு ´சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, தற்போது லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் 8 விருதுகளுக்கு இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டுப்பட இயக்குநர், சிறந்த வெளிநாட்டுப் படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த கதாநாயகன், சிறந்த ஆடை வடிவமைப்பு ஆகிய பிரிவுகள்தான் அவை.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்கள் இந்த விழாவில் போட்டியிட்டாலும், அதிகபட்சமாக 8 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரே படம் பரதேசி.

யூடியூப்பைக் கலக்கும் அழகுப் பெண்ணின் வித்தியாசமான திறமை!!(வீடியோ)

சிலருக்கு இயற்கையாகவே சில திறமைகள் ஒளிந்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு பெண்ணை இங்கே காணுங்கள்..

புற்று நோய் பாதிப்பை மோப்பம் பிடித்து கண்டறியும் நாய்கள்!!

OLYMPUS DIGITAL CAMERA

நாயின் மோப்ப சக்தியின் உதவியோடு கர்ப்பப்பை புற்று நோயை கண்டறியலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களை அச்சுறுத்தும் புற்று நோய் பாதிப்புகள் பெரும்பாலான நேரங்களில் காலதாமதமாக கண்டறியப்படுவதால் நோய் பாதித்தவர்களுக்கு சரியான சிகிச்சை அளிக்க முடியாமல் போவதும், இதனால் அவர்கள் உயிரிழக்க நேரிடும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.

இந்நிலையில் நாயின் மோப்ப சக்தி மூலம் பெண்களின் கர்ப்பபை புற்றுநோயை கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் நாய்களை இந்த ஆய்வுக்கு பயன்படுத்தினர்.

இதன்படி கர்ப்பபை புற்றுநோயை உருவாக்கும் செல்கள் நாய்களிடம் மோப்பம் பிடிக்க செய்து பழக்கப்படுத்தப்பட்டது. இதை சோதனை முயற்சியில் நடைமுறைபடுத்தியப்போது நாய்களால் மோப்பம் பிடித்து புற்றுநோய் பாதிப்பு உள்ளது என உறுதி செய்த பெண்களின் ரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்த போது அவர்களுக்கு கர்ப்பபை புற்றுநோய் இருந்தது தெரியவந்தது.

அதன் மூலம் நாய்களின் மோப்ப சக்தி மூலம் கர்ப்பபை புற்றுநோயை கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
பெண்களை தாக்கும் கர்ப்பபை புற்றுநோய் பெரும்பாலான நேரங்களில் காலதாமதமாக கண்டறியப்படுவதால் நிறைய உயிரிழப்புகள் நேரிடுவதால் நாய்களின் உதவியோடு புற்று நோயை கண்டறியமுடியுமென்பது மருத்துவ துறையில் மைல்கல்லாக இருக்குமென்று தெரிவிக்கப்படுகின்றது.

விமானத்தை விட வேகமான வாகனம் : அமெரிக்காவில் புதிய முயற்சி..!!

large

போக்குவரத்து முறைகள் காலத்துக்கேற்ப மாற்றம் கண்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் எத்தகைய போக்குவரத்து முறைகள் எப்படி இருக்கும் என்பதற்கான அடையாளங்களும் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டது.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் , ஹைபர் லூப் (Hyperloop) என்ற பெயரில் புதிய போக்குவரத்து முறை குறித்த செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ரயிலை போன்றே தோற்றம் கொண்ட இந்த வாகனம் ஒலியை விட வேகமாக பறக்கும் விமானத்தின் தொழில் நுட்பத்தை கொண்டதாக இருக்கும் என எலான் மஸ்க் தெரிவித்தார்.

மின்காந்த அலைகளை கொண்டு இயங்கும் இந்த வாகனம் தரையை தொடாமல் காற்றின் மேல் வழுக்கிக் கொண்டும் செல்வதாக இருக்கும். அமெரிக்காவின் முக்கிய நகரங்களான சென்பிரான்சிஸ்கோவுக்கும் லொஸ் ஏஞ்சலிசுக்கும் இடையிலான 600 கிலோ மீட்டர் தூரத்தை இந்த வாகனம் அரை மணி நேரத்தில் கடக்கும் என எலான் மஸ்க் தெரிவித்தார்.

இது விமான பயணத்தை விட இரு மடங்கு வேகமானதாக இருக்கும் என்றும் எலான் மஸ்க் கூறினார். மணிக்கு 800 மைல் வேகத்தில் செல்லும் இந்த வாகனம் செலவு குறைவானதாகவும் பாதுகாப்பு மிக்கதாகவும் இருக்கும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்தார்.

முடிவிற்கு வருகின்றதா ஜக் கலிஸின் கிரிக்கெட் எதிர்காலம்..!!

Jacques-Kallis

தனது ஒருநாள் சர்வதேசப் போட்டி எதிர்காலம் குறித்துத் தென்னாபிரிக்க அணியின் சகலதுறை வீரர் முடிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவின் புதிய பயிற்றுவிப்பாளர் றசல் டொமிங்கோவின் வேண்டுகோள் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவின் டெஸ்ட் அணியில் தொடர்ந்தும் முக்கியமான வீரராகக் காணப்படும் ஜக்ஸ் கலிஸ், இறுதியாக 2012ம் ஆண்டிலேயே ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்றில் பங்குபற்றியிருந்தார். ஆனால் 2015ம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக்கிண்ணத்தில் பங்குபெறும் தனது விருப்பத்தை அவர் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கு முன்னர் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றிய கரி கேர்ஸ்ரனின் பயிற்றுவிப்பின் போது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஜக்ஸ் கலிஸ் விரும்பும் போது பங்குபற்றும் உரிமை வழங்கப்பட்டிருந்தது.

எனினும் புதிய பயிற்றுவிப்பாளராகப் பதவியேற்றுள்ள றசல் டொமிங்கோ அவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்ற மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் வழங்கியுள்ள பேட்டியின் அடிப்படையில் 2015ம் ஆண்டில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிகளில் ஜக்ஸ் கலிஸ் பங்குபெற விரும்பினால் அவர் தென்னாபிரிக்கா சார்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தனது ஒருநாள் சர்வதேசப் போட்டி எதிர்காலம் குறித்து ஜக்ஸ் கலிஸ் முடிவெடுக்க வேண்டிய நிலை ஜக்ஸ் கலிஸிற்கு ஏற்பட்டுள்ளது.

லண்டனில் கொலை செய்யப்பட்ட வவுனியா பெண்ணின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர பெற்றோர் முயற்சி!!

MURDER

லண்டனில் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்ட வவுனியா தவசிகுளத்தைச் சேர்ந்த குணராசா மயூரதியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற் கான முயற்சிகளை பெற்றோர் மேற்கொண்டுள்ளனர்.

7 வயதுடைய பெண் பிள்ளையொன்றின் தாயான கு.மயூரதி மேற்படிப்பை மேற்கொள்வதற்காக கடந்த 2010ம் ஆண்டு லண்டனுக்கு சென்று பிரித்தானிய குடியுரிமை பெற்றிருந்த நிலையில் தனியான வீடொன்றில் வசித்து வந்திருந்தார்.

இந் நிலையில் கடந்த 6 ம் திகதி இவரது வீட்டில் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்ட நிலையில் லண்டன் பொலிஸார் மூலம் தகவல் இவரது பெற்றோருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து மயூரதியின் பெற்றோர் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் இலங்கை வெளிவிவகார அமைச்சினை நாடியுள்ளனர்.

இளவரசர் லூயிஸை மணக்கப்போவது நானே : கலக்கும் குட்டி பாப்பா..!

babyசென்ற மாதம் 22ம் திகதி இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அக்குழந்தைக்கு ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ் எனப் பெயர் வைத்தார்கள். பிரபலங்களை வைத்து காசு பார்க்கும் வியாபார புலிகள், ‘குட்டி இளவரசர்´ பிறந்த உடனேயே ஆண் குழந்தைகளுக்கு என ஒரு மொடல் உடையையும், பெண் குழந்தைகளுக்கு ஒரு மொடல் உடையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதில், முறையே ´ஜோர்ஜ் தான் பின்னாளில் மிகச் சிறந்த மன்னர்´ எனவும், ‘ஒருநாள் நிச்சயமாக நான் தான் இளவரசர் ஜோர்ஜை கல்யாணாம் செய்து கொள்ளப் போகிறேன்´ எனவும் அச்சிடப்பட்டுள்ளது.

ஜேரோவில் உள்ள 28 வயது இளம் தாயான அமி பிராடி , தனது 9 வார பெண் குழந்தையான சியன்னாவுக்கு இந்த அழகிய உடையை அணிவித்து புகைப்படம் எடுத்துள்ளார்.

அதில் சியன்னா ‘ ஒருநாள் நான் நிச்சயமாக இளவரசர் ஜோர்ஜை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்´ என தெரிவிப்பது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது.

அத்தோடு விடாமல், அந்த க்யூட் போட்டோவை பேஸ்புக்கில் ஏற்றி விட்டார் அமி. குறிப்பாக அது இளவரசர் ஹரியின் ரசிகர் பக்கத்தில் ஏற்றப்பட்டவுடன் பரபரப்பு பற்றிக் கொண்டது.

குட்டி இளவரசியின் புகைப்படத்திற்கு தேங்க்ஸ் என கமெண்ட்கள் வரத் தொடங்கிவிட்டதாம்.
முதல் பார்வையில் தவறுதலாக இக்குழந்தைதான் ஜோர்ஜ் என தவறாக புரிந்து கொண்டார்களாம் மக்கள். ஆக மொத்தத்தில் 2 இலட்சம் லைக்குகளைத் தட்டி வாழ்த்தி விட்டார்கள் சியன்னாவை.

இது குறித்து ஆச்சர்யம் தெரிவித்துள்ள செய்னாவின் தாயார், இது தான் எதிர்பார்க்காத ஒன்று எனவும், 2லட்சம் லைக்குகளைப் பார்த்து அப்படியே ஷாக் ஆகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

5000 ஆயிரம் கமெண்ட்கள் வந்துள்ளதாம் செய்னாவின் புகைப்படத்திற்கு சிலவற்றில் ‘மூக்கு அப்படியே கேட் மாதிரியிருக்கிறது´ எனக் கூறி கிச்சு கிச்சு மூட்டியிருக்கிறார்களாம்.

இணையத்தில் ‘வைரஸ்´ போல் பரவி விட்டது செய்னாவின் புகழ். செய்னாவைத் தொடர்ந்து இப்போது நிறைய குட்டிப்பாப்பாக்கள் குட்டி இளவரசருக்காக வரிசையில் நிற்க ஆரம்பித்து விட்டார்களாம். பார்ப்போம், இவர்களில் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது என்று.

ராஜவம்சத்தினர் எப்பவுமே ட்ரெண்ட் செட்டர்கள் தான். ஜோர்ஜ் பிறந்த மறுதினம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கேட் மற்றும் ஜார்ஜ் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாயின.

அவ்வளவுதான், குட்டி ஜோர்ஜ் மற்றும் கேட் உடைகளுக்கு மவுசு கூடிவிட்டது. கேட் போட்டு இருந்த நீல நிற சட்டையும் ,குட்டிக்கு போர்த்தி கொண்டு வந்த வெள்ளை மஸ்லின் துணியும் உலக மக்களின் விருப்பமாகி விட்டது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அந்த வெள்ளி மஸ்லின் துணி போட்டோ வெளியான 4 மணிநேரத்தில் படுபிரபலமாகி விட்டது.

அந்த துணி தயாரித்த கம்பெனியின் வெப்சைட் திண்டாடி விட்டதாம். தொடர்ந்து மக்கள் அந்த வெப்சைட்டில் ஓடர் கொடுத்த வண்ணம் இருக்கின்றனராம்.

இதுவரை கிட்டத்தட்ட 7000 பேருக்கும் அதிகமானோர் அதே வகை துணியினை ஓடர் கொடுத்தார்களாம். ஆனால் கேட் அணிந்திருந்த இந்த உடை அவருக்காக மட்டும் தயாரானது என்று ஓடர் எதுவும் அந்த கம்பெனி எடுத்து கொள்ளவில்லை.

உங்கள் அழகு மேலும் அதிகரிக்க வேண்டுமா??

beauty

அழகு விடயத்தில் பிரச்சினை இல்லாதவர்களே இல்லை. அதற்காக விலை உயர்ந்த அழகு சாதனங்களை முகத்திலும், உடலிலும் வைத்து தேய்க்க வேண்டிய அவசியமில்லை. அன்றாடம் நம் வீட்டில் உபயோகப்படுத்தும் பொருட்களே அழகு சாதனப் பொருட்களாக பயன்படுகின்றன.

அழகாக்கும் தானிய உமி

கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்களிலிருந்து நீக்கப்படும் உமி, தவிடு போன்றவை அழகிற்கு அழகூட்டும் பொருட்களாகப் பயன்படுகின்றன.

விட்டமின் E சத்து மிகுந்த இந்த தானியத்தின் தவிடுகள் முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்குவதோடு முகச் சுருக்கங்களையும் நீக்குகின்றன.
முகத்திற்கு இளமையும், பளபளப்பும் கூட்டுகின்றன. சருமத்திற்கு இதமளிப்பதால் சருமத்திற்கான அழகு சாதன கிரீம்களில் சேர்க்கப்படுகின்றன.

விட்டமின் E சத்து சருமத்திற்கு மிகவும் அத்தியாவசியமானது. தினமும் உணவில் சிறிதளவு கோதுமையை சேர்த்துக்கொண்டால் சருமம் பளபளப்பாகும்.

ஒலிவ், தேங்காய் எண்ணெய்

ஒலிவ் எண்ணையை முகத்தில், கை, கால்களில் பூசி வர சருமம் பள பளப்பாகும். தேங்காய் எண்ணெயும், பொலிவிற்கு ஏற்றது. அடிக்கடி சில மணி நேர இடைவெளியில் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி வர முகம் புத்துணர்சியுடன் திகழும்.

ஒலிவ் எண்ணெயுடன் முட்டை வெள்ளைக் கரு,எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் மாஸ்க் போல போடவும். பத்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் பளிச் தோற்றம் தரும்.

கரட், பீட்ரூட் ஆகியவைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள முகம் இளமைப் பொலிவுடன் திகழும் முதுமைத் தோற்றம் எட்டிப்பார்க்காது.

தேன், வாழைப்பழம்

குளிர் காலமோ கோடை காலமோ சருமத்தில் பளிச் தோற்றத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு வாழைப்பழத்தை நன்கு மசித்து அதில் தேன் கலந்து முகம், கை, கால்களில் பூசி ஊறவைக்கவும். 15 நிமிடம் கழித்து இளஞ்சூடான நீரில் கழுவினால் சருமம் பொலிவு தரும்.

பளிச்சென்ற பற்கள்

சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் சாதாரண உப்பு அயடின் சத்து மிகுந்தது. இது எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது. சிறிது உப்பு கலந்த நீர் கால்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். உப்பு கலந்த நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளபளப்பாகும்.

கண்களுக்குக் கீழே தோன்றும் வீக்கத்தைக் குறைக்கும். எலுமிச்சை சாறுடன் உப்பு கலந்து பற்களில் தேய்த்து வர மஞ்சள் தன்மை மறைந்து பற்கள் பளிச் தோற்றம் தரும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதனை வட்டமாக நறுக்கி கண்களின் மீது வைத்தால் கண்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படும், கருவளையம் நீங்கும். இதேபோல் உருளைக் கிழங்களை வட்டமாக நறுக்கி முகத்தில் தேய்க்க கரும்புள்ளிகள் நீங்கும் கருவளையம் போகும்.

துளசி இலை, கற்பூரம் ஆகியவற்றை அரைத்து, முகத்தில் பூசலாம். புதினாவை அரைத்து, அத்துடன் அரை மூடி எலுமிச்சை பழச் சாறு கலந்து முகத்தில் பூச முகம் பொலிவடையும்.

முதலில் அழகு என்பது மனதை பொறுத்ததுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனம் நன்றாக இருந்தால் புன்னகை முகத்தோடு அனைவரையும் வசீகரிக்கும் முகமாக அழகாக மாறிவிடும்.

அழகுக்கு எதிராக இருப்பது மன அழுத்தம் மட்டுமே எனவே மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.

அனைத்தையும் விட முக்கியமானது தினமும் சராசரியாக 7 மணி நேரம் உறங்குவது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும் முகம் அழகாகும்.

சிறப்பாக விளையாடத் தவறினால் நீக்கப்படுவீர்கள் -ஆஸி. வீரர்களுக்கு எச்சரிக்கை..!

aus‘சிறப்பாக விளையாடத் தவறினால் அணியில் இருந்து நீக்கப்படுவீர்கள்’ என்று அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர்களை, பயிற்சியாளர் டேரன் லீமேன் கடுமையாக எச்சரித்துள்ளார்.

இங்கிலாந்து அணியுடன் நடந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில், செஸ்டர் லி ஸ்ட்ரீட் மைதானத்தில் நடந்த 4வது போட்டியில், ஆஸி. அணி வகையில் தோல்வியைத் தழுவியது.

இரண்டாவது இன்னிங்சில் 299 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, முதல் விக்கெட்டுக்கு 109 ஓட்டங்களை சேர்த்ததுடன் ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்களை எடுத்திருந்ததால் எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஸ்டூவர்ட் பிராடின் அபாரமான வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாத ஆஸி. அணி 224 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

வார்னர் அதிகபட்சமாக 71 ஓட்டங்களை எடுத்தார். ரோஜர்ஸ் 49, கவாஜா, கிளார்க் தலா 21, சிடில் 23 ஓட்டங்களுடன் வெளியேற,மற்ற வீரர்கள் எதிர்ப்பின்றி சரணடைந்தனர்.

ஆஸி. அணி 56 ஓட்டங்களுக்கு கடைசி 8 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்டூவர்ட் பிராடு 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 11 விக்கெட் வீழ்த்திய அவர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து அணி 3,0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் வசப்படுத்தியது.

வெற்றியை தாரை வார்த்த ஆஸி. அணி வீரர்களை அந்நாட்டு ஊடகங்கள் கடுமையாக விமர்சனம் செய்துவரும் நிலையில், ஒழுங்காக விளையாடாத துடுப்பாட்ட வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று பயிற்சியாளர் டேரன் லீமேன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘ துடுப்பாட்ட வீரர்கள் தங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தவறுகளை திருத்திக் கொண்டு சிறப்பாக விளையாடத் தவறுபவர்கள் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள். அவர்களுக்கு பதிலாக திறமையான வீரர்களை தேர்வு செய்ய தயங்கமாட்டோம்’ என்றார்.

இங்கிலாந்து ஏற்கனவே தொடரைக் கைப்பற்றிவிட்ட நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி லண்டன், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் 21ம் திகதி தொடங்குகிறது.

10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாய்பேச முடியாத சிறுவன்..!

arrest1தமிழகத்தில் 10 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 17 வயது வாய்பேச முடியாத சிறுவன் ஒருவனும், இதற்கு உடந்தையாக இருந்த அவனது தந்தையும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா, பர்கூர் பஞ்சாயத்து பெஜலெட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொம்மன். கடந்த பத்தாண்டுக்கு முன் இறந்துவிட்டார்.

இவரது முதல் மனைவி மாதிக்கு குழந்தை இல்லை. இரண்டாவது மனைவி சின்னதாயிக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர்.

இரண்டாவது மனைவியின் கடைசி குழந்தையான, பத்து வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள சாமியார் மடம் என்ற இடத்தில், கடந்த ஆறாம் திகதி இறந்த நிலையில் கிடந்தார்.

இறந்து கிடந்த அக்குழந்தையின் முகம், மற்றும் உடலின் சில பாகங்களில் இரத்த காயங்கள் இருந்தன. இதுகுறித்து, பர்கூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

சிறுமியின் உடல் கோவை மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நடந்த உடற்கூறு ஆய்வில் அச்சிறுமியை யாரோ பாலியல் பலாத்காரம் செய்து, குரல்வளையை நெரித்து கொன்றது தெரியவந்தது.

இதுகுறித்து அந்தியூர் பொலிஸார் நடத்திய விசாரணையில், இறந்து போன சிறுமி, சாமியார் நாகராஜ் என்பவர் வீட்டுக்கு அடிக்கடி, தொலைக்காட்சி பார்க்க சென்றது தெரியவந்தது.

அங்கு, அதே பகுதியை சேர்ந்த சரியாக வாய்பேச முடியாத 17 வயது சிறுவன், வந்து போனதும், அச்சிறுவன் அக்குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததும் தெரியவந்தது.

தவிர, கொலைக்குப்பின், அவரது தந்தையிடம் நடந்த விபரத்தை சைகை மூலம், அச்சிறுவன் தெரிவித்துள்ளார்.

அச்சிறுவனும், அவரது தந்தையும் சேர்ந்து, அச்சிறுமியை அப்பகுதியில் உள்ள புதருக்குள் தூக்கி வீசி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பொலிசார் தந்தையையும், மகனையும் தேடிவந்த இந்நிலையில், அச்சிறுவன், தனது தந்தையுடன் பர்கூர் வி.ஏ.ஓ.முனியப்பனிடம் சரணடைந்து, சிறுமியை கொலை செய்தது குறித்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து அந்தியூர் பொலிஸார் இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

இதற்கிடையில், அப்பகுதி பொது அமைப்பினர், இச்சிறுமி பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில், பொலிஸார் இழுத்தடிப்பு செய்து, வாய் பேச முடியாத, சற்று மனநிலை சரியில்லாத சிறுவன் என்ற ரீதியில் வழக்கை திருப்பி உள்ளனர். உண்மையான நிலையை பொலிஸார் கண்டறிய வேண்டுமென தெரிவித்தனர்.

பாடசாலை ஆசிரியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 14 வயது மாணவன்..!

vavuniyaவகுப்பறையின் கதவை பூட்டிவிட்டு, பாடசாலை ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட 14 வயது மாணவனுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கும் படி உத்தரவிட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி குறித்த பாடசாலையின் ஆசிரியை குற்றம்சாட்டப்பட்ட மாணவனுக்கு தனியாக பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது, ஆசிரியையை கட்டியணைத்த அந்த 14 வயது மாணவன், அவரிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டான்.

அவனது பிடியில் இருந்து தப்பி கதவருகே ஓடிய ஆசிரியை, கதவு பூட்டப்பட்டு இருந்ததை அறிந்தார். ஆசிரியையின் கூச்சலை கேட்ட இதர ஆசிரியர்கள் கதவை உடைத்து ஆசிரியையை மீட்டனர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை அந்த பாடசாலைக்கு வருவதை நிறுத்திக்கொண்டு ´பிஞ்சில் பழுத்த´ அந்த மாணவன் மீது பொலிசில் புகார் அளித்தார்.

பொலிசாரின் விசாரணையில் அந்த மாணவன் ஏற்கனவே ஒரு பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்று சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு, அங்கிருந்தபடியே சம்பவம் நடந்த பாடசாலையில் பயின்று வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, நீதிமன்றத்தில் அவன் மீது பொலிசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை 4 ஆண்டுகள் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கும்படி உத்தரவிட்டார்.

நீர்மூழ்கி கப்பலில் தீ : 18 பேரைக் காணவில்லை..!

subதெற்கு மும்பை கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 18 வீரர்கள் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெற்கு மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சிந்து ராக்சாக் நீர் மூழ்கி கப்பல். நேற்று நள்ளிரவு திடீரென இக்கப்பலில் தீவிபத்து ஏற்பட்டது.

உடனடியாக அருகில் இருந்த மற்றொரு கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் அதன் சேதாரம் தவிர்க்கப்பட்டது.

விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் 16 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்துவருகின்றன. தீ விபத்தில் நீர் மூழ்கி கப்பல் பலத்த சேதமடைந்ததாக தெரிவித்துள்ளார் அதிகாரி ஒருவர். விபத்தில் இருந்து தப்பிக்க பல வீரர்கள் நீரில் குதித்ததாகவும், பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இவ்விபத்தில் 3 அதிகாரிகள் உள்பட 18 வீரர்கள் காணவில்லை எனத் தெரிகிறது. தொடர்ந்து இவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. பொலிசார் அதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது ரஷ்யாவில் கட்டப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலாகும். கடந்த ஆண்டு தான் இது ரஷ்யா கொண்டு செல்லப்பட்டு நவீன கருவிகளுடன் மேம்படுத்தப்பட்டது.

அதிர்ஷ்ட தேவதையான ஹன்சிகா!!

hansika

ஹன்சிகா இந்த வருடம் நடித்து வெளிவந்த தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றதையடுத்து ஹன்சிகாவை திரை உலகினர் அதிர்ஷ்ட தேவதை என அழைக்க ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்து ஹன்சிகாவிடம் கேட்டபோது இதை வெறும் அதிர்ஷ்டம் என கூற முடியாது. என்னை பொறுத்த வரை அதிர்ஷ்டம் என்பது வாய்ப்பு வரும்போது அதை இரண்டு கைகளாலும் பற்றிக்கொள்ள தயார் நிலையில் இருப்பதுதான்.

ஒரு நடிகையாக மழை, வெயில் என பாராமல் உழைப்பதும் இரவு பகல் என தூக்கமின்றி உழைப்பதும் நல்ல கதை, நல்ல தயாரிப்பு நிறுவனம், நல்ல இயக்குனர் தேர்ந்து எடுப்பதும், என் பலம் மற்றும் பலவீனத்தை உணர்ந்து நடிப்பது என என் கடமையை ஆற்றுகிறேன்.

இதற்கும் மேலாக என் தாயின் அறிவுரையும் ஊக்கமும் என் வெற்றியை உறுதி செய்கிறது. இதை எல்லாவற்றையும்விட நான் தத்து எடுக்கும் குழந்தைகளின் மூலம் எனக்கு கிடைக்கும் ஆசியும் எனக்கு இந்த பட்டதை அளித்து இருக்கலாம் என புன்னகையோடு கூறினார்.