சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெப்சி தொழிலாளர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
தென் இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) நிர்வாகிகள் சிலருக்கும், சினிமா டிரைவர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே, சில தினங்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது.
பெப்சி அமைப்பினர் இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வரை, படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள மாட்டோம் எனத் தெரிவித்தனர்.
இதையொட்டி, கடந்த 2 நாட்களாக சினிமா படப்பிடிப்புகளும், தொலைக்காட்சி தொடர்களும் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில், தமிழக தொழிலாளர் நலத் துறை அமைச்சர், இத்துறையின் கூடுதல் கமிஷனர் மற்றும் பெப்சி நிர்வாகிகள் இடையே நடந்த பேச்சு வார்த்தைக்கு பின்பு, பெப்சி வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
லட்சுமி மேனன் வேகமாக வளர்ந்து வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளாராம் ஹன்சிகா.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா.
இருப்பினும் கேரளத்து பெண்ணான லட்சுமி மேனனை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளாராம்.
எனவே லட்சுமி மேனன் குறித்த தகவல்களை தனது உதவியாளர்கள் மூலம் சேகரித்து வருகிறாராம்.
லட்சுமி மேனன் ஹன்சிகா போன்று கவர்ச்சியாக நடிக்காவிட்டாலும் அவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது என்று உதவியாளர்கள் ஹன்சியிடம் தெரிவித்துள்ளார்களாம்.
லட்சுமியின் கைவசம் சித்தார்த், விமல், சசிகுமார், கௌதம் கார்த்திக் படங்கள் உள்ளன.
சேட்டை போன்று தான் நடித்து வரும் படங்களும் சரியாக ஓடாததால் தனது மார்க்கெட் படுத்துவிடும் என்று பயப்படுகிறாராம்.
இதனால் தமிழோடு சேர்த்து தெலுங்கு திரையுலகிலும் கவனம் செலுத்த முடிவு செய்து ஆந்திரக் கரையோரம் வாய்ப்பு தேடியும் வருகிறாராம்.
முன்னணி நடிகைகள் சம்பளத்தை உயர்த்தியதை அடுத்து, இளம் நடிகைகளும் சம்பளத்தை உயர்த்தி உள்ளனர்.
கொலிவுட், டோலிவுட் என இருமொழிகளில் நடிக்கும் த்ரிஷா, நயன்தாரா, இலியானா, அனுஷ்கா, காஜல் அகர்வால் போன்றவர்கள் தங்கள் சம்பளத்தை கோடிகளில் கேட்கத் தொடங்கி உள்ளனர்.
அதை தருவதற்கு தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.
இந்நிலையில் இளம் நடிகைகள் ஹன்சிகா, அமலா பால், அஞ்சலி போன்றவர்களும் சம்பளம் உயர்த்தி உள்ளனர்.
இந்த பட்டியலில் புதிதாக இடம் பிடித்திருக்கிறார் பிரியா ஆனந்த்.
தமிழில் வாமனன் படத்தில் நடித்தவர் பின்னர் சித்தார்த்துடன் நூற்றெண்பது படத்திலும், ஸ்ரீதேவியுடன் இங்லிஷ் விங்லிஷ் படத்திலும் நடித்தார்.
சமீபத்தில் தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல் படத்தில் நடித்த ப்ரியா ஆனந்த், தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார்.
வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை உயர்த்தி கேட்டாராம்.
படத்துக்கு மட்டுமல்ல வர்த்தக நிறுவனங்கள் திறப்பு விழாவுக்கு வருவதற்கும் நடிகைகள் குறிப்பிட்ட தொகை வாங்குகின்றனர். அதற்கான கட்டணத்தையும் பிரியா ஆனந்த் உயர்த்திவிட்டாராம்.
இலியானா, தமன்னாவை போன்று பாலிவுட்டிலும் கால் பதிக்க முயற்சி செய்து வருகிறார் அனுஷ்கா.
தெலுங்கு படங்களில் நடித்தால் தான் பாலிவுட் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், தெலுங்கில், முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
நான் ஈ படத்தை இயக்கிய, தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி, தன் கனவு படமாக ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் தான், படத்தின் நாயகன். தெலுங்கு, இந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் இந்த படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் ராஜமவுலி.
தெலுங்கு, தமிழில் அனுஷ்கா தான் நாயகி என முடிவாகி விட்டது. இதன் இந்தி பதிப்பிலும் தானே நாயகியாக நடிக்க வேண்டும் என தீவிர முயற்சி செய்து வந்தார் அனுஷ்கா.
ஆனால் இந்தி பதிப்பில் அனுஷ்கா நடிப்பதை விட, சோனாக்ஷி சின்கா நடித்தால் தான் நன்றாக இருக்கும் என ராஜமவுலி நினைக்கிறாராம்.
இதனால் பாலிவுட் வாய்ப்பு, கை நழுவி போய் விடுமோ என புலம்புகிறாராம் அனுஷ்கா.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைன் சேமிப்பு வசதியானது பல கோடி பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இதில் தற்போது 7GB வரையிலான இடவசதி தரப்படுகின்ற போதிலும் எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் .edu என்று முடிவடையும் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அதன் மூலம் Sky Drive வசதியை பயன்படுத்த முனையும் மாணவர்களுக்கு மேலதிகமாக 3GB வசதி தரப்படவுள்ளது.
அதாவது மொத்தமாக 10GB சேமிப்பு வசதியை பெற்றுக்கொள்ள முடியும். எனினும் இந்த மேலதிக சேமிப்பு வசதியானது ஒரு வருட காலத்திற்கே வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதற்தர வீடியோ பகிரும் தளமாகக் காணப்படும் YouTube தளத்திலிருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
இவற்றின் வரிசையில் தற்போது Visual Youtube Downloader எனும் ஒரு புதிய மென்பொருளும் இணைந்துள்ளது.
இலகுவான பயனர் இடைமுகம் மற்றும் விரைவான செயற்பாட்டினைக் கொண்ட இம்மென்பொருளானது உயர் தரம் வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படுவதனால் ஏனைய மென்பொருட்களிளை விடவும் சிறந்ததாக இருக்கின்றது.
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது பிரம்மாண்டமான வீடியோ பகிரும் தளமாகவும், முன்னணியிலுள்ள தளமாகவும் காணப்படும் YouTube தளமானது 8வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றது.
2005ம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட இத்தளமானது முதன் முதலாக 20 செக்கன்கள் ஓடக்கூடிய வீடியோவினை தரவேற்றம் செய்து தனது பயணத்தை ஆரம்பித்தது. தற்போது மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டுள்ளதுடன் 1 பில்லியன் வரையான பயனர்களையும் கொண்டுள்ளது.
அத்துடன் தற்போது நிமிடம் ஒன்றிற்கு 100 மணித்தியாலங்கள் வரை நீளம் கொண்ட வீடியோ கோப்புக்கள் உலகெங்கிலுமிருந்து பகிரப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாம் பேஸ்புக்(Facebook) தளத்தை அன்றாடம் ஒரே கணனியில் பயன்படுத்தினாலும் சில சந்தர்பங்களில் பிறிதொரு கணனியில் பயன்படுத்தும் நிலை ஏற்படுகின்றதல்லவா?
அவ்வாறு பயன்படுத்திய பின் வெளியேற(Log Out) மறந்து விட்டால் அல்லது திடீர் என்று துண்டிப்பு ஏற்பட்டு விட்டால் நமது முகப்புத்தக பக்கத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும் இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் செய்ய வேண்டியது ..
நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் கணணி மூலம் உங்கள் முகப்புத்தக கணக்கினுள் நுழையுங்கள். பின் Account Settings ——>Security எனும் பகுதிக்கு செல்லுங்கள். அங்கு Active Sessions என்பதற்கு அருகில் Edit என்பதனை சுட்டுங்கள்.
இனி நீங்கள் எந்த திகதியில், எங்கிருந்து, எதன் மூலம் உங்கள் முகப்புத்தக கணக்கை பயன்படுத்தினீர்கள் என்பதனை பட்டியலிட்டுக் காட்டும். அதில் நீங்கள் வெளியேற(Log Out) மறந்து விட்ட Sessions கண்டு End Activity என்பதனை சுட்டுங்கள்.
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், தானாகவே லைக் போட்டு, கருத்துக்களை(Comment) எழுதும்வைரஸ் ஒன்றினை, வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் எழுதும் நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர்.
நல்ல வேளையாக, இது பிரேசில் நாட்டு பேஸ்புக் கணக்குகளில் மட்டுமே, தற்போதைக்கு,இயங்குகிறது. மற்றநாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலும் பரவும்வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ். இதற்கு ‘Trojan:JS/Febipos’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது கூகிள் குரோம் மற்றும் பயர்பொக்ஸ் இணைய உலாவி(Browser) மென்பொருள் என்றபோர்வையில் கணனியின் உள்ளே நுழைகிறது. இது பாதித்த கணணியை பயன்படுத்துபவர்,பேஸ்புக்கில் உள் நுழைந்துள்ளாரா (LogIn) எனக் கவனிக்கிறது. உள்நுளைந்துள்ள பட்சத்தில், தான்அனுப்பப்பட்டுள்ள தளத்திலிருந்து, கணணி கோப்பு(File) ஒன்றை இறக்கிக் கொள்கிறது.
இதில் பல கட்டளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், மற்றொரு பக்கத்திற்கானஇணைப்பு(Link) அமைத்தல், பதியப்பட்ட கருத்துக்களை(Comment) பகிர்தல் , நண்பர்கள் பக்கத்தில்கருத்துக்களை(Comment) எழுதுதல், ஏற்கனவே எழுதப்பட்டுள்ளவற்றிற்கு கருத்துக்களை அமைத்தல், நண்பர்களை குழுவில் சேருமாறு அழைப்பு(Friend Request) அனுப்புதல் எனப்பல்வேறு செயல்பாடுகளுக்கான கட்டளைகள் இதில் உள்ளன.
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ட்ரோஜன் வைரஸ், தன்னை அனுப்பியவர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு, தன்னை புதுப்பித்துக் (Update) கொண்டு செயல்படுகிறது.மைக்ரோசொப்ட் நிறுவனம், இது போன்ற செயல்களுக்குப் பலியான, ஒரு பேஸ்புக் பக்கத்தினை தொடர்ந்து தன் கண்காணிப்பில் வைத்து இந்த ஆய்வினை நடத்தி, இதனைக் கண்டறிந்தது.
தற்போதைக்கு இந்த ட்ரோஜன் வைரஸ் பிரச்னை, பிரேசில் நாட்டில் மட்டுமே உள்ளது.பிரேசிலியன் மொழியில் மட்டுமே இது சொற்களை அமைக்கிறது. விரைவில் ஆங்கிலத்திலும் இது செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதிலிருந்து தப்பிக்க, தேவையற்ற, நம்பிக்கை கொள்ள முடியாத மென்பொருட்களை(Softwares) தரவிறக்கம்(Download) செய்ய வேண்டாம் என மைக்ரோசொப்ட் மற்றும் பிரபல வைரஸ் எதிர்ப்புநிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.மேலும், பேஸ்புக் தளத்தினைப் பார்த்துப் பயன்படுத்தியபின்னர், அதிலிருந்து கட்டாயமாக வெளியேறிட(Log Out) செய்திட வேண்டும்எனவும் மைக்ரோசொப்ட்அறிவுறுத்தியுள்ளது.
இளைய மகள் சவுந்தர்யாவின் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள முதல் 3டி படம் கோச்சடையான்.
இப்படத்தில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெராப், நாசர், ஷோபனா, ருக்மணி என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடி்ப்பு எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.
இதற்காக ரஜினி உள்ளிட்ட கோச்சடையான் படக்குழுவினர் கேன்ஸ் பட விழாவுக்கு செல்லவிருந்தனர்.
ஆனால் கடைசி நேரத்தில் அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டனர்.
ரஜினியின் உடல்நிலை சரியில்லாததால் கேன்ஸ் பட விழாவை ரத்து செய்துவிட்டதாக ஒரு தகவல் வெளியானது.
ஆனால் இதனை படத்தின் இணை தயாரிப்பாளர் முரளி மனோகர் மறுத்துள்ளதுடன், டிரைலர் ரிலீஸ் ஆகாததற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறிகையில், கோச்சடையான் படத்தின் டிரைலரை பார்த்த ரஜினி, ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்டவர்கள் டிரைலரை இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்யலாம் என்று கூறினார்கள்.
அவசர கோலத்தில் சரியாக செய்யாமல் இன்னும் கொஞ்சம் பொறுமையாக, அற்புதமாக செய்யலாம் என்று ரஜினி கூறியதால் கடைசி நேரத்தில் கேன்ஸ் படவிழாவை ரத்து செய்துவிட்டோம்.
இன்னும் சில தினங்களில் கோச்சடையான் படத்தின் மெருகூட்டப்பட்ட டிரைலர் வெளியாகிவிடும்.
கேன்ஸ் தவிர இன்னும் எத்தனையோ சர்வதேச பட விழாக்கள் இருக்கின்றன. அதில் டிரைலரை வெளியிடுவோம் என்று கூறியுள்ளார்.
கமல்ஹாசன் இயக்கத்தில் உருவாகி வரும் விஸ்வரூபம் 2 இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் இரண்டாம் பாகம் இந்தியாவில் என்று அறிவிப்போடு விஸ்வரூபம் படத்தை முடித்திருந்தார் கமல்.
ஏற்கெனவே கணிசமான காட்சிகளை படமாக்கியும் வைத்திருந்த கமல், மீதிக் காட்சிகளை தாய்லாந்தில் படமாக்கி வருகிறார்.
அங்கு கமலுடன் ஆண்ட்ரியா நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
மேலும் சில நாடுகளிலும் ஷூட்டிங் நடத்தத் திட்டமிட்டுள்ளார், இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற உள்ளது.
இப்படத்தினை ஓஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
மேலும் ஆண்ட்ரியா, பூஜாகுமார், ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த இரண்டாம் பாகத்தை இந்த ஆண்டே, அதாவது அக்டோபர் மாதம் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமாவாசையிலிருந்து ஐந்தாம் நாள், பவுர்ணமியில் இருந்து ஐந்தாம் நாள் இந்நாட்களில் வருவது பஞ்சமி திதி. `பஞ்ச’ என்றால் ஐந்து என்று பொருள். பஞ்சமி திதியன்று விரதமிருந்து குத்துவிளக்கில் ஐந்து எண்ணெய் கலந்து ஐந்து முகத்தினையும் ஏற்றி கல்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்து சுலோகங்கள் கூறி விளக்கிற்கு பூஜை செய்யவும்.
தீபத்தில் எரியும் ஐந்து முகங்களில் ஏதாவது ஓர் தீபத்தை உற்றுப் பார்த்தபடியே மனதை ஒரு முகப்படுத்தி நம்முடைய வேண்டுதல்களை மனதிற்குள் சொல்லி வந்தால் அது நிச்சயம் நிறைவேறும். இப்படி ஜோதியை நோக்கி வழிபடும்போழுது `ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லவும். இப்படிச் செய்தால் அம்பிகையின் அருளாளல் நமது வேண்டுதல்கள் நிறைவேறும்.
கார்த்திகை பெண்கள் 6 பேர் தான் 6 குழந்தையாக அவதரித்த முருகப்பெருமானை வளர்த்தார்கள். அந்த 6 பெண்களால் வளர்க்கப்பட்டதால் முருகப்பெருமானுக்கு `கார்த்திகேயன்’ என்ற பெயரும் உண்டு. மேலும், கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு உரிய விரத நாளாக கருதப்படுகிறது.
அதிலும், கார்த்திகை விரதம் தொடங்க விசேஷ நாளாகும். அதனால், திருக்கார்த்திகை தீபம் அன்று முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள எல்லாக் கோவில்களிலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறார்கள். அவ்வாறு முருகப்பெருமானை விரதமிருந்து வழிபட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
நாம் எந்தவொரு காரியத்தையும் செய்யத் தொடங்கும் முன்பாக முழு முதற்கடவுளாம் விநாயகப்பெருமானை வழிபடுவது வழக்கம். அதைப்போல் திருக்கார்த்திகை நாளில் இருந்து 21 நாட்கள் தொடர்ந்து விரதமிருந்து பிள்ளையாரை வழிபட்டு வர வேண்டும்.ஒவ்வொரு நாளும் ஒரு நூல் திரி தனியாக வைக்க வேண்டும்.
21-வது நாளில் சஷ்டியும், சதையமும் கூடும் நேரத்தில் ஆவல்களை நிறைவேற்றும் ஆனைமுகன் சன்னதியில் 5 வகை பொரி வைத்து, ஆவாரம் பூ அருகில் வைத்து, கருப்பட்டி பனியாரம் செய்து கணபதியை வழிபாடு செய்ய வேண்டும். 21 நாட்கள் எடுத்து வைத்த 21 திரியையும் ஒரே திரியாக்கி வெல்லம் இணைத்த அரிசி மாவை நடுவில் வைத்து இலை எடுத்துக் கொள்வது வழக்கம்.
இந்த சம்பிரதாயம் செட்டிநாட்டு பகுதியில் இன்றும் நிலவி வருகிறது. இந்த விரத வழிபாட்டின் மூலமாக தன விருத்தியும், தான்ய விருத்தியும், இனத்தார் பகை மாறுதலும், எடுத்த செயலை எளிதில் முடிக்கும் ஆற்றலும் கிடைக்கும். மேலும் குழந்தைச்செல்வமும் பெருகும் என்பதும் நம்பிக்கை. 5 வகை பொரியான நெல்பொரி, கம்பு பொரி, சோளப்பொரி, அவல் பொரி, எள்ளு பொரி ஆகியவை இருக்க வேண்டும்.
இந்த பிள்ளையார் விரத நோம்பு மார்கழி மாதம் 14-ம் நாள் அன்று வருகிறது. அன்று பிள்ளையாரை விரதமிருந்து கொண்டாடினால் பெருமைக்குரிய வாழ்க்கை அமையும்.
சனிக்கிழமை தோறும் சிவாலயம் சென்று சிவனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும், அன்றைய தினம் விரதம் ஏற்பதும் சனிக்கிழமை விரதத்தின் முக்கியத்துவமாகும்.இந்த விரதம் கடைபிடிப்பதால் நவகிரகங்களால் ஏற்படும் பாதிப்புகளும் நிவர்த்தியாகும்.
மேலும், ஆரோக்கியம், புகழ், ஆயுள், விருத்தி உண்டாகுகி, குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள், தொல்லைகள் நீங்கி, மனதில் உற்சாகமும், தெளிவும் பிறக்கும்.
தினசரி இரண்டுமுறை மந்திரம் ஜெபித்து தியானம் செய்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் தடுக்கப்படுகிறது என்ற ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மந்திரத்தை உச்சரித்தபடி தியானம், மெடிடேசன் செய்வது முனிவர்கள், சித்தர்களின் நடைமுறை. இந்தமுறைப்படி மெடிடேசன் செய்தால் இதயநோய், பக்கவாதம் ஏற்படாது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தினசரி இருவேளை இருபது நிமிடங்கள் வரை மெடிடேசன் செய்பவர்களுக்கு 48 சதவிகிதம் வரை மாரடைப்பு, பக்கவாதம் மூலம் மரணம் சம்பவிக்கும் வாய்ப்பு குறைகறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.மெடிடேசன் மூலம் அதிகம் கோபப்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் ரத்தக் கொதிப்பு, மன அழுத்தம் ஏற்படுவதும் கட்டுப்படுத்தப்படுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
59 வயதுடைய 201 நபர்கள் இருபிரிவாக பிரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் ஒரு பிரிவினரின் வாழ்க்கை முறையை மாற்றும் உடற்பயிற்சி உணவு வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு மது மற்றும் புகை பிடிப்பதை நிறுத்திவிட்டு மெடிடேசன் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர். 32 வகுப்புகளுக்குப் பின்னர் அவர்களின் பிஎம்ஐ பரிசோதிக்கப்பட்டது.
இருபிரிவினரையும் பரிசோதித்ததில் உடற்பயிற்சி டயட்டில் இருந்தவர்களுக்கு உடல் எடை குறைந்திருந்தது. தினசரி மெடிடேசன் செய்தவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவாக இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர், மெடிடேசன் மூலம் உடலும், மனமும் இணைந்து செயலாற்றுகிறது. உடலின் செயல்பாட்டை மனம் கட்டுப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.
எனவே இதயநோயாளிகளுக்கு மெடிடேசன் முறையை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம் என்று ஆய்வாளர்க கூறியுள்ளனர். இந்த ஆய்வு முடிவு இதயநோய் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
எல்லாம் வல்ல இறைவனிடம் ஒரு கணக்குப் புத்தகம் இருக்கிறது. அதில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பக்கம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஓவ்வொருவருடைய ஒவ்வொரு செய்கையும் அவன் கவனத்திற்கு வராமல் போவதில்லை. செயல்களைச் செய்யும் போதே அவை தானாக அந்தப் பக்கத்தில் பதிவாகி விடும். சித்திரகுப்தன் கணக்கு, நீதித் தீர்ப்பு நாளில் படிக்கப்படும் கணக்கு என்பது போல வேறு வேறு பெயர்களில் அழைத்தாலும் அப்படியொரு கணக்குப் புத்தகம் இருப்பதை பெரும்பாலான மதங்கள் ஒப்புக் கொள்கின்றன.
மனிதன் போடும் கணக்கிற்கும் இறைவன் போடும் கணக்கிற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. மனிதன் பெரியது என்று நினைக்கும் விஷயங்கள், இறைவன் கணக்கில் மதிப்பில்லாதவையாக குறிக்கப்பட்டு இருப்பதும் உண்டு. மனிதன் ஒன்றுமில்லை என்று நினைக்கும் விஷயங்கள் இறைவனின் புத்தகத்தில் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்படுவதும் உண்டு. எனவே ஒரு விஷயத்தில் தன் பங்கை மனிதன் நிர்ணயிப்பதற்கும், அதே விஷயத்தில் அவன் பங்கு இவ்வளவென்று இறைவன் தீர்மானிப்பதற்கும் இடையே பெருத்த வித்தியாசம் இருக்கிறது. மனிதன் தன் வாழ்நாளில் இத்தனை சாதித்தோம் என்று எண்ணி இறைவனிடம் எடுத்துப் போகும் கணக்கும், இறைவன் வைத்திருக்கும் மனிதனின் கணக்கும் பெரும்பாலும் ஒத்துப்போவதில்லை.
மனிதன் எதையும் பெரும்பாலும் பணத்தால் அளக்கிறான். இறைவன் மனத்தால் அளக்கிறான். மனிதன் ஒன்றிற்கு எவ்வளவு செலவானது என்று பார்த்து மதிப்பிடுகையில் இறைவன் அது எத்தனை ஆத்மார்த்தமாய் செய்யப் பட்டது என்பதை வைத்து மதிப்பிடுகிறான். மனிதன் எத்தனை மணி நேரம் பிரார்த்தனையிலும் தியானத்திலும் செலவாகி உள்ளது என்பதை வைத்து தன் இறைபணியை அளக்கையில் இறைவன் அதில் எத்தனை மணித்துளிகள் தன் மீது முழு ஈடுபாட்டுடன் இருந்தது என்பதை மட்டுமே எடுத்துக் கொள்கிறான். சதா இறைநாமத்தை ஜபித்துக் கொண்டு இருந்தும் மற்றவர்களிடம் கடுமையாகவும், நியாயமற்றும் நடந்து கொள்பவன் கணக்கை பாவக் கணக்காக எழுதும் இறைவன் தன்னை வணங்கா விட்டாலும் நேர்மையாகவும், தர்மசிந்தனையுடனும் வாழ்பவன் கணக்கை புண்ணியக் கணக்காகத் தன் புத்தகத்தில் குறித்துக் கொள்கிறான்.
பண்டரிபுரத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன் புண்டலீகன் என்ற இளைஞன் தன் வயது முதிர்ந்த தாய் தந்தையருடன் வாழ்ந்து வந்தான். அவனும், அவனுடைய தாய் தந்தையரும் விட்டலனின் (கிருஷ்ணனின்) பக்தர்கள். தன் வயது முதிர்ந்த தாய் தந்தையர்க்கு புண்டலீகன் மிகுந்த சிரத்தையுடன் சேவை செய்து வந்தான். அவன் பல காலமாக சிறிதும் தளர்ச்சி இல்லாமல் தன் பெற்றோருக்கு சேவை செய்ததைக் கண்டு மனம் உவந்த இறைவன் விட்டலன், தன் மனைவி ருக்மணியுடன் புண்டலீகன் முன் எழுந்தருளினான்.
அந்த சமயத்தில் புண்டலீகன் தன் பெற்றோரின் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தான். தன் முன் பெருமாள் தம்பதி சமேதராக எழுந்தருளினதைக் கண்டு அவன் மனம் மகிழ்ந்தாலும் பெற்றோருக்காகத் தான் செய்து கொண்டிருந்த பணியை நிறுத்தி விட அவன் மனம் ஒப்பவில்லை. அதே நேரத்தில் தான் துணி துவைப்பதால் வழிந்தோடும் அழுக்கு நீர் பெருமாளின் திருப்பாதங்களைத் தொடுவதிலும் அவனுக்கு சம்மதமில்லை. எனவே ஒரு பெரிய கல்லை அவசரமாக அவர்கள் பக்கம் தள்ளி “இறைவனே தாங்கள் இந்தக் கல்லில் சிறிது நேரம் நில்லுங்கள். நான் என் பெற்றோருடைய இந்தப் பணியை முடித்து விட்டுத் தங்களை கவனிக்கிறேன்” என்றான்.
எத்தனையோ கோடி பேர் அந்த இறைவனைத் தரிசிக்க எத்தனையோ ஜென்மங்கள் காத்திருக்கிறார்கள் என்ற போதிலும் புண்டலீகன் தன் கடமைக்குப் பின்பே கடவுள் என்று செயல்பட்டதைக் கண்டு மெச்சி மனம் மகிழ்ந்த விட்டலன் தன் மனைவியுடன் அந்தக் கல்லில் ஏறி நின்று சிலையாகி அங்கேயே தங்கி விட்டான். இன்றும் பண்டரிபுரம் கோயிலில் பாண்டுரங்க விட்டலனாக அவ்வாறே காட்சியளிக்கிறான்.
இறைவன் “ஈகோ” இல்லாதவன் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம். புண்டலீகன் செய்கையை அவன் அலட்சியமாகக் கருதவில்லை. இறைவனுக்கு அவன் மீது கோபம் வரவில்லை. அங்கு அவன் பெற்றோர் மீது வைத்திருந்த அன்பையே இறைவன் மெச்சினான்.
இராமபிரான் மீதிருந்த அன்பில் சபரி என்னும் மூதாட்டி ஒவ்வொரு கனியையும் கடித்துப் பார்த்து இனிப்பான கனிகளையே தேர்ந்தெடுத்து அவருக்குப் படைத்தாள். புளித்த கனிகளை வீசி எறிந்தாள். கடவுளுக்கு இனிப்பான கனிகளையே தர வேண்டும் என்ற மேலான நோக்கில் சபரி தந்த அந்த எச்சில் கனிகளை அமிர்தமாக எண்ணி சாப்பிட்டான் இராமன்.
மனிதனின் கணக்கில் புண்டலீகனின் அலட்சியமும், சபரியின் எச்சிலும் தெய்வகுற்றம். அபசாரம். ஆனால் இறைவனின் கணக்கும் அப்படியே இருக்குமானால் இருவரும் இறை சாபத்திற்கு ஆளாகி இருப்பார்கள். பண்டரிபுரத்தில் பாண்டுரங்க விட்டலனின் கோயில் தோன்றியிருக்காது. சபரி சரித்திரமாகி இருக்க மாட்டாள். இறைவன் எல்லாம் அறிந்தவன். செயலை அது செய்யப்படும் நோக்கத்தை வைத்தே அளப்பவன். அவன் கணக்கில் இருவரும் மிக உயர்ந்து போனார்கள்.
கட்டு கட்டாக பணத்தை கோயில் உண்டியலில் போட்டு தான் பெரிய இறை சேவை செய்து விட்டதாக ஒருவன் இறுமாந்திருக்க, அதே கோயிலின் ஒரு மூலையில் உட்கார்ந்து பெரும்பக்தியுடன் மனமுருக இறைநாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பவன் செயலை அதைவிட மேன்மையானதாக இறைவன் நினைக்க வாய்ப்புண்டு. தானே பசியில் இருக்கும் போது தனக்குக் கிடைத்த உணவை இன்னொரு பசித்தவனுக்குப் பங்கிட்டு சாப்பிடும் செயலை பெரிய இறை சேவையாக இறைவன் கணக்கில் குறித்துக் கொள்வான் என்பது உறுதி.
நாத்திகனாக இருந்தால் கூட நீங்கள் நல்லவனாக இருந்தால் இறைவனின் கணக்கில் உங்கள் இடம் உயர்விலேயே இருக்கும். ஆத்திகனாக இருந்தால் கூட உங்கள் செயல்கள் பலருக்குத் தீமை தருவதாக இருந்தால் உங்கள் இடம் இறைவனின் கணக்கில் தாழ்ந்தே இருக்கும்.
ஈகோ உள்ள மனிதர்களுக்கு புகழ்பாடுவது ஆனந்தத்தை அளிக்கலாம். ஆசைகள் உள்ள மனிதனுக்குப் பணமும், பொருளும் கொட்டிக் கொடுப்பது ஆனந்தத்தை அளிக்கலாம். ஆனால் ஈகோ இல்லாத இறைவனை, விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனை இவை திருப்திப்படுத்தாது. எனவே பணம் கொடுத்தும், புகழ்பாடியும் கடவுளருளைப் பெற்று விடலாம் என்று யாரும் தப்புக் கணக்குப் போட்டு விட வேண்டும். மனிதரின் ஆதரவு பெற இது போன்ற செயல்கள் பலன் தரலாம். ஆனால் இறைவனை இப்படிப்பட்ட தந்திரங்களால் ஏமாற்றி விட முடியாது.
இறையருள் வேண்டுபவர்களே! உங்கள் இதுநாள் வரையிலான செயல்களை மறு மதிப்பீடு செய்யுங்கள். உங்கள் கணக்கு இறைவன் கணக்கோடு ஒத்துப் போகுமா? ஒத்துப் போகாது என்றால் இனியாவது உங்கள் அளவுகோல்களை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் சொற்களும், செயல்களும், வாழ்க்கையும் அந்த அளவுகோல்களில் மேன்மையாக இருக்கட்டும். அப்படி வாழ்வீர்களேயானால் வாழ்க்கையின் முடிவில் உங்கள் கணக்கையும், இறைவன் கணக்கையும் ஒப்பிடும் போது உங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்காது.