வீட்டுக் கழிவறையில் சடலமாக இருந்த புதிய தம்பதி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம், சாமராஜ நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சுதா ராணி. இவர்கள் இருவரும் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் பணியாற்றி வந்தனர்.

இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இவர்களுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் அவர்களது வீட்டிற்கு வந்துள்ளது. அப்போது அவர்கள் வீடு உட்புறமாகப் பூட்டப்பட்டு இருந்தது.

மேலும் எவ்வளவு நேரம் அழைத்தும் வீட்டிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் இவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை அடுத்து போலிஸார் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது கழிவறைக்குள் இருவரும் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவர்கள் இறந்து ஒருநாட்களுக்கு மேல் இருக்கும். இதையடுத்து இருவரது உடலை மீட்ட போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், இவர்கள் திருமணத்திற்கு முன்பு லீவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கழிவறையில் விஷவாயு தாக்கி உயிரிழந்து இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

இருப்பினும் இந்த சம்பவம் குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கழிவறையில் தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் கலாசார சீர்கேடுகள் : இரு மாணவிகளுக்கு காதலர்களால் ஏற்பட்ட கதி!!

யாழில்..

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 14 வயது பாடசாலை மாணவிகள் இருவர் அவர்களது 17 வயது காதலர்களால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காதலர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி இரண்டு சம்பவங்களிலும் கைதான இருவரும் (வயது 17) அண்மையில் நடைபெற்ற சாதாரணப் பரீட்சையில் தோற்றியிருந்தார்கள் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 14 வயது மாணவி பாடசாலைக்குச் செல்வதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டு தனது காதலனுடன் சென்றுள்ளார். அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் – கலாசார சீர்கேடுகள் அதிகம் இடம்பெறுவதாகப் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்ட இடத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு மாணவியைக் காதலன் வன்புணர்ந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த மாணவியைக் காணவில்லை என்று தாயார் பொலிஸாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாகத் தேடுதல் நடத்திய பொலிஸார் மாணவியை மீட்டுள்ளனர்.

அவர் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தனது காதலனால் வன்புணர்வுக்குப்படுத்தப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்துள்ளார். மருத்துவ பரிசோதனையிலும் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து 17 வயதுடைய காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது பாடசாலை மாணவி 17 வயது காதலனுடன் வெளியில் சென்றுள்ள நிலையில், மாணவியின் பெற்றோரின் முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் அவரை மீட்டுள்ளனர்.

மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவர் காதலனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதையடுத்துக் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி.!!

யாழில்..

யாழ்.தென்மராட்சி பகுதியில் பாடசாலை மாணவியுடன் அங்க சேட்டை புரிந்த அயல் வீட்டு நபர் ஒருவரை சாவச்சேரிப் பொலிசார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் இடம்பெற்றபோது தாய் கூலி வேலைக்காக வீட்டை விட்டு வெளியில் சென்ற நிலையில் அயல் வீட்டு நபர் ஒருவர் சிறுமியுடன் சேட்டை விட்டமையை வீடு சென்ற தாயார் அவதானித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் சாவைச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபரைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

சிறுமியை வைத்தியப் பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். மேலும் இச் சம்பவம் தொடர்பில் சாவாச்சேரி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பரீட்சை மண்டபத்தில் மாணவர்களின் மோசமான செயற்பாடு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை!!

பரீட்சை..

சாதாரண தர பரீட்சை முடிவடைந்த அன்று, பரீட்சைக் கூடமாக பயன்படுத்தப்பட்ட வகுப்பறையில் மாணவர்கள் சிலர் செயற்பட்ட விதம் சமூகத்தில் பேசுபொருளாக மாறியிருந்தது.

இதக்போது பரீட்சைக் கூடமாக பயன்படுத்தப்பட்ட வகுப்பறையில் மின் விசிறிகள், மேசைகளை சேதப்படுத்தி நாற்காலிகளை தொங்கவிட்ட நிலையில் மாணவர்கள் சென்றிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரி மாணவர்கள் குழுவொன்று மீது குற்றஞ்சாட்டப்பட்டு, நேற்று (15.06.2023) அவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு அதிபராலும் பொலிஸாரினாலும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த மாணவர்களின் செலவில் சேதமாக்கப்பட்ட வகுப்பறை மற்றும் தளபாடங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காதலனுக்கு அஞ்சி குகைக்குள் இரவை கழித்த 13 வயதுச் சிறுமி!!

மொனராகலையில்..

மொனராகலை தொம்பகஹாவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுககஹகிவுல பிரதேசத்தில் சிறுமி ஒருவர் குகைக்குள் பதுங்கியிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் 13 வயதுடைய சிறுமி காதலனுக்கு அஞ்சி காட்டுப்பகுதிக்கு சென்ற குகையில் தனியாக இரவைக் கழித்துவிட்டு வீடு திரும்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமி வீட்டிற்கு வந்த அவரது காதலன் சிறுமியையும் அவரது தாயையும் அச்சுறுத்தியதாகவும், இதனால் இவ்வாறு சிறுமி அங்கு சென்று ஒழிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது குகைக்குள் இரவைக் கழித்த சிறுமி, பசி தாங்க முடியாமல் மறுநாள் வீடு திரும்பியதாகவும், யாராலும் துன்புறுத்தப்படவில்லை என்றும் சிறுமியின் தாயார் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் தனது மகள் காணாமல் போனதாக தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அத்துடன் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

கோர விபத்தில் சிக்கிய பாடசாலை பேருந்து.. நடந்த விபரீதம்!!

தியத்தலாவையில்..

தியத்தலாவை பகுதியில், பாடசாலை பேருந்து ஒன்றும், தனியார் பயணிகள் பேருந்து ஒன்றும் மோதி விபத்தொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 5 மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொரலந்தையில் இருந்து, பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு பண்டாரவளை நோக்கி பயணித்த பேருந்துடன், மன்னாரில் இருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த தனியார் பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சிறு காயங்களுக்கு உள்ளான 5 மாணவர்களும், பாடசாலை பேருந்தின் சாரதியும், தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தியத்தலாவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வைத்தியர் மர்ம மரணம் – விசாரணையில் வெளியான தகவல்!!

தம்புத்தேகமவில்..

தம்புத்தேகம வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் உத்தியோகபூர்வ இல்லத்தில் படுக்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அமில சந்தகெலும் திஸாநாயக்க என்ற இந்த மருத்துவரின் மரணத்திற்கு காரணமானதாக சந்தேகிக்கப்படும் இன்சுலின் ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர் தற்கொலை செய்துக் கொள்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எரிந்த ஊசிகளை தம்புத்தேகம பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

ஊசிகள் பாதி எரிந்த நிலையில் வீட்டின் பின்னால் காணப்பட்டதாகவும், அவை நீதிமன்ற உத்தரவுப்படி அரசு ஆய்வாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தம்புத்தேகம வைத்தியசாலையில் கடமையாற்றும் இந்த வைத்தியர், தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், கடந்த ஜனவரி 13ஆம் திகதி முதல் இருவருக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறவில்லை எனவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மருத்துவரின் மரணம் குறித்து மனைவிக்கு தெரிவித்ததையடுத்து அவரும் மருத்துவரின் சகோதரரும் வந்து சடலத்தை அடையாளம் கண்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் வைத்தியரின் சடலம் அவரது மனைவி மல்காந்தி மெனிகே திஸாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்கொலை செய்து கொண்ட இந்த வைத்தியர் 3 நாட்களாக பணிக்கு வராத காரணத்தினால் வைத்தியசாலை ஊழியர்கள் மேற்கொண்ட விசாரணையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக விடுதியில் தூக்கில் தொங்கிய யாழ் மாணவன்.. கதறும் உறவுகள்!!

விக்னேஸ்வரன் அபிநஜன்..

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவரின் உடல் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (16.06) மீட்கப்பட்டதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.

ஊர்காவற்துறை நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் அபிநஜன் (வயது 23) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பொரலஸ்கமுவ கட்டுவல பிரதேசத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட மாணவர் விடுதியின் தரைத்தளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விடுதியின் மேல் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் இன்று (16) அதிகாலை 4:30 மணியளவில் எழுந்து கீழே வந்து கொண்டிருந்த போது இதனை கண்டு அச்சமடைந்து ஏனையோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து மற்ற மாணவர்களும் வந்து மாணவர் உயிருடன் இருப்பதாக நினைத்து கயிற்றை அறுத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அதன் அதிகாரிகள் வந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.

மஹரகம மரண விசாரணை அதிகாரி எச்.எம்.டக்ளஸ் ரூபசிறி வந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். நுகேகொட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்ததுடன், நீதவான் விசாரணையும் நடத்த திட்டமிடப்பட்டது.

இச் சடலத்தின் பிரேத பரிசோதனை களுபோவில போதனா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது. மேலும் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், மஹரகம பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சேலக ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒரே நாளில் இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவான தலைகீழ் மாற்றம்!!

இலங்கையில்..

கொழும்பு – செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (16.06.2023) ஆபரண தங்கத்தின் விலையில் திடீரென வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக டொலர் பெறுமதி அதிகரித்து வந்த நிலையில் தங்கத்தின் விலையும் அதிகரிப்பை பதிவு செய்து வந்திருந்ததுடன், 22 கரட் தங்கத்தின் விலையானது 160,000 ரூபா என்ற நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையிலேயே இன்றைய தினம் திடீர் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதன்படி இன்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 155,400 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 168,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 159 ஆயிரம் என்ற மட்டத்திலிருந்தது.

இலங்கையில் தங்க நகை விலையை நிர்ணயிப்பது உலக சந்தையில் காணப்படும் தங்க விலையும், இலங்கையில் நிலவும் டொலரின் பெறுமதியுமே ஆகும் என அகில இலங்கை தங்க வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.

மேலும் இங்கு உள்ள விலையை நிர்ணயிப்பது செட்டியார்தெரு தான் என்றும், உலக சந்தையிலிருந்து கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபா விலை வித்தியாசத்தில் தான் விலை மாற்றம் நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

இந்த நிலையில் இறக்குமதி தடை நீக்கப்பட்டால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது வீழ்ச்சியை சந்திக்கும் என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டு வந்தனர்.

அத்துடன் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரையிலேயே தங்கத்தின் பெறுமதி குறைந்த அளவில் இருக்கும் எனவும், இறக்குமதி தடை நீக்கப்பட்டு டொலரின் பெறுமதி அதிகரிக்க ஆரம்பித்தால் சுமார் இரண்டு இலட்சம் ரூபாவை தங்க விலை எட்டும் சாத்தியம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இவ்வாறான சூழலில் இறக்குமதி தடை விதிக்கப்பட்டிருந்த சுமார் 286 வகையான பொருட்களின் இறக்குமதித் தடைகள் நீக்கப்பட்டுள்ளதையடுத்து, ரூபாவின் பெறுமதியில் சிறியளவு வீழ்ச்சி நிலை அடுத்தடுத்து பதிவாகி வரும் அதேநிலையில் தங்கத்தின் விலையிலும் அதிகரிப்பு பதிவாகி வந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலி!!

நேற்றையதினம் (15.06.2023) மாலை மறவன்குளம் பகுதியில் உள்ள தனது வீடுநோக்கி குறித்த பெண் முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளார்.

இதன்போது கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி அருகில் இருந்த பாலத்தினுள் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியது. விபத்தில் பலத்த காயமடைந்த பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

சம்பவத்தில் மறவன்குளம் பகுதியை சேர்ந்த 61 வயதான பெண்ணே மரணமடைந்தார். விபத்து தொடர்பான விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்

தாய்க்காக தாஜ்மகால் கட்டிய மகன் : நெஞ்சை நெகிழவைத்த சம்பவம்!!

தாஜ்மகால்..

அம்மா இறந்ததால் அவரை நினைவாக மகன் தாஜ்மஹால் வடிவில் நினைவு சின்னம் ஒன்றை அமைத்து உலக மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.

தாயின் நினைவால் தவித்து வந்த அம்ருதீன் அவருக்கு தாஜ்மஹால் வடிவில் கட்டலாம் என திருச்சியிலுள்ள கட்டிட வடிவமைப்பாளரை வரவழைத்து கட்டியுள்ளார்.

இதன்படி, ராஜஸ்தானில் இருந்து பளிங்கு கற்கள், தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு தாஜ்மஹால் வடிவில் அழகிய நினைவாலையம் கட்டப்பட்டது. அதனுள் ஜெய்லானி பீவி அம்மையாரின் சமாதி அமைக்கப்பட்டுள்ளது.

கணவருக்காக எலும்பும் தோலுமாக மாறிய இளம்பெண் : இப்படியும் ஓர் சம்பவம்!!

ரஷ்யாவில்..

கணவரை மதிக்காமல் திரியும் பெண்களுக்கு மத்தியில் கணவர் ஒரு வார்த்தை சொன்னதற்காக உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக மாற்றிக் கொண்ட அதிசய பெண்களும் உள்ளனர் அதுவும் இந்தியாவில் இல்லை .

ரஷ்யாவில் என்றால் பலருக்கும் ஆச்சரியம் தான். ரஷ்யாவின் மிகப்பெரிய நகரமான பெல்கிரேடில் வசித்து வருபவர் இளம் பெண் யானா பாப்ரோவா. இவர் கொழு கொழுவென பூசிய உடல் தோற்றம் பெண்ணாக உயரத்துக்கேற்ற பருமனுடன் தான் இருந்து வந்தார்.

கல்லூரி காலத்தில் இருந்தே உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணமும், ஆசையும் இந்த பெண்ணுக்கு உண்டு. இவருக்கு திருமணமான நிலையில், பெண்ணின் கணவரும் யானாவின் தோற்றம் குறித்து கூறிய கமெண்ட் அடித்துள்ளார்.

உனது கன்னம் கொழு கொழுவென பருமனாக உள்ளது எனக் கூறி அடிக்கடி கிண்டல் செய்துள்ளார். இதை கேட்டதும் தனது உடல் எடையை குறைத்தே தீர வேண்டும் என முடிவெடுத்த யானா, யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத டயட்டில் இருந்து வந்தார்.

இதற்காக அவர், வெறும் பிஸ்கட், டீ, சாக்லேட் போன்றவற்றை மட்டுமே சாப்பிட்டு தீவிர உடற்பயிற்சி செய்த யானா, படிப்படியாக உடல் எடையை குறைத்து தற்போது எலும்பும் தோலுமாக இருக்கும் தோற்றத்திற்கு மாறியுள்ளார்.

5.2 அடி உயரம் கொண்ட யானாவின் உடல் எடை என்னவென்று கேட்டபவருக்கு ஒரு கனம் மயக்கமே வந்துவிடும். ஆம், தற்போது யானாவின் உடல் எடை வெறும் 22 கிலோ தான். இவர் இப்படி மோசமாக உடல் எடையை குறைத்ததால் வேலை பறிபோனது. கணவரும் யானாவை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இந்த விஷயம் எல்லாம், ரஷ்யாவின் NTV நடத்தும் டிவி ஷோவில் பங்கேற்று யானா பேட்டி அளித்து உலகிற்கு பகிர்ந்து கொண்டார். யானாவின் பேட்டியை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷோ ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்டுடியோவில் இருந்து நேரடியாக மருத்துவமனையில் கொண்டு சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அவருக்கு மனநல சிகிச்சையும் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் உடல் நசுங்கி பலி!!

வவுனியா கன்னாட்டி பகுதியில் பாடசாலைக்கு தனது மகளை அனுப்புவதற்காக சென்றதாயும் அவரது 6வயதான மகளும் ஹென்டர் ரக வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்று (16.06.2023) காலை 7மணியளவில் கன்னாட்டி பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக குறித்த தாயும் மகளும் அவர்களது வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்துக்காக காத்திருந்தனர்.

இதன்போது வவுனியாவில் இருந்து மன்னார் பகுதி நோக்கி வேகமாக பயணித்த ஹெண்டர் ரக வாகனம் வீதியை விட்டு இறங்கி வீதி ஓரத்தில் நின்றவர்கள் மீது மோதியது.

விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மற்றொரு சிறுவன் ஹெண்டர் ரக வாகனத்தை கண்டதும் ஓடிச்சென்று விபத்தை தவிர்த்துக்கொண்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த சிவலோகநாதன் சுபோகினி வயது 36, டினுசிகா வயது 6 என்ற இருவரே பலியாகியுள்ளனர்.

குறித்த விபத்து இடம்பெற்ற போது ஹெண்டர் ரக வாகனத்தில் மூவர் பயணித்திருந்தனர். விபத்தை அடுத்து அவர்களில் ஒருவர் தப்பிச்சென்ற நிலையில் ஏனைய இருவரையும் ஊர்மக்கள் விரட்டிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இதேவேளை விபத்தையடுத்து பொறுமை இழந்த பொதுமக்கள் டிப்பர் வாகனத்தை சராமரியாக தாக்கி சேதப்படுத்தியதுடன் அதனை எரிப்பதற்கு முற்பட்டனர்.

இதனால் குறித்த பகுதியில் குழப்பமான சூழல் ஏற்ப்பட்டிருந்ததுடன் மன்னார் வீதியுடனான, போக்குவரத்தும் சிலமணிநேரங்கள் பாதிக்கப்பட்டிருந்தது.

சம்பவஇடத்திற்கு சென்ற பொலிசார் நிலமையை கட்டுப்படுத்தியதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை பறையநாலங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஈழத் தமிழருக்கு ஆசைகாட்டி மோசம் செய்யும் தென்னிந்திய தொலைக்காட்சிகள!!

தொலைக்காட்சிகளில்..

ஈழத்தமிழரை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் செயல்பாட்டினை , சில போட்டிகளை நடத்தும் தென்னிந்திய தொலைக்காட்சிகள் தொடர்ந்து அரங்கேற்றிகொண்டிருக்கின்றன.

பொதுவாக போட்டி நடத்தி வெற்றியாளரை தீர்மானிக்கப்படும். ஆனால் தென்னிந்திய பிரபல தொலைக்காட்சிகளில் அண்மைகாலமாக புலம்பெயர் ஈழத்தமிழர்களை உள்ளீர்க்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுகொண்டிருக்கின்றன.

காரணம் அவர்களது டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக புலம் பெயர்தமிழர்களை தமது போட்டி நிகழ்ச்சிகளில் இணைத்துகொள்கின்றனர். புலம்பெயர் தமிழர்களை இணைத்துகொள்வதால் அவர்களது நிகழ்சிகள் பிரபல்யம் அடைகின்றது என்பதுதான் உண்மை.

ஈழதமிழர்களை உள்ளீர்க்கும் தென்னிந்திய தொலைகாட்சிகள் முதலில் வெற்றியாளரை தீர்மானித்துவிட்டு போட்டியை நடத்துகிறார்களோ என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. அந்த தொலைக்காட்சிகளில் ஒன்று ஈழத் தமிழரை கறிவேப்பிலையாக அதாவது பைனல்வரை அனுமதித்துவிட்டு இறுதியாக பரிசு வழங்காமல் தவிர்ப்பார்கள்.

இன்னொரு தொலைகாட்சியோ அதற்கும் ஒருபடி மேலே சென்று ஈழத் தமிழரை ரேட்டிங்கிற்காக பயன்படுத்திவிட்டு பைனல் வாய்ப்பே வழங்காமல் தவிர்த்துள்ளார்கள்.

கடந்த ஆறு மாதங்களாக தமிழகத்தில் தங்கிருந்த நிலையில் போட்டிகளில் பங்கேற்றிருந்த புலம்பெயர் போட்டியாளருக்கு மட்டுமல்லாது ,இது புலம்பெயர் வாழ் ஈழதமிழர்கள் மத்தியிலும் அவர் வெளியேற்றப்பட்டுள்ளமை ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ஆக மொத்தத்தில் தமிழர் நடத்தாத தொலைக்கட்சியில், தமிழர் நடுவராக இல்லாத மேடையில், ஈழத் தமிழர் திறமைக்கு பரிசும் மதிப்பும் கிடைக்கும் என எதிர்பார்ப்பது எமது முட்டாள்தனமே என பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஆசிரியை : விசாரணைகளில் வெளியான தகவல்!

மாத்தறையில்..

மாத்தறை, ஊருபொக்க – தொலமுல்ல பிரதேசத்தில் ஆசிரியை ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணையில் பல முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

காதல் முறிந்ததால் மனமுடைந்த காதலன், பாடசாலை ஆசிரியையான காதலியின் கழுத்தை அறுத்து நேற்று (14.06.2023) மதியம் கொலை செய்துள்ளார். சித்தாரா மதுமாலி என்ற 26 வயதுடைய பாடசாலை ஆசிரியை ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையைச் செய்ததாகக் கூறப்படும் 30 வயதுடைய சந்தேகநபர் பலா மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மதியம் 1.45 மணியளவில் பாடசாலை முடிந்ததும், பாடசாலை அருகே உள்ள வீட்டிற்கு ஆசிரியர் நடந்து சென்றுள்ளார். இந்த நிலையில் வெறிச்சோடிய பகுதியில் துரத்திச் சென்ற காதலன் கத்தியால் குத்தி பெண்ணின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசிரியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பாடசாலை ஆசிரியை பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்தே குறித்த இளைஞனுடன் பழகியதாகவும் அந்த இளைஞன் அவரது கல்விக்கான பணத்தை உட்பட செலுத்தியுள்ளார். சுமார் பத்து வருடங்களாக காதலித்து வந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞனை அவரது காதலி சில நாட்களாக தவிர்க்க ஆரம்பித்ததில் இருந்து இருவருக்கும் இடையில் சில மனக்கசப்புகள் மற்றும் சண்டைகள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இக்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊருபக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை!!

இலங்கையில்..

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம்(15.06.2023) தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், இன்றைய(15.06.2023) தங்க நிலவரப்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 597,908 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 154,750 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 147,700 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.