வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் விமான நிலையத்தில் பதியும் நடைமுறை நிறுத்தம்!!
வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுச் செல்பவர்களை விமான நிலையத்தில் பதிவு செய்யும் நடைமுறை இன்று ஜனவரி முதலாம் திகதி முதல் நீக்கப்படுகிறது.
இன்று முதல் பணியகத்தின் தலைமை அலுவலகத்திலும், பிரதான அலுவலகங்கள் சிலவற்றில் மட்டுமே பதிவுகள்...
இலங்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கவுள்ள ரஷ்யா!!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு நிபந்தனையற்ற அடிப்படையில் ஆதரவளிக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
நிபந்தனைகளின் அடிப்படையில் ரஷ்யா இலங்கைக்கு ஆதரவளிப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி...
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வீட்டுக்காவலில் என்ற செய்தி உண்மையில்லை!!
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ் டில்கோ விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்று கொழும்பு குடிவரவு குடியகல்வு பிரிவின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி...
இந்த ஆண்டு அபிவிருத்தியை நோக்கிய பயணமாக அமையும் : வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!!
மலர்ந்திருக்கும் புத்தாண்டு அபிவிருத்தி தசாப்தத்தில் மேலும் பல கருத்திட்டங்களுக்கு வழிவகுக்குமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இப்புத்தாண்டு பொருளாதாரம் மற்றும் அரசியல் துறைகளில் மிகக் குறிப்பிடத்தக்க ஆண்டாகும் என குறிப்பிட்டுள்ள...
வவுனியா அட்டமஸ்கட சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான தேரர் பிணையில் விடுதலை!!
வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் இடம்பெற்ற சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 6ஆம் திகதி சிறுவர் இல்லத்தில் வாழ்ந்த சிறுவன் ஒருவன் தாக்கல்...
புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்யும் திட்டமில்லை : பந்துல குணவர்தன!!
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்யும் திட்டமில்லை என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை...
ஆற்றில் மிதந்த சிசுவின் சடலம் மீட்பு!!
மஹியங்கனை, நிதன்கல பிரதேசத்தில் ஆற்றில் மிதந்து வந்த சிசுவொன்றின் சடலத்தை மஹியங்கனை பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர்.
மஹியங்கனை, நிதன்கலை மற்றும் ஹத்தட்டாவ பிரதேசத்தை அண்மித்த ஆற்றிலிருந்தே இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒன்பது மாதமுடைய பெண் சிசுவே...
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகலா : அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!!
பிரதமர் பதவியில் இருந்து விலகப்போவதாக மன்மோகன் சிங் அறிவிக்க உள்ளதாக டெல்லி வட்டாரங்களில் வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதனை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு...
வவுனியா தமிழ்ச் சங்கம் நடாத்திய திருவாசக விழா!!(படங்கள்)
வவுனியா தமிழ்ச் சங்கம் நடாத்திய திருவாசக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா ஆதிவிநாயகர் ஆலய பாலாம்பிகை மண்டபத்தில் இடம்பெற்றது
வவுனியா தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடை பெற்ற இவ் விழாவில்...
டெல்லியில் வரலாறு காணாத அளவில் கடுங்குளிர்!!
டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் வட மாநிலங்களில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடுங்குளிர் வாட்டி வருகிறது. ஆனால் இந்த ஆண்டு தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு கடுங்குளிர் நிலவுகிறது.
அத்துடன் குளிர் காற்றும்...
முதல்முறையாக இஸ்லாமிய நீதிமன்றத்திற்கு பெண் நீதிபதி!!
பாகிஸ்தானில் இஸ்லாமிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் ஷரியா நீதிமன்றம் கடந்த1980 ஆம் வருடம் ஏற்படுத்தப்பட்டது.
அப்போது பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளராக இருந்த ஜெனரல் ஜியா-உல்-ஹக் பாகிஸ்தானிய நிறுவனங்களை இஸ்லாமிய திட்டங்களுக்கு மாற்றும் விதமாக இந்த நீதிமன்றத்தை...
கொழும்பு வந்த ஜப்பான் கப்பலில் கதிரியக்க தாக்கம் : திருப்பியனுப்பியதால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டது!!
கொழும்பு துறைமுகத்தில் அவதானத்துடன் இருந்த சுங்க அதிகாரிகள் கதிரியக்கம் படிந்திருந்த ஒரு கொள்கலனை சரியான வேளையில் கண்டுபிடித்ததனால் கொழும்பு மாநகரமே கதிரியக்க தாக்கத்தில் மூழ்க வேண்டிய ஆபத்து தவிர்க்கப்பட்டது.
ஜப்பானின் யொக்கோ ஹோமா துறைமுகத்தில்...
ஐநா மனித உரிமைகள் பேரவையில் கியூபா, இலங்கைக்கு உதவுவதாக உறுதியளிப்பு!!
இலங்கையின் நட்பு நாடுகளில் ஒன்றான கியூபா, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாத கூட்டத்தொடரின் போது வரக்கூடிய இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிக்க உதவுவதாக உறுதியளித்துள்ளது.
கொள்கை அடிப்படையில் எந்த ஒரு நாட்டுக்கும்...
மதவாச்சி – மன்னார் வீதியில் இளைஞன் சடலமாக மீட்பு!!
மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் வீதியில் உள்ள மைல் கல்லுக்கருகில் நபர் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்த இந்நபர் மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மதவாச்சி...
பேராதனை மனநோயாளர் விடுதியில் ஒருவர் அடித்துக் கொலை!!
பேராதனை வைத்தியசாலையின் மனநோயாளர் பிரிவில் நோயாளி ஒருவர் சக நோயாளியை அடித்துக் கொலை செய்துள்ளார். கட்டில் கம்பியின் மூலம் கழுத்து மற்றும் முகப்பகுதியை தாக்கியதன் காரணமாக நோயாளி உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை இந்த சம்பவம்...
பல்கலை மாணவியும் 11 வயது சிறுவனும் தூக்கிட்டு தற்கொலை!!
வீரகுல ஆயுர்வேத பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று காலை 9.45 மணியிலிருந்து பிற்பகல் ஒரு மணிக்கு இடையிலான காலப்பகுதியில் பல்கலைக்கழக விடுதியில் இம்மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக...