இலங்கையில் தற்போது பெருமளவானோர் கடவுச்சீட்டுக்களை பெறும் நோக்கில் குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு வருகை தந்த மக்களிடம் இது தொடர்பில் எமது செய்தி குழு வினவியது.
அதனடிப்படையில், பெரும்பாலானோர் தாம் வெளிநாடுகளுக்கு செல்லும் நோக்கில் கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்ள நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி அதிகரிப்பினையே காரணமாக காட்டியுள்ளனர்.
அத்துடன் தாயொருவருக்கே ஊடச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ண முடியாத சூழ்நிலை நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில் குழந்தைக்கு பாலூட்ட கூட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், இன்னும் சிலர் இனியாவது மக்கள் இளைஞர்களை ஆட்சிக்கு கொண்டு வரும் வகையில் வாக்குகளை வழங்கி, நாட்டின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. இந்த விடயத்தை சாதாரண கருத முடியாதென பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பினால் இந்த மரணங்கள் அதிகரித்துள்ளதா என ஆராய்ந்து பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மரணங்கள் அதிகரிப்பு குறித்து இந்த நேரத்தில் நிலையான அறிவிப்பு ஒன்றை தற்போதே வெளியிட முடியாதென அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் சுகாதார பிரிவினர் கலந்துரையாடல் மேற்கொள்வது முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மரணம் தொடர்பில் தொற்று நோய் விஞ்ஞான பிரிவினர் ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
எங்களுக்கு தெரியாமலேயே கொவிட் தொற்று அதிகரிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளதா என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்தியர் தெரிவித்துள்ளார். இந்த நிலைமை காரணமாக அனைவரும் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மற்றும் காற்று என்பவற்றினால் பா.தி.ப்படைந்த 21 வீ.டுகளுக்கு இ.ழப்பீடு வ.ழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அ.னர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருவதுடன், அவ்வப்போது காற்றும் வீசி வருகின்றது. இதனால் குளத்து நீர்மட்டம் அதிகரித்து வருவதுடன் சில தாழ் நிலப் பகுதிகளிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக மழையுடன் கூடிய காற்று காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம், இராசேந்திரகுளம், விக்ஸ்காடு ஆகிய பகுதிகளில் 15 வீடுகளும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் சூடுவெந்தபுலவு பகுதியில் 6 வீடுகளும் ஆக 21 வீ.டுகள் ப.குதியளவில் சே.த.ம.டைந்துள்ளன.
குறித்த வீ.டுகளுக்கு ஏற்பட்ட பா.தி.ப்.பு குறித்து பிரதேச செயலகம் ஊடாக மாவட்ட அ.னர்த்த முகாமைத்துவ பிரிவு ம.திப்பீடுகளை மேற்கொண்டுள்ளதுடன், 21 வீ.டுகளுக்கும் து.ரிதமாக இ.ழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் மாவட்ட அ.னர்த்த மு.காமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தவிசாளர் இன்று (26.10) மரணமடைந்துள்ளார்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தவிசாளரான வெள்ளைச்சாமி மகேந்திரன் சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
வவுனியா, கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்ததுடன்,
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட்டும் இருந்தார்.
இதேவேளை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மாதாந்த அமர்வுக்காக கடந்த மாதம் 24 ஆம் திகதி கூடிய போது மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில்,
உபதவிசாளர் வெள்ளைச்சாமி மகேந்தினுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு, கொவிட் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் திட்டமிடல் கிளை கொவிட் அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட இருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொவிட் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவர்கள் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே அவர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் திட்டமிடல் கிளை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது இளைஞர், யுவதிகளே அதிகளவில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வழமைக்கு மாறாக அதிகளவானோர் புதிய கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் 33,000 கடவுச்சீட்டுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் தலைமைக் காரியாலத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1500 முதல் 1700 பேர் வரையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஒருநாள் மற்றும் சாதாரண முறையில் இவ்வாறு கடவுச்சீட்டுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி முதல் இரண்டு வாரங்களில் மொத்தமாக தலைமைக் காரியாலயத்தில் 23500 பேர் புதிய கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொவிட் பரவல் காரணமாக நாடு பூராகவும் நடைமுறையில் இருந்த இரவு நேர பயண கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் நடைமுறையில் இருந்த பயணக் கட்டுப்பாடு இன்று நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவோரின் எண்ணிக்கை மற்றும் திருமணங்கள் மீதான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. மண்டபங்களுக்கு உள்ளே நடைபெறும் திருமணங்களில் 100 பேரும், வெளிப்புற திருமணங்களில் 150 விருந்தினர்களும் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதுடன் நாடு இயல்பு நிலைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தேசிய அடையாள அட்டை டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அடுத்த ஆண்டு முதல் உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அடையாள அட்டைகள் பொது மக்களுக்கு வழங்கப்படும். அத்துடன் எதிர்காலத்தில் வீதிப்போக்குவரத்து அபராதங்கள் கூட டிஜிட்டல் மயமாக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பின் இரண்டாம் கட்டமாக வவுனியாவில் 54 இளைஞர், யுவதிகளுக்கு மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தானால் வேலை வாய்ப்பு வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (25.10) குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்குட்பட்ட ஒரு இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு நாடு பூராகவும் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
அதன் முதலாவது கட்டம் நாடு பூராகவும் வழங்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் கட்ட வேலைவாய்ப்பு வழங்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தானின் சிபார்சின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட மூவினங்களையும் 54 இளைஞர், யுவதிகளுக்கே இவ்வாறு வேலை வாய்ப்பு வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா மாவட்டத்தின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப மூவின இளைஞர், யுவதிகளையும் உள்ளடக்கி குறித்த வேலைவாய்ப்பு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொதுஜன பெரமுன கட்சியின் வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் பிரதேச மட்ட செயற்பாட்டளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா மாவட்டத்தில் 16 -17 வயது மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று (25.10) முன்னெடுக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கி பாடசாலைகளை மீள ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைவாக, வவுனியாவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி என்பவற்றில் பாடசாலை மாணவர்களுக்கான கோவிட் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டமையை அவதானிக்க முடிந்தது.
தென்னிலங்கையில் வானில் இருந்து வீழ்ந்த மர்ம பொருள் ஒன்று மாயமானமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. பத்தேகம, குரேகொட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் வாசலில் வானில் இருந்து மர்ம பொருள் ஒன்று விழுந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 22ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திடீரென வானில் இருந்து கல் போன்ற ஒன்று பூமியில் விழுந்துள்ளது. விழுந்தவுடன் அவை நொருங்கியுள்ளதுடன், வெள்ளை நிறத்திலான தூள் போன்று காட்சியளித்துள்ளது.
இந்த சம்பவத்தை அவதானித்த குடும்பத்தினர் உடனடியாக பொலிஸாராருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அதனை பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
இரவு 7 மணியளவில் வானில் இருந்து கல் ஒன்று விழுவதனை சிறுவர்கள் இருவர் அவதானித்துள்ளதுடன் அதில் ஒரு பகுதியை எடுத்து சென்று குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கியுள்ளனர்.
அதனை கையில் பிடிக்கும் போது சூடாக இருந்ததாகவும் அதன் பின்னர் அதனை ஒரு பையில் போட்டு வைத்ததாகவும், பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். பையில் இருந்த கல் போன்ற குறித்த பொருள் சிறிது நேரத்தில் தூள் போன்று மாறியுள்ளது.
இதனை மழையின் போது வானில் இருந்த விழுந்த விண்கற்களாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்ற நிலையில் அதனை ஆராய்வதற்காக கொண்டு சென்றுள்ளனர்.
கொவிட்-19 பரவல் காரணமாகத் தடைப்பட்டிருந்த மாகாணங்களுக்கிடையிலான பேரூந்து சேவை மாணவர்கள் , அத்தியாவசிய தேவை , தொழில் புரிவோரின் வசதி கருதி (அவர்களுக்கு மாத்திரம்) குறித்த பேருந்து சேவை இன்று முதல் நாடளாவிய ரீதியில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கிடையிலான பேரூந்து சேவைகள் இன்று காலை தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் இச் சேவையில் ஈடுபட்டுள்ளதுடன் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து கொழும்பு, கண்டி, அக்கரைப்பற்று , திருகோணமலை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டிருந்தன.
நாடு முழுவதுமுள்ள அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலைகளை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்திலுள்ள ஆரம்ப பிரிவு பாடசாலைகளும் சுகாதார நடைமுறைகளுடன் ஆரம்பமானது.
200 க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகள் முதற் கட்டமாக 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. அதற்கமைய இரண்டாம் கட்டத்தின் கீழ் 200 க்கும் அதிகமான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகிய சமயத்தில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றதுடன் அதிபர் ஆசிரியர்களுக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.
வவுனியா மாவட்டத்தில் பெரும்பாலான பாடசாலைகளில் அதிபர் , ஆசிரியர்களின் வரவு அதிகரித்து காணப்பட்ட போதிலும் மாணவர்களின் வரவு சற்று குறைவடைந்த நிலையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா நகரப் பகுதியில் இராணுவ பிக்கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (24.10) மதியம் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் இருந்து புகையிரத வீதி நோக்கி மோட்டார்சைக்கிள் ஒன்று சென்று கொண்டிருந்த போது, மக்கள் வங்கி முன்பாக நின்ற இராணுவ பிக்கப் ரக வாகனம் வீதியில் திடீரென திரும்ப முற்பட்டவேளை மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகள முன்னெடுத்துள்ளனர்.
வவுனியாவில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் குற்றத் தடுப்பு பிரிவு பொலிசாரால் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, இலுப்பையடி பகுதியில் வைத்து குறித்த இளைஞன் இன்று (24.10) கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, இரண்டாம் குறுக்குதெரு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வீடு ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த 3 பவுண் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் என்பன திருடப்பட்டிருந்தன.
இது தொடர்பில் வெள்ளிக்கிழமை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் வீட்டு உரிமையாளரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.பீ.மானாவடு அவர்களின் வழிகாட்டலில்,
குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சதுரங்க தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட்டுகளான திஸாநாயக்க, திலீப் மற்றும் பொலிஸ் கொன்டபிள்களான உபாலி, சமீர, தயாளன், திஸாநாயக்கா விக்கிரமசூரிய தலைமையிலான பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதனடிப்படையில் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் வைத்து தரணிக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் திருடப்பட்ட நகைகள் அடைவு கடை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
பல்லடம் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய காதலன் கைவிட்ட நிலையில் காவல் துறையினரும் நடவடிக்கை எடுக்க தாமதமானதால் பட்டதாரி பெண் காவல் நிலைய வளாகத்தில் வி.ஷ.ம் அருந்திய ச.ம்.பவம் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வெள்ளநத்தம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் திவ்யா. பட்டதாரியான இவர் வீட்டில் இருந்து கொண்டு வேலைக்கு முயற்சி செ.ய்.து கொண்டிருந்தார்.
இந்நிலையில் இவரது பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைக்க வரன் தேடி வந்தனர்.
இந்நிலையில் இவரது உறவினரான எல்லப்பாளையம் புதூரை சேர்ந்த வசந்தா என்பவர் பழனிச்சாமியிடம் தனது மகன் பார்த்திபனுக்கு அவரது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.
இதனை அடுத்து இருவருக்கும் திருமணம் செ.ய்து வைக்க பெரியவர்கள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து பார்த்திபன் அ.டி.க்கடி தொலைபேசி மூலம் திவ்யாவுடன் பேசி பழகி வந்துள்ளார்.
இருவரும் அ.டி.க்கடி தனிமையில் சந்தித்து வந்ததாககவும் கூறப்படுகிறது. இருவரும் தனிமையில் இருக்கும் பொழுது கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வதாக கூறி பார்த்திபன் திவ்யாவை பலமுறை கட்டாயப்படுத்தி பா.லி.ய.ல் வ.ன்.பு.ண.ர்வு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் திவ்யா கர்ப்பமான நிலையில் இது குறித்து பார்த்திபனிடம் கூறியதை அடுத்து காங்கயத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு திவ்யாவை அழைத்து சென்ற பார்த்திபன் அங்கு பரிசோதனை செய்து கர்ப்பம் கலைக்க மாத்திரைகள் வாங்கி குடுத்துள்ளார்.
மாத்திரைகளை சாப்பிட திவ்யாவை வ.ற்.பு.று.த்திய பார்த்திபன் கர்ப்பம் கலைந்தவுடன் பெற்றோருடன் வந்து உடனடியாக திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.
இதனை நம்பிய திவ்யா மாத்திரைகளை சாப்பிட்டதால் கர்ப்பம் கலைந்துள்ளது. இந்நிலையில் திவ்யாவின் வீட்டிற்கு வந்த பார்த்திபனின் பெற்றோர்கள் ஜாதக பொருத்தம் சரியில்லாத காரணத்தால் திருமணம் வேண்டாம் என கூறியுள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த திவ்யா பார்த்திபன் கட்டாயப்படுத்தி பா.லி.ய.ல் உ.ற.வு கொண்டதும், அதனால் கர்ப்பமடைந்த நிலையில் காங்கயத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருவை கலைத்ததையும் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
மேலும் பார்த்திபன் வேறு ஒரு பெண்ணை காதலித்ததும் அவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து வந்ததும் தெரியவந்தது.
இதனை அடுத்து பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் திவ்யா இது குறித்து புகார் தெரிவித்துள்ளார். புகாரினை பெற்று கொண்ட காவல் துறையினர் முறையாக நடவடிக்கை எடுக்காமல் திவ்யாவை கடந்த சில நாட்களாக அழைக்களித்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த திவ்யா இன்று காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த நிலையில் மகளிர் காவல் நிலைய வளாகத்திலேயே வி.ஷ.ம் அருந்தியுள்ளார்.
இதனை அடுத்து அவரை மீட்ட காவல் துறையினர் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.