மரமொன்று வீழ்ந்ததில் 14 வயது சிறுவன் பரிதாபமாக பலி!!

ஹொரவபொத்தான..

ஹொரவபொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரவெவ வயல் பகுதியில் மரமொன்று சிறுவன் மீது விழுந்ததில் படுகாயமடைந்த நிலையில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் ஹொரவபொத்தான-துடுவெவ பகுதியைச் சேர்ந்த 9 ஆம் தரத்தில் கல்வி பயின்று வரும் சுந்தர சேனகே சம்பிக்க சுந்தர சேன் (14 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரவெவ பிரதேசத்திலுள்ள வயலில் உழவு அடித்துக் கொண்டிருந்தபோது சாரதி மரத்துக்கு அருகே உழவு இயந்திரத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் வயல் உரிமையாளர் மரத்திற்கு தீ மூட்டிய நிலையில் மரம் தீப்பற்றியதாகவும் இதனை அவதானிக்காத உழவு இயந்திரத்தின் சாரதி உழவு இயந்திரத்தை மரத்துக்கு அருகே நிறுத்தி விட்டு சென்றதாகவும், இதனை அடுத்து சிறுவன் உழவு இயந்திரத்தில் ஏறி இருந்ததாகவும் அதேநேரம் மரம் உழவு இயந்திரத்துக்கு மேலால் வீழ்ந்ததாகவும் தெரியவருகின்றது.

இதனையடுத்து குறித்த சிறுவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

இதன்போது உயிரிழந்த சிறுவனின் சடலம் தற்பொழுது ஹொரவபொத்தான பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கபட உள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவபொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் வீசிய பலத்த காற்று : தூக்கி வீசப்பட்ட பேரூந்து நிலைய கூரைகள்!!

பலத்த காற்று..

வவுனியாவில் நேற்று (16.10.2021) மாலை மழையுடன் கூடிய பலத்த காற்றுடனான காலநிலை நீடித்திருந்ததன் காரணமாக வவுனியா பழைய பேரூந்து நிலையத்தின் கூரைகள் காற்றினால் தூக்கி விசப்பட்டிருந்தது.

வவுனியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களான காற்றுடன் கூடிய மழை காலநிலை நிலவி வருகின்றது. அந்த வகையில் நேற்று மழை கடும் காற்று வீசியதன் காரணமாக வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடத்தொகுதியின் கூரைகள் தூக்கி விசப்பட்டிருந்துடன் மேலும் சில கூரைகள் தரையில் வீழ்வது போன்று கழன்று காணப்பட்டது.

இவ் அனர்த்தம் தொடர்பில் வவுனியா வர்த்தக சங்கத்தினர் உடனடியாக நகரசபையினருக்கு தகவல் வழங்கியமையினையடுத்து சனிக்கிழமை விடுமுறை தினத்திலும் ஒய்வில் நின்ற ஊழியர்கள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைந்து செயற்பட்டிருந்தனர். நகரசபையினரினால் உடைந்து வீழ்ந்த கூரைகள் அகற்றப்பட்டது.

வவுனியா நகரசபைக்கு தமிழரசுக் கட்சியால் புதிய உறுப்பினர் நியமனம்!!

புதிய உறுப்பினர்..

வவுனியா நகரசபைக்கு தமிழரசுக் கட்சியினால் புதிய உறுப்பினர் ஒருவர் இன்று (16.10) நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வவுனியா நகரசபைக்கு நகர வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பொற்ற ரி.கே.இராஜலிங்கம் பதவி விலகிய நிலையில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, வவுனியா, கற்குழி பகுதியைச் சேர்ந்த அ.ரேணுகா தமிழரசுக் கட்சியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த உறுப்பினருக்கான நியமனக் கடிதமானது தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ந.கருணாநிதியால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா, முன்னாள் நகரசபை உறுப்பினர் ரி.கே.இராஜலிங்கம், கட்சியின் மாவட்ட பொருளாளர் க.கேதீஸ்வரன் மற்றும் திருமதி. கே.தர்சினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

7 வயதுக் குழந்தைக்கு நடந்த துயரம் : பதற வைக்கும் சம்பவம்!!

தஞ்சை..

தஞ்சையில் புதிதாகக் கட்டப்பட்டும் வீட்டின் சுவற்றில் சாய்த்துவைக்கப்பட்டிருந்த கதவுச் சட்டத்தைப் பிடித்துத் தொங்கி விளையாடியபோது, அது சா.ய்.ந்து வி.ழு.ந்.த.தி.ல், 7 வயது பெண் குழந்தை ப.ரி.தா.ப.மா.க ப.லி.யா.ன.து.

சுண்ணாம்புக் கார பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர், புதிதாக வீடு கட்டி வருகிறார். முகப்புக் கதவை பொருத்துவதற்கான அறுகால் எனப்படும் கதவுச் சட்டம் வாங்கப்பட்டு, சுவற்றின் மீது செங்குத்தாக சாய்த்துவைக்கப்பட்டிருந்தது.

இரும்பு ஜன்னலுடன் கூடிய இந்த கதவுச்சட்டத்தின் தலைப்புப் பகுதியை பிடித்து தொங்கியவாறு ஸ்ரீதரின் 7 வயது மகள் ப்ரீத்தி விளையாடிக் கொ.ண்.டி.ருந்துள்ளார்.

அப்போது எ.தி.ர்.பாராத விதமாக கதவுச்சட்டம் அப்படியே குழந்தை மீது சாய்ந்துள்ளது. இதில் தலையில் அ.டி.ப.ட்.டு குழந்தை ப.ரி.தா.ப.மா.க உ.யி.ரி.ழ.ந்.தா.ர். குழந்தையின் இ.ற.ப்.பு.க்குக் காரணமான கதவுச்சட்டத்தைப் பார்த்து, உறவினர் க.த.றி.ய காட்சி, காண்போரை க.ல.ங்.க.டி.த்தது.

வவுனியாவில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் : 24 வயது யுவதி உட்பட மூவர் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 24 வயது யுவதி உட்பட மூவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று காலை (16.10) வெளியாகின.

அதில் வவுனியா மாவட்டத்தின் நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளையும் உள்ளடக்கியதாக மேலும் 32 பேருக்கு மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் இரவு வெளியாகிய முடிவுகளின் படி 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், காலை வெளியாகிய முடிவுகளின் படி 15 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யாப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் கொரோனா தொற்று காரணமாக எந்தவித தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாத நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவரும், சாஸ்திரிகூழாங்குளம் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவரும், உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஆண் ஒருவரும் என மூவர் மரணமடைந்துள்ளனர்.

மரணித்தவர்களின் சடலங்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் பட்டப்பகலில் துணிகரம் : பணம் நகை கொள்ளை!!

வேப்பங்குளம் பகுதியில்..

வவுனியா – மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் வீடு உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டிலிருந்த பணம் மற்றும் நகை என்பனவற்றைத் திருடிச் சென்று விட்டதாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று பகல் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் வசித்து வந்த கட்டட ஒப்பந்தக்காரர் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை 8 மணியளவில் செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற மரணவீடு ஒன்றிற்குச் சென்றுவிட்டார். மாலை 6 மணியளவில் வீட்டிற்குத் திரும்பியபோது வீட்டின் முற்றத்தில் அலுமாரியின் பெட்டகத்தின் சிலபகுதிகள் சிதறிக் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து வீட்டிற்குள் உட்சென்று பார்த்தபோது பின்கதவு உடைக்கப்பட்டு உட்புகுந்த திருடர்கள் அலுமாரியில் வைக்கப்பட்ட நான்கு பவுன் பெறுமதியான நகைகள் மற்றும் எழுபதாயிரம் ரூபா பணம் என்பனவும் திருடிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். .

சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாயை நேற்று அச்சிட்ட இலங்கை மத்திய வங்கி!!

2 ஆயிரம் கோடி..

இலங்கை மத்திய வங்கி கடதாசிகளை அச்சிடும் இயந்திரமாக மாறியுள்ளதாக ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“ஒக்டோபர் 15 ஆம் திகதி அதாவது நேற்றைய தினத்தில் மாத்திரம் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது. சரியாக கூறுவதென்றால், 19.63 பில்லியன் ரூபாய். ஆயிரத்து 963 கோடி ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்கள் எதனை கூறினாலும் நாட்டில் பொருட்களின் விலைகள் ரொக்கட் வேகத்தில் அதிகரித்துள்ளமை இந்த பணம் அச்சிட்டமைக்கான காரணம். 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரை இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்காக ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 768 கோடி ரூபாய் பணத்தை அச்சிட்டுள்ளது.

இது 1950 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி ஆரம்பிக்கப்பட்ட பின்னர், 2020 ஜனவரி முதலாம் திகதி வரையான 70 ஆண்டு காலத்தில் அச்சிடப்பட்ட பணத்தை விட 20 மடங்கு அதிகம். கடந்த 20 மாதங்களில் மாத்திரம் இந்தளவுக்கு பணத்தை அச்சிட்டது எனக் கூறுவது ஆச்சரியமானது.

இலங்கை மத்திய வங்கி ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை 74.74 பில்லியன் ரூபாய் அதாவது 7 ஆயிரத்து 474 கோடி ரூபாய் பணத்தை மாத்திரமே அச்சிட்டிருந்தது.

அஜித் நிவாட் கப்ரால்(Ajith Nivard Capral) மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்ற பின்னர் இதுவரை 17 ஆயிரத்து 804 கோடி ரூபாய் பணம் அச்சிடப்பட்டுள்ளது.

கடந்த 20 மாதங்களில் நாட்டின் மிகப் பெரிய செல்வந்தர்களுக்கு தொடர்ந்தும் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளளதுடன் வறிய மற்றும் மிகவும் வறிய நிலையில் உள்ள மக்கள் மீது, சீனி, கோதுமை மா போன்ற அத்தியசிய பொருட்கள் மூலம் சுமை ஏற்றப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பில் இருக்கும் அந்நிய செலாவணி கடந்த வாரத்தில் வீழ்ச்சியடைந்தது.

இலங்கையின் வங்கி கட்டமைப்பை தாண்டி, உண்டியல் முறை மூலம் டொலர்கள் பரிமாற்றம் செய்யப்படும் கறுப்புடை நிதி வர்த்தகம் விரிவடைந்துள்ளது” எனவும் கீர்த்தி தென்னகோன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் : இலங்கையர்களுக்கான கடும் எச்சரிக்கை!!

கோவிட்..

கோவிட் பெருந்தொற்றின் புதிய திரிபுகள் எந்த நேரத்திலும் நாட்டுக்குள் ஊடறுவ முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளுக்கு நாடு திறந்து விடப்பட்டுள்ளதாகவும், துறைமுகங்களில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் புதிய திரிபுகள் எந்த நேரத்திலும் நாட்டுக்குள் ஊடுறுவி ஆபத்துக்களை விளைவிக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய திரிபு தாக்கம் பற்றி எதிர்வு கூறல்களை வெளியிடுவது நடைமுறைச் சாத்திமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களும் பூரணமாக சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதே நோய்த் தொற்றை கட்டுப்படுத்தக் கூடிய ஒரே வழியெனத் தெரிவித்துள்ளார். நாட்டில் 58 வீதமானவர்களுக்கு இரண்டு மாத்திரை தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

கொ.லை செ.ய்யப்பட்டு எ.ரியூட்டப்பட்ட மா.ணவி விவகாரம் : சந்தேகநபர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!!

கேதீஸ்வரன் சாமினி..

திருகோணமலை – கிண்ணியா ஆலங்கேணியை சேர்ந்த மா.ணவி கேதீஸ்வரன் சாமினி (வயது17) எ.ரியூட்டப்பட்டு கொ.லை செ.ய்யப்பட்ட ச.ம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ச.ந்தேக ந.பர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் கிண்ணியா ஆலங்கேணியை சேர்ந்த மாணவி கேதீஸ்வரன் சாமினி (வயது17) எ.ரியூட்டப்பட்டு ப.டு.கொ.லை செ.ய்.யப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் ச.ந்தேகத்தின்பேரில் அதே பிரதேசத்தை சேர்ந்த தேவராஜா கபில்ராஜ் மற்றும் உருத்திரமூர்த்தி அருள் ஆகிய இரு இளைஞர்கள் கிண்ணியா பொலிஸாரினால் கை.து செ.ய்யப்பட்டனர்.

இந்நிலையில், இக் கொ.லை தொடர்பான வ.ழக்கு வி.சாரணை திருகோணமலை நீதிமன்றத்தில் வி.சாரணைக்காக (15.10) நேற்று எடுத்துக் கொள்ளப்பட்ட போது வ.ழக்கு வி.சாரணை எதிர்வரும் 27ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொ.லை.ச் ச.ம்பவம் தொடர்பான வழக்கு வி.சாரணை மேல் நீதிமன்றத்தில் 25.10.2021 அன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த மா.ணவி எ.ரியூட்டப்பட்ட நிலையில், கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உ.யிரிழந்தார்.

குறித்த மா.ணவி பா.லி.ய.ல் து.ஸ்.பி.ர.யோ.க.த்.து.க்.கு உ.ள்ளாக்கப்பட்டு மூன்று மாத க.ர்ப்பிணியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தேவராஜா கபில்ராஜ் மற்றும் உருத்திரமூர்த்தி அருள் ஆகிய இரு இளைஞர்கள் திருகோணமலை சிறைச்சாலையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட வி.சாரணையில் மோட்டார் சைக்கிளில் இருந்த பெற்றோலை எடுத்து உருத்திரமூர்த்தி அருள் என்பவர் மா.ணவி மீது ஊற்ற தேவராஜா கபில்ராஜ் தீ வைத்ததாகவும், இக் கு.ற்றத்தை ச.ந்தேக ந.பர்களே ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

கிண்ணியா ஆலங்கேணி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற உ.யிரிழந்த மா.ணவி சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானத்தில் வித்தியாரம்பம்!!

வித்தியாரம்பம்..

வவுனியா, குட்செட்வீதி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானத்தில் இன்று (15.10.2021 காலை விஜயதசமி நாளில் சிறார்களுக்கான ஏடு தொடக்குதல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.

சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் தங்கள் பெற்றோருடன் நிகழ்வில் கலந்துகொண்டு தங்கள் வாழ்விற்கு அடித்தளமிட்டனர்.

வித்தியாரம்பத்திற்கான ஓலை சுவடிகளை தமிழ் விருட்சம் வவுனியா அமைப்பும், கொப்பி,பென்சில்களை அமரர்.குமரன் கமலாம்பிகை குடும்பமும் வழங்கியிருந்தனர்.

8 மாத கர்ப்பிணிக்கு நடந்த பயங்கரம் : நிர்கதியான 2 வயது குழந்தை!!

தமிழகத்தில்..

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வீட்டிலிருக்கும் சிலிண்டரை கூட விற்று ம.து கு.டி.த்.த கு.டி.கா.ர கணவனுடன் ஏற்பட்ட த.க.ரா.றில், 8 மாத க.ர்.ப்.பிணி தீ.க்.கு.ளி.த்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்.ப.வம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ம.து, சூ.து.வி.ல் மூ.ழ்.கிய கணவனால், 2 வயது பெண் கு.ழ.ந்.தை நிர்கதியாகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

சேலம் ஆத்தூர் அருகே முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த தாமரைச் செல்வி என்பவரின் மகள் சோலையம்மாள். கணவனை இ.ழந்து கூ.லி வேலை செய்து வரும் தாமரைச் செல்வி சிறுக, சிறுக பணம் சேமித்து, மகளை எம்.காம் வரை படிக்க வைத்திருக்கிறார்.

கல்லூரிக்கு பேருந்தில் சென்று வந்த சோலையம்மாளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து, கூலி வேலை பார்த்து வந்த பிரபாகரன் என்பவனுடன் ப.ழ.க்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற, 4 ஆண்டுகளுக்கு முன் தாயின் எ.தி.ர்ப்பையும் மீறி வீட்டை விட்டு வெளியேறி பிரபாகரனை சோலையம்மாள் திருமணம் செய்து கொண்டார்.

இதற்கிடையே, 2 ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு ரிதன்யா என்ற பெண் கு.ழ.ந்தை பிறந்த நிலையில், ம.து.வு.க்கு அ.டி.மை.யான பிரபாகரன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருக்கும் பொருட்களை விற்று கு.டி.ப்.பதோடு, சீட்டு விளையாடுவதையும் வ.ழ.க்.கமாக கொண்டிருந்துள்ளான்.

கு.டு.ம்பத்தை சமாளிக்க வேறு வழி தெரியாமல் தையல் கற்றுக் கொண்டு துணி தைத்து கொடுத்து அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து கு.ழ.ந்.தையை கவனித்து வந்திருக்கிறார் சோலையம்மாள்.

0இதனால் இருவருக்கும் இடையே அ.டி.க்.க.டி த.க.ரா.று ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, சோலையம்மாள் இரண்டாவது முறையாக க.ர்.ப்.பமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் வீட்டிலிருக்கும் சிலிண்டரை எடுத்துச் சென்று விற்று பிரபாகரன் ம.து அருந்திய நிலையில், ஆ.த்.தி.ரமடைந்த சோலையம்மாள் கணவனுடன் வா.க்.குவா.தத்தில் ஈடுபட்டுள்ளார்.

வா.க்.கு.வாதம் முற்றி மோ.த.லா.க மா.றி.ய நிலையில், ம.ன.மு.டைந்த சோலையம்மாள், வ.யிற்றில் இருக்கும் சி.சுவை கூட நினைத்து பார்க்காமல் ப.டு.க்கை அறையை பூ.ட்டிக் கொண்டு மண்ணெண்ணெயை ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்டுள்ளார்.

பின்னர், அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைத்து பாதி கருகிய நிலையில் கிடந்த சோலையம்மாளை மீட்டு சேலம் அரசு ம.ரு.த்துவமனையில் அனுமதித்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு சோலையம்மாள் வயிற்றில் இருந்த 8 மாத கு.ழ.ந்தை பிறந்து இ.ற.ந்த நிலையில், சோலையம்மாள், வியாழக்கிழமை சி.கி.ச்.சை ப.ல.னி.ன்றி உ.யி.ரி.ழந்தார். உ.யி.ரி.ழப்பதற்கு முன் அவர் வா.க்.குமூலம் அளித்த காட்சிகளும் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சோலையம்மாள் இ.ற.ப்.புக்கு அவரது கணவர் தான் காரணம் எனவும் அவர் மீது வ.ழ.க்.குப்பதிந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளக் கூறியும் உறவினர்கள் உடலை வாங்க ம.று.த்து போ.ரா.ட்.டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உ.று.தி.யளித்ததை அடுத்து அவர்கள் உடலை வாங்கிக் கொண்டு கலைந்து சென்றனர்.

இந்த ச.ம்.ப.வம் குறித்து ஆத்தூர் போ.லீ.சார் வி.சா.ர.ணை ந.ட.த்தி வருகின்றனர். சோலையம்மாளை த.ற்.கொ.லை.க்கு தூண்டியது தெரியவந்துள்ளதாக, ஆய்வாளர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ச.ம்.ப.வ.த்தன்று பிரபாகரன் ம.து கு.டி.த்.து வி.ட்டு வீட்டிற்கு வந்தததை தட்டி கேட்டதால் த.க.ரா.று ஏற்பட்டு, சோலையம்மாள் தீ.க்.கு.ளி.த்துக் கொண்டதாக பிரபாகரனின் தம்பி வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

கு.டி.கார கணவனின் து.ன்.பு.றுத்தல் தாங்க முடியாமல் மனைவி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட நிலையில், அவர்களது 2 வயது பெ.ண் கு.ழ.ந்.தை நி.ர்.க.தி.யாகும் நிலைக்கு த.ள்.ள.ப்பட்டிருக்கிறது.

வி.பரீத காதலால் கணவனுக்கு நிகழ்ந்த கொ.டூ.ர.ம் : தி.கில் பின்னணி!!

தமிழகத்தில்..

சங்ககிரி அருகே நிதி நிறுவன அதிபர் கொ.ல்.லப்பட்ட சம்பவம் தொடர்பாக பாலில் தூ.க்.கமாத்திரை கலந்து கொடுத்த அவரது ம.னைவி கா.த.லனுடன் கைது செ.ய்.யப்பட்டுள்ளார். கார் ஓட்டுனருடன் மலர்ந்த விபரீத காதலால் நிகழ்ந்த சம்பவத்தின் தி.கி.ல் பி.ன்.னணி குறித்து இந்த செய்தி தொகுப்பு.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள புள்ளாக்கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தயானந்த். நிதி நிறுவனம் நடத்திவரும் இவர், கார்கள் மற்றும் மினி டெம்போக்களை வாடகைக்கு விடும் தொழிலும் செய்து வந்தார்.

தயானந்திற்கும் சேலத்தை சேர்ந்த அன்னப்பிரியா என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 வயதில் ஆண் கு.ழ.ந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் தனது உறவினர்களை தொலைபேசியில் அழைத்த தயானந்தின் மனைவி அன்னப்பிரியா, தனது கணவருக்கு வ.லி.ப்பு வந்ததாகவும் அதனால் கீழே வி.ழுந்து தலையில் அ.டி.பட்டு ர.த்.த.வெ.ள்.ளத்தில் இருப்பதாகவும் தகவல் அளித்துள்ளார். உறவினர்கள் வந்து பார்த்தபொழுது தயானந்த் ர.த்.த வெ.ள்.ளத்தில் பி.ண.மா.க கி.ட.ப்பதை கண்டு அ.தி.ர்ச்சி அடைந்தனர்.

தயானந்தின் ம.ர.ணத்தில் ச.ந்.தேகம் எழுந்த நிலையில் இதுகுறித்து அவரது உறவினர்கள் தேவூர் கா.வ.ல் நிலையத்தில் பு.கா.ர் அளித்ததால் விரைந்து வந்த போ.லீ.சார் கைரேகை நி.பு.ணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.

தொடர்ந்து உறவினர்களிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் போ.லீ.சார் வி.சா.ரணை செய்த போது கணவனை அவரது ம.னை.வியே அ.டி.த்.துக் கொ.லை செ.ய்.தி.ரு.க்.கலாம் என ச.ந்.தே.கம் தெரிவித்ததின் அடிப்படையில் போ.லீ.சார் ச.ட.லத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அ.ர.சு ம.ரு.த்.துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு முதலில் ச.ந்.தே.க ம.ர.ணம் என வ.ழ.க்.குப்பதிவு செய்தனர்.

பின்னர் தயானந்த் மனைவி அன்னப்பிரியாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது மில்க் அபிராமி ஸ்டைலில் அன்னப்பிரியா செய்த சே.ட்.டை அம்பலமானது.

அன்னபிரியாவுக்கும் அவரது கார் ஓட்டுநரான தண்ணீர் முருகனுக்கும் வரவு செலவு கணக்கு தொடர்பான பழக்கம் ர.க.சி.யகாதலாக மாறியுள்ளது. இருவரது காதல் விவகாரம் கணவர் தயானந்திற்க்கு தெரியவரவே ம.னை.வியை கண்டித்துள்ளார்.

இதனையடுத்து கடந்த 11ந் தேதி இரவு வ.ழ.க்.கமான பணிகளை மு.டி.த்துக்கொண்டு இரவு 10 மணியளவில் தனது நண்பருடன் பேசிவிட்டு தயானந்த் அவரது வீட்டிற்கு உறங்கச் சென்றபோது அவரது மனைவி அன்னப்பிரியா பாலில் ம.ய.க்.க.மாத்திரை கொ.டு.த்து கணவனை ம.ய.க்.க.மடைய செ.ய்.து.ள்ளார்.

நள்ளிரவில் காதலன் தண்ணீர் முருகனை வரவழைத்து இருவரும் சேர்ந்து ம.ய.ங்.கிக்கிடந்த தனது கணவனின் தலையில் க.ட்.டையால் அ.டி.த்.து கொ.லை. செ.ய்.து.ள்.ளனர். அதன் பின்னர் க.ள்.ள.க்கா.த.லன் முருகன் த.லை.ம.றை.வானதாக கூறப்படுகின்றது.

கணவர் சேர்த்து வைத்துள்ள பணத்திற்காகவும், தங்களது த.வ.றா.ன தொடர்புக்கு, இ.டை.யூ.றாக இருந்ததாலும், கா.த.லனுடன் சேர்ந்து கணவனை க.ட்.டை.யால் அ.டி.த்.துக் கொ.லை செ.ய்.தா.க அன்னப்பிரியா ஒ.ப்.பு.க்.கொ.ண்.டதாக போ.லீ.சார் தெரிவித்தனர்.

த.லை.மறைவான காதலன் தண்ணீர் முருகனையும் தேவூர் கா.வ.ல்நிலையம் அழைத்து வந்து தீ.வி.ர வி.சா.ரணை மேற்கொண்டபோது தயானந்த் கொ.லை செ.ய்.த.து உ.று.திசெ.ய்.ய.ப்பட்டது. தி.ரு.ட்.டுக் காதலர்கள் இருவரையும் தேவூர் போ.லீசார் கைது செய்து, சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சி.றையில் அடைத்தனர்.

அதே நேரத்தில் அன்பான கணவனும், ஆசைக்கு மகனும், அளவில்லா சொத்து இருந்தும் மனதை கட்டுப்படுத்த த.வ.றியதால் தி.ரு.ட்.டு.கா.தலில் வி.ழுந்து , கணவனை கொ.லை செ.ய்.து வி.ள.க்.கில் விழுந்த விட்டில் பூச்சியாய் காதலனுடன் க.ம்.பி எண்ணும் நிலைக்கு த.ள்.ள.ப்.ப.ட்டுள்ளார் அன்னபிரியா.

வவுனியாவில் வன்னி பிரதேச பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!!

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான..

வன்னி பிரதேச பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தின் ஆலோசனைக்கமைய நாடளாவிய ரீதியில் 200 மாணவர்களுக்கு குறைவான மாணவர்கள் கல்வி பயில்கின்ற பாடசாலைகளை 2021.10.21 ஆம் திகதி மாணவர்களின் பாடசாலை கல்வியை மீள ஆரம்பிப்பது தொடர்பாக,

அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற வேலைத்திட்டத்திற்கமைய வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கலந்துரையாடலே நேற்று மாலை (14.10) குருமன்காட்டில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் போது மீள ஆரம்பிக்க இருக்கின்ற பாடசாலைகளை சிரமதானம் செய்வது சம்பந்தமாகவும், கோவிட் 19 காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டன.

அத்துடன், 21 ஆம் திகதி 200 மாணவர்களுக்கு குறைவான மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகள் சுகாதார நடைமுறைகளுடன் இடம்பெற அதிபர், ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

கட்சி தலைமையகத்தின் அறிவுறுத்துதலுக்கமைய இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி தலைமையகத்தின் பிரதிநிதிகள், கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா நகர் முழுவதும் ‘அமெரிக்காவுக்கு விற்கின்ற இரகசிய உடன்படிக்கையை சுருட்டிக்கொள்’ என சுவரொட்டிகள்!!

சுவரொட்டிகள்..

வவுனியா நகரின் பல பகுதிகளில் கெரவலப்பிட்டிய மின் நிலையத்தை அமெரிக்காவுக்கு விற்கின்ற இரகசிய உடன்படிக்கையை சுருட்டிக்கொள் என்ற வாசகங்கள் தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சுவரொட்டிகளின் கீழ்ப் பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி எனவும் உரிமம் கோரப்பட்டுள்ளதுடன் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

வவுனியா நகரின் குறிப்பாக நூலக வீதி, ஏ9 வீதி, புகையிரத நிலைய வீதி, மன்னார் வீதி, நகர் மத்தி, ஹொரவப்பொத்தானை வீதி ஆகிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமையினை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய புதிய வழிமுறை!!

வாகன இறக்குமதி..

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில், அரசாங்கத்திற்கு யோசனை ஒன்று முன்வைப்பதற்கு எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal) இதனை குறிப்பிட்டுள்ளார்.

வாகனங்களை இறக்குமதி செய்யும் போது வெளிநாட்டு நாணயத்தை மாத்திரமே பயன்படுத்தி இறக்குமதி செய்யும் புதிய முறையை அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

“எனவே, முடிந்தால் வெளிநாட்டு நாணயத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது. வெளிநாட்டு நாணயத்தில் செலுத்த ஒரு முறையை உருவாக்க முடிந்தால், அந்நிய செலாவணி அதன் வழியாக நாட்டிற்கு கொண்டு வர முடியும். இது தொடர்பில் அரசாங்கத்திற்கு எழுத்துப்பூர்வமாக அறிவிப்போம் என நம்புகின்றோம்” என ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மற்றுமொரு முடக்க நிலை வரும் அபாயம்!!

முடக்க நிலை..

சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அதனை கண்டுக்கொள்ளவில்லை என்றால் ஆபத்தான நிலைமை ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் ஆபத்தான மற்றுமொரு கொவிட் அலை உருவாக கூடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவிந்த டி செய்ஸா தெரிவித்துள்ளார்.

நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான ஒரு படியாக கொவிட் சுகாதார வழிகாட்டுதல்கள் தளர்த்தப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும், சரியான கட்டுப்பாடு இல்லாமல் செய்தால் எதிர்வரும் நாட்களில் ஏற்படும் விளைவுகள் மோசமாக இருக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு சில சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், சுகாதார வழிகாட்டுதல்களில் இருந்து விலகி சாதாரணமாக செயல்பட்டால் நாடு மீண்டும் முடக்க நிலைக்கு செல்வதனை தடுக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-