யாழில் 13 வயதான சிறுமி துஷ்பிரயோகம் : இளம் தம்பதியினர் கைது!!

யாழில்..

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் 13 வயதான சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பில் இளம் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமி சுகயீனமுற்ற நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சிறுமியின் உறவினர் ஒருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

29 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பில் யாழ். மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினாலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இளைஞரின் 25 வயதான மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட யுவதியிடமிருந்து சிறுமியின் தகாத முறையில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

70 வயதில் குழந்தை பெற்றெடுத்த மனைவி : உச்சகட்ட மகிழ்ச்சியில் 75 வயது கணவர்!!

70 வயதில்..

இந்தியாவில் 70 வயதில் பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளதால், உலகின் வயதான குழந்தை பெற்ற அம்மாக்களின் வரிசையில், தற்போது அவரும் இணைந்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின், Mora கிராமத்தை சேர்ந்த தம்பதி Givunben Rabari(70)-Maldhari(75). இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 45 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லை.

இதனால் இவர்கள் மிகுந்த வேதனையில் இருந்து வந்துள்ளனர். அதன் பின் தங்களுடைய உறவினர்கள் IVF மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதை அறிந்து, அதன் மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளனர்.

இது குறித்து இந்த தம்பதிக்கு உதவிய மருத்துவர் நரேஷ் கூறுகையில், அவர்கள் முதலில் தன்னிடம் வந்த போது, வயதாகிவிட்டதே, குழந்தைகள் இல்லை என்று சொல்கிறீர்களே என்ற போது, அவர்கள் குழந்தை வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அவர்கள் தங்கள் உறவினர்கள் பலர் IVF மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதை கூறினர். இது நான் பார்த்த வழக்குகளிலே மிகவும் அரிதான ஒன்றாக அமைந்தது என்று கூறினார்.

தற்போது இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. Givunben Rabari தன்னுடைய வயதை நிரூபிக்க தன்னிடம் அடையாள அட்டை எதுவும் இல்லை. ஆனால் தனக்கு 70 வயது, இது தான் உண்மை என்று உள்ளூர் ஊடக அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு இதே இந்தியாவைச் சேர்ந்த மங்கையம்மா யாராமதி என்ற பெண், தன்னுடைய 74 வயதில் IVF மூலம் இரட்டை குழந்தை பெற்றெடுத்தார். அது தான் உலகிலே அதிக வயதில் குழந்தை பெற்றெடுத்த பெண்மணியாக நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெறும் விளையாட்டு நிகழ்வினால் கொரோனா பரவும் அபாயம்!!

கொரோனா வைரஸ் பரவும் அபாயம்..

வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட போட்டிகளினால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று (19.10.2021) காலை வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன் தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

கொரோனா சூழ்நிலை காரணமாக விளையாட்டு நிகழ்வுகள் உட்பட பல விடயங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தவிர்க்க முடியாத சில காரணங்களினால் விளையாட்டு வீரங்கள் முகக்கவசமின்றியே விளையாட்டில் ஈடுபடுகின்றனர்.

இவர்களின் எத்தனை விளையாட்டு வீரர்கள் இரண்டு தடுப்பூசியினை பெற்றுக்கொண்டனர் என்ற விபரம் கூட தெரியவில்லை. மேலும் பார்வையாளர்களும் அப்பகுதியில் குழுமி காணப்படுகின்றனர். இவ்விடயங்கள் காரணமாக கொரோனா தொற்று பரவும் அபாய நிலை காணப்படுகின்றது.

சுகாதாரப் பிரிவினரின் அனுமதியின்றி வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி இடம்பெறுகின்றது.

நகரசபை மைதானத்தினை சூழ பலர் சுகாதார நடைமுறைகளை மீறி பார்வையாளர்கள் ஒன்று கூடி நிற்கின்றனர். மேலும் விளையாட்டுக்கழகங்கள் என பலரும் மைதானத்தினுள் பார்வையாளர்களாக அமர்ந்துள்ளனர்.

எனவே நகரசபையினர் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டால் சட்ட நடவடிக்கைக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

பொலிஸாரின் உதவியுடன் நகரசபையினர் பார்வையாளர்கள் ஒன்றுகூடுவதினை தவிர்க்க வேண்டும் எனவும் இனி வரும் காலங்களில் எந்தவொரு விளையாட்டு நிகழ்வும் சுகாதார பிரிவினரின் அனுமதியுடனே இடம்பெற வேண்டுமென மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.

பேருந்திலிருந்து இறங்க முற்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி : சிசிடிவி காட்சி!!

ப.ண்டாரவெல..

ப.ண்டாரவெல, ஹ.ல்பே ப.குதியில் வை.த்.து பே.ருந்திலிருந்து இ.றங்க மு.ற்பட்ட பெ.ண் பே.ருந்திலிருந்து வி.ழு.ந்.து.ள்.ளா.ர். கு.றித்த ச.ம்பவம் அ.ருகிலிருந்த சி.சி.டி.வி க.மராவில் ப.திவாகியுள்ளது.

பண்டாரவெலயில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பே.ருந்தில் சென்ற குறித்த பெ.ண் தனது சிறிய ம.க.ளை இ.றக்கி விட்டு பின் அவரும் இ.றங்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் பே.ருந்து முன்னோக்கி இ.யக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பெண் மி.தி ப.லகையில் இ.ருந்து கீ.ழே வி.ழுந்துள்ளார். இதனைபடுத்து அ.ங்கிருந்த சி.லர் கு.றித்த பெ.ண்.ணை தூ.க்கிவிட்டு பி.ன் பே.ருந்து ஓ.ட்டுனர் மீ.து தா.க்.கு.த.ல் ந.டத்த மு.ற்பட்டுள்ளதாக தெ.ரியவருகிறது.

இலங்கையில் கடவுச்சீட்டு பெறுவோர் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!!

கடவுச்சீட்டு..

இலங்கையில் நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி ஒரு நாள் சேவையின் கீழ் சேவையை பெறுவோரின் எண்ணிக்கை 500ஆல் அதிகரித்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் ஒரு நாள் சேவையின் கீழ் சேவை பெறுவோரின் எண்ணிக்கை ஆயிரமாக காணப்பட்டதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர், ஒரு நாள் சேவையின் கீழான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1,500 ஐ கடந்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய, கொழும்பிலுள்ள பிரதான காரியாலயத்தில் கடந்த 10 நாட்களுக்குள் ஒரு நாள் சேவையை 12,158 பேர் பெற்றுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் சாதாரண சேவையின் கீழ் 11,242 பேர் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக மாத்தறை, கண்டி, வவுனியா மற்றும் குருணாகல் ஆகிய பகுதிகளிலுள்ள பிராந்திய அலுவலகங்களில் கடந்த 10 நாட்களுக்குள் 10,145 பேர் சேவையை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வவுனியாவில் 80 வீதத்திற்கு அதிகமான அதிபர், ஆசிரியர்களின் பங்களிப்புடன் பாடசாலைகள் ஆரம்பம்!!

பாடசாலைகள் ஆரம்பம்..

21ம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பமாகவுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் பாடசாலைகள் மீண்டும் திறப்பது தொடர்பான கலந்துரையாடல் வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று ( 19.10.2021) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போதே வவுனியா மாவட்டத்தில் 80 வீதத்திற்கு அதிகமான அதிபர் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் பாடசாலைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் நடைமுறையிலுள்ள கோவிட் சூழ்நிலையில் பாடசாலைகளைச் சுகாதார வழிமுறைகளுக்கமைவாக ஆரம்பிப்பதற்கேற்ற பிரத்தியேகமான செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டதுடன்,

நாடு தழுவிய ரீதியில் பாடசாலைகளைப் பாதுகாப்பான முறையில் ஆரம்பிப்பது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்றுநிருபத்தின் அடிப்படையில் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக ஆரம்பிப்பது தொடர்பாகவும்,

வெளி மாவட்ட ஆசியர்கள் மற்றும் அதிபர்கள் கடமைக்கு திரும்புவது மற்றும் அவர்களுக்குரிய போக்குவரத்து வசதி தங்குமிடம் என்பன தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன்,

மேலும் தற்போது வவுனியா மாவட்டத்தில் நிலவும் கோவிட் நிலமைகள் அதற்குரிய தீர்வுகள் தொடர்பாகவும் விளையாட்டு போட்டிகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பல விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் வலயக்கல்வி பணிப்பாளர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் , சுகாதார பிரிவினர்கள் , கல்வி திணைக்கள அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்து : ஐவர் வைத்தியசாலையில்!!

விபத்து..

மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியும் கோழி உரத்தை ஏற்றிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோ.தி வி.பத்துக்குள்ளானதில் ஐவர் ப.டு.கா.ய.ம.டை.ந்.த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் புத்தளம், முந்தலம் – மங்களஎளிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என முந்தலம் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

நுரைச்சோலையிலிருந்து கொழும்பு நோக்கி மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியும் நவடன்குளத்திலிருந்து நுரைச்சோலை நோக்கி சென்ற லொறியுமே இவ்வாறு நேருக்கு நேர் மோ.தி வி.ப.த்.து.க்.கு.ள்.ளா.கி.யு.ள்.ள.து.

இந்த வி.பத்தில் இரு லொறிகளின் சாரதிகளும் மற்றும் லொறியில் பயணித்தவர்களுமே ப.டு.கா.ய.ம.டை.ந்.து.ள்.ள.ன.ர். வி.பத்தில் கா.ய.ம.டை.ந்.த.வ.ர்.க.ள் பிரதேச மக்களின் உதவியுடன் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வி.பத்தில் இரு லொறிகளும் பா.ரியளவில் சே.த.ம.டை.ந்.து.ள்.ள.ன. வி.பத்து தொடர்பில் முந்தலாம் பொலிஸார் மேலதிக வி.சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் டிப்பர் மோதி 16 வயது சிறுவன் மரணம்!!

ஆ.சயந்தன்..

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் பகுதியில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 16 வயது சிறுவன் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, செட்டிகுளம், முதலியார்குளம் பகுதியில் இன்று (18.10) மாலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

மதவாச்சி – மன்னார் பிராதான வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் செட்டிகுளம், முதலியார்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த 16 வயது சிறுவன் மரணமடைந்துள்ளார். விபத்து தொடர்பில் டிப்பர் சாரதி செட்டிகுளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த விபத்தில் செட்டிகுளம், முகத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஆ.சயந்தன் (வயது 16) என்ற சிறுவனே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் 16 வயது மாணவன் பலி : இருவர் காயம்!!

விபத்து..

வவுனியா – உளுக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 16 வயது மாணவன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (17.10) மாலை இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா, நெளுக்குளம் – செட்டிகுளம் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் உளுக்குளம் பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டையிழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது கட்டுப்பாட்டையிழந்த விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் அவ் வீதி வழியாக சென்ற பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த 16 வயது மாணவன் உள்ளிட்ட மூவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி 16 வயது மாணவன் மரணமடைந்துள்ளார். ஏனைய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறிசுமன ம.வி நவோதயா பாடசாலையில் கல்விகற்கும் ஹன்சா டில்சான் மிகிரிங்க என்ற 16 வயது மாணவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார். விபத்து தொடர்பாக உளுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் ”நாட்டின் முதுகெலும்பு விவசாயம் விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே” கவனயீர்ப்பு போராட்டம்!!

கவனயீர்ப்பு போராட்டம்..

நாட்டில் உரம் மற்றும் கிருமிநாசினி பற்றாக்குறை விவசாயிகளையும் ,தோட்டத்தொழிலையும் மிக மோசமாகப் பாதித்திருப்பதாக தெரிவித்து வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் கமநல சேவைகள் நிலையத்திற்கு முன்பாக விவசாயிகள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் வவுனியா இலுப்பையடி சந்தியில் அமைந்துள்ள கோவில்குளம் கமநல நேவைகள் நிலையத்திற்கு முன்பாக இன்று (18.10) காலை 9.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அரசே நாட்டின் முதுகெலும்பு விவசாயம் விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே , அரசே விவசாயத்திற்கான உரத்தையும் உரமானியத்தையும் உடன் வழங்கு,

அரசே விவசாயத்திற்கு பசளை வேண்டும், சேற்றில் கால் வைக்காத உனக்கு சோற்றில் கை வைக்கவும் உரிமை கிடையாது போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவிருந்த நிலையில் இருவரை தவிர எவரும் வருகைதராத நிலையில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி உறுப்பினர்கள்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள் மற்றும் ஏழு விவசாயிகள் என பதினைந்து பேருடன் காலை 9.30 மணியளவில் போராட்டம் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 20 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் நடைபாதை அமைக்கும் பணி ஆரம்பம்!!

நடைபாதை..

வவுனியாவில் இருபது மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நடைபாதை அமைக்கும் பணிகள் நகரசபையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நூறு நகரங்களை அழகுபடுத்தும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டத்தின் கீழ் வவுனியா நகரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், முதற்கட்டமாக வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் இருந்து, பொது வைத்தியசாலை சுற்றுவட்டம் வரையான வீதிக்கரையில் அதனை அமைப்பதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருபது மில்லியன் ரூபாய் நிதியில் நகரசபையின் மேற்பார்வையில் துரிதமாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேச சபை பதில் செயலாளர் இ.தயாபரனுக்கு சேவை நலன் பாராட்டு!!

சேவை நலன் பாராட்டு,,

வவுனியா நகரசபையின் செயலாளராகவும் வவுனியா வடக்கு பிரதேச சபையின் பதில் செயலாளராகவும் இராசையா தயாபரன் கடமையாற்றி வந்தார்.

இந்நிலையில் வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 31.08.2021 அன்று பதில் செயலாளர் கடமையினை நிறுத்தி வவுனியா நகரசபையின் செயலாளராக மாத்திரம் கடமைகளை முன்னெடுத்து வருகின்றார்.

27.03.2021 தொடக்கம் 31.08.2021 வரை வவுனியா வடக்கு பிரதேச சபையில் பொதுமக்களுடனும் உத்தியோகத்தர்களுடனும் ஊழியர்களுடனும் பதில் செயலாளராக பணியாற்றிய இராசையா தயாபரன் அவர்களுக்கு,

பிரதேச சபை தவிசாளர், செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்களினால் பொன்னாடை அணிவித்து கௌரவித்ததுடன் நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் தடுப்பூசி பெற்றுக்கொண்டோர் விபரம்!!

தடுப்பூசி..

வவுனியா மாவட்டத்தில் 20 – 29 வயதிற்கு இடைப்பட்ட 21 ஆயிரத்து 291 இளைஞர், யுவதிகள் கோவிட் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கப்பட்ட நாளிலிருந்து 14.10.2021 வரையான காலப்பகுதியில் 20 தொடக்கம் 29 வயதுக்குட்பட்டவர்களில் 21,291 இளைஞர், யுவதிகள் முதலாவது டோஸ் கோவிட் -19 தடுப்பூசியினையும், 5,350 இளைஞர், யுவதிகள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

மேலும், வவுனியா மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 83,711 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியினையும், 66,489 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியினையும் பெற்றுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் சிறுமி ஒருவர் மீது துஸ்பிரயோக முயற்சி : ஆசிரியர் ஒருவர் கைது!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு – உடுப்புக்குளம் பகுதியில் சி.றுமி ஒருவர் மீது பா.லியல் து.ஸ்பிரயோகத்திற்கு மு.யற்சித்த கு.ற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவரை முல்லைத்தீவு பொலிஸார் கை.து செ.ய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – நெல்லியடியினை சேர்ந்த 72 அகவையுடைய ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் முல்லைத்தீவு, உடுக்புக்குளம் பகுதியில் உறவினர்களின் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அருகில் உள்ள மா.ணவி ஒருவருக்கு பாடம் சொல்லிக்கொடுப்பாத கூறி அவர் வசித்த வீட்டிற்கு அழைத்து சி.றுமி மீ.து பா.லியல் து.ஸ்பிரயோகத்திற்கு மு.யற்சித்தமை உறவினர்களால் கண்டறியப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த வயோதிபர் கை.து செய்யப்பட்டுள்ளதுடன், சி.றுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் பெ.ண் ஒருவரின் மூன்றாவது கணவனால் இ.ரண்டு பி.ள்ளைகள் பா.லியல் து.ஸ்பிரயோகத்திற்கு உ.ள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் உறவால் பெண் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்!!

பேஸ்புக் உறவால்..

பேஸ்புக் மூலம் பெண் ஒருவருடன் பழகி பண மோசடி செய்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளி நாட்டிலிருந்து டொலர் பொதி ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்து சந்தேகநபரால் குறித்த பெண்ணிடம் இருந்து 129,000 ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நுகேகொட பகுதியில் வைத்து 33 வயதான சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கணினி குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

4 வாகனங்களுடன் கார் மோதி கோர விபத்து : இருவர் பரிதாபமாக பலி!!

விபத்து..

சாரதியின் கவனயீனம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, நான்கு வாகனங்கள் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டத்தின் மீகஹவத்த, தெல்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.

குறித்த கார் நிர்மாணப்பணியில் இருக்கும் பாலம் ஒன்றில் இருந்த பீப்பாய் ஒன்றில் மோதிய பின்னர் முன்னால் வந்த இரண்டு ஓட்டோக்களுடனும், மோட்டார் சைக்கிள் ஒன்றுடனும் மற்றும் லொறி ஒன்றுடனும் மோதியுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் ஓட்டோ ஒன்றின் சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு மரணித்தவர்கள் ஹோமாகம மற்றும் கம்பஹா பிரதேசங்களைச் சேர்ந்த 31 வயது மற்றும் 38 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் காரின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.