கரைச்சி பிரதேச சபை அமர்வில் கலந்து கொண்டிருந்த சபை உறுப்பினர் சண்முகராஜ ஜீவராஜா (Shanmukaraja Jeevaraja) விலை அதிகரிப்பு தொடர்பில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
விலை அதிகரிப்பால் மக்களிற்கு சுமையை ஏற்படுத்தியுள்ள அத்தியாவசிய பொருட்களுடன் அவர் இன்று இடம்பெற்ற பிரதேசசபை அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது, சீமெந்து, பால்மா, மா, மஞ்சள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் என்பவற்றை உடலில் சுமந்தும், கழுத்தில் தூக்கு கயிற்றினை அணிந்தும் அமர்வில் அவர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், மக்களை பெரும் சுமைக்குள் தள்ளியுள்ளதாகவும் அரசாங்கத்தினை இதன்போது சபையில் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த நிலையில் பிரதேச சபை உறுப்பினரின் போராட்டம் நியாயமானது என பிரதேச சபை தவிசாளர் சபையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்பனான, கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த யு.வதியின் ச.டலமே இவ்வாறு மீ.ட்.க.ப்பட்டுள்ளது. குறித்த யு.வதி த.ன.து நண்பரின் வீட்டில் த.ங்கியிருந்த நி.லையிலேயே ச.டலமாக மீ.ட்.க.ப்பட்டுள்ளார்.
பி.ரேத ப.ரிசோதனைக்காக, பலாங்கொடை வைத்தியசாலையின் ஆதார வைத்தியசாலையில் ச.டலம் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பலாங்கொடைப் பொலிஸார் மேலதிக வி.சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா மாவட்டத்தில் 273 அதிபர், ஆசிரியர்கள் இன்று (21.10) கடமைக்கு திரும்பியுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழு ஊடகப்பிரிவினர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 200க்கு குறைவான மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது.
சிங்கள மொழி பாடசாலைகள் உள்ளடங்களாக வவுனியா மாவட்டத்தில் 108 பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்றைய தினம் (21.10) மீள ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு வருகை தந்த அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விபரங்கள் மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்கும் வலயக் கல்வித் திணைக்களம் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், வவுனியா வடக்கில் 64 பாடசாலைகளில் 63 பாடசாலைகள் மீள திறக்கப்பட்டதுடன், 285 அதிபர், ஆசிரியர்களில் 203 பேர் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர். 1821 மாணவர்களில் 573 மாணவர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளித்து இருந்தனர்.
வவுனியா தெற்கு வலயத்தில் 44 பாடசாலைகளில் 35 பாடசாலைகள் மீள திறக்கப்பட்டதுடன், 218 அதிபர், ஆசிரியர்களில் 70 அதிபர், ஆசிரியர்கள் சமூகமளித்திருந்தனர். 2354 மாணவர்களில் 184 மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளித்து இருந்தனர்.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 503 அதிபர், ஆசிரியர்களில் 273 அதிபர், ஆசிரியர்கள் கடமைக்கு திரும்பியுள்ளதுடன், 4175 மாணவர்களில் 758 மாணவர்கள் பாடசாலைகளுக்கு கமூகமளித்து இருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் ஊடக பிரிவினர் மேலும் தெரிவித்தார்.
வவுனியாவிலுள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று சில இணைய ஊடகங்கள் தகவல் வெளியிட்டதுடன், எதிர் கட்சியினரும் எதிர்வு கூறியிருந்தனர்.
இந்நிலையிலேயே வவுனியாவில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்றதாகவும், எனினும் அங்கு எரிபொருள் தட்டுப்பாடு இருப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதையடுத்து இலங்கையில் அதற்கேற்ப விலை அதிகரிக்கப்படாததால் அக்டோபர் மாதம் நிறைவடையும் போது ஏழாயிரம் கோடி ரூபா நட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்து.
வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று (21.10) காலை முன்னெடுக்கப்பட்டது.
வடமாகாணத்தில் இன்று (21.10) முதல் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. அதற்கமைவாக வவுனியா மாவட்டத்தில் முதல் கட்டமாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 18, 19 வயது மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து ஏனைய பாடசாலை மாணவர்களுக்கு கட்டம் கட்டமாக தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு- குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் சுகாதார நடைமுறைகள் குறித்து சுகாதாரப் பிரிவினர் இன்று (21.10) திடீர் கண்காணிப்பு சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.
வவுனியா, உள்வட்ட வீதியில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் அதிகளவிலான மக்கள் நிற்பதாகவும், சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் சுகாதாரப் பிரிவினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து வவுனியா சுகாதாரப் பிரிவினர் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா அலுவலகத்தில் திடீர் கண்காணிப்பு சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது அதிகளவிலான மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது நின்றதையடுத்து, குறித்த அலுவலக அதிகாரிகளுக்கு கோவிட் அச்சுறுத்தல் தொடர்பில் தெளிவுபடுத்தியதுடன், அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
வவுனியா மாவட்டத்தில் சிங்களப் பாடசாலைகள் உள்ளடங்களாக 108 பாடசாலைகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் 98 பாடசாலைகள் மீள திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் தமிழ் மொழி மூல பாடசாலைகள், சிங்கள மொழி பாடசாலைகள் உள்ளடங்களாக 108 பாடசாலைகள் இன்று (21.10) திறப்பதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது. அதனடிப்படையில் மீள திறக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்கள் வலயக் கல்வி திணைக்களம் ஊடாக எமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் வவுனியா தெற்கு வலயத்தில் 44 பாடசாலைகளில் 35 பாடசாலைகளும், வவுனியா வடக்கு வலயத்தில் 64 பாடசாலைகளில் 63 பாடசாலைகளும் மீள திறக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் 91 வீதமான பாடசாலைகள் மீள திறக்கப்பட்டுள்ளன.
எனது தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாக எமது மாவட்டத்தின் கல்வி நிலையையும், மாணவர்களினது நிலமையையும் கருத்தில் கொண்டு ஒத்துழைப்பு வழங்கி பாடசாலைகளை மீள திறந்து கற்றல் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கிய அதிபர், ஆசிரியர்களுக்கு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற வகையில் நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.
வவுனியாவில் பாடசாலைகள் பல பூட்டப்பட்டுள்ளதுடன் மாணவர்கள் பாடசாலைகளுக்கு பெரியளவில் சமூகமளிக்கவில்லை. அத்துடன் அதிபர் , ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பும் தொடர்கின்றது.
இன்று முதல் 200 மாணவர்களுக்கு குறைவான ஆரம்ப பாடசாலைகளை நாடு முழுவதும் மீள ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. அதற்கமைவாக வவுனியா மாவட்டத்தில் 85 பாடசாலைகள் மீள திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அதிபர் , ஆசிரியர்கள் தொழிற்சங்கம் சம்பள முரண்பாடு காரணமாக இன்றும் தொடர்ந்தும போராட்டத்தில் ஈடுபட்டு வருவதானால் பெரும்பாலான பாடசாலைகளுக்கு அதிபர், ஆசிரியர்கள் சமூகமளிக்கவில்லை.
இதனால் சில பாடசாலைகளின் பிரதான வாயில்கள் மூடப்பட்டு காணப்பட்டன. மாணவர்கள் பாடசாலைகளுக்கு பெரியளவில் சமூகமளிக்கவில்லை.
சில பாடசாலைகளில் ஒரு சில மாணவர்கள் வருகை தந்த போதும் பாடசாலைகள் மூடப்பட்டு இருந்தமையாலும் அதிபர்- ஆசிரியர்கள் வராமையினாலும் சில மாணவர்கள் திரும்பிச் சென்றிருந்தனர். பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் மூன்றுமுறிப்பு ஸ்ரீ குணானந்த வித்தியாலயத்தின் பிரதான வாயில் பூட்டு பெற்றோரால் உடைக்கப்பட்டு வருகைதந்த மாணவர்கள் உட் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். பெற்றோர்கள் அதிபர் , ஆசிரியர்கள் வராமை தொடர்பில் அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
வெளிக்குளம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயம் திறக்கப்பட்டுள்ள போதும் அதிபர் , ஆசிரியர்கள் , மாணவர்கள் எவரும் சமூகமளிக்கவில்லை. தெற்கிலுப்பைகுளம் பராசக்தி வித்தியாலயம் பூட்டப்பட்டுள்ளதுடன் மூன்று மாணவர்கள் வருகை தந்து திரும்பிச் சென்றாக தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய பல பாடசாலைகளிலும் பெரியளவில் அதிபர்- ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கவில்லை.
வவுனியாவில் யுத்தத்தால் பாதிப்படைந்த 80 குடும்பங்களுக்கு இழப்பீடுகளும், 20 ஆலயங்களை புனரமைப்பதற்கான நிதியும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபனால் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா பிரதேச செயலகத்தில் மாநாட்டு மண்டபத்தில் நேற்று (19.10) குறித்த நிகழ்வு இடம்பெற்றது. யுத்தம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு, அங்கவீனமுற்றமை மற்றும் சொத்தழிவு என்பவற்றுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கு அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இழப்பீட்டுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் வவுனியா பிரதேச செயலக பிரிவுகுட்பட்ட 80 குடும்பங்களுக்கு அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைவாக பிரதமரின் நிதி ஒதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்ட 20 ஆலயங்களின் புனரமைப்புக்கான நிதியும் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன், அபிவிருத்திக் குழுத் தலைவரின் இணைப்பாளர் டினேஸ், பிரதேச கலாசார உத்தியோகத்தர் குகனேஸ்வர சர்மா, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை (21.10) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வடமாகாணத்தில் நாளை (21.10) முதல் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைவாக வவுனியா மாவட்டத்தில் முதல் கட்டமாக வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த 18, 19 வயது மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.
அதனைத் தொடர்ந்து ஏனைய பாடசாலை மாணவர்களுக்கு கட்டம் கட்டமாக தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
உலகின் பல நாடுகளில் கோவிட் தொற்று தொடர்பான இடையூறுகள் காரணமாக இந்த ஆண்டில் தங்கத்தின் தேவை குறைய வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை உலக தங்க கவுன்சில் (World Gold Council) அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது அத்துடன், இந்த ஆண்டில் தங்கத்தின் கேள்வி கோரலானது இவ்வாண்டு குறையும் போதும் அடுத்த ஆண்டில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அடுத்த ஆண்டு தங்கத்தின் விலை பாரியளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வவுனியாவில் மீள திறக்கப்படும் பாடசாலைகளில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் இன்று (20.10) முன்னெடுக்கப்பட்டன. வவுனியா மாவட்டத்தில் 200 மாணவர்களுக்கு குறைவான 85 ஆரம்ப பாடசாலைகள் நாளை (21.10) முதல் கட்டமாக மீள திறக்கப்படவுள்ளன.
அதற்கமைய, வவுனியா, மூன்றுமுறிப்பு ஸ்ரீ குணானந்த ஆரம்ப பாடசாலையில் பாடசாலை சமூகத்தினரால் தொற்று நீக்கும் செயற்பாடுகள் மற்றும் பாடசாலை சூழலை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
பாடசாலை அதிபர், பாடசாதலை அபிவிருத்தி சங்கத்தினர், அப்பகுதி அரச உத்தியோகத்தர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் பாடசாலை சூழல் சுத்தம் செய்யப்பட்டதுடன்,
மாணவர்களின் மேசை, கதிரைகள், வகுப்பறை கட்டடங்கள் என்பனவும் தொற்று நீக்கம் செய்யப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப தயார்படுத்தப்பட்டன.
வவுனியா மாவட்டத்தில் முதல் கட்டமாக 85 பாடசாலைகள் நாளை (21.10) முதல் மீளத் திறக்கப்படவுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீளத் திறத்தல் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை கட்டம் கட்டமாக மீறத் திறப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில் 200 குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் முதல் கட்டமாக திறக்கப்படவுள்ளன. அதனடிப்படையில் வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு வலயங்களுக்கு உட்பட்ட 85 பாடசாலைகள் முதல் கட்டமாக திறக்கப்படவுள்ளன.
உரிய சுகாதார முன்னேற்பாடுகளுடன் அவை திறக்கப்படவுள்ளன. குறிதத பாடசாலைகளினை மீள திறப்பதற்கு அப்பகுதி கிராம அலுவலர், சுகாதார பிரிவினர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம் எனத் தெரிவித்தார்.
கும்பகோணம் அருகே பெண் கொ.டூ.ர.மா.க கொ.ல்.ல.ப்பட்ட ச.ம்.பவத்தில், அந்தப் பெண்ணோடு தனது கணவனைப் த.வ.றாகப் பழகவிட்டு, நகை, பணத்தை பறித்துக் கொண்டு பின் கொ.லை.யு.ம் செ.ய்.தது எதிர்வீட்டுப் பெண் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருப்பனந்தாள் அடுத்த சிவபுரனியைச் சேர்ந்த அனிதா என்ற பெ.ண் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்ட ச.ம்.ப.வத்தில், எதிர்வீட்டுக்காரனான கார்த்திக் என்பவனை போலீசார் கை.து செ.ய்.தனர்.
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மனைவி, தந்தை, தம்பி ஆகியோருடன் சேர்ந்து அனிதாவை கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.த.து தெரியவந்தது. கொ.லை.க்.கான காரணம் குறித்து விசாரித்த போலீசாருக்கு மேலும் பல அ.தி.ர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன.
அனிதாவின் வீட்டுக்கு எதிர்வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த சத்யாவும், அனிதாவும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்களும், பள்ளியில் ஒன்றாக படித்தவர்களும் ஆவர்.
அனிதாவின் கணவர் டேவிட் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், அவரிடம் பணப்புழக்கம் அதிகமாக இருந்துள்ளது. அனிதாவிடம் நட்பு பாராட்டி பேசுவது போல் அ.டி.க்.க.டி அவர் வீட்டுக்கு சென்று வந்த சத்யாவுக்கு, அவரிடம் இருக்கும் நகை, பணத்தை பார்த்து அதன் மீது ஆசை ஏற்பட்டுள்ளது.
கணவன் கார்த்தி கிடைக்கும் கூலி வேலைகளை செய்து வரும் நிலையில், குறுக்கு வழியில் பணக்காரியாக திட்டமிட்ட சத்யா அதற்காக கணவனுடன் சேர்ந்து குரூரமான ஒரு திட்டத்தையும் தீட்டியிருக்கிறார்.
அனிதாவின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதை சாதகமாக்கிக் கொண்ட சத்யா, தன் கணவனை அனிதாவிடம் நெ.ரு.ங்கி பழக வைத்தாக கூறப்படுகிறது.
ஓசியில் காசு கிடைக்கிறதே என்ற பேராசையில் ம.னைவியின் திட்டத்திற்கு மண்டையை ஆட்டிய கார்த்தி, அனிதாவை பேசி, பேசி நம்ப வைத்திருக்கிறான். சில நேரங்களில் அனிதாவும், கார்த்தியும் தனிமையில் சந்தித்துக் கொள்ளும்படி சத்யாவே வா.ய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும்,
அதன் மூலம் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏதேதோ காரணங்களை கூறி கொஞ்சம் கொஞ்சமாக அனிதாவிடம் இருந்து நகை, பணத்தையும் கார்த்தி பறித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறாக சுமார் 18 சவரன் வரையிலான நகைகளையும், 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை ஏமாற்றி வாங்கி சுருட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனது கணவர் டேவிட் வெளிநாட்டில் இருந்து வீட்டுக்கு வரவிருப்பதாக கூறி கொடுத்த நகைகள், பணத்தை அனிதா திருப்பி தருமாறு கார்த்தியிடம் கேட்டிருக்கிறார்.
ஆனால், பணத்தை கொடுக்காமல் கார்த்தி ஏ.மா.ற்றி வந்த நிலையில், ஆ.த்.தி.ரமடைந்த அனிதா, பணம், நகைகளை தரவில்லை என்றால் போலீசில் பு.கா.ர.ளிக்கும் நிலை வரும் என கூறியிருக்கிறார்.
இதனை கார்த்தி, ம.னைவி சத்தியாவிடம் கூறவே, எங்கு அனிதா போ.லீ.சில் பு.கா.ர.ளி.த்தால் நகையும், பணமும் கையைவிட்டு போய்விடுமோ என்ற அச்சத்தில், ஒருபடி மேல போய் அனிதாவை கொ.லை செ.ய்.ய திட்டமிட்டிருக்கிறார் சதிகாரி சத்யா.
கடந்த 12-ந் தேதி வங்கிக்கு சென்ற அனிதாவை தொடர்பு கொண்ட கார்த்தி, தனது வீட்டுக்கு வந்து நகை, பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறி நைசாக அழைத்திருக்கிறான்.
அங்கு வைத்து, சத்யா, கார்த்தி, கார்த்தியின் தந்தை ரங்கநாதன், தம்பி சரவணன் என நான்கு பேரும் சேர்ந்து, அனிதாவை அ.டித்துக் கொ.லை செ.ய்ததாக கூறப்படுகிறது.
பின்னர், உடலை எரிப்பதா அல்லது புதைப்பதா என்ற குழப்பத்தில் ஒரு நாள் முழுவதும் உடலை காரின் டிக்கியில் வைத்துக்கொண்டு ஊர் சுற்றியதாகவும், சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக செல்போனை பாபநாசம் பகுதியில் கொண்டு சென்று போட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, சத்யாவின் பிளான் படி, அனிதாவின் உடலை கை, கால்களை கட்டு சாக்கு பைக்குள் போட்டு சோழபுரத்தில் புதர் பகுதியில் குழி தோண்டி புதைத்திருக்கின்றனர்.
பின்னர், ஒன்றுமே தெரியாதது போல் அனிதாவை காணவில்லை என உறவினர்கள் தேடிய போதெல்லாம் தாங்களும் சேர்ந்து தேடுவது போல் நடித்து நம்ப வைத்திருக்கின்றனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் அனிதாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருப்பனந்தாள் போலீசார் சத்யா, கார்த்தி அவரது தந்தை ரங்கநாதன், மைத்துனர் சரவணன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நண்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தென்னரசு – அமிர்தவல்லி தம்பதி. இவர்களது மகள் கௌசல்யாவுக்கும், சத்திரக்குடி அருகே செவ்வூர் கிராமத்தைச் சேர்ந்த கனராஜுவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெரியோர்கள் நிச்சயிக்கப்பட்டபடி திருமணம் நடந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் வேறொரு வேலை விஷயமாக ராமநாதபுரம் சென்ற கௌசல்யா, தனது பள்ளி, கல்லூரி பருவ கா.த.லனான பார்த்திபனை எதேர்ச்சியாக சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
அதிலிருந்து கணவன் – மனைவி இருவருக்கும் இடையேயான உறவில் விரிசல் விழத் தொடங்கியுள்ளது. காதலனிடம் இருந்து செல்போன் எண் வாங்கி வந்த கௌசல்யா, தினமும் அவனுடன் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
மனைவியின் நடத்தையில் தடுமாற்றத்தை உணர்ந்த கனகராஜ், கண்டித்து இனிமேல் ஒழுங்காக நடந்து கொள்ளும்படி அறிவுறுத்தியிருக்கிறார். ஆனாலும், கௌசல்யா – பார்த்திபன் இடையேயான செல்போன் உரையாடல் நின்றபாடில்லை. இதனால், கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அ.டி.க்.க.டி த.க.ரா.று நிகழ்ந்துள்ளது.
கணவனுடனான ச.ண்.டையையும், மனக் கசப்பையும் கௌசல்யா பார்த்திபனிடம் சொல்லவே, சந்தர்ப்பத்தை சா.த.கமாக்கிக் கொண்ட பார்த்திபன் தன்னோடு வந்துவிட்டால் நிம்மதியாக வாழலாம் என யோசனை கூறியிருக்கிறான்.
இதனையடுத்து, கடந்த 4 மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய கௌசல்யா பார்த்திபனுடன் மதுரையில் தனியாக வசித்து வந்துள்ளார். பார்த்திபன் காவல்துறையில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மனைவி காணாமல் போனதாக கனகராஜ் அளித்த புகாரில்,
காதலனுடன் சென்ற கௌசல்யாவை போலீசார் கண்டுபிடித்து அழைத்து வந்து அறிவுரை கூறி சில காலம் பெற்றோருடன் இருக்குமாறு அனுப்பி வைத்திருக்கின்றனர். அதற்கு பிறகும் கூட காதலன் பார்த்திபனுடன் கௌசல்யா செல்போனில் பேசி வந்துள்ளார்.
கண்முன்னே மகள் தவறான பாதைக்கு செல்வதை கண்டு கௌசல்யாவை அவரது தாய், தந்தையர் க.ண்.டித்துள்ளனர். இதனால், கௌசல்யா தி.டீ.ரென எலி ம.ரு.ந்தை சாப்பிட்டு த.ற்.கொ.லை.க்கு முயன்று வீட்டில் ம.ய.ங்.கி கி.ட.ந்துள்ளார்.
வயல் வெளிக்கு சென்றுவிட்டு வீடு வந்த பெற்றோர் மயக்கநிலையில் இருந்த கௌசல்யாவை பரமக்குடி அரசு ம.ரு.த்.துவமனையில் சி.கி.ச்.சை.க்காக அனுமதித்தனர்.
இரண்டு நாட்கள் அரசு ம.ரு.த்.துவமனையில் சி.கி.ச்சை பெற்று வந்த கௌசல்யாவை அவரது பெற்றோர் ம.ரு.த்.து.வ.ம.னையில் தகவல் தெரிவிக்காமலேயே வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
அதற்கு பிறகு வீட்டில் கௌசல்யா இல்லாததால் ச.ந்.தே.க.ம.டை.ந்த அக்கம்பக்கத்தினர் கிராம நி.ர்.வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கவே அவர் போலீசில் பு.கா.ரளித்துள்ளார்.
முதலில் வி.சா.ரித்த போது, ம.ரு.த்.து.வ.மனையிலிருந்து அழைத்து வந்த மறுநாள் மீண்டும் கௌசல்யா எலி ம.ரு.ந்.தை சாப்பிட்டு உ.யி.ரி.ழ.ந்.து.விட்டதாகவும், இதனை யாரிடமும் தெரிவிக்காமல் தாங்களாகவே உடலை ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள கால்வாய் பகுதியில் எ.ரி.த்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.
ஆனாலும், ச.ந்.தே.க.ம.டைந்த போலீசார், கௌசல்யாவின் பெற்றோரிடம் துருவி, துருவி மேற்கொண்ட வி.சா.ர.ணையில் கௌசல்யா கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்ட உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. எத்தனை முறை சொல்லியும் பேச்சைக் கேட்காமல், க.ள்.ள.க்கா.த.லை தொ.டர்ந்து வந்ததால்,
குடும்பத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் அந்த ஆ.த்.தி.ரத்தில் மூ.ச்.சை அ.ட.க்கி கௌசல்யாவை கொ.லை செ.ய்.ததாக போ.லீ.சா.ரிடம் பெற்றோர் அ.தி.ர்.ச்சி வா.க்.கு.மூலம் அளித்துள்ளனர்.இதனையடுத்து, தந்தை தென்னரசு, தாய் அமிர்தவல்லியை போ.லீ.சார் கை.து செ.ய்.தனர்.
தவறான பழக்கத்தின் மோ.கத்தில் வாழ்க்கையை இழந்து கண்மூடித்தனமாக சுற்றிய மகளை, அவமானம் தாங்காமல் பெற்றோரே கொ.லை செ.ய்.து.ள்ள ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வரும் ஒருமாத காலப்பகுதி மிகவும் தீர்க்கமானது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார். இந்நிலையில், கோவிட் பரவலை கட்டுக்குள்கொண்டு வர தேவையான சுகாதார விதிமுறைகளை மேலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்த வாரத்தில் தொடர்ச்சியான விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அநேகமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து வெளி பிரதேசங்களுக்குச் சென்றுள்ளதாக அறியமுடிகின்றது.
கொரோனா தொற்று நிலைமையை மேலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகத் தேவையான மேலும் சுகாதார விதிமுறைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது நாட்டில் இனங்காணப்படும் கோவிட் நோயாளர்கள் மற்றும் கோவிட் மரணங்களும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. இதற்காக மக்கள் பெரும் அர்ப்பணிப்பைச் செய்துள்ளனர்.
இந்நிலையில், கோவிட் தொற்றை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான முக்கிய காலப்பகுதியாக எதிர்வரும் ஒரு மாதட காலம் கருதப்படுகின்றது. ஆகையினால் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.
இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் எதிர்வரும் காலப்பகுதியில் கோவிட் பரவலை மேலும் குறைக்க முடியும்” என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.