இலங்கையின் புதிய நிதியமைச்சராக பசில் ராஜபக்ச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
பசில் ராஜபக்சவின் பாராளுமன்ற மீள் வருகையடுத்து ”வளரும் நாட்டிற்கான பலம் பசில் ராஜபக்ஷ” பாராளுமன்ற வருகைக்கு வாழ்த்துக்கள் மற்றும் வடக்கின் வசந்தத்தின் மூலம் பொதுமக்களின் அபிலாசையினை பெற்ற நாயகனின் பாராளுமன்ற மீள்வருகை என பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகள் வவுனியா நகர் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர்கள், பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலர் ஆதரவு தெரிவித்து இவ்வாறு பதாதைகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.
வவுனியா புளியங்குளம் ஏ9 வீதியில் இன்று (08.07.2021) காலை பாரவூர்தி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
பொருட்களை ஏற்றிய பாரவூர்தி வடபகுதியிலிருந்து தென்பகுதி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியினை விட்டு கீழ் இறங்கி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் வாகனத்தில் பயணித்த ஒருவர் மரணமடைந்துள்ளாகவும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையின் புதிய நிதியமைச்சராக பசில் ராஜபக்ச ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று காலை பதவி பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.
அதனையடுத்து பொதுஜன பெரமுன கட்சியின் வவுனியா மாவட்ட ஆதரவாளர்களினால் பசில் ராஜபக்சவின் பதவிப்பிரமாண கொண்டாட்டம் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (08.07.2021) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் பலர் ஒன்றுசேர்ந்து பட்டாசு கொழுத்தி மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொரோனா தொற்று காரமணமாக இன்று (08.07) மரணமடைந்துள்ளார்.
வவுனியா வைத்தியசாலையில் கிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து குறித்த பெண் வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் வவுனியா, மதவுவைத்தகுளம் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவராவார்.
வவுனியாவில் 8 மணி நேரத்தில் ஆயிரம் கோவிட் தடுப்பூசிகளும் இன்று வெற்றிகரமாக ஏற்றப்பட்டுள்ளன. வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் சுகாதாரப் பிரிவினரின் ஒத்துழைப்புடன்,
வவுனியா நகரம், வவுனியா நகரின் வடக்கு, இறம்பைக்குளம், வைரவபுளியங்குளம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி ஏற்ற வருகை தந்தமையால் 8 மணிநேரத்தில் ஆயிரம் பேர் தடுப்பூசிகளை 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்றியிருந்தனர்.
இதன் மூலம் முதற்கட்டமாக வவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட 1000 தடுப்பூசிகளும் தீர்ந்து போயின. அடுத்து வரும் வாரமளவில் தடுப்பூசிகள் ஏற்றும் பணி மீள இடம்பெறவுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3- பேர் பூச்சி கொல்லி மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஈரோடு மாவட்டம் கொளாநல்லி அருகே உள்ள வீரப்பன் கவுண்டன் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. விவசாயியான இவர் நேற்று மனைவி சசிகலாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் மனமுடைந்து பிரபுவின் மனைவி சசிகலா (வயது 33), பூச்சி கொல்லி மாத்திரையை உட்கொண்டதுன் தனது மகன் நிகின் சங்கர் (வயது 12) மகள் சுதர்ஷனா (வயது 10) ஆகியோருக்கும் கொடுத்து தற்கொலை செய்து கொண்டனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கபட்டும் சிகிச்சை பலனின்றி 3- பேரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக மலையம்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பார்ப்பதற்கு பாண்டா போல உருண்டையாக இருக்கும் இவர் தான் லேடி கெட்டப் ரங்கசாமி. ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தை சேர்ந்த ரங்கசாமி வேலை தேடுவது போல ஐதராபாத்தில் உள்ள லாலகுடா பகுதிக்கு சென்றுள்ளான்.
அங்கு தங்கி வேலை தேடுவதற்கு பதிலாக அக்கம் பக்கத்தில் வசிக்கின்ற திருமணமான பெண்க.ளை தனது காதல் வலையில் விழ வைத்து பணம் ப.றிக்கும் மோ.சடி வேலைகளை அரங்கேற்றியுள்ளான்.
சிரிக்க சிரிக்க பேசினால் பெண்கள் எளிதில் காதலில் விழுந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில், அறிமுகமாகும் பெண்களிடம் எல்லாம் அப்பாவித்தனமாக கோமாளி போல பேசி அவர்களின் நட்பை பெற்று, அவர்களது வீடுகளுக்கு சென்று அவர்களது ஆடைகளை அணிந்து கொண்டு பெ.ண் போல வேடமிட்டு அவர்களை சிரிக்க வைத்து ம.யக்கி உள்ளான்.
தனது காதல் வலையில் சி.க்கும் பெ.ண்களிடம் பா.லி.ய.ல் இ.ச்.சை.யை தீ.ர்த்துக் கொண்டு நெ.ரு.க்.க.மாக புகைபடம் எடுத்து வைத்து, அதனை வைத்து மி.ர.ட்.டி ப.ண.ம் பெறுவதையும் வாடிக்கையாக்கி உள்ளான்.
ஆசை அறுபது நாள் மோ.க.ம் முப்பது நாள் என்பது போல ஒரு பெண்ணிடம் எ.வ்.வளவு ப.ணம் பெறமுடியுமோ அந்த அளவிற்கு ஏ.மாற்றி பெற்றதும், அடுத்த பெண்களை தேடிச்சென்றுவிடுவது இவனது வாடிக்கை என்று கூறப்படுகின்றது.
லாலகுடாவில் இதேபோல் ஒரு பெண்ணை ஏ.மாற்றியதாக ரங்கசாமி மீது காவல் நிலையத்தில் பா.திக்கப்பட்ட பெ.ண் அளித்த பு.காரின் அடிப்படையில் போலீசார் ரங்கசாமி மீது வ.ழக்கு பதிவு செய்து அவனை பிடித்து விசாரித்த போது அவன் மீதுள்ள வழக்குகள் வெளிச்சத்திற்கு வந்தது.
தனது மோ.சடி வேலைக்காக திருமணம் ஆன நன்றாக சம்பாதிக்கும் சில திருமணமான பெண்களிடம் நண்பன் போல பேசி பழகி, கணவன் மனைவிக்கிடையே ச.ண்டையை ஏற்படுத்தி கணவரிடம் இருந்து வி.வாகரத்து செய்ய வைத்து அந்த பெண்களிடம் பணம் ப.றித்த கொ.டுமை.யை எல்லாம் நிகழ்த்தியுள்ளான் லேடி கெட்டப் ரங்கசாமி.
10க்கும் மேற்பட்ட குடும்ப பெண்களின் வாழ்க்கையில் கும்மியடித்த ரங்கசாமி, ஐதராபாத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கோவாவுக்கு ஹனிமூன் டிரிப் சென்றபோது அங்கு வைத்து ஹைதராபாத் போலீசார் அவனை சு.ற்.றி.வ.ளை.த்.து கை.து செ.ய்.து சி.றை.யில் அடைத்தனர்.
இந்தியாவில் தினக்கூலியாக இருந்த நபர் தற்போது யூடியூப் சேனல் தொடங்கி லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவை சேர்ந்தவர் ஐசக் முண்டா (35). இவருக்கு திருமணமாகி மனைவியும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர். தினக்கூலியாக சொற்ப வருமானம் ஈட்டி வந்த ஐசக் கடந்தாண்டு தனது நண்பர்கள் செல்போனில் சில வீடியோக்களை பார்த்துள்ளார்.
இதையடுத்து கடந்தாண்டு ரூ 3000 கடனாக வாங்கி ஒரு ஸ்மார்ட் போன் வாங்கினார். அதில் அதிகம் சைட் டிஷ் எதுவும் இல்லாமல் தான் அரிசி சாதம் சாப்பிடுவதை வீடியோவாக எடுத்து தனது ஐசன் முண்டா ஈட்டிங் என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டார்.
நம்பமுடியாத வகையில் அந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றது. இதன் பின்னர் பழங்குடி கிராம மக்களின் வாழ்க்கை முறை, அவர்களில் சமையல், கலாச்சாரம் போன்றவைகளை,
வீடியோவாக எடுத்து போட சக்கை போடு போட்டு அனைத்து வீடியோக்களும் ஹிட் அடித்தது. முதல் வீடியோவுக்கு ரூ 37000 அவருக்கு கிடைத்தது. பின்னர் லட்சக்கணக்கில் வருமானம் வர தொடங்கியுள்ளது.
ஐசக் கூறுகையில், நான் ஏழாம் வகுப்பு தான் படித்துள்ளேன், என் சமுதாயம் தொடர்பான வீடியோக்களை பதிவிட தொடங்கி இப்போது என் சேனல் பிரபலமாகி உள்ளது. இதுவரை 250 வீடியோ போட்டுள்ளேன், என் சேனலுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான subscribers உள்ளனர் என கூறியுள்ளார்.
தமிழகத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில் உண்மையான காரணம் தெரியவந்துள்ளது. தஞ்சாவூரின் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 31).
இவருக்கும், பட்டுக்கோட்டை அருகே உள்ள திட்டக்குடி கிராமத்தை சேர்ந்த தமிழழகிக்கும் (26) கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது, குழந்தை இல்லை.
பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை செய்து வருவதால், தமிழழகி மாமனார்- மாமியாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி இரவு தமிழழகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தன்னுடைய மகளின் மரணத்துக்கு வரதட்சணை கொடுமையே காரணம் என தமிழழகியின் தந்தை புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குபதிவு செய்த திருச்சிற்றம்பலம் போலீசார், தீவிர விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில் தமிழழகியின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது, அவரது உள்ளாடையிலிருந்து கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில், தன்னுடன் 3 பேர் தொடர்பில் இருந்ததாகவும், அவர்களின் பெயர்களையும் தமிழழகி குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தொடர்பு குறித்து வெளியே தெரியவந்ததால் அவமானத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து ஆகாஷ் (வயது 21), அதே பகுதியில் டீக்கடை நடத்தி வரும் கண்ணன் என்பவரின் மகன் மணிகண்டன் (28) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 3 பேர் மீதும் 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) 306 எஸ்.சி. எஸ்.டி (வன்கொடுமை தடுப்பு சட்டம்) ஆகிய பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை நேற்று கைது செய்தனர்.
வவுனியா குழுமாட்டு சந்தியில் வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான நெளுக்குளம் குளத்தின் அணைக்கட்டின் கீழ் பக்கத்தில் வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அனுமதியின்றி வவுனியா தெற்கு பிரதேச சபையினால் பல மில்லியன் ரூபா நிதியில் கட்டப்பட்ட மரக்கறி மற்றும் மீன்சந்தையினை அகற்றுமாறு வவுனியா கமநல திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட குழுமாட்டுச் சந்தியில் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வறுமை மட்டத்தை குறைத்தல் (2017-2020) எனும் கருப்பொருளின் கீழ் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் பொதுநலவாய உள்ளூராட்சி மன்றங்களின் இணையம், ஐக்கிய இராஜ்ஜியத்தின் சர்வதேச அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றின் பங்களிப்புடன் மரக்கறி மற்றும் மீன் சந்தை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த கட்டிடம் வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான நெளுக்குளம் குளத்தின் அணைக்கட்டின் கீழ் பக்கத்தில் அமைந்துள்ளமையினால் குளத்தின் அபிவிருத்தி பணிகள் , குள புனரமைப்பு , விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கல் என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதில் வவுனியா கமநல திணைக்களம் சிரமத்தினை எதிர்நோக்கியுள்ளது.
கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அனுமதியின்றி வவுனியா தெற்கு பிரதேச சபையினால் கட்டப்பட்ட குறித்த மரக்கறி மற்றும் மீன்சந்தை கட்டடிடத்தினை அகற்றுமாறு கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் எஸ்.விஸ்னுதாசன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, எமது அனுமதியின்றி குளத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் வவுனியா தெற்கு பிரதேச சபையினால் இக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டடம் கட்டப்படும் போதே நிறுத்துமாறு கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் கட்டளை வழங்கப்பட்டது. அதனையும் மீறி தொடர்ந்தும் கட்டப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.
இக் கட்டிடத்திற்கு அனுமதி வழங்கினால் எம்மால் குள புனரமைப்பு, அபிவிருத்தி போன்ற பணிகளுக்கு தடங்கல் ஏற்படலாம் அதன் காரணமாக இக் கட்டிடத்தினை அகற்றுமாறு உரிய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளோம்.
வவுனியாவில் குளங்களை ஆக்கிரமித்து அமைக்கப்படும் கட்டிடங்கள் தொடர்பில் எம்மால் தொடர்ச்சியாக கவனம் செலுத்தப்பட்டு வருவதுடன் பலருக்கு எதிராக வழக்கு தாக்கல்களும் மேற்கொண்டுள்ளோம். குளத்தினை மீட்கும் பணி தொடர்ச்சியாக இடம்பெறும் என தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் இருவரையும் தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட போதிலும் அவர்கள் பதிலளிக்கவில்லை.
பல மில்லின் ரூபா நிதியில் கட்டப்பட்ட மரக்கறி மற்றும் மீன்சந்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் முன்னரே அகற்றும் நிலை உருவாகியுள்ளது. குள அணைக்கட்டின் கீழ் அனுமதியின்றி வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினர் கட்டிடத்தினை நிர்மானித்தது ஏன்? மக்கள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட பல மில்லியன் ரூபா நிதி வீண் விரயமாக்கப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் தெரியவருகின்றது.
முல்லைத்தீவில் வாள் வெட்டு மற்றும் வாகனத்துக்கு தீ வைத்த சம்பவங்களுடன் தொடர்புபட்ட மூன்று சந்தேகநபர்களை யாழ். பொலிஸார் நவாலியில் வைத்து நேற்று கைது செய்துள்ளனர்.
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளப்பாடு வடக்கு பகுதியில் கடந்த 27ஆம் திகதி இரவு வீடு புகுந்த சுமார் 7 பேர்கொண்ட கும்பல் வாள் வெட்டுத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது வீட்டிலிருந்த நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அத்துடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீதும் தாக்குதல் நடத்திச் சேதப்படுத்தியுள்ளதுடன், வாகனமொன்றுக்கு தீ வைக்கப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்து.
இந்த நிலையில் சி.சி.ரிவி கமரா மூலம் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை வைத்து சந்தேகநபர்களை இனம் காணும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களைக் கைது செய்ய அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரதான சந்தேகநபர்களாகச் சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேகநபர்களை நேற்று நாவலியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் சந்தேகநபர்களை முல்லைத்தீவு பொலிஸாரிடம் கையளிக்கவுள்ளனர்.
இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை சந்தையில் இன்று வரையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை செய்கூலியுடன் சேர்த்து 124000 ரூபாவை கடந்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை அதிகரிக்க கூடும் என குறிப்பிடப்படுகின்றது. இலங்கையில் தங்கத்திற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தங்க நகை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எப்படியிருப்பினும் தங்க நகைகளை உற்பத்தியாளர்கள் பதுக்கி வைத்துள்ளமையினாலேயே இவ்வாறு தங்க விலை அதிகரித்துள்ளதாக குறிப்படுகின்றது.
தங்கத்தின் விலையில் ஏற்பட்ட பாரிய அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் தங்கம் இறக்குமதி செய்வதற்கு இலங்கை வங்கி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டெல்டா வைரஸின் தாக்கம் இரு மாதங்களின் பின்னர் இலங்கையில் வெளிப்படத் தொடங்கும் என வைத்திய நிபுணர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
உலகின் அநேகமான நாடுகளில் கொவிட் – 19 வைரஸின் புதிய திரிபுகள் பரவ ஆரம்பித்து 2, 3 மாத காலத்தின் பின்னரே அதன் மோசமான தாக்கங்கள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன.
எனவே, தற்போது எமது நாட்டிலும் டெல்டா வைரஸ் திரிபுகள் இனங்காணப்பட்டுவரும் நிலையில், இரு மாத காலத்தின் பின்னர் இதன் தாக்கங்கள் வெளிப்படத் தொடங்கும்.
அதுமாத்திரமன்றி நாடு மிகமோசமான தொற்றுப்பரவல் நெருக்கடி ஒன்றுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதென்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயமாகும்.
அத்துடன் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதற்கென ஒரு சீரான வழிமுறை உள்ளது. அதனைப் பின்பற்றாமல், உடனடியாகக் கொடுப்பனவு அதிகரிக்கப்படுமானால் அது ஒட்டுமொத்த அரச சேவையிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியாவில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது சிறுவனின் உடல் கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக மொறட்டுவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிறுவனின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் வீட்டின் பின்பகுதியில் தலையில் அடிப்பட்ட காயத்துடனும், கழுத்தில் வெட்டுக் காயத்துடனும் நேற்று (06.07) காலை சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுவனின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்ட பொலிசார் வவுனியா தடவியல் பொலிஸாரின் உதவியுடன் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சிறுவனின் சடலத்திற்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் வவுனியா சட்ட வைத்திய அதிகாரி ஈ.ஜி.யூ.என்.குணரட்ண மற்றும் பொலிசார் முன்னிலையில் பிரேத பரிசோதனைக்கள் இடம்பெற்றிருந்தன.
இருப்பினும், மேலதிக தகவல்கள் தேவைப்பட்டமையால் சிறுவனின் உடல் கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக மொறட்டுவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனையடுத்து சிறுவனின் மரணம் தொடர்பில் சந்தேகம் உள்ளமையால் உடலை எரியூட்டாமல் புதைக்கவேன்டும் என சட்ட வைத்திய அதிகாரியால் தெரிவிக்கப்பட்டு சடலம், பெபெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நடந்தது என்ன? விசாரணைகளில் வெளியான தகவல்!!
வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்கசபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய உதயச்சந்திரன் சஞ்ஜிவன் என்ற சிறுவன் காயங்களுடன் இன்று (06.07.2021) காலை சடலமாக மீட்கப்பட்டார்.
வீட்டுக்கு பின் பகுதியில் தலை மற்றும் முகத்தில் அடிப்பட்ட காயத்துடனும் கழுத்தில் வெட்டுக் காயத்துடனும் குறித்த சிறுவன் சடலமாக காணப்பட்டதுடன் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளும் ஆரம்பமானது.
நடுத்தர வசதிகளுடன் வசித்து வருகின்ற குடும்பத்தில் உதயச்சந்திரன் சஞ்ஜிவன் கடைசி பிள்ளை இவருக்கு மூன்று அக்கா ஒர் அண்ணா என நான்கு சகோதர்கள் உள்ளனர்.
இவர்களது வளவினுள் வர்த்தக நிலைய கட்டிடம் மற்றும் வீடு என்பன அமைந்துள்ளதுடன் பெரிய வீடு ஒன்றிற்கான நிர்மாணப்பணிகளும் இடம்பெற்று வருகின்றன.
இவர்கள் தற்போது வசிக்கும் வீட்டில் அனைவரும் ஒன்றாக தங்குவதற்கு போதிய வசதிகள் இன்மையினால் குறித்த சிறுவனும் அவரின் அண்ணாவும் அவர்களின் வளாகத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலைய கட்டிடத்தில் இரவு நேரத்தில் தங்குவது வழமை.
நேற்றையதினம் (05.07.2021) இரவு நேர உணவின் பின்னர் வீட்டில் அனைவரும் உறங்கியுள்ளனர். இந்நிலையிலேயே இன்று (06.07.2021) காலை சிறுவனை காணவில்லை என சிறுவனின் சகோதரிகள் தேடிய சமயத்தில் இவர்கள் உறங்கும் வர்த்தக நிலையத்தின் பின்பகுதியில் தலை தரையினை நோக்கியவாறு (பின்பக்கமாக) உடல் காணப்பட்டுள்ளது.
அதன் பின்னர் சகோதரிகள் சகோதரனுக்கு நடந்ததை தெரிவித்த சமயத்தில் சகோதரன் சடலத்தினை திருப்பி பார்வையிட்ட சமயத்தில் முகத்தில் காயங்களுடனும் கழுத்தில் வெட்டுக் காயங்களுடனும் சிறுவன் சடலமாக காணப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்துடன் தடவியல் பொலிஸாரின் உதவியினையும் பெற்றிருந்தனர்.
அதன் பின்னர் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு சம்பவ இடத்திற்கு வருகை தந்து தடயங்களை பார்வையிட்டதுடன் சிறுவனின் சகோதரன், சகோதரனின் நண்பன் ஆகியோரிடம் விசாரணைளையும் முன்னெடுத்திருந்தார். எனினும் இதுவரையில் சிறுவனின் மரணம் தொடர்பில் மர்மம் தொடர்கின்றது.
வவுனியா குடியிருப்பு, பூந்தோட்டம் பிரதான வீதியில் நேற்று இரவு (06.07.2021) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா நகரப் பகுதியிலிருந்து பூந்தோட்டம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பாரவூர்தியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையில் பிறந்த ஃபரா ரூமி சோலோதர்ன் மாநிலங்களவைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பின் பிஷப் கல்லூரியில் 6 வயது வரை படித்த அவர், சுவிஸ் கன்டோனல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இலங்கைப் பெண் ஆவார்.
சுகாதாரத் துறையில் பணியாற்றிய ஃபரா ரூமி அரசியலில் ஒரு வெற்றிகரமான நிலைக்கு மாறியுள்ளார். இது குறித்து அவர் தனது அனுபவங்களை பகிர்நதுகொண்டுள்ளார்.
சிறு வயதில் இலங்கையில் இருந்த அனுபவம்!
அது ஒரு அற்புதமான காலம், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மகிழ்ச்சியான நேரங்கள் வந்து செல்கின்றன, என் குழந்தை பருவ நினைவுகள் இனிமையான நினைவுகள்.
ஆறு வயதாக இருந்தபோது பெற்றோருடன் சுவிட்சர்லாந்திற்கு குடிபெயர்ந்தேன், அதனால் எனது கடந்தகால நினைவுகள் அனைத்தையும் என்னால் நினைவுபடுத்த முடியவில்லை.
ஆனால் மொத்தத்தில், எனக்கு ஒரு அற்புதமான குழந்தைப்பருவம் இருந்தது என்று கூறுவேன்.
இலங்கை என்றவுடன் நீங்கள் தவறவிட்டதாக கருதும் விடயங்கள் என்ன?
வீட்டை விட்டு வெளியேறுவது மிகவும் வேதனையான அம்சங்களில் ஒன்று, குடும்பத்தினர்கள் எப்போதும் உங்களை நேசிப்பார்கள், ஆனால் நீங்கள் இனி அவர்களின் வாழ்க்கையின் அன்றாட பகுதியாக இருக்க மாட்டீர்கள்.
அந்த வகையில், எனது குடும்பம், சூடான வெப்பநிலை, சிறந்த உணவு, கடற்கரைகள், இலங்கையின் நட்பு மற்றும் மரியாதையான மக்களை நான் இழக்கிறேன்.
நீங்கள் சுவிஸ் நாட்டில் குடியேறிய வழிமுறைகள் என்ன? குடியேறும் போது எதிர்கொண்ட சவால்கள் என்ன?
ஒரு இளம் பெண்ணாக, வேலை, சமூக எதிர்பார்ப்புகள், தகவமைப்புத் திறன் போன்ற சிக்கல்களைச் சமாளிக்க வேண்டியதில்லை.
புதிய பாடசாலைகளில் முற்றிலும் புதிய மொழியைச் சுற்றியுள்ள வழியை நான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. நான் வகுப்பிற்கு அறிமுகப்படுத்தப்பட்டபோது இது மிகவும் கடினமாக இருந்தது,
மேலும் ஆசிரியரையோ அல்லது மாணவர்களையோ என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. முதல் வருடத்தில் புதிய நண்பர்களைக் கண்டுபிடிப்பதும் கடினமாக இருந்தது.
எல்லாமே ஒரு வருடத்திற்குப் பிறகு இயல்பாகியது. ஒரு குழந்தையாக நான் ஜெர்மன் மொழியை விரைவாகப் புரிந்துகொண்டேன்.
சுகாதார துறையில் உங்களின் பணி என்ன? அதிலிருந்து அரசிலுக்கு எவ்வாறு பிரவேசித்தீர்கள்?
எனது பாடசாலை படிப்பை முடித்த பிறகு, நான் ஒரு செவிலியராக (பி.எஸ்சி) தகுதி பெற்றேன், பொதுவாக மற்றும் உள்ளுறுப்பு அறுவை சிகிச்சையில் நிபுணர் செவிலியராக பணியாற்றினேன்.
நான் எப்போதும் மக்களுடன் நெருக்கமாக இருக்க விரும்பினேன், அதனால் நான் இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்தேன். அங்குதான் வாழ்க்கை, உரையாடல்கள் மற்றும் உண்மையான வேலைகளை அனுபவிக்கவும் உணரவும் முடியும்.
நான் எப்போதுமே அரசியலில் ஆர்வமாக இருக்கிறேன், கட்சி அரசியல் அல்ல, எனது கல்வியை முடித்தபின், மக்களுக்காக அதிகம் செய்ய வேண்டும் என்ற மிகுந்த ஆசை எனக்கு இருந்தது,
அரசியல் ரீதியாக சுறுசுறுப்பாக மாறுவதற்கு முன்பு சொந்தமாக பல திட்டங்களைத் தொடங்கினேன்.
நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நீதி ஆணைய உறுப்பினராக பதவியேற்ற பின்னர், நான் இப்போது 2 மாதங்கள் பதவியில் இருக்கிறேன், இந்த அனுபவத்தை மிகவும் மதிப்புமிக்கதாகக் காண்கிறேன்.
சிறுவயதில் நீங்கள் எப்போதாவது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆவீர்கள் என்று நினைத்ததுண்டா?
உண்மையாக இல்லை, நான் எப்போதுமே மக்களுக்கு உதவுகிறேன், கவனித்து வருகிறேன், அதனால்தான் நான் ஒரு செவிலியராக என் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினேன், எப்போதும் இந்த தொழிலை மீண்டும் கற்றுக்கொள்வேன்.
சமுதாயத்திற்காக மேலும் பலவற்றைச் செய்வதற்கும், நமது எதிர்காலத்தை ஒன்றாகக் கட்டியெழுப்புவதற்கும் பலப்படுத்துவதற்கும் ஒரு வலுவான விருப்பத்துடன், எனது மேலதிக கல்வியின் பின்னர் எனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினேன்.
சுவிஸ் சோலோதர்ன் மண்டலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டிருப்பது எப்படி?
இந்த மரியாதைக்குரிய பதவியை 99 பிற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வகிப்பது ஒரு மரியாதை மற்றும் பாக்கியமான விடயமாகும்.
நான் இளைய தலைமுறை மற்றும் பெண்களின் பிரதிநிதியாக மட்டுமல்லாமல், புலம்பெயர்ந்தோர், குறிப்பாக தெற்காசியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஒவ்வொரு சிறுபான்மைக் குழுவின் பிரதிநிதியாகவும் என்னைப் பார்க்கிறேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக, பல இலங்கையர்கள் என்னுடன் எனது வெற்றியைக் கொண்டாடுவதையும் கௌரவிப்பதையும் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.