யாழ்.கோண்டாவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற வா.ள்.வெ.ட்.டு தா.க்.கு.த.லி.ல் கை து.ண்டாடப்பட்ட இளைஞனின் கை மீண்டும் பொருத்தப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழிய பல்லவன் தலைமையிலான வைத்தியர் குழுவினரால் அவரின் கை மீளப் பொருத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கோண்டாவில், செல்வபுரம் பகுதிக்கு நேற்றிரவு புகுந்த கும்பல் தா.க்.கு.த.ல் நடத்தியதில் 8 பேர் கா.யமடைந்தனர்.
இந்த தா.க்.கு.த.ல் சம்பவத்தில் 5 பேர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்,
ஒருவர் ஆ.பத்தான நிலையில், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது இடதுகை மணிக்கட்டுடன் து.ண்டாடப்பட்டது.
இந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழிய பல்லவன் தலைமையிலான வைத்தியர் குழு மேற்கொண்ட தீவிர சிகிச்சையைத் தொடர்ந்து அவரது கை மீளப் பொருத்தப்பட்டது.
தேசிய சோபாக்கியா வாரத்தை முன்னிட்டு மரக்காரம்பளை கிராத்தில் உற்பத்தி கிராம கட்டிடத்தின் அடிக்கல் நாட்டுவிழாவும் பூவரசங்குளம் பகுதியில் வீடு கையளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா அபிவிருத்தி குழு இணைத்தலைவருமாகிய குலசிங்கம் திலீபன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துல சேன அவர்களும்,
கௌரவ விருந்தினர்களாக வவுனியா தெற்கு தமிழ் பிரதே சபை தவிசாளர், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், கிராம அலுவலர்,
அபிவிருத்தி உத்தியோகத்தர், பட்டதாரி பயிலுனர்கள், திட்ட பயனாளிகள், பொது மக்கள் என பலர் கொவிட் பாதுகாப்பு நடைமுறைகளுடன், சமூக இடைவெளி பேணி கலந்து கொண்டனர்.
வீடு கையளிப்பு வைபவத்தில் பிரதம மற்றும் சிறப்பு விருந்தினர்கள் நாடா வெட்டி திறந்து வைத்ததுடன் அடிக்கல் நாட்டு வைபவத்தினையும் ஆரம்பித்து வைத்தனர்.
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மெனிக்பாம் பகுதியில் கடந்த 4 வருடங்களான சி.த்.தி.ரவதைக்குபட்ட 28 வயதுடைய பெண்ணை அப் பகுதி கிராம சேவையாளர் மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
மெனிக்பாம் பகுதியில் வசித்து வந்த குறித்த பெண்ணுக்கு பா.லி.ய.ல் ரீ.தியான து.ன்.பு.று.த்.த.ல் மற்றும் சி.த்.ர.வ.தை.க.ள் இடம்பெறுவதாக குறித்த கிராம அலுவலகருக்கு கிடைக்கப்பட்ட முறைப்பாட்டினையடுத்து,
கிராம சேவையாளர் உண்மைத்தன்மையினை ஆராய்ந்து பொலிஸாரின் உதவியுடன் குறித்த பெண்ணை மீ.ட்டெடுத்து உ.டல் பரிசோதனைக்காக செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சைக்காக அப் பெண் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் குறித்த பகுதிக்கு பறயனாலங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினை தொடர்பு கொண்டு கேட்டபோது, நேற்றையதினம் கிராம சேவையாளருடன் எமது பொலிஸ் பிரிவினரும் இணைந்தே குறித்த யுவதியினை மீ.ட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளோம்.
தற்போது யுவதியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளோம் யுவதியிடம் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளின் பின்னரே சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியுமென அவர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் குறித்த பகுதி கிராம சேவையாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, எனக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையின் உண்மைத்தன்மையினை ஆராய்ந்து பொலிஸாரின் உதவியுடன் யுவதியினை மீ.ட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளோம். மேலதிக வி.சாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
எனினும் குறித்த பறயனாலங்குளம் பொலிஸார் மந்த கதியில் வி.சாரணைகளை முன்னெடுப்பதாகவும் பெண்கள் பா.துகாப்பு திணைக்களங்கள், அமைப்புக்கள் இணைந்து குறித்த யுவதிக்கு நியாயத்தினை பெற்று யுவதினை பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்புமாறு அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வாரத்தில் 5 நாள் வேலையை அமுல்படுத்தல், பதவிநிலை சேவையாக மீண்டும் அறிவித்தல் , பதிவி உயர்வை தரம் 11 இற்று 5 வருடம் தரம் 1க்கு 12 வருடங்களாக மாற்றுதல் , டிஏரி கொடுப்பணவு 10000 ஆக உயர்த்துதல்,
சீருடை கொடுப்பனவினை 200000 ஆக உயர்த்துதல், மேலதிக நேர கொடுப்பணவு 1/80 ஆக வழங்குதல் போன்ற 9 கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்களும் இன்று (01.07.2021) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டு வந்த தாதியர்கள் பணி புறக்கணிப்பு காரணமாக வைத்தியசாலை நோக்கி வருகை தந்த நோயாளர்கள் மற்றும் விடுதியில் தங்கியிருந்து பணியாற்றும் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்திருந்தமையினை அவதானிக்க முடிந்தது.
எனினும் நோயாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவசர நோயாளர் பிரிவுகளில் மாத்திரம் தாதியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வைத்தியசாலையின் அனைத்து பிரிவுகளிலும் வைத்தியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் ஒத்துழைப்புடன் சேவைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பினால் மந்த நிலனை ஏற்பட்டுள்ளது.
வவுனியா நகரப் பகுதி இராணுவம் மற்றும் பொலிசாரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், சுகாதாரப் பிரிவினரால் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இன்று (01.07) காலை வவுனியா நகரின் பசார் வீதி, மில் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை உள்வட்ட வீதி என்பன இராணுவம் மற்றும் பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு குறித்த பகுதியில் இருந்து மக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டு நான்கு இடங்களில் சுகாதாரப் பிடிவினரால் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பசார் வீதி சந்தி, தர்மலிங்கம் வீதி சந்தி, சந்தை உள்வட்ட வீதி சந்தி, மில் வீதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி என்பவற்றில் வைத்து சுகாதாரப் பிரிவினரால் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது வர்த்தக நிலையங்களில் பணியாற்றியோர், நகருக்கு பல்வேறு தேவைகளுக்காக வருகை தந்தோர், வாகனச் சாரதிகள் என சுமார் 400 இற்கு மேற்பட்டவர்களுக்கு இதன்போது பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன்,
பிசீஆர் எடுத்த பின்பே மக்கள் நகரில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர். குறித்த பிசீஆர் முடிவுகைளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
வவுனியாவில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள்,
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் இரவு (30.06) வெளியாகின.
அதில் தவசிகுளம் பகுதியில் பத்து பேருக்கும், நெடுங்கேணி பகுதியில் ஒருவருக்கும், பூந்தோட்டம் பகுதியில் இருவருக்கும், பெரியார்குளம் பகுதியில் இருவருக்கும், திருநாவற்குளம் பகுதியில் மூவருக்கும்,
கற்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிதம்பரம் பகுதியில் ஒருவருக்கும், ஆச்சிபுரம் பகுதியில் இருவருக்கும், மாமடு பகுதியில் மூன்று பேருக்கும், அலகல்ல பகுதியில் ஒருவருக்கும்,
பெரியஉளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், இறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், பொலிசார் இருவருக்கும் என 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வவுனியா வடக்கு வலயக் கல்வி அலுவலகத்தின் புதிய வலயக்கல்விப் பணிப்பாளராக திரு துரைராஜசிங்கம் லெனின் அறிவழகன் இன்று(01.07.2021) வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
வடக்கு மாகாணத்தின் 7 கல்வி வலயங்களுக்கு புதிய கல்விப் பணிப்பாளர்கள் அண்மையில் நியமிக்கபட்டுள்ளனர்.வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட சில வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஓய்வுபெற்றுச் சென்றதாலும் மேலும் சிலர் இடமாற்றம் பெற்றுச் சென்றதாலும் ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்பும் வகையில் கோரப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன .
இதனடிப்படையில் வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய திருமதி.அன்னமலர் சுரேந்திரன் வவுனியா தெற்கு வலயகல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தற்போது வவுனியா தெற்கு வலயக் அலுவலகத்தில் கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதிகல்விப் பணிப்பாளராக கடமையாற்றும் திரு.துரைராஜசிங்கம் லெனின் அறிவழகன் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .
யாழ் இந்துக் கல்லூரி, வவுனியா தமிழ்மத்திய கல்லூரி என்பவற்றின் பழைய மாணவரான லெனின் அறிவழகன் வடமாகாண தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறை உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் வடமாகாணத்தின் 13 வருட உத்தரவாதமளிக்கபட்ட கல்வி வேலைத்திட்டத்தின் இணைப்பாளராகவும் வடக்கு மாகாணத்தில் ஊடக கற்கைகள் பாடத்தின் இணைப்பாளராகவும் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டில் நேற்றைய தினம் (29.06) மேலும் 47 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
இதன்போது 31பெண்களும் மற்றும் 16 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,077 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இந்நாட்டு மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 258,405 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 35 வயது பெண் மீது தீராத காதல் கொண்ட 65 வயது முதியவர், காதல் கைகூடாத ஆ.த்.தி.ர.த்.தி.ல் செய்த செயல் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் கவிதா (35). இவர் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். கவிதா கணவருக்கு கை உடைந்து வீட்டில் ஓய்வு எடுத்து வருவதால் வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அவரது வாழ்வாதாரத்திற்காக கவிதா வசிக்கும் வீட்டின் அருகே கடந்த இரண்டு மாதங்களாக காய்கறி, பழங்கள் வாங்கி வந்து விற்பனை செய்து வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளார்.
கவிதா விற்கும் காய்கறி, பழங்களை வாங்க தினந்தோறும் சென்னை கிண்டியை சேர்ந்த 65-வயதுடைய முருகன் என்பவர் செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த ஒன்னறை மாதமாக 65 வயதுடைய முதியவர் 35 வயதுடைய கவிதாவிற்கு காதல் வலை வீசியுள்ளார்.
கவிதா தன்னுடைய காதலுக்கு பச்சைகொடி காட்டாத நிலையில் தனது காதலை தெரிவிக்க கவிதா வீட்டிற்கே சென்றதாக கூறப்படுகிறது. இருந்தும் கவிதா முருகன் காதலை ஏற்க மறுத்ததால் தன்னால் முடிந்த பல்வேறு யுக்திகளை கையாண்ட வயதான அந்த நபருக்கு கடைசிவரை ஏமாற்றமே மிஞ்சியதால் வி.ரக்தியடைந்துள்ளார்.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை, குடும்பமே முக்கியம் என கருதிய கவிதா முருகனுக்கு பயந்து காய்கறி, பழக்கடை போடுவதையே இரண்டு வாரங்களாக நிறுத்தி விட்டார். இரண்டு வாரங்களாக கவிதாவை பார்க்க முடியாத ஏக்கத்தில் இருந்த முருகன் அவருடைய ஒருதலை காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சென்று பார்த்தபோது கவிதா வீட்டில் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் கடும் விரக்தியடைந்த முருகன் ஆ.த்திரத்தில் கவிதா வசிக்கும் வாடகை வீட்டிற்கு தீ வைத்து எ.ரித்து விட்டு அங்கிருந்து த.ப்.பி.ச் செ.ன்றுவிட்டார்.
முருகன் தொல்லையிலிருந்து த.ப்பிக்க கவிதா தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தது பின்னர் வி.சாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டின் உரிமையாளர் கவிதாவை தொடர்பு கொண்டு அவர் வசித்து வந்த வீடு எ.ரிந்து கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வருவதற்குள் வீடு முழுவதும் எ.ரிந்து உள்ளே இருந்த பொருட்கள் எல்லாம் எரிந்து சே.தமாயின. இது குறித்து கவிதா பொலிசில் புகாரளித்த நிலையில் பொலிசார் முருகனை கை.து செய்துள்ளனர்.
முதியவரின் ஒரு தலை காதலால் வாடகை வீட்டையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் கவிதாவின் நிலை பரிதாபமாக மாறியுள்ளது.
இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் ஒரு மாதம் முன்னர் மா.யமான குடும்பத்தின் ஐவரை கொ.லை செ.ய்.து வயக்காட்டில் பு.தைக்கப்பட்ட நிலையில் க.ண்டெடுக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்திலேயே ந.டுங்க வைக்கும் இந்த கொ.டூ.ர ச.ம்பவம் அ.ரங்கேறியுள்ளது. வயக்காட்டில் 10 அடி ஆழத்தில் ச.ட.லங்களை மீ.ட்.டு.ள்ளனர்.
45 வயதான மமதா, இவரின் பிள்ளைகளான ரூபாலி (21) மற்றும் திவ்யா(14), இவர்களின் உறவினர்களான இரு பெண்கள் என மொத்தம் ஐவரின் ச.டலங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மே 13ம் திகதி இவர்கள் ஐவரும் மா.யமானதாக பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட பெண்களில் ஒருவருடன் தொடர்பில் இருந்த சுரேந்திரா ராஜ்புத் என்ற இளைஞரும் அவரது நண்பர்களும் சேர்ந்தே இவர்கள் ஐவரையும் இவ்வாறு செய்திருக்கலாம் என பொலிஸ் தரப்பு ச.ந்தேகம் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட குடும்பம் கைதாகியுள்ள சுரேந்திராவுக்கு சொந்தமான குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர்.
வயக்காட்டில் ஐவரது உ.டல்களையும் பு.தைத்த பின்னர், அவர்களின் உ.டைகளை மொத்தமாக எ.ரி.த்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், ச.டலங்கள் மீது உப்பும் யூரியாவும் கொ.ட்டிய பின்னர் பு.தைத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தற்போது 6 பேர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு உதவிய இன்னும் பலர் சி.க்.க.லா.ம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட ரூபாலியுடன் சுரேந்திராவின் காதல் விவகாரமே, தற்போது கொ.லை.யி.ல் மு.டிந்துள்ளது. சுரேந்திரா காதலியான ரூபாலியை கைவிட்டு, வேறு திருமணத்திற்கு தயாரான நிலையில், ரூபாலி பி.ரச்சனை செ.ய்துள்ளார்.
இந்த ஆ.த்.தி.ர.த்.தி.ல் மொத்த குடும்பத்தையும் கொ.லை செ.ய்.து பு.தைத்துள்ளார் சுரேந்திரா. ரூபாலியின் மொபைல் அழைப்புகளை பரிசோதித்த பொலிசார், சுரேந்திராவை அழைத்து விசாரித்த நிலையில், நடுங்க வைக்கும் இந்த கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்தியாவில் மனைவி கொரோனாவால் இ.ற.ந்.து.வி.ட்.ட.தா.க கணவன் கூறிய நி.லையில், அவர் தான் ம.னைவியை கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர் எ.ன்ற அ.தி.ர்.ச்.சி உ.ண்மை தெரியவந்துள்ளது.
ஆந்திரப்பிரதேச மாநிலம், திருப்பதியில் இருக்கும் SVRR மருத்துவமனை அருகே, சூட்கேஸ் ஒன்று ம.ர்.ம.மா.ன மு.றையில் எ.ரி.ந்.த நிலையில் கி.டந்தது. இதையடுத்து ச.ந்தேகமடைந்த பொலிசார், சூட்கேஸை திறந்து பார்த்த போது, உள்ளே ச.ட.ல.ம் இருப்பதைக் க.ண்டு அ.தி.ர்.ந்.த.ன.ர்.
அதன் பின், அவர் யார் என்று வி.சாரித்த போது, அவர் 27 வயது மதிக்கத்தக்க பெண் என்பது தெரியவந்தது. இதனால் பொலிசார் அங்கிருக்கும் சிசிடிவி கமெராக்களை ஆ.ராய்ந்த போது, வாகனத்தில் வந்து, அந்த ச.ட.ல.ம் போ.டப்பட்டது தெ.ரியவந்தது.
இதைத் தொடர்ந்து பொலிசார் அந்த வாகன ஓட்டியை பி.டி.த்.து வி.சாரித்த போது, உ.யி.ரி.ழ.ந்.த பெ.ண், சித்தூரில் இருக்கும் ராமசமுந்திரத்தில் வசிக்கும் புவனேஷ்வரி (27) என்பதும், இவர் ஹைதராபாத்தில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு கடப்பாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ரெட்டியை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 18 மாத மகள் உள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஸ்ரீகாந்த் தனது வேலையை இழந்ததால், இந்த தம்பதிகளுக்கிடையே பி.ர.ச்.ச.னை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஸ்ரீகாந்த் ம.து.வு.க்.கு அ.டி.மை.யா.க, கடந்த 22-ஆம் திகதி ந.ள்ளிரவில் இருவருக்கும் பி.ரச்.ச.னை வ.லுத்துள்ளது. அப்போது ஆ.த்.தி.ர.த்.தி.ன் உ.ச்சிக்கு சென்ற, அவர் ம.னைவியை கொ.லை செ.ய்.து,
அதன் பின் உ.ட.லை ஒரு சூ.ட்கேஸில் வைத்து அ.டை.த்.து, வா.டகைக் கார் உதவியுடன் வந்து மருத்துவமனை அருகில் போ.ட்.டு.ள்.ளா.ர். அதன் பின், அவர் மீண்டும் திரும்பி வந்து, அந்த சூ.ட்கேஸை எ.ரி.த்.து.ள்.ளா.ர்.
ஆனால், இவர் தன் மாமியார் குடும்பத்தினரிடம், மனைவி கொரோனா பரவல் காரணமாக இ.ற.ந்.து வி.ட்டதாகவும், அவரை மருத்துவமனையிலே த.கனம் செ.ய்துவிட்டதாக பொ.ய் கூறியுள்ளது வி.சாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவத்திற்கு பின் த.லை.ம.றை.வா.க இருந்த ஸ்ரீகாந்தை பொலிசார் பி.டி.த்.து கை.து செ.ய்.து தொ.டர்ந்து வி.சாரணை மே.ற்கொண்டு வ.ருகின்றனர்.
தமிழகத்தில் மணக்கோலத்தில் மணப்பெண் இரண்டு கைகளில் சிலம்பம் மற்றும் சுருள் வாள் வீசி அசத்திய வீடியோ வைரலாகியுள்ளது.
தூத்துக்குடியின் தேமான்குளத்தைச் சேர்ந்த ராஜ்குமார் – நிஷா தம்பதிக்கு திருமணம் முடிந்த நிலையில், மணமக்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
அப்போது, மணப்பெண் நிஷா, மணக்கோலத்திலேயே இரண்டு கைகளில் அசாத்தியமாக சிலம்பம் சுற்றி அசத்தினார். அத்தோடு, பாரம்பரியக் கலையான சுருள் வாள் வீசியும் திருமணத்திற்கு வந்தவர்களை அசர வைத்தார்.
அவரின் இந்த அசாத்திய செயலை அங்கிருந்தவர்கள் பிரம்மிப்போடு பார்த்து கைத்தட்டி ரசித்தார்கள். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.
திருமண ஊர்வலத்தில் மணப்பெண் நமது பாரம்பரிய கலைகளான சுருள் வாள் வீச்சு மற்றும் சிலம்பம் ஆகியவற்றை விளையாடி அசத்தினார் pic.twitter.com/acFTA0zix4
ஜார்கண்டில் 11 வயது சிறுமி ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற தனது கனவை மாம்பழம் விற்று நிறைவேற்றினார்.
இந்திய மாநிலம் ஜார்கண்டில், ஜம்ஷெட்பூரில் ஒரு ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர் 11 வயது துளசி குமாரி, 5-ஆம் வகுப்பு படிக்கிறார். ஊரடங்கு காலத்தில் துளசியின் பெற்றோருக்கு வேலை இல்லாத காரணத்தினால், குடும்பத்தில் மேலும் ஏழ்மை தாண்டவமாடியது.
இந்தநிலையில், துளசிக்கு ஒன்லைன் வகுப்பிற்காக ஒரு ஸ்மார்ட்போன் தேவைப்பட்டுள்ளது. ஆனால் குடுபத்தில் வசதி இல்லாத காரணத்தினால், பெற்றோர்களால் மகளுக்கு போன் வாங்கி கொடுக்க முடியவில்லை.
இருப்பினும், எப்படியாவது ஒரு ஸ்மார்ட்போனை வாங்கி, தனது படிப்பை தொடரவேண்டும் என்ற கனவில், துளசியை சாலை ஓரத்தில் மாம்பழங்களை விற்பனை செய்ய தொடங்கினார்.
அனால் அதில் கிடைத்த வருமானம் குடும்பத்துக்கு தினசரி உணவுக்கே சரியாக இருந்துள்ளது. இந்த நிலையில், துளசியின் வாழ்க்கையில் ஒரு அதிசயம் நடந்தது.
ஏழை சிறுமியின் நிலைமையைப் பற்றி தெரியவந்த மும்பை தொழிலதிபர் Ameya Hete, துளசிக்கு உதவும் வகையில், அவரிடமிருந்து ஒரு மாம்பழத்திற்கு 10,000 ரூபாய் என, ஒரு டஜன் மாம்பழங்களை மொத்தம் 1.2 லட்சத்துக்கு வாங்கினார்.
மேலும் அந்த பணத்திலிருந்து, துளசி ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள ஒரு புதிய ஸ்மார்ட்போனையும், படிப்புக்கு தேவையான சில உபகரணங்களையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இது குறித்து தொழிலதிபர் Ameya Hete கூரியதாவது, நான், பத்திரிக்கையாளர் ஒருவர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவின் மூலம் துளசியை பற்றி அறிந்து கொண்டேன். துளசியின் கதை என் இதயத்தை தொட்டது.
வறுமையில் போராடும் எண்ணற்ற குழந்தைகள் இருக்கிறார்கள், அவர்களது கல்வியும் பாதிக்கப்படுகிறது. ஆனால், தனது வாழ்க்கையில் பல துன்பங்கள் இருந்தபோதிலும், துளசி தன் கனவுகளுக்காக எடுத்த முயற்சிகள் என்னை கவர்ந்தது, என்று கூறினார்.
அடுத்த வாரம் முதல் பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என அனைத்து இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோ மாவின் விலை 18 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார். எரிபொருள் விலை அதிகரித்ததன் காரணமாக,
பாண் தவிர ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை 5 முதல் 10 ரூபா வரை அதிகரிக்க வேண்டியிருந்தது என அவர் மேலும் கூறினார். செரன்டிப் நிறுவனம் கடந்த வாரம் முதல் கோதுமை மாவின் விலையை 18 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
கொவிட் தொற்று அச்சுறுத்தலக்கு மத்தியிலும் இலங்கை பிரபல சொகுசு மாடி வீடுகளின் விற்பனைகள் அதிகளவில் அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தின் இறுதி காலாண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தின் முதல் காலாண்டில் (ஜனவரி – மார்ச்) இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கமைய இந்த வருடத்தின் முதலாம் காலாண்டில் விற்பனைக்காக தயாரான வீடுகளில் 92 வீதமானவை விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சொத்துக்கள் தொடர்பில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2.5 கோடி ரூபாய் வரை விலையில் உள்ள வீடுகளை கொள்வனவு செய்வதற்கு அதிக கோரிக்கைகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த வீடுகளின் கொள்வனவாளர்களில் பெரும்பான்மையானோர் இலங்கையர்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்துடன் கொள்வனவு செய்யப்பட்ட வீடுகளில் உடனடியாக குடியேறியுள்ளனர். மேலும் இந்த வீடுகளில் பெரும்பான்மையானவற்றை கொள்வனவு செய்வதற்கு வங்கி கடன் உதவியுள்ளது.