கொரோனா பரவலையடுத்து வவுனியா நகர சதொச கிளை இன்று (02.07) மாலை மூடப்பட்டது. வவுனியா நகரில் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் முடிவுகள் சில இன்று (02.07.2021) மாலை வெளியாகிய நிலையில்,
வவுனியா நகர சதொச கிளையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த ஊழியரை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன்,
அவருடன் தொடர்பைப் பேணிய குறித்த சதொச கிளை ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், சதொச கிளையும் சுகாதாரப் பிரிவினரால் மூடப்பட்டுள்ளது.
வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (02.07.2021) மாலை 4.30 மணியளவில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வவுனியா நகரிலிருந்து கண்டி வீதி நோக்கி ஒரே பாதையூடாக இரு வாகனங்களும் பயணித்துள்ளன. இதன் போது மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் சிறு சேதங்களுக்குள்ளாகியுள்ளதுடன் மோட்டார் சைக்கிளின் சாரதியும் காயமடைந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்ட கொரோனா தொற்று சிகிச்சை மையத்தில் த.ற்.கொ.லை.க்.கு மு.யற்சித்த நபர் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கம்பகா மாவட்டத்தினை சேர்ந்த 63 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள கொரோனா தொற்று சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் குறித்த நபர் நேற்று (01.07.2021) மாலை த.ற்.கொ.லை மு.யற்சிக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா நகரப்பகுதியில் நேற்றையதினம் (01.07.2021) காலை இராணுவம் மற்றும் பொலிசாரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் சுகாதாரப் பிரிவினரால் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா நகரின் பசார் வீதி, மில் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை உள்வட்ட வீதி ஆகிய நான்கு இடங்களில் சுகாதாரப் பிரிவினரால் பிசீஆர் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
சந்தை உள்வட்ட வீதியில் அமைக்கப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனை மையத்தில் 205 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவர்களை சிகிச்சை மையத்திற்கு அனுப்பும் நடவடிக்கையினை சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
ஏனைய பரிசோதனை மையங்களின் முடிவுகள் இன்றிரவு அல்லது நாளையதினம் வெளியாகலாம் என சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் தங்கத்தின் விலையானது ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாவாக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகில் பல நாடுகளை கோவிட் தொற்று ஆட்டிப்படைத்து வரும் நிலையில் தொற்று பரவல் ஆரம்பித்ததை தொடர்ந்து தங்கத்தின் விலையிலும் தொடர்ச்சியாக அதிகரிப்பு பதிவாகி வருகிறது.
கோவிட் வைரஸ் பரவலால் சர்வதேச பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை காணப்படுவதுடன் உலகப் பொருளாதாரமும் சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தில் முதலீடு செய்து வரும் நிலையில் தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் உலக சந்தையில் தங்கத்தின் விலையில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே இலங்கையில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று மேலும் 3500 ரூபாவால் அதிகரித்து ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாவை எட்டியுள்ளது.
24 கரட் தங்கத்தின் விலை (ஒரு பவுண்) – ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபா, 22 கரட் தங்கத்தின் விலை (ஒரு பவுண்) – ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபா.
ஐரோப்பிய நாடுகளில் கோவிட் தொற்றின் ஆபத்து அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக ஐரோப்பாவில் கோவிட் தொற்றின் ஆபத்து குறைந்திருந்த போதிலும், ஒரு வாரத்தில் நோய் தொற்றின் ஆபத்து 10 வீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மந்தமான தடுப்பூசி திட்டம், புதிய வகைகள் மற்றும் அதிகரித்த சமூக ஒன்று கூடல் ஆகியவற்றால் ஆபத்து அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூக் தெரிவித்துள்ளார்.
தற்போது இடம்பெற்று வரும் 2020ம் ஆண்டுக்கான ஐரோப்பிய கிண்ணம் போட்டித் தொடர் “super-spreader” செயல்படக்கூடிய அபாயமும் இருந்துள்ளது.
இதன்படி, லண்டன் மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து திரும்பும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் நேர்மறை சோதனை செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் மூத்த அவசர அதிகாரி கேத்தரின் ஸ்மால்வுட் ரசிகர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க மேலும் பலவற்றை செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், போட்டிகளுக்கு பின்னர் என்ன நடக்கிறது? ரசிகர்கள் நெரிசல் மிக்க பார்கள் மற்றும் பப்களுக்கு செல்கிறார்களா?” என்பது குறித்து கண்காணிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
“கோவிட் தொற்றின் இந்திய மாறுபாடான டெல்டா ஐரோப்பாவின் பல நாடுகளால் மிகப்பெரிய அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நோய் கட்டுப்பாட்டு நிறுவனம் ஈ.சி.டி.சி ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 90 வீத வழக்குகளுக்கு காரணமாக இருக்கலாம் என்று மதிப்பிடுகிறது.
கடந்த மூன்று நாட்களாக ரஷ்யாவில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை மட்டும் 672 இறப்புகள் மற்றும் 23,543 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.
மாஸ்கோவில் புதிய வழக்குகள் பெரும்பாலானவை டெல்டா மாறுபாட்டைக் கொண்டவை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயர் சுகாதார அதிகாரிகளும் புதிய டெல்டா-பிளஸ் மாறுபாட்டைப் பற்றி பேசுகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறும் தரப்பினர் மற்றும் நிகழ்வுகளை நடத்துவோரை கைது செய்ய வார இறுதியில் பொலிஸார் நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களின்படி சினிமாக்கள், விடுதிகள், கேளிக்கையகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் பிற பொதுக்கூட்டங்களும் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
எனவே சுகாதார அதிகாரிகள் பிறப்பிக்கும் சுகாதார வழிகாட்டுதல்களை பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறுவது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
பொலிஸ் புலனாய்வு பிரிவு மூலம் தகவல்களை சேகரிக்குமாறும் பொலிஸ் நிலையங்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பொது மக்களை வீட்டுக்குள் தங்கியிருந்து தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அஜித் ரோஹன கோரியுள்ளார்.
ஹொரவிபத்தான பிரதேசத்தில் தனியார் பேருந்தில் பயணித்த 19 வயதுடைய யு.வதியை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செய்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பேருந்தில் வேறு பயணிகள் இல்லாத சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சாரதி மற்றும் நடத்துனர் குறித்த யுவதியை பா.லி.ய.ல் து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கை.து செய்யப்பட்ட ச.ந்தேக நபர்கள் இருவரும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை வி.ளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக வி.சாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடையை மீறி கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மூன்று சொகுசு பேருந்துகளில் இருந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் மூவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஏறாவூர்ப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி இ.சிறிநாத் தெரிவித்துள்ளார். குறித்த பேருந்துகளில் 49 பேர் இருந்துள்ள நிலையில் இவர்கள் அனைவருக்கும் அன்டிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பிலிருந்து நான்கு மாகாணங்களை கடந்து கொழும்பிற்கு சென்று திரும்பி வரும் வழியில் பாதுகாப்பு தரப்பினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர்களிடம் விசேட அனுமதிப்பத்திரங்கள் அல்லது பாதை அனுமதி இருக்கவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் கரடியனாறு கோவிட் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதில் பயணித்த ஏனைய பயணிகள் அன்டிஜன் பரிசோதனையினையடுத்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோவிட் தீவிரத்திற்கு மத்தியில் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட டெல்டா திரிபு இலங்கையில் பல பிரதேசங்களில் பரவியிருக்கலாமென அஞ்சப்படுவதால் உடனடி பொது முடக்கம் ஒன்றுக்கு செல்வது குறித்து அரச உயர்மட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக அறியமுடிவதாக தமிழ் பத்திரிகையொன்று,
இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது. அரச உயர்மட்டததில் இன்று விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் இதன்போது இந்த விடயம் குறித்து ஆழமாக ஆராயப்பட்டதன் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் அறியமுடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலும் டெல்டா திரிபு என்ற சந்தேகத்தில் பல கோவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்படுள்ள நிலையில் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு பரவாதிருக்கும் நோக்கத்தில் இவ்வாறு பொது முடக்கம் ஒன்றுக்கு செல்வது குறித்து ஆராயப்படவுள்ளதாக அறிய முடிந்துள்ளது.
மேலும் தற்போதுள்ள தரவுகளை கொண்டு நாட்டின் கோவிட் நிலைமைகளை மூடி மறைக்க நினைத்தாலும் அடுத்த இரண்டு வாரங்களின் பின்னர் நாட்டின் உண்மையான நிலைமை என்னவென்பது வெளிப்பத்தான் போகின்றதென பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில், சுல்தான்பூர் மாவட்டத்தில் மைனர் சி.றுமியை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.ததாக மூன்று பேர் கை.து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் புதன்கிழமை தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு, ஒரு சொகுசு பஸ் சோ.தனைக்காக நிறுத்தப்பட்டது. வாகனத்தை சோ.தனை செய்தபோது, பேருந்தின் கடைசி இருக்கையின் கீழ் இரண்டு சிறுமிகள் உட்பட மூன்று கு.ழந்தைகள் காணப்பட்டதாக பல்திராய் வட்ட அலுவலர் ராஜாராம் சவுத்ரி தெரிவித்தார்.
வி.சாரணையின் போது, 15 வயது சி.றுமி ஒருவரை மூன்று பேர் பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்ததாக அறியப்பட்டது, என்று சவுத்ரி தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக சி.றுமியின் சகோதரி (Step-Sister), பஸ் டிரைவர் மற்றும் பேருந்தில் பயணித்த மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு சி.றுமி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று சவுத்ரி கூறினார்.
நாட்டில் தங்கத்திற்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதாக அகில இலங்கை தங்க ஆபரண சங்கம் தெரிவித்துள்ளது. தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு கடுமையான வரையறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இவ்வாறு தங்கத்திற்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.
தங்கத்திற்கான தட்டுப்பாடு காரணமாக தங்க ஆபரணத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதுடன் ஆயிரக் கணக்கானவர்கள் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளனர்.
அகில இலங்கை தங்க ஆபரண சங்கத்தின் தலைவர் ஏ.விஜேகுமார் இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தங்கம் இறக்குமதி செய்ய பிறப்பிக்கப்பட்ட வரையறைகள் தொடர்ந்தும் அமுலில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு பவுண் தங்கத்தின் விலை 116500 ரூபாவாகவும் செய் கூலியுடன் ஒரு பவுண் நகையை 124000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் மாணவிகளிடம் பா.லி.ய.ல் சீ.ண்டலில் ஈடுபட்ட புகாரில் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் பொலிசார் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறையின் எச்.ஓ.டியாக பொறுப்பு வகித்து வந்தவர் பேராசிரியர் பால் சந்திர மோகன். இவர் தன்னிடம் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கவரும் தமிழ்த்துறையின் பட்டமேற்படிப்பு மாணவிகளிடம் தொடர் பா.லி.ய.ல் அ.த்துமீறல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அவரின் மோசமான செயல் குறித்து விரிவான புகாராக எழுதி 5 மாணவிகள் கையெழுத்திட்டு கல்லூரி முதல்வருக்கு கடந்த மார்ச் மாதம் அனுப்பிவைத்தனர்.
அதில், பால் சந்திரமோகன், வகுப்பறையில், மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டு இரட்டை அர்த்தம் வரும்படி கொ.ச்சையாக பேசுவது, தங்கள் கால்களோடு உரசிக்கொண்டே நெருக்கம் காட்டுவது போன்ற பல்வேறு பா.லி.ய.ல் சீ.ண்டல்கள் ஈடுபட்டதாகவும்,
அவரது அறைக்கு தனியாக செல்லும் மா.ணவிகளின் முன்னிலையில் சட்டையையும் பேண்ட்டையும் தளர்த்திக் கொண்டு, அவர் செய்த ஆ.பா.ச சே.ட்டைகளை பார்த்து, தலையை குனிந்து கொண்டே வகுப்பறையில் இருந்ததாக மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
வகுப்பறையில் குறைந்தளவு மா.ணவிகள் இருந்தால், தனது அறைக்கு வரச்சொல்லி, க.ட்டாயப்படுத்துவதாகவும் , அப்படி செல்லும் மா.ணவிகளிடம் நல்ல அழகா மேக்கப் போட்டு வரதெரியாது,
என் வீட்டு வேலைக்காரி கூட பவுடர் எல்லாம் போட்டு ஜம்முன்னு இருப்பா என்று வசைபாடியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த புகாரை விசாரிக்காமல் கிடப்பில் போட்டுவைத்திருந்த நிலையில் பத்மசேஷாத்திரி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து,
மா.ணவிகள் காவல்துறையில் புகார் அளித்தால் விவகாரம் பெரிதாகிவிடும் என்று அஞ்சிய கல்லூரி நிர்வாகம், மா.ணவிகளின் பு.காரை விசாரிக்க வக்கீல் ஜெயந்திராணி தலைமையிலான 7 பேர் கொண்ட உள் வி.சாரணை குழுவை அமைத்தது.
இந்த வி.சாரணை குழுவானது, தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் பால் சந்திரமோகன், உதவி பேராசிரியை நளினி சுந்தரியிடமும், எழுத்துப்பூர்வமாக பு.கார் அளித்த ஐந்து மா.ணவிகளிடமும் தனித்தனியே வி.சாரணை நடத்தினர்.
வி.சாரணையின் இறுதியில் பால் சந்திர மோகனின் அனைத்து பா.லி.ய.ல் அ.த்துமீறல்களும் உறுதியானதாக கூறப்படுகின்றது. அதன்படி அவரை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
எச்.ஓ.டிக்கு ஆதரவாக செயல்பட்ட உதவி பேராசிரியை நளினி சுந்தரி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விரிவான வி.சாரணை நடத்தினால் சந்திரமோகனின் முழு லீலைகள் வெளிவரும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து குதித்து மொடல் அழகியான இளம்பெண் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் கோட்வாலி பகுதியில் உள்ள 14வது மாடியில் இருந்து குதித்து, மும்பையை சேர்ந்த மொடல் அழகி பாவனா கவுதம் (24) த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார்.
தகவலறிந்த பொலிசார் பாவனா கவுதமின் ச.டலத்தை கை.ப்.ப.ற்.றி வி.சாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பொலிசார் கூறுகையில், நொய்டாவின் பிஸ்ராக் கோட்வாலி பகுதியில் உள்ள 14வது மாடியில் இருந்து கு.தித்து பாவனா கவுதம் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார்.
முதற்கட்ட வி.சாரணையில், மும்பையில் இருந்து தனது காதலனுடன் நொய்டா வந்த பாவனா, 4வது மாடியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு வந்தார்.
இங்கு, அவரது காதலனுக்கு விருந்து வைத்தார். இதையறிந்த அவரது தாய், காதலனை வீட்டிற்கு அழைத்து வந்ததற்காக பாவனாவை தி.ட்டியுள்ளார். இதற்கிடையே, அவரது காதலன் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
மனமுடைந்த நிலையில் இருந்த பாவனா, திடீரென 14வது மாடியின் பால்கனிக்கு சென்று, அங்கிருந்து கு.தித்து த.ற்.கொ.லை.க்.கு செ.ய்.து கொண்டார்.
பாவனா எழுதி வைத்திருந்த டைரியில், நான் விரைவில் வசதி வாய்ப்புடன் பணக்காரி ஆக போகிறேன், எனக்கு மும்பையில் வேலை கிடைக்கவுள்ளது என எழுதப்பட்டிருந்தது.
ஆனால், கொரோனா ஊரடங்கால் அவருக்கு மும்பையில் வேலை ஏதும் கிடைக்கவில்லை. அதனால், அவர் வி.ரக்தியடைந்த நிலையில் நொய்டா வந்ததாகவும் கூறப்படுகிறது.
மும்பையில் திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடிப்பதற்காக கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஆண் நண்பருடன் நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியது. ஆனால், கடந்த சில வாரங்களாகவே, பாவனா கவுதம் மன அ.ழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவரது குடும்பத்தினர் கூறினர்.
இச்சம்பவத்தில், தேவைப்பட்டால் மும்பையில் வசிக்கும், அவரது காதலனிடம் வி.சாரணை நடத்தப்படும். த.ற்.கொ.லை.க்.கா.ன காரணம் முழு வி.சாரணைக்குப் பிறகுதான் தெரியவரும் என கூறியுள்ளார்.
15 வயது சி.றுமியை பா.லி.ய.ல் து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.த சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை பிரதேச சபையின் பிரதி தலைவர் மற்றும் ஒரு முன்னணி தொழிலதிபர் உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்த சி.று.மி மீதான பா.லி.ய.ல் து.ஷ்.பி.ர.யோ.க.ம் தொடர்பாக இதுவரை 21 பேரைக் கு.ழந்தைகள் மற்றும் பெ.ண்கள் பொலிஸ் பிரிவு கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
35 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டமையை தொடர்ந்து, இந்த செயலுக்குப் பணம் செலுத்திய பலரைக் கைது செய்ய காவல்துறை வி.சாரணையை ஆரம்பித்தது.
முன்னதாக, இந்த 15 வயது சி.றுமியை பா.லி.ய.ல் வேலைக்காக ஈடுபடுத்தியதற்காகக் கொழும்பு கல்கிசையில் பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.
இவர் சி.றுமியை பா.லி.ய.ல் தொ.ழிலில் ஈடுபடுத்துவதற்காக சமூக ஊடகங்களில் ஏராளமான விளம்பரங்களை வெளியிட்டிருந்தமை தெரியவந்தது.
சம்பவம் தொடர்பில் சி.றுமியின் தாய், முச்சக்கரவண்டி ஓட்டுநர், கார் ஓட்டுநர் மற்றும் விளம்பரத்திற்காக வலைத்தளத்தை வடிவமைத்தவர் உட்பட 17 சந்தேக நபர்களை பொலிஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
இந்த வி.ப.ச்.சா.ர விடுதி கல்கிஸ்ஸையில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் செயல்பட்டு வந்தது. இங்கு வைத்தே 15 வயது சி.றுமி பா.லி.ய.ல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
கோவிட் – 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் மிகச்சரியான வேலைத்திட்த்தை அரசாங்கம் முன்னெடுக்க தவறி வருகிறது. பொதுமக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் அல்லது சுகாதார வழிமுறைகளை மீறும் விதத்தில் செயற்பட அனுமதித்தால்,
அடுத்த பத்து வாரங்களில் நாட்டில் பிரதான வைரஸ் தொற்றாக டெல்டா வைரஸ் தொற்று காணப்படுமென்று வைத்திய நிபுணர்கள் அரசாங்கத்திடம் எடுத்துக் கூறியுள்ளனர்.
இதேவேளை வைத்திய நிபுணர்களின் தொடர்ச்சியான எச்சரிக்கை உண்மையென ஏற்றுக் கொண்டுள்ள சுகாதாரப் பணியகம், கோவிட் 19 “டெல்டா” வைரஸ் பரவலுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, அது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.