ஜப்பானில் உயிரிழந்த இலங்கைப் பெண் : சகோதரிகள் எடுத்துள்ள நடவடிக்கை!!

விஷ்மா சந்தமாலி..

ஜப்பானில் உள்ள நாகோயா பிராந்திய குடிவரவு சேவைகள் பணியகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது கடந்த மார்ச் மாதம் மரணமான 33 வயது இலங்கை பெண்ணின் சகோதரிகள் நேற்று (ஜூலை 2 ம் திகதி)வழக்குக்கு பொறுப்பான சட்டத்தரணியை சந்தித்து விரைவான விசாரணையைக் கோரினர்.

இந்த சந்திப்புக்கு பின்னர், சகோதரிகள் செய்தியாளர்களிடம் தகவல் அளித்தனர். வழக்குக்கு பொறுப்பான சட்டத்தரணி தமது துக்கத்தை உன்னிப்பாகக் கேட்டார் என்றும் அவர்கள் வழக்கை முழுமையாக விசாரிப்பார்கள் என்று தாம் நம்புவதாகவும் சகோதரிகள் குறிப்பிட்டனர்.

மரணமான விஷ்மா சந்தமாலியின் தங்கைகளான வயோமி(28) பூர்ணிமா(27), மற்றும் அவர்களது சட்டத்தரணி ஷோச்சி இபுசுகி உள்ளிட்ட எட்டு பேர் நாகோயா மாவட்ட பொது சட்டத்தரணிகள் அலுவலகத்தில் வழக்குக்கு பொறுப்பான சட்டத்தரணியுடன் இந்த சந்திப்பை நடத்தினர்.

இதன்போது பதில் வழங்கிய வழக்குக்கு பொறுப்பான சட்டத்தரணி, துயரமடைந்துள்ள குடும்பத்தின் உணர்வுகளையும் அவர்களின் சட்டத்தரணியின் விளக்கத்தையும் தாம் முழுமையாகக் கருத்தில் கொள்வதாக கூறியுள்ளார்.

காவலில் வைக்கப்பட்ட விஷ்மாவின் பாதுகாப்பு கேமராக்களின் காட்சிகளை சட்டத்தரணி பார்த்தாரா என்று சகோதரியும் மற்றவர்களும் கேட்டபோது, ஜப்பானிய சட்டத்தின் கீழ், விசாரணை குறித்த தகவல்களை விவாதிக்க தங்களுக்கு அனுமதி இல்லை.

எனவே விசாரணையின் முன்னேற்றம் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார். எனினும் விசாரணைகள் தொடர்வதாக அவர் குறிப்பிட்டார்.

திருமணமான 2வது நாளில் கணவனுக்கு பே.ரதிர்ச்சியை கொடுத்த 27 வயதான மனைவி : சிலையாக நின்ற ப.ரிதாபம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணமான 2வது நாளில் புதுமணப் பெ.ண் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டது சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அடுத்த நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகள் மணிமேகலை (27).

பி.எஸ்சி. நர்சிங் படித்து முடித்த இவர் சென்னையில் உள்ள ஒரு கண் கண்ணாடி கடையில் கண் பரிசோதனை செய்யும் பிரிவில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் மணிமேகலைக்கும், குப்புசாமி என்பவருக்கும் இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த சூழலில் நேற்று காலை மணிமேகலை, கணவர் மற்றும் உறவினர்களுடன் பண்ருட்டியில் இருந்து, தாய் வீட்டான மருதுார் நத்தமேட்டிற்கு வந்தார். மாலை பண்ருட்டிக்கு புறப்பட்டனர்.

அப்போது மணிமேகலை புடவை மாற்றி வருவதாக அறைக்குள் சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. க.தவை த.ட்டியும் தி.றக்காததால், ச.ந்தேகத்தின் பேரில் ஜன்னல் வழியாக பார்த்த போது மி.ன் வி.சி.றி.யி.ல் மணிமேகலை துா.க்.கி.ல் தொ.ங்.கி.னா.ர்.

இதை பார்த்து குப்புசாமி உள்ளிட்ட அனைவரும் பே.ர.தி.ர்.ச்.சியடைந்தனர். பின்னர் க.த.வை உ.டை.த்.து செ.ன்று பார்த்த போது மணிமேகலை இ.ற.ந்.தி.ரு.ந்.த.தை க.ண்டு க.த.றி அ.ழு.த நிலையில் அ.தி.ர்.ச்.சி.யி.ல் இருந்த மீ.ளாத குப்புசாமி சிலை போல அ.சைவற்று நின்றார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் மணிமேகலை ச.ட.ல.த்.தை கை.ப்.ப.ற்.றி.வி.ட்.டு அ.வ.ர் த.ற்.கொ.லை.க்.கா.ன கா.ரணம் குறித்து வி.சாரணை ந.டத்தி வ.ருகின்றனர்.

திருமண கோரிக்கையை நிராகரித்த சிறுமி : இளைஞர் ஒருவரின் மிக மோ.சமான செயல்!!

திருமண கோரிக்கையை நிராகரித்த சிறுமி…

16 வயதான சி.றுமியை கூ.ர்மையான ஆ.யு.த.ங்.க.ளா.ல் தா.க்.கி ப.லத்த கா.யங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 26 வயது இளைஞரைக் கை.து செய்ய தம்புளை பொலிஸார் சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

தம்புள்ளை- பன்னம்பிட்டிய , மெனிக்தென்ன பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சி.றுமி மீது தா.க்.கு.த.ல் மே.ற்கொள்ளப்பட்டுள்ளது.

பெற்றோரை இழந்த குறித்த சி.றுமி தனது பாட்டியுடன் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ப.லத்த கா.யங்களுடன் தம்புளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சி.றுமிக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தா.க்.கு.த.லை மே.ற்கொண்டவர் மாத்தளை- மஹவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், பதுளை பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபடுபவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தா.க்.கு.த.லி.ல் சி.று.மி ஒரு விரலை இ.ழந்துள்ளதாகவும், அவரது மு.து.கு மற்றும் க.ழுத்தில் ப.லத்த வெ.ட்.டு.க் கா.ய.ங்.க.ள் ஏ.ற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கா.யமடைந்த சி.றுமியின் கிராமத்திலுள்ள வீடொன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றுக்காக சி.றுமி சென்ற போது, சந்தேகநபர் சி.றுமியிடம் திருமணம் செய்துகொள்வதற்கான யோசனையை தெரிவித்துள்ளார்.

எனினும் அச் சி.றுமி அந்த யோசனையை நிராகரித்தமையே இச்சம்பவத்துக்கான காரணம் என சி.றுமியின் பாட்டி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தா.க்.கு.த.லை மேற்கொண்ட இளைஞர் த.லை.ம.றை.வாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவரை கைது செய்ய பொலிஸார் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

உலக மக்களுக்கு உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கை!!

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…

கோவிட் தொற்றின் இந்திய மாறுபாடான டெல்டா திரிபு இனி வரும் மாதங்களில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு, தனது கொரோனா வாராந்திர தொற்றுநோய் புதுப்பிப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அறிக்கையில் மேலும், டெல்டா வைரஸ் பாதிப்பினை 96 நாடுகள் தெரிவித்துள்ளன.

இதன் மாறுபாடுகளை அடையாளம் காணத் தேவையான வரிசை முறை திறன்கள் குறைவாக இருப்பதால், இது குறைத்து மதிப்பிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 வயது சிறுமி இணையம் வழியாக விற்கப்பட்ட விவகாரம் : கப்பலொன்றின் கப்டன் உள்ளிட்ட 26 பேர் இதுவரை கைது!!

15 வயது சிறுமி..

கொழும்பு – கல்கிஸ்ஸையில், 15 வயது சிறுமியை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்ததாக கைது செய்யப்பட்டவர்களில் கப்பல் ஒன்றின் கெப்டனும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 26 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் சி.றுமியின் தாயும், மிஹிந்தலை பிரதேச சபையின் துணைத் தலைவரும் உள்ளனர். மேலும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான வி.சாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி ஓட்டுநர், ஒரு கார் ஓட்டுநர் மற்றும் சி.றுமியை பா.லி.ய.ல் ரீதியாக விற்க பயன்படும் வலைத்தளத்தை வடிவமைப்பதில் ஈடுபட்டவர் ஆகியோரும் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டனர்.

இந்த 15 வயது சி.றுமி இணையம் வழியாக பா.லி.ய.ல் தொடர்பாக பல வாடிக்கையாளர்களுக்கு 10,000 ரூபா. 15,000 மற்றும் 30,000 ரூபா என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டுள்ளார்.

முதற்கட்ட வி.சாரணையில் பிரதான சந்தேகநபர் தனது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கல்கிசையில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்திருந்ததாக தெரியவந்துள்ளது. இவர் இந்த சி.றுமியை தெல்கொடயில் வசிக்கும் அவரின் தாயிடமிருந்து இருந்து அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

வைத்தியராக மாறிய தாதி : ஆபத்தான கட்டத்தில் இருவரை காப்பாற்றிய பெண்!!

வைத்தியராக மாறிய தாதி…

காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் தீவிர ஆ.பத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்து தாய் மற்றும் குழந்தையின் உயிரை காப்பாற்ற வைத்தியசாலை ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கர்ப்பணி பெண்ணில் வயிற்றில் ஏற்பட்ட கடுமையான வலி காரணமாக அவரது கணவர் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தார்.

அந்த பெண்ணுக்கு இரத்த போக்கு ஏற்பட ஆரம்பித்துள்ளது. அவருக்கு குழந்தை பிறக்கவுள்ளதனை அறிந்த தாதி தனது வேலை நிறுத்த போராட்டம் குறித்து சிந்திக்காமல் தாயையும் குழந்தையும் காப்பாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துள்ளார்.

வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அறைக்குள் இந்த பிரசவம் பார்க்கப்பட்டு தாயும் குழந்தையும் பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டுள்ளதாக தாதி சங்கித்தின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர், மனைவிக்கு என்ன நடக்கின்றதென்றே அறியாமல் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். மிகவும் ஆபத்தான நிலையில் இந்த கர்ப்பிணி தாதியின் உதவியுடன் காப்பாற்றப்பட்டமை,

குறித்து மகிழ்ச்சியடைவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் போது ஆ.ர்ப்பாட்டம் குறித்து சிந்திக்காமல் செயற்பட்ட தாதியை பலரும் பாராட்டியுள்னர்.

10 வாரங்களில் இலங்கைக்கு காத்திருக்கும் பேராபத்து!!

கொவிட்..

இலங்கையில் கொவிட் தொற்றின் ஆபத்தான டெல்டா மாறுபாடு சமூக மட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையினால் மக்கள் சுகாதார வழிக்காட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும் என பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்யவில்லை என்றால் நான்காவது அலை எதிர்வரும் 10 வாரங்களில் இலங்கையில் ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வரையிலும் டெல்டா தொற்றாளர்கள் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனைய வைரஸ் போன்று டெல்டா பரவினால் மிகவும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டு விடும்.

வைரஸ் பரவலை தடுப்பதற்காக எடுக்க வேண்டிய ஒரே நடவடிக்கையான சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும். அத்துடன் பயணங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.

மக்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை மீறி செல்வதற்கு இந்த வைரஸ் மாறுபாட்டிற்கு முடியாது. மக்களின் செயற்பாடு காரணமாகவே வைரஸ் வேகமாக பரவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வைரஸ் வேகமாக பரவினாலும் மக்கள் உரிய சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றி செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 29 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் கர்பிணிப் பெண் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று இரவு (02.07) வெளியாகின.

அதில் ஓமந்தை அரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும், நெடுங்கேணி பகுதியில் ஒருவருக்கும், குருமன்காடு பகுதியில் ஒரு கர்பிணிப் பெண் உட்பட ஒரே வீட்டில் ஐந்து பேருக்கும், பனிக்கர்மகிழங்குளம் பகுதியில் ஒருவருக்கும்,

சாந்தசோலை பகுதியில் ஒருவருக்கும், கூமாங்குளம் பகுதியில் இருவருக்கும், மன்னகுளம் பகுதியில் ஒருவருக்கும், வேப்பங்குளம் பகுதியில் ஒருவருக்கும், மதவாச்சி பகுதியில் ஒருவருக்கும், குட்செட் வீதி பகுதியில் இருவருக்கும்,

கோதண்டர்நொச்சிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சமயபுரம் பகுதியில் ஒருவருக்கும், உக்குளாங்குளம் பகுதியில் ஒருவருக்கும், திருநாவற்குளம் பகுதியில் ஒருவருக்கும், பட்டானிச்சூர் பகுதியில் ஒருவருக்கும், உளுக்கொட்டேன பகுதியில் ஒருவருக்கும்,

வைரவபுளியங்குளம் பகுதியில் ஒருவருக்கும், ஆச்சிபுரம் பகுதியில் ஒருவருக்கும், பண்டாரிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், புகையிரத நிலைய விடுதியில் ஒருவருக்கும் என 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆற்றில் மூழ்கிய சிறுமிகள் : காப்பாற்ற முயன்ற தம்பதியினருக்கும் நேர்ந்த பரிதாபம்!!

தமிழகத்தில்..

அங்குள்ள என்.பாறைப்பட்டியை சேர்ந்த சக்திவேல், அர்ச்சனா தம்பதியினர், சக்திவேலின் அண்ணன் மகள் சத்திய பாரதி மற்றும் உறவினரின் மகள் ஐஸ்வர்யா, சந்தான வர்த்தினி ஆகியோரை, ஆற்றிக்கு குளிக்க அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது, அர்ச்சனா துணியை துவைத்துக்கொண்டிருந்த நிலையில், ஆற்றில் இறங்கிய சிறுமிகள், அடுத்தடுத்து நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.

இதனை கண்ட தம்பதி, இருவரையும் காப்பாற்ற முயன்று நீச்சல் தெரியாததால், அவர்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உ.யிரிழந்தனர்.

நள்ளிரவில் தாய், தந்தை செய்த காரியம் : தூக்கத்தில் இருந்து கண்விழித்த கு.ழந்தைகள் கதறி அழுத சோகம்!!

தமிழகத்தில் ..

கு.ழந்தைகள் நள்ளிரவில் தூ.ங்கிக்கொண்டிருந்த நேரத்தில் தாய் மற்றும் தந்தை இருவரும் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டது சோ.கத்தை ஏ.ற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள அனந்தபுரம் புதூர் கிராமத்தை சேர்ந்த ஜேசிபி இயந்திர ஓட்டுநர் கண்ணன் (36). இவரது ம.னை.வி இந்துமதி (34). இவர்களுக்கு உமாதேவி (9) என்ற மகளும், விக்னேஷ் (7) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்றிரவு கணவன், மனைவி இடை.யே கு.டும்ப த.கராறு ஏற்பட்ட நிலையில், அனைவரும் தூ.ங்.கச் சென்றுள்ளனர். தூ.ங்கிக்கொண்டிருந்த கு.ழந்தைகள் நள்ளிரவில் கண்விழித்து பார்த்த போது,

தாயும், தந்தையும் வீட்டிலுள்ள ஒரே பேனில் இருவரும் தொ.ங்.கி.ய நி.லையில் இருப்பதை அவதானித்துள்ளனர். தூ.க்.க க.லக்கத்தில் இருந்த இரு கு.ழ.ந்தைகளும் பெற்றோரை அழைத்து பார்த்தும், எந்தவொரு பதிலும் கூறாததால் இருவரும் க.த.றியழுதுள்ளனர்.

கு.ழந்தைகளின் அழுகுரல் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது, இருவரும் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி.லையில் ச.ட.ல.மா.க இருந்ததை அவதானித்து பொ.லிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ச.ம்.பவ இடத்திற்கு விரைந்த பொ.லிசார் இருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அ.ர.சு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வி.சா.ரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இருவரும் குடும்ப த.கராறு காரணமாக த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 14 வயது சிறுமி : இரவு ஷிப்டில் இருந்த ஊழியரால் நேர்ந்த கொ.டுமை!!

கேரளாவில்…

கேரளாவில் கொரோனா பாதித்த 14 வயது சி.றுமியிடம் மருத்துவமனை ஊழியர் மிக மோசமாக நடந்து கொண்ட அ.திர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த 14 வயதான சி.றுமிக்கு சமீபத்தில் கொரோனா பா.திப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அந்த மருத்துவமனையில் இரவு ஊழியராக சச்சின் (26) என்பவர் வேலை செய்து வந்தார். அப்போது பா.லி.ய.ல் ரீதியாக சி.றுமியிடம் சச்சின் அத்துமீறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவில் இருந்து மீண்ட சி.றுமி இது குறித்து பு.கா.ர் கொடுத்துள்ளார். மேலும் அவருக்கு கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

அப்போது, சி.றுமி கூறுகையில் அன்றிரவு சச்சின் என்னிடம் அநாகரீகமாக பேசியதுடன், பா.லி.ய.ல் ரீ.தியாக தொ.ல்.லை கொ.டுத்தான் என கூறினார். இதோடு தனக்கு 10 வயதாக இருந்த போது உறவினர் ஒருவரும் தன்னிடம் த.வறாக நடந்து கொண்டதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பொலிசார் மருத்துவ ஊழியர் சச்சின் மற்றும் சி.றுமியின் 28 வயதான உறவினர் ஆகிய இருவரையும் கை.து செய்துள்ளனர்.

பாடசாலை கழிப்பறைக்குள் சென்ற 34 வயதான ஆசிரியை : உள்ளே சென்ற சக ஆசிரியைகளுக்கு காத்திருந்த அ.திர்ச்சி!!

ஆசிரியை..

இந்தியாவில் பள்ளி கழிப்பறையில் ஆசிரியை தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் புவனா பென் (34).

இவருக்கு சமீபத்தில் தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு கிடைத்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை சிறிது சீக்கிரமாக பள்ளிக்கு புவனா வந்திருக்கிறார். பின்னர் கழிப்பறைக்கு சென்ற அவர் வெகுநேரமாக வெளியில் வரவில்லை.

இதனால் ச.ந்தேகமடைந்த சக ஆசிரியைகள் கதவை த.ட்டினார்கள், ஆனாலும் அவர் திறக்கவில்லை. இதையடுத்து க.த.வை உ.டை.த்.து கொண்டு உள்ளே போன போது அவர்களுக்கு அ.தி.ர்.ச்.சி தரும் காட்சி காத்திருந்தது.

அதன்படி புவனா கழிப்பறை ஜன்னல் க.ம்பியில் தூ.க்.கி.ல் ச.ட.ல.மா.க தொ.ங்.கி.ய.ப.டி கி.டந்தார். இது குறித்த தகவலின் பேரில் பொலிசார் அங்கு வந்து புவனாவின் ச.ட.ல.த்.தை கை.ப்.ப.ற்றியதோடு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.

புவனா குடும்பத்தார் கூறுகையில், புவனாவுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது, அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சமீபகாலமாக புவனா மிகுந்த ம.ன அ.ழுத்தத்தில் இருந்து வந்தார், இதுவே த.ற்.கொ.லை.க்.கு கா.ரணமாக இருக்கலாம் என கூறியுள்ளனர்.

புவனா கடிதத்தில் என்ன எழுதியிருந்தார் என இன்னும் தெரியாத நிலையில் பொலிஸ் வி.சாரணையில் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

13 லட்சத்தை அதிகமாக கொடுத்த இலங்கை அரச வங்கி : பெண் ஒருவரின் நெகிழ்ச்சியான செயல்!!

தம்புளை பிரதேசத்தில் அரச வங்கி ஒன்றில் தவறுதலாக வாடிக்கையாளர் ஒருவருக்கு 13 லட்சம் ரூபாய் பணம் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த பெண் மேலதிக பணத்தை மீளவும் வங்கியிடமே ஒப்படைத்துள்ளார்.

கடந்த முதலாம் திகதி தம்புளை நகரத்தில் அழகு கலை நிலைமையம் நடத்தும் அதன் உரிமையாளரான நிலூஷிக்கா ஜயவர்தன என்ற பெண்ணினால் இந்த நேர்மையான செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பெண் 7 லட்சம் ரூபாய் பணம் எடுத்து வந்துள்ளார். எனினும் வங்கி இயந்திர்தால் எண்ணப்படுவதனால் அவர் அந்த பணத்தை எண்ணி பார்க்காமலேயே அழகு கலை நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு தனது பணத்தை எண்ணி பார்க்கும் போது, 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பணத்தாள் கட்டுகள் அதிகமாக இருப்பதனை கண்டார்.

எண்ணி பார்க்கும் போது 20 லட்சம் ரூபாய் காணப்பட்டுள்ளது. இதன் போதே வங்கி 13 லட்சம் ரூபாய் அதிகமாக வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் வங்கிக்கு தெரியப்படுத்திய நிலையில், வங்கி அதிகாரிகள் குறித்த அழகு கலை நிலையத்திற்கு சென்று 13 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.

யாரோ ஒருவருடைய தொழிலை பறித்த அடுத்தவர்களின் பணத்தை பெறுவதில் மகிழ்ச்சி ஒன்றும் இருந்து விடப் போவதில்லை என அந்த பெண் வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

அந்த பெண்ணின் நேர்மையை பார்த்து அதிகாரிகள் அவரை பாராட்டி சென்றுள்ளனர்.

 

பாடசாலைகளை இம் மாதம் மீள ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் : கல்வி அமைச்சர்!!

பாடசாலைகளை..

இலங்கையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தகவல் வெளியிட்டுள்ளார். அதன்படி 100 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை, இந்த மாதத்திற்குள் திறப்பது குறித்து அவதானம் செலுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அத்துடன் குறித்த நடவடிக்கையானது சுகாதாரத் துறையினரின் அனுமதியின் கீழ் இவ்வாறு குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் தொற்று அச்சம் காரணமாக அனைத்து பாடசாலைகளும் மாணவர்களின் நலன் கருதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா, கிளிநொச்சிக்கு பெரண்டினாவின் கொவிட்-19 நிவாரண திட்டத்தின் கீழ் 17 இலட்சம் பெறுமதியில் உதவி!!

பெரண்டினா..

பெரண்டினாவின் கொவிட்-19 நிவாரண திட்டத்தின் கீழ் 17 இலட்சம் ரூபா பெறுமதியான உதவித்திட்டம் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் சிறுவர், முதியோர், விசேட தேவையுடையோர் பராமரிப்பு நிலையங்கள் 10 ற்கும், கொரோனா சிகிச்சை மையம் ஒன்றிக்கும் மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுவர், முதியோர், விசேட தேவையுடையோர் பராமரிப்பு நிலையங்கள் 6 ற்கும், கொரோனா சிகிச்சை மையம் ஒன்றிக்கும் இவ் உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் , மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொழுது போக்கு உபகரணங்கள் ஆகிய உதவித்திட்டங்களே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டதுடன் இதனை பெரண்டினாவின் பிரதேச முகாமையாளர் ராகேஷ்,

மாவட்ட பிரதிநிதி சந்திரகுமார் இணைந்து வவுனியா மாவட்ட பொருட்களை உதவி மாவட்ட செயலாளர் சபர்ஜா, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன் ஆகியோரிடமும் கிளிநொச்சி பொருட்களை அரசாங்க அதிபர் திருமதி.கேதீஸ்வரன் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜெயராசா ஆகியோரிடம் கையளித்தனர்.

வவுனியாவில் இளைஞர் சேவை மன்றத்தில் மாபெரும் இரத்தான முகாம் : கொடையாளர்களுக்கு அழைப்பு!!

இரத்தான முகாம்..

வவுனியா பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் க.கோகிலன் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் வவுனியா இளைஞர் சேவை மன்றத்தில் நாளை (03.07.2021) காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

இரத்த தானம் செய்வோம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் இரத்தக்கொடையாளர்ளை வருகை தருமாறு ஏற்பாட்டு குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் மருதம் பசுமை இயக்கத்தின் அனுசரனையில் மரக்கன்றும் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.