முகப்புத்தகம் போன்ற சமூக ஊடகங்களில் கொடுக்கப்படும் பிரச்சினைகள் : ஒன்லைன் மூலம் புகாரளிக்க வசதி!!

சமூக ஊடகங்களில்..

முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பிரச்சினைகளை கொடுப்பவர்கள் தொடர்பில் புகாரளிப்பதற்கான வசதி இலங்கை மக்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகளை ஒன்லைன் மூலமாக மேற்கொள்ள முடியும். தனி நபர் அவமதிப்பு, அவதூறு, போலி கணக்குகள் என்பவற்றால் தேவையற்ற பிரச்சினைகளை கொடுப்பவர்கள் மீதான புகார்களை பதிவு செய்ய முடியும்.

பொலிஸ்மா அதிபருக்கு சொல்லுங்கள் என்ற கருப்பொருளின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

விண்ணப்பப்படிவம் – https://www.telligp.police.lk/

இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ பயிற்சி!!

இராணுவ பயிற்சி..

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ பயிற்சி வழங்கப்படவுள்ளளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரியர் அத்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளளார்.

இது தொடர்பான யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒழுக்கமான மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

உலகின் சில நாடுகள் இவ்வாறான யோசனையை செயற்படுத்துவதற்கு விசேட முடிவுகளை பெற முடிந்ததாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியா செட்டிகுளத்தில் டிப்பருடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு கோர விபத்து : ஒருவர் படுகாயம்!!

விபத்து…

வவுனியா செட்டிகுளம் பகுதியில் டிப்பர் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செட்டிக்குளம் பகுதியில் இன்று (18.01) காலை 8.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

செட்டிகுளம் நகர் பகுதிக்கு செல்வதற்காக உள்ளூர் பாதையிலிருந்து செட்டிக்குளம் மன்னார் பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிலினை ஏற்ற முற்பட்ட சமயத்தில் செட்டிகுளம் மன்னார் பிரதான வீதியூடாக சென்று கொண்டிருந்த டிப்பர் ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதியான அடப்பங்குளம் பகுதியை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க நபர் படுகாயமடைந்த நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிக்குளம் போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் புகையிரதத்தில் பயணித்தவருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா தொற்று..

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புகையிரத்தில் பயணித்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதத்தில் வருகை தந்த வவுனியாவைச் சேர்ந்தவர்களிடம் புகையிரத நிலையத்தில் வைத்து சுகாதார துறையினர் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டனர்.

இதன்போது புத்தளம் பகுதியில் இருந்து வவுனியா சூடுவெந்தபுலவு நோக்கி வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரிடம் பிசீஆர் பரிசோதனையும் மேற்கொள்ள சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் பத்து வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியா வடக்கு பகுதியில் மாரா இலுப்பை கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியின் தாயார் வவுனியா வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவரது மகளான 10 வயதான சிறுமிக்கும் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவருக்கு கொரோனா தொற்றிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் வழமைக்கு அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பம்!!

முடக்கப்பட்ட சில பகுதிகள் வழமைக்கு..

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து காணப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரமாக வவுனியாவின் பல பகுதிகள் முடக்கப்பட்டிருந்ததுடன் சில பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிந்தன.

அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் கடந்த 12.01.2021 அன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கொவிட்19 அவசர கால நிலமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்று மாவட்டத்தின் சில பகுதிகளை 24ம் திகதி வரை தனிமைப்படுத்துவதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு,

வவுனியா நகருக்குள் பிரவேசிக்கும் பிரவேசிக்கும் பகுதிகளான நெளுக்குளம் சந்தி, தாண்டிக்குளம் சந்தி, மாமடுவ சந்தி, பூந்தோட்டம் சந்தி, கண்டி வீதி இராணுவ முகாம் சந்தி ஆகிய இடங்களில் உள்ளடக்கிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.

இந் நிலையில் வவுனியா பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை சுற்றுவட்ட வீதி, மில் வீதி, சூசைப்பிள்ளையார் குள வீதி, கந்தசுவாமி வீதி, ஹொரொவப்பொத்தானை வீதியின் ஒரு பகுதி தவிர்ந்த ஏனைய தனிமைப்படுத்தப்பட்ட ஏனைய இடங்கள் இன்று (18.01.2021) திங்கட்கிழமை காலை முதல் வழமைக்கு திரும்பியதுடன் வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் வழமை போன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வவுனியா பட்டாணிச்சூர் கிராமம் 14 நாட்கள் தனிமைப்படுத்தலிருந்து விடுவிப்பு!!

பட்டாணிச்சூர்..

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியினை சேர்ந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த ஏழு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து சுகாதார பிரிவினரினால் அப்பகுதி கடந்த (04.01) தொடக்கம் முடக்கப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியல் தொழில்நுட்ப பீடத்தில் 3ம் வருடத்தில் கல்வி கற்கும் வவுனியா பட்டாணிச்சூர் மாணவர் ஒருவருக்கும் அதே பகுதியினை சேர்ந்த பட்டானிச்சூர் பகுதியினை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த கிராமம் சுகாதாரப் பிரிவினரினால் முடக்கப்பட்டு கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது ஒரே குடும்பத்தினை சேர்ந்த மேலும் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதன் பின்னர் பட்டாணிச்சூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா பசார் வீதி மற்றும் நகரில் பல வியாபார நிலையங்களை நடத்தி வருவதுடன் ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இதனால் கடந்த (06.01) காலை வவுனியா பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன இராணுவம் மற்றும் பொலிசாரால் முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றுபவர்களிற்கு சுகாதார பிரிவினரால் பிசீஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகளில் மேலும் 55 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதன் பின்னர் தொடர்ச்சியாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் , ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் பிரகாரம் 55 ஆக காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்து.

அதன் பின்னர் வவுனியா மாவட்டத்தில் பல பகுதிகள் சில நாட்களுக்கு மூடப்பட்டிருந்துடன் அதன் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் பட்டாணிச்சூர் கிராமம் 14 நாட்கள் தனிமைப்படுத்தலிருத்து இன்று (18.01.2021) காலை முற்றாக விடுவிக்கப்பட்டது.

வவுனியாவில் இடியன் து.ப்.பா.க்.கி.யி.னா.ல் சு.ட.ப்.ப.ட்.ட.வ.ர் ப.லி!!

ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில்..

வவுனியாவில் இடியன் து.ப்.பா.க்.கி.யா.ல் சு.ட.ப்.ப.ட்.டு கா.ய.மடைந்திருந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் (17.01.2021) ம.ர.ண.ம.டை.ந்.து.ள்.ளா.ர்.

வவுனியா, ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற மோ.த.லி.ன்.போ.து அங்கு வந்த மனைவியின் உறவினர் ஒருவரால் கணவன் மீது து.ப்.பா.க்.கி பி.ர.யோ.க.ம் மே.ற்கொள்ளப்பட்டிருந்தநிலையில் அவர் ப.டு.கா.ய.ம.டை.ந்.தி.ரு.ந்.தா.ர்.

இச்சம்பவம் தொடர்பாக பிரதேசவாசிகளால் ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து து.ப்.பா.க்.கி.ப் பி.ர.யோ.க.ம் மேற்கொண்ட நபரை கை.து செ.ய்துள்ளதுடன், து.ப்.பா.க்.கி.யை.யு.ம் மீ.ட்.டி.ரு.ந்.த.ன.ர்.

குறித்த சம்பவத்தில் ப.டு.கா.ய.ம.டை.ந்.தி.ரு.ந்.த 29 வயதான தேவராசா ஜெயசுதன் என்பவர் வவுனியா வைத்தியாசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

எனினும் ஒரு வாரம் கழித்து இன்றையதினம் அவர் ம.ர.ண.ம.டை.ந்.து.ள்.ளா.ர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக வி.சாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

வவுனியா ஊடாக இரண்டு மாதங்களின் பின்னர் கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம்!!

புகையிரதம்..

கொரோனா தொற்று அச்சம் காரணமாக தூர இடங்களுக்காக புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டதுடன் மட்டுப்படுத்தப்பட்ட அலுவலக புகையிரத சேவைகள் மாத்திரம் இடம்பெற்று வந்திருந்தன.

இந் நிலையில் இரண்டு மாதங்களின் பின்னர் இன்று (17.01.2021) மாலை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி விசேட புகையிரதம் சேவையினை ஆரம்பித்திருந்தது.

யாழ்ப்பாணத்திலிருந்து சேவையினை ஆரம்பித்த புகையிரதம் மாலை 6.30 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்து 6.35 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்தினை ஆரம்பித்தது.

நாளையதினம் தொடக்கம் தினசரி உத்தரதேவி, யாழ்தேவி ஆகிய புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதுடன் முதலாவதாக காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30 க்கு புறப்படுகின்ற உத்தரதேவி கடுகதி புகையிரதமும் காங்கேசன்துறையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும் யாழ் தேவி புகையிரதமும் சேவையினை ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.

காங்கேசன்துறையிலிருந்து காலை 5.30 மணிக்கு பயணித்தினை ஆரம்பிக்கும் உத்தரதேவி கடுகதி புகையிரதம் காலை 8.10 மணியளவில் வவுனியாவை வந்தடைந்து கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளதுடன்,

காங்கேசன்துறையிலிருந்து காலை 9.00 மணிக்கு பயணித்தினை ஆரம்பிக்கும் யாழ் தேவி புகையிரதம் காலை 11.25 மணியளவில் வவுனியாவை வந்தடைந்து கொழும்பு நோக்கி பயணித்தினை ஆரம்பிக்கவுள்ளது.

வவுனியாவில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி : இன்று மட்டும் 28 பேர்!!

கொரோனா..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் சிற்றூழியர்கள் இருவர் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பரிசோதனைக் கூடத்திலிருந்து இன்று (17.01.2021) இரவு 7 மணியளவில் வெளியான முடிவுகளின் அடிப்படையிலேயே இரு சிற்றூழியர்களுக்கும் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களில் பட்டாணிச்சூர் பகுதியில் 14 நபர்களும் நகர வர்த்தக நிலைய பரிசோதனையில் 174 நபர்களும் வவுனியா வைத்தியசாலையில் 15 நபர்களும் புளியங்குளத்தில் இருவர் என 205 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் வவுனியாவில் கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 205 ஆக அதிகரித்துள்ளது.

காட்டில் நி.ர்.வா.ண நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்ணின் உ.ட.ல் : கணவனின் கொ.டூ.ர செயல்!!

இந்தியாவில்..

இந்தியாவில் கா.ட்.டி.ல் த.லை.யி.ல்.லா.ம.ல் நி.ர்.வா.ண நி.லை.யி.ல் ச.ட.ல.மா.க கி.ட.ந்.த இ.ள.ம் பெ.ண் கொ.லை வ.ழ.க்.கி.ல் அவர் கணவர் உள்ளிட்ட இருவர் கை.து செ.ய்யப்பட்டுள்ளனர்.

ராஞ்சியில் உள்ள காட்டுப் பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் இ.ள.ம் பெ.ண்.ணி.ன் உ.ட.ல் த.லை.யி.ல்.லா.ம.ல் நி.ர்.வா.ண நி.லை.யி.ல் க.ண்.டெ.டு.க்.க.ப்.ப.ட்.ட.து.

வி.சா.ர.ணை.யி.ல் கொ.ல்.ல.ப்.ப.ட்.ட அ.ப் பெ.ண்.ணி.ன் பெயர் சுபியா பிரவீன் என தெரியவந்தது. அவரின் கணவர் பிலாலிடம் பொலிசார் வி.சா.ரி.க்.க நினைத்த நிலையில் அ.வ.ர் த.லை.ம.றை.வா.னா.ர்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அவரை பொலிசார் பி.டி.த்.த.ன.ர். அவரிடம் நடத்தப்பட்ட வி.சா.ர.ணை.யி.ல் தி.டு.க்.கி.டு.ம் த.கவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி பிலாலின் முதல் மனைவி பெயர் ஷபோ ஆகும். அவரின் இரண்டாவது மனைவி தான் சுபியா. பிலால் தன்னை கொ.டு.மை.ப்.ப.டு.த்.து.வ.தா.க சுபியா பொலிசில் பு.கா.ர் அளித்த நிலையில் பொலிசார் அவரை முன்னர் கை.து செ.ய்தனர்.

பின்னர் சி.றையில் இருந்து வெளியில் வந்த அவர் சுபியா மீது ஆ.த்.தி.ர.த்.தில் இ.ருந்துள்ளார். அதே போல சுபியாவுக்கும், ஷபோவுக்கும் ஒத்து போகாத நிலையில் இருவரும் அ.டி.க்.க.டி ச.ண்.டை.யி.ட்.டு வந்தனர்.

இதை தொடர்ந்து ஷபோவும், பிலாலும் சேர்ந்து சுபியாவை கொ.ல்.ல மு.டி.வு செய்தனர். அதன்படி அ.வ.ரை அ.டி.த்.து கொ.ன்.று த.லை.யை த.னி.யா.க வெ.ட்.டி எ.டு.த்.து உ.ட.லை கா.ட்.டி.ல் போ.ட்.டு.வி.ட்.டு த.லை.யை த.னி.யா.க வீ.சி.ய.து தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் பொலிசார் கை.து செ.ய்.து.ள்.ள.ன.ர்.

பள்ளியில் தொடங்கிய நட்பு : ஒரே நேரத்தில் உயிரிழந்த 17 உயிர்த் தோழிகள்!!

17 தோழிகள்..

இந்தியாவில் 17 உயிர்தோழிகள் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தவனகரேயில் உள்ள செயின்ட் பவுல்ஸ் பள்ளியில் படித்தவர் டாக்டர் வீணா மற்றும் ப்ரீத்தி ரவிக்குமார்.

இவர்களுடன் படித்த மேலும் 15 பேர் நன்கு படித்து வைத்தியர்களாக வெவ்வேறு ஊர்களில் பணி புரிந்து வருகின்றனர். தோழிகள் அனைவருக்கும் 35 முதல் 40 வயதுக்குள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

எனினும், பள்ளி காலத்தில் தொடங்கிய நட்பை இன்று வரை தோழிகள் தொடர்ந்து வந்துள்ளனர். வருடத்துக்கு ஒரு முறை விடுமுறை நாள்களில் 17 தோழிகளும் ஒன்று கூடி சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர்.

அந்த வகையில், மகா சங்கராந்தி விடுமுறையை முன்னிட்டு 17 தோழிகளும் கோவாவுக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்துள்ளனர். இதற்காக, டெம்போ டிராவல்லரில் 15 ஆம் திகதி அதிகாலை கோவா நோக்கி புறப்பட்டனர். புறப்படும் முன் வேனில் வைத்து தோழிகள் அனைவரும் செல்பியும் எடுத்துக் கொண்டனர்.

காலை 7 மணியளவில் ஹூப்ளி நகரை தாண்டி தோழிகள் சென்ற டெம்போ டிராவல்லர் தார்வாட் நகரிலிருந்து 8 கிலோ மீட்டருக்கு முன்னதாக இட்டிகட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது,

எதிர் பக்கத்தில் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி நிலை தடுமாறி ரோடு டிவைடரை தாண்டி வந்து டிராவல்லர் வேன் மீது மோதியது. இதில், வேன் உருகுலைந்து போக சம்பவ இடத்திலேயே டாக்டர்.

வீணா உள்ளிட்ட 17 தோழிகள் சம்பவ இடத்திலும் மருத்துவமனையிலும் பரிதாபமாக இறந்து போனார்கள். டெம்போ டிராவல்லர் வேன் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்து போனார்.

காயமடைந்தவர்கள் தார்வாட் மருத்துவமனையிலும் ஒருவர் பெங்களுருவில் உள்ள மணிபால் மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிப்பர் லாரியின் ஓட்டுநரும் மருத்துவமனையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும், பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பட்டாணிச்சூரில் தனிமைப்படுத்தப்பட்ட 864 குடும்பங்களுக்கு 5000 ரூபாய் வீதம் வழங்கி வைப்பு!!

864 குடும்பங்களுக்கு 5000 ரூபாய்..

வவுனியா, பட்டாணிச்சூர் கிராம அலுவலர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட 864 குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் 5000 ரூபாய் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த 4 ஆம் திகதியில் இருந்து 14 நாட்கள் பட்டானிச்சூர் பகுதி சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் 960 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அரச உத்தியோகத்தர்கள், ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோரை தவிர்ந்த 864 குடும்பங்களுக்கு 5000 ரூபாய் வீதம் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிதியினை பிரதேச செயலகத்தினர் கிராம அலுவலர் ஊடாக குறித்த கிராம மக்களின் வீடுகளுக்கு சென்று நேரடியாக வழங்கி வருகின்றனர்.

மீண்டும் திறக்கப்படும் கட்டுநாயக்க விமான நிலையம் : வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கான அறிவித்தல்!!

விமான நிலையம்..

நாட்டிலுள்ள சர்வதேச விமான நிலையங்கள் எதிர்வரும் 21ஆம் திறக்கப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கான சுகாதார நடைமுறைகளை சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி, அனைத்து நாடுகளினதும் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தர முடியும். எனினும், உள்வருகைக்காக முன் அனுமதி உள்ளிட்ட ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடுமையான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் பயன்படுத்தப்பட மாட்டாது எனவும், அவர்களுக்கு வழங்கப்பட்ட ஹோட்டல்களில் தங்கியிருப்பது அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, முதலாம் கட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட 55 ஹோட்டல்கள் 11 மாவட்டங்களில், சுற்றுலாத்துறை அமைச்சினால் பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல்களில் உள்நாட்டு மக்களுக்கு தங்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், சுற்றுலா பயணிகள் வருகை தர 96 மணி நேரத்துக்கு முன்னதாகவும், வருகை தந்த பின்னரும் கட்டாய PCR பரிசோதனையை மேற்கொள்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தடுப்பூசி பெற்ற சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படவில்லை எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ள பேக்கரி உற்பத்திகள்!!

பேக்கரி உற்பத்திகள்..

எதிர்வரும் வாரங்களில் பேக்கரி உற்பத்திகளின் விலையை 10 ரூபாயினால் அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்த ஒரு லீட்டர் பாம் எண்ணைக்கு 250 ரூபாய் தீர்வை வரி விதித்தமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய பாம் எண்ணெய் ஒரு லீட்டர் 500 ரூபாவை கடந்துள்ளது. மேலும் பேக்கரி உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் மாஜரின் ஒரு கிலோ கிராம் 600 ரூபாவை கடந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் இறக்குமதி செய்யும் மாஜரினுக்கு 400 ரூபாய் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கமைய மாஜரின் ஒரு கிலோ கிராமினை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு 1000 ரூபாயை கடந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் 10 ரூபாயினால் பேக்கரி உற்பத்தியின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தீவிரமடைந்து வரும் கொரோனா : அதிக ஆபத்துள்ள பல பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

கொரோனா..

இலங்கையில் கொவிட் தொற்றால் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட சில பகுதிகளின் சமீபத்திய வரைபடத்தை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

சுகாதாரப் பகுதிகளின் மருத்துவ அதிகாரிகளின் வகைப்படுத்தல், பதிவான வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் அடிப்படையில் இவ் வரைபடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் புதிய பல பகுதிகள் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக இனங்காணப்பட்டு அப்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.