ஹர்த்தால் காரணமாக பாடசாலைக்கு செல்லாத மாணவர்களை வீடு வீடாக சென்று அழைத்து வந்து வவுனியா வடக்கு பாடசாலை ஒன்றில் பரீட்சை நடைபெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடக்கு – கிழக்கில் நினைவு கூரும் உரிமையை வலியுறுத்தியும், அரசின் அடக்கு முறைக்கு எதிராகவும் இன்று ஹர்த்தால் இடம்பெற்றது.
இதன் காரணமாக பாடசாலைகளுக்கு மாணவர்களது வருகை மிகவும் குறைவாக இருந்தது.
இந்நிலையில் வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் தரம் 11 மாணவர்களுக்கு சமயம் மற்றும் தொகுதி -1 பாட பரீட்சைகள் இன்று நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைவாக பாடசாலைகளுக்கு வலயக் கல்வித் திணைக்களத்தால் காலையில் பரீட்சை வினாத்தாள்களும் விநியோகிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாடசாலைக்கு வருகை தந்த தரம் 11 மாணவர்களுக்கு பரீட்சைகள் நடைபெற்றன.
இந்நிலையில், வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் உள்ள வவுனியாவிற்கு அண்மித்த பிரபல பாடசாலை ஒன்று ஹர்த்தால் காரணமாக பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவர்களை வீடு வீடாக சென்று அழைத்து வந்து அந்த மாணவர்களுக்கு பரீட்சை வினாத்தாள்களை வழங்கி பரீட்சை நடத்தியுள்ளது.
இதேவேளை, ஹர்த்தால் காரணமாக வடக்கில் பரீட்சைக்கு தோற்றாத மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என வடமாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ம னைவியின் செ யலால் அ வ மா ன ம டை ந் த க ணவன் தூ க் கி ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண் டு ள் ளா ர்.
ஹரியானாவை சே ர்ந்தவர் சஞ்சீவ் குமார். இ வரும் ரஜ்னி எ ன்ற பெ ண்ணும் கா த ல் தி ருமணம் செ ய் து கொ ண்ட நி லையில் த ம்பதி க்கு இ ரண்டு பி ள் ளை க ள் உ ள்ளனர்.
இ ந்த நி லையில் ரஜ்னி அ டி க் க டி யா ருடனோ போ னில் பே சி வ ருவதை சஞ்சீவ் பா ர்த்து ள்ளார். பி ன்னர் த னது ம னைவிக்கு சத்பிரகாஷ் எ ன்பவ ருடன் தொ டர்பு இ ருப்பதை க ண் டு பி டி த் து ள் ளா ர்.
இ து கு றித்து இ ருவரு க்கும் ச ண் டை ஏ ற் ப ட் ட நி லையில் சத்பிரகாஷை தி ருமணம் செ ய்து கொ ண்டு சே ர்ந்து வா ழ்வேன் எ ன ரஜ்னி உ றுதியாக கூ றினார்.
மே லும் இ ந்த வி டயம் அ க்கம் ப க்கத்தி னருக்கும் தெ ரியவ ந்தது. இ ந்த நி லையில் இ ரு தி னங்க ளுக்கு மு ன்னர் ரஜ்னி வீ ட்டிலி ருந்து மா ய மா னா ர், அ வ ர் சத்பிரகாஷுடன் செ ன்றதை சஞ்சீவ் க ண் டு பி டி த் தா ர்.
ம னைவி யின் செ யலால் ச முதாய த்தில் த னக்கு அ வ மா ன ம் எ ற்பட்டு வி ட்டதே எ ன ம ன மு டை ந் த சஞ்சீவ் தூ க் கி ட்டு உ யி ரை மா ய் த் து க் கொ ண் டு ள் ளா ர்.
அ வரின் சட ல த் தை மீ ட் ட பொ லிசார் அ வ ர் எ ழுதி வை த்திருந்த க டிதத்தை யும் எ டுத்த னர். அ தில் எ ன் இ ந்த மு டிவிற்கு கா ரணம் சத்பிரகாஷ் ம ற்றும் ரஜ்னி எ ன எ ழுதப்பட்டி ருந்தது.
இ தை தொ டர்ந்து இ ருவரை யும் கை து செ ய் த பொ லிசார் அ வர்க ளிடம் வி சாரணை ந டத்தி வ ருகின் றனர்.
தமிழில் கடந்த ஜூன் மாதேமே துவங்கவிருத்த பிக்பாஸ் சீசன் 4, கொரோனா காரணமாக தற்போது வரை தள்ளிப்போய் உள்ளது.
ஆனால் வரும் அக்டோம்பர் 4ஆம் தேதி பிக் பாஸ் 4 துவங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்ததுவிட்டது.
இதில் நடிகை ரம்யா பாண்டியன், நடிகர் ரியோ ராஜ், நடிகர் ஆரி, அணு மோகன், சின்னத்திரை நடிகை ஷிவானி, நடிகை கிரண், நடிகை ரேகா, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொள்ள போவதாக 100% உறுதியாக கூறுகின்றனர்.
மேலும் இதில் தமிழ் திரையுலக நடிகையான லட்சுமி மேனனும் இதில் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள போகிறார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4ல், தான் கலந்து கொள்ளவது குறித்து மனம் திறந்துள்ளார் நடிகை லட்சுமி மேனன். அவரின் குறிப்பிட்டு இருந்ததில் ” நான் பிக் பாஸ் 4ல் கிடையாது.
நான் அடுத்தவர்கள் பயன்படுத்தும் சாப்பாட்டு பிளேட் ,மற்றும் கழிவறையை நான் சுத்தம் செய்ய மாட்டேன். இதற்கு பிறகாவது, நான் பிக்பாஸ் 4ல் இருக்கிறேன் என்ற தவறான தகவலை பரப்பாதீர்கள்.” என கூறியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து லட்சுமி மேனன் சொல்லியுள்ள கருத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக சினிமாவில் வலம்வரும் நடிகை லட்சுமி மேனன். இவர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
கும்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்திற்காக இவருக்கு பல்வேறு விருதுகளும் குவிந்தது.
தற்போது படவாய்ப்புகள் குறைந்த நிலையில், அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் சில புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.
மேலும் இவர் பிக் பாஸில் கலந்துகொள்ள போவதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து நடிகை லட்சுமி மேனன், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை போட்டிருந்தார்.
அதில், நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறவில்லை நான் மற்றவர்களின் எச்சி தட்டை கழுவவோ மற்றவர்களுக்காக கழிவறை கைகழுவவோ எப்போதும் மாட்டேன்.
அதேபோல நிகழ்ச்சி என்ற எப்போதும் கேமராவுக்கு முன்னால் ச ண் டை போடவும் மாட்டேன். இந்த குப்பை நிகழ்ச்சியில் செல்ல போகிறேன் என்று யாரும் என்னிடம் பேச்சை எடுத்து வராதீர்கள் என்று கூறியிருக்கிறார்.
லட்சுமி மேனனின் இந்த கருத்து ரசிகர்களை கொஞ்சம் கோ பமாகியுள்ளது. பிக் பாஸில் கலந்துகொள்வதும் கலந்து கொள்ளாததும் அவரவர் விருப்பம். ஆனால், அதை சொல்லும் முறை என்று இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.
மோட்டார் வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளமையினால் பாரிய வாகன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வாகனங்கள் விற்பனை செய்யும் இடங்களில் இதுவரையில் பதிவு செய்யப்படாத மூவாயிரம் வாகனங்கள் கூட இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில விற்பனை நிலையங்களில் இரண்டு அல்லது மூன்று வாகனங்களே மீதமாக உள்ளதாகவும், கோரிக்கைக்கு அமைய வாகனங்கள் இல்லாமையினால் மீதமாக உள்ள வாகனங்களை விற்பனை செய்ய முடியாமல் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மக்கள் அதிகமாக கொள்வனவு செய்யும் Suzuki Wagon R, Toyota Passo, Toyota Vitz, Toyota CHR, Wasal, Crase ஆகிய வாகனங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
Toyota Axio, Toyota Premio, Toyota Raize ஆகிய மோட்டார் வாகனங்கள் மாத்திரமே விற்பனை நிலையங்களில் உள்ளதாகவும் அந்த வாகனங்களும் பாரியளவு விலை அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதற்கமைய டொயடா எக்ஸியோ வாகனம் ஒன்று 79 லட்சம் ரூபாய்க்கும் அதிக விலையிலும், டொயடா பிரிமியோ வாகனம் 100 லட்சம் ரூபாய் வரையிலும், டொயமா ரைஸ் வாகனம் 80 லட்சம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மோட்டார் வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்காமையினால் ஊழியர்களின் சம்பளம் வழங்க முடியாமல் போயுள்ளதாகவும், வங்கி கடன் செலுத்த முடியாமல் போயுள்ளதாகவும், வாகன விற்பனையாளர்கள் பாரிய நிதி நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக பல வாகன விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் அரசாங்கம் நிவாரணம் ஒன்றை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வாரகாலமாக தங்கத்தின் விலையில் வீழச்சி ஏற்பட்டுள்ளதாக நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய கடந்த வாரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1862 அமெரிக்க டொலராக காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் மார்ச் மாத்திற்கு பின்னர் உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் இம்மாதமே தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதம் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீச்சு நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
பெலியத்த என்னும் ஊரில் இருந்து வடக்கு – கிழக்கு ஆஸிர்வாதாத்மக பிரித் சுற்றுலா வருடம்தோறும் யாழ். நோக்கி வருகை தந்து நன்கொடையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கர்ப்பிணித் தாய்மார்கான பொருட்கள் என்பனவற்றை வழங்கியுள்ளனர்.
இதன் அடிப்படையில் இந்த வருடமும் பெலியத்தயிலிருந்து இருந்து ஊர்காவற்துறை நோக்கி மதகுருமார்களும், நன்கொடையாளர்களுமாக சுமார் 520 பேரைக் கொண்ட புகையிரதம் நேற்றைய தினம் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் வைத்து நன்கொடை பொருட்களை வழங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்ட நிலையில் மாலை 5.15 மணி அளவில் மீசாலையை கடக்கும்போது இனந்தெரியாதவர்களால் கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
உடனடியாக பளை புகையிரத நிலையத்தில் புகையிரதம் நிறுத்தப்பட்டு காயமடைந்த காயமடைந்த முதியவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பளை பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
பளை வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த முதியவர் மீண்டும் அந்த புகையிரதத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
பொலநறுவை எலஹெர – பக்கமூன பெல்அத்துவாடி பிரதேசத்தில் பல கோடி ரூபா பெறுமதியான நீல நிற இரத்தினக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரத்தினக்கல் சுரங்கத்திற்குள்ள கருங்கல்லில் இந்த இரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் நிறை இரண்டு கிலோ கிராமிற்கும் அதிகம் என கணிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கருங்கல்லுக்கு நடுவில் சிக்கியிருக்கும் இரத்தினக்கல் சுமார் 1000 கரட்டிற்கும் அதிகம் என குறிப்பிடப்படுகின்றது. கருகல்லுக்குள் சிக்கிய நிலையில் இரத்தினக்கல் இருப்பது மிகவும் அரிதான விடயம் என சுரங்க உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
16 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தத்தினால் காணாமல் போன மகனை மீண்டும் தாயொருவர் கண்டுபிடித்துள்ளார். 5 வயதில் காணாமல் போன றஸீன் முஹம்மட் அக்ரம் றிஸ்கான் தனது மகனை 21 வயதில் தன்னுடன் மீட்டு வந்துள்ளார் அபுசாலி சித்தி ஹமாலியா என்ற தாய்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாளிகைக்காடு பகுதியில் சுனாமி அனர்த்தத்தினால் தனது 5 வயது மகனை இழந்து மனநோயாளியாக தினமும் வாழ்ந்து வந்த நிலையில் தனது அதீத முயற்சியினால் மீண்டும் மகனுடன் இணைந்துள்ளார்.
சுனாமி அனர்த்தம் இடம்பெற்றவேளை வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றி கொண்டிருந்தேன். சம்பவத்தை அறிந்து எனது வீட்டிற்கு சென்று பார்த்தேன்.
எனது 5 வயதான மகனை காணவில்லை. எங்கும் அழுகுரல் கேட்ட வண்ணம் இருந்தது. நானும் அழுது அழுது எனது மகனை தேடிச் சென்றேன், கிடைக்கவில்லை.
பின்னர் அம்பாறை வைத்தியசாலையில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிலர் கூறியதை அடுத்து அங்கு சென்று நோயாளிகள் வரவு புத்தகத்தில் மகனின் பெயரை தேடி கண்டுபிடித்தேன்.
ஆனால் ஏமாற்றமே எஞ்சியது. காரணம் மகனை பெற்றோர் என கூறி யாரோ அழைத்து சென்றிருந்தனர். அதனை அறிந்து கதறி அழுதேன். வைத்தியசாலையில் இருந்தவர்கள் எனக்கு ஆறுதல் கூறினார்கள்.
ஆனாலும் மகன் உயிருடன் தான் இருக்கின்றார் என அறிந்து அவரை தேடும் முயற்சியில் இறங்கினேன். இதற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு சென்று முதற்கட்டமாக முறைப்பாடு ஒன்றினை செய்திருந்தேன்.
அடுத்து கல்முனை பகுதியில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சென்று தகவல்களை வழங்கி இருந்தேன். ஆனால் எவ்வித நடவடிக்கையும் அங்கு மேற்கொள்ளவில்லை என கூற விரும்புகின்றேன்.
எனது முயற்சியை கைவிடாது அம்பாறை மாவட்டத்தின் புற நகர் பகுதிகளில் மகனை தேடி அலைந்தேன்.
மிகுந்த நம்பிக்கையுடன் எனது மகனின் சிறுபாராய புகைப்படத்தை தேடி எடுத்து மனநோயாளி போன்று தெரிந்தவர்கள் முதல் தெரியாதவர்கள் வரை கேட்டறிந்து மகன் இருக்கும் பாடசாலையை கண்டறிந்தேன்.
சிங்கள பாடசாலை ஒன்றில் நான் பெயரிட்ட மகன் அதே பெயருடன் அப்பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருந்தார். அங்கு அதிபரை அணுகி இரகசியமாக எனது மகனின் விடயத்தை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் என்னை அவமதித்து வெளியேற்றினார்.
எனது மகனை வளர்த்து வந்தவர்களுக்கு விடயம் தெரிய வந்தது. இருந்தாலும் எனது முயற்சினை கைவிடாது பொருள் வியாபாரி மற்றும் ஆடை வியாபாரி போன்று வேடமிட்டு மகன் வளர்க்கப்பட்டு வந்த வீட்டினை அடையாளப்படுத்தி கொண்டேன்.
இருந்த போதிலும் மகனை அடைந்து கொள்ள பல்வேறு மட்டங்களை சந்தித்து உதவிகளை கேட்டேன். ஜனாதிபதி செயலகத்திற்கும் கூட கடிதம் ஒன்றினை எழுதி இருந்தேன்.
இருந்தும் பதில் எதுவும் கிடைக்கவில்லை. உடனடியாக எனது மகனை சென்று பார்வையிட்டு நான் தான் தாய் என்னுடன் வருகின்றாயா என வளர்த்தவரின் வீட்டிற்கு சென்று மகனிடம் கேட்டேன்.
உடனே மகன் என்னுடன் வர சம்மதித்தார். உடனே எனது வீட்டிற்கு கூட்டி வந்தேன். சந்தோசமாக இருக்கின்றேன்.
அல்லாஹ் என்னை கைவிடவில்லை. எனது மகனை 16 வருடங்களுக்கு பின்னர் அடைந்து விட்டேன். இன்று எனது மகன் ஹிந்தி நடிகர் போன்று வளர்ந்திருக்கின்றார் என 5 வயதில் காணாமல் சென்ற றஸீன் முஹம்மட் அக்ரம் றிஸ்கான்(வயது 21) என்பவரின் தாய் கண்ணீருடன் தெரிவித்தார்.
இவ்வாறு கூறி முடிந்த பின்னர் தனது மகனை வளர்த்தவர்கள் எப்போது எந்த நேரமும் மகனை சந்தித்து பார்ப்பதற்கு வருகை தந்தாலும் நான் ஆட்சேபனை செய்ய போவதில்லை என மேலும் குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கில் சிறுபான்மையினருக்கு எ திராக அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ் , இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் வவுனியா பசார் வீதிக்கு இன்றைய தினம் காலை சென்ற வவுனியா பொலிசார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர், மூடியிருந்த வர்த்தக நிலையங்களை திறக்குமாறு தெரிவித்ததுடன் சில வர்த்தக நிலையங்களிற்குள்ளே சென்றும் கடைகளை திறக்குமாறு கட்டளையிட்டுள்ளனர்.
இதனால் குறித்த பகுதியில் குழப்பமான நிலமை ஒன்று ஏற்பட்டிருந்தது. எனினும் பொலிசார் கட்டளையிட்ட போதும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் கடைகளை திறக்காமல் கர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் கர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து வர்த்தகர்கள் கடையடைப்பை மேற்கொண்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் வர்த்தக நிலையங்களுக்கு சென்று வர்த்தக நிலையங்களை திறக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக பொலிஸார் ஒலிபெருக்கியூடாக கடைகளை திறக்குமாறும் அறிவித்தல் வழங்கி வருகின்றனர்.
தமிழ்த் கட்சிகள் ஒன்றிணைந்து வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் கர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து வர்த்தகர்கள் கடையடைப்பை மேற்கொண்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் வர்த்தக நிலையங்களுக்கு சென்று வர்த்தக நிலையங்களை திறக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக பொலிஸார் ஒலிபெருக்கியூடாக கடைகளை திறக்குமாறும் அறிவித்தல் வழங்கி வருகின்றனர்.
தமிழ்த் கட்சிகள் ஒன்றிணைந்து வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பிரசவத்திற்காக காரில் மருத்துவமனை செல்லும் வழியில் நடந்த கோர விபத்தில் கர்ப்பிணி உள்பட 7 பேர் பரிதாபமாக ப லியாகியுள்ளனர்.
கர்நாடகாவின் கலபுரஹா மாவட்டத்தில் அமைந்துள்ள அலண்ட் நகரை சேர்ந்தவர் 25 வயதான இஃப்ரானா பேஹம். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று காலை திடீரென பிரசவ வ லி ஏற்பட்டது.
இதனையடுத்து அவரது குடும்பத்தினர் இஃப்ரானா பேஹமை பிரசவத்திற்காக கார் மூலம் கலபுரஹாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அந்த வாகனத்தில், இஃப்ரானா பேஹம், அவரது உறவினர்களான ரூபியா பேஹம் (50), ஜெயஹுன்பி (60), முனீர் (28), முகமது அலி (38), சௌகித் அலி (29) என மொத்தம் 7 பேர் பயணம் செய்தனர்.
கலபுரஹாவில் உள்ள மருத்துவமனை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்தபோது சவலஹு என்ற கிராமம் அருகே உள்ள சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறி மீது கட்டுப்பாட்டை இழந்த கார் பயங்கர வேகத்தில் மோதியுள்ளது.
மோதிய வேகத்தில் காரும், லொறியும் சாலையை விட்டு விலகி அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணி இஃப்ரானா பேஹம் உள்பட 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ப ரிதாபமாக ப லியாகியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் ம ரணமடைந்தவர்களின் உ டல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வி சாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
லொறி மீது கார் மோதிய விபத்தில் பிரசவத்திற்காக அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணி பெண் உள்பட 7 பேர் ப லியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நான் ஆடம்பரமாக வாழ்வதாக ஊடகங்கள் யூகத்தில் கூறுவது தவறு எனவும் மிக ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் அனில் அம்பானி லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் 69 லட்சம் கோடி ரூபாய் கடனை மறுசீரமைக்க சீனாவைச் சேர்ந்த மூன்று வங்கிகளிடம் 51 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தன.இதற்கு அனில் அம்பானி தனிப்பட்ட உத்தரவாதம் அளித்திருந்தார்.
இந்த கடனை திரும்பத் தராததால் அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்கக் கோரி சீன வங்கிகள் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.
இந்த வழக்கில் தனக்கு தனிப்பட்ட சொத்துக்கள் எதுவும் இல்லை என அனில் அம்பானி தெரிவித்திருந்தார்.இதை ஏற்க மறுத்த வங்கிகள் அனில் அம்பானிக்கு சொகுசு கார்கள், தனி விமானம், மனைவி டினா அம்பானிக்கு பரிசளித்த ஹெலிகாப்டர் மும்பையில் இரண்டடுக்கு சொகுசு பங்களா ஆகியவை உள்ளதாக தெரிவித்தன.
இதற்கு அந்த சொத்துக்கள் ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமானவை, என்னிடம் ஒரு சொத்தும் இல்லை என அனில் அம்பானி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து உலகளவில் அனில் அம்பானிக்கு சொந்தமாக 75 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட சொத்து விபரங்களை தருமாறு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக லண்டன் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடந்தது.
இதில் அனில் அம்பானி ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக வாக்குமூலம் அளித்தார். அது குறித்து ரிலையன்ஸ் கம்யூ. செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது
தன்னிடம் எந்த தனிப்பட்ட சொத்தும் இல்லை என அம்பானி நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஊடகங்கள் யூகத்தின் அடிப்படையில் தான் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக செய்திகள் வெளியிடுகின்றன; அதில் உண்மையில்லை என்றும் தான் மிக எளிமையான வாழ்க்கை வாழ்வதாகவும் அனில் கூறினார்.
மேலும்கடன் பட்டு அனைத்து சொத்துகளையும் இழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதோடு இந்த சட்ட செலவுகளுக்கு கூட மனைவியின் நகைகளை விற்று, அதன் மூலம் செலவு செய்வதாகவும், தனது செலவுகள் அனைத்தையும் தனது குடும்பத்தினரே பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
குறுக்கு விசாரணையில் அனில் அம்பானி அளித்த தகவல்கள் அடிப்படையில் சட்டபூர்வமாக தங்களுக்கு சேர வேண்டிய கடன் தொகையை பெற சீன வங்கிகள் நடவடிக்கை எடுக்கலாம் என லண்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொவிட் – 19 வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஓட்டமாவடி சித்தீக் றிப்ஹா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட Immunity Herbal எனும் மூலிகை மருந்து இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
கொரோனாவை இலங்கையில் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு “Fight Against COVID 19” எனும் திட்டத்தில் புதிய கண்டுபிடிப்புக்களை வகைகளைக் கோரியிருந்தது.
இதனடிப்படையில், ஓட்டமாவடி சித்தீக் றிப்ஹா Immunity Herbal எனும் மூலிகைகள் அடங்கிய ஆயுர்வேத மருந்தொன்றை கண்டுபிடித்திருந்தார்.
சுமார் 28 மூலிகைகளை ஒரு மாத காலமாக பரிசீலனை செய்து, அதிலிருந்து அனைத்து வயதினர் மற்றும் அனைத்து வித நோயாளர்களுக்கும் ஏற்ற வகையில் அவர்களது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலக்கூறுகள் அடங்கிய 8 வகையான மூலிகைகளிலிருந்து,
தயாரிக்கப்பட்ட மருந்து மற்றும் சூத்திரங்களை வைத்திய ஆலோசனை மற்றும் சில பயனாளர்களின் பாவனைக்குப்பின் ஏற்பட்ட மாற்றம் என்பவற்றை பரீட்சித்து தயாரித்த மருந்தொன்றை சுமார் இரு மாதங்களுக்கு முன் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்திருந்தார்.
குறித்த மருந்தை கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு வழங்கிய போது நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்,
இதன் காரணமாக கொரோனா நோயினைக் கட்டுப்படுத்தவும் வாய்ப்பாக அமைந்தனை கருத்திற் கொண்டு, இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன், அதற்கான சான்றிதழ் அனுப்பி வைக்கப்படுமென அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான றிப்ஹா, கடந்த 2016இல் புத்தாக்க அமைச்சினால் தேசிய ரீதியான போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் குறித்த மாணவியை வழி நடாத்திய ஆசிரியர் ஆர்.ஜுனைதீன், ஆலோசனை வழங்கிய அஜீமுஸான் மற்றும் அதிபர் ஸாபிர் அஹ்மத், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தைச் சேர்ந்த ஜாபிர் கரீம் ஆகியோருக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் பாடசாலை சமூகம் தெரிவிக்கின்றது.
வீ ட்டில் தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் கா ணப்பட்ட அ வரை உ றவினர்கள் பருத்தித்துறை ஆ தார வை த்தியசா லையில் அ னுமதித்த போ து அ வர் ஏ ற்கனவே உ யிரிழ ந்துவி ட்டதாக ம ருத்துவர்கள் தெ ரிவித்து ள்ளனர். ச ம்பவம் தொ டர்பில் மே லதிக வி சாரணைகளை நெ ல்லியடி பொ லிஸார் மே ற்கொண்டு ள்ளனர்.
ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முறையான பாதுகாப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு இடைவெளிகள் இல்லாது குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொண்டதால் அதிகமானோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜெர்மன் நாட்டில் உள்ள பீலவில்ட் ( Bielefeld) நகரில் 22.09.20 அன்று நடைபெற்ற குடும்ப நிகழ்வில் கலந்து கொண்ட 40 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்தோடு இந்நிகழ்வில் கலந்துகொண்ட மேலதிகமாக 50 இற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை குமமெர்ஸ்பாஹ் (Gummersbach) நகரிலும் தொடர்ச்சியாக பலர் கொரோனாத்தொற்றுக்கு உள்ளாகியுள்ளது. உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டவர்கள் சமீபத்தில் பல குடும்ப நிகழ்வுகளில் கலந்துள்ள நிலையில், இக்குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொண்ட அனைவரும் பரிசோதனைக்கு அழைக்கப்படவுள்ளனர் என மேலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள், அல்லது கலந்துகொண்டவர்களுடன் கடந்த வாரத்தில் நேரடியாக பழகியவர்கள் உடனடியாக தங்களை தனிமைப்படுத்துமாறும், பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் ஜேர்மனிய சுகாதாரத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாடுகள் ரீதியாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், இப்படியான குடும்ப நிகழ்வுகளின் அத்தியாவசியத்தினை ஆராய்ந்து முழு முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது என புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.