இலங்கையர்களின் நெகிழ்ச்சி செயல் : நாட்டை விட்டு வெளியேற விரும்பாத வெளிநாட்டுப் பெண்!!

நெகிழ்ச்சி செயல்..

இலங்கைக்கு பரிசோதனை நடவடிக்கைக்காக வந்த நெதர்லாந்து நாட்டு பெண் மீண்டும் தனது சொந்த நாட்டிற்கு செல்ல விருப்பம் இல்லாமல் போயுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 24 வயதான சின்டி ஹட்சி என்ற பெண் ஒருவர் தொடர்பான செய்தியே வெளியாகியுள்ளது. குறித்த பெண் கடந்த மார்ச் மாதம் 14ஆம் திகதி இலங்கை வந்துள்ளார். தனது பட்ட படிப்பு ஆய்வற்கு தகவல் சேகரிப்பதற்காகவே அவர் இலங்கை வந்துள்ளார்.

“இலங்கை மக்களின் மனரீதியான சுகாதாரம்” என்ற தலைப்பிலேயே அவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஆனாலும் கொரோனா தொற்று காரணமாக அவரது ஆய்வு நடவடிக்கை தடைப்பட்டதுடன், சொந்த நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் அவற்றினை கருத்திற் கொள்ளாத இந்த பெண் தனது ஆய்வு தலைப்பை “கொரோனா நெருக்கடிக்குள் இலங்கை சமூகத்தின் அழுத்தம்” என மாற்றி கொண்டுள்ளார்.

பின்னர் அதற்காக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களின் ஆதரவை அவர் பெற்றுள்ளார். இரண்டு மாத காலமாக தனிமையை போக்கி அவருக்கு உதவுவதற்கு பேராசிரியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டவர்,

“மார்ச் மாதம் 14ஆம் திகதி நான் கொழும்பிற்கு வந்தேன். அந்த காலத்திலேயே தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் கடும் சிரமமாக இருந்தது.

எனினும் இந்த பரிசோதனை இவ்வளவு தூரம் மேற்கொள்ள முடியும் என என்னால் நம்ப முடியவில்லை. எனது ஆரோக்கியம் குறித்தும் எனக்கு அச்சம் காணப்பட்டது. எனினும் ஒரு சில நாட்களிலேயே நான் எனது வீட்டில் இருப்பதனை போன்று உணர்ந்தேன்.

அனைவரும் எனக்கு நிறைய உதவிகளை செய்தார்கள். நான் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தேன். உங்களால் முடிந்தால் இலங்கையில் ஒரு முறையாவது வாழ்ந்து பாருங்கள். எனது ஆய்வு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

எனது நாட்டிற்கு எப்போது செல்ல கிடைக்கும் என எனக்கு தெரியவில்லை. ஆனாலும் நான் எனது நாட்டிற்கு செல்ல ஆர்வம் காட்டப்போவதில்லை. ஏன் என்றால் இங்கேயே எனது வீடு போன்று எனக்கு எண்ணம் ஏற்பட்டது. இதனால் நான் தொடர்ந்து இலங்கையில் இருப்பேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 21ம் திகதி சூரியக்கிரகணம் : இலங்கை மக்கள் தெளிவாக பார்க்க கூடிய சாத்தியம்!!

சூரியக்கிரகணம்..

இந்த வருடத்துக்கான சூரியக்கிரகணம் ஜூன் 21ம் திகதி இலங்கைக்கு தெளிவாக தென்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல்துறையின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு இயக்குநர் பேராசிரியர் சந்தன ஜயரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சூரியக்கிரகணம் ஜூன் 21ம் திகதி முற்பகல் 10.29 முதல் பிற்பகல் 1.19 வரை இலங்கைக்கு பகுதியளவில் தென்படும். இதேவேளை பகுதியளவான சந்திரகிரகணம் நாளை மறுநாள் ஜூன் 5ம் திகதி பூமியின் நிழல் சந்திரனின் விழும்போது இலங்கை நேரப்படி இரவு 11.15 அளவில் ஆரம்பமாகும் என்றும் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இது 6ம் திகதி அதிகாலை 2.34 அளவில் நிறைவு பெறும். பகுதியளவான சந்திரக்கிரகணம் பொதுவாக ஸ்ரோபரி சந்திரக்கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

சந்திரக்கிரகணத்தில் உச்ச நிலை ஜூன் 6ம் திகதி அதிகாலை 12.04 நிகழவிருக்கிறது இது இலங்கைக்கு தெளிவாக தென்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பூரணைக்காலங்களில் சந்திரக்கிரகணம் நிகழ்கிறது.

இதன்போது பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது சூரியனின் ஒளி, சந்திரனை அடைவது பகுதியளவில் அல்லது முழுமையாக தடைப்படுகிறது.

இலங்கையில் டெங்கு, எலி காய்ச்சல் தீவிரம் : சுகாதார அமைச்ச விடுத்துள்ள எச்சரிக்கை!!

டெங்கு, எலி காய்ச்சல்..

நாட்டில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பரவும் ஆபாயம் அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த மே மாதத்தில் மாத்திரம் டெங்கு காய்ச்சளினால் 920 பேரும் எலி காய்ச்சளினால் 740 பேரும் பீடிக்கப்பட்டிருந்ததாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடத்தின் முதல் ஐந்து மாத காலப்பகுதியில் டெங்கு காய்ச்சளினால் 19,940 பேரும் , எலி காய்ச்சலினால் 2,198 பேரும் பீடிக்கப்பட்டிருந்தனர். கொழும்பு , கம்பஹா , களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் டெங்கு காய்ச்சள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை சுத்தப்படுத்தி கிருமிநாசினியை தெளிக்குமாறு சுகாதார பிரிவினருக்கு சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றும் தீவிரமாக பரவி வரும் நிலையில், தற்போது வரையில் 1735 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு மாத கு ழந்தை ம ரணம் : சந்தேகத்தின் பேரில் பெற்றோர் கைது!!

இரண்டு மாத கு ழந்தை..

பேலியகொடை நுகே வீதியில் உள்ள வீடொன்றில் பிறந்து இரண்டு மாதங்களே ஆன கு ழந்தை ம ர்மமான முறையில் உ யிரிழந்த சம்பவம் தொடர்பாக கு ழந்தையின் பெற்றோரை பேலியகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கு ழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது இ றந்து காணப்பட்டதுடன், ம ரணம் தொடர்பான ச ந்தேகம் காரணமாக விசாரணை நடத்த பெற்றோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த தம்பதியினர் வசித்து வந்த வீட்டுக்கு அருகில் உள்ளவர்களிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளவும் இடத்தை பரிசோதனை மேற்கொள்ளவும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.

இ றந்த கு ழந்தையின் பெற்றோர் பேலியகொடை நுகே வீதியில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி கு ழந்தை பிறந்துள்ளதுடன்,அந்த கு ழந்தைக்கு பிறப்பத்தாட்சி பத்திரமும் பெறப்படவில்லை.

அத்துடன் கு ழந்தைக்கு பெயரும் சூட்டப்படவில்லை என்பது வி சாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் குறித்து பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

ம னைவியின் க ழுத்தை நெ ரித்து கொ லை செ ய்த க ணவன்!!

ஏறாவூர் பிரதேசத்தில்..

ம னைவியின் க ழுத்தை க யிற் றால் நெ ரித்து கொ லை செ ய்த க ணவரை பொ லிஸார் கை து செ ய்துள்ள னர். இ ந்த ச ம்பவம் நே ற்று(03.06.2020 மா லை மட்டக்களப்பு ஏறாவூர் பி ரதேசத்தில் இ டம்பெற்றுள் ளதாக ஏறாவூர் பொ லிஸார் தெ ரிவித்து ள்ளனர்.

ஏறாவூர் ஜயங்கேணி ஜின்னா வீ தியைச் சே ர்ந்த 24 வ யதுடைய அப்துல் காதர் ஷியாமியா எ ன்பவரே இ வ்வாறு உ யிரிழந்துள் ளார்.

ச ம்பவம் தொ டர்பில் 27 வ யதான உ யிரிழந்த பெ ண்ணின் க ணவர் கை து செ ய்யப்பட்டுள் ளார். கு றித்த இ ருவருக்கும் இ டையில் ஏ ற்பட்ட வா ய்தர் க்கம் கொ லையில் மு டிந்துள்ளதாக தெ ரிவிக்கப்படுகி ன்றது.

உ யிரிழந்தவரின் ச டலம் பி ரேத ப ரிசோத னைக்காக மட்டக்களப்பு போ தனா வை த்தியசா லையில் வை க்கப்பட்டுள்ளதாக பொ லிஸார் தெ ரிவித்துள்ளனர். இந்நி லையில், சம் பவம் தொ டர்பான மே லதிக வி சாரணைகளை ஏறாவூர் பொ லிஸார் மே ற்கொண்டு வ ருகின்றனர்.

கொழும்பில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து!!

கொரோனா தொற்று..

கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகமவில் கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, ஹோமாகம சுகாதார வைத்திய அதிகாரி ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

ஹோமாகம, பிட்டிபன பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான இராணுவ லெப்டினட் கர்னல் வீட்டிற்கு அருகிலுள்ள 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சேவையில் ஈடுபட்ட குறித்த அதிகாரி வைரஸ் தொற்றுக்குள்ளான பின்னர் அவரது மனைவி மற்றும் ஒரு பிள்ளைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டது. இதன் பின்னர் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த லெப்டினட் கர்னலின் பிள்ளைகள் இருவர் அருகில் உள்ள இரண்டு வீடுகளின் பிள்ளைகளுடன் நீண்ட காலமாக விளையாட செல்வதாக தகவல் கிடைத்துள்ளது.

எனினும் விமான நிலையத்தில் சேவை செய்து வீட்டிற்கு வந்த நாள் முதல் அந்த சிறுவர்கள் அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று விளையாடவில்லை என மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எப்படியிருப்பினும் கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்தை கருத்திற் கொண்டு இந்த இரண்டு குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு இதுவரையில் எவ்வித கொரோனா அறிகுறிகளும் காணப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் சமூக மட்டத்தில் எந்தவொரு கொரோனா நோயாளர்களும் அடையாளம் கணப்படாத நிலையில், கடந்த வாரம் குறித்த இராணுவ கேர்னல் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

கனடாவில் இருந்து இலங்கை வந்த பெ ண்ணுக்கு ஏ ற்பட்ட து யரம்!!

இலங்கை வந்த..

கனடாவில் இ ருந்து இலங்கை வ ந்த பெ ண் ஒ ருவர் பா லி ய ல் து ஷ்பிர யோகத்திற்கு உ ட்படுத்தப்பட்டுள்ளார். காலி, களுவெல்ல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு வ ந்த பெ ண்ணை து ஷ்பிர யோகம் செ ய்த ச ந்தேக ந பர் ஒ ருவர் வி ளக்கம றியலில் வை க்கப்பட்டுள்ளார்.

அக்மீமன பிரதேசத்தை சேர்ந்த 38 வ யதுடைய ந பரே இவ்வாறு வி ளக்கம றியலில் வை க்கப்பட்டுள்ளார். பு கைப்படம் எ டுக்க வ ந்த கனேடிய பெ ண்ணுக்கு பு கைப்படம் எ டுக்க உ தவுவது போ ன்று ந டித்து அ வரை து ஷ்பிர யோகம் செ ய்துள்ளார்.

கு றித்த பெ ண் ச ம்பவம் தொ டர்பில் பொ லிஸாரிடமும் கனேடிய உயர் ஸ்தானிகராலயத்திலும் மு றைப்பாடு செ ய்துள்ளார். அ வரிடம் இருந்த பு கைப்படம் ஊ டாக ச ந்தேக ந பர் கை து செ ய்யப்பட்டு வி ளக்கமறி யலில் வை க்கப்பட்டுள்ளார்.

க.பொ.த உயர்தர மற்றும் புலமை பரிசில் பரீட்சைகள் தொடர்பில் ஆணையாளர் வெளியிட்ட தகவல்!!

க.பொ.த உயர்தர மற்றும் புலமை பரிசில் பரீட்சைகள்..

க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசீல் பரீட்டை நடத்துவது தொடர்பில் பாடசாலைகள் ஆரம்பிபக்கப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பொது தேர்தல் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ளமையினால் பரீட்சைகள் தாமதமாகுமா என பரீட்சைகள் ஆணையாளரிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்தவர், “நாட்டின் தற்போதைய நிலைமையை நாங்கள் அவதானித்து வருகின்றோம்.

இன்னமும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எந்தவிதமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை. பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே பரீட்சைகள் தொடர்பில் ஏதாவது தீர்மானம் எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முகக் கவசம் அணிவது தொடர்பில் வெளியான புதிய தகவல்!!

முகக் கவசம்..

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைவடைந்து வருவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்திய பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமைக்கமைய தனியார் வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு முக கவசம் அணிவது அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உடற்பயிற்சி பாதைகளில் நடக்கும் போதும் முக கவசம் அணிவது அவசியமில்லை. எனினும் பொது போக்குவரத்தில் பயணிப்பவர்கள் முக கவசம் அணிவது கட்டாயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தற்போதைய நிலைமைக்கமைய எந்த பிரதேசத்திலும் தன்சல் ஏற்பாடு செய்வதற்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் ஊரடங்கு அமுலில் : அதிகரித்துள்ள மக்களின் நடமாட்டம்!!

வவுனியாவில் ஊரடங்கு அமுலில்..

வவுனியா உட்பட நாட்டின் பல பாகங்களில் நேற்றையதினம் (03.06) இரவு 10.00 மணிமுதல் நாளை மறுதினம் சனிக்கிழமை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் வவுனியா மாவட்டத்தில் இன்றையதினம் (04.06.2020) ஊரடங்கிலும் மக்களின் நடமாட்டம் காணப்படுவதுடன் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், மருந்தங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அத்துடன் வீதிகளில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா நகரசபை சுகாதார தொழிலாளர்கள் எந்த வித பாதுகாப்புமின்றி பணியாற்றும் அவலம்!!

நகரசபை சுகாதார தொழிலாளர்கள்..

வவுனியா நகரசபைத் சுகாதார தொழிலாளர்கள் எந்த வித பாதுகாப்புமின்றி கொரோனா அச்சத்திற்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அ ச்சுறுத்தல் காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. மக்கள் பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணியுமாறும் கூறப்பட்டுள்ளது. ஆனால் வவுனியா நகரசபை சுகாதார தொழிலாளர்களின் நிலை?

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை அகற்றும் சுகாதார சுத்திகரிப்பு தொழிலாளர்கள் முகமூடி அணியாமலும் கையுறைகள் அணியாதும் கழிவுகளை அள்ளி அதனை வாகனத்தில் ஏற்றிச் செல்வதை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக மக்கள் தாம் பாவித்த முகக்கவசம் உள்ளிட்ட அனைத்து கழிவுகளையும் குப்பைக் கூடைக்குள் போட அதனை தமது கைகளால் அகற்றுவதை காண முடிகிறது.

இவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டு.

வவுனியாவில் மல்லிகை செய்கையாளர் பாதிப்பு!!

மல்லிகை செய்கை..

கொவிட் – 19 தாக்கம் காரணமாக வவுனியாவில் மல்லிகைச் செய்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

வவுனியாவில் விவசாய திணைக்களம் மற்றும் இந்திய துணைத்தூரகம் என்பவற்றின் அணுசரணையில் 10 பேர் வரையில் மல்லிகை செய்கையில் ஈடுபட்டு வந்தனர்.

ஒரு கிலோ மல்லிகை மொட்டு 3000 ரூபாய்க்கும், ஒரு முழம் பூ மாலை 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு அதன் மூலம் மல்லிகைச் செய்கையாளர்கள் வருமானம் பெற்று வந்ததுடன்,

பலருக்கு தமது மல்லிகைத் தோட்டத்தில் வேலைவாய்ப்பையும் வழங்கியிருந்தனர். வெளிநாடுகளுக்கு மல்லிகைப் பூ ஏற்றுமதியும் இடம்பெற்றது.

ஆனால் கொவிட் 19 தாக்கம் காரணமாக ஊரடங்கு சட்ட அமுல், போக்குவரத்து தடை, திருமண நிகழ்வுகள், விசேட பூஜைகள் உள்ளிட்ட மங்கள நிகழ்வுகள் தடைப்பட்டமையால் மல்லிகைப் பூவுக்கான கேள்வி இல்லாமல் போயுள்ளது.

இதனால் மரத்தில் பூத்து குலுங்கும் மல்லிகை வாடி நிலத்தில் விழுவதாக செய்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மரையடித்தகுளம் கிராமத்தில் வாழும் பெண் தலைமைத்துவ குடும்பமான சாருமதி தெரிவிக்கையில்,

விவசாய திணைக்களத்தினால் 2 வருடங்களுக்கு முன்னர் 50 மல்லிகைக் கன்றுகள் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டது.

அதனைக் கொண்டு 0.25 ஏக்கர் (கால் ஏக்கர்) நிலப்பரப்பில் அதனை நட்டதுடன், மேலும் மல்லிகைச் செடிகளை பதி வைத்து தற்போது 300 வரையான கன்றுகளை நாட்டினேன்.

இம் மல்லிகை மூலம் 40 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானத்தை மாதாந்தம் பெற்று வந்ததுடன், நான்கு பெண்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கியிருந்தேன். தற்போது கொவிட் 19 இன் தாக்கத்தால் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தார்.

தமது குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் மல்லிகைச் செய்கையாளர்கள், தமக்கு சந்தை வாய்ப்பு வசதியை ஏற்படுத்தி தருமாறும், அதன் மூலம் மேலும் பல குடும்பங்களை வாழ வைக்க முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் 20 லீற்றர் கசிப்பு மீட்பு : 29 வயது இளைஞன் கைது!!

இளைஞன் கைது..

வவுனியா, சாந்தசோலைப் பகுதியில் 20 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய போ தை ஒழிப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

இன்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிராந்திய போ தை ஒழிப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்த அவர்களின் வழிகாட்டலில்,

பிராந்திய போ தை ஒழிப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.பி.சுபசிங்க தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட்களான ஜயந்த (35885), நிமால் (60064), பொலிஸ் கொன்ஸ்டபிள்களான பிரசன்ன (82663), லலித் (85061),

சசிதரன் (37763), பிரசாந் (91000) மற்றும் பொலிஸ் சாரதியான சார்ஜன் பந்துல (34251) ஆகியோர் அடங்கிய குழுவினர் சாந்தசோலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது வீடு ஒன்றில் இருந்து 20 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு, ஒரு பெரல்,

வடி வளையம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் 29 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.

குடும்பத்தை விட்டு நீண்ட 28 ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை : லாட்ரியில் அள்ளிய தொகை எவ்வளவு தெரியுமா?

அசைன்..

ஐக்கிய அமீரகத்தில் நீண்ட 28 ஆண்டுகளாக பணியாற்றும் இந்தியர் ஒருவர் லொட்டரியில் சுமார் 25 கோடி ரூபாய் வென்றுள்ளார். இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த அசைன் என்பவரே லொட்டரியில் கோடிகளை அள்ளியவர்.

நீண்ட 28 ஆண்டுகள் குடும்பத்தை விட்டு ஐக்கிய அமீரகத்தில் பணியாற்றிவரும் இவர், எஞ்சிய காலம் குடும்பத்துடன் வாழ முடிவெடுத்து, அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனிடையே, லொட்டரி சீட்டிலும் தமது அதிர்ஷ்டத்தை சோதித்து வந்துள்ளார். இதுவரை நாலைந்து முறை லொட்டரி வாங்கியுள்ள அசைனுக்கு ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையிலேயே புதனன்று அபுதாபி லொட்டரியில் அசைனுக்கு சுமார் 24 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.

இந்த தொகை தமது கனவுகளை நிறைவேற்ற போதுமானது என கூறும் அசைனுக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கணவரை விவாகரத்து செய்ததால் கோடீஸ்வரியான பெண் : சுவாரஸ்ய சம்பவம்!!

கோடீஸ்வரியான பெண்..

சீனாவில் கணவரை விவாகரத்து செய்ததன் மூலம் பெண் ஒருவர் கோடீஸ்வரரான சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. சீனாவின் காங்டாய் உயிரியல் தயாரிப்புகள் நிறுவனத்தின் தலைவர் டு வீமின். இவரது மனைவி யுவான்.

சீனாவின் சர்வதேச வணிக மற்றும் பொருளாதார பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் யுவான், தற்போது நேரடியாக பங்குகளை வைத்திருக்கிறார்.

தற்போது இருவரும் விவாகரத்து செய்த நிலையில், தனது தடுப்பூசி நிறுவனத்தின் 161.3 மில்லியன் பங்குகளை யுவானுக்கு கொடுத்துள்ளார் டு வீமின். இதன்மூலம் யுவான் உலக பணக்காரர்கள் வரிசையில் இணைந்துள்ளார்.

அமேசான் நிறுவன அதிபர் ஜெஃப் மற்றும் மெக்கென்சி பெசோஸ் விவாகரத்தை தொடர்ந்து உலகின் விலையுயர்ந்து விவாகரத்தாக இது பார்க்கப்படுகிறது.

யாழில் இளைஞன் பரிதாபமாக மரணம்!!

ஞானலிங்கம் பிரதீபன்..

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பகுதியில் வீதியில் விழுந்ததாக கூறப்படும் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (02.06.2020) மாலை வரணி, நாவற்காடு பகுதியில் இடம் பெற்றுள்ளது.

இதன்போது ஞானலிங்கம் பிரதீபன் (வயது-23) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். குறித்த இளைஞன் மேசன் வேலைக்கு சென்று துவிச்சக்கரவண்டியில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை வீட்டுக்கு அண்மையில் வீதியில் விழுந்து மரணமடைந்துள்ளார்.

கு டிபாே தை காரணமாகவே இவ்வாறு விழுந்த நிலையில் தலையில் அ டிப்பட்டு ம ரணம் நிகழ்ந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.

-உதயன்-