அவனை நம்பி அழைத்த இடங்களுக்கெல்லாம் சென்றேன் : இறுதியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

இளம்பெண்..

தமிழகத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய காதலன் வேறு பெண்ணை திருமணம் செய்ததால் மன வேதனை அடைந்த முதுகலை பட்டதாரி பெ ண் தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.

தஞ்சை மாவட்டம் நல்லவிஜயபுரம் சோழகன்குடிக்காடு நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் அருணா (24). எம்.சி.ஏ. பட்டதாரி. இவரும் சோழகன்குடிக்காடு கீழத்தெருவை சேர்ந்த அர்ச்சுனன் மகன் புகழரசன்(30) என்பவரும் உறவினர்கள். இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் புகழரசன் வெளிநாட்டுக்கு சென்றார். அங்கிருந்து அவர் தனது காதலி அருணாவுடன் செல்போனில் பேசி வந்தார். இதனிடையே புகழரசனின் குடும்பத்தினர் அவருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய நிச்சயித்தனர்.

இதனால் ஏமாற்றம் அடைந்த அருணா மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் புகழரசன், அவரது தந்தை அர்ச்சுனன், தாயார் பத்மாவதி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் புகழரசன் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்து விட்டதாகவும், பெற்றோர் நிச்சயம் செய்துள்ள பெண்ணை அவர் திருமணம் செய்ய முயற்சிப்பதாகவும் கூறி கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் திகதி அருணா தனது உறவினர்களுடன் புகழரசனின் வீட்டுக்கு சென்று தர்ணா போ ராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது விசாரணை மேற்கொண்ட பொலிசாரிடம் அருணா, புகழரசன் உறவுக்காரர் என்பதால் அவரை நம்பி காதலித்தேன். அவன் அழைத்த இடங்களுக்கெல்லாம் சென்றேன். சென்னை வடபழனி முருகன் கோவிலில் நாங்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டோம். ஆனால் புகழரசனும், அவரது குடும்பத்தினரும் என்னை ஏ மாற்ற முயற்சிக்கின்றனர்.

புகழரசனுடன் நான் சேர்ந்து வாழ பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் என் வாழ்க்கையை முடித்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று க ண்ணீர் ம ல்க தெரிவித்தார். இதனை தொடர்ந்து அருணாவை பொலிசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நிச்சயம் செய்திருந்த பெண்ணை புகழரசன் நேற்று முன்தினம் பட்டுக்கோட்டை முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

இதன்பிறகு அருணாவிடம் புகழரசன், உன் எ திர்ப்பையும் மீறி நிச்சயித்த பெண்ணை நான் திருமணம் செய்து விட்டேன் என்று செல்போனில் பேசியதோடு திருமண புகைப்படத்தையும் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதை பார்த்து மன வேதனை அடைந்த அருணா தனது வீட்டின் குளியலறையில் நேற்று காலை தூ க்குப்போட்டு த ற்கொ லை செய்து கொண்டார்.

இதன் காரணமாக அ திர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரின் உடலை எடுத்துச்சென்று புகழரசன் வீட்டின் முன்பு வைத்து போ ராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது புகழரசனையும், அவர் திருமணம் செய்து கொண்ட பெண்ணையும் சிலர் அ டித்துள்ளனர். புகழரசனின் வீட்டு கண்ணாடி சே தப்படுத்தப்பட்டது.

சம்பவ இடத்துக்கு பொலிசார் உறவினர்களை சமாதானப்படுத்தி அருணாவின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். மேலும் புகழரசன், அவரது தந்தை அர்ச்சுனன், தாயார் பத்மாவதி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவர் இ றந்து சரிவதை வீடியோவில் பார்த்த 3 குழந்தைகளின் தாயார்  : நடந்த பரிதாபம்!!

3 குழந்தைகளின் தாயார்..

ஐக்கிய அமீரகத்தில் இருந்தவாறு விடியோ அழைப்பில் பேசிக் கொண்டிருக்கும்போதே தன் கணவர் இ றந்து சரிவதைப் பார்த்துக்கொண்டிருந்த, மூன்று பெண் குழந்தைகளின் தாயான கேரளப் பெண், இந்தியா திரும்பியுள்ளார்.

ஏழ்மை நிலையில் இருக்கும் தனது குடும்பத்தைக் கா ப்பாற்றுவதற்காக உழைத்தாக வேண்டிய கட்டாயத்தில் ஐக்கிய அமீரகத்திற்கு சுற்றுலா விசாவில் சென்றார் கேரளத்தைச் சேர்ந்த 3 பெண் குழந்தைகளின் தாயாரான 37 வயது பிஜுமோள்.

இவருடைய கணவர் ஸ்ரீஜித், 13 ஆண்டுகள் அரபு நாடுகளில் பணிபுரிந்த பின்னர் உடல்நலக் குறைவால் நாடு திரும்பிவிட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீஜித், கேரளத்தில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கணவரின் மருத்துவச் செலவுக்காகவும் குழந்தைகளின் கல்விச் செலவுக்காகவும் சம்பாதித்தாக வேண்டிய கட்டாயத்தில் துபாய் சென்றார் பிஜுமோள்.

ஆயுர்வேத சிகிச்சை தொடர்பான வேலை என்று அழைத்துச் சென்ற தரகர், கொண்டு சென்றுவிட்ட இடம் மசாஜ் நிலையம். அங்கிருந்த சூழ்நிலை பிஜுமோளுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால் மூன்றே நாள்களில் வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்.

பின்னர், தரகரைத் தொடர்புகொள்ள முயன்றால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்துத் தனக்குத் தெரிந்த தோழி ஒருவரின் அறையில் சென்று தங்கிக்கொண்டு வேலை தேடத் தொடங்கினார் பிஜுமோள்.

இதனிடையே, பிப்ரவரி 16 ஆம் திகதியுடன் இவருடைய ஒரு மாத கால சுற்றுலா விசாவும் முடிவுக்கு வந்து, இவர் தங்கியிருப்பதே ச ட்டவிரோதம் என்றாகிவிட்டது. இவருடைய தோழியும் ஊருக்குப் புறப்பட்டுப் போய்விட்டார். இதனிடையே, இந்தியாவிலும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு விமானப் போக்குவரத்து உள்பட அனைத்தும் முடங்கிவிட்டது.

இந்தச் சூழ்நிலையில்தான் மார்ச் 23 ஆம் திகதி, அவருடைய திருமண நாளுக்கு முந்தைய நாள், கேரளத்திலிருந்த அவருடைய கணவருடன் விடியோ அழைப்பில் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தபோதே, சக்கர நாற்காலியிலிருந்த கணவர் சரிந்து வி ழுந்து உயி ரிழந்தார்.

கணவரின் இ றுதிச் சடங்குகளையும் விடியோ அழைப்பிலேயே பார்த்து விடைகொடுக்க நேரிட்டுவிட்டது. அவருடைய குழந்தைகளும் அருகேயுள்ள காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டனர்.
இதனிடையே, பிஜுமோளின் நிலைமை பற்றி அறிய வந்ததும் இந்தியத் தூதரக அலுவலகத்தினர் உள்பட பலரும் உதவ முன்வந்தனர்.

தொடர்ந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமான டிக்கெட் பெற்று, வியாழக்கிழமை அவர் துபாய் மாகாணத்தில் இருந்து புறப்பட்டு கேரளத்தில் கொச்சிக்குத் திரும்பியுள்ளார்.

கடன் வாங்கிதான் துபாய்க்கு வந்தேன், வேலை கிடைத்துவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்துவிடலாம் என நினைத்தேன், இப்படி ஏமாற்றுவார்கள் என நினைக்கவில்லை என்றார் பிஜுமோள்.

எலும்பு புற்றுநோயால் கணவர் பாதிக்கப்பட்டிருந்தார். நான் வெளிநாடு வந்துவிட்ட நிலையில், அவருக்கு மஞ்சள் காமாலையும் ஏற்பட மூளைச் செயல்பாடும் பாதிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்தனர்.

பேசிக்கொண்டிருக்கும்போதே, என் கண் முன்னால் அவர் இ றந்து சாய்வதைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என்றார்.

வெளிநாடுகளில் இருந்து திரும்புபவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்துதல் அமுலில் இருப்பதால் பிஜுமோளுக்கு அவரது ஊருக்கு அருகிலேயே தனித்திருக்க வேண்டிய முகாம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

நாடு திரும்பினாலும் தனித்திருக்கும் காலம் முடிந்து மேலும் ஒரு வாரம் கழித்துதான் தந்தையை இழந்த மூன்று மகள்களையும் தாய் பிஜுமோள் சந்திக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

12 வயது சிறுமியின் உடற்பாகங்கள் பகுப்பாய்விற்கு அனுப்பி வைப்பு!!

சிறுமி..

திருகோணமலை-சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் 12 வ யது சி றுமி உயிரிழந்தமை தொடர்பில் சி றுமியின் உடற்பாகங்கள் பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ரசிக விஜயரத்ன தெரிவித்தார்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று சி றுமியின் பிரேத ப ரிசோதனை இடம் பெற்ற நிலையில் ம ரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் சிறுமியின் உடற்பாகங்கள் பெறப்பட்டதாகும் அவர் கூறினார்.

கடந்த 27ஆம் திகதி சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளிக்குடியிருப்பு- சிறுனிவாசபுரம் பகுதியில் இரத்தினசிங்கம் தனுஷ்கா (12வயது) என்ற சி றுமி திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் இச் சி றுமிக்கு கொரோனா தொற்று காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சி றுமியின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனையடுத்து அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அவரது ச டலம் எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் அவரது ம ரணத்திற்கான காரணம் தென்படாமையினால் சிறுமியின் உடற்பாகங்கள் பகுப்பாய்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் சட்ட வைத்திய அதிகாரி இதன்போது தெரிவித்தார்.

வவுனியாவில் குளோரின் விற்பதாக தெரிவித்து திருட்டில் ஈடுபட்ட மூவர் முச்சக்கர வண்டியுடன் கைது!!

மூவர் முச்சக்கர வண்டியுடன் கைது..

குளோரின் விற்பதாக தெரிவித்து திருட்டில் ஈடுபட்ட மூவரை முச்சக்கர வண்டியுடன் கைது செய்துள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த மூவரும் மகாறம்பைக்குளம் பகுதியில் வைத்து இன்று (29.05.2020) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, உக்கிளாங்குளம் மற்றும் பண்டாரிக்குளம் ஆகிய பகுதிகளில் முச்சக்கர வண்டி ஒன்றில் சென்ற மூவர் வீடு வீடாகச் சென்று குளோரின் விற்பனை செய்ததுடன், வீட்டில் உள்ளவர்கள் உள்ளே சென்ற சமயத்தில் வீடு ஒன்றில் இருந்து தேங்காய் எண்ணெய் கலன் ஒன்றினை திருடிச் சென்றதாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த மூவரை முச்சக்கர வண்டியுடன் கைது செய்துள்ளதுடன், தேங்காய் எண்ணெய் கலனையும் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த நபர்கள் 10 கிலோ குளோரின் பையினுள் குளோரினுடன் கோதுமை மாவினையும் கலந்து அப்பகுதியில் விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் காதல் விவகாரத்தினால் வா ள்வெட்டு : மூவர் வைத்தியசாலையில்!!

வவுனியாவில்..

வவுனியாவில் இன்று (29.05.2020) மாலை இடம்பெற்ற இருவேறு க த்திக்கு த்து சம்பவங்களில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் ப டுகா யமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காதல் விவகாரம் காரணமாக கற்பகபுரம் பகுதியில் இடம்பெற்ற வா ள்வெ ட்டு சம்பவத்தில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் படுகாமடைந்துள்ளதுடன்,

அலகல்லு பகுதியில் இடம்பெற்ற க த்திக்கு த்து சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவங்கள் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை இராணுவத்தினருக்கு உதவும் வகையில் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ள பாடசாலை மாணவன்!!

பாடசாலை மாணவன்..

வீதித் தடைகளை ஏற்படுத்தி இராணுவத்தினரின் பா துகாப்பு காவலரண்களில் தானாகவே வாகனங்களை நிறுத்தக்கூடிய புதிய தொழில்நுட்ப முறையிலான மற்றுமொரு கண்டுபிப்பினை மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி மாணவன் எம்.எம்.சனோஜ் அகமட் கண்டு பிடித்து சாதனை புரிந்துள்ளார்.

நாட்டில் கொரோணா தொற்று நோயால் கடந்த 03 மாதங்களுக்கு மேலாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாடசாலைகள் இயங்காத இக்காலப்பகுதியில் கொரோணா தொற்று நோயை கட்டுப்படுத்த அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இலங்கை இராணுவத்தினருக்கு எவ்வாறு உதவ முடியும் என மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில் உயர்தர தகவல் தொழில் நுட்பப் பிரிவில் கல்விகற்று வரும் மாணவன் எம்.எம்.சனோஜ் அகமட் வீட்டிலிருந்தவாறு சிந்தித்துள்ளார்.

இதன் மூலம் பாதுகாப்பு தரப்பினரின் சமிஞ்சைகள் மற்றும் வீதித்தடைகளை மீறி செயற்படும் வாகனங்கள்இ சாரதிகளை மனிதவலு மற்று நேரங்களை மீதப்படுத்தி கட்டுப்படுத்த கூடிய இந்த புதிய தொழில்நுட்ப முறையை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இளம் வயதிலேயே புதிய தொழில்நுட்ப ரீதியான கண்டுபிடிப்புக்களை மேற்கொள்வதில் ஆர்வம் கொண்ட இந்த மாணவன் கடந்த இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர் ‘சமூக இடைவெளியை பேணக்கூடிய நவீன ஸ்மாட் மின்னியல் கழுத்துப்பட்டி சாதனம்’ ஒன்றை கண்டுபிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் மருதமுனையை சேர்ந்த எம்.எஸ்.எம்.முனாஸ்இ யு.எல்.ஜெஸ்மினா ஆகியோரின் சிரேஸ்ட புதல்வராவார்.

கொரோனா நோயாளிகள் 2500 ஐ தாண்டினால் சிக்கல் : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!!

கொரோனா

வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் செயற்பாடுகளில் சிக்கல் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடற்படையினர் மத்தியில் கொரோனா வைரஸ் பரவி வருவதற்கு மேலதிகமாக வெளிநாடுகளில் இருந்து வருவோரால் மேலும் கொரோனா நோயாளிகள் உருவாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதானிகளில் ஒருவரான மருத்துவர் நவிந்த சொய்சா கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், விசேடமாக குவைத்தில் இருந்து வந்துள்ள பெரும்பாலான இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்கள் இலங்கைக்கு வந்த தினத்தில் இருந்து 10வது தினத்திலும் 14வது தினத்திலும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

அத்துடன் 2 ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரம் கொரோனா நோயாளிகள் இருந்தால் சிகிச்சையளிப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் நவீந்த சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

வீடு மற்றும் காணிக்காக க ணவருடன் இ ணைந்து த ங்கையை கொ லை செ ய்த ச கோதரி!!

வீ டு ம ற்றும் கா ணிக்காக..

மொனராகலை, வெல்லவாய ஊவா குடாஓயா பொ லிஸ் பி ரிவில் தெலுல்ல கொலனியின் நைகல் ஆர பி ரதேசத்தில் வ சித்து வ ந்த 23 வ யதான யு வதி கொ லை செ ய்யப்பட்ட ச ம்பவம் தொ டர்பான யு வதியின் ச கோதரி ம ற்றும் ச கோதரியின் க ணவரை பொ லிஸார் நே ற்று கை து செ ய்துள்ளனர்.

நைகல் ஆர தெலுல்ல எ ன்ற மு கவரியில் வ சித்து வ ந்த ஹெட்டியராச்சிகே தக்சிலா சந்துன் தீபானி எ ன்ற 23 வ யதான யு வதியே கொ லை செ ய்யப்பட்டு ள்ளார். இ ந்த யு வதியை கடந்த 5 ஆம் தி கதி மு தல் கா ணவில்லை எ ன குடாஓயா பொ லிஸ் நி லையத்தில் மு றைப்பாடு செ ய்யப்பட்டி ருந்தது.

இ ந்த மு  றைப்பாடு ஊ டாக ந டத்தப்பட்ட வி சாரணை ம ற்றும் யு வதியின் கா தலனின் தந் திரோபா யமான ந டவடிக்கைகள் கா ரணமாக கொ லை தொ டர்பான த கவல்கள் நே ற்று தெ ரியவந்துள்ளது.

கொ லை செ ய்யப்பட்ட யு வதி தொ ழில் ஒ ன்றின் நி மித்தமாக வீ தியில் செ ன்றுக்கொண்டிருந்த போ து, ச கோதரியும் அ வரது க ணவரும் யு வதியை கா  ட்டுப் பகுதி ஒன்றுக்குள் அ ழைத்துச் சென்று பொ ல்லால் அ டி த் துள் ளார்.

கொ லை ந டந்த இ டத்தை ச ந்தேக ந பர்கள் பொ லிஸாருக்கு கா ட்டியுள்ளதுடன் அ ந்த இ டத்தில் இ ருந்து எ லும்புகள், ம ண்டையோ டு, ஆ டை ம ற்றும் கைப் பை எ ன்பனவற்றை பொ லிஸார் கைப் பற்றியு ள்ளனர்.

உ யிரிழந்த யு வதி வ சித்து வ ந்த வீ டு ம ற்றும் கா ணியை பெ ற்றுக்கொள்ளும் நோ க்கில் இ ந்த கொ லைச் ச ம்பவம் ந டந்துள்ளதாக வி சாரணைகளில் தெ ரியவந்துள்ளது எ ன குடா ஓயா பொ லிஸார் கூ றியுள்ளனர்.

இ ந்த ச ம்பவம் தொ டர்பாக 28 வ யதான யு வதியின் ச  கோதரி ம ற்றும் அ வரது க ணவர் எ னக் கூ றப்படும் 18 வ யதான ந பரையும் கை து செ ய்துள்ளதாக பொ லிஸார் தெ ரிவித்துள்ளனர். ச ந்தேக ந பர்கள் இ ன்று வெல்லவாய நீ தவான் நீ திமன்றத்தில் ஆ ஜர்ப்படுத்தப்பட்டுள்ளதுடன் குடா ஓயா பொ லிஸார் மே லதிக வி சாரணைகளை மே ற்கொண்டு வ ருகின்றனர்.

ஊரடங்கை மீறி சுற்றுலா சென்றவர்களை சமூக வலைத்தள ஊடகங்களின் உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை!!

ஊரடங்கை மீறி சுற்றுலா..

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட காலத்தில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாது வினோத சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்ட நபர்களை கைது செய்வது குறித்து பொலிஸார் கவனம் செலுத்தி வருகின்றனர்.

சமூக வலைத்தள ஊடகங்களின் உதவியுடன் சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்ட நபர்களை கைது செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனி நபர் இடைவெளியை தொடர்பான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது சுகாதார ஆலோசனைகளை மீறும் நபர்களை கைது செய்வதற்காக சாதாரண உடையில் பொலிஸார் தொடர்ந்தும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் நன்மைக்காக அரசாங்கம் விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள்!!

கடுமையான கட்டுப்பாடுகள்..

இலங்கையில் இயல்பு வாழ்க்கைகக்கு திருப்பும் நடவடிக்கைக்கமைய மரண வீடுகளில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் சுகாதார பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.

மரண வீடுகளில் முடிந்த அளவு குடும்ப உறுப்பினர்களை மாத்திரம் மட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. முடிந்த அளவு குறைந்த நாட்களுக்குள் சாஸ்திர சம்பிரதாயங்களை கடைப்பிடிக்குமாறும், மரண வீடுகளில் இருப்பவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.

அத்துடன் மரண வீடுகளில் நுழையும் இடங்களில் கைகளை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அமர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடங்களில் குறைந்தபட்சம் ஒரு மீற்றர் தூர இடைவெளியில் கதிரைகள் வைக்க வேண்டும்.

மரண வீடுகளில் டாம், கரம், சூ தாட்ட அட்டை விளையாட்டுகள் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்படாது. ம துபானம் அருந்துவதற்கு, பு கைபிடித்தல், வெற்றிலை உட்கொள்வதற்கும் மரண வீடுகளில் அனுமதி வழங்கப்பட கூடாது.

மரண வீடுகளுக்கு வருபவர்களுக்கு தேனீர் வழங்கினால் மீள் பாவனை செய்யாத கோப்பைகளை பயன்படுத்துவதோடு, சூடான பானங்கள் மாத்திரமே வழங்கப்பட வேண்டும். பயன்படுத்திய கோப்பைகளை குப்பையில் வீசுவதற்கான ஏற்பாடுகளும் செய்திருத்தல் அவசியமாகும்.

அவசியம் இல்லை என்றால் மரண வீடுகளுக்கு செல்லாமல் இணையத்தளம், தொலைபேசி ஊடாக தமது அனுதாபங்களை வெளிப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மரண வீடுகளுக்க சென்றால் அங்கு செலவிடும் நேரம் குறைவாக இருக்க வேண்டும். செல்லும் இடங்களில் யாரையும் தொட்டு பேசாமல் ஒரு மீற்றர் தூரத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
உள்ளே செல்லும் போதும் வெளியே வரும் போதும் கை கழுவ வேண்டும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியா மாணவர்களுக்கு இணையம் ஊடாக இலவச கற்றல் நடவடிக்கை!!

கற்றல் நடவடிக்கை..

கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக கற்றல் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளமையினையடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சூம் (ZOOM) இன் ஊடாக இலவச கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில் வவுனியா தெற்கு, வடக்கு வலயக்கல்வி பணிமணையினர், வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் வழிகாட்டலுடன் சூம் (ZOOM) ஊடான கற்றல் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போது புலமைப்பரிசில் தரம் 5 மாணவர்கள், கா.பொ.த சாதாரண தர மாணவர்கள் , கா.பொ.த உயர்தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

ஒரே தடவையில் 500 மாணவர்களை இணைக்கும் வசதி குறித்த சூம் இணையத்தளத்தில் உள்ளமையினால் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இலகுவாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலி!!

ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலி..

மறைந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் , அமைச்சருமான மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (29.05.2020) மதியம் 12 மணியளவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் திடீர்மறைவு மலையக மக்களுக்கு பேரிழப்பாகும்.

அவரின் பிறந்ததினமான இன்று தமிழர் சமூக ஜனநாயக கட்சியும் சிறி ரெலோ கட்சியும் இணைந்து இவ் அஞ்சலி நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். இதன் போது அன்னாரது உருவப்படத்திற்கு நினைவு சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

நிகழ்வில் சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா, தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டில் மன்னரை அவமதித்த இலங்கைப் பெண் கைது : 5 வருடங்கள் சிறை!!

இலங்கைப் பெண்

குவைத் நாட்டின் ஆட்சியாளரை அவமதித்ததாக கூறி இலங்கை பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குவைத் ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு வேலைத்திட்டங்களை விமர்சித்து சமூக ஊடங்களில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றை வெளியிட்ட இலங்கை பெண், குவைத் ஆட்சியாளரினால் இலங்கை பணியார்கள் குறித்து எவ்வித அக்கறையுமின்றி கொரோனா பரவ இடமளித்து சுகாதார பாதுகாப்பினை மீறி இலங்கைக்கு அனுப்பப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

குவைத் அரசர் ஒரு நாய். மனிதன் அல்ல. மனிதன் என்றால் கொரோனா தொற்று நீங்கும் வரை தங்க இடமளித்திருக்கலாம் என அவர் கூறியுள்ளார். இந்நிலையில் அரச துரோக குற்றச்சாட்டின் கீழ் குறைந்த பட்சம் அவருக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 61 பேர் குறித்த விபரங்கள்!!

கொரோனா

இலங்கையில் நேற்றைய தினம் 61 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் இதுவரையில் 1530 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 61 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இவர்களில் 26 கடற்படை வீரர்களும், குவைட்டிலிருந்து வருகைதந்து திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 18 பேரும், டுபாயிலிருந்து வருகைதந்து கிரகம தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த 17 பேருமாக மொத்தம் 61​ பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரை 745 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 775 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் இதுவரையில் 10 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இராண்டாவது கொரோனா அலை ஏற்படும் பேராபத்து : வைத்தியர்கள் கடும் எச்சரிக்கை!!

கொரோனா..

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை ஏற்படலாம் என எ ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படையினர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த கொப்புகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யவில்லை என்றால்,

கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டினுள் ஏற்பட கூடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்ஸா தெரிவித்துள்ளார். இதுவரையில் உலக சுகாதார அமைப்பு ஆசியா, அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு இரண்டாவது கொரோனா அலை தொடர்பில் எ ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த நோயாளிகளை முகாமைத்துவம் செய்வது அத்தியாவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைக்காக சமூக இடைவெளியை கடைபிடித்தல், சுய தனிமைப்படுத்தல், கிருமி நாசினி தெளித்தல் மற்றும் முக கவசம் அணிதல் ஆகிய சுகாதார பாதுகாப்புடன் செயற்படுதல் கட்டாயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் நபர்களுக்காக வைத்தியசாலை மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களின் வசதிகளை அதிகரிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

-தமிழ்வின்-

பேருந்து போக்குவரத்தில் அறிமுகமாகவுள்ள புதிய சட்டம்!!

புதிய சட்டம்..

பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கமைய மாத்திரம் பயணிகளை அழைத்து செல்வதனை சட்டமாக்குவதற்கு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர யோசனை ஒன்று சமர்ப்பித்துள்ளார்.

புதிய சட்டத்தை அமுல்படுத்துவதாயின் பேருந்து கட்டணத்தை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணிகளை அழைத்து செல்லும் சட்டம் அமுல்படுத்தப்பட்டதால் பேருந்து துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மாகாண பேருந்து சங்கத்தின் தலைவர் சரத் வீஜிதகுமார தெரிவித்துள்ளார்.

பேருந்திற்காக ஏற்படும் செலவினை ஏற்க முடியாத நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அந்த யோசனையை செயற்படுத்துவதற்கு மாற்று கட்டண முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.