வவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் அதிரடி நடவடிக்கை : சிக்கிய உணவகங்கள்!!

பொது சுகாதார பரிசோதகர்கள்..

வவுனியா நகரப்பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்றையதினம் (28.05.2020) மாலை 6.30 மணி தொடக்கம் 7.30 மணிவரையிலான காலப்பகுதியில் உணவகங்கள், ம துபானசாலைகள் மீது திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கோவிட் -19 வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு வவுனியா பொது சுகாதார பரிசோதகர்கள் இணக்கம் தெரிவித்திருந்தனர்.

இந் நிலையில் யூட் பிரீஸ் (சுகாதார வைத்திய அதிகாரி) , பொது சுகாதார பரிசோதகர்களான வோல்டயன் , எர்சன் றோய் மற்றும் பொலிஸார் அடங்கிய குழுவினர் நேற்று (28.05.2020) மாலை வவுனியா நகரப்பகுதிகளில் உள்ள உணவகங்கள் , ம துபானசாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது உணவகங்களுக்கு வருகை தருகின்ற வாடிக்கையாளர் கை சுத்தம் செய்வதில்லை, கூட்டாக இருந்து உணவருந்துவது, மருத்துவசான்றிதழ் இன்றி பணியாளர்கள் காணப்பட்டமை, காலவதியான உணவுப்பொருட்கள்,

முகக்கவசம் சீராக அணியாமை போன்ற பல்வேறு குறைபாடுகளை பார்வையிட்ட அக்குழுவினர் குறித்த உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குறிய நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதுடன் சில உணவகங்களுக்கு எச்சரிக்கையும் வழங்கியுள்ளனர்.

11 வயது மகனை கொ லை செய்துவிட்டு தப்பிப்பதற்கு தாய் செய்த செயல்!!

11 வயது மகனை..

பிரேசிலில் 11 வ யது ம கனை வி ஷம் வை த்து கொ லை செய்து விட்டு, தாய் அவனின் உடலை பழைய வீடு ஒன்றில் ஒளித்து வைத்துவிட்டு, கா ணமல் போய்விட்டதாக நாடகமாடிய சம்பவம், விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

பிரேசிலின் Rio Grande do Sul-ல் Planalto நகரில் இருக்கும் வீடு ஒன்றில் 11 வயது மதிக்கத்தக்க Rafael Mateus Winques என்ற சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இவரின் தாய் Alexandra Dougokenski மகன் காணாமல் போய்விட்டதாக கூறி புகார் அளித்த 10 நாட்களுக்கு பின், சிறுவனின் ச டலத்தை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில், மகன் காணாமல் போய்விட்டதாக புகார் அளித்த தாய் தான் கொ லையாளி என்பது தான் அ திர்ச்சி தரும் தகவல், இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த மே மாதம் 16-ஆம் திகதி Alexandra Dougokenski தான் படுக்கையில் இருந்து எழுந்த போது மகன் கா ணாமல் போய்விட்டதாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதனால் அதிகாரிகள், அவர் வீட்டை விட்டு ஓடியிருக்கலாம் என்று அதிகாரிகள் மற்றும் புலனாய்வாளர்கள் நம்பியுள்ளனர். இதையடுத்து, கடந்த 22-ஆம் திகதி தடவியல் அதிகாரிகள் அவர் வீட்டை சோதனை செய்த போது, அங்கு இர த்தக் க றை இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, Rafael Mateus Winques-ன் வளர்ப்பு தந்தை காரிலும் இர த்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இர த்தம் பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது, அதன் முடிவுகள் இன்னும் வராமல் இருந்தது.

இந்நிலையில், Rafael Mateus Winques-ன் உடல் கடந்த 25-ஆம் திகதி அதே பகுதியில், இவர்கள் குடும்பத்தின் பழைய வீட்டில் தாளில் மூடப்பட்ட நிலையில், கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் நடத்திய தொடர் விசாரணையில், Alexandra Dougokenski கைது செய்யப்பட்டார்.

மகன் உணர்ச்சிவசப்பட்ட(emotional problems) பி ரச்சினைகளால் அவதிப்பட்டதால் அவருக்கு வலுவான மருந்து கொடுத்த பிறகு இ றந்துவிட்டதாகவும், இதைத் தொடர்ந்து அவனின் உடலை தாள் ஒன்றில் போர்த்தியபடி கொண்டு சென்று பழைய வீட்டில் போட்டதை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவர், இது கொ லை என்றே தோன்றுகிறது. இருப்பினும் இது தொடர்பான வழக்கு விசாரணை, இதை தெளிவுபடுத்தும் என்று கூறியுள்ளார்.

கப்பலுக்கு பயன்படுத்தும் ‘போயா’ வங்காலை கடலில் மீட்பு!!

கப்பலுக்கு பயன்படுத்தும் போயா..

கடலில் பயணத்தை மேற்கொள்ளும் கப்பலுக்கு பயன்படுத்தும் ‘போயா’என அழைக்கப்படும் மிகப் பெரிய இரும்பு மன்னார் வங்காலை கடலில் மீனவர்களினால் கண்டு பிடிக்கப்பட்டு இன்று மதியம் வங்காலை கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

‘போயா’என அழைக்கப்படும் குறித்த மிகப் பெரிய இரும்பு வங்காலை கடலில் காணப்படுவதை அவதானித்த மீன்வர்கள் சக மீனவர்களின் உதவியுடன் படகில் கட்டி இழுத்து கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

வங்காலை கடலில் மீனவர்களினால் கண்டு பிடிக்கப்பட்ட இதனை பலரும் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

கொரோனாவினால் ஏற்பட்ட குழப்பம் : வைத்தியசாலையில் திருமணத்தை நடத்திய லண்டன் வாழ் இலங்கையர்!!

லண்டன் வாழ் இலங்கையர்..

கொரோனா வைரஸ் அ ச்சுறுத்தல் காரணமாக லண்டன் வைத்தியசாலையில் இலங்கையை சேர்ந்த வைத்தியர் ஒருவர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால், திருமணத்தை ரத்து செய்ய வேண்டியிருந்த இலங்கை வைத்தியர் மற்றும் ஐயர்லாந்து நாட்டு தாதி ஒருவர் லண்டனில் பணிபுரியும் வைத்தியசாலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

Jann Tipping என்ற தாதியும் அனலன் நவரத்னம் என வைத்தியரும், லண்டனில் உள்ள St Thomas வைத்தியசாலையில் திருமணம் செய்துக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அங்கிருந்த ஒருவர் இந்த திருமணத்தை நேரடி ஒளிபரப்பு செய்தமையினால் உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் தூரத்தில் இருந்தே பார்வையிட்டுள்ளனர்.

அனைவரும் ஆரோக்கியமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் இந்த நடவடிக்கையை எடுக்க தீர்மானித்ததாக இந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.  ஆகஸ்ட் மாதம் Tipping மற்றும் நவரத்னம் தங்கள் திருமணத்தை நடத்தவிருந்தனர்.

எனினும் ஐயர்லாந்து மற்றும் இலங்கையில் உள்ள தங்கள் குடும்பத்தினர் கொரோனாவுக்கு மத்தியில் பயணம் செய்வதில் உள்ள ஆபத்து தொடர்பான அச்சம் காரணமாக இவ்வாறு திருமணம் செய்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

ஆழ்துளை கிணற்றில் சிறுவன் விழுந்து இ றக்க காரணமானவர் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட முக்கிய தகவல்!!

3 வயது சிறுவன்..

தெலங்கானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் ஆழ்துளையை தோண்டிய நபர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்யவுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள போச்சன்பள்ளி கிராமத்தில் கோவர்தன் என்பவரின் விவசாய நிலத்தில் மூன்று ஆழ்துளை கிணறுகள் உள்ளது. இந்த ஆழ்துளையை கோவர்தனின் மாமனார் மங்கலி பிக்‌ஷாபதி தான் தோண்டினார். ஆனால் மூன்றிலும் தண்ணீர் வரவில்லை.

இதனிடையே மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்த கோவர்தன் – நவீனா தம்பதியின் மகன் சாய் வரதன், அதில் விழுந்துள்ளான். இதனை கவனித்த கோவர்தனன் குடும்பத்தினர் குழந்தையை மீ ட்க முயற்சித்தனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 120 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளையில் சிறுவன் மூச்சுத் தி ணறல் ஏற்படாமல் இருக்க ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டது.

பின்னர் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டனர். ஆனால் 12 மணி நேர முயற்சிக்கு பின்னர் சிறுவன் சாய் வரதன் சடலமாக மீட்கப்பட்டான்.

அவன் சடலத்தை பார்த்து பெற்றோர் க தறி து டித்தனர், அவர்களை அங்கிருந்தவர்களால் சமாதானம் செய்யவே முடியவில்லை.

பழச்சாறில் அளவுக்கு அதிகமான தூக்க மருந்து : பா ம்பைக் க டிக்க விட்டு மனைவியை கொ ன்ற கணவனின் வாக்குமூலம்!!

க ணவனின் வா க்குமூ லம்..

இ ந்தியாவின் கே ரள மா நி லத்தில் நா க ம் தீ ண்டி இ ளம்  பெ ண் ம ரணமடை ந்த வி வகார த்தில், கை து செ ய்யப்ப ட்ட க ணவன் பொ லிசாருக்கு இ ன்னொரு த கவலையும் அ ளித்து ள்ளார். கே ரளாவின் கொ ல்லம் மா வட்டத் தில் அ ஞ்சல் ப குதியில் உத்ரா எ ன்பவர் தூ க்கத்தில் கொ டிய வி ஷம் கொ ண்ட நா க ம்  தீ ண்டி யதால் ம ரணமடை ந்தார்.

 இ ந்த வி வகாரம் உத்ராவின் பெ ற்றோரு க்கு ச ந்தேக த்தை ஏ ற்படுத்தவே அ வர்கள் மா வட்ட கா வ ல் ஆ ணையர் அ லுவலக த்தில் பு கார் ம னு அ ளித்தனர்.

இ தன்பே ரில் வி சாரணை மே ற்கொ ண்ட பொ லிசார், உத்ராவின் க ணவர் சூரஜ் ம ற்றும் அ வரது கூ ட்டாளி சுரேஷ் எ ன்பவரையும் கை து செ ய்தனர். உத்ராவை கொ லை செ ய்யும் நோ க்கில் மா ர்ச் 2ம் தி க தி சூரஜ் மு ன்னெடுத்த மு யற்சியில், உத்ரா நூ லிழையில் உ யி ர் த ப்பி னார்.

ம ருத்துவம னையில் சு மார் 10 நா ட்கள் தீ விர சி கிச்சை பி ரிவில் அ னுமதிக்க ப்பட்டு,  10 ல ட்சம் செ லவிட்டு, உத்ராவின் பெ ற்றோரே அ வரை கா ப்பாற்றியுள் ளனர்.

இ தனைய டுத்து பெ ற்றோ ருடன் ஓ ய்வில் இ ருந்த உத்ராவை மீ ண்டும் மே 6 ஆ ம் தி க தி சூரஜ் கொ டிய வி ஷ ம் கொ ண்ட நா கத்தை ப யன்படு த்தி கொ ல் ல தி ட்டமி ட்டு, அ தில் வெ ற்றியும் க ண்டார்.

இ ந்த இ ருமு றை யும் உத்ரா ஆ ழ்ந்த தூ க்கத்தில் இ ருந்ததாக தெ ரியவந்து ள்ளது. இ து தொ டர்பில் மே ற்கொண்ட வி சார ணையில், சூரஜ் அ ந்த உ ண்மையை பொ லிசாரிடம் வெ ளிப்படுத்தி யுள்ளார். இ ரண்டு மு றையும், உத்ராவுக்கு தூ க் க மா த்திரை க லந்த பா னம்  கு டிக்கத் த ந்ததாக தெ ரிவித்து ள்ளார்.

650 மி ல்லி கி ரா ம் கொ ண்ட 2 ப ரா சி ட்டமால் மா த்திரைகளை தூ ள் செ ய்து உத்ராவுக்கான பா னத்தில் க லந்து கொ டுத்ததாகவும், இ ரண்டா வது மு றை ப ழச்சா றில் அ திக அ ளவு தூ க்க மா த்தி ரைகளை க லந்து கொ டுத்ததாகவும் தெ ரிவித்துள்ளார் சூரஜ்.

இ தனாலையே, கொ டி ய வி ஷ ம் கொ ண்ட நா கம் தீ ண்டிய பி ன்னரும், உத்ரா வ லியா ல் அ லறவோ எ ந்த அ றிகுறிக ளும் வெ ளிப்படுத்தவோ இ ல்லை எ ன பொ லிஸ் த ரப்பு தெ ரிவித்து ள்ளது.

இலங்கையில் 1500 ஐ கடந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை!!

கொரோனா..

இலங்கையில் இன்று இதுவரையில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவர்களுள் 17 பேர் டுபாயில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் எனவும்,

மேலும் 15பேர் குவைத் இல் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் ஏனைய 2 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1503 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 745 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 748 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி வாகன விபத்தில் வயோதிப பெண் பலி : மகள் படுகாயம்!!

வாகன விபத்தில்..

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 64 வயதுடைய வயோதிப பெண் பலியானதுடன், அவரின் மகள் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து இன்று காலை பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிள் மீது கிளிநொச்சியிலிருந்து யாழ். நோக்கி பயணித்த டிப்பர் ரக வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த 64 வயதுடைய சுப்ரமணியம் அன்னலட்சுமி என்ற வயோதிப பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை மோட்டார் சைக்கிளை செலுத்திய அவரது மகள் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த டிப்பர் வாகனம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வெளிநாட்டில் இரண்டு மகள்களுடன் தவிக்கும் இந்திய தாய் : கணவனின் வருகைக்காக காத்திருக்கும் பரிதாபம்!!

இரண்டு மகள்களுடன்..

இந்தியாவில் கணவர் சி க்கி த விப்பதால், ஷார்ஜாவில் அவரின் குடும்பம் கடுமையான நிதி நெருக்கடியால் தவித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் விமான போக்குவரத்து தடைபட்டுள்ளது.

இதனால் சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு சென்றவர்கள், திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இருப்பினும் அந்தந்த நாட்டு அரசு அவ்வப்போது தங்கள் நாட்டு மக்களுக்காக விமானங்களை அனுப்பி வைக்கின்றனர்.

இந்நிலையில், ஷார்ஜாவில் வசித்து வரும் இந்திய குடும்பம், தற்போது இந்தியாவில் சிக்கி தவிக்கும் கணவரை வருகை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், ஷார்ஜாவின் Al Nahda-வில் தன் கணவர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருபவர் Sephali Panigrahi.

இவரின் கணவர் கடந்த மார்ச் மாதம் 15-ஆம் திகதி தந்தையை விடுவதற்காக இந்தியா சென்றுள்ளார். நான்கு நாட்களில் திரும்பிவிடுவார் என்பதால், கிரெடிட் கார்டுகளை அலுவலக லாக்கரில் வைத்து விட்டு சாவியை கொண்டு சென்றுள்ளார்.

ஆனால், தற்போது இந்த கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவின் சிவப்பு மண்டலம் என்றழைக்கப்படும் மும்பையில் அவர் சிக்கிக் கொண்டார். அவரால் தற்போதைக்கு ஷார்ஜா திரும்ப முடியவில்லை.

இதனால் Sephali Panigrahi தன்னுடைய இரண்டு மகள்களை வைத்துக் கொண்டு கடுமையான நிதி நெருக்கடியை எதிர் கொண்டு வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், இப்படி ஒரு நிலை வரும் என்று எதிர்பார்க்கவேயில்லை. நான்கு நாட்களில் திரும்பிவிடுவார் என்பதால், நாங்களும் சாதாரணமாக இருந்துவிட்டோம்.

ஆனால் இப்போது எங்களிடம் இருந்த பணம் தீர்ந்துவிட்டது. எங்களிடம் இருக்கும் பணம் உள்நாட்டு பணமதிப்பான திர்ஹாம்முக்கு குறைவாகவே இருக்கிறது.

எட்டாம் வகுப்பில் படிக்கும் என் இளைய மகளுக்கு பள்ளியிலிருந்து ஒரு இறுதி எச்சரிக்கை கிடைத்துள்ளது. நான் உடனடியாக அவளது கட்டணத்தை செலுத்தவில்லை என்றால், அவளை நீக்குவதாக அவர்கள் மி ரட்டியுள்ளனர்.

வங்கிகளிடமிருந்து எங்களுக்கு நிலுவைத் தொகையை கோருவதாக தெரிவித்துள்ளார். மேலும், வெளிநாட்டில் சிக்கியுள்ள ஐக்கிய அரபு எமிரேட் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்தால் ஜூன் 1 முதல் திரும்ப முடியும்.

கணவரின் ஐசிஏ விண்ணப்பம் இன்னும் அங்கீகரிக்கப்படாததால் தான் நம்பிக்கையை இழந்து நிற்கிறேன், அவர் ஒரு நீரிழிவு நோயாளி, ஆஸ்துமாவால் அவதிப்படுகிறார். அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்து உள்ளூர் சந்தையில் கிடைக்கவில்லை. அவரது உடல்நிலை குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண் முதல் முறையாக நீதிபதியாக நியமனம் : யார் இவர் தெரியுமா?

ரபியா அர்ஷத்..

பிரித்தானியாவில் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண் ரபியா அர்ஷத் என்பவர் முதல் முறையாக நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

40 வயது மதிக்கத்தக்க Raffia Arshad, 17 ஆண்டுகால சட்ட வாழ்க்கைக்கு பிறகு கடந்த வாரம் மிட்லாண்ட்ஸ் சுற்று வட்டாரத்தில் துணை மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து Raffia Arshad கூறுகையில், நான் இதை தனிப்பட்ட சாதனையாக பார்க்கவில்லை. அதை விட பெரியது. இது இஸ்லாமிய பெண்களுக்கு மட்டுமல்ல, எல்லா பெண்களுக்கும் முக்கியமானது.

ஆனால் இது இஸ்லாமிய பெண்களுக்கு மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார். மேலும், அவர் புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி தளத்தின் பன்முகத்தன்மையை உறுதிசெய்ய பயன்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2002-ஆம் ஆண்டு லண்டனில் பயிற்சி பெற்ற Raffia Arshad, 2004-ல் செயின்ட் மேரியின் குடும்ப சட்ட அறைகளில் சேர்ந்தார். இவர், கட்டாய திருமணம், பெண் பிறப்புறுப்பு சிதைவு மற்றும் இஸ்லாமிய சட்ட சிக்கல்கள் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்றவர்.

இருப்பினும், தான் இவ்வளவு அனுபவங்களை பெற்றிருந்தாலும், பாகுபாட்டையும் எதிர்கொள்வதாக Raffia Arshad குறிப்பிட்டுள்ளார்.

17 ஆண்டுகளுக்கும் மேலாக நான் இதில் இருப்பதற்கு, எனக்கு ஆதரவாக இருந்த, என்னை மிகவும் ஆதரித்த கணவருக்கு கடன்பட்டிருக்கிறேன். அவர் என் ஆர்வத்தைத் தொடர இடம் கொடுத்ததாகவும் உருக்கமுடன் கூறியுள்ளார். Raffia Arshad-வுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

72 வயது நபரை திருமணம் செய்யவுள்ள 27 வயது இளம் பெண்!!

27 வயது இளம் பெண்..

அமெரிக்காவில் 45 வயது இடைவெளி கொண்ட நபரை காதலித்து திருமணம் செய்யவுள்ள 27 வயது பெண் தங்களின் பா லியல் வாழ்க்கை தனித்துவமானது என்று கூறியுள்ளனர்.

பொதுவாகவே இப்போது அதிக வயது கொண்ட ஆணோ, பெண்ணோ தங்களை விட வயதில் குறைந்தவர்களை காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். அதன் பின் சமூகத்தில் இருக்கும் மக்கள் அவர்களை ஒரு விதமாக பேசுவர்.

ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் ஒரு சிலர் வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிலர் அவர்களின் வயது வித்தியாசத்தால், பா லியல் வாழ்க்கை குறித்து கிண்டலாக பேசுவார்கள், அதற்கு அவர்கள் சரியான பதிலடி கொடுப்பர்.

இந்நிலையில் இதே போன்று தான் 27 வயது மதிக்கத்தக்க தாய் ஒருவர் 72 வயது மதிக்கத்தக்க நபரை காதலித்து, நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு விரைவில் திருமணம் செய்யவுள்ளார். இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Rachael Chenault, 27 வயது கொண்ட தாயாரான இவர், John Penzera என்ற 72 வயது நபரை காதலித்து வருகிறார்.

இவர்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களின் பா லியல் வாழ்க்கை குறித்த கேள்விக்கு, எங்களின் பா லியல் வாழ்க்கை தனித்துவமானது என்று கூறியுள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு John Penzera-ஐ பா துகாப்பு நிறுவனத்தில், காவலராக பணிபுரிந்த போது பார்த்ததாகவும், அதன் பின் பழகிய நாங்கள் strip club ஒன்றில் காதலை வெளிப்படுத்திக் கொண்டதாகவும் Rachael Chenault தெரிவித்துள்ளார்.

தன்னுடைய தாய், தந்தையை விட John Penzera வயதில் மூத்தவராக இருந்தாலும், வயது என்பது வெறும் எண் மட்டுமே, எங்களுக்குள் நம்பமுடியாத நெருக்கமான உறவு உள்ளது. அது மிகவும் நெருக்கமானது, அவரை யாரும் ஒப்பிட முடியாது.

எங்களுக்குள் தனித்துவமான பா லியல் வாழ்க்கை உள்ளது. வயதுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நாங்கள் தன்னிச்சையாக இருக்கிறோம். அவர் நடந்து கொண்ட விதம் அனைத்தும் எனக்கு பிடித்துவிட்டது.

நான் மட்டுமின்றி அவரும் அதை உணர்ந்தார். இருவரும் அதை உணர்ந்தோம். ஆரம்பத்தில் அவர் விவகாரத்திற்காக காத்துக் கொண்டிருந்தார். இதனால் இரண்டு ஆண்டுகள் வரை காத்திருந்த இந்த ஜோடி, தற்போது, காதலர்களாக மாறியுள்ளனர்.

இவர்களின் காதலை John Penzera-ன் 28 வயது மகன் மற்றும் 23 வயது மகள் கேட்டு மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் Rachael Chenault குடும்பத்தினர் இவர்களின் காதல் விஷயத்தில் மகிழ்ச்சியடையவில்லை.

அதன் பின் John Penzera-ஐ சந்தித்தவுடன் Rachael Chenault-ன் குடும்பத்தினருக்கு பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தம்பதி விரைவில் திருமணம் செய்யவுள்ளனர். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இது எப்போது நடக்கும் என்று சொல்லமுடியாது என்று அவர்களே கூறியுள்ளனர்.

இதனால் இப்போதைய சூழ்நிலையில் Rachael Chenault தன்னுடைய மகனுடன் ஒரு குடியிருப்பிலும், அதே நேரத்தில் John Penzera பென்சில்வேனியாவின் லாட்ரோபில் ஒரு வீட்டை திருமணத்திற்கு பின் தங்குவதற்காக கட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் Rachael Chenault தன்னுடைய மகன் John Penzera-வுடன் நெருங்கி பழகுவதாகவும், இது ஒரு நல்ல முன்மாதிரி என்றும் கூறியுள்ளார். இந்த ஜோடி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இணையவாசிகள் மற்றும் சமூகத்தில் பலர் கிண்டல் செய்யும் விதமாக பேசுவது குறித்து கேட்ட போது, நாங்கள் அதை எல்லாம் கண்டு கொள்வதே இல்லை.

நாங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறோம் என்பதை அவர்கள் சொல்ல மாட்டார்கள். வயது இடைவெளி படுக்கையறையில் உள்ள விஷயங்களுக்கும் தடையாக இருக்கவில்லை. நான் ஒவ்வொரு நாளும் அவரிடமிருந்து வேறு வழிகளில் கற்றுக் கொண்டிருக்கிறேன், அவர் என்னிடமிருந்து கற்றுக்கொள்கிறார், நாங்கள் ஒருபோதும் நிறுத்த மாட்டோம்.

சில விஷயங்களில் எங்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளன. அது திரைப்படங்கள் தான், அவர் பெரும்பாலும் பழைய திரைப்படங்களைப் பற்றி விளக்குவார், அது எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். இருவருக்கும் இடையே இருக்கும் வயது இடைவெளியைப் பற்றி Rachael Chenault-க்கு இருக்கும் ஒரே பயம் விரைவில் John Penzera(அதாவது இறந்துவிடுவார்) இழப்பார்.

இது குறித்து Rachael Chenault-யிடம் கேட்ட போது, அவர் என்றென்றும் வாழப் போவதில்லை என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் இது ஒவ்வொரு நாளும் நான் கவலைப்பட வேண்டிய ஒன்றாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

காதலர்களுக்கு மட்டும் தனது எல்லையை திறந்துவிட்ட நாடு : ஆனால் ஒரே ஒரு நிபந்தனை!!

காதலர்களுக்கு மட்டும்..

கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ள அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பிரிக்கப்பட்ட காதலர்களுக்கு டென்மார்க் தனது எல்லைகளைத் திறந்துவிட்டுள்ளது.

டென்மார்க்கில் திங்களன்று நிலவரப்படி, ஜேர்மனி, பின்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் மீண்டும் தங்கள் டேனிஷ் காதலர்களை சந்திக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

ஆனால் அவர்கள், தாங்கள் உறவில் இருப்பதை உரிய முறைப்படி நிரூபிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. டென்மார்க்கில் உள்ள தமது காதலி அல்லது காதலரின் பெயர், முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள் தேவை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.’

ஊரடங்கு காலத்திற்கும் ஆறு மாதங்கள் முன்னர் வரை தொடர்பில் இருந்தவர்கள், மற்றும் இதற்கு முன்னர் நேரடியாக சந்தித்துக்கொண்டவர்களுக்காகவே தற்போது எல்லையை திறக்க டென்மார்க் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் இணையம் வாயிலாக உறவை புதிதாக ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கு இந்த வாய்ப்பு பொருந்தாது. டென்மார்க்கில் தங்கள் காதலி அல்லது காதலரை காண் விரும்பும் நபர்கள், கண்டிப்பாக புகைப்படம் ஒன்று அல்லது காதல் கடிதம் என ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.

வரும் நாட்களில், இருவரும் ஒன்றாக கையெழுத்திட்ட கடிதம் ஒன்று போதும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. டென்மார்க் அரசின் இந்த புதிய சட்டம் ஆயிரக்கணக்கான காதலர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

அதில் ஒரு தம்பதி, டென்மார்க்கைச் சேர்ந்த 85 வயதான இங்கா ராஸ்முசென் மற்றும் ஜேர்மனியைச் சேர்ந்த 89 வயதான கார்ஸ்டன் ஹேன்சன். இந்த தம்பதி கடந்த வருடம், பெரும்பாலும் தினசி எல்லை நகரமான அவென்டோஃப்ட் அருகே தினமும் சந்தித்து, தங்கள் உறவை வளர்த்து வந்துள்ளனர்.

இதனிடையே, கொரோனா பரவலை அடுத்து, பொதுமக்கள் பொதுவெளியில் கூடுவதை தடை செய்ததுடன், தமது எல்லைகளையும் மூடியது டென்மார்க் அரசு.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவலை எதிர்கொள்ள ஊரடங்கை முதலில் அமுலுக்கு கொண்டுவந்த நாடு டென்மார்க் என்பது குறிப்பிடத்தக்கது.

தேன் எடுக்க காட்டுக்குச் சென்ற மாணவன் பரிதாபமாக பலி!!

மாணவன்..

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மதவாச்சி காட்டுப் பகுதிக்கு தேன் எடுக்க சென்ற மாணவன் பரிதாபமாக உ யிரிழந்துள்ளார். இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு உ யிரிழந்தவர் திருகோணமலை – சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய நடராசா ஆதவன் என தெரியவந்துள்ளது.

நிலாவெளி கைலேஸ்வரன் மஹா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்று வரும் இவர் குடும்ப கஷ்ட நிலை காரணமாக விடுமுறை காலத்தில் கூலித்தொழில் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மூன்று பேருடன் தேன் எடுப்பதற்காக காட்டுக்குச் சென்றுள்ளார். 16 அடி உயரமான மரத்தில் ஏறி மரத்தை வெட்டியபோது மரத்தின் கிளை அவர் மீது விழுந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம்.றூமி சென்று பார்வையிட்டதுடன் சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வர எதிர்பார்ப்பவர்களுக்காக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை!!

இலங்கை வர எதிர்பார்ப்பவர்களுக்காக..

கொரோனா வைரஸ் தொற்றிற்கு மத்தியில் இலங்கை வர முடியாமல் 21 நாடுகளில் சிக்கியிருந்த 5757 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் சிக்கியுள்ள ஏனைய இலங்கையர்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வெளிவிவகார நடவடிக்கை தொடர்பான மேலதிக செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

மேலும் 19ஆயிரம் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்காக காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அழைத்து வருவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையர்கள் யாராவது நாட்டிற்கு வருவதற்கு எதிர்பார்த்திருந்தால் அந்த நாட்டிலேயே பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை பெற்றிருப்பது கட்டாயமாக்குவதற்கு நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் மீண்டும் ஊரடங்கு சட்டம் : இன்று வெளியான புதிய தகவல்!!

ஊரடங்கு சட்டம்..

நாட்டில் எதிர்வரும் ஜுன் மாதம் 6ஆம் திகதி சனிக்கிழமை வரையும் அதன் பின்னரும் ஊரடங்கு சட்டம் அமுலாகும் முறை தொடர்பில் புதிய அறிக்கை ஒன்று ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய மே மாதம் 31ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் ஜுன் மாதம் 3அம் திகதி புதன் கிழமை வரை நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் வழமை போன்று இரவு 10 முதல் அதிகாலை 4 மணி வரையான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

எனினும் ஜுன் மாதம் 4ஆம் திகதி மற்றும் 5ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜுன மாதம் 6ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மீள் அறிவிப்பு வரை வழமையான இரவு 10 முதல் அதிகாலை 4 மணி வரையான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களுக்கு போக்குவரத்து சேவைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தந்தையின் சடலத்தை செல்போனில் பார்த்த மகன் மாரடைப்பால் மரணம் : சாலையிலேயே பிரிந்த உயிர்!!

தந்தையின் சடலத்தை..

இந்தியாவில் தந்தையின் சடலத்தை செல்போனில் பார்த்த மகன் மாரடைப்பால் உ யிரிழந்த சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவை சேர்ந்தவர் அஞ்சநேய நாயுடு (78). இவர் மகன் பாபு நாயுடு (50) தனது குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் அஞ்சநேய நாயுடு உடல்நலக்குறைவால் உ யிரிழந்தார். இந்த தகவல் அவர் மகன் பாபுவுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்ய பெங்களூரில் இருந்து காரில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது வழியில் பாபு வாகனத்தை நிறுத்திய பொலிசார் எங்கு செல்கிறீர்கள் என கேட்டதற்கு தந்தை இறந்த செய்தி குறித்து கூறினார். பின்னர் அதை ஆதாரமாக காட்ட உறவினருக்கு போன் செய்து தந்தையின் சடலத்தை போட்டோ எடுத்து அனுப்ப சொன்னார்.

இதையடுத்து செல்போனில் தனது தந்தையின் சடலத்தை பார்த்த போது பாபுவுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு கீழே சுருண்டு விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பொலிசார் பாபுவை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாபு ஏற்கனவே உ யிரிழந்துவிட்டதாக கூறினார்கள். தந்தையும், மகனும் அடுத்தடுத்து உ யிரிழந்த சம்பவம் அவர்களின் உறவினர்களையும், நண்பர்களையும் சோ த்தில் ஆழ்த்தியுள்ளது.