வவுனியா மாவட்ட கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவு!!

வவுனியா மாவட்ட கிரிக்கெட் அணி

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் நடாத்தப்பட்டு வரும் 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பிரிவு மூன்றிற்கான கடினப்பந்து துடுப்பாட்ட சுற்றுபோட்டியின் இறுதிச்சுற்றுப்போட்டிக்கு வவுனியா பிரண்ட்ஸ் விளையாட்டு கழகம் தகுதி பெற்றுள்ளது.

வடமாகாண ரீதியாக இடம்பெற்று வரும் குறித்த சுற்று போட்டியின் முதலாவது அரை இறுதி ஆட்டம் வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று இடம்பெற்றது. இப்போட்டியில் வவுனியா பிரண்ட்ஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து முல்லைத்தீவு பி.சி.சி அணி மோதியிருந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பிரண்ஸ் அணியினர் ஐம்பது ஓவர் பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 260 ஓட்டங்களை குவித்திருந்தது. அணி சார்பாக சாந்தன் 64 ஓட்டங்களையும் கயான் 50 ஓட்டங்களையும் பெற்றனர். பி. சி.சி அணி சார்பில் பந்து வீச்சில் விஜிதரன், அஞ்ஜியன் தலா 03 இலக்குகளை கைப்பற்றியிருந்தனர்.

261 என்ற வெற்றி இலக்கை எதிர்த்து துடுப்பெடுத்தாடிய முல்லைத்தீவு அணி 199 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்திருந்தது. வெற்றியீட்டிய வவுனியா பிரண்ட்ஸ் அணியினர் தம்புள்ளை ரங்கிரிய சர்வதேச விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள இறுதி சுற்று போட்டியில் பங்குபற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை முதல் அதிகரிக்கும் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம்!!

அரச ஊழியர்களின் சம்பளம்

நாளை முதல் அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது. 2020 ஜனவரி முதலாம் திகதி முதல் அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பள உயர்வு அதே முறையில் முன்னெடுக்கப்படும் என்று நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2016 ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் கீழ் அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் நாளை முதல் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு காரணமாக 2015 உடன் ஒப்பிடும்போது அரசு ஊழியர்களின் சம்பளம் 107 சதவீதமாக அதிகரிக்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு வெளியான சுற்றறிக்கையின் ஐந்து கட்டங்களின் கீழ் அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை, தலா இரண்டாயிரம் ரூபா வீதம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 2016ஆம் ஆண்டு முதலாம் முதல் நான்கு சந்தர்ப்பங்களில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்தாம்கட்ட சம்பள உயர்வு நாளை அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இணைந்த இலங்கை!!

இலங்கை

பயணம் செய்வதற்கு ஆ பத்தான நாடுகள் பட்டியலில் இலங்கை இடம்பிடித்துள்ளது. 2020ம் ஆண்டுக்கான சுற்றுலா பயணிகளுக்கு ஆ பத்தான நாடுகள் என்ற ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. குறித்த அறிக்கைக்கு அமைவாக பாதுகாப்பு ஸ்திரமற்ற நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பின்லாந்து, நோர்வே, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பா துகாப்பான நாடுகளாக பெயரிடப்பட்டுள்ளன. மேலும், லிபியா, சோமாலியா, வெனிசுவேலா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மிக ஆ பத்தான நாடுகள் பட்டியலில் உள்ளன.

ஆபிரிக்க வலய நாடுகள் குறைந்த சுகாதார நாடுகளாகவும், சிரியா, யேமன், ஈராக், சோமாலியா, லிபியா, நைஜீரியா ஆகிய நாடுகள் மக்கள் பா துகாப்பு குறைந்த நாடுகளாக உள்ளன. நோர்வே, கிறீன்லாந்து, ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லொவெனியா ஆகிய நாடுகள் சுற்றுலா பயணிகளுக்கு பா துகாப்பு நிறைந்த நாடுகள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக போ ராட்டம் மேற்கொண்டவர் மீது தாக்குதல்!!

வவுனியாவில்..

வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க வடக்கு கிழக்கு இணைப்பாளர் கோ.ராஜ்குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவர் மீது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக காணாமலாக்கப்பட்டோரின் வவுனியா மாவட்ட உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களிற்கும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையால் ஒன்று வவுனியாவில் நாளை இடம்பெறவுள்ளது.

குறித்த சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராகவும் வவுனியாவில் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உருவப்படத்தில் அவருக்கு எதிரான வசனம் பொறிக்கப்பட்ட பதாதையை ஏந்தியிருந்தனர்.

இந்நிலையில், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பந்தல் அமைந்துள்ள பகுதிக்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர்.

இதனையடுத்து குறித்த பகுதியில் நின்றிருந்த சங்கத்தின் இணைப்பாளர் ராஜ்குமார் அவ்விடத்தில் இருந்து புறப்பட்டு சூசைபிள்ளையார் குளம் பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அவரை பின்தொடர்ந்து சென்ற ஈழமக்கள் ஜனநாய கட்சியினர், அவரை சூசைப்பிள்ளையாகுளம் பகுதியில் வழி மறித்து கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளானவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவில் ஈ-கற்றல் நிலையமும், சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும்!!

சாதனையாளர்கள் கௌரவிப்பு

வவுனியாவில் ஈ-கற்றல் நிலையமும், சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும் ‘கல்வியால் எழுவோம்’ எனும் தொனிப்பொருளில் நேற்று (29.12.2019) நடைபெற்றது.

வவுனியா திருநாவற்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் மண்டபத்தில் வவுனியா நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக வைத்திய கலாநிதி திருமதி. திருமகள் திருவருட்செல்வன் கலந்துகொண்டு ஈ-கற்றல் நிலையத்தை திறந்து வைத்தார்.

இக்கற்றல் நிலையமானது சமத்துவத்திற்கும் நீதிக்குமான மத்திய நிலையம், தமிழ் தேசிய இளைஞர் கழகம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் என்பவற்றின் பங்களிப்புடன் நிறுவப்பட்டது.

நிகழ்வின் முன்னதாக அதிதிகள் மாலை போட்டு வரவேற்றகப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.

விளையாட்டில் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்கள், புலைமைப்பரிட்சைப் பரீட்சையில் அதிக மதிப்பெண்களை பெற்று சாதனை புரிந்த மாணவர்கள் அதிதிகளால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் திருநாவற்குளம் கிராமத்தின் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வானது திருமதி. தமிழ் செல்வன் அன்னலதா தலைமையில் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றது.

நிகழ்வில் புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான கெ.சந்திரகுலசிங்கம் மோகன், கிராம உத்தியோகத்தர்கள், இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகள், கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மகன் அருகில் படுத்துகொண்டு க ண்ணீருடன் முத்தம் கொடுக்கும் தந்தை : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

நெஞ்சை உருக்கும் சம்பவம்

அமெரிக்கவை சேர்ந்த பிரபல மேஜிக் நிபுணரின் ஐந்து வயது மகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அது தொடர்பிலான மனதை உ ருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Criss Angel என்பவர் பிரபல மேஜிக் நிபுணராக உள்ளார். Criss Angel – Shaunyl Benson தம்பதிக்கு ஜானி என்ற 5 வயது மகன் உள்ளான். ஜானி 21 மாத குழந்தையாக இருந்த போது அவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது, இதையடுத்து செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவனுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

பின்னர் ஜானிக்கு புற்றுநோய்க்கான chemotherapy செய்யப்பட்டது. இந்நிலையில் அவனுக்கு நோய் குணமானதாக மூன்றாண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்டது. ஆனால் மீண்டும் ஜானியை புற்றுநோய் தா க்கியுள்ளது. இதனால் அவன் பெற்றோர் பெரிதும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் ஜானி சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்களை Criss Angel வெளியிட்டுள்ளார். அதில் மகன் அருகில் படுத்துக்கொண்டு அவனுக்கு கண்ணீருடன் முத்தம் கொடுக்கும் புகைப்படம் நெஞ்சை உருக்கும் விதத்தில் உள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே என் மகனின் புகைப்படங்களை வெளியிட்டேன். ஜானி மிகவும் தைரியமானவன், அவனுக்கு தன்னம்பிக்கை அதிகம் என கூறினார். ஜானியின் தாய் Shaunyl Benson கூறுகையில், அடுத்த வருடம் ஜானியை சேர்க்க பள்ளியை தேடுவதற்கு பதிலாக, அவனுக்கு சிகிச்சையளிக்க வேறு மருத்துவமனையை தேடி வருகிறோம்.

பல குழந்தைகளும் இது போல புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சிகிச்சைக்கு பணம் சேர்க்கவும் நான் முயன்று வருகிறேன், ஜானிக்காக பிரார்த்தனை செய்து வரும் அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.

ஆறு ஆண்டு கால ஏக்கம் : பிள்ளை பெற்றெடுத்த திருநம்பி : நெகிழ வைத்த சம்பவம்!!

நெகிழ வைத்த சம்பவம்

பிரித்தானியாவில் திருநம்பி ஒருவர் நீண்ட ஆறு ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்னர் பெண் விந்து தானம் பெற்று அழகான பிள்ளை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

பிரித்தானியாவில் குடியிருக்கும் திருநங்கை தம்பதி ரூபன் ஷார்ப்(39) மற்றும் 28 வயதான ஜே. பிறப்பில் பெண்ணான ரூபன் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் முறைப்படி ஹார்மோன்களை எடுத்துக்கொண்டதன் மூலம்,

முகத்தில் ரோமங்கள், அழுத்தமான குரல் மற்றும் ஆண்பால் அம்சங்களை படிப்படியாக பெற்றுள்ளார். இவரது துணையான ஜே என்பவரே தற்போது ரூபனின் ஆறு ஆண்டு கால ஏக்கத்தை பூர்த்தி செய்து வைத்துள்ளார்.

தமக்கென வாரிசு வேண்டும் என முடிவு செய்த பின்னர் ரூபன் திருநங்கை மருத்துவர் ஒருவரை நாடியுள்ளார். முதற்கட்ட பரிசோதனையில் ரூபனால் கருத்தரிக்க முடியும் என்பதை மருத்துவர் உறுதி செய்துள்ளார்.

பெண்பாலாக பிறந்து ஆணாக உருமாறிய பின்னரும் அவரது கருப்பை நீக்கப்படவில்லை. கர்ப்ப கால அனுபவத்தையோ தாய்மையின் அனுபவத்தையோ பெற தாம் ஏங்கியதில்லை என கூறும் ரூபன்,

ஒரு குழந்தைக்கான ஏக்கம் நெடுங்காலமாக இருந்து வந்தது எனவும் அதை மேற்கொள்வதற்கான வசதி தற்போது உள்ளது எனவும் ரூபன் தெரிவித்துள்ளார். திருமண புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்துள்ள ரூபன், தொடர்ந்து டெஸ்டோஸ்டிரோன் மருந்து எடுத்துக் கொண்டதாகவும்,

உரிய காலம் அமைந்ததும் கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். பிள்ளை பெற்றெடுக்க வேண்டும் என்ற கருத்துக்கு ஒரு தெளிவான முடிவெடுக்க தமக்கு மூன்றாண்டுகள் ஆனது என கூறும் ரூபன்,

அதன் பின்னரே தமது துணையான ஜேவிடம் இது தொடர்பில் விவாதித்துள்ளார். மட்டுமின்றி கருத்தொற்றுமை எழாத பட்சத்தில் பிரியவும் ரூபன் முடிவெடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக ஜே இந்த முடிவை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டதாகவும், இருவரும் ஒன்றிணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுத்ததாகவும் ரூபன் பதிவு செய்துள்ளார்.

ஒரு நாள் காலையில் தாம் தூக்கத்தில் இருந்து எழுந்ததாகவும், நீண்ட ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாக மாதவிடாய் ஏற்பட்டது எனவும் ரூபன் ஸ்லாகித்துள்ளார். இது தமது நீண்ட கால ஏக்கத்தின் துவக்கப் புள்ளி என அப்போது தாம் உறுதி செய்து கொண்டதாக ரூபன் தெரிவித்துள்ளார்.

ரூபனுக்கு IUI முறைப்படி மருத்துவரால் கருவை கருப்பைக்குள் செலுத்தப்படும் சிகிச்சை நடத்தப்பட்டது. திருநங்கை நண்பர் ஒருவரே விந்து தானமும் செய்துள்ளார். மூன்று முறை கருத்தரிப்பு சிகிச்சைக்காக மட்டுமே ரூபன் தம்பதிக்கு 6,000 பவுண்டுகள் செலவாகியுள்ளது.

இந்த ஜோடிக்கு ராயல் சசெக்ஸ் கவுண்டி மருத்துவமனை செவிலியர்கள் உதவியுள்ளனர். மட்டுமின்றி ரூபன் தனது குழந்தையை சிசேரியன் மூலம் பெற்றெடுத்துள்ளார். இந்த கட்டத்தை அடைய தமக்கு ஆறு ஆண்டுகள் ஆகியது எனக் கூறும் ரூபன், ஆனால் இப்போது எங்கள் கைகளில் ஒரு குழந்தை உள்ளது, அதுவே எங்களின் இறுதி இலக்காக இருந்தது எனவும் தற்போது தாம் முழுமையானதாக உணர்வதாகவும் ரூபன் வெளிப்படுத்தியுள்ளார்.

3 மாதங்கள்…. 12 லிற்றர் தாய்ப்பால் : 5 உயிர்களைக் காப்பாற்றி நெகிழ வைத்த இளம் தாயார்!!

நெகிழ வைத்த இளம் தாயார்

இந்தியாவில் தொடர்ந்து 3 மாதங்கள் குழந்தைகளுக்கு 12 லிற்றர் தாய்ப்பாலை வழங்கி 5 பச்சிளங் குழந்தைகளின் உயிரை இளம் தாயார் ஒருவர் கா ப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 29 வயது இளம் தாய் ருஷினா மர்ஃபாஷியா. இவர் கடந்த செப்டம்பர் 20 ஆம் திகதி வியான் என்னும் ஆண் குழந்தைக்குத் தாயானார்.

குழந்தைக்குத் தேவைப்படுவதைத் தவிர, அதிகப் பால் அவருக்கு சுரந்தது. இதை உணர்ந்த ருஷினா, உயிர்ப்பாலான தாய்ப்பாலை வீணாக்காமல் தேவைப்படும் குழந்தைகளுக்கு வழங்க முடிவெடுத்தார்.

இதனையடுத்து அருகாமையில் அமைந்துள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 5 பச்சிளங் குழந்தைகளுக்கு வழங்க ஆரம்பித்தார் ருஷினா. தொடர்ந்து 3 மாதங்கள் சுமார் 12 லிற்றர் தாய்ப்பாலை வழங்கி, 5 குழந்தைகளின் உயிரைக் காத்திருக்கிறார் அவர்.

அக்குழந்தைகளின் நோய்வாய்ப்பட்ட அல்லது தாய்ப்பால் சுரக்காத தாய்மார்கள் அவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். ருஷினா மாம் (mother’s own milk) என்னும் அமைப்பிலும் அங்கம் வகித்து வருகிறார்.

இதில் உறுப்பினராக உள்ள இளம் தாய்கள் அனைவரும் தாய்ப்பாலை தானமாக அளித்து வருகின்றனர். அகமதாபாத்தில் இயங்கி வரும் இந்த அமைப்பில், 250 பேர் உறுப்பினராக உள்ளனர். இவர்கள் சார்பில் சுமார் 90 லிற்றருக்கும் மேற்பட்ட தாய்ப்பால் தானமாக அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இலங்கை பயணிகள் செய்த மோசமான வேலை!!

இலங்கை பயணிகள்..

சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் அடுத்தடுத்து நடத்திய சோ தனையில் சுமார் 1 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இலங்கையை சேர்ந்த சிங்களர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று தாய்லாந்தில் இருந்து புறப்பட்டு, நேற்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 1.15 மணிக்கு தமிழகத்தின் சென்னை சர்வதேச விமானநிலையத்திற்கு வந்தது.

அதில், தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணியாக சென்றுவிட்டு, சென்னை திரும்பிய சிவகங்கையை சேர்ந்த முகமது அசாருதீன் என்பவரை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது, அவர் தன்னுடைய உள்ளாடையில் தங்க கட்டிகளை க டத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து துபாயிலிருந்து எமிரேட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தது. அதில் விருதுநகரை சேர்ந்த அபுபக்கர் சித்திக் (42), ராமநாதபுரத்தை சேர்ந்த ஜமாலுதீன் (35) ஆகியோரிடம் இருந்தும் அதிகாரிகள் தங்ககட்டிகளை பறிமுதல் செய்தனர்.

அதன் பின் நேற்று அதிகாலை 3 மணிக்கு இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் இலங்கையை சேர்ந்த ரணசிங்கே டான் (27), மனதுங்க சுனிமால் (28) ஆகியோர் ஆசனவாயில் மறைத்து வைந்திருந்த தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனால் சென்னை விமானநிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் சுமார் 1.12 கோடிரூபாய் மதிப்புடைய 2 கிலோ 900 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சிங்கள பயணிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.

ஒரே வீட்டில் இருந்து 5 சிறுவர், சிறுமிகள் உள்ளிட்ட ஆறு பேரின் ச டலங்கள் மீட்பு : க தறி அ ழுத உறவினர்கள்!!

ஒரே வீட்டில் இருந்து..

இந்தியாவில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக ஏற்பட்ட விபத்தில் வீட்டில் இருந்து ஐந்து சிறார்கள் உள்ளிட்ட ஆறு பேர் மின்சாரம் தாக்கி உ யிரிழந்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தின் Ghaziabad-ன் Loni நகரில் உள்ள ஒரு வீட்டில் தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் இருந்த பிரிட்ஜ் குறைந்த மின்னழுத்தம் காரணமாக தீப்பிடித்து எரிந்து நிலையில் அதன் மூலம் மின்சாரம் தாக்கி பர்வீன் (40), பாத்திமா (12), ஷாயிமா (10), ரதியா (8), அப்துல் அசீம் (8) மற்றும் அப்துல் அகத் (5) ஆகியோர் உ யிரிழந்துள்ளனர்.

வீடு முழுவதும் நெருப்பு பரவியதால் அவர்களால் தப்பிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பிரிட்ஜ் முழுவதுமாக தீப்பிடித்து சாம்பலாக ஆனதாக தெரியவந்துள்ளது.

உ யிரிழந்த ஆறு பேரின் ச டலங்களையும் பொலிசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வரும் நிலையில் கூடுதல் தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓடும் ரயிலில் வெளியே தொங்கிய படி சாகசம் : கம்பத்தில் பட்டு சிதறிய இளைஞன்!!

ஓடும் ரயிலில்..

இந்தியாவில் அதிகரித்து வரும் ரயில் விபத்துகள் தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது.

அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலுக்கு வெளியே தொங்கிய படி சாகசத்தில் ஈடுபடுகிறார். இதை அவரது நண்பர் வீடியோ எடுக்கிறார். திடீரென இளைஞர் கம்பத்தில் பட்டு சிதறி ரயிலுக்குள் விழுகிறார்.

இவ்விபத்து 26ம் திகதி மும்பையில் நிகழ்ந்துள்ளது. கம்பத்தில் அடிப்பட்ட 26 வயதான இளைஞர் தில்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் உ யிரிழந்ததை ரயில்வே அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

வீடியோவுடன் ரயில்வே அமைச்சகம் பதிவிட்டதாவது, ரயிலில் சாகசம் செய்ய வேண்டாம், இது ச ட்டவிரோ தமானது மற்றும் ஆ பத்தானது. உங்கள் பா துகாப்பைப் பொருட்படுத்தாமல், ரயிலில் இருந்து வெளியேறுதல், நகரும் ரயிலில் ஏறுவது விபத்து என்று கூறப்படும் என தெரிவித்துள்ளது.

50 வீதமான இளைஞர், யுவதிகளுக்கு பா லியல் கல்வியறிவு இல்லை!!

இளைஞர், யுவதிகளுக்கு..

இலங்கையில் இளைய தலைமுறையினரின் 50 வீதமானவர்களுக்கு பா லியல் மற்றும் சமூக சுகாதாரம் தொடர்பான போதிய கல்வியறிவு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. தேசிய இளைஞர் ஆய்வு அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணி கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

பா லியல் மாத்திரமல்லாது தமது சரீரம் தொடர்பாகவும் உரிய புரிதல் இல்லை என்பதால், பா லியல் ம ரணங்கள், சிசு ம ரண வீதம், ச ட்டவி ரோத க ருக்க லைப்பு, பிரசவத்தின் போது தாய்மாரின் இ றப்பு வீதம் என்பன அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு 15 வயதுக்கும் குறைவான 75 சி றுவர்கள் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இணையத்தளங்களில் இருக்கும் மு றையற்ற பா லியல் கல்வி காரணமாக பல இளைஞர்கள் த வறான வழிகளில் சென்றுள்ளனர்.

அதேவேளை நீதிமன்றத்திற்கு வரும் சிறார் பா லியல் து ஷ்பிர யோக வ ழக்குகளில், 90 வீதமானவை அந்த சிறார்கள் அறிந்த மூத்த நபரால் அந்த கு ற்றம் இழைக்கப்பட்டுள்ளது எனவும் ஆய்வு அறிக்கையில் தெரியவந்தள்ளது.

கல்லூரியில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனை : மூன்று மாணவிகள் கர்ப்பமாக இருப்பது அம்பலம்!!

மூன்று மாணவிகள்..

இந்தியாவில் உள்ள ஒரு கல்லூரியில் மருத்துவர்கள் பொதுவான மருத்துவ பரிசோதனை செய்த போது மூன்று மாணவிகள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது.
இங்குள்ள இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது மூன்று மாணவிகள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது மூன்று மாணவிகளும் தங்கள் வீட்டருகில் வசிக்கும் நபரால் தாங்கள் ப லாத் காரம் செய்யப்பட்டதாக கூறியுள்ளனர்.

ஆனால் கு ற்றவாளிகளின் பெயரை மாணவிகள் வெளியிடவில்லை என கூறப்படுகிறது. மாணவிகள் கூறும் தகவல் உண்மையா எனவும் அப்படி உண்மை என்ற பட்சத்தில் கு ற்றவாளிகள் யார் எனவும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவிகளின் எதிர்காலம் கருதி அவர்களின் பெயர்கள் மற்றும் இன்னபிற விபரங்கள் வெளியிடப்படவில்லை.

வடக்கின் முதல் தமிழ் பெண் ஆளுநர் சத்தியப்பிரமாணம்!!

முதல் தமிழ் பெண் ஆளுநர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் வடக்கு மாகாண ஆளுநராக பீ.எஸ்.எம்.சாள்ஸ் பதவியேற்றுள்ளார். இன்று(30.12.2019) இந்த பதவியேற்பு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது வட மாகாண ஆளுநர் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.

அந்தவகையில், சுகாதார அமைச்சின் செயலாளராக செயற்பட்டு வந்த பீ.எஸ்.எம்.சாள்ஸ், வட மாகாண ஆளுநராக நியமிப்பது தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இராணுவ மேஜராக பதவியேற்ற நட்சத்திர கிரிக்கட் வீரர்!!

திசர பெரேரா

இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர கிரிக்கட் வீரரான திசர பெரேரா இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ளார். அதன்படி இலங்கை இராணுவத்தின் சுயேச்சை படையணியின் அதிகாரமிக்க கொமிசன் மேஜராக அவர் நேற்றைய தினம் நியமிக்கபட்டுள்ளார்.

இதனை இலங்கை இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கை இராணு கிரிக்கட் அணியில் விளையாடுவதற்காகவே அவர் இவ்வாறு இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னாள் இலங்கை கிரிக்கட் அணியை சார்ந்த தினேஷ் சந்திமால் இலங்கை இராணு கிரிக்கட் அணியில் விளையாடுவதற்காக இவ்வாறு இராணுவத்தின் சுயேச்சை படையணியில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு சாணி, செருப்பினாலும் விளக்குமாறாலும் அடித்து போ ராட்டம்!!

டக்ளஸ் தேவானந்தாவிற்கு..

வவுனியாவில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (30.12.2019) காலை 11 மணியளவில் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

வவுனியா ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் 1045வது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தமது போ ராட்ட கொட்டகை முன்பாக குறித்த ஆ ர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

வவுனியாவில் நாளையதினம் கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்து கலந்துரையாடி அவர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று முன்தினம் (28.12.2019) ஊடக அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில்,

அவரின் சந்திப்புக்கு எ திர்ப்பு தெரிவித்து கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போ ராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.

ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களை க டத்திய டக்ளசே , எங்கே எங்கே உறவுகள் எங்கே, வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும் ,

கையில் ஒப்படைத்த – க டத்தி செல்லப்பட்ட உறவுகள் எங்கே, ஊடக ப டுகொ லை நிகழ்த்தியவர் இந்த டக்ளஸ் போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளுடனும் ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போ ராட்டத்தின் இறுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் படத்திற்கு சாணி வீசியதுடன் விளக்குமாறு, தும்புத்தடியினால் அடித்து, காரி உமிழ்ந்து தமது எ திர்ப்பினை வெளிக்காட்டிருந்தனர்.