பிரதமர் மஹிந்த ராஜபக்ச தரப்பினர் மிளகாய் தூள் கரைசலை வீசி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மிளகாய்தூள் கரைசல் வீசப்பட்ட புகைப்படங்களையும் திலகராஜா முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜே.வி.பி.யின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் ஆகியோர் மீது இந்த மிளகாய் தூள் சரைசல் வீசி எறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை நாடாளுமன்றுக்குள் தற்போது பொலிஸ் படை அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளது. பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நாடாளுமன்றுக்குள் செங்கோளுடன் சபாநாயகர் வருகைத்தந்துள்ளார்.
எனினும் மஹிந்த அணியினர் அவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். சபாநாயகரின் ஆசனத்தையும் வீசியுள்ளனர்.
இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டு சபாநாயகர் வெளியில் சென்று விட்டார். சபாநாயகரை பொலிஸ் படையினர் பாதுகாப்பாக வெளியில் கொண்டு சென்றுள்ளனர்.
இதன்போது பொலிஸாருக்கும், மஹிந்த அணியினருக்கும் இடையில் ஒரு யுத்தமே நடைபெற்றதைப் போன்று இன்றைய நடாளுமன்றம் காணப்பட்டது.
ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்றம் : பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றத்திற்கு சபாநாயகர் வருகை தந்து வாய்மூல வாக்கெடுப்பினை ஆரம்பித்திருந்தார்.
எனினும் மஹிந்த அணியினர் சபாநாயகரின் ஆசனத்தை தூக்கிய நிலையில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக தெரிவித்து விட்டு களமிறக்கப்பட்டிருந்த விசேட பொலிஸாரின் பாதுகாப்புடன் சபாநாயகர் அங்கிருந்து வெளியேறினார்.
பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றத்திற்கு சபாநாயகர் வருகை தந்து வாய்மூல வாக்கெடுப்பினை ஆரம்பித்திருந்தார்.
எனினும் மஹிந்த அணியினர் சபாநாயகரின் ஆசனத்தை தூக்கிய நிலையில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக தெரிவித்து விட்டு களமிறக்கப்பட்டிருந்த விசேட பொலிஸாரின் பாதுகாப்புடன் சபாநாயகர் அங்கிருந்து வெளியேறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் மன்னிப்பு கோருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றைய வன்முறை சம்பவத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் குறித்த வருத்தம் அடைவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் தனது பேஸ்புக் ஊடாக இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கமைய மஹிந்தவுடன் கலந்துரையாட சென்ற போது, தன் மீது தாக்குதல் நடத்தியதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கலந்துரையாடல் மேற்கொண்டிருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தை தன்னை தள்ளிட்டு தாக்க முயற்சித்தார் என ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் இந்த சம்பவம் தொடர்பில் நாமல் ராஜபக்ச தன்னிடம் மன்னிப்பு கேட்டமையினால் அந்த பிரச்சினை அவ்விடத்திலேயே நிறைவுக்கு வந்ததாக சம்பிக்க மேலும் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில் திருநங்கைகள் 4 பேர் திடீரென ஆடைகளை களைந்து நிர்வாணமாக நடனமாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி யமுனை நதிக்கரையில் கட்டப்பட்டுள்ள சிக்னேச்சர் என்ற புதிய பாலத்தை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 4ம் தேதியன்று திறந்து வைத்தார். பாலம் திறக்கப்பட்டதிலிருந்து ஏராளமான பொதுமக்கள் ஆபத்து விளைவிக்கும் வகையில் புகைப்படம் எடுத்து வருகின்றனர். அவர்களை தீவிரமாக கண்காணித்து பொலிஸாரும் கைது செய்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருநங்கைகள் 4 பேர் நள்ளிரவு நேரத்தில் திடீரென ஆடைகளை களைந்து, புதிய பாலத்தில் நிர்வாணமாக நடனமாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவியது.
இந்த வீடியோ பொலிஸார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து, 4 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ எந்த நாளில் எடுக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கஜா புயலால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கஜா புயல், நாகை வேதாரண்யம் இடையே நள்ளிரவு 12.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கியது. இதன் காரணமாக நாகை, கடலூர், காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. புயல் கரையை கடக்கத் தொடங்கிய போது புதுச்சேரியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
வேதாரண்யம், நாகை, கடலூர் உள்ளிட்ட இடங்களில் 100 முதல் 130 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் சூறைக்காற்று வீசியது. அதிகாலை 2 மணியளவில் கஜா புயலின் கண் பகுதி கரையை கடந்த பின், காற்றின் வேகம் அதிகரித்தது.
கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூரில் பெரும்பாலான பகுதிகளில் சூறைக்காற்றால் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. இதே போல் மின்கம்பங்களும் சேதமடைந்தன. காரைக்காலில் மின்மாற்றி மீது மரம் சாய்ந்து விழுந்ததில் மின்மாற்றி வெடித்துச் சிதறியது.
இதனால் 6 மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் தொலைதொடர்பும் பாதிக்கப்பட்டது. சாலைகளில் மரங்கள் விழுந்து கிடப்பதால் பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கஜா புயலால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. நாகையில் 4 ஆயிரம், தஞ்சையில் 5 ஆயிரம், திருவாரூரில் 3 ஆயிரம் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. நாகை மாவட்டத்தில் மட்டும் 12 துணை மின் நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
சேதங்களை பார்வையிடவும் மின் சீரமைப்புப் பணிகளை பார்வையிடவும் நாகை மாவட்டத்துக்கு செல்ல இருப்பதாக தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கரையைக் கடந்தது ‘கஜா’ : கஜா புயல் முழுமையாக கரையை கடந்ததாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதிராம்பட்டினத்தில் 100 முதல் 110 கி.மீ. வரையிலான வேகத்தில் கஜா புயல் கரையை கடந்தது. தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
கஜா புயலின் கண்பகுதி நாகை வேதாரண்யம் இடையே முழுமையாக நள்ளிரவு 12.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கியது. இதன் காரண மாக நாகை, கடலூர், காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. புயல்
கரையை கடக்கத் தொடங்கிய போது புதுச்சேரியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. வேதாரண்யம், நாகை, கடலூர் உள்ளிட்ட இடங்களில் 100 முதல் 130 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் சூறைக்காற்று வீசியது. அதிகாலை 2 மணியளவில் கஜா புயலின் கண் பகுதி கரையை கடந்த பின், காற்றின் வேகம் அதிகரித்தது.
கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூரில் பெரும்பாலான பகுதிகளில் சூறைக்காற்றால் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. இதே போல் மின்கம்பங்க ளும் சேதமடைந்தன. காரைக்காலில் மின்மாற்றி மீது மரம் சாய்ந்து விழுந்ததில் மின்மாற்றி வெடித்துச் சிதறியது.
இதனால் 6 மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் தொலைதொடர்பும் பாதிக்கப்பட்டது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த சுமார் 81 ஆயிரம் பேர் அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த கஜா புயல் 6 மணி நேரத்தில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கஜா புயல் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கஜா புயல் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளது. கஜா புயல் காரணமாக 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இரவு 12 மணியில் இருந்து 3 மணிக்கு இடையில் கஜா புயல் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது, 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
இந்நிலையில் கஜா புயல் காரணமாக பட்டுக்கோட்டை அருகே சிவகொல்லையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ரமேஷ், சதீஷ், அய்யாதுரை, தினேஷ் ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கஜா புயல் எப்படி கரையை கடந்தது என்பதை காட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையை கஜா புயல் புரட்டி போட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலானது இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே பயங்கர வேகத்தில் கரையை கடந்தது. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
ஒரு வீடியோவில் புயல் மிக அதிக வேகத்தில் சென்றது தெளிவாக தெரிகிறது. கஜா புயலின் கண் பகுதி சரியாக கரையை கடக்கும் சமயத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் வேதாரண்யத்தில் கரையை கடந்த போது, இன்னொரு வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. புயலின் வேகத்தில் மரங்கள் அங்கு சாய்ந்தது.
அடுத்த வீடியோவில் சரியாக 110 கிமீ வேகத்தில் வேதாரண்யம் அருகே கரையை கடந்த காட்சிகள் தத்ரூபமாக பதிவாகியுள்ளது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் வெள்ளிக்கிழமை ஒரு மறக்க முடியாத நாளாக பதிவாகவுள்ளது.
இலங்கையில் அரசியலில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில் இன்றைய தினம் ஒரு தீர்மானமிக்க நாளாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக நிகழ்ந்த அரசியல் மாற்றங்களும் அனைத்தும் வெள்ளிக்கிழமைகளிலேயே நிகழ்ந்துள்ளமையினால் இன்றைய தினமும் ஒரு தீர்மானமிக்க சம்பவம் இடம்பெறும் என பல தரப்பினரால் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு ஆரம்பமாக கடந்த 26ம் திகதி வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்து கவிழ்க்கப்பட்டார்.
அதேநாளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக பல்வேறு வடிவங்களில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன.
இந்த நெருக்கடிகளை தீர்வு காணும் நோக்கில் கடந்த 9ம் திகதியான வெள்ளிக்கிழமை அதிரடியாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
இதன் காரணமாக அடுத்த சில நாட்களில் ஏற்பட்ட நீதிக்கான புரட்சியில் ஆளும் தரப்பு தோல்வி அடைந்து எதிர் தரப்பினர் தமது பலத்தை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
இந்நிலையில் 16ம் திகதியான இன்று வெள்ளிக்கிழமை மற்றுமொரு தீர்மானமிக்க முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமையான இன்று ஒரு புரட்சி நடக்கும் என அரசியல் தரப்பு மற்றும் பொது மக்கள் தரப்பினரால் நம்பப்படுகின்றது.
இன்றையதினம் 1.30 மணியளவில் மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ளது. இதன்போது புதிதாக பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையிலான தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பினை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதன் காரணமாக இன்றைய தினம் பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ நீக்கப்பட்டு, மீண்டும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உறுப்பினர்களின் பெயர்களை அழைத்து வாக்கெடுப்பை நடத்துமாறு சபாநாயகர், கட்சித் தலைவர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சபை கூடுகின்ற போது மேற்படி வாக்கெடுப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற குழு இன்று காலை 9 மணிக்கு அவசரமாக கூடுகின்றது.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டமும், ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற குழுக்கூட்டமும், ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழுக்கூட்டமும் இன்று காலை 10 மணிக்கு தனித்தனியாக நடைபெறவுள்ளன.
மேலும், இன்று முற்பகல் 11 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டமும் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அரசியல் பரபரப்பாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
சமகால சபாநாயகர் கரு ஜயசூரியவை கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்ட மோதல் சம்பவத்தின் போது, சபாநாயகரை கொலை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
சபாநாயகருக்கு பாரிய காயங்கள் ஏற்படும் வகையில் தாக்குதவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. ராஜபக்ஷ தரப்பின் சில உறுப்பினர்களின் அச்சுறுத்தல் இந்த சந்தேகத்தை ஏற்பட்டுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏதாவது ஒரு இடத்தில் சபாநாயகருக்கு பாரிய காயம் ஏற்பட்டால் நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் முழுமையாக செயலிழந்து போய்விடும். இதன்போது புதிய சபாநாயகர் ஒருவரை நியமித்து கொள்ளும் முயற்சி ஒன்று ராஜபக்ச தரப்பினரால் நிச்சியமாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் என அவர் குறிப்ப்பிட்டுள்ளார்.
அதற்கமைய மஹிந்தவின் பிரதமர் பதவியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். இந்த நிலைமையில் சபாநாயகரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் சபாநாயகருக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோருவதில் பயனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக சபாநாயகரின் செயற்பாடுகள் இலங்கையின் அரசியலை தீர்மானிக்கும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சபாநாயகர் பக்கச் சார்ப்பாக நடந்து கொள்வதாக மஹிந்த தரப்பினரால் குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் மாணவர்கள் தங்கள் பாடசாலைக்கும் அதிபருக்கும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இன்று (16.11) பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் மாணவர்களுக்கு உணவிற்காக வழங்கப்பட்ட மீன் ரின் உணவுப் பொருளில் பாடசாலை அதிபர் ஊழல் செய்ததாக வெளியாகிய செய்தியை அடுத்து தமது பாடசாலைக்கும் அதிபருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியவர்களை கைது செய்யக் கோரி குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பாடசாலையை அவமானப்படுத்தும் நாசகாரர்களே இன்றுடன் உங்கள் சேட்டையை நிறுத்துங்கள், இன்றுதான் ஆரம்பம் இது இப்படியே தொடர்ந்தால் ஏற்படும் பூகம்பம், கல்விக்கூடம் கற்பதற்கு மீன் சந்தையல்ல, கல்விக்காக பாடுபடும் ஆசான்களை முகவரியற்ற முகநூலே கேவலப்படுத்தாதே போன்ற பதாதைகளை தாங்கி நின்றனர்.
பாடசாலை மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது இரு தரப்பினருக்கு இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டதுடன் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்ட நிலையில் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போக்குவரத்து பொலிசார் வவுனியா பொலிஸ் தலைமையகத்துக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்திருந்த வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பாடசாலை அதிபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் பாடசாலைக்கு அபகீர்த்தி ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத கால சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று தீர்ப்பளித்தார்.
ஒரு மாத கால சிறைத் தண்டனையை அனுபவிக்க மாணவனை சான்று பெற்ற சீர்திருத்தப் பாடசாலையில் சேர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் கட்டளை வழங்கியது.
ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாண நகர் பகுதியில் 18 வயதுடைய மாணவன் ஒருவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
அவர் யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரி ஒன்றின் மாணவன் என்று பொலிஸார் மன்றுக்குத் தெரிவித்தனர்.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றில் மாணவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதனால் அவருக்கு ஒரு மாதகால சிறைத் தண்டனையை விதித்த யாழ்ப்பாணம் நீதிவான், மாணவனை அச்சுவேலி சீர்திருத்தப் பாடசாலையில் சேர்ப்பித்து தண்டனைக் காலத்தைக கழிக்க அனுமதியளித்தார்.
யாழில் கஜா புயலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை தற்போது பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள கஜா புயல் இன்று பின்னிரவு 2.30 மணியளவில் கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்திலும் அதிக பாதிப்புக்களை செலுத்தியுள்ள கஜா புயல் இலங்கையின், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளில் தாக்கம் செலுத்தும் என எதிர்வுகூறப்பட்டிருந்தது.
இதன்படி, தற்போது யாழ்ப்பாணத்தில் மிக கடுமையான மழை பெய்து வருவதாகவும், பலத்த காற்று வீசி வருவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் கஜா புயலின் தாக்கங்கள் சில ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் சேத விபரங்கள் குறித்து ஏதும் தகவல்கள் வெளியிடப்படவில்லை.