திருமணமாகி 21 நாளில் மாப்பிள்ளையை கத்தியால் குத்திய பெண்!!

ஹைதராபாத்தில் பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததால் மாப்பிள்ளையை கத்தியால் குத்திய புதுப்பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நீலிமாவுக்கும் – நவீன் என்பவருக்கும் மே 9 ஆம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் நீலிமாவுக்கு சிறிதும் விருப்பம் இல்லை. பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைத்துள்ளனர்.

இதனால், வெறுப்பாக வாழ்ந்து வந்த நீலிமா, சமபவம் நடைபெற்ற அன்று கத்தியை எடுதது தனது கணவரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த நவீன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நீலிமாவை பொலிசார் கைது செய்துள்ளனர். திருமணமாகி 21 நாட்களிலேயே இப்பெண் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டுள்ளது மாப்பிள்ளை வீட்டாதை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நான் பார்க்கும் கடைசி முகம் : துப்பாக்கிச் சூட்டில் பலியான மாணவியின் உருக வைக்கும் கவிதை!!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான மாணவி ஸ்னோலினின் எழுதிய கவிதை வரிகள் உருக வைத்துள்ளது, ஸ்னோலின், தனது தாய் மீது கொண்டிருந்த அன்பை கவிதையாக வடித்துள்ளார்.

இன்னமும் தூங்கி எழுந்ததும் அம்மாவின் முகத்தில்தான் விழிக்க ஆசைப்படுகிறேன் என்று ஆரம்பிக்கும் அந்த கவிதையில், தூங்கும் முன் அம்மாவை இமைக்காமல் பார்த்துவிட்டே தூங்குவதாகவும், தூக்கத்திலேயே உயிர் பிரிந்தாலும் கடைசியாக பார்த்தது அம்மாவின் முகமாகத்தான் இருக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டிருக்கிறார் ஸ்னோலின்.

துப்பாக்கிச்சூட்டில் செவிலியர் படிப்பு படிக்கும் 17 வயது மாணவி ஸ்னோலின் துப்பாக்கிகுண்டுக்கு இரையானார். தன் மண்ணுக்கும் மக்களின் நலனுக்காகவும் போராட்ட களம் கண்டுள்ளார் ஸ்நோலின். வீறுநடை போட்டு முன் வரிசையில் சென்றவர் இறுதியில் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகி விட்டார்.

ஏழு வயது மகனை இரக்கமின்றி கொலை செய்த கொடூர தாய்!!

இந்தியாவில் 14 வயது சிறுவனுடன் இளம் தாய்க்கு தகாத உறவு இருந்த நிலையில் தனது ஏழு வயது மகனை கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்தவர் கொஸ்தோ மண்டல். இவர் மனைவி சகாரி (28). தம்பதிக்கு சதன் மண்டல் (7) என்ற மகன் உள்ளான். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சதன் அங்குள்ள சாக்கடையில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு சடலமாக கிடந்துள்ளான்.

சடலத்தை கைப்பற்றிய பொலிசார் இது குறித்து விசாரணை நடத்திய நிலையில் சதனின் தாய் சகாரி அவரை கொலை செய்ததது தெரியவந்தது.

இது குறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் சகாரியின் 14 வயதான உறவுக்கார சிறுவனுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

சகாரியும், அந்த சிறுவனும் தனிமையில் இருப்பதை சதன் பார்த்துள்ளான், இதையடுத்து கோபமடைந்த அவன் இது குறித்து தந்தை கொஸ்தோவிடம் கூறுவேன் என தாயை மிரட்டியுள்ளான்.

இதனால் ஆத்திரமடைந்த சகாரி அந்த சிறுவனுடன் சேர்ந்து சதனை கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி வீசியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சகாரி மற்றும் அவர் கள்ளக்காதலனான சிறுவனையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையில் உயிரிழந்த சதனின் சடலத்தை பார்த்து அவன் உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரின் கண்களை குளமாக்கியது.

வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர மாணவர்கள் தேசிய ரீதியில் சாதனை!!

 

வவுனியா – நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயம் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளது. அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான கைப்பணி போட்டியை கல்வி அமைச்சு மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை என்பன இணைந்து “சில்ப நவோத 2018” எனும் தொனிப்பொருளில் நடத்தியிருந்தன.

இதில், அகில இலங்கை ரீதியில் பல பாடசாலைகள் பங்கு பற்றிய போதும் வடக்கிலிருந்து கலந்து கொண்ட பாடசாலைகளில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயம் அதிக வெற்றிகளை தனதாக்கி கொண்டது.

அந்த வகையில், சிரேஷ்ட பிரிவில் உ.ரதுஜினி தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தையும், கனிஸ்ட பிரிவில் பி.பிரியகெளரி தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும், தி.கபிசன் ஆறுதல் பரிசினையும் பெற்று கொண்டுள்ளனர்.

இந்த பரிசுகள் கடந்த திங்கள் கிழமை பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆறுமாத குழந்தையை வெட்டி கொலை செய்த தந்தை தற்கொலை!!

பிங்கிரிய இஹல பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தனது குடும்பத்திலுள்ள மூவரை வெட்டி காயப்படுத்தியதுடன் தனது ஆறு மாதக் குழந்தையையும் கொலை செய்துள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த சந்தேக நபர் தனது மனைவி, ஆறு மாதக் குழந்தை மற்றும் மனைவியின் பெற்றோர் போன்றவர்களையே இவ்வாறு வெட்டிக் காயப்படுத்தியதுடன் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவரால் வெட்டுக் காயத்துக்கு இலக்கான குழந்தை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இதேவேளை காயமடைந்த மனைவி, மனைவியின் தந்தை, தாய் ஆகியோர் ஆபத்தான நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

புதையல் எடுக்கச் சென்ற பெண் உட்பட்ட மூவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இலங்கையின் புராதன தொல்பொருட்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் புதையல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாக மாட்டிக் கொண்டுள்ளனர். அரலகங்வில, ஜயமுதுகம பகுதியில் பெண் உட்பட மூவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

புதையல் அகழ்வில் ஈடுபடுவதாக அரலகங்வில பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சோதனையின் போது தோட்டம் ஒன்றில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மற்றும் பூஜை பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் அரலகங்வில, ஜயமுதுகம மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். இது போன்று பல இடங்களில் அண்மைக்காலமாக புதையல் அகழ்வில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவிலான தண்டப்பணமும் அறவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்றும், மீறிச் செயற்படுவோர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தூக்கி எறியப்பட்ட சிங்களவர் : ஹீரோவாக பாய்ந்த தமிழ் இளைஞன் : வியந்து போன பொலிஸார்!!

கொழும்பில் சிங்கள நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை தமிழ் இளைஞன் ஒருவர் அதிரடியாக செயற்பட்டு பிடித்துள்ளார்.

மஹரகம நகர சபைக்கு முன்னால் உள்ள மஞ்சள் கோட்டில் சிங்களவரை, மோட்டார் வாகனத்தினால் மோதி விட்டு தப்பி சென்றவரை தமிழ் இளைஞன் துரத்திப் பிடித்துள்ளார். மஹரகம மாநகர சபையின் பாதுகாப்பு அதிகாரி செயற்பட்ட ஒருவரே இவ்வாறு பாதிப்படைந்துள்ளார்.

பாதுகாப்பு அதிகாரி, சந்தேகநபரின் மோட்டார் வாகனத்தில் மோதுண்டன போது 68 மீற்றர் தூரம் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பாதுகாப்பு அதிகாரி களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்த போது உயிரிழந்துள்ளார் என மஹரகம பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பாதுகாப்பு அதிகாரி மஹரகம மாநகர சபைக்கு முன்னால் உள்ள ஹய்லெவல் வீதியை கடக்கும் முயற்சித்துள்ளார். அங்கு கொட்டாவ பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி வேகமாக சென்ற மோட்டார் வாகனம் ஒன்று பாதுகாப்பு அதிகாரியை மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இதனை அவதானித்த மோட்டார் வாகனத்தின் தமிழ் சாரதி ஒருவர், தப்பிச் சென்ற சாரதியை துரத்தி சென்றுள்ளார். மஹரகம பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து சந்தேக நபரை தமிழ் சாரதி மடக்கி பிடித்துள்ளார்.

மடக்கி பிடித்த சந்தேகநபரை தனது வாகனத்திலேயே ஏற்றி சென்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கு தமிழ் சாரதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சந்தேகநபரை பரிசோதித்த போது அவர் அதிகளவு மதுபானம் அருந்தியிருந்தார் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கருப்பையா நிர்மலசந்திரன் என்ற தமிழர் ஒருவரே சந்தேக நபரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

சமகாலத்தில் வாகன விபத்துக்கள் தொடர்பில் சாட்சி வழங்குவதற்கே தயங்கும் நபர்களுக்கு மத்தியில் தப்பிச் சென்ற சாரதியை பிடிப்பதற்கு முயற்சித்த தமிழ் இளைஞனை பாராட்ட வேண்டும் என மஹரகம பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி புத்திக்க அபேகோண் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வவுனியா மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம்!!

வவுனியா மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு 100 க்கும் அதிகமான பெண்கள் இன்று (30.05) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

அரசியல்வாதி ஒருவர் தையல் இயந்திரம் வழங்குவதாக தெரிவித்து தங்களை ஏமாற்றிவிட்டதாக தெரிவித்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா பிரதேசத்திலுள்ள உலுக்குளம், நெலுக்குளம், மகாகச்சக்கொடி பிரதேசங்களிலுள்ள ஐந்து தையல் பயிற்சி நிலையங்களில் கடந்த ஆறு மாத காலங்கள் தையல் பயிற்சி பெற்று வந்த பெண்களே அரசியல்வாதி ஒருவர் பயிற்சியின் இறுதியில் தையல் இயந்திரம் வழங்குவதாக தெரிவித்து ஏமாற்றியதாக தெரிவித்துள்ளனர்.

இச் செயற்பாடு குறித்து வவுனியா அரசாங்க அதிபரிடம் எழுத்து மூலம் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளதுடன் அரசாங்க அதிபர் இப்பிரச்சனையை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

10 வயது சிறுவனுக்கு 8 காதலிகள் : அதிர்ச்சியடைந்த பெற்றோர்!!

இன்று பெரும்பாலான குழந்தைகளின் கையில் கைப்பேசி இருக்கிறது. தங்களது குழந்தை கைப்பேசியை தானாக இயக்குவதும் விளையாடுவதும் பெற்றோருக்குப் பெருமையாக இருக்கிறது. சிறு வயதில் முன்னோர்கள் விளையாடிய எல்லா விளையாட்டுகளும் செல்போனில் கிடைத்துவிடுகின்றன.

இதனால் வெளியே சென்று விளையாடுவதற்கான ஆர்வம் குறைந்துபோகிறது. கைப்பேசியில் விளையாட்டுகளை விளையாடி, விளையாடி அலுத்துவிடும்போது அவர்களின் கவனம் சமூக வலைதளங்கள் பக்கம் திரும்புகிறது.

பள்ளியில் எந்தக் குழந்தைக்கு பேஸ்புக்கில் அதிக நண்பர்கள் இருக்கிறார்களோ, அதுதான் மற்ற குழந்தைகளுக்கு ஹீரோ. விடுமுறை தினங்களில் வாட்ஸ்அப்பில் நாள் முழுக்க சாட் செய்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்துகொள்கிறார்கள்.

எல்லாத் தகவல்களையும் கொட்டித்தரும் இணையத்தில் தேவையற்ற செய்திகளுக்குப் பின்னால் போகிறார்கள்.

ஆண், பெண் உடல் பற்றிய புரிதல்கள் இன்றி தவறான இணையதளங்களில் சிக்கிக்கொள்கிறார்கள். காதல், காமம் போன்ற விஷயங்கள் மிக இளம் வயதிலேயே இவர்கள் மூளைக்குள் சென்றுவிடுகிறது.

ஆணும் பெண்ணும் தங்களை நன்றாகப் புரிந்துகொண்டு இயல்பாக மலரவேண்டிய காதலை யாரென்றே தெரியாதவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பேஸ்புக்கில் காதலித்து, பேஸ்புக்கிலேயே பிரேக் செய்துகொள்கிறார்கள்.

பேஸ்புக் மூலம் முகம் தெரியாத ஆட்களிடம் பழகும் சிறார்கள், வாழ்க்கையை சீரழிக்கும் சில பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்கிறார்கள்.

10 வயது சிறுவனுக்கு பேஸ்புக்கில் 8 காதலிகள் இருக்கிறார்கள். பள்ளி முடிந்து வீடு திரும்பும் சிறுவன் மாறி மாறி இவர்களுடன் சாட்டிங், ஆபாச புகைப்படங்கள் பகிர்ந்துகொள்ளுதல் என பேஸ்புக்கிலேயே இவனது வாழ்க்கை சென்றுள்ளது.

காதல் என்றால் என்ன என்பது கூட விவரம் தெரியாத இச்சிறுவன், பேஸ்புக்கில் தனக்கு வரும் காதல் தூதுக்கு சம்மதம் தெரிவித்து, அவர்களுடன் காதல் மொழியில் உரையாடுகிறான். நாட்கள் செல்ல, மோசமான உரையாடல்கள், ஆபாச புகைப்படங்களை பகிர்ந்துகொள்ள வழிவகுக்கின்றன.

பெற்றோரும் பள்ளி விடுமுறை நாட்களில்கூட அலுவலக வேலையே கதியாக இருப்பதால், அவர்களும் குழந்தையின் அருகாமையில் இருப்பதில்லை.

இப்படிப்பட்ட குழந்தைகளை தனிமை வாட்ட ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் சமூகவலைதளங்கள், கைப்பேசி அவர்களின் உற்றத் தோழர்களாக மாறிவிடுகின்றன.

பதினெட்டு வயதுக்குள்ளான குழந்தைகளுக்கு கைப்பேசி வாங்கிக்கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். வீட்டை விட்டு வெளியில் சென்று விளையாட குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் பேஸ்புக் மனிதர்களை மறந்து உண்மையான மனிதர்களைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

ஆணுக்கும் பெண்ணுக்குமான உடல் வேறுபாடுகள், உறவுநிலை மேம்பாடு குறித்து ஆசிரியர்கள் பள்ளிகளில் பேசலாம். இது, குழந்தைகளுக்கு ஓரளவுக்குத் தெளிவைக் கொடுக்கும்.

கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை : அதிரடியாக பரவும் ரஷ்ய வைரஸ்!!

ரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் FBI ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.

VPNFilter என்று அழைக்கப்படும் இந்த மால்வேரால் இதுவரை 500,000 கருவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மால்வேரானது, தொடர்புகளை சேகரிக்கவும் பிற கணினிகளைத் தாக்கவும் அது எந்த கருவியைத் தாக்கியுள்ளதோ அந்தக் கருவியை அழிக்கவும் கூடியது.

கணினி பயன்படுத்துவோர் தங்கள் Routerகளை Re-Boot செய்யுமாறு FBI அறிவுறுத்தியுள்ளது. இந்த மால்வேர் தாக்குதல் Router-ன் Memory-யில் தன்னையே அப்லோட் செய்து கொள்கிறது.

Re-Boot செய்யும்போது Router-ன் Memory அழிக்கப்படுவதால் தற்காலிகமாக மால்வேர் தொற்று அகற்றப்படுகிறது. என்றாலும் முழுவதுமாக இந்த மால்வேரை அகற்ற Router-களை Factory Settings ரீசெட் செய்வது ஒன்றுதான் வழியாகும்.

இந்த வருட ஐபிஎல் தொடரில் சாதித்த தமிழர்கள் : அவர்கள் வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

இந்தியாவில் இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் சம்பியன் பட்டத்தை சென்னை அணி வென்றுள்ளது. வயதான அணி என்று தங்கள் மீது விழுந்த விமர்சனங்களுக்கு இதன் மூலம் சென்னை அணி பதிலடி கொடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 தமிழக வீரர்கள் ஒவ்வொரு அணிக்கும் வாங்கப்பட்டனர். அவர்களில் அஸ்வின் பஞ்சாப் அணிக்காக 7.60 கோடிக்கு வாங்கப்பட்டார். இவரே இந்தாண்டு ஐபிஎல் தொடரில் தமிழக வீரர்களில் அதிக சம்பளம் வாங்கிய வீரர் ஆவார்.

அஸ்வின் (பஞ்சாப்) – ரூ. 7.60 கோடி, தினேஷ் கார்த்திக் (கொல்கத்தா) – ரூ. 7.40 கோடி, விஜய் சங்கர் (தில்லி) -ரூ. 3.20 கோடி, வாஷிங்டன் சுந்தர் (பெங்களூர்) – ரூ. 3.20 கோடி, எம். அஸ்வின் (பெங்களூர்) – ரூ. 2.20 கோடி, முரளி விஜய் (சென்னை) – ரூ. 2 கோடி, நடராஜன் (ஹைதராபாத்) – ரூ. 40 லட்சம், ஜெகதீசன் (சென்னை) – ரூ. 20 லட்சம்

இதில் 8 தமிழக வீரர்களில் இருவருக்கு மட்டும் ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. சென்னை அணிக்குத் தேர்வான ஜெகதீசன் மற்றும் ஹைதராபாத் அணிக்கு தேர்வான டி.நடராஜன்.

தினேஷ் கார்த்திக் : இதில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி இந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதனால் இவரே அடுத்த ஆண்டும் நிச்சயமாக கொல்கத்தா அணியின் தலைவராக இருப்பார். கொல்கத்தா அணியில் இந்த வருடம் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு.

அஸ்வின் : பஞ்சாப் அணியின் தலைவரான அஸ்வின், பிளே ஆப் வாய்ப்பைக் கடைசி சமயத்தில் தவறவிட்டார். இதனால் அடுத்த வருடமும் இவரே தலைவராக நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாததால் இந்திய அணிக்கு அஸ்வினால் தெரிவாக முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சங்கர் : டெல்லி அணிக்காக விளையாடி விஜய் சங்கர் 13 ஆட்டங்களில் 212 ஒட்டங்கள் எடுத்ததுடன் ஸ்டிரைக் ரேட் 143.24 ஆக வைத்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இரு ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடி 28 பந்துகளில் 36 ஓட்டங்கள், 31 பந்துகளில் 54 ஓட்டங்கள் எடுத்து அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

இவர்களைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் அந்த அளவிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தருக்கு இந்த ஐபிஎல் தொடர் அவரை மறக்கும் அளவிற்கு அமைந்து விட்டது.

மரணம் நடக்க இருப்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் அபூர்வ இளம்பெண்!!

அவுஸ்திரேலியாவில் உள்ள இளம்பெண் ஒருவர் தமக்கு வாசனையால் மரணம் நடக்க இருப்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் குடியிருக்கும் அரி காலா என்ற 24 வயது இளம்பெண்ணே குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

உளவியல் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் இவர், தனது 12-வது வயதில் முதன் முறையாக தமது உறவினர் இறப்பதற்கு முன்னர் அந்த வேறுபட்ட வாசனையை அனுபவித்ததாக கூறியுள்ளார்.

நோய்வாய்ப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்த இவரது உறனிரின் கடைசி நாட்களில் இவர் அவருக்கு பணிவிடை செய்து வந்துள்ளார். அவர் இறப்பதற்கு சில மணி நேரம் முன்னர், அவர் படுத்திருந்த அறையில் அழுகிய பழத்தின் வாசனை பரவியுள்ளது.

இதற்கு முன்னர் அவ்வாறான வாசனையை அவர் அனுபவித்தது இல்லை எனவும், அந்த அறையில் இருந்த அனைவரும் அதை அனுபவித்திருக்கலாம் எனவும் கருதியுள்ளார். ஆனால் உறவினர்கள் எவரும் அந்த வாசனையை அனுபவித்திருக்கவில்லை.

பின்னர் பல மாதங்கள் கடந்த நிலையில், பல முறை இதே வாசனையை பலர் இறப்பதற்கு முன்னர் இவர் அனுபவித்திருக்கிறார்.

ஆனால் இதை வெளியே தெரிவிக்க மறுக்கும் அவர், தமது விருப்ப பணியான உளவியல் பயிற்சி வழங்குவதிலையே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

மக்கள் இதுபோன்ற தகவலை ஒருபோதும் விரும்பமாட்டார்கள் என்பதே தமது இந்த முடிவுக்கு காரணம் எனவும் அரி காலா தெரிவித்துள்ளார்.

எலுமிச்சம்பழச் சாறு விற்று 6000 டொலர்கள் சம்பாதித்த சிறுவன் : மனதை உருக்கும் காரணம்!!

தென் கரோலினாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது தம்பியின் மருத்துவச் செலவுக்காக எலுமிச்சம்பழச் சாறு விற்று 6000 டொலர்கள் சம்பாதித்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஆண்ட்ரூவின் செல்லத்தம்பி டைலான், ஒரு அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ளான், அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நரம்பு மண்டலம் தொடர்பான நோய்.

தனது தம்பியின் மருத்துவச் செலவுக்காக தனது பெற்றோர் படும் துயரத்தைக் காணச் சகிக்காத ஆண்ட்ரு அவர்களுக்கு உதவ முடிவு செய்தான்.

அதற்காக அவன் எலுமிச்சம்பழச் சாறு தயாரித்து அதையும் தனது தம்பியின் பெயர் பொறித்த T-ஷர்ட்களையும் விற்கத் தொடங்கினான்.

இரண்டே மணி நேரத்தில் அவனுக்கு 5,680 டொலர்கள் கிடைத்தன, தனது தம்பியின் மருத்துவச் செலவுக்காக உதவுவதோடு தனது தம்பிக்காக ஒரு டெடி பேரும் வாங்க விரும்புவதாக ஆண்ட்ரூ தெரிவித்துள்ளான்.

42 வயதில் 21வது குழந்தை பெற்றெடுக்கும் பெண்!!

பிரித்தானியாவில் 20 குழந்தைகள் பெற்றெடுத்த பெண் தற்போது மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். பிரித்தானியாவின் Morecambe பகுதியைச் சேர்ந்த தம்பதி Sue(42)-Noel(47). இந்த தம்பதிக்கு கடந்த செப்டம்பர் மாதம் தான் குழந்தை பிறந்தது.

அது அவர்களுக்கு 20-வது குழந்தை என்பதால், இனிமேல் குழந்தையே பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்திருந்தனர்.

ஆனால் Sue தற்போது மீண்டும் கர்ப்பமாகியுள்ளார் 21-வது குழந்தையை பெற்றெடுக்கவுள்ளார். அக்குழந்தை பெண் குழந்தை எனவும் நம்பிக்கையில் உள்ளனர்.

இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், இந்த தம்பதிக்கு மொத்தம் 20 குழந்தைகள் உள்ளனர்.

அவர்களின் பெயர்கள் Chris(28), Sophie(23), Chloe(22), Jack(20), Daniel(18), Luke மற்றும் Millie(16), Katie(14), James(13), Ellie(12) Aimee(11), Josh(10), Max(8), Tillie(7), Oscar(5), Casper(4), Hallie(2), மற்றும் Phoebe 13 மாத குழந்தையாகவும், கடந்த செப்டம்பர் மாதம் பிறந்த குழந்தைக்கு Archie என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த தம்பதி வாரத்திற்கு 300 பவுண்ட் ஷாப்பிங்கிற்கே செலவு செய்வதாகவும், நாள் ஒன்றுக்கு 10.50 லிட்டர் பால் மற்றும் மூன்று லிட்டர் பழச்சாறு தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

மொத்தம் 10 படுக்கை அறைகள் கொண்ட வீட்டில் இவர்கள் வசித்து வருவதாகவும், தந்தையான நோயில் Pie கம்பெனி நடத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தம்பதிக்கு மூன்று பேரக்குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து திருமணம் : புதுமாப்பிள்ளை ஆணவக் கொலை : கேரளாவை உலுக்கிய சம்பவம்!!

கேரளாவில் காதலித்து திருமணம் செய்ததற்காக இளம்பெண்ணின் உறவினர்களால் இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் தலித் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்தவர் கெவின் பி ஜோசப், கல்லூரியில் படிக்கும் போது கெவினுக்கும், நீனு என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது.

இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டம் படித்து வரும் நீனு, கடந்த 25ம் திகதி முறைப்படி கெவினை பதிவு திருமணம் செய்து கொண்டார்.

இது நீனுவின் பெற்றோருக்கு தெரியவந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் கெவினுடன் அவரது உறவினர் அனிஸ் என்பவரையும் கடத்தி சென்றுள்ளனர். சுமார் 10 கொண்ட கும்பலால் இவர்கள் காரில் கடத்தி செல்லப்பட்ட நிலையில், அனிஸை காரிலிருந்து தள்ளி விட்டுள்ளனர்.

இவர்களது வீட்டிலிருந்து சுமார் 20 கிமீ தொலைவில் கெவினை அடித்துக் கொன்றுள்ளனர், இதில் முக்கியமான குற்றவாளி நீனுவின் சகோதரர் ஆவார்.

 

தகவலறிந்ததும் அதிர்ச்சியில் உறைந்த போன நீனு, கெவினின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பொலிஸ் நிலையம் சென்ற போது புகாரை ஏற்க மறுத்துள்ளனர்.

சுமார் 30 மணிநேரம் கழித்து புகாரை ஏற்ற நிலையில், கெவின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கெவினின் உறவினர்கள் போராட்டத்தால் விவகாரம் வெளியே தெரியவரவே, டிஜிபி தலைமையில் சிறப்பு படையை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

கோட்டயம் மற்றும் கொல்லத்தில் இரண்டு குழுக்குள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும், குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்று இனியும் நடக்க கூடாது எனவும், எந்தவொரு குற்றச்சாட்டாக இருந்தாலும் உடனடியாக பதிவு செய்யாத பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கேரளாவை உலுக்கிய இவ்வழக்கில் நீனுவின் தந்தை சாக்கோ, சகோதரர் சானு உள்ளிட்ட 14 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இஷான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இளைஞர் ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த நியாஸ், ரியாஸ் ஆகியோர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலேயே முதல் முறையாக பார்வையற்ற பெண் மாவட்ட ஆட்சியராக பதவியேற்பு!!

இந்தியாவில் முதல் முறையாக பார்வையற்றை பெண்ணொருவர், கேரள மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக பதவியேற்றுள்ளார்.

கர்நாடக மாநிலம் உல்லாஷ் நகரை சேர்ந்த தம்பதியர் என்.பி.பட்டில்-ஜோதி. இவர்களது மகள் பிரஞ்ஜாலின் பட்டில். இவருக்கு 2 வயதாக இருந்தபோது காய்ச்சலால் கண்பார்வை பறிபோனது.

எனினும், இவரது பெற்றோர் தைரியமும், தன்னம்பிக்கையும் அளித்து இவரை வளர்த்ததால், தனது விடாமுயற்சியால் மும்பையில் கல்லூரி பட்டப்படிப்பை முடித்தார்.

அதன் பின்னர், டெல்லியில் உள்ள சர்வதேச கல்லூரியில் டாக்டர் பட்டம் முடித்தார். பிரஞ்ஜாலின், வளர வளர சமூக சேவையில் ஈடுபாடு இருந்ததால், கடந்த 2014ஆம் ஆண்டு IAS தேர்வு எழுதினார். ஆனால், அவருக்கு அப்போது 773ஆம் இடமே கிடைத்தது.

எனினும் சற்றும் மனம் தளராத பிரஞ்ஜாலின், ரெயில்வே துறையில் தேர்வாகி கணக்கு பிரிவில் வேலைக்கு சேர்ந்தார். அதன் பின்னர், 2017ஆம் ஆண்டு மீண்டும் IAS தேர்வு எழுதினார். இம்முறை 124வது இடத்தை பிடித்தார்.

இதன்மூலம், மாவட்ட ஆட்சியராகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, நேற்று கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயிற்சி ஆட்சியராக பொறுப்பேற்றார் பிரஞ்ஜாலின்.

அப்போது தனக்கு ஊக்கமும், தைரியமும் கொடுத்து வளர்த்த தனது பெற்றோர் தன்னை இருக்கையில் அமர வைக்க வேண்டும் என உயர் அதிகாரிகளிடம் பிரஞ்ஜாலின் அனுமதி கேட்க, அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

பின்னர், அவரது தாய் ஜோதி மகளை மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர வைத்தார். நேரடி IAS தேர்வில் வெற்றி பெற்று, இந்தியாவிலேயே கண்பர்வையற்ற பெண்ணொருவர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.