புற்றுநோயால் உயிரிழந்த மனைவி : அடுத்த நொடி உயிரை விட்ட கணவன்!!

புற்றுநோயால் மனைவி உயிரிழந்த நிலையில், அவரை பிரிய மனமில்லாத கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Ainsdale நகரை சேர்ந்தவர் Rowland Hilton (82). இவர் மனைவி Mary (79). இருவருக்கும் திருமணமாகி 60 ஆண்டுகள் ஆகிறது. தம்பதிகள் ஒருவருக்கொருவர் உயிராக நேசித்து வாழ்ந்து வந்தார்கள். Mary-க்கு பல வருடங்களாகவே நுரையீரல் புற்றுநோய் இருந்த நிலையில் அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், திடீரென நோய் முற்றிய நிலையில் வீட்டிலேயே Mary உயிரிழந்தார். இதை கண்டு துடித்து போன Rowland மனைவி இல்லாத உலகில் வாழ விருப்பமில்லாமல் தற்கொலை செய்து கொண்டார்.

இறப்பதற்கு முன்னர் Rowland எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதை முன்னரே அவர் எழுதி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் நடந்த நிலையில் தற்போது வெளியில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த தம்பதியின் உறவினர் ஒருவர் கூறுகையில், அவர்கள் இருவரும் எப்போதும் ஒன்றாக இருப்பார்கள். பருவ வயதில் Rowland-ம், Mary-ம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இறப்பிலும் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளார்கள்.

Rowland வீட்டுக்கு அவர் இறப்பதற்கு ஒருவாரம் முன்னர் நான் சென்ற போது Mary கவலைக்கிடமாக இருந்தார். ஆனால், Rowland தெம்பாக இருந்தார் என கூறியுள்ளார்.

தம்பதி மரணத்தில் ஆரம்பத்தில் சந்தேகம் இருந்த நிலையில், Mary இயற்கையாக மரணமடைந்தார் எனவும், Rowland தற்கொலை தான் செய்து கொண்டார் எனவும் பின்னர் உறுதியானது குறிப்பிடத்தக்கது.

தாயார் மற்றும் சகோதரர் சடலத்துடன் ஒருவருடமாக வாழ்ந்த நபர் : உருக வைக்கும் காரணம்!!

உயிரிழந்த தாய் மற்றும் சகோதரரின் சடலத்துடன் ஒருவருடம் தனியாக வாழ்ந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் மின்னிசோட்டா மாகாணத்தின் வொயிட் பியர் லேக் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் ஜேம்ஸ் குயுப்லர்.
இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து, பொலிசார் ராபர்ட் வீட்டுக்கு சென்று சோதனை செய்த போது அதிர்ச்சியளிக்கும் விதமாக இரண்டு சடலங்கள் அழுகிய நிலையில் இருந்துள்ளது.

இறந்த சடலங்களில் ஒன்று ராபர்டின் தாய் ஈவ்லின் (94) என்பதும், மற்றொன்று அவரின் சகோதரர் ரிச்சர்ட் என்பதும் தெரியவந்துள்ளது.

தாய் மற்றும் சகோதரரை பிரிந்து வாழ மனம் இல்லாததாலும், அவர்களை புதைக்க விரும்பாததாலும் சடலங்களை வீட்டிலேயே ராபர்ட் வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில், சடலத்தை வீட்டில் வைத்திருப்பது சட்ட விரோத செயல் என்பதால் ராபர்டுக்கு ஒருவருடம் வரை சிறை தண்டனையும், $3,000 அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

கொடூரமான முறையில் மனைவியை கொன்ற நபர் : 20 ஆண்டுகள் சிறை!!

ஆத்திரத்தில் மனைவியை 40 முறை கத்தியால் குத்திக் கொன்ற இந்திய வம்சாவளி நபருக்கு அமெரிக்க நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள சலேம் பகுதியில் வசித்து வந்தவர் நிதின் சிங்(48). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவரது மனைவி சீமா சிங்(42). இந்த தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிதினை விட்டு பிரிந்து செல்ல சீமா முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. மட்டுமின்றி தனது குழந்தைகளையும் நிதினுக்கு சொந்தமான பணத்தையும் தன்னுடன் கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததை அறிந்த நிதின்,கடந்த 2016-ம் ஆண்டு யூலை மாதம் இந்த விவகாரம் தொடர்பில் சீமாவுடன் வாக்குவாதத்தில் ஏற்பட்டுள்ளார்.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த நிதின் படுக்கை அறையில் இருந்த சீமாவை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். உடலில் 40 இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சீமா, பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த படுகொலை தொடர்பாக நிதினை கைது செய்த பொலிசார், சலேம் நகர நீதிமன்றத்தில் அவர்மீது வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி நிதினை 20 ஆண்டுகள் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார். தண்டனை காலத்தில் 85 சதவீதம் நாட்களை கடக்கும்வரை அவரை பிணையில் விடுவிக்கவும் நீதிபதி லின்டா லாவ்ஹன் தடை விதித்துள்ளார்.

கமல்ஹாசனால் அரசியலில் ஜெயிக்க முடியாது : சொந்த வீட்டிலேயே எழுந்த கருத்து!!

கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் அவரால் வெற்றிபெற முடியாது என அவரின் சகோதரரும், நடிகருமான சாருஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நேரடியாக அரசியலுக்கு வருவேன் என கூறியுள்ள நிலையில், அடுத்த மாதம் 7 ஆம் திகதி தனது பிறந்தநாளன்று புதுக்கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கமலுக்கு அரசியல் பிரவேசத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு என இரண்டும் இருந்து வருகிறது. இந்நிலையில், கமல்ஹாசனின் சகோதரரும், நடிகருமான சாருஹாசன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் தான் மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளது. மூன்றாவதாக ஒரு கட்சி தொடங்கினால் எந்த பலனும் இருக்காது.

கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் அவரால் வெற்றிபெற முடியாது. யாராக இருந்தாலும் சரி, நடிகன் என்ற தகுதிக்கு அப்பார்பட்டு அரசியலுக்கு வருவதற்கு வேறு ஒரு பக்குவமும் தேவை என கூறியுள்ளார்.

வகுப்பறையில் ஆசிரியரை கண்மூடித்தனமாக கத்தியால் குத்திய மாணவன்!!

இந்தியாவில் ஆசிரியர் தலைமுடியை வெட்டச் சொன்னதால், அவரை மாணவர் வகுப்பறையில் வைத்து கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனேயில் லோனிகண்ட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தனஞ்சய் அப்னவே(33) பேராசிரியராக உள்ளார். அதே கல்லூரியில் சுனில்(18) என்ற மாணவரும் படித்து வருகிறார்.

இதையடுத்து கடந்த வியாழக்கிழமை பேராசிரியர் தனஞ்சய் அப்னவே பாடம் நடத்தி கொண்டிருந்த போது, சுனில் தலையில் தொப்பி அணிந்தபடி இருந்துள்ளார்.

அதுமட்டுமின்றி சுனிலின் தலை முடியும் அதிகமாக வளர்ந்திருந்ததால் தனஞ்சய், மாணவனை அழைத்து, தலைமுடியை வெட்டும்படியும், வகுப்பறையில் தொப்பி அணியாமல் ஒழுக்கமாக இருக்கும்படியும் கூறி சத்தம் போட்டுள்ளார்.

சக மாணவர்கள் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தியதை தாங்கிக்கொள்ள முடியாமல், சுனில் ஆசிரியரை பழி வாங்க நினைத்துள்ளார்.

இதனால் கடந்த 7ஆம் திகதி வகுப்பறையில் தனஞ்சய் பாடம் நடத்தி கொண்டிருந்த போது, வகுப்பறைக்கு வந்த மாணவர் சுனில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தினார்.

இதனால் அவரின் சத்தத்தை கேட்டு அருகில் இருந்த ஆசிரியர் தர்ஷன் சவுத்ரி(30) தடுக்க வந்த போது, அவரையும் கண்மூடித்தனமாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

காயமடைந்த இருவரும் உடனடியாக அங்கிருந்த மாணவர்களின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தரம் ஐந்து புலமைப் பரீட்சையில் இரட்டைச் சகோதரிகளின் சாதனை!!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் இரட்டைச் சகோதரிகள் ஒரே புள்ளிகளைப் பெற்று சாதனைப்படைத்துள்ளனர்.

காலி – கிங்தொட்ட பியதிகமவைச் சேர்ந்த கே.எம்.எச் சிஹலி சிதுமியா மற்றும் மஹெலி நெதுமியா ஆகிய இரட்டைச் சகோதரிகள் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 177 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஒன்றாக பிறந்து, ஒன்றாக வளர்ந்து, ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில் கல்வி கற்று, தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் இருவரும் ஒரே புள்ளிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இரட்டைச் சகோதரர்களின் தந்தையான கே.எம்.எச். ரஞ்சித் குமார ஹிக்கடுவ பிரதேச செயலகத்தில் கடமையாற்றுவதுடன், தாயாரான சுஜீவா மனோகரி தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்த நடிகரின் முடிவு!!

ஆரம்பத்தில் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில்  நடித்து வந்த சுமார் மூஞ்சி நடிகர், காற்று படம் மூலம் ஹீரோவானாராம். இவர் தனது நடிப்பு மூலம் ரசிகர்களை எளிதாக கவர்ந்து வந்தாராம்.

ஹீரோவாக நடித்தாலும் பல படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வந்தாராம். தினமும் அவரிடம் வந்து யாராவது என் படத்தில் கெஸ்ட் ரோல் பண்ணிக்கொடுங்க என கேட்பது வழக்கமாம். அவரும் கேட்பவர்களுக்கெல்லாம் நடித்து கொடுத்து வந்தாராம். ஆனால் அவரை ஹீரோவாக வைத்து படம் எடுப்பவர்கள் இது வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்களாம்.

இதனால் இனி சுமார் மூஞ்சி நடிகர், கெஸ்ட் ரோலில் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளாரம். இதனால் திரையுலகினர் பலரும் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம். பெரிய ஹீரோவாக இருந்தாலும் சின்ன ரோலில் கேட்டபோதெல்லாம் நடித்து கொடுத்தவர் தற்போது அதற்கு தடை போட்டது திரையுலகில் உள்ள பலருக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாம்.

பிரதமர் மோடியை திருமணம் செய்யப் போவதாக  சபதம் ஏற்று போராடும் பெண்!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்தவர் ஓம் சாந்தி சர்மா. 40 வயது நிரம்பிய இவர் கடந்த ஒரு மாதமாக ஒரு வித்தியாசமான கோரிக்கையுடன் ஜந்தர் மந்தரில் போராடி வருகிறார்.

அவரது போராட்டத்திற்கு காரணமாக அவர் கூறுவது இந்தியா முழுக்க உள்ள மக்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அவர் ” திருமணம் செய்தால் பிரதமர் மோடியைதான் திருமணம் செய்வேன், எனக்கு அவருடன் சேர்ந்து வாழ விருப்பம் , அதற்காகவே நான் இங்கு போராடி வருகிறேன் ” என்று அனைவரிடமும் கூறி வருகிறார். இது பலரது கவனத்தை அவரது பக்கம் திருப்பி உள்ளது.

மோடியை மணக்க சபதம் ஏற்று இருக்கும் இந்தப் பெண்மணி ஏற்கனவே திருமணம் ஆனவர். இவருக்கு 20 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். இப்போது இந்த ஓம் சாந்தி சர்மா கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

பிரதமர் மோடியும் மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார், அதே போல் நானும் வாழ்ந்து வருகிறேன் . எனவே பிரதமர் மோடியை நான் திருமணம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. என்னை திருமணம் செய்துகொள்ள பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர் . ஆனால் எனக்கு பிரதமர் மோடியை திருமணம் செய்ய மட்டுமே விருப்பம் ” என்று கூறியுள்ளார்.

மோடியை ஏன் திருமணம் செய்ய நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு ” எனக்கு பிரதமர் மோடியின் பணமோ, புகழோ தேவை இல்லை. அவர் நாட்டு மக்கள் எல்லோருக்கும் சேவை செய்கிறார், எனவே அதற்கு கைமாறாக அவருக்கு நான் சேவை செய்ய விரும்புகிறேன். என்னை சிலர் பைத்தியம் என்று கூறுகிறார்கள் எனக்கு அதை குறித்தெல்லாம் கவலை இல்லை ” என்கிறார்.

இதேபோல் பிரதமர் மோடியின் மீதுள்ள அதீத அன்பை வெளிப்படுத்த பரிசு கொடுக்கும் திட்டம் ஒன்றிலும் இவர் இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறிய போது ” எனக்கு சொந்தமாக ஜெய்ப்பூரில் கொஞ்சம் நிலமும், பணமும் இருக்கிறது . அதை வைத்து பிரதமர் மோடிக்கு நல்ல பரிசு ஒன்று வாங்கித் தரலாம் என்று இருக்கிறேன் ‘ என கூறியுள்ளார்.

ஜந்தர் மந்தரில் யாரும் போராடக் கூடாது என பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளதால் இவர் விரைவில் அங்கிருந்து வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

குடோ விளையாட்டில் சாதிக்கும் சிறுவன் : சர்வதேச குடோ போட்டியில் பங்கேற்கத் தகுதி!!

உலகை வெற்றிகொள்ள முயன்றுகொண்டிருப்பவர்களில் 14 வயதான சவுந்தரநாயகன் பவிந்தரவர்சனும் ஒருவர். மாத்தளை – மந்தண்டாவளை இந்து தேசிய பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயிலும் இவர், மாத்தளை நோர்த் 2 ஆம் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்தவர்.

குடோ விளையாட்டில் அதிசிறந்த ஆற்றல் கொண்டவராகத் திகழும் பவிந்தரவர்சன், மாகாண மற்றும் தேசிய மட்ட குடோ போட்டிகளில் பல பதக்கங்களையும் வென்றுள்ளார்.

இந்தியாவின் மும்பையில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச குடோ போட்டியில் பங்கேற்கவும் பவிந்தரவர்சன் தகுதி பெற்றுள்ளார்.

ஆனாலும், அந்தப் போட்டிக்கு அவரால் செல்ல முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வீட்டின் வறுமை காரணமாக, இவரை மும்பைக்கு அனுப்புவதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளார் பவிந்தரவர்சனின் தந்தை.

அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் புற்றுநோய் தடுக்கப்படுகின்றதா?

பழங்கள் ஆரோக்­கி­யத்­திற்கு அவ­சி­ய­மான பல ஊட்­டச்­சத்­து­களைக் கொண்­டுள்­ளதை அறி­வீர்கள். பிர­தா­ன­மாக விற்­றமின் ‘சீ ’ உள்­ளிட்ட பல விற்­ற­மின்­க­ளையும், அன்­ரி­ஒக்­சி­டன்ற்­க­ளையும், கனி­யங்­க­ளையும், நார்ப்­பொ­ருட்­க­ளையும் கொண்­டுள்ள பழங்கள் மனி­தரின் உடல் ஆரோக்­கி­யத்­திற்கு இன்­றி­ய­மை­யா­தவை. இந்த வகையில் எமது நாட்டில் பயி­ரி­டப்­ப­டு­கின்ற அன்­னாசிப் பழமும் முக்­கி­ய­மான ஊட்­டங்­க­ளையும் கொண்­டுள்­ள­துடன் பல நோய்­களைத் தடுக்­கின்­றன.

அன்­னாசிப் பழத்தை பழ­மா­கவோ, பழச்­சா­றா­கவோ, புருட் சலட் ஆகவோ சமைத்தோ உண்ண முடியும். மிகவும் சுவை­யான இந்தப் பழத்தை அனை­வரும் விரும்பி உண்­கின்­றனர். அபூர்­வ­மாக ஒரு சில­ருக்கு ஒவ்­வாமை (Allergy) ஏற்­ப­டு­வ­துண்டு. இவ் ஒவ்­வாமை கார­ண­மாக இதழ், முரசு, நாக்கு என்­பன தடிப்­ப­துடன் வெகு சிலரில் தேக அரிப்பு ஏற்­ப­டலாம். அன்­னாசிப் பழத்தை அதிக நாட்கள் வைத்திருந்து உண்டால் ஊட்­டங்கள் குறை­வ­டை­யலாம். குளிர்­சா­தனப் பெட்­டியில் 4 – 5 நாட்கள் வரை வைத்து சாப்­பி­டலாம்.

அன்­னாசிப் பழம் புற்று  நோயைத் தடுக்கும்.

இன்று சவா­லாக உள்ள நோய்­களில் புற்று நோய் முக்­கி­ய­மா­னது. அன்­னாசிப் பழம் புற்­றுநோய் ஏற்­ப­டு­வதை தடுப்­பதில் பங்­காற்­று­வதால் எமது நாளாந்த உணவில் அடிக்­கடி இதைச் சேர்த்துக் கொள்­ளலாம். அன்­னா­சிப்­ப­ழத்­தி­லுள்ள விற்­றமின் சீ, புறு­மெ­லயின் (Brome lain) மற்றும் மங்­கனீஸ் (Manganese) என்­பன புற்­றுநோய் ஏற்­ப­டு­வதை தடுக்கும் வல்­லமை கொண்­டவை. குறிப்­பாக குடும்ப பரம்­பரை வர­லாற்றில் புற்­றுநோய் உள்­ள­வர்கள் அன்­னா­சிப்­ப­ழத்தை வாரம் இரண்டு மூன்று தட­வை­யா­வது உண்­பது சிறந்த பலனைத் தரும்.

கல வளர்ச்­சி­யிலும் தொழிற்­பாட்­டிலும் முக்­கி­ய­மான கொலா­ஜெனை (Collagen) உரு­வாக்­கு­வதில் விற்­றமின் சீ, போலேற் என்­பன தொழிற்­ப­டு­கின்­றன. இது கட்­டுப்­பா­டற்ற கலப்­பி­ரி­கையை தடுத்து புற்­று­நோ­யையும் தடுக்­கின்­றது. அன்­னாசி மாத்­தி­ர­மின்றி வேறு சில பழங்­களும் இவ்­வா­றான அம்­சங்­களைக் கொண்­டி­ருப்­பதால் நாம் தினமும் பழ­வ­கை­களை தவ­றாமல் சாப்­பி­டு­வதன் மூலம் புற்­றுநோய் ஏற்­ப­டு­வதை ஓர­ளவு தவிர்க்க முடியும்.

நீர­ழிவு நோயா­ளர்கள் அன்­னா­சிப்­பழம் சாப்­பி­டலாம்

பொது­வாக பழ­வ­கைகள் இனிப்­பாக இருப்­ப­தனால் நீரி­ழிவு நோயா­ளர்கள் பழங்­களைச் சாப்­பிட பயப்­ப­டு­வார்கள். ஆனால் நீரி­ழிவு நோயா­ளர்கள் மட்­டான அளவில் பழங்­களை கட்­டா­ய­மாகச் சாப்­பி­டு­வதால் பல நன்­மைகள் உள்ளன. குருதிக் குளுக்­கோசின் அளவை பெரும்­பா­லான பழங்கள் சடு­தி­யாக கூட்­டு­வ­தில்லை. பழங்­க­ளி­லுள்ள அத்­தி­யா­வ­சி­ய­மான நுண் ஊட்­டங்கள் நன்மை பயக்கும். குறிப்­பாக அன்­னா­சி­யி­லுள்ள விற்­றமின் B6,B1,B5,போலேற், C என்­பன நீரி­ழிவு நோயா­ளர்­க­ளுக்கு நன்மை பயக்கும். அன்­னாசிப் பழத்தில் நார்ச்­சத்­துகள் நிறைய உள்­ளதால் குருதி வெல்­லத்தை அதி­க­ரிக்கச் செய்­வ­தில்லை. எனவே பயப்­ப­டாமல் நீரி­ழிவு நோயா­ளர்கள் அன்­னாசிப் பழம் சாப்­பி­டலாம்.

அன்­னாசிப் பழத்தின் பல்­வேறு நன்­மைகள்.

அன்­னாசிப் பழம் உடலின் நோயெ­திர்ப்புச் சக்­தியை அதி­க­ரிப்­பதால் பல்­வேறு நோய்­க­ளி­லி­ருந்து காக்­கின்­றது. சக்­தியை வழங்­கு­வதால் உற்­சா­கத்தை அளிக்­கின்­றது. மூட்­டு­க­ளுக்கு பாது­காப்­ப­ளிப்­பதால் மூட்­டு­வாத நோயைத் தடுப்­ப­துடன் எலும்­பு­க­ளுக்கு உறு­தியை வழங்­கு­கின்­றது. பற்­க­ளுக்கும், முர­சுக்கும் உறு­தியை வழங்­கு­வதன் மூலம் வாய்ச்­சு­கா­தா­ரத்தை பேணு­கின்­றது. சளி, தடிமல், இருமல் முத­லா­ன­வற்றை குறைக்­கின்­றது. அன்­னா­சிப்­ப­ழத்­தி­லுள்ள நிறைந்த நார்ச்­சத்து சமி­பாட்டை இல­கு­ப­டுத்­து­வ­துடன் மலச் சிக்­க­லையும் தடுக்கின்றது.

அன்னாசிப்பழத்திலுள்ள தாதுப் பொருளான கொப்பர் (Copper) செங்குருதிக்கலங்களின் உற்பத்தியில் பங்காற்றுகின்றது. பொற்றாசியம் (Potassium) இரத்தக் குழாய்களுக்குள் அழுத்தத்தை குறைப்பதுடன் இரத்தச் சுற்றினை சீராகப் பேணுகின்றது. இதயத்தின் சீரான தொழிற்பாட்டுக்கு உதவுவதுடன் இதய நோய்களிலிருந்து காக்கின்றது. எனவே அன்னாசிப்பழத்தை உங்கள் மெனுவில் சேருங்கள்

முல்லைத்தீவு குடும்பஸ்தரை சுட்டுக்கொன்ற சுவிஸ் பொலிசார் : காரணம் வெளியானது!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் நேற்றுமுன்தினம் சுவிற்சலாந்தில் உள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாம் ஒன்றில் பொலிசாரால் சுட்டுகொல்லபட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு 6 ஆம் வட்டாரம் ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியம் கரன் (வயது 38) எனப்படும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாகிய குடும்பஸ்தரே சுட்டு கொல்லப்பட்டிருந்தார். இவர் தங்கியிருந்த இடைத்தங்கல் முகாமில் சக அகதிகளுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அங்குள்ள சக அகதிகளால் பொலிஸாருக்கு முறையிடப்படடுள்ளது.

இந்த நிலையில் அங்கு வந்த பொலிஸாரின் கட்டளைக்கு குறித்த நபர் கீழ்ப்படியாத நிலையில் இவர் மீது துப்பாக்கி சூட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கி சூட்டில் ஸ்தலத்திலேயே குறித்த நபர் பலியாகியுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தஞ்சம்கோரி சுவிஸ் நாட்டுக்கு சென்ற சுப்ரமணியம் கரன் கடந்த 2 வருடங்களாக சுவிஸ் நாட்டின் டிசினோ மாகாணத்தில் உள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இயல்பாகவே சாதரண சுபாவத்தை கொண்ட இவர் போரால் மிகவும் கடுமையான பாதிப்புக்களை சந்தித்த புதுக்குடியிருப்பில் ஆனந்தபுரம் என்னும் கிராமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்.

இறுதிப்போரில் அனைத்து உடைமைகளையும் இழந்து உறவுகளையும் இழந்து வாழ்ந்த இவர் 2015 ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டுக்கு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தஞ்சம்கோரி சென்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சக அகதிகளுடன் ஏற்பட்ட மோதல் முற்றிய நிலையில் அங்கு வந்த சுவிஸ் நாட்டு பொலிஸாரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

தமது தந்தை இங்கு இருக்கும்போதும் பாரதூரமான எந்தவிதமான குற்றங்களிலும் ஈடுபடாதவர் என கூறும் இவரது பிள்ளைகள் சுட்டுக்கொல்லும் அளவுக்கு எமது தந்தை எந்த தவறும் செய்திருக்கமாட்டார் என  தெரிவிக்கின்றனர்.

தமது தந்தையின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு இலங்கை அரசும் சுவிஸ் நாட்டு அரசும் உதவி புரியவேண்டும் என மன்றாட்டமாக கேட்பதாகவும் தமது தந்தைமீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் குறித்து சுவிஸ் நாட்டு அரசால் நீதியான விசாரணைகள் நடாத்தப்பட்டு தமக்குரிய பதில் வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பில் மாணவிக்கு மிளகாய்த் தூள்வீசி சங்கிலி அறுப்பு!!

புதுக்குடியிருப்பு 8 ஆம் வட்டாரப்பகுதியில் தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர் தினநிகழ்விற்கு சென்று வந்த மாணவி மீது மிளகாய்த் தூள்வீசிவிட்டு திருடர்கள் தங்கச்சங்கிலியினை அபகரித்துக்கொண்டு சென்றுள்ளார்கள். இச் சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது .

புதுக்குடியிருப்பு மந்துவில் 8 ஆம் வட்டாரப்பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர்தின நிகழ்வில் கலந்துவிட்டு 7ஆம் ஆண்டில் கல்விகற்கும் மாணவி ஒருவர் உள்வீதியாக வீட்டிற்கு சென்று கொண்டிருக்கையில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இவ்வாறு தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் மாணவி மீது மிளகாய்த் தூள் வீசப்பட, மற்றைய மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சங்கிலியினை அபகரித்து சென்றுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் கொள்ளையிட்ட கொள்ளைக்கும்பல் தற்போது பகல்வேளைகளில் இவ்வாறான கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இரவு வேளைகளில் இளைஞர்கள் விழிப்புகாவல்களில் அண்மைய நாட்களாக ஈடுபட்டுவரும் நிலையில் இன்று பட்டப்பகலில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கடைக்குள் புகுந்து 50க்கும் மேற்பட்ட இனந்தெரியாத நபர்கள் அட்டகாசம்!!

 
வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் இரு கிராமத்தவர்களுக்கிடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு நெச்சிமோட்டை பகுதிக்கு வந்த புதிய சின்னக்குளத்தை சேர்ந்த சுமார் 50 பேர் அப்பகுதியில் இருந்த வர்த்தக நிலையமொன்றினுள் புகுந்து அங்கிருந்த பொருட்களை வீசி எறிந்ததுடன் கடை உரிமையாளரையும் தாக்கியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், கடந்த சனிக்கிழமை புதிய சின்னக்குளத்தை சேர்ந்த இளைஞனொருவரை சிலர் தாக்கியதில் குறித்த இளைஞர் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் குறித்த இளைஞனை தாக்கியவர்களுக்கு எதிரான நடவடிக்கையை பொலிஸார் எடுக்கவில்லை என புதியசின்னக்குளத்தை சேர்ந்தவர்கள் நொச்சிமோட்டை பகுதிக்கு வந்துள்ளனர்.

இதன்போது குறித்த கடையின் உரிமையாளரும் இணைந்தே இவ் இளைஞனை தாக்கியதாக தெரிவித்து அங்கு கூடியவர்கள் சிலர் அவரை தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து கடை உரிமையாளரும் அங்கிருந்தவர்களும் பொலிஸாருக்கு தகவல் வழங்கவே அப்பகுதியில் கூடிய புதிய சின்னக்குளத்தை சேர்ந்தவர்கள் அவ்விடத்தினை விட்டு அகன்றுள்ளனர்.

இந் நிலையில் அப்பகுதிக்கு வருகை தந்த ஓமந்தை பொலிஸார் அப்பிரசேத்தில் தேடுதலை நடத்தியதுடன் சம்பவம் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டனர்.

இதேவேளை பொலிஸில் இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டபோதிலும் மீண்டும் இரு கிராமத்தவர்களுக்கும் முறுகல் நிலை தொடர்ந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வடமாகாண ஓய்வூதியர் தினம் அனுஸ்டிப்பு!!

 
வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நேற்று (08.10.2017) காலை 9.30 மணியளவில் வடமாகாண ஓய்வூதியர் தினம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகன புஸ்பகுமார தலமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் , கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் , ஓய்வூதிய திணைக்கள கணக்காளர் , மன்னார் மாவட்ட பிரதம கணக்காளர் செல்வரட்ணம் , முல்லைத்தீவு மாவட்ட பிரதம கணக்காளர் ரெனினோட் , வவுனியா மாவட்ட பிரதம கணக்காளர் பாலகுமார், வவுனியா மாவட்ட செயலக உதவி செயலாளர் கமலதாசன், ஓய்வூதிய திணைக்கள பணிப்பாளர்கள், மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், மாவட்ட செயலக கலாச்சார உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , ஓய்வூதியம் பெற்ற முதியோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் முதியோர்களின் பேச்சு போட்டி , பரிசளிப்பு நிகழ்வு , முதியோர் கௌரவிப்பு , விருந்தினர்கள் உரை என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

35 இலட்சம் ஆண்டுகள் பழமையான பக்டீரியாவை உடலில் செலுத்திக்கொண்ட நடிகை!!

ஜெர்மனியைச் சேர்ந்த 48 வயது நடிகை மானோஷ் 35 இலட்சம் ஆண்டுகள் பழமையான பக்டீரியாவைத் தன் உடலில் செலுத்திக்கொண்டிருக்கிறார். இதன்மூலம் தன்னுடைய முதுமை மறைந்து, இளமை திரும்பும் என்று அவர் நம்புகிறார்.

“நான் ஒரு பரிசோதனை எலி போன்றவள். இளமையைத் தக்க வைப்பதற்காக எந்த விஷயத்தையும் மேற்கொள்ளத் தயாராக இருக்கிறேன். எனக்குச் சின்ன வயதில் இருந்தே முதுமை மீது வெறுப்பு வந்துவிட்டது. நான் மட்டும் முதுமை அடைந்துவிடக் கூடாது என்று எண்ணிக்கொள்வேன்.

கடந்த 20 ஆண்டுகளில் பிளாஸ்டிக் ஷேஜரி செய்யாத உறுப்புகளே இல்லை என்று சொல்லலாம். மூக்கில் 2, உதட்டில் 2, மார்பகங்களில் 6 என்று ஏராளமான அறுவை சிகிச்சைகளை பல இலட்சங்கள் செலவு செய்து செய்திருக்கிறேன்.

சமீபத்தில் பக்டீரியா சிகிச்சை பற்றிக் கேள்விப்பட்டேன். உடனே அதைச் செய்துகொள்ள முடிவெடுத்தேன். 35 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவான Bacillus F பக்டீரியாவை ரஷ்ய விஞ்ஞானிகள் தான் கண்டுபிடித்துள்ளனர். ரஷ்யாவின் வடமேற்கு காடுகளில் 2009 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு வரை இதை வைத்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் இந்த பக்டீரியா முதுமைக்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை.

இளமையை நீண்ட காலம் தக்க வைத்துக்கொள்ளும் ஆற்றல் இருப்பதாகச் சொல்லப்பட்டது. உடனே நான் அவர்களைத் தொடர்புகொண்டேன். என் உடலில் பக்டீரியாவைச் செலுத்த சம்மதம் தெரிவித்தேன்.

ஆராய்ச்சியாளர்கள், என் குடும்பத்தினர், நண்பர்கள் இதைச் செலுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். ஆனால் நான் யார் சொல்வதையும் பொருட்படுத்தவில்லை. உரிமம் இல்லாததால் பக்டீரியாவைச் செலுத்த எந்த மருத்துவரும் முன்வரவில்லை.

ஒரு சில மருத்துவர்களின் மேற்பார்வையில் நானே 2 வாரங்களுக்கு ஒருமுறை செலுத்திக்கொண்டேன். 3 மாதங்களில் என் உடலில் மாற்றம் தெரிய ஆரம்பித்துவிட்டது.

என் தோல் குழந்தையின் தோல்போல் மென்மையாகிவிட்டது. முகத்தில் தழும்புகள், கோடுகள் எல்லாம் மறைந்துவிட்டன. தூக்கம் இன்மையால் அவதிப்பட்டேன். இப்போது நீண்ட நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறேன்.

ஒருவேளை எனக்கு இது நீண்ட காலத்திற்கு வெற்றியைத் தராவிட்டாலும் பரவாயில்லை. இந்த பக்டீரியா என்னுடைய ஆயுளை 80, 90 வயதுவரை நீட்டிக்கும். நான் சாகும் வரை என் உடலின் அனைத்து பாகங்களும் வேலை செய்யும்” என மானோஷ் தெரிவித்துள்ளார்.

மனித உடல், எலிகள், தாவரங்கள் போன்றவற்றில் நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சிகளில் பக்டீரியா மூலம் ஆயுள் நீண்டிருப்பதை அறிய முடிகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மானோஷை பாக்டீரியா காப்பாற்றுமா, கைவிடுமா தெரியவில்லை.

கழிவுப் பொருட்களால் விவசாய உபகரணங்களைத் தயாரிக்கும் முல்லைத்தீவு விவசாயி!!

 
முல்லைத்தீவு – முத்தையன்கட்டு பகுதியைச் சேர்ந்த பசுபதி ராதாகிருஷ்ணன் எனும் விவசாயி, கழிவுப்பொருட்களைப் பயன்படுத்தி விவசாய உபகரணங்களைத் தயாரித்துள்ளார்.

விவசாய செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்கில் இவர் பல்வேறு உபகரணங்களைத் தயாரித்துள்ளார்.

இந்த விவசாயி பயிர்களுக்கு மண் அணைக்கும் சாதனம், வரம்பு கட்டும் சாதனம், நிலக்கடலையைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் போன்றவற்றை தனது முயற்சியினால் தயாரித்துள்ளார்.

நாட்டின் அநேகமான பகுதிகளில் கழிவுப்பொருட்கள் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், இந்த விவசாயின் முயற்சிக்கு அங்கீகாரம் வழங்க வேண்டியது கட்டாயத் தேவையாகவுள்ளது.