கண்டியில் இடம்பெற்ற கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்வு ஒன்றில் மாகாண முதலமைச்சர் தலைமை தாங்கியது தொடர்பில், கடந்த ஒரு வார காலமாக ஊடகங்கள் மற்றும் ஏனையோரால் விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றது.
இது தனிப்பட்ட ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வில் மணமகள் அணிந்திருந்த 3.8 கிலோ மீற்றரான சேலையின் முந்தாணையை, சீருடை அணிந்த பாடசாலை மாணவர்கள் காலை முதல் மதியம் வரை தாங்கி நின்றமையே விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
இந்தநிலையில், தனிப்பட்ட ஒருவரின் நிகழ்ச்சி அல்லாமல் இந் நிகழ்ச்சியை நிறுவியிருந்தால், இந்த பிரச்சினை வந்திருக்காது என, மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் தெரிவித்தார்.
ஹட்டன் – லெதண்டி – கலனிவத்தை தோட்டத்தில் நேற்று (26) ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு நவக்கிரக சிலை வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ரமேஷ்வரன், மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் பாடசாலைகளில் கலை கலாச்சார நிகழ்வுகள் அனைத்தும் இடம்பெற வேண்டும். ஆனால் தனிப்பட்ட ஒருவரின் நிகழ்ச்சி நிரலாக இது அமைந்து விடக்கூடாது.
நான் அமைச்சராக பொறுப்பேற்ற போது, தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு யாரும் செல்ல கூடாது என்று அதிகாரிகளுக்கு கூறியிருந்தேன்.
தேசிய நிகழ்ச்சிகள் காலத்திற்கு ஏற்ப பாடசாலைகளுக்கு ஒழுங்கு செய்து கொடுக்கப்படும். இதேபோன்று எதிர்வரும் 7ம், 8ம் திகதிகளில் தமிழ் சாகித்திய விழா இடம்பெற உள்ளது.
இதில் 2500 பாடசாலை மாணவர்கள் பங்குகொண்டு கலை, கலாச்சார நிகழ்ச்சிகளில் ஈடுபடவுள்ளனர்.
அந்த வேளையில் தோட்ட பகுதி கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது. இதுவும் கூட சில நேரங்களில் விமர்சனத்திற்குள்ளாக்கப்படலாம். முறையாக நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து நடத்தும் பொழுது ஏற்படக் கூடிய பிரச்சினைகளை இல்லாதொழிக்கலாம் என்றார்.
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களுக்குமான தீர்ப்பு சில மணி நேரங்களில் வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் யாழ். மேல் நீதிமன்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நீதிமன்ற வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், துப்பாக்கி ஏந்திய விசேட அதிரடிப்படையினரும் நீதிமன்றில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், நீதிமன்ற வளாகத்துக்குள் வாகனங்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும, நீதிமன்றுக்கு செல்வதற்கான இரு பக்க வழிகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை புங்குடுதீவு மாணவி வித்தியா கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இது குறித்த வழக்கு விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில், அண்மையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய குழு முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டது.
இதன் போது ஏழு சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், முதலாம் மற்றும் ஏழாவது சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.
இந்நிலையிலேயே இன்றைய தினம் வித்தியா படுகாலை வழக்கின் தீர்ப்பு நாளாக திகதியிடப்பட்ட நிலையில், இன்றும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் பிரபல ஆண்கள் பாடசாலையில் இன்று (26.09.2017) காலை 10.30 மணியளவில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியதில் ஒரு மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மூன்று மாணவர்களை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
கடந்த சில வாரங்களாக இரு மாணவ குழுக்களுக்கிடையே சமூக வலைத்தளமான முகநூலில் ஏற்பட்ட கருத்து முரன்பாடு இன்று பாடசாலை இடைவேளையின் போது கைகலப்பாக மாறியது.
இதன் போது மூன்று மாணவர்கள் சேர்ந்து தரம் 12 இல் கல்வி கற்கும் மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இத் தாக்குதலில் காயமடைந்த மாணவன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதல் மேற்கொண்ட மூன்று மாணவர்களை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாக்குதல் மேற்கொண்ட மாணவர்களும் தாக்குதலுக்குள்ளான மாணவனும் சமாதானமாக செல்வதாக இருந்தால் பொலிஸ் நிலையத்துடன் இவ் விசாரணையினை நிறுத்திக்கொள்வதாகவும் இல்லையெனில் விசாணையின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா – சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலய அதிபரின் அலுவலகம் நேற்று (25.09.2017) இரவு இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்திற்கு இன்று (26.09.2017) கல்வி வலயத்தினால் பாடசாலை பரீட்சிப்புக் குழு செல்ல இருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீச்சம்பவத்தினால் அதிபரின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரதி எடுக்கும் இயந்திரம், தளபாடங்கள், கோவைகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.
அத்துடன் அலுவலகத்தின் முன்பக்க கதவை இரும்புக் கம்பியால் உடைப்பதற்கு எத்தணிக்கப்பட்டுள்ளதற்கான சான்றுகள் இருந்ததாகவும் அங்கிருந்தவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்தனர்
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா நகரசபை மைதானத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவு தூபியில் இன்று (26.09.2017) மாலை 5.30 மணியளவில் ஈழத்தின் அகிம்சையின் தந்தை என்றழைக்கப்படும் தியாகி திலீபனின் 30வது வருட நினைவு தினம் வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம், தமிழ் விருட்சம் அமைப்பினர், காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம், தமிழ் தேசிய இளைஞர் ஒன்றியம், வரியிருப்பாளர் சங்கம், வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்கம், வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம், இணைய ஊடகவியலாளர் சங்கம் போன்ற அமைப்புக்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு தியாகி திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்தும் மலர் அஞ்சலி செலுத்தியும் மற்றும் தீபசுடர் ஏற்றியும் அஞ்சலி செலுத்தினார்கள்.
பிரித்தானியாவின் Hampshire பகுதியை சேர்ந்தவர் Dan Brandon(வயது 31). இவருக்கு பாம்புகள் என்றால் அலாதி பிரியம், தன்னுடைய வீட்டில் மலைப்பாம்புகளை வளர்த்து வந்தார். அவைகளுடன் ஜாலியாக விளையாடும் Dan Brandon, பேஸ்புக் பக்கத்திலும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய வீட்டில் Dan Brandon படுகாயமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு அருகே பாம்பு ஒன்றும் இருந்துள்ளது, தனக்கு பசி எடுத்த போது உணவுக்காக Dan Brandon-வை கொத்தி கொன்றிருக்குமா என்ற நோக்கில் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்னரே தெளிவான முடிவு கிடைக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
புற்றுநோயால் தந்தை உயிரிழந்த நிலையில் அவரின் குழந்தை கடைசியாக பேசிய வார்த்தைகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் பிரிஸ்டல் நகரை சேர்ந்தவர் Doting Lou (32), இவர் மனைவி Grieving Ines. இவர்களுக்கு Emily (2) என்ற மகள் உள்ளார்.
தற்போது மீண்டும் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், கடந்த யூலை மாதம் Doting-க்கு உடல் நடக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களிடம் சென்று பரிசோதித்த போது அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
தொடர் சிகிச்சையளித்தும் புற்றுநோய் குணமாகாத நிலையில் Doting எப்போது வேண்டுமானாலும் உயிரிழக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் Doting-ன் உடல்நிலை மோசமாக உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருடன் மனைவி மற்றும் மகள் Emily மருத்துவமனையில் இருந்தனர், அப்போது தந்தையின் அருகில் சென்ற Emily, லவ் யூ அப்பா என உருக்கமாக கூறியுள்ளார்.
இதன் பின்னர் சில நிமிடங்களில் Doting-ன் உயிர் பிரிந்துள்ளது. Doting-ன் இறுதி சடங்குகள் முடிந்துள்ள நிலையில் அவரின் மனைவி Ines கூறுகையில், இறுதி வரை Doting தைரியமாக இருந்தார். மிக சிறந்த கணவராகவும், தந்தையாகவும் அவர் விளங்கினார் என கூறியுள்ளார்.
கைகளில் வலிக்கும்போது, விரைவில் என் உடம்பு கல்லைப்போல மாறிவிடும் என்பதை எனக்கு நினைவூட்டுகிறது. இதைச் சொல்வது 37 வயது ஜெய் விர்தி. சில ஆண்டுகளுக்கு முன்புவரை பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த அவருக்கு ஏற்பட்ட அரிய வகை நோய், அவரது வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போட்டது.
காலப்போக்கில் கடினமான கல் போன்று மாறக்கூடிய `ஸ்க்லெரோட்ர்மா` (Scleroderma) என்ற குணப்படுத்தமுடியாத நோயால் பாதிக்கப்பட்டார் ஜெய் விர்தி. இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஜெய் விர்தியின் தோல் மற்றும் மூட்டுகள் கடினமாகிவிட்டன, நோயின் பாதிப்பு நுரையீரல்களுக்கும் பரவிவிட்டது. இவரின் உடல் நிலை மேலும் மோசமாகும் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எதிர்காலம் பிரகாசமானதாக இல்லாவிட்டாலும் கல்லாகாமல் இருந்தால் போதும் என்று நினைக்கிறார் ஜெய் விர்தி. இந்த நோய், அருகில் இருக்கும் கடைக்கு செல்வதையும் தடுக்குமா, இல்லை மூச்சு விடுவதையும் சிக்கலாக்குமா? எதிர்காலத்தில் எதுபோன்ற பிரச்சனைகளை சமாளிக்க நேரிடும் என்பது புரியாத புதிராக உள்ளதாக சொல்கிறார் அவர்.
இயல்பான ஆடைகளில் வெகு இயல்பாக தோற்றமளிக்கும் ஜெய் விர்தியின் உடலுக்குள் பல பிரச்சனைகள். ஆடைகளுக்குள் அடங்கியிருக்கும் உடலுக்குள் ஏற்படும் வேதனைகளை தான் மட்டுமே உணரமுடியும் என்கிறார் விர்தி.
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட விர்தியின் பல கனவுகள் கலைந்து போய்விட்டன. திருமணம், குழந்தை என்ற இயல்பான ஆசைகளும், கனவுகளும் இவருக்கு கானல் நீராகிவிட்டது. ஜெய் விர்தி கூறுகிறார், ”என் முழு உடலும் ஒருநாள் கல்லாகிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. என்னால் சிரிக்கக்கூட முடியாது, கற்சிலையாகிவிடுவேன். சிற்பியால் செதுக்கப்படாத, நோயால் வடிக்கப்பட்ட சிலையாகிவிடுவேன்.
இப்போது இப்படி வருத்தப்படும் ஜெய் விர்தி, நோயால் பாதிக்கப்படுவதற்குக் முன்னர் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்தார். 2010ஆம் ஆண்டு இடைநிலை பள்ளியில் தொழில்நுட்ப கல்வி ஆசிரியராக பணியாற்றிய விர்தி, விடுமுறைகளில் சுற்றுலா செல்வதில் ஆவல் கொண்டவர். ஒரு விடுமுறையின்போது கிரேக்க நாட்டு தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது, விர்தியின் உடலில் சில மாறுதல்கள் இருப்பதை அவரது தோழி கைரோலீன் பார்த்தார்.
தனது தோலில் மாற்றங்கள் ஏற்பட்டபோது, அதை விர்தி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இது சாதாரணமான தோல் பிரச்சனையாக இருக்கும் என்றே அவர் அலட்சியமாக நினைத்தார். நோயின் தாக்கம் தெரிந்தது தன்னை மோசமான நோய் தாக்கியிருப்பதை மூன்று ஆண்டுகள் கழித்தே உணர்ந்தார் ஜெய் விர்தி.
சுற்றுலாவின்போது தோலில் மாற்றம் ஏற்பட்டதை முதல்முறையாக கவனித்த பிறகு அவர் பல மருத்துவர்களை சந்தித்து ஆலோசித்தார். பல பரிசோதனைகளை மேற்கொண்டார். நாளடைவில் பல பிரச்சனைகளை சந்தித்த அவருக்கு பேனாவை பிடிப்பது, கணினியைக் கையாள்வது போன்றவையும் சிக்கலானது.
சுமார் 18 மாதங்கள் மருத்துவர்களை பார்ப்பதும், பரிசோதனைகள் செய்வதுமாக இயல்பாகவே இருந்தேன். ஆனால் திடீரென ஒருநாள் எனக்கு வித்தியாசமான பிரச்சனை ஏற்பட்டுள்ளதோ என்று சந்தேகம் எழுந்தது. அந்த நொடி இப்போதும் எனக்கு பசுமையாக நினைவில் இருக்கிறது. அந்த சமயத்தில் கார் ஓட்டிக் கொண்டிருந்த என் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது’ என மனம் துடிக்கிறார் ஜெய்விர்தி.
பிறகு தனது மருத்துவரிடம் தனக்கு ஏற்பட்டிருக்கும் நோய் பற்றி வெளிப்படையாக சொல்லுமாறு கேட்டிருக்கிறார். மருத்துவர்கள் அவரது சந்தேகங்களை உறுதி செய்தார்கள். இருந்தாலும் மனம் தளாராமல் இயல்பான வாழ்க்கையில் விர்தி ஈடுபட்டிருந்தார். ஆனால், உடலில் ஏற்பட்ட மாறுதல்களாலும், வேதனையாலும் ஆசிரியர் பணியில் இருந்து மட்டுமல்ல இயல்பான வாழ்க்கையில் இருந்து மட்டுமல்ல, எதிர்கால கனவுகளில் இருந்தும் விலகி நிற்க வேண்டியதாயிற்று.
விர்திக்கு குணப்படுத்த முடியாத நோய் ஏற்பட்டிருப்பதை அவருடைய நண்பர்களால் நம்பமுடியவில்லை. ‘இந்த நோயின் பாதிப்பு வெளியில் இருந்து பார்த்தால் தெரியாது, இது நான் மட்டுமே உணரக்கூடிய விசித்திரமான நோய்” என்கிறார் ஜெய் விர்தி.
ஓமன் நாட்டை சேர்ந்த70 வயது அப்துல்லா என்ற முதியவர் 11வது திருமணம் செய்து கொள்வதற்காக ஹைதராபாத் வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அப்துல்லா என்ற முதியவர் ஓமன் நாட்டில் உள்ள மசூதியில் இமாம் ஆக பணியாற்றி வருகிறார். இவர், டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுகொள்வதற்காக ஓமனில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ளார்.
அதன்பின்னர் ஹைதராபாத் சென்றவர் அங்கிருக்கும் புரோக்கர்களின் உதவியுடன் திருமணத்திற்கு பெண் தேடியுள்ளார்.
ஹைதராபாத்தில் பண ஆசை மற்றும் வறுமையின் காரணமாக சிறு வயது பெண்களின் குடும்பத்தினரின் மனதை மாற்றி வெளிநாட்டில் இருந்து வரும் ஷேக்குகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக தரகர்கள் செயல்படுகின்றனர்.
தரகர்களின் உதவியுடன் திருமணம் செய்து கொள்ள அப்துல்லா பெண் தேடியுள்ளார். இதற்கிடையில் ஹைதராபாத்தில் அதிகரித்து வரும் இதுபோன்ற திருமணங்கள் பொலிசாருக்கு தெரியவந்ததையடுத்து அவர்கள் விசாரணை நடத்தியதில், சிறுமிகளை ஷேக்குகளுக்கு விற்பனை செய்யும் கும்பலை சமீபத்தில் கைது செய்தனர்.
இந்த கும்பல் கைதானதைத் தொடர்ந்து முதியவர் அப்துல்லாவும் பொலிசாரிடம் சிக்கியுள்ளார். அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்ததில் அவர் இதற்கு முன்னர் 3 முறை ஹைதராபாத்திற்கு வந்துள்ளார்.
இதுவரை 10 பெண்களைதிருமணம் செய்துள்ள அவர், தற்போது 11 வது பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் முயற்சில் ஈடுபட்டுள்ளார், பாஸ்போட்டில் இவரது வயதினை குறைத்து 65 ஆக மாற்றியுள்ளார்.
அதுமட்டுமின்றி, உடல்ரீதியான பிரச்சனைகள் மற்றும் கண்பார்வையும் இவருக்கு சரியாக தெரியவரவில்லை என பொலிசார் கண்டறிந்துள்ளனர். தற்போது, இவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
யாழ்ப்பாணத்தில் சிறுவன் மீது கொடூர தாக்குதல் நடத்திய சிறிய தந்தை மற்றும் தாயார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் 7 வயது சிறுவனின் கையை அடித்து முறித்த சிறிய தந்தை மற்றும் அதனை வேடிக்கை பார்த்த தாயையுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் சிறிய தந்தையால் துன்புறுத்தப்பட்ட சிறுவன் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றான்.
தவறொன்றை செய்ததாக கூறி சிறுவனை தாயின் இரண்டாவது கணவன் என கூறப்படும் நபர் கடுமையாக தாக்கியுள்ளர். இதன்போது சிறுவனின் தாயாரும் அதனைத் தடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சிறுவனின் தாயாரும் சிறிய தந்தையும் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாதஸ்வரத்தை அவமதித்ததாக கூறி அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாதஸ்வரத்தை தூக்கியெறிந்து அவமதித்ததாக கூறி, தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவைத்தலைவர் குகேஷ், சென்னை எலும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தங்கள் நாட்டின் மீது போர் தொடுக்க முடிவு செய்துள்ளதாக வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரி யாங் ஹூ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார தடைகள், உலக நாடுகளின் கடும் கண்டனங்கள் என எதையும் காதில் வாங்காமல் தொடர்ந்து நைட்ரஜன் வெடிகுண்டு, ஏவுகணை சோதனையை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.
இது அமெரிக்காவிற்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், வடகொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரி யாங் ஹூ நியூயோர்க்கில் நிருபர்களை சந்தித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
வடகொரியா மீது போர் தொடுக்க டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். எங்களுக்கு எதிரான போரை முதலில் அமெரிக்காவே அறிவித்தது என்பதை ஒட்டுமொத்த உலக நாடுகளும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
தற்கொலைப்படை தாக்குதல்கள் அப்பாவி அமெரிக்கர்களை பாதித்தால் அதற்கு டொனால்டு டிரம்ப்தான் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
எங்கள் நாட்டிற்கு எதிராக அமெரிக்கா போரை அறிவித்துள்ள நிலையில், எதிர் நடவடிக்கை எடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது. வடகொரியாவின் வான் எல்லையில் பறக்கும் அமெரிக்காவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் எங்களுக்கு உரிமை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவும், அமெரிக்காவும் ஒருவருக்கொருவர் வார்த்தைகளை ஏவுகணை போல ஏவிவிடுவது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மன்னார்- யாழ்ப்பாணம் பிரதான வீதி, தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து சுமார் நூறு மீற்றர் தூரத்தில் உள்ள காட்டு பகுதியில் இருந்து எரிந்த நிலையில் ஆண் ஒருவருடைய சடலத்தை நேற்று மாலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.
தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து சுமார் நூறு மீற்றர் தூரத்தில் உள்ள காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் காணப்படுவதாக மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 50 வயதுடைய ஆண் ஒருவர் என மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உடல் முழுவதும் எரிந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்திற்கு மன்னார் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டனர். மேலும் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதே வேளை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சடலத்தை பார்வையிட்டார்.
சடலமாக மீட்கப்பட்டவர் இது வரை அடையாளம் காணப்படவில்லை.மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஐந்தாம் திகதி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் மூன்று இலட்சத்து ஐம்பத்து ஆறாயிரம் மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
இதன்போது வத்தளை மற்றும் பண்டாரவளை பிரதேசங்களில் இருந்து விசேட தேவையுடைய மாணவர்கள் இரண்டு பேரும் பரீட்சைக்குத் தோற்றியிருந்ததுடன் அவர்களின் அசௌகரியத்தை முன்னிட்டு பரீட்சைக்கான விடைகளை குரல் ஒலிப்பதிவின் மூலமாக வழங்கவும் சந்தர்ப்பமளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் ஐந்தாம் திகதி வௌியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
திட்மிட்டவாறு எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 5ம் திகதி பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே. புஸ்பகுமார இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பரீட்சையில் 356,000 மாணவ மாணவியர் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.