கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த புகாரில் பிரபல சாமியார் கைது!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் 21 வயது கல்லூரி மாணவியை கற்பழித்த புகாரில் சாமியார் பலாஹரி மஹாராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பலாஹரி மஹாராஜ் (70) என்ற சாமியார் ஆசிரமம் நடத்தி வருகிறார்.

இந்த ஆசிரமத்திற்கு அடிக்கடி வருகை தரும் பக்தர் ஒருவரது மகளான 21 வயது கல்லூரி மாணவி கடந்த 13-ம் தேதி போலீசின் ஒரு புகார் அளித்தார்.

அந்த புகாரில், கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ம் திகதி இரவு சாமியார் பலாஹரி மஹாராஜ் தன்னை தனியாக அழைத்து ஆசிரமத்தில் வைத்து கற்பழித்ததாக கூறியுள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி வந்த பொலிசார் நேற்று சாமியார் மஹாராஜை கைது செய்தனர்.

மாஜிஸ்திரேடு முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட சாமியாரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து, மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் சாமியார் சிறையிலடைக்கப்பட்டார்.

கடந்த மாதம் அரியானா சாமியார் குர்மீத் ராம் கற்பழிப்பு குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா புகையிரத நிலையத்தில் பொதுமக்கள் முற்றுகை : பொலிஸார் குவிப்பு!!

 
வவுனியா புகையிரத நிலையத்தினை இன்று (23.09.2017) மாலை 5.45 மணியளவில் பொதுமக்கள் முற்றுகையிட்டமையினால் பொலிஸார் குவிக்கப்பட்டனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கொழும்பு புறக்கோட்டையிலிருந்து காலை 5.45 மணிக்கு காங்கேசன்துறை நோக்கி புறப்பட்ட புகையிரதம் பொல்காவலை பகுதியில் தடம்புரண்டதால் சுமார் இரண்டு மணிநேரம் கழித்து மீண்டும் பொல்காவலை பகுதியிலிருந்து பயணிகளை இ.போ.ச பேரூந்து மூலம் வேறோறு புகையிரத நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட புகையிரம் மாலை 5.45 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்தது .

வவுனியா புகையிரத நிர்வாகி இதற்கு மேல் புகையிரதம் காங்கேசன்துறை நோக்கி பயணிக்காது என தெரிவித்தார். இதனால் ஆத்தரமடைந்த பயணிகள் புகையிரத நிலையத்தினை முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பத் புகையிரத நிர்வாகியிடம் சுமார் 10 நிமிடத்திற்கு மேல் கலந்துரையாடினார்.

இதன் பின்னர் புகையிரத நிலையத்திக்கு பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரதம் மாலை 6.45 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்தது. அந்த புகையிரத்தில் பயணிகளை ஏற்றி சென்றனர்.

இதனால் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேல் வவுனியா புகையிரத நிலையத்தில் பதற்ற நிலை காணப்பட்டது.

வவுனியா வடக்கு நெடுங்கேணி பேருந்து நிலையம் அழிவடையும் நிலையில்!!

 
கடந்த 2010ம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்கு பின்னர் பல மில்லியன் ரூபா செலவில் போக்குவரத்து வசதிகளும், தங்குமிட வசதிகளும், 15க்கு மேற்பட்ட கடைத் தொகுதிகளுடன் அமைக்கப்பட்ட நெடுங்கேணி பேரூந்து நிலையம் அழிவடைந்து செல்லும் நிலையில் காணப்படுகின்றது.

இக் கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களை வர்த்தகர்கள் பல லட்சம் முதலீடு செய்து நடத்திச் செல்கின்ற போழுதும் குறித்த பேரூந்து தரிப்பிடத்திற்கு இ.போ.ச , தனியார் பேரூந்துகள் செல்வதில்லை இதனால் வர்த்தகர்கள் பொருளாதார ரீதியில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

நெடுங்கேணி பிரதேச செயலக அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இவ் பேரூந்து நிலையம் தொடர்பாக பொதுமக்கள் கதைக்கின்ற போது மக்கள் பிரதிநிதிகளும் அரச உத்தியோகத்தர்களும் சேர்ந்து பல்வேறு தீர்மானங்களை மேற்கொள்ளுகின்ற போதும் எவ்வித பயனுமின்றி காணப்படுகின்றது

குறித்த பேரூந்து நிலையத்திற்கு இ.போ.ச பேரூந்து, தனியார் பேரூந்துகள் தரித்து பிரயாணிகளை ஏற்றிச்செல்வதன் மூலம் பேரூந்து நிலையம் பாவணையில் இருக்கும் என்பதுடன் வர்த்தர்களும் பொருளாதார ரீதியில் பாதிப்படையமாட்டார்கள்.

மக்களின் வரிப்பணத்தில் கட்டப்படும் அரச சொத்துக்கள் பாவணையற்று காணப்படுகின்றது கவலைக்குறிய விடயம் எனவே நெடுங்கேணி பிரதேச செயலாளரே இது உங்களின் கவனத்திற்கு.

வவுனியா A9 வீதியில் 195மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மத்திய பேரூந்து நிலையமும் இவ்வாறான நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட கிளைக்காரியாலயம் திறந்து வைப்பு!!

 
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் வவுனியா மாவட்ட கிளைக்காரியாலயம் இன்று (23.09.2017) காலை 10.30 மணியளவில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தங்களுடைய பிரச்சனைகள் சம்பந்தமான விடயங்களை கட்சியின் செயலாளரிடம் தெரிவித்தனர்.

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கப் போகும் வடகொரியா: அடுத்த சோதனை எங்கு தெரியுமா?

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப்பின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடகொரியா தனது அடுத்த அணுகுண்டு பரிசோதனையை பசிபிக் பெருங்கடலில் நடத்தலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

உலகநாடுகளை தனது அணுஆயுத சோதனைகளால் மிரட்டி வரும் வடகொரியாவை ஒட்டு மொத்தமாக அழித்துவிடுவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.

இதற்கு வடகொரிய அதிபர் கிம் ஜங் உன், அமெரிக்கா மன சோர்வு அடைந்துவிட்டது. அதன் தலைவர் ஒரு வயதான முதியவர், குரைக்கும் நாய் கடிக்காது என்று தெரிவித்தார்.

இதனையடுத்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப், வடகொரியா அதிபர் ஒரு பைத்தியகாரன், அவரது செயல்பாடு மூலம் தன்நாட்டு மக்களையே பட்டினி போட்டு கொன்று விடுவார். இது தான் அந்த நாட்டில் நடக்கபோகிறது எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் வடகொரியா அதிபர் அமெரிக்காவின் இந்த பேச்சுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து வடகொரியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் Ri Yong-ho செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிபர் கிம் ஜங் உன் சோதனைகளை அதிகாமாக்குங்கள் என்றும் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த சோதனை இருக்க வேண்டும் என்று கூறியதாகவும், நான் நினைக்கிறேன் அது ஹைட்ரஜன் அணு குண்டு சோதனையாகத் தான் இருக்கும், பசிபிக் பெருங்கடலில் நடத்தப்படலாம் என்று கூறியுள்ளார். ஆனால் இது உறுதியான தகவல் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

வட கொரியா உற்பத்தி செய்யும் ஆடைகளை வாங்க தடை : சீனா அதிரடி அறிவிப்பு!!

வட கொரியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவை குறைப்பதுடன் அந்நாடு உற்பத்தி செய்யும் ஆடைகளை வாங்க முற்றிலுமாக தடை விதிப்பதாக சீனா அதிரடியாக அறிவித்துள்ளது.

வட கொரியா சமீபத்தில் 6வது அணு ஆயுத பரிசோதனை செய்ததை தொடர்ந்து அமெரிக்கா அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடையை விதித்தது.

அமெரிக்காவை தொடர்ந்து தற்போது சீனாவும் வட கொரியா மீது பொருளாதார தடையை விதித்துள்ளது. இதன் அடிப்படையில், வட கொரியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவை குறைப்பதுடன், வட கொரியா உற்பத்தி செய்யும் ஆடைகளை வாங்க முற்றிலுமாக தடை விதிப்பதாக சீனா அறிவித்துள்ளது.

வட கொரியா நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சீனா ஒரு முக்கிய வர்த்தக நாடாக திகழ்ந்து வந்தது. ஆனால், தற்போது சீனாவும் வட கொரியா மீது பொருளாதார தடையை விதித்துள்ளது வட கொரியாவிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

வட கொரியாவின் ஆடை உற்பத்தியை சீனா வாங்க மறுத்தால் அந்நாட்டிற்கு பெரும் வணிக இழப்பு ஏற்படும். குறிப்பாக, வட கொரியாவின் ஆடைகளை சீனா வாங்க மறுத்தால் அந்நாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 700 மில்லியன் டொலர் இழப்பு ஏற்படும்.

அதே போல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் குறைந்துவிட்டால் வட கொரியாவில் பெட்ரோலியம் தட்டுப்பாடு ஏற்பட்டு பொருளாதாரம் அதாள பாதாளத்திற்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இளஞ்சிவப்பு நிறத்தில் உருமாறும் ஏரி : காரணம் என்ன?

 
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் ஏரி நீர் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. இதனால் அங்குப் பார்வையாளர்களின் கூட்டம் குவிகிறது.

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் அமைந்துள்ள என்செங் நகரத்தில் மிகப் பெரிய உப்பு ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள தண்ணீர் மிகவும் உவர் தன்மையுடன் காணப்படுகிறது.

இங்கு அதிகளவில் உப்பு உள்ளதால் சீன மக்கள் சுமார் நான்கு ஆயிரம் ஆண்டுகளாகத் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உப்பை இந்த ஏரியிலிருந்து எடுத்து வருகின்றனர்.

இந்த ஏரியில் சோடியம் சல்பேட் உப்பு அதிக அளவு உள்ளது. உலகிலேயே இந்த உப்பு அதிகம் உள்ள மூன்றாவது ஏரி இதுதான்.

தொடக்கத்தில் மற்ற ஏரிகளைப் போன்றுதான் இந்த ஏரியும் காட்சியளித்தது. ஆனால், தற்போது அதில் உள்ள டுனாலியேல்லா சலினா (dunaliella salina) என்ற பாசியினால், இந்த ஏரி இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

இந்தப் பாசி நீரினை நிறம் மாற்றும் தன்மையுடையது. இதனால், ஒருபக்கம் பச்சை நிறத்திலும், மறுபக்கம் இளஞ்சிவப்பு நிறத்திலும் காட்சியளிக்கிறது.

மேலும் இந்த ஏரியில் அதிக அளவு உப்பு இருப்பதால் ‘Dead Sea’ போன்று இதிலும் மனிதர்கள் மிதப்பார்கள் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே இதை ‘சீனாவின் Dead Sea என்று அழைக்கின்றனர்.

பார்ப்பதற்கு அழகாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள், பார்வையாளர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு இந்த ஏரி ரத்த சிவப்பு நிறத்தில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டீச்சர் தயவு செய்து இது போன்று செய்யாதீர்கள் : தற்கொலை செய்து கொண்ட மாணவனின் உருக்கமான கடிதம்!!

உத்திரப்பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட 5ஆம் வகுப்பு மாணவனின் உருக்கமான கடிதம் சிக்கியது.

உத்திரப்பிரதேசத்தின் கோரக்பூா் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் நவநீத் இரண்டு தினங்களுக்கு முன்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நவநீத் சாரியாக படிக்காத காரணத்தால் வகுப்பு ஆசிரியை மாணவனுக்கு தண்டனை அளித்ததால், மாணவன் இந்த முடிவை எடுத்துக் கொண்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் மாணவனின் புத்தக பையில் கடிதம் ஒன்று இருந்ததைக் கண்ட அவரது தந்தை, கடிதத்தில் இருப்பதை படித்துள்ளார்.

அதில் நவநீத், அப்பா இன்று என்னுடைய முதல் தோ்வு, ஆனால் எனது வகுப்பு ஆசரியை என்னை தொடா்ந்து மூன்று வகுப்புகளுக்கு நிற்க வைத்து தண்டனை அளித்ததால், நான்அழுது கொண்டே நின்றிருந்தேன்.

ஆனால் ஆசிரியர் தன்னை பொருட்படுத்தாமல் தொடா்ந்து பாடம் எடுப்பதிலேயே கவனம் செலுத்தியதால், நான் என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் எனவும் இது போன்ற தண்டனையை யாருக்கும் அளிக்க வேண்டாம் என்று எனது ஆசிரியை கேட்டுக் கொள்கிறேன் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து கடிதத்தின் அடிப்படையில், அவரது தந்தை அங்கிருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்ததால், இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படியும் ஒரு குடும்பமா? அப்படியென்ன ஆச்சரியம் நிகழ்த்தினார்கள்?

 
குப்பை மேடாக காட்சியளித்த காட்டு வழிப்பாதையை ஒரு குடும்பமே சேர்ந்து சுத்தம் செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் மெல்லின்கொப்பா கிராமத்தை சேர்ந்தவர் ரஷ்மி ராவ் (37) இவர் தனது குடும்பத்தாருடன் ஷிவ்மோகா நகருக்கு காரில் செல்லும் போது ஒரு காட்டு வழி பாதையை கடக்க வேண்டும்.

அந்த பாதையானது அதிகளவில் குப்பைகள் மற்று காலி மது பாட்டில்கள் கொட்டப்பட்டு அசுத்தமாக காட்டியளித்துள்ளது. இதை பலமுறை பார்த்த ரஷ்மி, அரசு ஏன் இதை சுத்தம் செய்யவில்லை என தனது கணவரிடம் கேள்வியெழுப்பினார்.

பின்னர் கடந்த வாரம் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து அந்த பகுதியை சுத்தம் செய்ய முடிவெடுத்த ரஷ்மி அதற்கான செயலிலும் இறங்கினார்.

அதன்படி ரஷ்மி, அவர் கணவர் மற்றும் குழந்தைகள் இதை செய்ய முடிவெடுத்தனர். அவர்களுடன் மைத்துனர் மற்றும் அவர்களின் குழந்தைகளும் வந்தார்கள். எல்லோரும் கையுறை அணிந்து கொண்டு குறித்த பகுதியில் மலையளவு சேர்ந்திருந்த குப்பைகள் மற்றும் பாட்டிகளை சில மணி நேரத்தில் அப்புறப்படுத்தி பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்தனர்.

150-200 கண்ணாடி பாட்டில்களை அவர்கள் சேகரித்தனர். தற்போது குப்பை மேடாக இருந்த இடம் சுத்தமாக காட்சியளிக்கிறது. இது குறித்து ரஷ்மி கூறுகையில், சுற்றுலா வரும் பயணிகள் ஆங்காங்கே குப்பைகள் மற்றும் பாட்டில்களை போட்டு விட்டு சென்றுவிடுகின்றனர். பல பாட்டில்கள் உடைந்துவிடுவதால் அது இங்குள்ள மிருகங்களுக்கும், இவ்வழியே செல்லும் மனிதர்களுக்கும் ஆபத்தை விளைக்கிறது என கூறியுள்ளார்.

குடும்பத்துடன் தான் செய்த செயலை ரஷ்மி பேஸ்புக்கில் பதிவிட்டதுடன், இது போன்ற அசுத்தமான பகுதிகளை சுத்தம் செய்ய மக்கள் தங்களுடன் இணைய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

 

150 கிலோ எடையை குறைக்க முயற்சி செய்த பெண் மரணம்!!

 
திருவண்ணாமலை மாவட்டத்தில் உடல் எடை குறைப்பதற்கா அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் உயிரிழந்துள்ளார்.

வளர்மதி(46) என்பவர் 150 கிலோ எடையை குறைக்க ஆகஸ்ட் 23ம் திகதி கீழ்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் வளர்மதிக்கு 8 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த 9வது அறுவை சிகிச்சைக்கு பின் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வளர்மதி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தனது மனைவி உயிரிழந்துவிட்டார் என அவரது கணவர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், வளர்மதியின் கணவர் அழகேசன் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 வயதுச் சிறுவனை கடித்து குதறிக் கொன்ற நாய்கள் : காப்பாற்றாமல் வீடியோ எடுத்த மக்கள்!!

ஆந்திராவில் 4 வயது சிறுவன் ஒருவனை நாய்கள் கடித்துக் கொண்டிருந்த போது, அங்கிருந்த பொதுமக்கள் அச்சிறுவனை காப்பாற்றமல் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தின் புறநகர் பகுதியில், கூலி தொழில் செய்யும் தம்பதியின், 4 வயது மகன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது அங்கு சுற்றித் திருந்த வெறிநாய்கள், திடீரென்று சிறுவன் மீது, அவனை கடித்து குதறின. இதைக் கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் சிறுவனை நாயிடம் இருந்து காப்பாற்றாமல், தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

தங்களது மகன் நாயிடம் கடி வாங்குவதை அறிந்த சிறுவனின் பெற்றோர், உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து நாயிடம் இருந்து காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பல நாய்கள் கடித்ததில், உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டதால், சிறுவன் இறந்து விட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

</p><p>இது குறித்து சிறுவனின் தாயார் கூறுகையில், தங்கள் வீட்டருகே, ஏராளமான வெறி நாய்கள் சுற்றித் திரிவதாக, ஒரு வாரத்திற்கு முன்பே, நகராட்சியில் புகார் அளித்ததாகவும், ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், சிறுவன் அநியாயமாக உயிரிழந்துள்ளான் என்று கூறியுள்ளார்.

77 வருடங்களாக உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் வாழும் அதிசய மனிதர்!!

77 ஆண்டுகளாக தண்ணீர் மற்றும் உணவு உட்கொள்ளாமல் வாழும் 82 வயது சாமியார் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இந்தியாவில் ப்ரஹ்லாத் ஜானி (82) என்பவர் வாழ்ந்து வருகிறார், கடந்த 77 ஆண்டுகளாக தான் உணவு சாப்பிடவில்லை மற்றும் நீர் குடிக்கவில்லை என்று கூறுகிறார்.

ப்ரஹ்லாத் ஜானியை மாதாஜி என்றும் மக்கள் அழைக்கிறார்கள். 100- 200 கிலோமீட்டர் நடந்தாலோ மற்றும் சில நேரம் 12 மணிநேரம் தியானம் செய்தால் ஜானிக்கு பசி அல்லது சோர்வு ஏற்படுமாம்.

10 நாட்களுக்கு மேல் ஒரு மனிதனால் தண்ணீர் குடிக்க முடியாமல் இருக்க முடியாது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இந்நிலையில், ஜானியை மருத்துவர்கள் கண்காணித்தனர், அதில் 15 நாட்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை அவர் உட்கொள்ளவில்லை என்பதை அறிந்து அவர்கள் வியப்படைந்தனர்.

ஜானி எதுவும் சாப்பிடவில்லை என்பதால் சிறுநீர் கழிப்பதும், மலம் கழிப்பதும் இல்லை. ஜானியின் கழிவறை மூடப்பட்ட நிலையில் அவரது ஆடைகளும் சோதிக்கப்பட்டது, அதிலும் எந்த தடயங்களும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்திற்காக காத்திருந்த பாடசாலை மாணவி திடீர் மரணம்!!

யக்கல பிரதேசத்தில் மாணவி ஒருவர் திடீரென உயிரிந்ந்த சம்பவம் மாணவர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டுக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்திருந்த மாணவி ஒருவரே இவ்வாறு திடீரென உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனை அவதானித்த மாணவர்கள் இருவர் அந்த மாணவியை முச்சக்கர வண்டியின் மூலம் வைத்தியசாலைக்கு கொண்ட சென்று சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.

16 வயதான சச்சினி கௌசல்யா என்ற இந்த மாணவி யக்கல அநுர மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றார்.

மாணவியின் உயிரை காப்பாற்றுவதற்கு வைத்தியர்கள் கடுமையாக போராடியுள்ளனர். எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலதிக பரிசோதனைக்காக அவரது சடலம் ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாயின் உயிரை காப்பாற்ற 350 கிலோமீட்டர் தூரம் ஓடிய இளைஞன்!!

 
தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் அறுவடை செய்யும் இயந்திரத்தில் சிக்கி நான்கு கால்களையும் இழந்த நாய் ஒன்று தொடர்பில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

அபாயகட்டத்திலிருந்து நாய்க்கு ஆரம்ப சிகிச்சையை தம்மிக்க பண்டார என்ற இளைஞனே மேற்கொண்டுள்ளார்.

குறித்த இளைஞனினால் நாய் கண்டுபிடிக்கப்பட்டு உயிரிழக்கவிடாமல் சிகிச்சையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட சிகிச்சையின் பின்னர் கால்களை இழந்த நாயை அஹங்கம பிரதேசத்தில் உள்ள Animal SOS நிறுவனத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கால்களை இழந்த நாயை காப்பாற்ற பொலன்னறுவையில் இருந்து 350 கிலோமீட்டர் தூரம் அஹங்கமவுக்கு சென்றுள்ளனர்.

தெரு நாய் ஒன்றின் உயிரை காப்பாற்றுவதற்காக இவ்வாறு தனது காலம், நேரம் மற்றும் பணத்தை செலவிட்ட இளைஞனுக்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

யாழில் மாங்காய் பறிக்க முற்பட்டவருக்கு நேர்ந்த அவலம்!!

யாழ். கொடிகாமம், வெள்ளாம் போக்கட்டிப் பகுதியில் மாங்காய் பறிக்க முற்பட்ட குடும்பஸ்தரொருவர் தவறுதலாக விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், படுகாயமடைந்த குடும்பஸ்தர் யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடும்பஸ்தர் உணவுத் தேவைக்காகத் தனது வீட்டு வளவினுள் காணப்பட்ட மாமரத்தில் ஏறி மாங்காய் பறிக்க முற்பட்ட போதே இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

வேண்டுமென்றே இலங்கை தோற்றதாக குற்றச்சாட்டு : சர்ச்சையை தீர்க்க இலங்கை அணி வீரர்கள் கோரிக்கை!!

இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரமோதய விக்ரமசிங்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு தினேஷ் சந்திமால், உபுல் தரங்க உட்பட இலங்கையின் நாற்பது முன்னணி வீரர்கள் கையொப்பமிட்டு இலங்கை கிரிக்கெட் சபையிடம் கடிதமொன்றைக் கையளித்துள்ளனர்.

இலங்கையில் அண்மையில் நடந்த இந்திய அணிக்கு எதிரான அனைத்துப் போட்டிகளிலும் இலங்கை படுதோல்வியடைந்தது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றின் நேர்காணலில், மேற்படி போட்டிகளின்போது சந்தேகத்துக்கு இடமான சில அசாதாரண நிகழ்வுகளைக் காண முடிந்தது என்று தெரிவித்திருந்தார்.

போட்டிக்கு முன்னதான வீரர்களின் சந்திப்பில், சம்பந்தமே இல்லாத ஒருவர் கலந்துகொண்டமை, நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்றால் என்ன செய்வது என்ற அணியின் தீர்மானத்தை அணித் தலைவர் மாற்றியமைத்தது, போட்டியின்போது உரிய அனுமதி அல்லது வழிகாட்டல் இன்றி பின்வரிசை வீரர் ஒருவர் முன்வரிசையில் ஆடச் சென்றது உள்ளிட்ட ஒன்பது குற்றச்சாட்டுக்களை பிரமோத்ய தெரிவித்திருந்தார்.

இவை இயற்கைக்கு மாறான செயல்கள் என்றே தாம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இவற்றைக் கடுமையாக நிராகரித்திருக்கும் அணி வீரர்கள், அவை குறித்து ஆய்வு நடத்துமாறும், முடியுமானால் தாம் சுமத்திய குற்றச்சாட்டுக்களை பிரமோத்ய நிரூபித்துக் காட்டட்டும் என்றும் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.