படுகாயமடைந்த மெய்ப்பாதுகாவலரை கட்டியணைத்து கதறி அழுத நீதிபதி இளஞ்செழியன்!!(காணொளி)

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலருடைய உறவினர்களின் காலில் விழுந்து நீதிபதி மா.இளஞ்செழியன் அழுதுள்ளார்.

இந்த நிலையில், இன்றைய தினம் நீதிபதி இளஞ்செழியனை சந்திக்கச் சென்ற மெய்ப்பாதுகாவலர்களின் உறவினர்கள் முன்பாக கதறி அழுத நீதிபதி, தனது இரு கைகளையும் கூப்பி மெய்பாதுகாவலரின் மனைவியிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.

யாழ். நல்லூர் பகுதியில் வைத்து, நேற்றைய தினம் நீதிபதி இளஞ்செழியன் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார்.

இந்த சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனுக்கு 17 ஆண்டுகளாக, நம்பிக்கைக்குரியவராக இருந்த மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் மீது குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிலாபத்தை சேர்ந்த 51 வயதுடைய ஹேமரத்ன என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

படுகாயமடைந்த மெய்ப்பாதுகாவலரில் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

இன்று காலை வைத்தியசாலைக்கு விஜயம் செய்த நீதிபதி இளஞ்செழியன் படுகாயமடைந்த மெய்ப்பாதுகாவலரை ஆரத்தழுவி கண்ணீர்விட்டு கதறியழுது தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து, யாழ்.மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன், அதிரடிப் படையினரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலில் மண்டியிட்டு கண்ணீர் விட்டழுத நீதிபதி இளஞ்செழியன் : மனதை நெகிழவைத்த சம்பவம்!!

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலருடைய உறவினர்களின் காலில் விழுந்து நீதிபதி மா.இளஞ்செழியன் அழுதுள்ளார்.

இந்த நிலையில், இன்றைய தினம் நீதிபதி இளஞ்செழியனை சந்திக்கச் சென்ற மெய்ப்பாதுகாவலர்களின் உறவினர்கள் முன்பாக கதறி அழுத நீதிபதி, தனது இரு கைகளையும் கூப்பி மெய்பாதுகாவலரின் மனைவியிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.

யாழ். நல்லூர் பகுதியில் வைத்து, நேற்றைய தினம் நீதிபதி இளஞ்செழியன் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார்.

இந்த சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனுக்கு 17 ஆண்டுகளாக, நம்பிக்கைக்குரியவராக இருந்த மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் மீது குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிலாபத்தை சேர்ந்த 51 வயதுடைய ஹேமரத்ன என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து, யாழ்.மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன், அதிரடிப் படையினரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்புக்களும்!!

ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் -சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது. இந் நிகழ்வு இவ் வருடம் 23.07.2017 ஞாற்றுக்கிழமை அமைவதாக வாக்கிய பஞ்சாங்கம் கணித்துள்ளது. அன்றைய தினம் பூசம் நட்சத்திரமும் கூடி இருப்பதால் மிகவும் சிறப்பு பொருந்தியதாக ஆகமங்கள் கூறுகின்றது.

நம்மை நிம்மதியாக வாழ வைக்கும் பித்ரு தர்ப்பணம்

ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம்குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர்தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர்.

இறை விருப்பப்படி மானிடருக்கு ஆசி கூறி இல்லறத்தை நல்லறமாக்கி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் அதிகாரம் படைத்தவர்கள் தேவர்களும், பித்ருக்களுமே! அமாவாசை தினம் பிதிர் கடன் செய்வதால் மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிடைக்கின்றது என்பது ஐதீகம்.

நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ்மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் திகதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும்செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.

ஒருவேளை முன்னோர்களின் இறந்தத் திதி தெரியாதவர்கள், ஆடி அமாவாசை அல்லது தை அமாவாசையன்று இராமேஸ்வரம் அல்லது சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது நன்று. அதுவும் முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையளையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும்.

சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது. திருவாதிரை, புனர்பூசம்,பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதுர்தர்ப்பணம் பன்னிரெண்டு ஆண்டுகள் பிதுர்திருப்தி ஏற்படுத்தும்.

அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பித்ருபூஜையானது, பித்ருக்களுக்கு தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தைத் தரும். மாசி மாதத்து அமாவாசையானது சதய நட்சத்திரத்தன்று வருமானால், அது பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்ககூடிய காலமாகும்.

மாசி மாத அமாவாசை அவிட்டம் நட்சத்திரத்தில் வருமானால், அதுவும் பித்ருக்களுக்கு அளவற்ற மனமகிழ்ச்சியைத்தரும். அன்று நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால். மாசி மாதம் அமாவாசை அவிட்டம் நட்சத்திரம் வரும் நாளில் பித்ருக்களை நினைத்து அன்னம் அல்லது தண்ணீர் தானம் செய்தால் பதினாயிரம் ஆண்டுகள் பிதுர்களைத் திருப்தி செய்த பலன் கிடைக்கும்.

மாசி மாதம் வரும் அமாவாசை பூரட்டாதி நட்சத்திரத்தில் வந்து, அப்போது அந்த நன்னாளில் சிரார்த்தம் செய்தால், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என விஷ்ணுபுராணம் கூறுகிறது.

திதிகள் தோன்றுவதற்கான காரணம்

வானவியல் கணிப்பின் படி பூமியை சந்திரன் வலம்-சுற்றி வருவதும் பூமியும் சந்திரனும் இணைந்து சூரியனை வலமாக சுற்றி வருவதும் நிரூபிக்கப்பெற்ற உண்மைகள். பூமி தன்னைதானே சுற்றுவதால் பூமியில் இரவு, பகல் ஏற்படுகின்றன. அத்துடன் தன்னைத் தானே சுற்றும் பூமி, சூரியனையும் சுற்றி வருவதானது நாமும் உறுண்டு கொண்டு ஆலயத்தைச் சுற்றி அங்கப் பிரதிஷ்டை செய்வது போன்ற நிகழ்வாகும். சந்திரன் பூமியை வலம் வருவதோடு பூமியுடன் இணைந்து சூரியனையும் சுற்றி வருவருகின்றமையால் பூமியில் திதிகள் தோன்றுகின்றன. பூமி தனது அச்சில் 231/2 பாகை சரிவாகச் சுற்றுவதனால் பருவகாலங்கள் உண்டாகின்றன.

சில இரவுகளில் பூமியில் உள்ளோருக்கு சந்திரனைக் காண முடிவதில்லை. காரணம் சந்திரன் பூமியைச் சுற்றுவதால், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் 29.53 நாட்களுக்கு ஒரு முறை ஒரே நேர்கோட்டில் வருகின்றது. அப்போது பூமியில் உள்ளோருக்கு சந்திரன் தெரிவதில்லை. வேறு விதமாக கூறுவதாயின் சந்திரன் தானாக ஒளிர்வதில்லை சூரியனின் ஒளியைப் பெற்று பிரதிபலிப்பதனால் ஒளிர்வது போல் தோற்றமளிக்கின்றது. அதனால் பூமிப்பக்கம் இருக்கும் சந்திரனின் ஒருபக்கம் (சூரியனின் பக்கத்திற்கு மறு பக்கம்) சூரிய ஒளி படாது இருட்டாக இருப்பதனால் எம்மால் சந்திரனைப் பார்க்க முடிவதில்லை. ஆனால் சூரியனின் பக்கம் இருந்து பார்ப்போருக்கு பிரகாசமாக தெரியும். அன்றைய தினமே அமாவாசை திதி என அழைக்கப்பெறுகின்றது.

ஆனால் சில இரவுகளில் சந்திரனின் முழுத் தோற்றத்தையும் பூமியில் உள்ளோரால் பார்க்க முடிகிறது. காரணம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சஞ்சரித்த சந்திரன் சுமார் 15 நாட்களில் பூமியின் மறுபக்கத்திற்கு சென்று விடுகின்றது, அதாவது; சந்திரன், பூமிக்கு ஒருபக்கத்திலும், சூரியன் மறுபக்கத்திலுமாக, மூன்றும் ஒரே நேர் கோட்டில் வருகின்றது. இப்போது பூமியை நோக்கி இருக்கும் சந்திரனின் பகுதியில் சூரியக் கதிர்கள் பட்டு ஒளிர்கின்றது. அதனால் சந்திரன் பூமியில் உள்ளோருக்கு பிரகாசமாகத் தோற்றமளிக்கின்றது. இந் நாளை பூரணை அல்லது பௌர்ணமி திதி என்று அழைக்கப்பெறுகின்றது.

சூரியனும் சந்திரனும்

சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். சூரியனைப் “பிதிர் காரகன்” என்றும், சந்திரனை “மாதுர் காரகன்” என்றும் சோதிடம் கூறுகின்றது. அதனால் சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாவாக வழிபடும் தெய்வங்களாக இந்துக்கள் கருதுகின்றனர்.

இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபடிகின்றனர். அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்களும், பூரணை தினத்தில் அன்னையை இழந்தவர்களும் வழிபடுவது புராதன காலம் தொட்டு பின்பற்றிவரும் ஒரு வழக்கமாகும்.

அமாவாசைத் திதி, மாதா மாதம் நிகழ்ந்தாலும் அவற்றுள் தைமாதத்திலும், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதிக்கு அதிக சிறப்பு உண்டு.

இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்றும் அழைப்பர். தட்சணா கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதி பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

அதேபோல், சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் தொடக்க மாதமாக தை மாதம் அமைவதால், அந்த மாதத்தில் வரும் அமாவாசைத் திதியும் பிதுர் வழிபாட்டிற்கு சிறப்பானது எனக் கொள்ளப்படுகிறது.

ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாக இருப்பதனால், அன்றைய தினம் தந்தையை இழந்தவர்கள் விரதம் அனுஷ்டிக்கின்றனர்.

இந்துக்களின் நம்பிக்கை

பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து தோஷ நிவர்த்தி பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது.

அமாவாசை, பெளர்ணமி ஆகிய இரண்டு விரதங்களும் முறையே காலமான தந்தை, தாய் ஆகியோரைக் குறித்து அவர்களின் (சந்ததியினரால்) பிள்ளைகளால் அனுட்டிக்கப்படும் விரதங்கள் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் இந்த விரதங்களுக்குரிய தினங்கள் வருகின்றன. இவ்விரதங்களை அனுஷ்டிப்பவர்கள் ஆசார சீலர்களாக உபவாசம் இருந்தும் அவ்வாறு இருக்க இயலாதவர் ஒரு பொழுது உண்டும் அனுஷ்டிப்பர்.

இத்தினத்தில் புண்ணியத் தீர்த்தங்களில் நீராடித் தூய்மையாராய் பிதிர், தருப்பணம் செய்தும் பிண்டதானம், சிரார்த்தம் செய்தும் இறைவனை வழிபட்டும் அந்தணர்களுக்குத் தானமும், விருந்தினர், சுற்றந்தார், ஏழைகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவும் அளித்தும் அவர்களுடன் போசனம் செய்து விரதக் கொள்கையுடன் இருப்பர்.

இறந்த தந்தை, தாயார் நற்கதி அடைதற் பொருட்டும், பிதிகளாக எம்மைச் சுற்றும் அவர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசி பெறவும் அமாவாசை, பெளர்ணமி நாட்களில் பிள்ளைகள் விரதங்களை அனுஷ்டிக்கிறார்கள். பிதிர்கள் மகிழ்வுற்றால் அம்மனை சிறக்கும் என்பது ஐதீகம். யாழ்ப்பாணத்தில் சிறப்பான நாட்கள் (கனத்த நாட்கள்) என அழைக்கப்படும் விளக்கீடு, தீபாவளி போன்ற தினங்களில் “வீட்டுக்குப் படைத்தல்” என்னும் நிகழ்வு வழக்கத்தில் உள்ளது. அண்மையி யாரவது அந்த வீட்டில் இறந்திருந்தால் தவறாது வீட்டுக்குப் படைத்து பிதிர்களை மகிழ்விப்பர்.

சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமியும், ஆடி, தை மாதங்களில் வருகின்ற அமாவாசையும் சிறப்புப் பொருந்தியன என்று சைவ நுல்கள் கூறுகின்றன.

அவரவர் தந்தை, தாயார் இறந்த திதிகளைத் தவற விட்டவர்கள் ஆடி அமாவாசை தினத்தில் தந்தையை நோக்கியும், சித்திரைப் பெளர்ணமி தினத்தில் தாயின் பொருட்டும் சிராத்தம், தருப்பணம், பிண்டதானம் என்பவற்றைச் செய்வர்.

யாழ்ப்பாண பகுதியில் வாழும் மக்கள் புரதான காலம் தொடக்கம் கீரிமலை நகுலேஸ்வரத்திலும் (கீரிமலைக் கேணி, கடல்), திருவடிநிலை தீர்த்தக் கரையில் தீர்த்தமாடியும் தம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தும்;

மன்னார் பகுதியில் வாழும் மக்கள் பாலாவியில் தீர்த்தமாடியும் தம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து பிதிர் கடன் செலுத்தியும், மட்டக்களப்பு பகுதியில் வாழும் மக்கள் மாமாங்கப் பிள்ளையார் கோவில் அமிர்தகழியில் தீர்த்தமாடியும் தம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து பிதிர் கடன் செலுத்தியும்;

திருகோணமலை பகுதியில் வாழும் மக்கள் கோணேஸ்வரர் ஆலய தீர்த்தக் கரையில் தீர்த்தமாடியும் தம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து பிதிர் கடன் செலுத்தியும்,

கொழும்பு வாழ் மக்கள் மோதர-முகத்துவாரம்-கடலில் தீர்த்தமாடியும் தம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து பிதிர் கடன் செலுத்தியும்;

கனடா-ரொறொன்ரோ வாழ் மக்கள் றிச்மன் -கில்ஸ் இந்து ஆலயத்ததில் அமைந்துள்ள தீர்த்த வாவியில் விஷேடமாக ஒழுங்கு செய்யப்பெற்றுள்ள புரோகிதர் மூலம் தங்கள் பிதிர் கடன்களைச்செலுதி வருகின்றனர்.

மற்றைய இடங்களில் இருப்போர் தமக்கு அண்மையில் இருக்கும் கடற்கரை, ஆறு, குளம் போறவற்றில் நீராடி தமது பிதிர் கடன்களை செலுத்துகின்றனர்

இரு வேறு சக்திகளான சூரியன், சந்திரன் ஒன்றாக இணையக் கூடிய நாளே அமாவாசையாக கொள்ளப்படுகிறது. எல்லா திதியிலும், ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் (வலுவிழப்பது) அடையும். ஆனால் அமாவாசை தினத்தன்று எந்தக் கிரகமும் திதி தோஷம் பெறுவதில்லை.

இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விடயங்கள் மேற்கொள்ளப்பட்டால் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைய முடியும். மருந்து உண்ணுதல், நோயாளிகள் குளித்தல் உள்ளிட்ட பல விடயங்களை அமாவாசை திதியன்று துவங்கலாம் என சித்த நூல்கள் கூறுகின்றன.

எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அமாவாசையன்று செய்தால் அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ராகு-கேது பரிகாரம், சர்ப்பதோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இந்த மாதிரியானவற்றிற்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.

சங்க காலத்திலும் இதுபோன்ற விடயங்களும் நடைமுறையில் இருந்துள்ளது. முன்னோருக்கு திதி செய்வது, தர்ப்பணம், ஆற்றில் புனித நீராடுவது போன்றவை அமாவாசை தினத்தில் மேற்கொள்ளப்பட்டதை சங்க கால நூல்களும் உறுதி செய்துள்ளன.

மனிதப் பிறவி மகத்தான பிறவி. மனிதனாகப் பிறந்தால் தான், இறைவனை எளிதில் அடைய முடியும். வேறு எந்தப் பிறவிக்கும், இந்த சிறப்பு கிடையாது. வானுலகில் தேவராக இருந்தாலும் கூட, இறைவனைத் தரிசிக்கத்தான் முடியுமே ஒழிய, அவரோடு இரண்டறக் கலக்க முடியாது.

ஆக, இத்தகைய அரிய மானிடப்பிறவியைத் தந்த நம் முன்னோருக்கு, நன்றி தெரிவிக்க வாரிசுகள் நடத்தும் ஒரு விழாவாக அமாவாசை, பௌர்ணமியை எடுத்துக் கொள்ளலாம். சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் துவக்கமான தை மாதம், மிகவும் புனிதமானது. அந்த மாதத்தில் வரும் அமாவாசையில், கடற்கரை தலங்களுக்குச் சென்று, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வரலாம்.

திருவள்ளுவர் திருக்குறளில், தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை என்கிறார் திருவள்ளுவர். “தென்புலத்தாராகிய முன்னோர், கடவுள், விருந்தினர், உறவினர், தன் குடும்பம் ஆகிய ஐந்து பேரையும் இல்லறத்தில் இருப்பவர் காப்பாற்ற வேண்டும்” என்பது இதன் பொருள்.

இதில், முதலிடத்தை முன்னோருக்கு தருகிறார் வள்ளுவர். இதிலிருந்தே நம் முன்னோருக்கு வாரிசுகள் செய்ய வேண்டிய கடமை தெளிவாகிறது. அவ்வகையில், தை அமாவாசையையும், ஆடி அமாவாசையையும் “முன்னோர் திருநாள்” என்றே அழைக்கலாம். இந்த நன்னாளில், நம் முன்னோரை நன்றியுடன் நினைவு கூர்வோம்.

வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் வாள்வெட்டு : இருவர் படுகாயம் : மோட்டார் சைக்கிள் சேதம்!!

வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் மீது வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு 10.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாள்வெட்டில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து வவுனியா பொலிசார் சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் பயணித்த மோட்டர் சைக்கிளும் உடைத்து நொருக்கப்பட்டுள்ளது.

நீதிபதி மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை கண்டித்து வடக்கில் பணிப் பகிஷ்கரிப்பு!!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டினை கண்டித்து பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக வட மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ். நல்லூர்ப்பகுதியில் வைத்து நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,

நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோகமானது மிலேச்சத்தனமான செயற்பாடாகும். நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதனை நாம் கண்டிக்கின்றோம்.

நீதித்துறைக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லையாயின் சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என்பதனை சிந்திக்க தலைப்பட்டுள்ளோம்.

நீதிபதி மீதான தாக்குதலானது இலங்கை நீதித்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும் என்பதனால் அதனை கண்டித்து நாளை வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்களாகிய நாம் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தாது பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.

இதன்போது வடக்கில் உள்ள சமூகம் சார் அமைப்புகள் மற்றும் சமூக அக்கறை கொண்ட சங்கங்கள் அனைத்தையும் எம்முடன் இணைந்து அன்றைய தினத்தில் ஒத்துழைப்பு வழங்குமாறு கோருகின்றோம் என குறிப்பிட்டுள்ளனர்.

கதறியழுத யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்!!(காணொளி)

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலின் போது படுகாயமடைந்த அவரது மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய யாழ். நல்லூர் பகுதியில் வைத்து நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார். இந்த தாக்குதலின் போது நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் இருவர் மீது குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்திருந்தனர்.

உடனடியாக அவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரு மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்துள்ளார்.

வயிற்றில் பலத்த காயமடைந்திருந்த மெய்ப்பாதுகாவலரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

குறித்த மெய்ப்பாதுகாவலர் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக 17 ஆண்டுகள் இருந்துள்ளார்.

இவரது சடலத்தை பார்வையிட வைத்தியசாலைக்குச் சென்ற நீதிபதி இளஞ்செழியன் அவரது உறவினர்களின் காலில் விழுந்து தனது நன்றியை தெரிவித்ததுடன், தனது மெய்ப்பாதுகாவலரின் இழப்பைதாங்கமுடியாது கதறியலும் காட்சி அருகிலிருந்தவர்களையும் கண்கலங்கவைத்ததுடன் இவரது மனிதாபிமானத்திற்கு இச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

இப்படி ஒரு நீதிபதி எமக்கு கிடைத்திருப்பதற்கு நிற்சயமாக தமிழர்களான நாம் அனைவரும் பெருமைப்படவேண்டும்.

நீதிபதி இளஞ்செழியனின் நம்பிக்கைக்குரிய மெய்பாதுகாவலர் உயிரிழப்பு!!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலின் போது படுகாயமடைந்த அவரது மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்துள்ளார் என யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய யாழ். நல்லூர் பகுதியில் வைத்து நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார்.

இந்த தாக்குதலின் போது நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் இருவர் மீது குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்திருந்தனர்.

உடனடியாக அவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரு மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்துள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வயிற்றில் பலத்த காயமடைந்திருந்த மெய்ப்பாதுகாவலரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

குறித்த மெய்ப்பாதுகாவலர் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக 17 ஆண்டுகள் இருந்துள்ளதுடன், நம்பிக்கைக்குரியவராகவும் இருந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, தாக்குதல் நடத்தியதாக கருதப்படும் சந்தேக நபர் தீவகப் பகுதியில் வைத்து அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியவர் கைது!!

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் எனக் கருதப்படும் சந்தேக நபரை விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் இணைந்து கைது செய்துள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்றைய தினம் நல்லூர் பகுதியில் வைத்து, நீதிபதி இளஞ்செழியன் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார்.

இத்தாக்குதலின் போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் படுகாயமடைந்திருந்தனர். குறித்த தாக்குதல்தாரி, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் லிங்கம் கூல்வார் வழியாக தப்பிச் சென்றிருந்தார்.

இதனையடுத்து யாழ். நகரப்பகுதி பலத்த பாதுகாப்பிற்குள் கொண்டுவரப்பட்டதுடன், விசேட அதிரடிப்படையினர் களத்தில் இறக்கப்பட்டனர்.

இந்நிலையில் தான் தீவகப் பகுதிக்கு தப்பிச் சென்ற மர்ம நபரை விசேட அதிரடிப் படையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர் என தெரியவருகிறது.

இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த நபரை யாழ் மாவட்ட பிராந்திய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இது குறித்து யாழ்.மாவட்ட பொலிஸார் உத்தியோகபூர்வமாக எந்தவிதமான தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

வவுனியாவில் அகவை 80ஐ எட்டிய அறப்பணியாளர் கண்ணகி தேவராசாவின் அமுதவிழா!(படங்கள்)

வவுனியாவில் இந்துமாமன்றம் மற்றும் மணிவாசகர் சபையின் தலைவர் வை.செ.தேவராசா அவர்களின் 80வது அகவை அமுதவிழா வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் வவுனியா கந்தசாமி கோவில் திருமண மண்டபத்தில் இன்று 22-07 காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.

மேற்படி அமுதவிழா நாயகனான  வை.செ. தேவராசா அவர்கள்யாழ்  தீவுப்பகுதி  வேலணையை பிறப்பிடமாகவும்  தொழில் நிமித்தம் 1960 ஆம் ஆண்டு   வவுனியாவிற்கு  வருகைதந்து  தொடர்ச்சியாக வன்னி மண்ணில் சைவசமயத்தின் வளசியில் அக்கறை கொண்டவராய் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆலயங்களின்  வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டதுடன்    ஆலயங்கள் தோறும்  திருவாசக முற்றோதல் நிகழ்வுகளை   நடத்தி வந்துள்ளமையும்    வவுனியாவில்  இந்துமாமன்றம் சுத்தானந்த இந்து இளைஞர்  மன்றம் என்பவற்றை உருவாக்குவதிலும்  முன்னின்று செயற்பட்டவராவார் …

இந்நிகழ்வில்  பிரதம விருந்தினராக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா கலந்துகொண்டிருந்தார்.

சமாதான நீதிவானாகிய வை.செ.தேவராசா அவர்கள் திருவாசகச் செல்வர், வாதவூரரின் பாதசேகரன், திருமுறைச் செல்வர், இறைபணி வேந்தன்,ஈழத்துச் சிவத்தொண்டன், பெரியபுராண மாமனிதர், திருவாசக கலாநிதி, கலாபூசணம்,இறைபணிச் செம்மல் ஆகிய பட்டங்களை தனது வாழ்நாளில் பெற்றுள்ளதுடன் நிகழ்வில் முன்னிலை
அதிதியாக கலா கீர்த்தி உடுவை எஸ்.தில்லைநடராஜா கலந்துகொண்டிருந்தார்.
அமுதவிழா நிகழ்வில் ‘தேவஅமுதம்’ என்ற நினைவு மலர் வெளியீட்டு வைக்கப்பட்டது.

நிகழ்வில பிரம்ம சிறி இ.பாலசந்திரக் குருக்கள், சிவசிறி நா.பிரபாகரக் குருக்கள், மக்கள் சேவை மாமணி நா.சேனாதிராசா வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், வடக்குமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்தகொண்டிருந்தனர்.

யாழில் பதற்றத்தை ஏற்படுத்திய துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தின் பின்னணி : இளஞ்செழியன் விளக்கம்!!

யாழ்ப்பாணத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தினால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

நல்லூரில் பகுதியில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவருக்கு எவ்வித ஆபத்துகளும் ஏற்படாத போதும், அவரது மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து நீதிபதி இளஞ்செழியன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்..

இது என்னை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம். வழமையாக யாழ்ப்பாணம் நல்லுர் கோவில் வீதியால் போக்குவரத்து மேற்கொள்வது வழமை என்று தெரிவித்த அவர் குறித்த கோவில் வீதியால் தான் சென்றதை அவதானித்தன் அடிப்படையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக குறிப்பிட்டார்.

அண்மைக்காலமாக நடைபெறும் பாரதூரமாக இடம்பெறும் வழக்குகள் அனைத்தையும் கையாளும் நீதிபதியாக இருப்பதால் அத்தகைய ஒரு சூழ்நிலை இருக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஏனெனில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் துப்பாக்கியை கையாண்ட விதம் மிகவும் ஒரு அனுபமுள்ள நபர் மேற்கொண்டதாக தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் தன்னுடைய மெய்ப்பாதுகாவலுருக்கும் குறித்த நபருக்கும் இடையில் நல்லூர் பின்வீதி நாற்சந்தியில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதையும் குறிப்பிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதாக பிரதிப்பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளதாகவும், குறித்த விடயம் தன்னை பொறுத்தவரை நீதித்துறைக்குவிடுக்கப்பட்ட சவால் என்று கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

அண்மைக்காலமாக இடம்பெறுகின்ற வழக்குகள் யாவும் உயிர் அச்சுறுத்தல் உள்ள வழக்குகளாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுவதாகவும் காரணம் தன்னுடைய பொலிஸ் சார்ஜனை யாருக்கும் தெரியாது என்றும் பொலிஸ் கான்ஸ்டபிளையும யாருக்கும் தெரியாது என்றும் ஆகவே அவர்களை இலக்கு வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சும், நீதி அமைச்சும், நீதிச்சபை ஆணைக்குழுவும் தன்னுடைய நீதி அமைச்சரும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.

மரண அறிவித்தல் : திருமதி குட்டித்தம்பி தனலக்சுமி!!

வவுனியா கரப்பன்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி குட்டித்தம்பி தனலக்சுமி அவர்கள் 20.07.2017 (வியாழக்கிழமை) காலமானார்

அன்னார் காலம்சென்ற இராசா குட்டித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும் செல்வமலர், சுமதி (லன்டன்), பிரபாகரன் (கனடா), ரவீந்திரன் (கனடா), சாந்தி (லண்டன்), சசிகலா, ஜெயந்தி (பிரான்ஸ்), வசந்தி, வசந்தன் (கனடா), ஜெயகாந்தன் (கனடா), ஆகியோரின் பாசமிகு தாயாரும்

பாலசுப்ரமணியம், மகேந்திரராஜா (லண்டன் ), சித்திரா (கனடா), மகேஸ்வரி (கனடா), கிறிஸ்ணகுமார் (லன்டன்), ஸ்ரீஸ்கந்தராசா, கருணா (பிரான்ஸ்), மேதர் மில்ரன் (ஸ்ராண்டர்ட் வீடியோ உரிமையாளர்), பபிற்றா (கனடா), நளாயினி (கனடா), ஆகியோரின் மாமியாரும்

பார்த்தீபன், காண்டீபன், அர்ச்சனா, பார்கவி, சுஹாணா, சஹானா, சங்கமன், சோபன், பிரணவன், சயன், கவிதாஞ்சலி, பாரதி, சாரங்கா, சௌமியா, கோகுலன், சைவியா, மோனாலிஷா, ஜெனிபர், யூலியானா, அலெக்ஸ்ஸான்ட்ரா, வர்சன், ஆராதணா, அக்சயன், தீபாஞ்சலி, தர்மசீலன், குலதீபன் ஆகியோரின் அன்பு பேத்தியும், டிக்சித், ஆதர்ஸ், ஆதியா, பார்கவின், சாருஷா, ஜேஸ்பன், கேயிசா ஆகியோரின் பூட்டியும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24.07.2017 (திங்கட்கிழமை) காலை 10.00 மணியளவில் வவுனியா கரப்பன்காட்டு இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக தச்சனாங்குளம் இந்துமயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு : 0773736725

நீதிபதி இளஞ்செழியனின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு : யாழில் பதற்றம்!!

 
யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை வழிமறித்து இனம் தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் சற்று முன் நல்லூர் – பின் வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிமறித்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் நீதிபதி இளஞ்செழியனுக்கு இதனால் பாதிப்பு எதுவும் நேரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சம்பவத்தில் காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான மாநாடு!!

 
வவுனியாவில் இன்று (22.07.2017) காலை 8.30 மணியளவில் நகரசபையின் கலாச்சார மண்டபத்தில் வவுனியா மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான செலமர்வு வவுனியா உதவி மாவட்ட செயலாளர் கா.கமலதாசன் தலைமையில் இடம்பெற்றது.

இன்றைய நிகழ்வில் கிராம அபிவிருத்தி சங்கம், மகளிர் அபிவிருத்திச்சங்கம், பொது அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள், ஆகியோருக்கான சிவில் அமைப்புக்களுக்கான செயலமர்வு இடம்பெற்றுள்ளது.

இதில் விஷேட விரிவுரையாளர்களாக கிறிஸ்னானந்தன், லாலு விஜயநாயக்க, சைப்டீன். மற்றும் த.சுதாகர், கிராம அபிவிருத்திசங்கம், மகளிர் கிராம அபிவிருத்திச்சங்க சமாசத்தின் தலைவர், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பள்ளி வாசல் நிர்வாகத்தினர், இந்து சமய கோவில் நிர்வாக உறுப்பினர்கள், கமக்கார அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மக்களால் வினாவப்பட்ட பல்வேறு வினாக்களுக்கான தெளிவுகள் ஏற்படுத்தப்பட்டு அரசியல் சீர்திருத்தம் தொடர்பான செயலமர்வு இடம்பெற்றிருந்தது.

வவுனியாவில் கடும் வறட்சி : 24507 குடும்பங்கள் பாதிப்பு : குடிநீருக்கும் தட்டுப்பாடு!!

வவுனியா மாவட்டத்தில் தொடரும் வறட்சி காரணமாக 102 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 24 ஆயிரத்தி 507 குடும்பங்களைச் சேர்ந்த 85 ஆயிரத்தி 772 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் எஸ்.சூரியராஜா தெரிவித்தார்.

வவுனியாவில் 42 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 11 ஆயிரத்து 256 குடும்பங்களை சேர்ந்த 39 ஆயிரத்து 382 பேரும், வவுனியா வடக்கைச் சேர்ந்த 20 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட 2ஆயிரத்து 923 குடும்பங்களை சேர்ந்த 10 ஆயிரத்து 419 பேரும், வவுனியா தெற்கைச் சேர்ந்த 20 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 5ஆயிரத்து 316 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 605 பேரும், வவுனியா வெண்கலச்செட்டிக்குளத்தைச் சேர்ந்த 20 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட 4 ஆயிரத்து 962 குடும்பங்களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 365 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் நில நீர் வற்றிப் போயுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பகுதிகளான வவுனியாவில் 350 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 225 பேருக்கும், வவுனியா வடக்கு 3 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட 128 குடும்பங்களைச் சேர்ந்த 488 பேருக்கும், வவுனியா வெண்கலச்செட்டிக்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 189 குடும்பங்களை சேர்ந்த 870 பேருக்குமாக மொத்தம் 667 குடும்பங்களைச் சேர்ந்த 2583 பேருக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் தற்போது அறு தண்ணீர் பவுசர்களே மக்களுக்க நீர் வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் வவுனியா மாவட்டத்தில் வறட்சி அதிகரித்து வரும் நிலையில் மேலும் 16 தண்ணீர் வவுசர்களின் தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலம் தண்ணீர் தாங்கிகள், தண்ணீர் வடிகட்டி இயந்திரம் போன்றவற்றிற்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.

விவசாயம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நீர் இல்லாமல் விவசாயம் செய்யாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈடு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

10 வயதில் 90 கிலோ எடை : தவிக்கும் தாய்!!

 
உணவுகள் எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காத விசித்திர நோயால் பத்து வயது சிறுவன் ஒருவன் பாதிக்கப்பட்டுள்ளான்.

தென்ஆப்பிரிக்காவின் Mpumalanga மாகாணத்தை சேர்ந்தவர் Zola. இவர் மகன் Caden Benjamin (10) Prader-Willi syndrome என்னும் விசித்தர நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.

அதாவது, Caden எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காது. மேலும் எதாவது சாப்பிட்டு கொண்டே இருக்கிறான். இந்த அரிய வகை நோயால் உலகில் 20000 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

பத்து வயதிலேயே Caden, 90 கிலோ எடையுடன் உள்ளான். சில வருடங்களுக்கு முன்னர் சிறுவனுக்கு அதிக எடை காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது Caden-ன் மூக்கில் குழாய் பொருத்தப்பட்டு அதன் மூலம் அவன் சுவாசிக்கிறான்.

இது குறித்து சிறுவனின் தாய் Zola கூறுகையில், அதிக பசி காரணமாக Caden கழிவறையில் இருக்கும் டாய்லட் பேப்பர்கள் மற்றும் வீட்டில் இருக்கும் எல்லா வித பேப்பர்களையும் கூட சாப்பிடுவான்.

சாப்பிட எதுவும் கிடைக்காத நேரத்தில் தரையில் இருக்கும் அழுக்குகளை கூட எடுத்து சாப்பிடுவான் என கூறியுள்ளார்.

இந்த நோய்க்கு இதுவரை மருந்துகளே கண்டுபிடிக்கபடவில்லை. காலை வேளையில் சீஸ் துண்டுகள் நான்கு சாப்பிடும் Caden பின்னர் ஒரு மணி நேரம் கழித்து கோக் குடிக்கிறான்.

பிறகு கிடைக்கும் உணவை சாப்பிடும் Caden மதிய உணவின் போது சிக்கன் சாப்பிடுகிறான். அதன் பின்னர் கிடைப்பதை நாள் முழுவதும் சாப்பிடுகிறான்.

Cadenனுக்கு பயந்தே அவன் தாய் வீட்டில் உள்ள உணவுகளை அவன் கண்ணில் படாதபடி மறைத்து வைத்து விடுகிறார்.

Cadenன் எடை அதிகரித்து கொண்டே செல்வதால் அவன் இனி உயிர் வாழ டயட்டில் இருக்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஓவ்வொரு நாளும் போர்களமாக செல்வதாகவும், Caden-ஐ ஒவ்வொரு நொடியும் தான் கண்காணித்து கொண்டே இருப்பதாகவும் Zola சோகத்துடன் கூறியுள்ளார்.

உடல் முழுவதும் தங்கத்தில் ஜொலிக்கும் சாமியார்!!

கோல்டன் பாபா எனும் சாமியார் ஒவ்வொரு ஆண்டும் ஹரித்வாரில் இருந்து டெல்லி வரை சுமார் 200 கிமீ கண்வார் எனும் புனித யாத்திரை மேற்கொள்வார்.

இந்த யாத்திரையின் போது தங்கத்தாலான ஆடைகள் அணிந்துகொண்டு, உடல் முழுவதும் தங்க நகைகளை அணிந்து செல்வதால் இவரை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இம்முறை புனித யாத்திரிக்காக வந்துள்ள கோல்டன் பாபா 50-க்கும் மேற்பட்ட தங்க நகைகளை அணிந்து வந்துள்ளார். அவற்றில் தங்க நெக்லஸ்கள், மோதிரங்கள், வளையல்கள் அடக்கம். அதிக எடை காரணமாக கழுத்து வலி, பார்வைக் குறைபாடு ஏற்படுவதால் இம்முறை 2 கிலோ நகைகளை கழற்றி வைத்து வந்துள்ளதாக இவர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு கண்வார் யாத்திரைக்கான வெள்ளி விழாவைக் கொண்டாடவுள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.

சிறுவயதில் இருந்தே தங்கத்தின் மீது ஆசை கொண்ட காரணத்தால் இவ்வாறு நகைகளை அணிந்துகொள்கிறேன், ஜவுளித்தொழில் செய்து வந்த நான் சன்னிசாச வாழ்க்கைக்கு மாறிவிட்டேன்.

என்னிடம் உள்ள சீடர்களில் யார் ஒழுக்கமுள்ள சீடராக இருக்கிறாரோ அவருக்கு எனது சொத்தினை எழுதி வைப்பேன் என கூறுகிறார் இந்த கோல்டன் பாபா