வவுனியா மாவட்டத்தில் உணவுப் பொருட்களை கையாளுதல், உணவு கழிவுகளை வெளியேற்றல் மற்றும் உணவு தரத்தினை முகாமை செய்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஓவியா விருந்தினர் விடுதியில் இன்று(10.07.2017) இடம்பெற்றது.
வட மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை நடத்தும் இக்கருத்தமர்வில் உணவக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது உணவுப் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் அதனை கையாளும் விமுறைகள் தொடர்பாகவும், சுகாதாரம் தொடர்பிலும் கருத்துரைகள் இடம்பெற்றது.
அடுத்து வரும் 13ம் திகதி மில் ஆலைகள் அரிசிமா தயாரிப்பு உரிமையாளர்களுக்கும் 14ம் திகதி பேக்கரி ஜாம் பழரசம் மற்றும் ஐஸ்கிறீம் தயாரிப்பாளர்களுக்கும் இச் செயலமர்வு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார், உதவி பிரதேச செயலாளர் சாரதா, மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி திருமதி வி.பசுபதிராஜா, வைத்தியகலாநிதி மகேந்திரன், சுகாதார திணைக்கள அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள், ஊள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா கணேசபுரத்தில் மாகாண குறித்தொகுக்கப்பட்ட நன்கொடை நிதியின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார வைத்திய நிலையம், வைத்திய அதிகாரி விடுதி என்பவற்றை திறந்து வைக்கும் நிகழ்விலேயே வடமாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மாகாணசபையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் வேவ்வேறு காரணங்களுக்காக அரசியல் காரணங்களுக்காவோ அல்லது பதவி காரணங்களுக்காகவோ பல விடயங்களை உள்ளுக்குள் இருந்தே உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.
அந்த அடிப்படையிலே ஆரம்பத்திலிருந்து ஒரு அமைச்சருக்கு எதிராக ஒரு விசாரணை கொண்டுவரப்பட்டது . அந்த அமைச்சருக்கு எதிரான விசாரணையின் தொடக்கத்திலிலேயே ஏனைய மூன்று அமைச்சர்கள் தொடர்பாகவும் விசாரணை செய்ய வேண்டும் என எமது வடக்கு மாகாண முதலமைச்சர் ஒரு நிபந்தனையினை கொண்டு வந்தார்.
அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லாத போதும் ஒரு விசாரணைக் குழுவினை அமைத்து அமைச்சர்களுக்கு எதிராக குறைகள் குற்றங்கள் இருப்பின் நீங்கள் எழுத்து மூலமாக தனக்கு அறிவிக்கலாம் என்று ஒரு பத்திரிக்கை விளம்பரம் கொடுக்கப்பட்டது.
இந்த ஒருமாதகால பத்திரினை விளம்பரத்திலேயே அந்த விசாரணை குழுவிற்கு எட்டு முறைப்பாடுகள் கிடைபெற்றுள்ளது. எனினும் எனக்கும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரனுக்கும் எதிராக எந்த முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை
மேலும் இரண்டு வாரங்கள் இந்த குற்றச்சாட்டுக்களை பெறுவதற்காக காலம் நீடிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்களை பெறுவதற்காக கொடுக்கப்பட்ட அந்த இறுதிநாளில் ஒரு வடமாகாணசபை உறுப்பினர் எனக்கும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரனுக்கும் எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
அந்த குற்றச்சாட்டுக்களை வழங்கிய சமயத்தில் வடக்கு முதலமைச்சரினால் இரண்டு நீதியரசர்களையும் இரண்டு நீதிமன்ற நீதிபதிகளையும் ஒரு அரச அதிபரையும் கொண்டு உருவாக்கப்பட்ட விசாரணைக் குழுவிற்கு முன்பாக நாங்கள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டோம்
அந்த விசாரணையில் இரண்டு அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதோ ஒருவகையில் நிரூபிக்கப்க்கப்பட்டமையினால் இருவரும் பதவி விலக வேண்டும் எனவும் நானும் டெனிஸ்வரனும் தொடர்ந்தும் வடமாகாணசபை அமைச்சர்களாக கடமைபுரிய வேண்டும் என்பதோடு எங்களுடைய செயற்பாடுகளுக்கு மாகாணசபை பூரண ஒத்துளைப்பினை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையும் அந்த விசாரணைக்குழுவினால் முடிவாக அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கௌரவ முதலமைச்சர் அவர்கள் அந்த விசாரணைக் குழுவின் அறிக்கையினை ஒருபுறத்தில் வைத்து விட்டு எங்களையும் தண்டிப்பது போன்று எங்களையும் கட்டாய விடுமுறையில் செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டினை எடுத்த சமயத்தில் தான் மாகாணசபையில் குழப்பம் விளைவிக்கப்பட்டது. தற்போது அந்த குழுப்பநிலை ஒரளவு சீர்செய்யப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு நன்மை கிடைக்கும் ஒரு சாதகமான நிலை வருகின்ற சமயத்தில் நாங்கள் இரண்டாக பிரிவதும் மூன்றாக பிரிவதும் அல்லது பல கூறுகளாக பிரிந்து வரக்கூடிய அந்த நன்மைகளை கடந்த காலத்திலேயே வாரலாறு சொல்கின்றது. பல தடவைகள் நாங்கள் கோட்டை விட்டு இருக்கின்றோம் அல்லது கைநழுவி செல்ல விட்டுள்ளோம்.
என்ன அரசியல் தீர்வு வரப்போகின்றது என தெரியாமல் எழுந்தமானமான கருத்துக்களை கூறி தமிழ் பேசும் மக்கள் ஒன்றாக நிற்கும் அந்த சந்தர்ப்பத்தை நாங்கள் இழந்து விடக்கூடாது. ஆகவே தான் பல விதமான கருத்துக்களை எமது பாராளுமன்ற உறுப்பினர்களும் வடமாகாண சபை உறுப்பினர்களும் கூறிவரும் சமயத்தில் அமைதியாக அவற்றை செவிமடுப்பவர்களாக வீணான அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தாமல் நாங்கள் ஒற்றுமையாக தமிழ் தேசிய கூட்டமைப்பாக எங்களுடைய எதிர்கால சந்நதியேனும் இந்த மண்ணில் நின்மதியாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையினை எற்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் எமக்கு இருக்கின்றது.
எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சம்பந்தன் ஐயாவினுடைய 16 வருட சர்வாதிகாரத்தினுள் தாங்கள் இருப்பதாக கூறியிருந்தார். அவர்களுடைய சர்வாதிகாரத்தினை நாங்கள் மறந்து விடவில்லை.
நாங்கள் அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்த சமயத்தில் எவ்வாறு சர்வாதிகாரிகளாக நடந்து கொண்டார்கள், அவர்கள் அடித்த நோ என்னும் எனக்கு மாறவில்லை, அவர்களுக்கு பயந்து நான் நான் நான்கரை மாதம் காட்டில் வசித்தேன், நான்கரை மாதம் மரத்தில் படுத்து தூங்கினேன். வவுனியாவிலிருந்து பட்டப்படிப்புக்காக கொழும்பு செல்லவேண்டியிருந்தது. இப்போது சர்வாதிகாரத்தை பற்றி கதைப்பவர்களுக்கு பயந்து நான் லோறியிலிலேயே மணல் ஏற்றும் தொழிலாளியாக சாறத்தோடு அனுராதபுரத்தில் இறங்கி அங்கு தான் குளித்து உடைகளை மாற்றி விட்டு கொழும்பு சென்றேன். இவை அனைத்து எமது வாழ்வில் திரும்பி வரக்கூடாது நாங்கள் என்னும் மரணிக்கவில்லை எல்லோருடைய சர்வாதிகாரத்தினையும் அனுபவித்தவர்கள் இன்றும் இருக்கின்றோம்.
சம்பந்தன் ஐயா 16 வருடங்களாக சர்வாதிகாரியாக நடந்து கொண்டார் என்ற வார்தையினை கூறுவதற்கு எந்த தகுதியும் இல்லாதவர்கள் எங்களை எவ்வாறு நடத்தினார்கள் என்று எனக்கு தெரியும். அதை நான் மீண்டும் கிளற விரும்பவில்லை
இங்கு எத்தனை பேர் காணாமல் போணார்கள், காணாமல் ஆக்கப்பட்டார்கள், கொலை செய்தார்கள் , சுட்டுச்சுட்டு வீதியில் வீசினார்கள், கொள்ளையடித்தார்கள் , கப்பம் வாங்கினார்கள், இவ்வாறு நிறைய விடயங்களை செய்தார்கள்.
அவர்கள் இன்று சம்பந்தன் சர்வதிகாரி என கூறுவதற்கு தகுதியற்றவர்கள். இனிமேல் அவர்கள் அவ்வாறு கதைக்கக் கூடாது. இன்றும் சில அரசியல்வாதிகள் சம்பந்தன் ஐயா என கூறுவதற்கு கூட வாய் கூசுகின்றது. அவர்களுடைய வயதில் அரவாசி வயது கூட இல்லாதவர்கள் சம்பந்தன் என கூறுகின்றார்கள். என மேலும் அவர் தெரிவித்தார்.
கலாபூசணம் இரா சுப்ரமணியம் எழுதிய ‘உலக யுத்தங்கள் 1,2’ என்ற நூல் நேற்று (09.07.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் வவுனியா பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் கலாநிதி தமிழ் மணி அகளங்கன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் வரவேற்புரையை பெ.காமராஜ் வழங்க தலைமையுரையில் தமிழ் மணி அகளங்கன் ‘பாரதப்போரில் யுத்தத்தின் முடிவில் 10 பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர். உலக யுத்தங்களும் கோடிக்கணக்கான உயிர்களை காவு கொண்டவை, இதனை நூலாசிரியர் நினைவூட்டியுள்ளார்’ எனக்குறிப்பிட்டார் .
விசேட விருந்தினராகக்கலந்து கொண்ட பிரதேச செயலாளர் கா.உதயராசா வாழ்த்துரை வழங்கினார். ‘நூல் ஆசிரியர் இரா சுப்ரமணியம் நல்ல ஆற்றல்கள் கொண்டவர். பல நூல்களை வெளியிட்டு இருப்பவர். சமூக அக்கறையுடையவர் . அந்த வகையில் இந்த நூலும் அவரது ஆற்றல்களுக்கு நல்ல எடுத்துக்காட்டாக அமையும்’ என்றார்.
பிரதம விருந்தினராக இலங்கைக்கான இந்தியத்துணைத் தூதுவர் ஆ.நடராஜன் கலந்து சிறப்பித்தார். அவர் தனது உரையில் ‘வடமாகாணத்தில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு நூல் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது நல்ல சமூக மாற்றத்தை காட்டுக்கிறது. பலர் இதனால் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
இன்று கலாபூசனம் இரா சுப்ரமணியம் வெளியிடும் உலக யுத்தங்கள் பற்றிய நூல் காலத்தின் தேவையறிந்து வெளியிடப்படுகிறது. யுத்தங்களால் ஏற்பட்ட அழிவுகள் உயிரிழப்புகள் எவ்வாறானது என்பதை நாம் அறிந்து கொண்டால் இனி ஒரு உலக யுத்தம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்ற உணர்வை சமூகம் புரிந்து கொள்ள உதவும்; ‘ என்றார் .
நூல் நயவுரையை இன்தமிழ் இனியன் எஸ்.எஸ்.வாஸன் வழங்கினார் . இதில் ‘ இரண்டு உலக யுத்தங்களும் நாடுகளுக்கிடையிலான சங்தேகத்தின் அடிப்படையிலேயே உருவாகின . முதலாம் உலக யுத்தத்தில் சரஜீவோ படுகொலை பாரிய விளைவை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் லுசிடானியா கப்பல் தாக்கி அழிக்கப்பட்டமை யுத்தத்தை பாரிய அழிவுக்கு கொண்டு சென்றது.
1918 ஆண்டு நவம்பர் மாதம் 11 மணிக்கு யுத்தம் நிறைவுக்கு வந்த போது சர்வதேச சங்கம் உருவானது. இந்த பிரேரனையை கொண்டு வந்த அமெரிக்காவே இச்சங்கத்தில் இணைய மறுத்தது. இதனால் சர்வதேச சங்கம் பலம் இழந்து இரண்டாம் உலகயுத்தம் 1939 ஆம் ஆண்டு தோற்றம் பெற்றது. ஹிட்லரின் எழுச்சி போலந்தை கைப்பற்ற தூண்டியது.; காலநிலையை சரியாகப்புரிந்து கொள்ள முடியாத ஜேர்மனி படைகள் ருஸ்யா நாட்டிற்குள் நுழைந்ததால் பாரிய தோல்வியை ஹிட்லர் சந்தித்தார் .
அமெரிக்காவின் பேர்ல் துறைமுகம் மீதான யப்பானின் தாக்குதல் யுத்தத்திற்குள் அமெரிக்காவை இழுத்து வந்தது. நேச நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா ,ரஸ்யா, பிரான்ஸ் என்பனவும் அச்சு நாடுகளான ஜேர்மனி, இத்தாலி, யப்பான் போன்றனவும் கடுமையாக மோதிக்கொண்டன. இறுதியில் யப்பானை சரணடையுமாறு அமெரிக்கா நிர்ப்பந்தம் செய்தது. சரணடைய மறுத்ததால் ஹீரோசீமா , நாகசாகி நகர்கள் மீது 1945 ஆகஸ்ட் 6ம் திகதி 9 ம் திகதிகளில் சின்னப்பையன் , தடித்தமனிதன் என்ற இரண்டு அனுகுண்டுகள் வீசப்பட்டன. யப்பான் சரணடைய 1945 ஒக்டோபர் 24 ஜ.நா சபை உருவாக்கத்துடன் யுத்தம் நிறைவுக்கு வந்தது ‘ என்றார் .
ஓய்வு நிலை கிராம சேவையாளர் த.தேவராஜா மற்றும் பாக்கியராஜா ஆகியோரும் நிகழ்வில் உரை நிகழ்த்தினர் . பல இலக்கிய ஆர்வலர்கள் வர்த்தகப் பிரமுகர்கள் எனப்பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தரமான கல்வி தேடி இந்தியாவுக்கு ஏராளமான ஆபிரிக்கர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் சமீபகாலமாக இந்தியாவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
வெளிநாட்டில் இந்தியர்களுக்கு எதிராக இனவெறி பாகுபாடு பிரச்சனைகள் நடப்பது போன்று இந்தியாவிலும் வெளிநாட்டினர்களுக்கு எதிரான இனவெறி பிரச்சனைகள் நடந்தேறி வருகின்றன.
ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் தரமான கல்விக்காக டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் மீது டெல்லிவாசிகள் இனவெறி பாகுபாட்டை நடத்துகிறார்கள்.
இந்தியா முழுவதும் 25 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபிரிக்க மாணவர்கள் தங்கி படிக்கிறார்கள். ஆபிரிக்காவில் இந்திய பட்டப்படிப்புகளுக்கு மதிப்பு அதிகம். அதுமட்டுமின்றி ஆபிரிக்க நாடுகளில் அடிக்கடி வேலை நிறுத்தம் ஏற்படுகிறது.
அப்போது கல்வி நிலையங்களும் மூடப்பட்டுவிடும். அதனால்தான் அங்கிருந்து மாணவர்கள் இங்கு வந்து படிக்கிறார்கள். ஒரு பக்கம் ஆபிரிக்கர்களுக்கு எதிரான இனவெறி பாகுபாடு நடத்தினாலும், மறுபுறம் அவர்கள் மீது காதல் வயப்படுகிறார்கள்.
கமரூனை சேர்ந்த கறுப்பின இளைஞர் லியோனல் ஸோங்கேவும்- இந்தியாவை சேர்ந்த மாணவி பாரதி பூரியும் காதலர்கள்.
இருவரும் நொய்டாவில் உள்ள சாரதா பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்கள். இவர்கள் காதலர்களாக வெளியில் சென்றால் போகும் இடமெல்லாம் இன்னல்கள் கொடுக்கிறார்கள்.
போயும் போய் ஒரு கரிச்சட்டியை காதலிக்கிறாய், உனக்கு வேறு ஆளே கிடைக்காதா? என கேட்கிறார்கள். பாதியின் வீட்டிலும், உனக்கு கருப்பு தோல் தான் பிடிக்கும் என்றால் இவனைப்போன்று ஒரு கருப்பான நபரை பார்க்கிறேன் திருமணம் செய்துகொள் என வற்புறுத்துகிறார்கள்.
தன்னை யாரும் ஒரு மனிதனாகவே மதிப்பதில்லை என்றும் குறைபட்டுக் கொள்வார் லியோனஸ். அவர் மீது காதல் ஏற்பட அதுவே எனக்கு முதல் காரணமாக இருந்தது. நிறத்தை ஒதுக்கிவிட்டு இதயத்தை நேசிக்க ஆரம்பித்தேன். எங்கள் இருவருக்குள்ளும் எந்த வேற்றுமையுமில்லை. ஆனால் சுற்றி இருப்பவர்கள்தான் எங்களை வேற்றுமையாக பார்க்கிறார்கள்.
எங்களால் ஒன்றாக ரெயிலில் பயணிக்க முடிவதில்லை. அதனால் ஒரே இடத்திற்கு சென்றாலும் தனித்தனியாக பயணப்படுகிறோம் என்கிறார் பாரதி.
லியோனஸ் கூறியதாவது, என்னை ஒரு அறுவருப்பான பொருள் போன்றே எல்லோரும் பார்ப்பார்கள், இதற்கு முன்னர் நான் பிரான்சில் படித்தேன், ஆனால் அங்கெல்லாம் இப்படி அநாகரீகமாக நடந்துகொள்ளமாட்டார்கள்.
நான் வசிக்கும் வீட்டில் இருந்து குறுக்குதெருவில் நடந்து செல்லும்போது பலபேர் செருப்பினை வீசுவார்கள். ஆனால் இதனையெல்லாம் கண்டுகொள்ளாமல் செல்வேன்.
எங்கள் மானத்தையும், உயிரையும் விடுவதற்காக நாங்கள் கடல் கடந்து இந்தியா வரவில்லை, மாறாக நல்லதொரு கல்வியைத் தேடித்தான் வருகிறோம் என கூறியுள்ளார்.
இந்தியாவில் எனக்கு கிடைத்த ஒரே பொக்கிஷம் பாரதி. எனது படிப்பை முடித்தவுடன் பாரதியை திருமணம் செய்துகொண்டு என்னுடைய சொந்த நாட்டுக்கு சென்றுவிடுவேன்.
பிரித்தானியாவில் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
பிரித்தானியாவின் குளூசெஸ்ட்டர்ஷைர் பகுதியை சேர்ந்தவர் பைகே. இவர் தன்னுடைய உடலில் ஏற்பட்ட குரோமோசோம்களின் மாற்றத்தை உணர்ந்ததால் இளம் வயதிலே ஆணாக மாறுவதற்கு முடிவெடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பிறப்புறுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சைக்காக சுமார் 30-ஆயிரம் பவுண்டுகளை பிரித்தானிய அரசு சுகாதார காப்புறுதி திட்டத்தின் கீழ் ஏற்றுக் கொண்டது.
சிகிச்சை செய்து கொண்ட பின்னர் அவர் ஆணாக மாறுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அது தொடர்பான சிகிச்சைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.
இப்படி சிகிச்சை மேற்கொண்டு வந்தவர், தன் கருப்பையை மட்டும் அகற்றிக் கொள்ளவில்லை.
ஏனெனில் கருப்பையில் வளரும் கருமுட்டைகளை வங்கிகளில் சேமித்து வைத்து விட்டு, தேவைப்படும் போது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று எண்ணினார்.
ஆனால் பிரித்தானிய அரசோ கருமுட்டைகளை சேமித்து வைப்பதற்கான நிதியை வழங்க முடியாது என அறிவித்தது.
இதனால் அவர் இனி தாம் முழு ஆணாக மாறி குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால், அது சிக்கலாக மாறிவிடும் என்பதால், தற்போது இருக்கும் சூழ்நிலையில் பெண்ணாகவே இருந்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளார்.
அதைத் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் விந்து தானம் செய்பவர் ஒருவரை தேடிப்பிடித்து, அவரின் விந்தணுவை தனது கருப்பையில் செலுத்தியுள்ளார்.
இந்நிலையில் இவர் 16.6.2017 அன்று அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
அதன்பின் அவர் கூறுகையில், மீண்டும் ஆணாகவே இருக்கப்போவதாகவும், குழந்தைக்கு ஒரு வயது எட்டியவுடன் வேலைக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் ஐ.எஸ் ஆதரவு தற்கொலைப் படையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தையை கையில் வைத்திருந்தபடியே வெடியை இயக்கச் செய்து வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் இருந்துவந்த மொசூல் நகரத்தை கூட்டுப்படைகளுடன் இணைந்து ஈராக் ராணுவம் மீட்டுள்ளது. இதன்பொருட்டு அங்குள்ள மக்களும் அரசும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே மொசூல் நகரத்தை மீட்கும் நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டுவந்த ராணுவத்தினர், அப்பகுதியில் இருந்த பொதுமக்களை பாதுகாப்பு கருதி வெளியேற்றினர்.
இவ்வாற்று வெளியேற்றப்படுபவர்களில் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் அதிகம் காணப்படுவதால் ராணுவத்தினர் சோதனை என்ற பெயரில் அலைக்கழிப்பதில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று பெண் ஒருவர் குழந்தையுடன் பொதுமக்களில் ஒருவராக ராணுவத்தினருகே நடந்து வந்துள்ளார். திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த வெடியை இயக்கச் செய்து இறந்துள்ளார்.
இவ்வாறு அவர் செய்வதற்கு சில நொடிகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த தற்கொலைப் படை தாக்குதலால் இரண்டு ஈராக் ராணுவ வீரர்களும் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
15 லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வந்த மொசூல் நகரை ஐஎஸ் தீவிரவாதிகள் 3 ஆண்டுகளுக்கு முன்பு கைப்பற்றிக் கொண்டனர். இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மொசூல் நகரை மீட்க அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் உதவியுடன் தீவிர தாக்குதலை ஈராக் ராணுவம் தொடங்கியது.
இந்தப் போரினால் உயிர் பிழைப்பதற்காக 9 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்தனர். இந்நிலையில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இவர்களுக்கும் நேற்று உச்சக்கட்ட போர் நடந்தது. இதில் ஈராக் ராணுவம், மொசூல் நகரை ஐஎஸ் பயங்கரவாதிகளிடமிருந்து முற்றிலுமாக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளின் எதிர்ப்பு மற்றும் பொருளாதார தடைகளையும் மீறி கடந்த 4ம் திகதி வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கி அழிக்கும் அணு ஏவுகணை சோதனையை நடத்தியது.
இந்த ஏவுகணை அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியை தாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதனால், வடகொரியாவை மிரட்டும் வகையில் கொரிய தீபகற்ப பகுதியில் தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
நேற்று முன்தினமும் அமெரிக்காவின் அதிநவீன பி-1பி ரக போர் விமானங்கள், கொரிய எல்லையில் தாழ்வாக பறந்தன. இவை 900 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை வீசும் திறன் கொண்டவை.
அமெரிக்காவின் இந்த போர் ஒத்திகை, கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வடகொரியாவில் வெளியாகும் பிரபல நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில், வடகொரியா பகுதியில் அமெரிக்க ராணுவம் நிகழ்த்தியுள்ள ஆபத்தான இந்த போர் ஒத்திகை அத்துமீறல், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுத போர் முனையமாக மாறும் நிலைமைக்கு தள்ளிவிடும்.
கூட்டு பயிற்சி என்ற பெயரில் நடத்தப்படும் இது போன்ற சூழ்ச்சியை அணு ஆயுத போரை தூண்டும் முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது.
தவறான கணிப்பு அல்லது சிறு பிழை ஏற்பட்டாலும் அது அணு ஆயுத போரின் துவக்கமாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரபல திரைப்பட நடிகரான சிவகார்த்திகேயன் வீட்டில் வேலை செய்து வந்த ஆறுமுகம் என்பவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.
தமிழகத்தின் திருச்சி காஜா மலை பகுதியில் நடிகர் சிவகார்த்திகேயனின் வீடு உள்ளது. புதிதாக கட்டப்பட்ட இந்த வீட்டில் திருச்சி சாத்தனுரைச் சேர்ந்த சக்தி என்ற ஆறுமுகம் தோட்ட வேலை செய்து வந்துள்ளார்.
இவர் கடந்த மூன்று நாட்களாக சிவகார்த்திகேயனின் வீட்டிற்கு வேலைக்கு வரவில்லை. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் வீட்டிற்கு அருகே உள்ள கல்குவாரி குட்டையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அங்கு சென்ற பொலிசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது குட்டையில் சடலமாக கிடந்தது ஆறுமுகம் என்பது தெரியவந்துள்ளது.
இதனால் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் ஆறுமுகம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மாடுகள் வாங்க பணம் இல்லாததால் தனது மகள்கள் உதவியுடன் ஏர்பூட்டி நிலத்தில் விவசாயம் செய்து வரும் தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள ஷெகோர் பஸந்த்பூர் பகுதியில் Sardar Barela என்ற விவசாயி ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக அவரால் மாடுகளை வைத்து நிலத்தில் ஏர்பூட்டி விவசாயம் செய்ய முடியவில்லை.
மாடுகள் வாங்க பணம் இல்லாததால் தனது இரண்டு மகள்களை மாடுகள் போல ஏர்பூட்டியை இழுக்க செய்து Barela விவசாயம் செய்து வருகிறார். விவசாய நிலத்தில் மக்காச்சோளம் பயிர்களை Barela விதைத்து வருகிறார்.
இரு பெண்களும் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள நிலையில் குடும்ப வறுமை காரணமாக படிப்பை அவர்கள் கைவிட்டுள்ளனர்.
இதற்கிடையே இதுபோன்ற விடயங்களுக்காக சிறுமிகளை பயன்படுத்தக்கூடாது எனவும் விவசாயிக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் எனவும் மாவட்ட தொடர்பு அதிகாரி ஆஷிஸ் சர்மா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்க வேண்டாம் என சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் லங்கா ராஜினி தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகமொன்றிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…
தற்போது பாடசாலை செல்லும் பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும். பாடசாலை சென்ற பின்னரும், தனியார் வகுப்புக்களுக்கு சென்ற பின்னரும் அவர்கள் செய்யும் விடயங்கள், செல்லும் இடங்கள் தொடர்பில் பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும்.
ஸ்மார்ட் போன்களை பிள்ளைகள் பயன்படுத்துவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இன்று அதிகமான பாடசாலை மாணவ, மாணவியர் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர்.
முகநூல் உள்ளிட்ட சமூக ஊடக வலையமைப்புக்களை பயன்படுத்துவதன் மூலம் பிள்ளைகள் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறான சம்பவங்களுக்கு பிள்ளைகளின் பெற்றோரே பொறுப்பு சொல்ல வேண்டும்.
பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்ளக்கூட செல்லிடப்பேசிகள் வழியமைக்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய முதலாவது கிலோமீற்றருக்கு 10 ரூபாய் அதிகரிக்கப்படவுள்ளதாக சுய வேலைவாய்ப்பு தொழிற்சங்கங்களின் தேசிய முச்சக்கரவண்டி சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது முச்சக்கர வண்டிகளின் மேலதிக பாகங்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இதனை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
முதல் கிலோ மீற்றருக்கு 10 ரூபாய் அதிகரித்துள்ளது. எனினும் இரண்டாவது கிலோமீற்றரில் இருந்து வழைமையை போன்று 40 ரூபாய் என்ற கணக்கில் அறவிடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுவரை முதல் கிலோமீற்றருக்கு 50 ரூபா அறவிடப்பட்டது. இன்று முதல் 60 ரூபா அறிவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடமராட்சி கிழக்கில் மணற்காடு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற அனர்த்த நிலைமை காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, துன்னாலைப் பகுதியில் உள்ள பொலிஸ் காவலரணும், நெல்லியடியில் பொலிஸார் ஒருவரின் வீடும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் துன்னாலைச் சேர்ந்த 24 வயதுடைய யோகராசா தினேஸ் என்ற இளைஞனே பலியானார்.
சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற போது, தாம் தடுத்தும் நிற்காமல் சென்றதாலேயே கன்ரர் வாகனம் மீத துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் 10 நாட்களுக்கு முன்னரே வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியிருந்தார்.
இவர் நேற்று மதிய உணவு சாப்பிட்டு விட்டு, வல்லிபுரக் கோவிலுக்குச் செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார் என்றும், சட்டவிரோத மணல் ஏற்றும் சம்பவங்களுடன் இவருக்குத் தொடர்பில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கட்டார் பொருளாதார ரீதியில் பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் பொருளாதார ரீதியாக தம்மை தனிமைப்படுத்தியமைக்கு எதிராக வளைகுடாவின் நான்கு நாடுகளிடம் இழப்பீடு கோரவுள்ளதாக கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு கட்டார் உதவி புரிவதாக சவுதி அரேபியா, எமிரேட்ஸ், பஹ்ரேன் மற்றும் எகிப்து ஆகிய வளைகுடா நாடுகள், கட்டாருடனான விமானம் மற்றும் கடல்வழித் தொடர்புகளை கைவிட தீர்மானித்தது.
இதன் காரணமாக கட்டார் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பிராந்திய நாடுகளினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை கட்டார் முற்றாக நிராகரித்துள்ளது.
எனினும் பொருளாதார தொடர்பு காரணமாக வர்தத்க நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட ரீதியில் குடிமக்களுக்கு ஏற்பட்ட நட்டம் தொடர்பில் அவசியமான நடவடிக்கை மேற்கொள்வதற்காக டோஹா அதிகாரிகளினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பிராந்திய நாடுகள் விமான சேவைக்கு தடை விதித்துள்ளமையால், கட்டார் தேசிய விமான சேவை மாற்று விமான வழி ஊடாக பயணிக்க நேரிட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாரிய நட்டத்தை குறித்த இழப்பீட்டில் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வவுனியாவிலிருந்து நேற்று (09.07.2017) மாலை 5.30 மணியளவில் செட்டிக்குளம் நோக்கி பயணித்த தனியார் பேரூந்தில் பல்கலைக்கழக மாணவிக்கும் பேரூந்து நடத்துனருக்குமிடையே ஏற்பட்ட கருத்து முரன்பாடு கைகலப்பாக மாறியதில் காயமடைந்த மாணவி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்,
வவுனியாவிலிருந்து பம்பைமடுவிற்கு பேருந்து கட்டணமாக 20 ரூபாவே அறவிடப்பட்டு வந்துள்ளது எனினும் குறித்த மாணவி 50 ரூபாவினைக்கொடுத்து மிகுதி 30 ரூபாவினைக் கேட்டுள்ளார். இதையடுத்து தனியார் பேருந்து நடத்துனர் 30 ரூபா பெற்றுக்கொண்டு 20 ரூபாவினைக் கொடுத்துள்ளார். இதையடுத்து குறித்த மாணவி 20 ரூபாவே பேருந்து கட்டணமாக அறவிடப்படுவது என்று தெரிவித்து ஏன் 30 ரூபா பெறப்படுகின்றது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையடுத்து நடத்துனருக்கும் குறித்த பல்கலைக்கழக மாணவிக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டு வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது . பேரூந்தினை விட்டு இறங்கிய பல்கலைகழக மாணவி சக பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொலைபேசியில் அழைப்பினை ஏற்படுத்தி தன்னை பேரூந்து நடத்துனர் தாக்கியதாக தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பல்கலைக்கழக மாணவர்கள் பேரூந்தினை பின்தொடர்ந்து கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பேரூந்தின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் சாதுரியமாக செயற்பட்ட பேருந்தின் சாரதி பேருந்தை பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதுடன், பொலிஸிலும் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச் சம்பவத்தில் காயமடைந்த பல்கலைக்கழக மாணவி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காதலுடன் வீட்டை விட்டு ஓடிப்போனமையால் தன் தங்கை என்றும் பாராது கத்தியால் குத்தி கொடூரமாக அண்ணன் கொலை செய்த சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானில் லாகூரில் உள்ள ஷெராகோட் பகுதியை சேர்ந்த நசியா அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவரது பெற்றோர் குறித்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தமையால், நசியா தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப்போயுள்ளார்.
நசியா காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சிறிது நாள் கழித்து நசியா இருக்கும் இடத்தை தெரிந்து கொண்ட அவரது குடும்பத்தினர், அவரிடம் சமாதானம் பேசி தங்களது வீட்டுக்கு வந்துவிடும்படி அழைத்தனர். இதுகுறித்து பொலிஸாரிடமும் கூறி, தாங்கள் கொடுத்த முறைப்பாட்டினை மீளபெற்றுள்ளனர். நசியாவை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், நேற்று முன் தினம் வீட்டில் இருந்த நசியாவுக்கும், அவரது சகோதரர் மொகமது இஷாக்குக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த இஷாக், ‘‘காதலனுடன் ஓடி நமது வீட்டுக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டாய்’’ எனக்கூறி நசியாவை அவரது பெற்றோர் முன்னிலையில் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.
இதுதொடர்பாக பொலிஸார் இஷாக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இ்டையிலான இருபதுக்கு20 போட்டியில் எவின் லீவிஸின் அபார சதத்தினால் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றூல பயணத்தினை மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 ஒருநாள், ஒரு சர்வதேச இருபதுக்கு20 போட்டி கொண்ட தொடரில் விளையாடியது. ஒருநாள் தொடரை இந்திய அணி 3-1 எனக் கைப்பற்றியது.
இன்று இரு அணிகள் மோதும் ஒரு இருபதுக்கு20 போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடந்தது. நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகளின் அணித்தலைவர் கார்லஸ் பிராத்வைட், இந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தார்.
இதற்கமைய களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 190 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் 48 ஓட்டங்களும் அணித்தலைவர் விராட் கோலி மற்றும் ரிஷாப் பன்ட் தனித்தனியே 38 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். மேற்கிந்திய அணி சார்பில் பந்துவீச்சில் ஜெரோம் டெய்லர், வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
சவாலான இலக்கை விரட்டிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அதிரடி ஆரம்ப நாயகன் கிறிஸ் கெய்ல் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினார். ஆரம்பத்தில் இருந்து சிக்சர் மழை பொழிந்த எவின் லீவிஸ் சதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டார். மேற்கிந்திய தீவுகள் அணி 18.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 194 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
லீவிஸ் ஆட்டமிழக்காது 125 ஓட்டங்களை 62 பந்துகளின் 12 ஆறு ஓட்டங்களுடனும் 6 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்களாக பெற்றுக்கொண்டார். சாமுவேல்ஸ் 36 ஓட்டங்களை ஆட்டமிழப்பின்றி பெற்றுக்கொண்டார்.போட்டியின் ஆட்டநாயகனாக எவின் லீவிஸ் தெரிவுச்செய்யப்பட்டார்.