மன நலத்தைப் பாதிக்கும் சமூக ஊடகங்களில் இன்ஸ்டாக்ராமுக்கு முதல் இடம்!!

இளைஞர்களின் மனநலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூவலை தளங்களின் தரவரிசையில் இன்ஸ்டாகிராம் மிக மோசமானது என்று ஐக்கிய ராஜ்யத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு ஒன்று கூறுகின்றது.

14-24 வயதிற்குட்பட்ட 1,479 பேரிடம் ஐந்து பிரபல சமூக ஊடகங்களில் எது பயன்பாட்டாளர்கள் மீது மிகவும் எதிர்மறை விளைவை ஏற்படுத்துகிறது என்று மதிப்பிடுமாறு அந்த கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்டது.

கவலை, மன அழுத்தம், தனிமை, கொடுமைப்படுத்துதல் மற்றும் தங்களின் தோற்றம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு ஒவ்வொரு சமூக ஊடங்களுக்கும் மதிப்பெண் வழங்குமாறு அவர்களிடம் கேட்கப்பட்டது.

பயனர்களின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனநல சுகாதார தொண்டு நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.

‘பற்றாக்குறை மற்றும் பதட்டம்’ ஒருவர் சமூக வலைதளங்களை அதிகமான பயன்படுத்தினால் அதை சுட்டிக்காட்ட வேண்டும் என்றும், அதோடு மனநல சுகாதார பிரச்சனை உள்ள பயனர்களை அடையாளம் காட்டவேண்டும் என்று பொது சுகாதாரத்திற்கான ராயல் சொசைட்டியினால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்கள் இளைஞர்களிடையே மனநல பிரச்சனையை தூண்டுவதாக இருக்கலாம் என்று அறிக்கை எச்சரிக்கின்றது.

சமூக ஊடகங்களை நன்மைக்கான ஒரு கருவியாக பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ள அதே சமயத்தில் அந்த அறிக்கை, உதாரணத்துக்கு, இன்ஸ்டாக்ராம், சுய வெளிப்பாடு மற்றும் சுய அடையாளம் ஆகிவற்றின் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுததியிருப்பதாகக் கூறுகிறது.

வேறு எந்த வயதினரை காட்டிலும், இளைஞர்களில் சுமார் 90% பேர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக, சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் விளைவுகளால் பாதிக்கப்படும் ஆபத்தில் குறிப்பாக இளைஞர்கள் உள்ளனர்.

வெள்ளவத்தை கட்டிட இடிபாடுகளுக்குள் பெண்ணின் சடலம் மீட்பு!!

சரிந்து வீழ்ந்த வெள்ளவத்தை கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று (21) மாலை மீட்கப்பட்டது. குறித்த பெண் மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சம்பவத்தில் பலியானவர்களின் 3 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 18 திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மேலும் 23 பேர் வரை காயமடைந்தனர். இதையடுத்து இடிபாடுகளுக்கு மத்தியில் தேடுதல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உருவாகும் மெகா கூட்டணி : ரஜினியை முதல்வராக்கும் முயற்சியில் 5 கட்சிகள்!!

நடிகர் ரஜினிகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக முன் வைத்து அரசியல் கட்சிகள் மெகா கூட்டணிக்கு திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

அ.தி.மு.க.வின் அக்கப்போருகளை தூக்கி சாப்பிட்டு விட்டது என்றே சொல்லலாம் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றிய பரபரப்பு.

போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் தயாராக இருங்கள் என்ற ரஜினிகாந்த் சொன்னதே ஒரு சமிக்ஞை தான் என்று உற்சாக கொண்டாட்டத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

ரஜினியை விட்டால் பாஜக தமிழகத்தில் காலூன்ற வேறு வழியில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், ரஜினியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து மாநில கட்சிகள் சிலவற்றுடன் கைகோர்த்து ஆட்சியை பிடிக்க காய் நகர்த்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில் நல்ல நாளுக்காக மெகா கூட்டணி காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

நாட்டின் அனைத்து பகுதியிலும் காவிக் கொடியை பறக்கவிடும் நோக்கில் தீயாக வேலை செய்து வருகிறார் பாஜக தலைவர் அமித்ஷா.

கடந்த வாரம் அமித்ஷா தமிழகம் வருவதாக இருந்த நிலையில் பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இதற்கும் ரஜினியின் பேச்சுக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறார்கள் பாரதிய ஜனதா கட்சியினர். “லெட் கிம் டேக் சென்டர் சீட்” என்று அமித்ஷா ரஜினிக்காக காத்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

ரஜினி அரசியலுக்கு வந்தால் ஓபிஎஸ் அணி, தமிழ்மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணிக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.
அதிமுக சசிகலா அணி, திமுக, இடதுசாரிகளைத்தவிர்த்து பாட்டளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கும் விரைவில் அழைப்பு விடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ரஜினிகாந்த் என்று உறுதிப்படுத்துகின்றன கட்சி வட்டாரங்கள்.

அரசியலுக்கு வரவேண்டும் என மோடியிலிருந்து, ரசிகர்கள் வரை அழுத்தம் கொடுக்கும் நிலையில், தனிக்கட்சி தொடங்க ரஜினி தயாராகிவிட்டார் என்று மூத்த ரசிகர் மன்ற நிர்வாகி தெரிவித்துள்ளார்.

இதன் வெளிப்பாடாகவே ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன், சீமான் உள்ளிட்டோரை ரஜினி புகழ்ந்து பேசியதாக தெரிவிக்கிறார்.

கட்சியின் கொடி, சின்னம் ஆகியவற்றை வடிவமைக்கும் பணிகள் மிக ரகசியமாக நடந்துவருவதாகவும் ரஜினி ரசிகர் மன்றத்தினர் உறுதிபடுத்தியுள்ளனர்.

இமயலையிலிருக்கும் ரஜினியின் குருவிடம் அனுமதி பெற்ற பிறகு கொடி, சின்னம் வெளியாக வாய்ப்பு என்று சொல்லப்படுகிறது. போர் முரசு ஒலிக்கும் நாளுக்காக ரஜினி ரசிகர்கள் காத்திருக்கிறார்களாம்.

வவுனியாவில் இஸ்லாமிய கல்வியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு!!

 
மதினா மக்தப் ஒருவருட பூர்த்தி விழா வவுனியா மதினா நகர் ஜிம்மா பள்ளிவாசலில் இன்று (21.05) மாலை 3.30 மணிக்கு மக்தப் எம்.ஆர்.பி. நசுறுதீன் தலைமையில் நடைபெற்றது.

‘மதினா மக்தப்’ என்ற இஸ்லாமிய மார்க்க கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றதுடன் அம் மாணவர்கள் தங்கள் திறமைகளை இந்நிகழ்வின் மூலம் வெளிக்கொணர்ந்திருந்தனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அல் கலீம் இர்சாட் உவைஸ் இனாமி மற்றும் கௌரவ அதிதியாக வடமாகாணத்திற்கான மக்கதப் ஒருங்கிணைப்பாளர் மௌலவி ஐ.எம். இமாம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர் மற்றும் மதினா நகர் கிராமத்தினர் மற்றும் பள்ளிவாசல் உலமாக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவில் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் மீது தாக்குதல்!!

வவுனியா தாலிக்குளம் பகுதியில் அண்மையில் இரு சிவில் பாதகாப்பு உறுப்பினர்கள் மீது இளைஞர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இத் தாக்குதலில் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தெர்டர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா தாலிக்குளம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிமை இரு சிவில்பாதுகாப்பு உறுப்பினர்கள் அப்பகுதியிலுள்ள இளைஞர்களை தவறான முறையில் திருத்த மேற்கொண்ட முயற்சியின்போது இளைஞர்கள் திருப்பித்தாக்கியதில் அவர்கள் இருவரும் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தாக்குதல் நடத்திய இளைஞர்களை பூவரசன்குளம் பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். நீதவான் குறித்த 9 இளைஞர்களை 14நாள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இளைஞர்களின் தாக்குதலையடுத்து குறித்த இரு சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களும் சிவில்பாதுகாப்பு உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக்கொண்டுள்ளனர்.

வவுனியாவில் நடைபெற்ற வடமாகாண பெண்கள் சாரணிய பொதுக்கூட்டம்!!

 
வடமாகாண பெண் சாரணிய வருடாந்த பொதுக் கூட்டம் நேற்று (20.05​.2017​) சாரணிய வடமாகாண ஆணையாளர் திருமதி.நீ.தர்மகுலசிங்கம் தலைமையில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கல்லூரியின் அதிபர் பாக்கியநாதன் கமலேஸ்வரி மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் எம்.ராதாகிருஸ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பெண்கள் சாராணிய சங்கத்தலைவி அனோஜா பெனாண்டோ, பெண்கள் சாரணிய பிரதம ஆணையாளர் யஸ்மின் ரகீம், பெண்கள் சாரணிய பிரதி ஆணையாளர் விசாக்கா திலகரட்ண மற்றும் சாரணிய மாணவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

பெண் பிள்ளைகளின் நன்மைக்காக நடுக்காட்டில் தனிமையாக வாழும் தாய்!!

 
காட்டில் தனிமையாக வாழும் தாய் ஒருவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான 64 வயதான பெண்ணொருவரே இவ்வாறு காட்டில் தனிமையாக வாழ்ந்து வருகிறார்.

தம்புள்ளை, வேகொடபொல, பலகொல்லயாய பிரதேசத்தின் காட்டுப்பகுதியில் குடில் அமைத்து அவர் வாழ்ந்து வருகின்றார்.

மூன்று மகள்களை பெற்ற அம்மையாரின் கணவர் இளம் வயதிலேயே அவரை கைவிட்டு சென்றுள்ளார். பல போராட்டமான துன்பங்களை அனுபவித்து பிள்ளைகளை படிக்க வைத்து சமூகத்தில் ஒரு சிறந்த இடத்திற்கு முன்னேற்றியுள்ளார்.

அவரது ஒரு மகள் பொறியியலாளர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். பிள்ளைகளின் வாழ்வில் தடை ஏற்படுத்த விரும்பாமையினால் ஏரி, குளங்களில் கிடைப்பதனை உணவாக உட்கொண்டு உயிர் வாழ்வதாக குறித்த தாய் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கைப் பெண்!!

அமெரிக்காவில் நடைபெற்ற உடற்கட்டுமான (Body Building) போட்டிகளில் மூன்று வெவ்வேறு சம்பியன் பட்டங்களை இலங்கை பெண் ஒருவர் பெற்றுள்ளார். தில்ருக்ஷி சொலமன் ஆரச்சி என்ற இலங்கை பெண்ணே இந்த சாதனையை படைத்துள்ளார்.

அவர் 2003ஆம் ஆண்டு தனது சகோதரியுடன் மேலதிக கல்வி நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவர் பொழுது போக்காக உடற்கட்டுமான பயிற்சியில் ஈடுபட்டார். அவருக்கு கிடைத்த உதவிக்கமைய அவர் பெண்கள் உடற்கட்டுமான பிரிவு போட்டியில் கலந்து கொள்வதற்காக நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இந்த வெற்றி தொடர்பில் கருத்து வெளியிட்டவர்,

நான் கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்தவர். எனது குடும்பத்தில் 6 பேர் உள்ளனர். நான் உயர் கல்வியை கம்பஹா சித்தார்த மஹா வித்தியாலயத்தில் கற்றேன். எனினும் அங்கு விளையாட்டு பிரிவில் அந்த அளவில் திறமையை வெளிப்படுத்தவில்லை.

எனது சகோதரர் உடற்கட்டுமான பயிற்சி நிறுவனம் ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். அதில் பெற்ற பயிற்சியை நான் அமெரிக்காவில் தொடர்ந்தேன். கடந்த வருடம் இடம்பெற்ற போட்டியில் கலந்து கொண்டு 3 பதக்கங்களை வென்றுள்ளேன். இந்த போட்டியில் கிட்டத்தட்ட 150 பேர் கலந்து கொண்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தில்ருக்ஷி NPC Lee banks Natural Championships 2017(Bikini) போட்டியில் வெற்றி பெற்றதோடு, Class A பிரிவில் முதலாம் இடத்தை வென்றுள்ளார். Masters over 35 பிரிவிலும் அவர் முதலாம் இடத்தை வென்றுள்ளார்.

National Body Building Championship போட்டியில் கலந்து கொண்ட தில்ருக்ஷி முதலாம் இடத்தை வென்றுள்ளார்.

எனது புகைப்படத்தை பேஸ்புக்கில் முதல் முறையாக நான் பதிவு செய்த போது, நான் ஆண் ஆகுவதற்கு முயற்சிப்பதாக கருத்து வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் அவற்றிலிருந்து பின் வாங்கவில்லை. எனது கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து பொறியியலாளராக நான் தொழில் செய்கிறேன்.

அதேபோல் எனது குடும்ப வாழ்க்கையும் வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளேன். எனக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது. நான் ஒரு இலங்கை பெண், எந்தவொரு விருப்பமான விடயம் செய்யும் போதும் மற்றவர்களுக்காக அதனை மாற்றிக் கொள்ள வேண்டாம் என நான் இலங்கை பெண்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட 18 இலங்கையர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!!

 
இந்தியாவில் பிரபல தனியார் வாகன நிறுவனத்தில் பணியாற்றும் 18 இலங்கை தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருக்கும் நிலையில், அவர்களை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் சோசலிச சமத்துவக் கட்சியினால் ஹட்டன் பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இந்தியாவின் பிரபல தனியார் வாகன நிறுவனத்தில் (மாருதி சுசூகி) பணியாற்றிய 18 ஊழியர்களுக்கு கொடுத்திருக்கும் ஆயுள் தண்டனையிலிருந்து விடுதலை செய்ய அழுத்தம் கொடுக்கும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புகையிரத மிதிபலகையில் பயணித்த பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!!

 
புகையிரத மிதிபலகையில் பயணித்த பாடசாலை மாணவர் ஒருவர், பாதை ஓரமிருந்த தூணில் மோதுண்டு காயமடைந்துள்ளார்.

நாவலப்பிட்டியிலிருந்து கொட்டகலை நோக்கிச் சென்ற புகையிரதத்தில் பயணித்த பாடசாலை மாணவரே இந்த விபத்தில் காயமடைந்துள்ளார். காயமடைந்த மாணவர் ,சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வட்டவளை புகையிரத நிலையத்திற்கும் கலபட புகையிரத நிலையத்திற்கும் இடைப்பட்ட 99ஆவது மைல்கல் பகுதியிலே இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

க.பொ.த சாதாரண தர மாணவ,மாணவிகள் சிலர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர் ஒருவரை பார்த்து விட்டு, புகையிரதத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில் எஸ்.சதீஸ் என்ற 16 வயதுடைய மாணவனே காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிறந்து 15 நாட்களேயான குழந்தை மூச்சுத் திணறி பலி!!

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வட்டகொடை, சவூத் மடக்கும்புர தோட்டத்தில் பிறந்து 15 நாட்களேயான பெண் குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

20 வயதான இளம் தாய் ஒருவர், பிரசவித்து 15 நாட்களேயான தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துவிட்டு உறங்க வைத்து சென்றதாகவும், சில நிமிடங்களுக்குப் பின் குழந்தையை பார்த்த பொழுது குழந்தை உயிரிழந்திருந்ததாக தலவாக்கலை பொலிஸாருக்கு கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இன்று நுவரெலியா மாவட்ட நீதவான் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த பின் குறித்த குழந்தையின் சடலத்தை பிரேதபரிசோதனை செய்வதற்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

16 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு : மக்கள் ஆர்ப்பாட்டம்!!

கந்தப்பளை தேயிலை மலை தோட்டத்தில் கடந்த 12.05.2017 அன்று 16 வயதான சிறுமியை நால்வர் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவத்தினைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வல்லுறவுக்குட்படுத்திய பின்னர், குறித்த சிறுமி மயக்கமான நிலையில் வாழை இலையால் மூடி சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மலையக ஆய்வாளர் அமைப்புடன் இணைந்த மீனாட்சி பெண்கள் பாதுகாப்பு அமைப்பு கண்டன ஆர்ப்பட்டம் ஒன்றினை இன்று காலை கந்தப்பளை நகரில் நடத்தியது.

சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட போதிலும் குறித்த நபர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இவ் ஆர்ப்பாட்டம் தேயிலை மலை தோட்ட வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பேரணியாக கந்தப்பளை நகரத்திற்கு வந்தது.

கந்தப்பளை பொலிஸார் போராட்டத்தை முன்னெடுக்க தடைசெய்த போதும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு வாசகங்களை எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் சட்டவிரோத சாராய தவறணைகளை மூடு, மது அருந்தும் காமுகனிடமிருந்து எமது பிள்ளைகளை காப்பாற்று, மலையக மக்களை போதைக்கு அடிமையாக்காதே, வல்லுறவில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கு என்ற வாசகங்கள் தாங்கிய வண்ணம் கோசங்களை ஆர்ப்பட்டக்காரர்கள் எழுப்பினர்.

இடிந்து விழுந்த வெள்ளவத்தை ஐந்து மாடி கட்டட உரிமையாளர் கைது!!

வெள்ளவத்தையில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டடத்தின் உரிமையாளரை இந்த மாதம் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட கட்டட உரிமையாளரை,இன்றைய தினம் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு அருகிலுள்ள ஐந்து மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த அனர்த்தம் காரணமாக இருவர் உயிரிழந்ததுடன் 21 பேர் காயமடைந்திருந்தனர். மேலும் ஒருவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொலிஸில் சரணடைந்த நிலையில் கட்டட உரிமையாளர் நேற்றிரவு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பொலிஸார் முன்னிலையில் மோதிக்கொண்ட இளைஞர்கள்!!(காணொளி)

 
வவுனியா குருமன்காட்டுப்பகுதியில் நேற்று(20.05.2017) இரவு போக்குவரத்து பொலிஸார் பார்த்திருக்க இளைஞர் குழுவொன்று மோதலில் ஈடுபட்டுள்ளது.

வவுனியா குருமன்காட்டுப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இரு குழுக்கள் மோதியுள்ளது. இதன்போது அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸார் இளைஞர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்த போதிலும் இளைஞர்கள் பொலிஸாரையும் எச்சரித்ததுடன் கீழ்தரமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இதன் காரணமாக பொலிஸார் எடுத்த நடவடிக்கை கைகூடாத நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு தகவலை வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிஸார் ஐவரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

மரண அறிவித்தல் : பாலசிங்கம் விமலேசன்!!

பிறப்பு : 13.12.1979 || இறப்பு 20.05.2017

வவுனியா பம்பைமடுவை பிறப்பிடமாகவும் வவுனியா நெளுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் விமலேசன்( உரிமையாளர் விமல் போட்டோ) 20.05.2017 அன்று காலமானார்.

தகவல் -புகைப்பட நண்பர்கள்

புகைப்பட மோகத்தால் பற்றி எரிந்த மணப்பெண்!!

சீனாவை சேர்ந்த மணப்பெண் ஒருவர் வித்தியாசமாக புகைக்கபடம் எடுக்க விரும்பி தன்னுடைய உடையை தீயால் பற்றவைத்துக்கொண்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலுமே ஒரு முக்கிய நாள். இந்நாளை மறக்கமுடியாத மகிழ்ச்சியான நினைவு சின்னமாக மாற்றுபவை திருமணத்தின்போது எடுக்கப்படும் புகைப்படங்களே.

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் பல்வேறு சாகச செயல்களையும் செய்து வித்தியாசமான புகைப்படம் எடுக்கவே பலர் விரும்புகின்றனர்.

இவ்வாறு வித்தியாசமாக புகைப்படம் எடுக்க விரும்பிய சீனாவை சேர்ந்த மணப்பெண் ஒருவர் தன்னுடைய உடையில் போட்டோகிராபரைக் கொண்டு தீயை பற்ற வைத்துவிட்டு புகைப்படம் எடுக்க விரும்பியுள்ளார்.

இதையடுத்து, மணப்பெண்ணின் கவுனில் தீ பற்றவைக்கப்பட்டுள்ளது. ஆனால் புகைப்படம் எடுப்பதற்குள் தீ மள மளவென பரவி, மணப்பெண்ணின் உடை முழுவதும் பற்றி எரியத்தொடங்கியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக புகைப்படம் எடுப்பதை நிறுத்திவிட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இச்செயலால் மணப்பெண்ணின் உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் லேசான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இறுதியாக மணப்பெண் விரும்பியவாறே அது மறக்கமுடியாத ஒரு நாளாக அமைந்துவிட்டது. ஆனால் கணம் தப்பியிருந்தாலும், அப்பெண் தன்னுடைய உயிரையே அதற்கு விலையாக கொடுக்க நேரிட்டிருக்கும் என்பதுதான் இதில் சோகம்.