சட்ட விரோதமான முறையில் மணல் ஏற்றி;ச் செல்லும் லொறியொன்றை பொலிஸாரிடம் சிக்கவைத்த ரகசிய தகவல் வழங்கும் ஒருவர் மர்மமான முறையில் மரணமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் துரித விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கருவலகஸ்வௌ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் புத்தளம் – தப்போவ- பாவட்டாமடுவைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
நேற்று மாலை (27) கருவலகஸ்வௌ – தப்போவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர், பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக பொலிஸாருக்கும், அரச நிறுவனங்களுக்கும் ரகசியமாக அறியத் தருபவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று அவரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய பொலிஸார் கருவலகஸ்வௌ பகுதியி;ல் சட்டவிரோதமாக மணல் ஏற்ற முயன்ற லொறியொன்றை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
நடிகர் வினுசக்கரவர்த்தி தனது 71வது வயதில் சென்னையில் காலமானார். உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டிருந்த வினுசக்கரவர்த்தி தனியார் மருத்துவமனையில் காலமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். திரைக்கதை எழுத்தாளராக வண்டிச்சக்கரம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர்.
முல்லைத்தீவில் வாள் வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் மீது மீண்டும் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த நால்வரும் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
மல்லாவி பொலிஸ் பிரிவில் உள்ள கல்விளான் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் குழு ஒன்றிற்கும், திருநகர் கிராம இளைஞர் குழு ஒன்றிற்கும் இடையில் நீண்டகாலமாக பகை நிலவி வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரண்டு தரப்பும் மல்லாவி நகரப்பகுதியில் சந்தித்த போது கத்தி, அரிவாள் கொண்டு மோதிக் கொண்டுள்ளனர்.
படுகாயமடைந்த ஒரு தரப்பினர் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இதன்போது, வாள் வெட்டுக் காயங்களுக்குள்ளான இரண்டாவது குழுவை சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு அழைத்து வந்தவர்கள், ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த இருவரையும் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் மருத்துவர் மற்றும் தாதி ஒருவரும் தாக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்தது வைத்தியசாலைக்கு வந்த மல்லாவி பொலிசார் நிலைமையைக் கட்ப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் திருநகர் கிராமத்தைச் சேர்ந்த கமலநாதன் சுஜீபன் (வயது 21), கல்விளான் கிராமத்தைச் சேர்ந்தவர்களான, நவரத்தினம் தஜீபன் (வயது 21), சிவலிங்கம் வினோ ராஜ் (வயது 21) ஆகியோர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் திருநகர் கிராமத்தைச் சேர்ந்த கமல நாதன் கஜீபன் (வயது 26) என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், பணியாளர்கள், மருத்துவ தாதியர்கள் உட்பட அனைவரும் வெளிநடப்பு செய்த நிலையில், மல்லாவி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்வதாக உறுதியளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளதுடன், தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தெல்கொடை, மீகஹவத்தை அக்குறுமுல்ல பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கணவனை கொடூரமாக கொலை செய்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் 29 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். மனைவி இந்த நபரின் பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. கொலை செய்த பெண் ஏற்கனவே திருமணம் செய்து அவருக்கு மூன்று பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில் குறித்த நபருடன் பெண்ணுக்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ளது.
அதைத்தொடர்ந்து இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் குறித்த பெண் கணவனை கத்தியால் குத்தி விட்டு பிறப்புறுப்பையும் அறுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது கணவனை கொலை செய்த பெண் கத்தியுடன் மீகஹவத்தை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
கொல்லப்பட்ட கணவன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது கணவன் தன்னை கொலை செய்ய போவதாக கூறி ஏற்பட்ட சண்டையில் தான் கணவனை கொலை செய்து விட்டதாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
வீட்டு வரவேற்பறையில் இந்த கத்தி குத்து சம்பவம் நடந்துள்ளதுடன் கத்தி குத்துக்கு இலக்கான நபர் இரத்தத்தை சிந்தியவாறு வாசலுக்கு ஓடியுள்ளார்.
வீட்டு முற்றத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலத்தில் 10 கத்தி குத்து காயங்கள் இருப்பதாகவும் ஆணின் பிறப்புறுப்பு சடலத்திற்கு அருகில் கிடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மீகஹவத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தென் கொரியாவில் அண்மையில் ஏரி ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் இலங்கையைச் சேர்ந்த ஒருவருடையது என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.
தொழில் வாய்ப்பை பெற்று தென் கொரியாவுக்கு சென்ற இலங்கை இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இலங்கையரின் சடலம் என சந்தேகிக்கப்படும் குறித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டிருக்க கூடும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞர், உயரமான மலை பகுதி ஒன்றுக்கு சென்று குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்க கூடும்.
இருப்பினும், உயிரிழந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பத்தேகம பகுதியைச் சேர்ந்த சஷேன் தாரக ஜயசேகர என்ற இலங்கை இளைஞரே காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கம்பளை சின்ஹாப்பிட்டிய பிரதேசத்தில் அங்கவீனமான இராணுவ சிப்பாய் ஒருவரின் மனைவியை, சிப்பாயின் நண்பர்கள் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் நடந்துள்ள போதும், குறித்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் காணொளிக் காட்சிகள் தற்போது இணையத்தளத்தில் வெளியாகியுள்ள.
இதன் காரணமாக குறித்த சம்பவம் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 10 பேர் இணைந்து பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்தை எதிர்நோக்கிய பெண், தனது உறவினர்கள் மூலம் சம்பவம் நடந்த சில தினங்களுக்குப் பின்னர் சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதனையடுத்து சந்தேகநபர்கள் நீண்டகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
எனினும் பிணையில் விடுதலையாகியுள்ள குறித்த சந்தேகநபர்கள் பெண்ணை பழிவாங்குவதற்காக காணொளியை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த சந்தேகநபர்கள் 10 பேருக்கும் சம்பவத்தில் தொடர்புள்ளதா என்பதை கண்டறிய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசேட பொலிஸ் குழுவை நியமித்துள்ளது.
வவுனியாவில் பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் பூரண ஆதரவினை வழங்குவதாக கடந்த 25.04.2017 இரவு இடம்பெற்ற உறுப்பினர்களின் கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்பட்டு அனைத்து வர்த்த நிலையங்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.
வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று (27.04.2017) மேற்கொள்ளப்பட்டு வரும் பூரண ஹர்ததாலுக்கு பூரண ஆதரவு தெரிவித்து வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், தனியார் நிறுவனங்கள் என்பன மூடப்பட்டுள்ளது.
எனினும் வவுனியா ஹொரவப்பொத்தானை பகுதியில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்த போதும் ஒரு சில உணவகங்கள் ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமது உணவகங்களை திறந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறித்து பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வவுனியா வேப்பங்குளத்தில் இன்று (27.04.2017) காலை 11 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியாவிலிருந்து நெளுக்குளம் நோக்கி பயணித்த துவிச்சக்கரவண்டி மீது வேப்பங்குளம் 7ம் ஒழுங்கைக்கு அருகே அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கில் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் துவிச்சக்கரவண்டியை செலுத்தி வந்த முதியவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டடுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் சாஜன் கடந்த (19.04.2017) மாலை 6.30 மணியளவில் புடையன் பாம்பு கடித்ததில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்த பெண் பொலிஸ் சாஜன் நேற்று (26.04.2017) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் என்றால் அந்த பட்டியலில் மஹேல ஜெயவர்தனவும் ஒருவராக உள்ளார். அந்த வகையில் அவர் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளார்.
தற்போது 10 ஆவது ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணியின் பயிற்றுவிப்பாளராக மஹேல ஜெயவர்த்தன செயற்பட்டு வருகின்றார்.
இருப்பினும் இலங்கை அணிக்கு ஏன் பயிற்சியாளராக செயற்படவில்லை என இந்திய ஊடகம் ஒன்றிக்கு செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும் போது, நான் இன்னும் முழுநேர பயிற்சியாளருக்கு தேவையான பக்குவத்துடன் இல்லை.
இங்கிலாந்து மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுடன் குறுங்கால ஒப்பந்தங்களையே மேற்கொண்டுள்ளேன்.
சுமார் 18 வருடங்கள் தொடர்ச்சியாக விளையாடி முழுநேர பயிற்சியாளராக மாறுவதென்பது உண்மையிலேயே கடினமானதொன்று.
தற்போது எனது பொறுப்பு எனது குடும்பத்தினை கவனிப்பதே. அவர்களுடன் நேரத்தினை ஒதுக்க வேண்டியது எனது கட்டாயக் கடமைகளுள் ஒன்றாகும்.
இலங்கை அணி குறித்து கூறுவோமாயின் அவர்களுக்கு சிறந்ததொரு பயிற்சியாளர் இருக்கிறார்.
எவ்வாறாயினும் நடைமுறையிலுள்ள முறைமைகளில் இருந்து தூரமாகி இருப்பது சாலச் சிறந்தது என நினைக்கின்றேன் என கூறியுள்ளார்.
தாய்லாந்தில் நபர் ஒருவர் தனது 11 மாத குழந்தையை கொல்லும் வீடியோவை பேஸ்புக் லைவ்வில் காட்டிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் பாங்காக்கில் வசித்து வந்தவர் ஊட்டிசன் வோங்டாலே. கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்த ஊட்டிசன் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5 மணியளவில் பேஸ்புக்கிலிருந்து லைவ் வீடியோ ஓன் செய்துள்ளார்.
அந்த வீடியோவில், மாடியிலிருந்து தன்னுடைய 11 மாத குழந்தையை கீழே போட்டு கொலை செய்துள்ளார், தொடர்ந்து அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த வீடியோ பேஸ்புக்கில் வைரலானதை தொடர்ந்து பலரும் ரிப்போர்ட் செய்துள்ளனர். இருவரின் சடலத்தையும் கைப்பற்றிய பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கனடாவில் பல அடி உயர ராட்சஷ கிரேனில் விளையாட்டாக ஏறிய இளம் பெண்ணை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கனடாவின் டொராண்டோ நகரில் நேற்று இரவு நேரத்தில் சாலையில் கட்டிட வேலைகளுக்கு பயன்படும் ராட்சஷ கிரேன் நிறுத்தப்பட்டிடுந்தது.
அப்போது அந்த இடத்துக்கு வந்த 25 வயது மதிக்கதக்க இளம் பெண் திடீரென அந்த கிரேனில் ஏறினார்.
மெது மெதுவாக ஏறிய அவர் கிரேனின் உச்சியை அடைந்தார். ஆர்வத்தில் கிரேனில் இறங்கிய அவரால் கீழே இறங்க முடியவில்லை. இதை கண்ட அருகிலிருந்தவர்கள் இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக அங்கு Matthew Pegg என்னும் தீயணைப்பு வீரரின் தலைமையில் ஒரு குழு வந்தது. Matthew மட்டும் அந்த கிரேனின் பக்கவாட்டை பிடித்து கொண்டு தன் உடலில் கயிறை கட்டி கொண்டு மேலே மெதுவாக ஏறினார்.
பின்னர், கிரேனில் இருந்த பெண்ணை கெட்டியாக பிடித்து கொண்டு அவர் கீழே பத்திரமாக இறங்கினார். கிழே இறக்கப்பட்ட பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவர் எதற்காக மேலே ஏறினார் என்ற விவரம் தெரியவில்லை.
தைரியமாக கிரேனில் ஏறி பெண்ணை மீட்ட Matthew Pegg கூறுகையில், இது போன்ற சம்பவத்தை நான் இதுவரை பார்த்ததில்லை.
அந்த பெண் பயமே இல்லாம மேலே உட்கார்ந்திருந்தார். அவரின் தைரியம் என்னை வியக்க வைத்தது.
எங்கள் தீயணைப்பு துறைக்கு அவர் பயிற்சி அதிகாரியாக வர வேண்டும் என சிரித்து கொண்டே அவர் கூறியுள்ளார்.
சத்தீஸ்கரில் சுக்மா பகுதியில் மத்திய ரிசர்வ் படையினர் மீது மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 26 பேர் பலியாகினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த அழகுப்பாண்டி, செந்தில்குமார், திருமுருகன், பத்மநாபன் உள்ளிடோரும் உயிரிழந்தனர்.
நேற்று இவர்களின் உடல்கள் விமானம் மூலம் தமிழகம் கொண்டுவரப்பட்டு சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன.
இந்நிலையில், உயிரிழந்த அழகுப்பாண்டியின் தம்பி பவித்திரனும் ராணுவத்துக்கு தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பவித்திரன் அடுத்த மாதம் ராணுவத்தில் இணையவுள்ளதாக அழகுப்பாண்டியின் தந்தை பிச்சை அழகு கூறியுள்ளார்.
அழகுப்பாண்டியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலர் ராணுவத்திலே பணியாற்றி வருகின்றனர். பிச்சை அழகு இருபது வருடங்களுக்கு முன்னரே ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் இரு மகள்களையும் ராணுவ வீரர் ஒருவருக்கும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கும் திருமணம் செய்துவைத்துள்ளார்.
தன் மூத்த மகன் சுட்டுக்கொல்லப்பட்ட போதும், இளைய மகனை ராணுவத்துக்கு அனுப்பும் தந்தை பிச்சை அழகுவின் தேசப்பற்று ஊர்மக்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
பஞ்சாப்பைச் சேர்ந்த பெண் ஒருவர், மற்றொரு பெண்ணை திருமணம் செய்துள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பஞ்சாப்பைச் சேர்ந்தவர் திருநம்பி. இவர் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர் என்று கூறப்படுகிறது. இவரின் தற்போதைய பெயர் மஞ்ஞித் கெளர்.
பஞ்சாப் மத்திய சிறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் இவர், சமீபத்தில் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஆனால் திருமணம் செய்து கொண்ட பெண் பற்றி எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த திருமணத்தின் சிறப்பு விடயம் என்னவென்றால், இரண்டு பெண்களின் குடும்பத்தாரும் இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா தாக்குதலுக்கு தயார் என கூறும் வகையில் படுபயங்கரமான பீராங்கி தாக்குதல் பயிற்சியை கிம் ஜாங் முன்னிலையில் வட கொரியா ராணுவம் இன்று நடத்தியுள்ளது.
வட கொரியா உலக நாடுகளை அச்சுறுத்தும் விதத்தில் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.
மேலும், அமெரிக்க, ஜப்பான் போன்ற நாடுகளை தகர்ப்போம் என பீதியை கிளப்பி வருகிறது.
வட கொரியாவின் அணு ஆயுத சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.
போர் கப்பல்களை எதிர் கொள்ள தயார் என கூறும் வகையில் அது வட கொரியாவுக்கு வந்து சேரும் முன்னர் அந்நாடு வரலாறு காணாத வகையில் பீராங்கி தாக்குதல் பயிற்சியை கிம் ஜாங் முன்னர் நடத்தியுள்ளது.
இந்த பயிற்சியில் போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களும் பங்கேற்றது. கரையோரத்தில் 300 பெரிய துப்பாக்கி சுழற்சிகளால் இயக்கப்படும் துப்பாக்கி பீரங்கிகளிலிருந்து நெருப்புகள் பாய்ந்தது
வட கொரியாவின் 85வது ராணுவ வருடத்தை கொண்டாடும் விதத்திலும் இது நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது பீராங்கியிலிருந்து நெருப்பு குண்டுகள் சீறி பாய்ந்தன.
ஒவ்வொரு முறையும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இலக்குகளைத் தாக்கும் போது அதை கிம் ஜாங் பாராட்டினார். உங்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என அமெரிக்காவுக்கு வட கொரியா சவால் விடவே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி – பளை பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து சிறுமிகள் மூவரை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செயப்பட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இவரை தொடர்ந்தும் சிறையில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரிப்பதற்கு நீதிமன்று அனுமதி வழங்கியதுடன், எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
பளைப்பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து இந்த மாதம் 8ஆம் திகதி சிறுமிகள் மூவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச் சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து பதிவாளர், பொலிஸார், சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் கொண்ட குழுவினர் மன்றின் பணிப்பின் பெயரில் பளைப்பகுதியில் உள்ள குறித்த வீட்டினை நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் சில சான்றுப்பொருட்களையும் மீட்டுள்ளனர்.
தொடர்ந்து குறித்த வழக்கு கடந்த 21ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பவத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரிப்பதற்கு பொலிஸாரால் விண்ணப்பம் செய்யப்பட்டது.
இந்த விண்ணப்பத்தை 24ஆம் திகதி நீதிமன்றம் அனுமதித்ததைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த வழக்கை கையில் எடுத்தனர்.
இதையடுத்து கடந்த 24ஆம் திகதியில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று குறித்த வழக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுக்கப்பட்டது.
இதன்போதே சந்தேகநபரை தொடர்ந்தும் சிறையில் வைத்து விசாரிப்பதற்கும், ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும், பளைப்பகுதில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கருவிகள் இன்று பொலிஸாரால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது