இந்தியாவில் ஓடும் ரயிலின் கழிவறையில் பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் சந்தனா (26), நிறை மாத கர்ப்பிணியான இவர் தனது கணவருடன் ரயிலில் மும்பையில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது கழிவறைக்குள் சென்ற சந்தனாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே குழந்தை பிறந்துள்ளது.
ஆனால் துரதிருஷ்டவசமாக பிறந்த குழந்தை கழிவறையின் ஓட்டை வழியாக ஓடும் ரயிலிலிருந்து தண்டவாளத்தில் கீழே விழுந்துள்ளது.
உடனே பதறி போன சந்தனா குழந்தையை காப்பாற்றுங்கள் என கத்தினார். இதை பார்த்த ரயிலிருந்த பயணிகள், உடனடியாக ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர்.
இதனையடுத்து ரயில் குழந்தை விழுந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தாண்டி நின்றது.
பின்னர் ரயில்வே ஊழியர்களும், பயணிகளும் தண்டவாளத்தில் சென்று பார்த்த போது சிறு காயங்களுடன் குழந்தை கீழே கிடந்துள்ளது.
பின்னர் அங்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கபட்டு சந்தனாவும் அவர் குழந்தையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
நடிகை நந்தினியின் கணவர் கார்த்திகேயன் தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக் கோரிய வழக்கில் காவல்துறையினர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கார்த்திக் தாயார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எனது மகன் தற்கொலை செய்து கொண்ட ஹொட்டலில் கண்டெடுக்கப்பட்டுள்ள கடிதத்தில் நந்தினியின் தந்தை ராஜேந்திரன் கொடுத்த நெருக்கடியால், தற்கொலை செய்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் விருகம்பாக்கம் காவல்துறையினர், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் எனவே வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு விருகம்பாக்கம் காவல்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு, வழக்கினை ஜூன் 2ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
திராய்மடுவில் பகுதியில் இளைஞர் ஒருவர் புகையிரதம் மோதி பலியாகியுள்ளார்.
மட்டக்களப்பிலிருந்து, கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் திராய்மடுவில் வைத்தே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் ஏறாவூர் புகையிரத நிலையத்துக்கு கொண்டு செல்லபட்டுள்ளது.
புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளவரின் விவரம் தெரியாதமையினால், இது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இது போன்னு புகையிரத வழித்தடங்களில் யாரேனும் புகையிரதத்தில் மோதுண்டு இறந்தால், இறந்தவரின் சடலத்தை அடுத்த புகையிரத நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் விபத்தில் பலியானவரில் சடலம் ஏறாவூர் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மனைவி இறந்த சோகத்தை தாங்கிக் கொள்ள முடியாத முதியவர் ஒருவர் தன்னுயிரையும் எமனுக்கு காணிக்கையாக்கி பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 91 வயதான இசாக் வட்கின் மனைவி தெரேசா அண்மையில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் இறப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத கணவர் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் இருந்திருக்கிறார்.
எனினும் இசாக் வட்கின் உடலைவிட்டு உயிரும் பிரிந்து மனைவியோடு சேர்ந்தது. இன்று சர்வதேச ஊடகங்களின் முக்கிய செய்திகளில் ஒன்றாக இந்த தம்பதிகளின் உயிரிழப்பும் தான் பேசப்படுகிறது.
திருமணமாகி 69 ஆண்டுகள் இணைபிரியாத ஜோடியாக வாழ்ந்தவர்கள், நாற்பது நிமிட இடைவெளியில், தங்கள் உயிர்களை எமனுக்கு கொடுத்துள்ளார்கள்.
பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் இந்த இறப்பு குறித்து ஊடகங்கள் அதிகம் பேசிக் கொண்டிருக்கின்றன.
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ராணா, நாசர், ரோஹினி, சத்தியராஜ் உட்பட பலர் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ள படம் ‘பாகுபலி 2’.
உலக சினிமா அதிகப்படியாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த படம் தான் ‘பாகுபலி 2’. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் கன்னடம், மலையாளத்திலும் டப் செய்யப்பட்டு, இன்று உலகம் முழுவதும் சுமார் 9,000 இற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகின்றது.
மேலும், முதல் பாகத்தில் நடித்த ராணா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, ரோஹினி உட்பட பலர் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர்.
இந்தியாவில் மட்டும் சுமார் 6,500 திரையரங்குகளில் படம் வெளியாகின்றது. வெளிநாடுகளில் சுமார் 1,000 திரையரங்குகளிலும் வெளியாகவிருக்கின்றது. ஆக, மொத்தமாக 7, 500 திரையரங்குகளுக்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இப்படத்தை பி.ஜே.எம். நசருள்ளா இறக்குமதி செய்துள்ளார். இலங்கையின் முன்னிலை திரைப்பட விநியோக நிறுவனம CEL நிறுவுனம் இப்படத்தை இலங்கையில் வெளியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ‘பாகுபலி 2’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, சாட்டிலைட்ஸ் உரிமம், வெளியீட்டு உரிமம் ஆகியவற்றின் மூலம் 500 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. முதல் நாளிலேயே இப்படம் 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகுபலி 2’ திரைப்படத்துக்கு இந்திய தணிக்கைச் சபை யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. பாகுபலி 2’ படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள். அதாவது இடைவெளியையும் சேர்த்தால் 3.15 மணி நேரம். ‘பாகுபலி’ முதல் பாகம் 2.30 மணி நேரம்தான். அட அதுக்குள்ள முடிஞ்சிடுச்சே என்று சொல்லும் அளவுக்கு வேகமாக ஓடி முடிந்தது அந்தப் படம். ஆனால், இரண்டாம் பாகத்தில்தான் முக்கிய காட்சிகள், திருப்பங்கள் இடம்பெறுகின்றன. எனவேதான் இந்தப் படம் அரை மணி நேர நீளம் அதிகம் என்கிறது படக்குழு.
இத் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பம் உள்ள திரையரங்கிலும் வெளியாகும் என்று பாகுபலி திரைப்படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
தென்னிந்திய மொழித் திரைப்படம் ஒன்று ஐமேக்ஸ் (6K) தொழில்நுட்ப வடிவில் வெளியாவது இதுவே முதல்முறை என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகியுள்ள இத்திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்ப திரையரங்கில் வெளியாகாது என்று ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கு மற்றும் இந்தியில் மட்டும் ஐமேக்ஸ் தொழில்நுட்ப திரையரங்குகளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் ‘பாகுபலி 2’ படத்தின் தமிழ் பதிப்பிலிருந்து சுமார் 44 விநாடி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. அதில் ராணா அரசராக பொறுப்பேற்கும் முக்கிய காட்சிகளாக இடம்பெற்றிருந்து. படக்குழு துரிதமாக செயல்பட்டு, உடனடியாக இணையத்திலிருந்து நீக்கியதாக கூறப்படுகின்றது.
எனினும், பாகுபலி 2 காட்சிகள் கசிந்தாக கூறப்படுவதை படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யார்லகடா மறுத்துள்ளார். பல நாடுகளிலும் தணிக்கைத் துறையினருக்காக அன்றி, பொதுமக்களுக்காக திரையிடப் படவில்லை என நேற்றுமுன்தினம் அவர் தெரிவித்திருந்தார்.
இரண்டு வயதுக் குழந்தையொன்று இரண்டு கார்களுக்கு அடியில் சிக்கியபோதும் தெய்வாதீனமாக காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பிய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
பரபரப்பான வீதியொன்றின் ஒரு பக்கத்தில் இந்த இரண்டு வயதுக் குழந்தை நின்றுகொண்டிருந்தது. அருகில் இருந்த பாட்டியை விட்டு விலகிய அந்தக் குழந்தை, வீதியின் ஒரு ஒழுங்கில் வாகனம் எதுவும் வராததால், திடீரென்று வீதியில் இறங்கி கடக்க முற்பட்டது.
வீதியின் ஒரு புறத்தைத் தாண்டிய அந்தக் குழந்தை, வாகனங்கள் சென்றுகொண்டிருந்த மறு புறத்தின் நடுப் பகுதிக்குச் சென்றது. அப்போது, இரண்டு வாகனங்கள் அடுத்தடுத்து அந்தக் குழந்தையைக் கடந்து சென்றன.
வாகனங்கள் சென்ற வேகத்தில் அந்தக் குழந்தை உடல் நசுங்கியிருந்திருக்க வேண்டும். ஆனால் தெய்வாதீனமாக குழந்தை கீழே குனிந்துவிட்டதால் எவ்விதக் காயமும் இன்றி உயிர் தப்பியது.
இந்தக் காணொளி வேக வேகமாக இணையத்தில் பரிமாறப்பட்டு வருகிறது.
மூன்றாவது உலக யுத்தம் என்று குறிப்பிடப்படும் வடகொரியா மீதான யுத்த முஸ்தீபுகள் தொடர்ந்து வரும் நிலையில், வடகொரியாவின் ஆயுத பலத்தில் பல சித்திரிப்புகள் இருப்பதாக போர் மற்றும் ஆயுத நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.
தமது ஆயுதப் படையணி மற்றும் ஆயுதங்கள் என்பனவற்றைக் காட்சிப்படுத்துவதன் மூலம் மட்டுமே தம்மை பலசாலியாகக் காட்டிக்கொள்ள முனைவதாக அமெரிக்க சிரேஷ்ட யுத்த ஆய்வாளர் மைக்கல் ப்ரெஜன்ட் தெரிவித்துள்ளார்.
தனது தந்தை கிம் இல் சங்கின் 105வது பிறந்த தினம் மற்றும் வடகொரியாவின் தேசிய இராணுவத்தின் 86வது ஆண்டு தினம் என்று, நாட்டின் ஒவ்வொரு நிகழ்வையும் ஆயுதங்களாலேயே வடகொரியா அழகுபடுத்தி வருகின்றது.
கிம் இல் சங்கின் பிறந்த தின விழாவின்போது, அமெரிக்க நகர் ஒன்றின் மீது வடகொரியா ஏவும் ஏவுகணை விழுந்து வெடிப்பது போன்ற ‘அனிமேஷன்’ காணொளியொன்றை வடகொரியா வெளியிட்டிருந்தது.
அதுபோலவே, இராணுவ ஆண்டு தினத்தின்போது நடத்தப்பட்ட இராணுவத்தினரின் அணிவகுப்பில், பயன்படுத்த முடியாத முன்மாதிரி ஆயுதங்களையும், போலியான ஆயுதங்களையுமே வடகொரியா காட்சிப்படுத்தியிருப்பதாக ப்ரெஜன்ட் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகள் பலவற்றிலும் இராணுவ வீரர்கள் அணியும் பாதுகாப்பு கண்ணாடி கூட வடகொரியா வசம் இல்லை என்றும் ப்ரெஜன்ட் தெரிவித்துள்ளார்.
இவற்றை வைத்துப் பார்க்கும்போது, தம்மிடம் இருக்கும் ஆயுத பலத்தை பல மடங்கு பெரிதாக ‘காட்டிக்கொள்ளவே’ வடகொரியா முனைவதாகவும் ப்ரெஜன்ட் தெரிவித்துள்ளார்.
வடகொரியா அண்மையில் நடத்திய இரண்டு ஏவுகணைப் பரிசோதனைகளும் தோல்வியிலேயே முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது உலகிலேயே முதல்முறையாக உல்லாசக் கப்பல் ஒன்றில் கார் பந்தய தடத்தையே (Race Track) அமைத்து மக்களை வியக்க வைத்துள்ளனர். அமெரிக்காவின் மியாமி நகரைச் சேர்ந்த ‘நார்வீஜியன் க்ரூஸ் லைன்ஸ்’ என்ற சொகுசுக் கப்பல் இயக்கும் நிறுவனத்தினரால் இந்த ஆடம்பர கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.
சீன சந்தைக்காக கட்டமைக்கப்பட்டுள்ள இந்த கப்பலுக்கு ‘நார்வீஜியன் ஜாய்’ என பெயரிட்டுள்ளனர்.இந்தக்கப்பலின் மேல்தளங்களில் இரண்டு அடுக்கு பந்தய தடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பந்தய தடம் உலகின் தலைசிறந்த பெராரி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டு அடுக்கு பந்தய தடத்தில் 10 எலெக்ட்ரிக் கோ-கார்ட் கார்களை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும் என்பது விஷேட அம்சமாகும்.
ஜெர்மனியில் உள்ள உலகப் புகழ் பெற்ற ‘மேயர் வெர்ப்ட்’ என்ற கப்பல் கட்டும் நிறுவனத்தினரால் இந்த கப்பல் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது.
நார்வீஜியன் ஜாய் கப்பலில் மொத்தம் 3,850 பயணிகள் பயணிக்கலாம். ஜெர்மனியில் இருந்து ஷாங்காய் நோக்கி வரும் ஜூன் மாதம் 27 ஆம் திகதி இந்த கப்பல் தனது முதல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரில், பேஸ்புக், உள்ளிட்ட 22 சமூக வலைத்தளங்களை முடக்குவதற்கு அதிகாரிகள் ஆணை பிறப்பித்துள்ளனர். மக்கள் நலனை கருத்திற் கொண்டு வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையுத்தரவு ஒரு மாத காலத்திற்கு அல்லது அடுத்த கட்டளை பிறப்பிக்கபடும் வரை அமுலில் இருக்கும் என காஷ்மீரின் உள்துறை அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.
காஷ்மீரில் இந்த மாதத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல், வன்முறைகளுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள கலவரத்தால் பதற்றங்கள் அதிகரித்துள்ளன.
இணையதளம் முடக்கம் அரசாங்கத்தால் எடுக்கப்படும் பொதுவான ஒரு நடவடிக்கையாக இருந்த போதிலும், சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையை தீவிரமாக ஆராய்ந்த பின்னரே சமூக வலைத்தளங்களை முடக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வகுப்பு ஆசிரியை பிரிஜிட் டிராக்னக்ஸ் என்பவரைக் காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்ட பிரான்ஸ் அதிபர் வேட்பாளர் இமானுவல் மக்ரோனின் சுவாரஸ்யமான காதல் கதை தற்போது பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
தனது 15 வயதில் வகுப்பு ஆசிரியை டிராக்னக்ஸைக் காதலித்த பிரான்ஸ் அதிபர் வேட்பாளர் இமானுவல் மக்ரோன், தனது 30 ஆவது வயதில் அவரையே திருமணம் செய்து கொண்டுள்ளார்.2007 இல் நடைபெற்ற இந்தத் திருமணத்தின் போது டிராக்னஸுக்கு 55 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் அதிபருக்கான 2 ஆம் மற்றும் இறுதிச்சுற்றுத் தேர்தல் எதிர்வரும் மே 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது. முதல் சுற்றுத் தேர்தலில் 23.75 சதவீத வாக்குகள் பெற்று மக்ரோன் முதலிடம் பிடித்துள்ளார். லி பென் 21.53 சதவீத வாக்குகள் பெற்று, 2 ஆவது இடத்தில் உள்ளார்.
முதல் சுற்றில் தோல்வியடைந்த வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பெரும்பாலானோர், 2 ஆவது சுற்றில் மக்ரோனுக்கு வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் மக்ரோனின் வெற்றி ஏறத்தாழ முடிவாகியுள்ளது.
இந்நிலையில், மக்ரோனைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த போது தனது 15 ஆவது வயதில் (1993 இல்) ஒரு நாடக அரங்கேற்றத்தின் போது வகுப்பு ஆசிரியர் டிராக்னக்ஸ் மீது மக்ரோன் காதல் வயப்பட்டுள்ளார். அப்போது டிராக்னஸுக்கு 42 வயது. அவரது 15 வயது மகளும் மக்ரோனுடன் அதே வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார். இதனால் டிராக்னக்ஸின் மகளைத் தான் அவர் காதலிக்கிறார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், 2 ஆண்டுகளுக்குப் பின் டிராக்னக்ஸை வேறொரு சந்தர்ப்பத்தில் சந்தித்த மக்ரோன் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது 3 குழந்தைகளுக்குத் தாயாகவிருந்த அவர் மறுப்பு ஏதும் சொல்லாமல் மக்ரோனுடன் நெருங்கிப் பழகியுள்ளார். இதையடுத்து, 2007 இல் இருவரும் திருணம் செய்து கொண்டுள்ளனர்.
தற்போது 64 வயதான டிராக்னக்ஸுக்கு 7 பேரக்குழந்தைகள் இருக்கின்றனர்.
ஐவரி கோஸ்ட்டில் 4 கால்கள் 2 முதுகெலும்புகளுடன் பிறந்த பெண் குழந்தையின் மேலதிக உறுப்புக்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிறந்து 11 மாதங்களான நிலையில், இந்தக் குழந்தைக்கு சிக்காக்கோவில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிக்காக்கோவில் இருந்து, சிகிச்சைகளை முடித்துக் கொண்ட பின், டொமினிக் என பெயரிடப்பட்டுள்ள இந்தக் குழந்தை பெற்றோருடன் தற்போது ஐவரி கோஸ்ட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஐந்து மருத்துவர்கள் சேர்ந்து 6 மணிநேரங்கள் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். குழந்தை முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் டொமினிக் முதல் பிறந்த நாளை தனது குடும்பத்தாருடன் கொண்டாடவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இரட்டைக் குழந்தைகளாக கரு உருவாக்கம் இடம்பெறும் போது, முழுவதுமாக வளர்ச்சியடையாத குழந்தையின் உடற்பாகங்கள் மற்ற குழந்தையுடன் இவ்வாறு ஒட்டிப் பிறக்கும் சம்பவங்கள் உலகில் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றன.
புறா விடு தூது, கடிதங்கள், போன் கால் போன்ற காலங்களில் இருந்ததை விட, ஃபேஸ்புக் காலத்தில் நிகழும் டிஜிட்டல் காதலில் தான் பெண்கள் அதிகம் ஏமாறுகிறார்கள்.
தன்னை வெளிப்படையாக லட்சக்கணக்கானவர்கள் முன் சுய விளம்பரம் செய்துக் கொள்ளும் இடமாக சமூக தளங்கள் மாறி நிற்கின்றன.
பிரபலமாக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இடுப்பு கொஞ்சம் அதிகம் சிரித்தாலே பெயர் கெட்டுவிடும் என்ற காலம் ஒன்று இருந்தது.
ஆனால், இன்று செக்ஸி போஸ்களில் எடுத்த படங்களை கூட எளிதாக ஃபேஸ்புக்கில் வெளியிட்டு லைக்ஸ் அள்ள தான் பார்க்கிறார்கள்…
#1 ஒருவர் தனது பதிவுகளுக்கு, படங்களுக்கு அதிகமாக / தொடர்ந்து லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் கொடுத்து வந்தால் எளிதாக அந்த நபருடன் பழக ஆரம்பித்துவிடுகிறார்கள். அல்லது அந்த நபரை தனது நட்பு வட்டாரத்தில் யார், எவர் என அறியாமல் சேர்த்துக் கொள்கின்றனர்.
#2 நேரில் அல்லது அருகே அதிக தோழமை அல்லது உறவில் பெரிய பிடிப்பு இல்லாத பெண்கள், ஃபேஸ்புக் மூலம் பழகும் நட்பு வட்டாரத்தை பெரிதாக்கி கொள்ள விரும்புகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கான நட்புகள் சேர்த்துக் கொள்ள முகம் தெரியாத நபர்களை இணைத்துக் தனது விபரங்களை பகிர துவங்கி விடுகிறார்கள்!
#3 லைக்ஸ் மோகம்: இப்போது அதிக இளைஞர்கள் மத்தியில் காணப்படும் மோகம் இது. லைக்ஸ் மற்றவர்களுக்கு கிடைப்பது போல கிடைக்காமல் போனாலோ, வரும் லைக்ஸ் எண்ணிக்கை குறைந்தாலும் உடனே வருந்த துவங்கி விடுவது. இதனால், எப்படியாவது அதிக லைக்ஸ் பெற வேண்டும் என இவர்கள் பல முயற்சிகளில் இறங்குகிறார்கள்.
#4 அன்று கடிதம், செல்போன், நேரில் சென்று தான் காதலை சொல்ல வேண்டும். அப்படியே கூறினாலும், ஊர் சேர்ந்து அடிக்குமோ, அந்த பெண்ணே செருப்பை கழற்றும் சூழல் எழுமோ என்ற அச்சங்கள் இருந்தன. ஆனால், இப்போது இந்த அச்சம் இல்லாததால் சமூக தளங்கள் மூலம் காதலை பகிர்வது அதிகரித்து விட்டன.
#5 சின்ன, சின்ன பிரச்சனைகள் எழுந்தாலும் கூட, உடனே காதல் முறிந்து, அடுத்த நபருடன் இணையவும் சமூக தளம் ஒரு காரணியாக இருக்கிறது. இப்போதெல்லாம் காதல் தோல்வியை புகைப்படத்துடன் ஃபீலிங் எலோன் என பதிவு செய்வது அதிகரித்து விட்டது. இதை கண்டதும், தோள் கொடுத்து ஆசை வார்த்தை பேசி, காதலில் அப்பெண்ணை வீழ்த்த துடிக்கும் அன்(ம்)புகள் இங்கே ஏராளம்.
#6 மேலும், இளவட்ட வயதான 17 – 24-க்குட்பட்ட வயதினர் அதிகமாக ஃபேஸ்புக் மாயைகளில் ஏமார்ந்துவிடுகின்றனர். புதிய நபர்களுடன் பழகுவதில் இருக்கும் ஈர்ப்பு, வெளி செல்ல வேண்டும் என்ற துடிப்பு போன்றவை இவர்களை ஏமாற செய்கிறது. ஃபேஸ்புக் மூலம் இணைந்த பல காதலர்களும் இருக்கிறார்கள், ஃபேஸ்புக் மூலம் பிரிந்த காதலர்களும் இருக்கிறார்கள். இவை அனைத்தும் ஒரு நபர் எப்படி ஃபேஸ்புக் என்ற கருவியை பயன்படுத்துகிறார் என்பதில் தான் இருக்கிறது.
#7 ஒரு பெண் செல்ஃபீ போஸ்ட் செய்துவிட்டார் அதற்கு குவியும் லைக்ஸ்-க்கு ஈடு நிகர் வேறு என்ன என்பது ஆய்வு தான் செய்ய வேண்டும். அழகு என்பதை தாண்டி, முக பாவனைகளை பல்வேறு விதமாக காண்பித்து பதிவு செய்து, தங்கள் படங்களை எண்ணிலடங்காத வண்ணம் பகிரும் போது, அது சில சமயங்களில் தவறான வழிகளில் பலர் பயன்படுத்த ஆரம்பித்து விடுகின்றனர்.
விபரீதம் #1 அதிகமான பெண்களின் படங்கள், கண்ட க்ரூப்களில் லைக்ஸ்-காக பலர் பகிர்கிறார்கள்.
விபரீதம் #2 வேறு பெண்களின் படம் பயன்படுத்தி போலி கணக்குகள் ஆரம்பித்து, அதன் மூலம் வேறு ஆண்களுடன் தகாத முறையில் பழகுதல்.
விபரீதம் #3 மார்பிங் செய்து, நிர்வாண உடலுடன் இணைத்து அசிங்கப்படுத்துவது.
விபரீதம் #4 ஆபாச தளங்கள் அல்லது டேட்டிங் தளங்கள், மொபைல் அப்க்ளில் வேறு பெண்களின் படங்கள் பயன்படுத்தி ஏமாற்றுவது.
சட்ட விரோதமான முறையில் மணல் ஏற்றி;ச் செல்லும் லொறியொன்றை பொலிஸாரிடம் சிக்கவைத்த ரகசிய தகவல் வழங்கும் ஒருவர் மர்மமான முறையில் மரணமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் துரித விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கருவலகஸ்வௌ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் புத்தளம் – தப்போவ- பாவட்டாமடுவைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
நேற்று மாலை (27) கருவலகஸ்வௌ – தப்போவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர், பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக பொலிஸாருக்கும், அரச நிறுவனங்களுக்கும் ரகசியமாக அறியத் தருபவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று அவரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய பொலிஸார் கருவலகஸ்வௌ பகுதியி;ல் சட்டவிரோதமாக மணல் ஏற்ற முயன்ற லொறியொன்றை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
நடிகர் வினுசக்கரவர்த்தி தனது 71வது வயதில் சென்னையில் காலமானார். உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டிருந்த வினுசக்கரவர்த்தி தனியார் மருத்துவமனையில் காலமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். திரைக்கதை எழுத்தாளராக வண்டிச்சக்கரம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர்.
முல்லைத்தீவில் வாள் வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் மீது மீண்டும் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த நால்வரும் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
மல்லாவி பொலிஸ் பிரிவில் உள்ள கல்விளான் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் குழு ஒன்றிற்கும், திருநகர் கிராம இளைஞர் குழு ஒன்றிற்கும் இடையில் நீண்டகாலமாக பகை நிலவி வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரண்டு தரப்பும் மல்லாவி நகரப்பகுதியில் சந்தித்த போது கத்தி, அரிவாள் கொண்டு மோதிக் கொண்டுள்ளனர்.
படுகாயமடைந்த ஒரு தரப்பினர் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இதன்போது, வாள் வெட்டுக் காயங்களுக்குள்ளான இரண்டாவது குழுவை சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு அழைத்து வந்தவர்கள், ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த இருவரையும் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் மருத்துவர் மற்றும் தாதி ஒருவரும் தாக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்தது வைத்தியசாலைக்கு வந்த மல்லாவி பொலிசார் நிலைமையைக் கட்ப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் திருநகர் கிராமத்தைச் சேர்ந்த கமலநாதன் சுஜீபன் (வயது 21), கல்விளான் கிராமத்தைச் சேர்ந்தவர்களான, நவரத்தினம் தஜீபன் (வயது 21), சிவலிங்கம் வினோ ராஜ் (வயது 21) ஆகியோர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் திருநகர் கிராமத்தைச் சேர்ந்த கமல நாதன் கஜீபன் (வயது 26) என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், பணியாளர்கள், மருத்துவ தாதியர்கள் உட்பட அனைவரும் வெளிநடப்பு செய்த நிலையில், மல்லாவி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்வதாக உறுதியளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளதுடன், தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தெல்கொடை, மீகஹவத்தை அக்குறுமுல்ல பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கணவனை கொடூரமாக கொலை செய்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் 29 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். மனைவி இந்த நபரின் பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. கொலை செய்த பெண் ஏற்கனவே திருமணம் செய்து அவருக்கு மூன்று பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில் குறித்த நபருடன் பெண்ணுக்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ளது.
அதைத்தொடர்ந்து இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் குறித்த பெண் கணவனை கத்தியால் குத்தி விட்டு பிறப்புறுப்பையும் அறுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது கணவனை கொலை செய்த பெண் கத்தியுடன் மீகஹவத்தை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
கொல்லப்பட்ட கணவன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது கணவன் தன்னை கொலை செய்ய போவதாக கூறி ஏற்பட்ட சண்டையில் தான் கணவனை கொலை செய்து விட்டதாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
வீட்டு வரவேற்பறையில் இந்த கத்தி குத்து சம்பவம் நடந்துள்ளதுடன் கத்தி குத்துக்கு இலக்கான நபர் இரத்தத்தை சிந்தியவாறு வாசலுக்கு ஓடியுள்ளார்.
வீட்டு முற்றத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலத்தில் 10 கத்தி குத்து காயங்கள் இருப்பதாகவும் ஆணின் பிறப்புறுப்பு சடலத்திற்கு அருகில் கிடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மீகஹவத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.