![]() |
|

| திரு நடராசா கனகராசா |
| மலர்வு : 28 ஏப்ரல் 1950 உதிர்வு : 19 ஏப்ரல் 2017 |
|
||||||||||||||||||||||||||||||||||
![]() |
|

| திரு நடராசா கனகராசா |
| மலர்வு : 28 ஏப்ரல் 1950 உதிர்வு : 19 ஏப்ரல் 2017 |
|
||||||||||||||||||||||||||||||||||
நெடுங்கரைசேனை செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகவும் இல.23A , அம்மன் கோவில் வீதி பண்டாரிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசிங்கம் பார்வதி அவர்கள் 19.04.2017 புதன்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற யோகாம்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற தம்பையா குமாரசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும், சிவயோகநாதன் (கனடா) விமலநாதன், கணேசநாதன், ரகுநாதன், ஜெகநாதன், நாகேஸ்வரன் (ஆசிரியர்- காத்தார் சின்னக்குளம் அ.த.க பாடசாலை) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
இராஜேஸ்வரி, காலஞ்சென்ற ராஜினி, இந்துமதி (ஆசிரியர், கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலயம்) , மலர்விழி , சியாமலா (பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலை) கலைவாணி (ஆசிரியர்- பட்டானிச்சூர் முஸ்லிம் மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கமலினி (கனடா), கலாயினி (கனடா) , டயானா, சுயந்தன், துசாந்தன், துசாந்தினி (யாழ் பல்கலைக்கழகம்), றியாந்தினி (கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட மாணவி) , சுலக்சனா, ஐங்கரன் (பொது வைத்தியசாலை வவுனியா), சர்மிலா, சோபிதன், சோபிதா, ஜெனுதா, கபிசன், கிருதார்த்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23.04.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று காலை 10 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக பூதவுடல் தட்சனாங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்
இவ்வறித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் போக்குவரத்து பொலிஸாரை மதிக்காமல் சென்ற இளைஞன் மீது இன்று (21.04.2017) இரவு 10.30 மணியளவில் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியாவிலிருந்து கோவிற்குளம் நோக்கி மோட்டார் சைக்கிலில் இருவர் பயணித்துள்ளனர். இதில் ஒருவர் தலைக்கவசம் அணியவில்லை ஹொரவப்பொத்தானை வீதி றோயல் ஹோட்டலுக்கு அருகே நின்ற போக்குவரத்து பொலிஸார் இவர்களை மறித்துள்ளனர்.
எனினும் பொலிஸாரை மதிக்காமல் அதிவேகமாக தப்பிச் சென்றுள்ளனர். இவர்களை மோட்டார் சைக்கிலில் பின் தொடர்ந்த போக்குவரத்து பொலிஸார் அருந்ததி விடுதிக்கு அருகே வழிமறித்து மோட்டார் சைக்கிலில் பின்பகுதியில் இருந்தவரை தாக்கியுள்ளனர்.
இதனால் பயம் காரணமாக மோட்டார் சைக்கிலின் சாரதி தப்பியோடியுள்ளதாக சம்பவ இடத்திலிருந்தவர்கள் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் பொலிஸாரினால் தாக்கப்பட்ட இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் அவ்விடத்தில் சற்று பதட்டமான சூழ்நிலை காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
30 வருட ஆயுதப் போராட்டம் மற்றும் அகிம்சைப் போராட்டத்தில் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை என வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார்.
இன்று வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தில் இளைஞர் கழக சம்மேளனக் காரியாலய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது..
இந்த நாட்டிலே எமது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாற்றப்பட்டு எழுச்சி பெற்ற காலத்தில் இளைஞர் சேவை மன்றத்தை தமிழ் மக்கள் நம்ப முடியாத ஒரு காலகட்டம் இருந்தது. அதே போல் சர்வோதயத்தை நம்ப முடியாத காலகட்டம் இருந்தது.
அதை ஏன் நான் சொல்கின்றேன் என்றால் 1986 அல்லது 1987 இல் நெடுங்கேணி பிரதேசத்தை சேர்ந்த மகேந்திரநாதன் என்பவர் கொழும்பிலே நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்கு போன காரணத்தினால் ஒரு இயக்கத்தினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதற்கு காரணம் அந்தநேரத்தில் இளைஞர் சேவை மன்றத்தை அந்நேரம் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால் இன்று இந்த மண்னைச் சேர்ந்தவர்கள் இந்த இளைஞர்கள் சேவை மன்றத்திற்குள் உள்வாங்கப்படுகின்ற போது நாங்கள் ஒட்டு மொத்தமாக சிங்களம், தமிழ், முஸ்லீம் என்கின்ற நிலைமை மாறி நாட்டிலே இந்த இளைஞர்கள் சேவைகள் மன்றம் எதிர் காலத்திலே சிறப்பாக நடைபெறும் என்பது எனது நம்பிக்கை.
அண்மையில் இளைஞர்களின் எழுச்சி பல இடங்களில் நிலைநாட்டப்பட்டிருந்தாலும் கூட, அண்மையில் இந்தியாவிலே நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வை ஒரு சர்வதேச தரத்திற்கு அல்லது யாருமே எதிர்பாராத விதத்திலே இந்திய மத்திய அரசை அடிபணிய வைத்தவர்கள் இந்த தமிழ் இளைஞர்கள்.
உங்களிடம் அந்த சக்தி இருக்கின்றது. அந்த சக்தியை நீங்கள் சரியாக பயன்படுத்துங்கள். இந்த இளைஞர்கள் இப்படியான பயிற்சிகளில் கலந்து கொள்வதை பார்ப்பதற்கு சந்தோசமாக உள்ளது. உங்களுடைய காலத்தை வீணாக்காமல் உங்களுக்கு தெரிந்த அல்லது கற்றுக்கொள்கின்ற முயற்சியை எடுத்துக்கொண்டது பாராட்டத்தக்க விடயம்.
அதே நேரம் இன்னுமொரு ஆபத்தையும் எங்களது சமூகம் சார்ந்து சொல்ல விரும்புகின்றேன். அதாவது பாடசாலைகளில் இருந்து இடைவிலகுகின்ற விடயங்கள். நீங்கள் தொடர்ச்சியாக கல்வியில் அக்கறை செலுத்தியிருந்தால் இங்குவந்து பயிற்சி பெற வேண்டிய தேவை வந்திருக்காது. ஆகவே பொறுப்பு வாய்ந்த எல்லோருக்கும் கடமையிருக்கிறது. நாங்கள் வீட்டுக்கொரு பட்டதாரியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்டாலும் கூட, வவுனியா மாவட்டத்தில் பாடசாலைகளில் இருந்து இடைவிலகுகின்ற விடயத்தில் இளைஞர் சேவை மன்றம் கவனத்தை செலுத்த வேண்டும்.
ஏன்எனின் 30 வருட ஆயுதப் போராட்டம், 30 வருட அகிம்சை போராட்டத்தில் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை. இனி எங்களால் கல்வியால் மாத்திரமே முன்னுக்குவரக்கூடியதாக இருக்கும். கல்விக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படுங்கள். உங்களிற்கு பக்க பலமாக நாங்கள் இருப்போம் என்று தெரிவித்தார்.
வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி தற்போது ஓய்வு பெற்றுச் செல்லும் எச்.ஏ.ஏ.சரத்குமாரவிற்கு வவுனியா பொலிஸ் நிலைய வளாக கட்டிடத் தொகுதியில் இன்று (21.04.2017) பிற்பகல் 3.30 மணியளவில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டு கௌரவம் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மன்னார், புளியங்குளம், கனகராஜன்குளம், நெடுங்கேணி, ஓமந்தை போன்ற பகுதிகளின் பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தில் இளைஞர் கழக சம்மேளனக் காரியாலயம் இன்று (21.04) காலை 9.45 மணியளவில் வவுனியா மாவட்ட இளைஞர் சம்மேளன மன்றத் தலைவர் சு.காண்டீபன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செந்தில்நாதன் மயூரன், தர்மபால செனவிரத்ன, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் நகர சபை உபபிதா சந்திரகுலசிங்கம், இளைஞர் கழக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகேசவன், மாவட்ட இளைஞர் சம்மேள மன்றத் செயலாளர் ஜ.சுவானி, இளைஞர் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் 58வது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (21.04.2017) மதியம் 2.30 மணியளவில் வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக காரியாலயத்திற்கு சென்று காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை கையளித்தனர். இதன் போது கருத்து தெரிவித்த வடமாகாண சுகாதார அமைச்சர்..
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த சில வாரங்களுக்கு முன்பு வவுனியாவில் சுழற்சி முறையில் உண்ணாவிரதம் இருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். அதன் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை என்னிடம் ஒப்படைக்குமாறும் அவற்றை தனக்கு அனுப்பி வைக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கிணங்க இன்று என்னிடம் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் 115 நபர்களின் விபரங்களை என்னிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை விரைவில் சுகாதார அமைச்சருக்கு வழங்கவுள்ளேன் என தெரிவித்தார்.
கேப்பாபுலவு மக்களின் காணிகள் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற முப்படையினருடான சந்திப்பின் பின்னர் படையினர் வசமுள்ள கேப்பாபுலவு மக்களின் காணிகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன், பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த பகுதிகளில் மக்கள் விவசாயம் செய்ததற்கான அனைத்து விதமான ஆதாரங்களும் காணப்படுகின்றன பலவருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட சில கட்டடங்கள் காணப்படுகின்றன. தென்னந்தோப்புகள் காணபடுகின்றன. எனவே இவ்வாறு எல்லா வளமும் நிறைந்த ஒரு பகுதியை விட்டுக்கொடுப்பதற்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்டவன் என்ற வகையில் நானும் இடம்கொடுக்கப்போவதில்லை.
நல்லாட்சியில் மக்களது காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டாலும் அவை ஆமை வேகத்திலேதான் நகர்ந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலை மாற்றமடைந்து மக்களுக்கு உரித்தான காணிகள் மக்களுக்கு வழங்கப்பட்டு அவர்களை நிம்மதியாக வாழ வழிசமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் இன்று (21.04.2017) மதியம் 2 மணியளவில் இலங்கை மின்சார சபையின் வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த இலங்கை மின்சாரசபையின் வாகனம் சூசைப்பிள்ளையார் கோவில் வீதியிலிருந்து ஹொரவப்பொத்தானை வீதிக்கு திரும்ப முற்பட்டபோது மோட்டார் சைக்கிலில் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திவந்தவர் சிறு காயங்களுக்குள்ளானார்.
வவுனியாவில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் சாஐன் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகி வவுனியா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் சாஜன் நேற்றுமுன்தினம் (19.04.2017) மாலை 6.30 மணியளவில் புடையன் பாம்பு கடித்ததில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார்.
சக தோழிகளுடன் கடற்கரையில் நின்று செல்பி எடுத்துக்கொண்டிருந்த போது கடலலை இழுத்துச் சென்றதில், நீரில் மூழ்கி 11 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது மாத்தறை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் போது உயிரிழந்தவர் நுகேகொட, கங்கொடவில பிரதேசத்தைச் சேர்ந்த ருஸ்தி தருமினி ஜயசிங்க என்ற 11 வயது மாணவி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறவினர்கள் வீட்டிற்கு சென்ற குறித்த மாணவி, அங்குள்ள தனது 6 சக நண்பிகளுடன் கடற்கரைக்கு சென்றுள்ளார்.
அங்கு கடற்கரையில் உள்ள கடற்பாறையின் மீது நின்று செல்பி எடுத்துள்ளனர். இதன் போது அங்கு திடீரென வந்த பெரிய அலை இவர்களை இழுத்து சென்றுள்ளது.
இதன் போது அவருடன் சென்ற சக தோழிகள் 6 பேர் சிறுகாயங்களுடன் தப்பிக் கரைசேர்ந்தபோதும் குறித்த மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
மேலும், சம்பவம் இடம்பெற்ற அன்றைய தினம் உயிரிழந்த மாணவியின் பிறந்த தினம் என அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
நிந்தவூர் பகுதியில் பேக்கரி உணவு பொருட்களை விற்பனை செய்து வரும் வாகனம் ஒன்றில் மோதுண்டு ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளமை அந்தப்பகுதி மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (20.04) மாலை இடம்பெற்றுள்ளதுடன் விபத்திற்குள்ளான ஆண் குழந்தையை நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் தாய் பேக்கரி வண்டியில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்த போது குழந்தை வண்டிக்கு முன் நின்று கொண்டிருந்ததை சாரதி அவதானிக்கவில்லை.
சாரதி வாகனத்தை செலுத்திய போதே குழந்தை விபத்துக்குள்ளாகியுள்ளது. இதேவேளை, சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் உள்ள குப்பைகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 3 வருடங்களில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேல் மாகாணசபை முதலமைச்சர் இருசு தேவபிரிய தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கரதியான மற்றும் தொம்பே பிரதேசங்களில் தற்காலிகமாகவே குப்பை கொட்டப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் மின்சார நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில், இவ்வாறான மாற்று வழிகள் நாட்டு மக்களுக்கு நன்மையாக அமையும்.
சுவிஸ்லாந்து நாட்டில் குடியேறிய இலங்கை பெற்றோருக்கு பிறந்த தமிழ் பெண் ஒருவர் இரு நாடுகளின் கலாச்சாரங்களை வீடியோவாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இலங்கையை சேர்ந்த பெற்றோர் இருவர் சுவிஸில் குடியேறி புகலிடம் பெற்றுள்ளனர். பேர்ன் மாகாணத்தில் உள்ள Langenthal நகரில் குடியேறிய இவர்களுக்கு கடந்த 1988-ம் ஆண்டு Tama Vakeesan என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. சுவிஸில் வங்கி ஒன்றில் பணிபுரியும் இவருக்கு தற்போது வயது 28.
சுவிஸில் பிறந்திருந்தாலும் தமிழ் கலாச்சாரத்தை மறக்காத இவர் அதன் பெருமைகளை வீடியோவாக வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
சமீபத்தில் இவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய இரு நாடுகளை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.
‘இரண்டு நாடுகளின் கலாச்சாரங்களை அறிந்துள்ளதால் என்னிடம் தன்னம்பிக்கை அதிகமாகவே உள்ளது. தமிழர்கள் மற்றும் சுவிஸ் குடிமக்களை பற்றி விரிவாகவே அனைவரிடம் பேசிவருகிறேன்.
சில நேரங்களில் நான் எந்த நாட்டிற்கு சொந்தமானவர் என்ற சந்தேகம் அடிக்கடி எழுந்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
என்னால் தமிழ், ஜேர்மன் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேச முடியும். இப்படி பேசுவதால் இங்குள்ள சுவிஸ் குடிமக்கள் என்னை வியப்பாக பார்க்கின்றனர்.
சுவிஸ் குடிமக்கள் அன்பானவர்கள். ஆனால், தமிழர்களை போல் எளிதில் நட்பு ஏற்படுத்திக்கொள்ள முடியாது. சுவிஸில் உள்ள தமிழர்கள் வீட்டிற்கு எந்த நேரத்திலும் செல்லலாம். வீட்டில் அமர்ந்து உணவு அருந்தலாம்.
ஆனால், சுவிஸ் குடிமகன் வீட்டிற்கு செல்ல வேண்டுமானால் அவரை செல்போனில் தொடர்புக்கொண்டு ‘இன்றைக்கு வீட்டிற்கு வரலாமா?’ என அனுமதி வாங்கிய பிறகு தான் செல்ல முடியும்.
இரண்டு நாடுகளின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தி சுவிஸ் மற்றும் ஜேர்மன் மொழிகளில் சரளமாக பேசுவதால் எனக்கு சுவிஸில் எண்ணற்ற நண்பர்கள் சேர்ந்துள்ளனர்.
இந்த அனுபவங்களை வீடியோக்களாக வெளியிட்டு வருவதால் அனைவருக்கும் என்னை நன்றாக தெரிந்துள்ளது பெருமையாக உள்ளது.
ஆனால், ‘28 வயதான உங்களுக்கு ஏன் இன்னும் திருமணம் நடைபெறவில்லை’ என பலர் கேள்வி எழுப்புவது தான் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
’சாதிக்க எண்ணற்ற விடயங்கள் இருக்கும்போது திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம்?’ என Tama Vakeesan உற்சாக குரலில் பதிலளித்துள்ளார்.
பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த பெண் கடைக்காரர் ஒருவரின் முகத்தில் வாடிக்கையாளர் துப்பிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வாடிக்கையாளர் கேட்ட தரத்திலான சிகரெட் இல்லாமையினால் குறித்த நபர், கடைக்கார பெண் மீது துப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இனவாதத்தை தூண்டும் வகையில் இவ்வாறு செயற்பட்டதாக தெரிய வருகிறது.
30 வயதான Christopher James Callaghan என்ற குறித்த நபர் கடையில் தவறாக நடந்துக் கொண்டுள்ளதுடன், கவுண்டரில் உள்ள பெண் முகத்தில் துப்பி செல்லும் காட்சி அங்கிருந்த சி.சி.டிவி கமராவில் பதிவாகியுள்ளது.
Callaghan என்பவர் கடை ஊழியர்களிடம் கேட்ட தரத்திலான சிகரெட் அங்கில்லாமையினால் கடும் கோபமடைந்துள்ளார்.
இதனால் கடையின் ஊழியரான நிலானி நிழல்ராஜா என்ற இலங்கை பெண் குறித்த சிகரெட் இல்லை என்பதனை நிரூபிப்பதற்காக சிகரெட் வைக்கும் இடத்தை காட்டியுள்ளார். எனினும் குறித்த நபர் முகத்தில் துப்பியுள்ளார்.
சம்பவத்தில் ஆத்திரமடைந்த நிழல்ராஜா பொலிஸாரிடம் அறிவிப்பதற்கு முன்னர் கடையில் இருந்த பொருள் ஒன்றை எடுத்து எறிந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 10 ம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட Callaghan நேற்றைய தினம் செப்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினை Callaghan ஏற்றுக் கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் நிழல்ராஜாவிடம் வினவிய போது, அவரது நடத்தைகளை தான் வெறுப்பதாகவும், அவர் மீண்டும் அங்கு வரக்கூடாதென நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட Callaghan 16 வாரங்கள் சிறையில் அடைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் இரண்டு ஆண்டுகளுக்கு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவரை 35 நாட்களுக்கு சேவையை மேற்பார்வையிடுமாறும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 250 பவுண்ட் செலுத்துமாறு மாவட்ட நீதிபதி மிரியம் ஷெல்வே உத்தரவிட்டுள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் மூன்றாம் உகப்போர் நிச்சயமாக நிகழ்ந்து பேரழிவை ஏற்படுத்தும் என உலக நிகழ்வுகளை முன்கூட்டிய கணிக்கும் பாபா வாங்கா கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்கேரியா நாட்டை சேர்ந்த பாபா வாங்கா என்ற மூதாட்டி தான் இதனைக் கணித்து கூறியுள்ளார். இவர் பிறந்ததும் 12 வயது வரை ஆரோக்கியமாக வளர்ந்து வந்துள்ளார்.
ஆனால், அதன் பிறகு அவருடைய கண் பார்வை திறன் குறைந்து பின்னர் முற்றிலுமாக பார்வையை இழந்துள்ளார். எனினும், பாபா வாங்கா கணித்து கூறும் ஒவ்வொரு நிகழ்வும் சரியாக நடந்துள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு பாபா வாங்கா உயிரிழந்தபோது அவருக்கு வயது 85 ஆகும். ஆனால், அதற்கு முன்னதாக பல விடயங்களை முன்கூட்டியே கணித்து கூறியுள்ளார்.
குறிப்பாக, அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீது விமான தாக்குதல் நடைபெறும் எனக் கூறினார். இத்தாக்குதல் நிகழ்ந்து உலகையே அதிர வைத்தது.
அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார் என பாபா வாங்கா கணித்தார். அதே போல், ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்றார்.
பின்னர், 2016ம் ஆண்டு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் வலுமை பெறும் எனவும், ஐரோப்பாவில் இருந்து பிரித்தானியா விலகும் எனவும் கணித்தார்.
இது மட்டுமில்லாமல், தன்னுடைய குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி ரசாயன தாக்குதலை நடத்துவார் என பாபா வாங்கா கணித்தார். இதுவும் தற்போது உண்மையாகவே நிகழ்ந்துள்ளது.
இறுதியாக, 2017ம் ஆண்டிற்கு பின்னர் மூன்றாம் உலகப்போர் ஏற்படும் எனவும் பாபா வாங்கா கணித்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளுக்கு மத்தியில் பகைமை அதிகரித்து வருவதால் இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமா என்ற அச்சமும் பல நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.