வவுனியா நகரசபையின் அசமந்தப்போக்கு : சம்பவ இடத்திற்கு விரைந்த பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான்!!

 
வவுனியா நகரசபை மைதானத்தில் முற்செடிகள் மற்றும் தொட்டாசினுங்கிச் செடிகள் காணப்படுவதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் இன்று (17.03.2017) சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான வலயமட்ட விளையாட்டுப் போட்டிகள் கடந்த சில நாட்களாக நகரசபை மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இன் நிலையின் இவ் விளையாட்டு மைதானம் விளையாடுவதற்கு உகந்த நிலையில் இல்லையென ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து கடந்த 14.03.2017 அன்று மைதானத்தை துப்பரவு பின்னரே விளையாட்டில் ஈடுபட்டனர்.

இச் சம்பவம் தொடர்பாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் இன்று (17.03.2017) காலை 11.30 மணியளவில் மைதானத்தினை பார்வையிட்டதுடன் வவுனியா நகரசபைச் செயலாளருடனும் கலந்துரையாடினார்.

மைதான வாடகையாக ஒருநாளுக்கு ஆயிரத்து 750 ரூபாவும், சுத்தமாக்குவதற்கு என இரண்டாயிரம் ரூபாயும் நகரசபையால் அறவிடப்படுகின்றது. ஆனால் அதற்கு ஏற்ற வகையிலான மைதானம் சீராக இல்லை என பலரும் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஐ.நாவை இரண்டு வருட காலஅவகாசம் வழங்க வேண்டாம் எனக் கோரி போராட்டம்!!

 
வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தில் இன்று (17.03.2017) பிற்பகல் 2.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதியிலிறங்கி போரட்டத்ததை மேற்கொண்டனர்.

ஐ.நாவே கால அவகாசம் நீடிப்பு வழங்கி காணாமற்போனோருக்கு துரோகம் இழைக்காதே, கடத்தியவர்களை காப்பாற்ற காலநீடிப்பு, தெருவில் இருக்கும் தாய்மார்களின் கண்ணீருக்கு பதில் என்ன போன்ற வாசகங்களைத்தாங்கியவாறு கதறி அழுது வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்ட இடத்திற்குச் சென்ற வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா அவர்களுடன் கலந்துரையாடினார்.

வவுனியாவில் சுகவீனமுற்ற எட்டு பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் சிவானந்தா வித்தியாலயத்தின் பாடசாலை மாணவர்கள் எட்டுப்பேர் சுகவீனம் காரணமாக நேற்று (16.03.2017) செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மெனிக்பாம் சிவானந்தா வித்தியாலயத்தில் ஆறாம் ஆண்டில் கல்வி கற்கும் எட்டு மாணவர்கள் சுகவீனமுற்ற நிலையில் பாடசாலை அதிபரின் அழைப்பின் பேரில் செட்டிக்குளம் வைத்தியசாலையிலிருந்து சென்ற அம்புலன்ஸ் வண்டி மாணவர்களை வைத்தியசாலையில் சேர்த்திருந்ததுடன் மாணவர்களுக்கு சிகிச்சை மேற்கொண்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக செட்டிக்குளம் வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டபோது..

நேற்றையதினம் ஒரு மாணவன் மற்றும் ஏழு மாணவிகள் உட்பட எட்டு பாடசாலை மாணவர்கள் திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய பாடசாலையிலிருந்து அம்புலன்ஸ் வண்டி மூலம் அழைத்துவரப்படட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தலைசுற்று மற்றும் ஒவ்வாமை காரணமாகவே மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் சுமார் ஒரு மணிநேர சிகிச்சையின் பின் மாணவர்கள் பாடசாலை திரும்பியதாக வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தின் காரணமாக பாடசாலை அதிபரால் நண்பகல் 12 மணியளவில் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

வவுனியாவில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு திருட்டு!!

 
வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள வர்த்த நிலையமொன்றில் இன்று (17.03.2017) அதிகாலை திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள மருந்தக விற்பனை நிலையத்தினை இன்று (17.03.2017) அதிகாலை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளதாக உரிமையாளரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளரிடம் வினவிய போது, நேற்று (16.03.2017) இரவு 9 மணியளவில் வழமை போன்று வர்த்தக நிலையத்தினை பூட்டி விட்டு சென்றதாகவும் இன்று (17.03.2017) காலை 7 மணியளவில் வர்த்தக நிலையத்தினை திறந்த போது பின் பக்க வாயிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததாகவும் பணம் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

அழிந்த பைல்களை மீண்டும் பெறலாம் : இதோ சூப்பரான மென்பொருட்கள்!!

பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் முதல் மருத்துவமனைகளிலும் கணனியின் பயன்பாடு அதிகம். அவசரத்திலோ அல்லது தெரியாமலோ ஏதாவது ஒரு முக்கியமான பைல்(File)-ஐ அழித்துவிட்டால் உடனடியாக நாம் தேடுவது Recycle Binல் தான்.

ஒருவேளை அதிலிருந்தும் அழித்துவிட்டால் என்ன செய்வது?. அதற்கான தொழில்நுட்பம்தான் Recovery Software.

நம் மொபைலிலோ அல்லது கணனியிலோ இருந்து அழிக்கப்பட்டவற்றை நாம் இதை பயன்படுத்தி மீண்டும் பதிவு செய்து கொள்ள இயலும்.

Recuva

இது அழிக்கப்பட்ட பைல்களை(File) மீண்டும் பதிவு செய்து கொள்ள உதவும் Software-களில் ஒன்று. இந்த Software-ஐ Windows 10, Windows 8(8.1), Windows XP, Windows 7, Windows Vista போன்ற அனைத்து OS-களிலும் பயன்படுத்தலாம்.

சிறப்புகள்

கையாள்வதற்கு எளிதான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

CD, DVD, Pendrive போன்றவற்றில் அழிக்கப்பட்ட கூட பைல்களை மீண்டும் பதிவு செய்ய இயலும்.

Puran File Recovery Program

இதனை பயன்படுத்தி 50 வகையான பைல்களை(eg. Photo, song,document) மீண்டும் பதிந்து கொள்ளலாம்.

அனைத்து OS-களிலும் இதனை பயன்படுத்த இயலும். ஆனால்,பதிவு செய்யும் பைல்களின் அளவான மிக குறைவே.

இதனால் அலுவலகங்கள் போன்ற இடங்களில் இந்த Software-ஐ பயன்படுத்த முடியாதது இதில் உள்ள குறையாகும்.

பயன்படுத்தும் முறை

முதலில் கம்ப்யூட்டர் போன்றவற்றில் நாம் வேறு ஏதாவது பணி(Task) செய்து கொண்டிருந்தால், அதனை நிறுத்தி விடவேண்டும்.

Recovery Software-ஐ நமது கம்ப்யூட்டரில் பதிந்த கொண்ட பின்னர், அழித்த பைல்கள் தானாகவே Scan செய்து நமக்கு காட்டப்படும். அவற்றில் தேவையான பைல்-ஐ நாம் Restore செய்து கொள்ளலாம்.

இத்தகைய Software –கள் தக்க சமயத்தில் உதவியாக இருந்தாலும், சில சமயங்களில் தீங்கு விளைவிக்கின்றன. எனவே நாம் கவனமாக நம் தகவல்களை கையாள்வதே பாதுகாப்பானதாகும்.

தந்தை முன்னே மகள்களை பலாத்காரம் செய்த 13 பேர் கொண்ட கும்பல் : பழிக்குப் பழி வாங்கிய கொடூர சம்பவம்!!

குஜராத்தில் இரண்டு மகள்களை கடத்திய கும்பல், தந்தை கண்முன்னரே அவர்களை பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் தாகோத் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 13 வயது மற்றும் 15 வயதுள்ள இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும் இவருக்கு ஒரு மகன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அவரது மகன் மது வழக்கு தொடர்பாக பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் பொலிசாரிடம் தனக்கு மது வழங்கியர் குமாத் பாரியா என்று கூறியுள்ளார். இதனால் பொலிசார் குமாத் பாரியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த குமாத் பாரியா இதற்கு பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்று நினைத்துள்ளார். இதனால் கடை நடத்தி வந்தவரின் இரண்டு மகள்களையும் குமாத் பாரியா 13 பேர் கொண்ட கும்பலுடன் ஒரு சொகுசு காரில் கடத்தியுள்ளார்.

அதைத் தொடர்ந்து அவர்களின் தந்தையும் கடத்தியுள்ளனர். அப்போது நான்கு பேர் இரண்டு மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பாக செல்ல சொகுசு காரில் இருந்த கும்பல், தந்தை முன் அந்த இரண்டு இளம் பெண்களையும் பாலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும் அவர் என்னை பொலிசில் காட்டிக் கொடுத்தற்கு உன் மகனை பழிவாங்குவதற்காகத்தான் உன் மகளை பலாத்காரம் செய்தோம் என்று குமாத் பாரியா கூறியுள்ளார்.

பின்னர் அவர்களை காரை விட்டு இறக்கிவிட்டு சென்றுள்ளனர். பொலிசாரிடம் இதுகுறித்து புகார் அளிக்கக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர். இது குறித்து அந்த இளம்பெண்களின் தந்தை புகார் அளிக்க 13 பேரில் குமாத் பாரியா உள்பட ஐந்துபேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 8 பேரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கல்விக்கு வயது தடையில்லை : தாய், தந்தை, மகன் சேர்ந்து எழுதிய பரீட்சை!!

கல்விக்கு வயது ஒரு தடை இல்லை ஆர்வம் இருந்தால் போதும் என்பதை நிரூபித்து தன் மகனுடன் பிளஸ் 2 தேர்வு எழுதி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெற்றோர் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் பிளஸ் 2 தேர்வுகளில் தனது மகனுடன் தாயும், தந்தையும் தேர்வு எழுதுவதை கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

நடியா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி. அவரது மனைவி இல்லத்தரசி. இவர்களுக்கு பீலாப் என்ற மகன் உள்ளார். அவர் ரனாகாட்டில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

தற்போது பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தன் மகன் பிலாப்புடன் பிளஸ் 2 படிக்கும் தாய், தந்தை ஆகியோரும் தேர்வு எழுதினர்.

குடிசை வீட்டில் வாழும் அவர்களுக்கு படிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் கடந்த 2014 மற்றும் 2015ல் இடைநிலைக் கல்வியை முடித்தனர்.

இந்நிலையில், பிளஸ் 2 படிக்க விரும்பிய அவர்களை அவர்களது வயதை காரணம் காட்டி அனுமதி அளிக்க மறுத்து விட்டன.

இறுதியாக படிப்பின் மீது இருவருக்கும் உள்ள தாக்கம் காரணமாக பிலாப்பின் பள்ளித் தலைமை ஆசிரியர் இருவரையும் பள்ளியில் சேர்த்துக் கொண்டார்.

கடந்த 3 ஆண்டுகளாக தேர்வுக்காக இருவரும் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை பிலாப் தீர்த்து வைப்பார்.

அனைத்து தடைகளையும் தகர்ந்து படிப்பின் மீதான ஆர்வத்தால் கடினமாக உழைக்கும் பிலாப்பின் பெற்றோர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

154 ரூபாவை தாண்டிய அமெரிக்க டொலரின் விலை!!

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 154 ரூபாவை கடந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதற்கமைய நேற்றைய தினம் அமெரிக்கா டொலரின் விற்பனை விலை 154.04 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அமெரிக்கா டொலரின் கொள்வனவு விலை 150.19 ரூபாயாக பதிவாகியுள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட புதிய தரவிற்கமைய ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 189.92 எனவும், யூரோ ஒன்றின் விற்பனை விலை 166.25 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

இளைஞனின் மரணத்தால் உயிர் வாழும் இருவர் : குடும்பத்தாரின் மனிதாபிமானம்!!

பொலன்னறுவையில் மூளைச்சாவடைந்த இளைஞரின் இரண்டு சிறுநீரகத்தில் இருவர் உயிர் வாழும் தகவல் வெளியாகியுள்ளது.

திடீர் விபத்துக்குள்ளாகி சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவடைந்த இளைஞரின் இரண்டு சிறுநீரகம் தானம் வழங்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை வைத்தியசாலையினால் இந்த சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், 17 வயதுடைய பாடசாலை மாணவன் மற்றும் கண்டி வைத்தியசாலையில் சிறுநீரக பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 38 வயதுடைய நபருக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

திடீர் விபத்துக்குள்ளாகி மூளைச்சாவடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 21 வயதுடைய இளைஞரான W.அகில மனோஷ் எனபவரின் சிறுநீரகங்களே இவ்வாறு பொருத்தப்பட்டுள்ளது.

அகில மனோஷின் தாயார் பொலன்னறுவை வைத்தியாலையில் மூத்த உதவியாளராக செயற்படுகின்றார்.

திருமணம் முடித்துள்ள அகில மனைவியின் மற்றும் பெற்றோர் அனுமதி வழங்குவதற்கு இணங்கியமையினால் மரணத்தை நெருங்கியிருந்த இருவர் மீண்டும் வாழ சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

லண்டனில் சர்வதேச விருது பெற்ற இலங்கை யுவதி!!

2017ஆம் ஆண்டிற்கான பொதுநலவாய அமைப்பின் இளம் ஆளுமையாளராக இலங்கையைச் சேர்ந்த யுவதி ஒருவர் விருது பெற்றுள்ளார்.

கிறிஸ்டல் ரீன் என்ற யுவதி விருது வென்றுள்ளார். மாற்றத் திறனாளிகளுக்கு உதவும் எனேபெல் லங்கா அமைப்பின் ஸ்தாபக உறுப்பினரான, இவர் இளம் மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கி சுபீட்சமான வாழ்வை முன்னெடுப்பதற்கான உதவிகளையும் வழங்கி வருகிறார்.

தேர்தல் செயற்பாடுகளில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்பதிலும் இவர் ஆர்வமூட்டி வருகிறார்.

தமது அமைப்பு மேற்கொள்ளும் பணிகளுக்கு கிடைத்த பாராட்டையே இந்த தெரிவு குறிப்பதாக கிறிஸ்டல் ரீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுநலவாய அமைப்பின் பெரும்பாலான வளங்களை பயன்படுத்தி கூடுதலான மாற்றுத் திறனாளிகளுக்கு விரிவாக சேவைகளை மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

பொதுநலவாய அமைப்பின் விசேட அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு குறைந்த இளைஞர் யுவதிகளுக்கு இதில் இணைந்து கொள்ளலாம்.

வறுமை ஒழிப்பு, சமாதானம் போன்ற இலக்குகளை வெற்றிகரமாக அடைந்து கொள்வோரை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்கு செல்லமுடியுமா?

வீசா இன்றி இலங்கையர்கள் கனடாவிற்கு செல்ல முடியும் என தெரிவித்து வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் மறுப்பு வெளியிட்டுள்ளது.

அத்துடன், இலங்கையர்கள் கனடாவுக்குள் பிரவேசிப்பது தொடர்பிலான சட்டங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வீசா நடைமுறையில் வழமையான நடைமுறைகளே பின்பற்றப்படுவதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.

இதேவேளை, சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக கனடா செல்லும் இலங்கையர்களுக்கு வீசா அனுமதி தேவையில்லை என சில சமூக வலையமைப்புக்கள் மூலம் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலிருந்து கனடா செல்ல விரும்புபவர்கள் http://www.cic.gc.ca/english/visit/index.asp இந்த தளத்திற்கு சென்று சரியான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமற்போன இருவரை மீட்டுத்தருவதாகக் கூறி நிதி மோசடி!!

விடுதலைப்புலிகளின் பொறுப்பாளர்களாக செயற்பட்டு, காணாமற்போன இருவரை மீட்டுத்தருவதாகக் கூறி நிதி மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.

விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக செயற்பட்டு, இறுதி யுத்தத்தில் காணாமற்போன இளம்பரிதியை விடுவித்துத் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்யப்பட்டதாக அவரது மாமியார் தெரிவித்தார்.

இதேவேளை, விடுதலைப்புலிகளின் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளர் கரிகாலனை விடுவித்துத் தருவதாகக் கூறி தம்மை அச்சுறுத்தி வெளிநாட்டிலுள்ள உறவினர்களிடமிருந்து நிதி மோசடி செய்யப்பட்டதாக அவரின் மாமியார் தெரிவித்தார்.

இந்த இரு சம்பவங்களும் 2011 ஆம் ஆண்டு இடம்பெற்றதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

-News First –

தாய்லாந்து வீதியில் பட்டப்பகலில் நிர்வாணமாக நடமாடிய பெண்!!

தாய்லாந்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமொன்றில் பெண் ஒருவர் நிர்வாணமாக நடந்து திரிந்தமை பரபரப்பை ஏற்படுத்தியது. தலை நகர் பேங்கொக்கிலுள்ள உல்லாசத் தலமான காவோ சான் வீதியில் பிற்பகல் வேளையில் இப் பெண் நிர்வாணமாக நடமாடித் திரிந்ததைக் கண்டு பலர் திகைத்தனர்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர், அப் பெண்ணுடன் உரையாட முற்பட்டனர். ஆனால், அப் பெண் அங்கிருந்து ஓடிவிட்டார். இது குறித்து தமது சகாக்களுக்கு அப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தகவல் வழங்கினர்.

அதன்பின் பாலமொன்றில் வைத்து அப் பெண்ணை பொலிஸார் தடுத்து நிறுத்தி, அவர் அணிந்துகொள்வதற்கு சாரம் ஒன்றை வழங்கினர். இப் பெண் 30, 40 வயதுக்கிடைப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவரை விசாரணைக்காக பொலிஸார் அழைத்துச் சென்ற போதிலும் அவர் கூறுவதை பொலிஸாரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆங்கிலம் மற்றும் தாய் மொழியில் கேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் அப் பெண் வைத்தியசாலையொன்றுக்கு அனுப்பப்பட்டார். இது தொடர்பில் பேங்கொக் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்காதலுக்காக கணவனின் தந்தை மற்றும் சகோதரனைக் கொன்ற மனைவி!!

கள்­ளக்­கா­த­லுக்­காக கண­வனின் தந்தை மற்றும் அவ­ரது சகோ­தரனை பெண்­ணொ­ருவர் கொலை செய்த சம்­வ­ப­மொன்று மூன்று ஆண்­டு­க­ளுக்கு பின்னர் வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளது.

தமி­ழ­கத்தின் வேலூர் மாவட்டம் அரக்­கோணம் அடுத்த நெமிலி தாலுக்கா புன்னை கிரா­மத்தைச் சேர்ந்­தவர் ஜிமா­ஜிகான். இவ­ரது மனைவி சபீரா. இவர்­க­ளுக்கு இரு மகன்கள் உள்­ளனர். ஜிமா­ஜி­கானின் அண்ணன் அப்­துல்­காதர், மாமனார் ஷாஜகான், அண்­ணனின் மனைவி ரமீஜா ஆகியோர் கூட்­டுக்­கு­டும்­ப­மாக ஒரே வீட்டில் வசித்து வந்­துள்­ளனர்.

இந்­நி­லையில் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்­துல்­காதர் தூக்கிட்டுத் தற்­கொலை செய்து கொண்டார். அவர் இறந்து 8 மாதங்கள் கழித்து தந்தை ஷாஜ­கானும் வீட்டு வாசலில் மர்­ம­மான முறையில் இறந்து கிடந்தார்.

இரு­வரும் அடுத்­த­டுத்து உயி­ரி­ழந்த சோகத்தில் குடும்­பத்­தினர் யாரும் இரு சம்­ப­வங்கள் குறித்து பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு தெரி­விக்­க­வில்லை.

இந்­நி­லையில் ஜிமா­ஜி­கா­னுக்கும் அவ­ரது மனைவி சபீ­ரா­வுக்கும் கருத்­து­வே­று­பாடு ஏற்­பட்டு இரு­வரும் பிரிந்­தனர்.
சில மாதங்கள் கழித்து மனம் மாறிய சபீரா, ஜிமா­ஜி­கானை சந்­தித்து தன்­னோடு சேர்ந்து வாழு­மாறு கூறி தான் செய்த தவ­று­க­ளுக்கு எல்லாம் மன்­னிப்புக் கோரி­யுள்ளார்.

அப்­போது ஜிமா­ஜி­கானின் அண்­ணனும் தந்­தை யும் சாதா­ர­ண­மாக இறக்­க­வில்லை என்றும் தன்­னுடன் கள்ளத் தொடர்பு வைத்­தி­ருந்த கிருஷ்ணன் தான் கொன்றார் எனவும் கூறி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து அதிர்ச்­சி­ய­டைந்த ஜிமா­ஜிகான் பொலி­ஸா­ரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறு­வனை அடித்துக் கொன்ற வளர்ப்புத் தாயி­ட­மி­ருந்து சூடு வைக்­கப்­பட்ட நிலையில் சிறுமி மீட்பு!!

மட்­டக்­க­ளப்பு நாவற்­குடா பிர­சேத்தில் சிறுவன் ஒரு­வனை அடித்துக் கொலை செய்­த­தாக சந்­தே­கிக்­கப்­படும் பெண் வளர்த்து வந்தார் எனக் கூறப்­படும் சிறுமி ஒரு­வரை மீட்­டுள்­ள­தாக காத்­தான்­குடி பொலிஸார் தெரி­வித்­தனர்.

காத்­தான்­குடி பொலிஸ் பிரி­வி­லுள்ள மட்­டக்­க­ளப்பு நாவற்­குடா பிர­தேசத்தில் செவ்­வாய்க்­கி­ழமை இடம்பெற்ற 4வயது சிறு­வனின் கொலைச் சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்­டுள்ள மட்­டக்­க­ளப்பு நாவற்­குடா பிர­சேத்­தி­லுள்ள வளர்ப்புத் தாயான பெண் வளர்த்து வந்த 8 வய­தான சிறு­மியே மீட்­கப்­பட்­ட­வ­ராவார்.

குறித்த சிறுமி மட்­டக்­க­ளப்பு கொக்­கட்­டிச்­சோலை பிர­தே­சத்தைச் சேர்ந்­தவர் என்றும் அங்­குள்ள ஆசி­ரியர் ஒரு­வரின் மூல­மாக இந்த சிறு­மியை பெற்று வளர்த்து வந்­த­தா­கவும் ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வந்­துள்­ள­தாக காத்­தான்­குடி பொலிஸார் தெரி­வித்­தனர்.

குறித்த சிறு­மியை வளர்ப்புத் தாய் பல தட­வைகள் அடித்­துள்­ள­தா­கவும் சூடு வைத்­துள்­ள­தா­கவும் விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வந்­துள்­ள­தா­கவும் பொலிஸார் மேலும் கூரினார்.

குறித்த சிறு­மி­யி­டமும் விசா­ர­ணைகள் இடம்­பெற்று வருவதாகவும் சிறுமியை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மலைப்பாம்பின் உடலில் இமோஜி உருவங்களை உருவாக்கி சாதனை!!(வீடியோ)

ஜோர்ஜியாவைச் சேர்ந்த ஜஸ்டின் கோபில்கா எனும் பிராணி வளர்ப்பாளர், மலைப்பாம்பின் உடலில் இமோஜி உருவங்களை உருவாக்கியுள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளாக மலைப்பாம்பின் உடலில் இமோஜிகளை உருவாக்கும் பரிசோதனைகளை அவர் தொடர்ந்து முன்னெடுத்து வந்துள்ளார்.

உயிரினங்களின் நிறத்தையோ அதன் வடிவமைப்பையோ மாற்றி அதிக விலைக்கு அவற்றை விற்பனை செய்வதே இவரது தொழில்.

என்றாலும், இதுவரை ஜஸ்டின் கோபில்கா உருவாக்கிய விலங்குகளில் இமோஜி பால் மலைப்பாம்பு அளவிற்கு வியக்கவைத்த விலங்கு எதுவுமில்லை.

அல்பினோ வகையைச் சேர்ந்த வெள்ளை மலைப்பாம்பின் உடலில் மஞ்சள் வண்ண இமோஜிகளை உண்டாக்கி சாதனை படைத்திருக்கிறார்.

ஆபிரிக்க மலைப்பாம்புகளில் இது சிறியது. இமோஜி மலைப்பாம்பு குறைந்தது 4500 டொலர்கள் வரை விலை போகும் என்றாலும் அதனை விற்பனை செய்யும் திட்டம் இல்லை என ஜஸ்டின் கோபில்கா குறிப்பிட்டுள்ளார்.