வவுனியாவில் சர்வதேச மகளிர்தின நிகழ்வுகள்!!

 
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வவுனியா நகசபை மண்டபத்தில் இன்று (13.03.2017) காலை 10 மணியளவில் வடகிழக்கு பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு ஏற்பாடு செய்த மாற்றத்திற்காகத் துணிவோம் எனும் தொனிப் பொருளில் சர்வதேச மகளிர் தினம் இடம்பெற்றது.

பெண்கள் எதிர் நோக்கும் சவால்கள், பெண்கள் அமைப்பினர் ஒன்றிணைந்து நீதி கேட்கும் போராட்டம், வடகிழக்கில் பெண்கள் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களின் மீள் பார்வை, அதன் பலாபலன்கள் என்பன தொடர்பான கலந்துரையாடல், கலை நிகழ்வுகள் என்பன பிற்பகல் 4மணிவரையும் இடம்பெற்றதுடன் நிகழ்வில் ஒரு அங்கமாக ஜனாதிபதி, பிரதமருக்கு கையெழுத்து வேட்டையும் இன்றைய மகளிர் தினத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஒமந்தை சோதனைச்சாவடியாக இயங்கிவந்த காணிகள் அளவிடும் பணிகள் ஆரம்பம்!!

 
வவுனியாவில் ஒமந்தை சோதனைச்சாவடியாக இயங்கிவந்த காணிகளை இராணுவம் (18.01.2017) அன்று உத்தியோகபூர்வமாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமாரவிடம் கையளித்திருந்த நிலையில் இன்று (13.03.2017) காணிகளுக்கு சொந்தமான மக்கள் தங்கள் காணிகளை அடையாளம் காட்டுவதற்கு நிலஅளவைத் திணைக்களதின் அதிகாரிகளுடன் வந்திருந்ததுடன் சட்டப்படி காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட 20 ஏக்கர் காணியை 15 குடும்பங்களைச் சேர்ந்த அங்கத்தவர்கள் பார்வையிட்டதுடன் தங்கள் காணிகளின் எல்லைகள் மற்றும் வீடுகளை கிராம உத்தியோகத்தருக்கு அடையாளம் காட்டினர்.

மொத்தமாக ஓமந்தை இறம்பைக்குளம் சோதனைச்சாவடி 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள நிலையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை தவிர்த்து அப்பகுதியில் 5.50 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளனர்.

ஓமந்தை காணியை பார்வையிட்ட உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கையில், 1997 ஆம் ஆண்டு ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை காரணமாக நாங்கள் ஓமந்தை இறம்பைக்குளத்திலிருந்து நிரந்தரமாக இடம்பெயர்ந்து வன்னிக்கு சென்றிருந்தோம். அன்று தொடக்கம் எங்களது சொந்த மண்ணில் எப்போது வாழப்போகின்றேம் என்ற ஏக்கம் இருந்துகொண்டிருந்தது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் கூட ஓமந்தை சோதனைச்சாவடியூடாக பயணிக்கும்போது நாங்கள் வாழ்ந்த மண்ணை கண்ணீரோடு பார்த்துக்கொண்டு சென்றிருக்கிறோம்.

இராணுவத்தினர் எங்களது காணிகளை விடுவித்துள்ள நிலையில் இன்று எங்களது சொந்த மண்ணில் கால்பதித்து இருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

யுத்தத்தின் காரணமாக எங்கள் சொந்த பந்தங்களை இழந்திருந்த நிலையில் எங்கள் நிலம் விடுவிக்கப்பட்டது எங்களது அகதி வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதும் ஆறுதலான விடயமாக இருக்கின்றது.

அரசாங்கம் எங்களது காணிகளை விடுவித்திருக்கிறது. ஆனால் குடியிருக்க எங்களுக்கு ஒரு வீட்டுத்திட்டத்தை அரசாங்கம் வழங்க முன்வர வேண்டும் எனத் தெரிவித்தனர்.

வவுனியாவில் இடியுடன் கூடிய கடும் மழை!!

 
வவுனியாவில் இன்று (13.03.2017) மதியம் 2 மணி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது.

வவுனியா நகரம், பட்டானிச்சூர், குருமன்காடு, வேப்பங்குளம், நெளுக்குளம், குழுமாட்டுச்சந்தி போன்ற வவுனியாவில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது.

இதனால் வீதிகளில் மழை நீர் தேங்கி நிற்ப்பதுடன் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் தொடர்ச்சியாக மழை பெய்யுமானால் வவுனியா திருநாவற்குளம் மக்களின் வீடுகளுக்கு வெள்ள நீர் உற்புகும் நிலைமை காணப்படுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வவுனியா நோக்கிப் பயணித்த பேரூந்தில் இப்படியும் ஒரு சம்பவம்!!

 
மன்னாரிலிருந்து வவுனியாவிற்கு கடந்த 10ம் திகதி பிற்பகல் 4.30 மணிக்கு புறப்படவிருந்த வவுனியா இ.போ.சபைக்குச் சொந்தமான பேருந்தில் நடைபெற்ற சம்பவம்.

வவுனியா செல்வதற்காக இ.போ.ச பேருந்து தயாரான வேளையில் பயணிகள் அமர வேண்டிய ஆசனத்தில் முல்லைத்தீவுக்குரிய வழிப்பதாதை இருவருக்குரிய ஆசனத்திலும் ஒரு லீட்டர் வெற்று தண்ணீர் போத்தல்கள் சில ஆசனங்களிலும் 5 லீட்டர் வெற்று தண்ணீர் போத்தல்கள் சில ஆசனங்களிலும் அருகருகே இரு ஆசனங்களிலும் இருந்தன.

ஒரு முதியவர் மட்டும் தனது பணப்பையை ஓர் ஆசனத்தில் வைத்துவிட்டு வெயில் காரணமாக மறு பக்கத்தில் அமர்ந்திருந்தார். மற்றும் இரண்டு பயணப்பைகளும் காணப்பட்டன.

பயணிகள் வரத்தொடங்கியதால் நடத்துனரும் பயணச்சீட்டினை கொடுத்து கொண்டிருந்தார். இரு வெற்றுப் போத்தல்கள் மற்றும் முல்லைத்தீவு வழி பதாதை இருந்த ஆசனத்தில் ஒருவரும் அமரவில்லை.

பயணிகள் அமர வேண்டிய ஆசனத்தில் இவைகளும் அமர்ந்து இடம் பிடித்தால் நாளை இருக்கைகளில் இரும்புக்கம்பிகள் , ஆயுத உபகரணங்கள் உரிமை கோரி அமர்ந்திருக்கும். என பாதிக்கப்பட்ட பேருந்தில் பயணம் செய்த பயணிகள் தங்கள் ஆதங்கங்களை தெரிவித்தனர்.

அரச சேவையில் பணிபுரிபவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு இடம் எடுத்து கொடுப்பதற்காக இப்படியாக நடந்தால் நாங்கள் எப்படி பயணத்தை மேற்கொள்வது, நின்றபடி தான் பயணம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் காணாமல்போன மாணவன் மன்னாரில் கண்டுபிடிப்பு!!

நேற்றைய தினம் வவுனியாவில் காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட அனுராஜா லலோசன் என்ற 14 வயது மாணவன் இன்று மதியம் மன்னார் பிரதேசத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட மாணவன் நேற்றைய தினம் (13) அவனது வீட்டில் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக மன்னார் பிரதேசத்திலுள்ள பாதிரியார் ஒருவரிடம் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஊடகங்களில் மாணவனைக் காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த செய்தி வெளியானதை அறிந்ததும் குறிப்பிட்ட பாதிரியார் மாணவனை மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் மாணவனின் பெற்றோரை அழைத்து நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர். மேலும் எதிர்வரும் புதன்கிழமை வரையில் குறித்த மாணவனை சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் விடுமாறும் அதன் பின்பு பெற்றோரிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்தி : வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனத்திற்குச் சென்ற மாணவனைக் காணவில்லை!!

வவுனியாவில் வெடிக்காத நிலையிலிருந்த ஷெல் மீட்பு!!

வவுனியா உலுக்குளம் பகுதியிலுள்ள வெற்றுக் காணியிலிருந்து வெடிக்காத நிலையிலிருந்த ஷெல் ஒன்று கண்டெடுக்கப்பட்டு விஷேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா உலுக்குளம் பகுதியில் இன்று காலை தனது காணியினை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது மண்ணில் புதையுண்ட நிலையில் 60மில்லி மீற்றல் ஷெல்லினை அவதானித்த காணி உரிமையாளர் உடனடியாக உலுக்குளம் பொலிஸ் நிலையில் முறையிட்டுள்ளார்.

இதையடுத்து அங்கு சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் விஷேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் இன்று காலை செயலிழப்புச் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை தினம்!!

 
வவுனியாவில் இன்று (13.03.20178) காலை 8.30 மணியளவில் வைத்தியசாலை சுற்றுவட்டத்திலுள்ள திருவள்ளுவர் நினைவுத் தூபில் திருவள்ளுவர் குருபூசை தினம் இடம்பெற்றது.

நகர வரியிறுப்பாளர் சங்கம், தமிழ் விருட்சம் என்பன இணைந்து எற்பாடு செய்த இந்நிகழ்வு கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தலைவர் தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்றது.

ஜேர்மன் நாட்டின் சர்வதேச தொண்டு நிறுவனத்தின் வைத்தியர்கள், தாதியர்கள் கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலைக்கு மலர் மாலை அணிவித்தது விஷேட அம்சமாக இடம்பெற்றது.

தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் திரு.சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், முன்ளான் நகர உப பிதா சந்திரகுலசிங்கம், வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலை மாணவ, மாணவிகள், பொது அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு மலர் தூவி குருபூசை தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா மக்களுக்கு ஓர் எச்சரிக்கை!!

வவுனியாவில் கடந்த சில நாட்களாக 22 பேர் பன்றிக்காச்சல் தொற்று நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

குறித்த நோயாளர்களில் தற்போது 22 பேருக்கு பன்றிக்காச்சல் இனங்காணப்பட்டு 16 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு சென்றுள்ளதாகவும் 5 பேர் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒருவர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலைப்பணிப்பாளர் கூறியுள்ளார்.

அத்துடன், நோய் தொற்று ஏற்பட வாய்புக்கள் அதிகம் உள்ளதால் சிறுவர்களையும், குழந்தைகளையும் தேவையின்றி வைத்தியசாலையில் தங்கியுள்ள உறவினர்களைப் பார்வையிடுவதற்கு அழைத்து வருவதைத் தவிர்க்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கர்ப்பிணித்தாய்மார் மற்றும் சிறுவர்கள் அவதானமாக இருக்குமாறும் வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலைக்கு வரும் குழந்தைகள், சிறுவர்கள் அனைவருக்கும் சுவாசத்தை பாதிக்காதவாறு முககவசம் அணிந்து பாதுகாப்புடன் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றதுடன் வவுனியாவில் அண்மையில் பன்றிக்காய்ச்சல் தொற்று காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

விமானத்தில் கைத்தொலைபேசியை பயன்படுத்தினால் உயிருக்கே ஆபத்து?

விமானத்தில் போகும் போது பொதுவாக ஊழியர்கள் பயணிகளிடம் அவர்கள் செல்போனை சுவிட்ச் ஓப் செய்ய சொல்வார்கள் அல்லது போனை Airplane Modeல் போடச் சொல்வார்கள்.

இதை செய்யவில்லை என்றால் விமானம் விபத்துக்குள்ளாக கூட வாய்ப்புள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இது குறித்து ஒரு பிரபல விமானி விளக்குகிறார்

செல்போன், ஐபேட் போன்ற சாதனங்களில் பாடல்கள் கேட்டால் அருகில் அதிகளவு சத்தம் வரும். அது விமானிக்கு கேட்டால் கவனம் சிதறும்.

விமானி பாதுகாப்பு அறையிலிருந்து முக்கிய செய்திகளை கேட்கும் போதோ அல்லது செய்திகளை கூறும் போதோ பிரச்சனை ஏற்ப்படும். ஒரு செல்போன் விமானத்தின் ஊடுறுவல் கட்டுப்பாட்டையே சிதைத்து விடும். இதனால் விபத்துக்கள் ஏற்ப்பட வாய்ப்புகள் அதிகம்.

இதனால் தான் விமானத்தில் செல்போன் பயன்ப்படுத்தகூடாது என கூறுகிறார்கள்.

மைதானத்தை அதிர வைத்த தந்தை, மகன் கூட்டணி : இருவரும் அரைசதம் அடித்து அசத்தல்!!

மேற்கிந்திய தீவுகள் பிரபல முன்னாள் வீரர், அவரது மகனுடன் கூட்டணியாக விறையாடி இருவரும் அரைசதம் அடித்து அசத்தியது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேற்கிந்திய தீவில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் பிரபல வீரர் ஷிவ்நரைன் சந்தர்பாலும், அவரது மகன் டேக்நரைன் சந்தர்பாலும் அரைசதம் அடித்து அசத்தியுள்ளனர்.

21 ஆண்டுகளாக மேற்கிந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிவந்த சந்தர்பால் அணியிலிருந்து நீக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்து சந்தர்பால் நீக்கப்பட்டதிலிருந்து அவர் உள்ளுர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இந்நிலையில், ஜமைக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கயானா அணிக்காக விளையாடும் இருவரும் அரைசதம் அடித்து ரசிகர்களை கவர்ந்தனர். இதன் காரணமாக கயானா அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது.

இந்தப்போட்டியில் சந்தர்பால் 58 ஓட்டங்களும் அவரது மகன் டேக்நரைன் 57 ஓட்டங்களும் குவித்தனர். தந்தையும் மகனும் அரைசதம் அடித்தது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர்.

திருமணத்திற்கு முன் தவறான உறவுகொண்ட பெண்ணிற்கு பொதுமக்கள் முன்னிலையில் 100 சாட்டையடி!!

இந்தோனேசியா நாட்டில் திருமணம் ஆகாமல் உடலுறவுக்கொண்ட ஆண் மற்றும் பெண்ணிற்கு பொதுமக்கள் முன்னிலையில் சாட்டையடி தண்டனையாக வழங்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியா நாட்டில் உள்ள Aceh என்ற ஒரே மாகாணத்தில் மட்டுமே இஸ்லாமியர்களின் ஷரியா சட்டம் முழுமையாக அமுலில் இருந்து வருகிறது.

திருமணம் செய்யாமல் உடலுறவு வைத்துக்கொள்வது, மது அருந்துவது, பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், Banda Aceh நகரை சேர்ந்த ஆண் மற்றும் பெண் ஆகிய இருவருக்கு பொதுமக்கள் முன்னிலையில் சில தினங்களுக்கு முன்னர் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இருவரும் திருமணம் செய்துக்கொள்ளாமல் உடலுறவில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பெண்ணிற்கு 100 சாட்டையடியும், ஆணிற்கு 120 சாட்டையடியும் வழங்கப்பட்டுள்ளது.

இதே போல், சூதாட்டம் ஆடிய குற்றத்திற்காகவும், சிறுமிகளை பாலியல் சித்ரவதை செய்த குற்றத்திற்காகவும் இந்த கூட்டத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா நாட்டில் போதை மருந்து கடத்தலுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவது போல் மதக் கொள்கைகளை மீறுப்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

குப்பைக் கிடங்கு சரிந்த விபத்தில் 46 பேர் உடல் நசுங்கி பலி!!

எதியோப்பியாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வந்த குப்பை கிடங்கு சரிந்து ஏற்பட்ட விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் மாயமாகியுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சமேற்பட்டுள்ளது.

எதியோப்பிய தலைநகரில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்து வந்த குப்பை கிடங்கு சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 46 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் சரிவில் சிக்கி மாயமாகியுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடிஸ் அபாபா நகரின் செய்தி தொடர்பாளர் டக்மாவிட் மோகெஸ் அளித்த தகவலின் படி சரிவில் சிக்கி இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மாயமான பலர் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.

சரிவு ஏற்பட்ட போது அப்பகுதியில் சுமார் 150க்கும் அதிகமானோர் இருந்ததாக அப்பகுதியை சேர்ந்த அசெஃபா என்பவர் தெரிவித்துள்ளார்.

சரிவில் சிக்கியவர்களில் 37 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர், இவர்களில் இருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என அடிஸ் அபாபா நகர தலைவர் திரிபா குமா தெரிவித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு இப்பகுதியில் குப்பை கொட்டுவது ஆபத்தானது என அறிவிக்கப்பட்டது. சில காலம் இங்கு குப்பை கொட்டுவது நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அப்பகுதியில் குப்பை கொட்டப்பட்டது.

மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் சரிவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 வருடங்களாக கணவரை சந்திக்காத சசிகலா!!

சசிகலா கடந்த 27 வருடங்களாக தனது கணவர் நடராஜனை சந்திக்கவில்லை என அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினரகரன் கூறியுள்ளது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று உள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தொலைக்காட்சி ஒன்றிக்கு பேட்டியளித்த தினரகன், கடந்த பொங்கல் விழாவின் போது எனது சித்தப்பா நடராஜன், குடும்ப ஆட்சி நடத்துகிறோம் என பகிரங்கமாக அறிவித்தார்.

ஆனால் அவர் கூறியதற்கும் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கடந்த 1990ம் ஆண்டு போயஸ் கார்டனில் இருந்து சித்தப்பா வெளியேற்றப்பட்ட பின்னர், சித்தி சசிகலா அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை.

சொல்லப்போனால் கடந்த 27 வருடங்களாக சித்திக்கும் சித்தப்பாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கூறியுள்ளார். தினகரனின் இந்த கருத்து பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் எவ்வித தொடர்பும் இல்லாத போது, சசிகலா சிறைக்கு சென்ற போது தனது கணவர் நடராஜனை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டது எப்படி, ஜெயலலிதா இறந்தவுடன் நடராஜன் எப்படி முதல் ஆளாக வந்து நின்றார் என கேள்விகள் பலர் தரப்பில் இருந்தும் எழுந்துள்ளது.

யூடியூபிலிருந்து காணாமல் போன ஐஸ்வர்யா தனுஷ்!!

ஐநா சபையில் ஐஸ்வர்யா தனுஷ் ஆடிய நடனம் தொடர்பான வீடியோ யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

பரதநாட்டியத்தில் முறையான பயிற்சி இல்லாத ஐஸ்வர்யா தனுஷுக்கு, ஐநா சபையில் ஆடுவதற்கு வாய்ப்பு எப்படி கிடைத்தது என்றும், ஐநாவில் ஆவர் ஆடிய நடனத்தில், முக பாவனைகள் மற்றும் நளினம் போன்றவை சிறப்பாக இல்லை எனவும் கருத்துக்கள் வெளியாகின.

மேலும் பிரபல நடன கலைஞர் அனிதா ரத்னம், இது பரதநாட்டியமா இல்லை பரிதாப நாட்டியமா எனவும் கிண்டல் செய்திருந்தார். அதுமட்டுமின்றி ஐஸ்வர்யாவை கிண்டல் செய்து மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்கள் கடந்த 2 நாட்களாக வெளியான வண்ணம் இருந்தன.

இந்நிலையில் ஐஸ்வர்யா தனுஷின் நடனம் தொடர்பான வீடியோ மற்றும் மீம்ஸ்களை உடனடியாக யூடியூபிலிருந்து நீக்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்பொருட்டு மீம்ஸ் வீடியோக்கள் அனைத்தும் நீக்கப்பட்டு வருகின்றன.

கேரளாவை உலுக்கிய மாணவி மிஷேல் மரணம் : தந்தை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

கேரளாவில் 18 வயது மாணவி மிஷேல் மர்மமான முறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கிய நிலையில் மாணவியின் தந்தை பரபரப்பு தகவல் அளித்துள்ளார்.

Palarivattom உள்ள சிஏ பயிற்சி மையத்தில் பயின்று வந்த Elanji பகுதியை சேர்ந்த மிஷேல், சமீபத்தில் கொச்சி நீர்ப்பகுதியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவர் நீரில் மூழ்சி இறந்தார் எனவும், அவர் உடலில் எந்த மர்மமான காயமும் இல்லை என தெரியவந்தது. இதனால், இது தற்கொலையாக இருக்கும் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையை தொடங்கினர்.

பொலிசார் நடத்திய விசாரணையில், மிஷேலை ஒரு நபர் தொடர்ந்து காதலிக்குமாறு தொல்லைக் கொடுத்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. மிஷேலுக்கு விருப்பம் இல்லாததால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இதே சமயம், வேறு ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பது குறித்தும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையின் மிஷேல் தற்கொலை செய்துக்கொண்டார் என்பதை ஏற்க மறுத்த அவரின் தந்தை Shaji கூறியதாவது, மிஷேல் சிஏ படித்து அவரது கனவை நிறைவேற்றுவதையே குறிக்கோளாக கொண்டு இருந்தார்.

அவரின் கனவை குறித்து என்னிடம் அதிகம் பகிர்ந்துக்கொள்வார். மிஷேல் மிக தைரியமான பெண் அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பே இல்லை. மூழ்கி இறந்தது போல் மிஷேலின் உடல் தெரியவில்லை. அவர் நீரில் மூழ்சி இறந்ததிற்கான எந்த தடயமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மிஷேலுக்கு காதல் தொல்லை கொடுத்து வந்த நபரை பிடித்துள்ள பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாயை பலாத்காரம் செய்த லொறி ஓட்டுநருக்கு நேர்ந்த கதி!!

சென்னையில் நபர் ஒருவர் நாயை பலாத்காரம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.

மேடவாக்கத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. தெருவில் நாயுடன் நபர் ஒருவர் தவறாக ஈடுபடுவதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர், புளூகிராஸ் அமைப்பிற்கு தகவல்கள் கொடுத்துள்ளனர்.

சம்பவயிடத்திற்கு பொலிசாருடன் விரைந்த புளூகிராஸ் அமைப்பினர், நாயை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சோதனை செய்து பார்ததில் நாய் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, புளூகிராஸ் அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் குற்றவாளியை கைது செய்த பொலிசார் அவனிடம் நடத்திய விசாரணையில், அவன் திண்டுக்கல்லைச் சேர்ந்த லொறி ஓட்டுநர் முருகன் எனத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர் மீது இயற்கைக்கு மாறாக உடலுறவு கொள்ளுதல் என்ற சட்டத்தின் படி பிணையில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.