திருமணம் செய்து வைத்தால் பணம் செலவாகுமென நினைத்து தங்கையை கொலை செய்த அண்ணன்!!

திரு­மணம் செய்து வைத்தால் பணம் செல­வாகும் என்­பதால் அண்ணன் ஒருவர் தங்­கையை கொலை செய்த சம்­ப­வ­மொன்று டில்­லியில் இடம்­பெற்­றுள்­ளது.

டில்­லியின் கிழக்குப் பகு­தி­யி­லுள்ள ஹசன்­பூரைச் சேர்ந்­தவர் லாக்கி என்­பவர் தனது மனைவி, மகன், மரு­மகள் மற்றும் வளர்ப்பு மகள் சித்­ரா­வுடன் வாழ்ந்து வந்­துள்ளார்.

கல்­வியில் தேர்ச்சி காட்­டி­னாலும் சித்­ரா­விற்கு திரு­மணம் செய்து வைக்க வேண்டும் என்ற கவலை லாக்­கியை வாட்டி எடுத்துக் கொண்­டி­ருந்­தது.மகன் திரு­ம­ண­மாகி குடும்­பத்­துடன் வாழ்ந்து வரும் நிலையில் மகள் சித்­ரா­வுக்கு திரு­மணம் செய்து வைக்­க­வேண்­டு­மென மகன் தப­ஸிடம் தந்தை தெரிவித்­துள்ளார்.

இந்­நி­லையில், கடந்த திங்­க­ளன்று சித்ரா தனது வீட்டில் மர்­ம­மான முறையில் இறந்து கிடந்­துள்ளார். இதனால் அதிர்ச்­சி­
ய­டைந்த லாக்கி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார். பொலிஸார் சித்­ரா வின் மரணம் குறித்து தீவிர விசா­ரணை நடத்­தி­யதில், சித்­ரா ­வினைக் கொலை செய்­தது லாக்­கியின் மகன் தபஸ் என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து பொலிஸார் தபஸை கைது செய்து நடத்­திய விசா­ர­ணையில், குடும்­பத்தில் தான் மட்­டுமே உழைப்­ப­தா­கவும், தனது குடும்­பத்தில் சித்ரா ஒரு சுமை­யாக இருந்­த­தா­கவும், சித்­ராவின் திரு­ம­ணத்­துக்­கான பணத்தை எப்­படித் திரட்­டு­வது என்­பது குறித்து தனது தந்தை கடும் கவலை கொண்­டி­ருந்­த­தா­கவும் கூறி­யுள்ளார்.

மேலும், தனது மனை­வி­யுடன் தினமும் சண்­டை­யிட்டு வந்­த­தா­கவும் கூறி­யுள்ளார்.இதனால், சித்­ராவை தீர்த்துக் கட்­டினால் இந்தப் பிரச்­சினை எல்லாம் தீர்ந்­து­விடும் என்று நினைத்த தபஸ் கடந்த திங்கட்கிழமை மாலை வீட்டில் தனியே இருந்த சித்­ராவை கழுத்தை நெறித்துக் கொலை செய்­த­தா­கவும், தன் மீது சந்­தேகம் வராமல் இருப்­ப­தற்­காக, சித்­ராவின் மரணம் குறித்து பொலிஸார் விசா­ரணை நடத்த வேண்­டு­மென ஆர்ப்­பாட்டம் நடத்­தி­ய­தா­கவும் தபஸ் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

செலவைக் குறைப்­ப­தற்­காக அண்ணன் தங்­கையை கொலை செய்த சம்­பவம் டில்­லியில் அதிர்­ச்சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

மனைவியை நிர்வாணமாக்கி பிறப்புறுப்பில் சூடு வைத்த கணவன் கைது!!

மனைவி மீது எழுந்த சந்­தே­கத்தின் கார­ண­மாக மனை­வியின் பிறப்­பு­றுப்பை நெருப்­பினால் சுட்­டுப்­பொ­சுக்­கிய கணவர் ஒரு­வரை அகு­ரெஸ்ஸ பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இரண்டு பிள்­ளை­களின் தாயான இப்பெண் மீது அவ­ரது கண­வ­ருக்கு அதீத சந்­தேகம் ஏற்­பட்­ட­மையால் இரு­வ­ருக்­கி­டையில் தொடர்ந்தும் சண்டை, சச்­ச­ர­வுகள் ஏற்­பட்டு வந்­துள்­ளன.

சம்­பவ தினத்­தன்று காலை சந்­தே­க­நபர், தனது பிள்­ளைகள் இரு­வ­ரையும் பாட­சா­லையில் விட்­டு­விட்டு வீடு திரும்­பி­யி­ருந்த போது வீட்டு வாசலை சுத்தம் செய்­து­கொண்­டி­ருந்த மனை­வியை சந்­தேக கண்­கொண்டு பார்த்­த­துடன் அவர் மீது தாக்­குதல் நடத்­தி­ய­துடன் நிர்­வாண­மாக்கி விறகு கட்­டையை எடுத்து பிறப்­பு­றுப்பில் சூடு வைத்­துள்ளார்.

அதன்­போது, தனது கண­வனின் பிடி­யி­லி­ருந்து தப்­பிச்­சென்ற அப்பெண் அக்கு­ரெஸ்ஸ பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்று தனது கண­வரின் பெயரில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

பின்னர் அவரை பொலிஸார் வைத்திய ­சா­லையில் அனு­ம­தித்­துள்­ளனர். இச்­சம்­பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, அக்குரெஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டுள்ள மன்னார் மாண­வியின் உயர்­தரப் பரீட்சை முடிவை வெளி­யிட நீதி­மன்றம் உத்­த­ரவு!!

மன்­னா­ரி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்த முஸ்லிம் மாண­வியின் இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டுள்ள க.பொ.த. உயர்­தர பரீட்சை பெறு­பே­று­களை உட­ன­டி­யாக வெளி­யி­டு­மாறு பிர­தம நீதி­ய­ரசர் பிரசாத் டெப் உத்­த­ர­விட்­டுள்ளார்.

சிரேஷ்ட சட்­டத்­த­ரணி எம்.நிஸாம் காரி­யப்பர் ஊடாக குறித்த மாணவி உச்ச நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­தி­ருந்த மனு நேற்று திங்­கட்­கி­ழமை விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­போதே பிர­தம நீதி­ய­ரசர் இந்த உத்­த­ரவைப் பிறப்­பித்­துள்ளார்.

சிரேஷ்ட சட்­டத்­த­ரணி எம்.நிஸாம் காரி­யப்பர் இம்­மனு மீதான வாதத்­தின்­போது குறிப்­பி­டு­கையில், இம்­மா­ணவி மன்னார் மாவட்­டத்தில் பிறந்து, அங்­கி­ருந்து இடம்­பெ­யர்ந்த நிலையில் அநு­ரா­த­புரம் மாவட்­டத்தில் தரம் ஐந்து வரை கல்வி கற்­றுள்­ள­துடன் பின்னர் கொழும்பு மாவட்­டத்தில் கல்­வியைத் தொடர்ந்து அங்­கேயே க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்­சையை எழு­தி­யி­ருக்­கிறார்.

பின்னர் இம்­மா­ண­வியின் பெற்றோர் மன்­னாரில் மீளக்­கு­டி­யே­றி­ய­தனால் இவர் மன்­னாரில் க.பொ.த. உயர்­தரப் படிப்பை மேற்­கொள்ள முயற்­சித்த போதிலும் அங்கு வச­தி­யீனம் கார­ண­மாக அனு­ரா­த­புரம் மாவட்­டத்­தி­லுள்ள பாட­சாலை ஒன்றில் சேர்ந்து கல்வி கற்­றுள்ளார்.

இதன் நிமித்­தமே இம்­மா­ணவி கடந்த 2016ஆம் ஆண்டு அநு­ரா­த­புரம் மாவட்­டத்­தி­லி­ருந்து க.பொ.த. உயர்­தரப் பரீட்­சைக்கு தோற்­றி­யி­ருக்­கிறார்.

எனவே பிறி­தொரு மாவட்­டத்தில் பரீட்­சைக்கு தோன்­றினார் எனத் தெரி­வித்து, இவ­ரது பரீட்சைப் பெறு­பே­றுகள் இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­னது அநீதி என்­ப­துடன் இவ­ரது அடிப்­படை உரி­மையை மீறு­கின்ற செய­லு­மாகும் என சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

இந்த விவா­தத்தை செவி­ம­டுத்த பிர­தம நீதி­ய­ரசர் பிரசாத் டெப், குறித்த மாண­வியின் க.பொ.த. உயர்­தரப் பரீட்சை பெறு­பே­று­களை உட­ன­டி­யாக வெளி­யிட்டு அவ­ரது பாட­சா­லைக்கு அனுப்பி வைக்­கு­மாறு பரீட்­சைகள் ஆணை­யா­ள­ருக்கு உத்­த­ர­விட்­ட­துடன் இம்­மா­ண­விக்கு எந்த மாவட்­டத்­தி­லி­ருந்து பல்­க­லைக்­க­ழக அனு­ம­தியை வழங்க வேண்டும் என தீர்­மா­னித்துக் கொள்­ளு­மாறும் அறி­வித்தார்.

இவ்­வ­ழக்கின் மனு­தாரர் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி எம்.நிஸாம் காரி­யப்­ப­ருடன் சட்­டத்­த­ரணி எம்.எம்.நவாஸ் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.  பிர­தி­வா­திகள் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி பி.சுரேகா ஆஜராகியிருந்தார்.

2033 ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப நாசா நடவடிக்கை!!

2033 ஆம் ஆண்டிற்குள் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கான அங்கீகாரத்தினை நாசாவுக்கு வழங்கும் புதிய சட்டத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த சட்டம் ஒப்புதல் பெறப்பட்டதை அடுத்து, நாசாவுக்கு 19.5 பில்லியன் டொலர் அளவுக்கு நிதி ஒதுக்கவும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவது தொடர்பான விளக்கமான திட்ட அறிக்கையைத் தயாரித்து, வரும் டிசம்பர் முதலாம் திகதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நாசாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அப்போலோ விண்கலம் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் நாசா ஆய்வு மையம் கவனம் செலுத்தி வருகிறது.

அங்கு மனிதர்களை குடியேற்றம் செய்யும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது, செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வுகளுக்காக கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள நிலையில், மற்றொரு ரோவர் விண்கலத்தினை 2020 ஆம் ஆண்டளவில் விண்வெளிக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

சிவப்பு கோளில் மனிதர்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான ஒட்சிசன் உள்ளிட்ட சாத்தியக்கூறுகள் பற்றிய ஆய்வினை இந்த விண்கலம் மேற்கொள்ளும் என்று நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குசல் மென்டிஸ், உபுல் தரங்க, அசேல குணரத்ன மீது அதிக நம்பிக்கை உள்ளது : ரங்கன ஹேரத்!!

குசல் மென்டிஸ், உபுல் தரங்க மற்றும் அசேல குணரத்ன போன்ற வீரர்கள் மீது அதிக நம்பிக்கை உள்ளதாக இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

02 போட்டிகளை கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது கிரிக்கெட் போட்டி நாளை பி.சரா ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

பங்களாதேஷிக்கு எதிராக காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இலங்கை அணி 259 ஓட்டங்களால் வெற்றிக் கொண்டது.

கோஹ்லிக்கு எச்சரிக்கை விடுக்கும் மிச்சல் ஜோன்சன்!!

இந்தியா – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டித் தொடரில் விராட் கோஹ்லி மிகவும் ஆக்ரோஷமாக செயற்பட்டு வருகின்றார்.

இதனை அவதானித்துவந்த அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஜோன்சன் கோஹ்லியின் செயற்பாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒவ்வொரு வீரரும் ஆட்டமிழந்து செல்லும் போது கோஹ்லியின் சைகைகள், முக பாவனைகள் மற்றும் வார்த்தை பிரயோகங்கள் என்பவற்றில் அவதானமாக இருக்க வேண்டும்.

எவ்வாறாயினும் ஆட்டமிழக்கும் வீரரை வார்த்தை பிரயோகங்கள் மூலம் வழியனுப்பிவைப்பது எச்சரிக்கைக்குறியது என தெரிவித்துள்ளார்.

அதுமாத்தரமின்றி கோஹ்லி இவ்வாறு நடந்துக்கொள்ளவதற்கு காரணம், அவர் இந்த டெஸ்ட் தொடரில் ஓட்டங்களை பெறாத விரக்தி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கோஹ்லி முதல் டெஸ்டில் 0, 13 ஓட்டங்களையும், 2 ஆவது டெஸ்டில் 12, 15 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் மனைவியைத் தாக்க முயன்ற கணவனை அடித்துக் கொன்ற அயலவர்கள்!!

இரத்தினபுரி – கிரியெல்ல, பஹலகம பகுதியில் மனைவியை தாக்க முயன்ற கணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த கணவன், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கணவன் மனைவியை தாக்க முயன்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த இடத்திலிருந்த அயலவர்கள் குறித்த கணவனை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 23 வயதுடைய அதே பகுதியைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்மார்ட்போனை திருடுபவர்கள் எளிதாக அன்லொக் செய்யும் முறை கண்டுபிடிப்பு!!

ஸ்மார்ட்போனை திருடுபவர்கள் அதை எளிதாக அன்லாக் செய்யும் முறையை பற்றி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகளவில் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் தங்கள் ஸ்மார்ட் போனைப் பாதுகாக்க பேட்டர்ன் லாக் மற்றும் நம்பர் லாக் என இருவகையான பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்துகின்றனர்.

இப்படி லாக் ஆன போன்களை திருடுபவர்கள் அதை அன்லாக் செய்ய புதிய யுக்தியை கையாளுகின்றனர். அதாவது, கைகளைப் பயன்படுத்தி அன்லாக் செய்யும்போது போனின் திரையில் கைகளின் வெப்பம் சுமார் 30 விநாடிகளுக்கு நீடிக்கும்.

இந்த நேரத்தில், ஸ்மார்ட்போன் திரையை தெர்மல் கமரா மூலம் திருடர்கள் புகைப்படமாகப் பதிவு செய்கின்றனர்.

அதை பயன்ப்படுத்தி பேட்டர்ன் மற்றும் ரகசிய குறீயீட்டு எண்களை திருடர்கள் அறிந்துகொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

புலிக்குட்டிகளை பராமரித்து வரும் நாய்!!(காணொளி)

 
தாய்ப் புலியால் கைவிடப்பட்ட மலேயா புலிக்குட்டிகள் மூன்றை, நாயொன்று பராமரித்து வரும் அபூர்வ நிகழ்வு அமெரிக்க மிருகக்காட்சிசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் யோகியியோ மாகாணத்திலுள்ள சினிசினாட்டி மிருககாட்சிசாலையில், தாய் புலியால் கைவிடப்பட்டு சென்ற மூன்று மலேயா புலிக்குட்டிகளை, அவுஸ்திரேலிய வாசத்தை சேர்ந்த நாயொன்று பராமரித்து வரும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த புலிக்குட்டிகள் கடந்த பெப்ரவரி மாதம் பிறந்துள்ளதோடு, குறித்த புலிக்குட்டிகளின் தாய், அவற்றை கைவிட்டு சென்றுள்ளது. இந்நிலையில் மிருக்காட்சிசாலையில் பணியிலிருந்த பெண் பணியாளர் தனது வீட்டிற்கு எடுத்து சென்று பராமரித்து வரவே, சிரா, படாரி மற்றும் இஸ்ஸி என பெயரிடப்பட்ட மூன்று குட்டிகளும் அரவணைப்பின்றி கத்தி வந்துள்ளன.

இந்நிலையில் குறித்த பணியாளரின் வீட்டில் வளர்த்து வந்த ஆறு வயதான பிளாக்கேலி எனும் அவுஸ்திரேலிய இன நாய், மூன்று குட்டிகளையும் அரவணைத்து பராமரித்து வருவதோடு, குட்டிகளுடன் விளையாடி வருகின்றதாக குறித்த மிருகக்காட்சிசாலை தரப்பு தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரணத்தில் இணைந்த காதல் : விபத்தில் இருவரும் பலி!!

மீகஹதென்னயில் நேற்று இடம்பெற்ற கோரவிபத்தொன்றில் காதலர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீகஹதென்ன, நெளுஹேன பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஹொரவெல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்பக்கத்தில் வந்த டிப்பென்டர் வாகனத்துடன் மோதுண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த யுவதியை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

பெலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான தனுஜ குடாஆராச்சி என்ற இளைஞம், மீகாஹதென்ன பிரதேசத்தை சேர்ந்த அவரது காதலியான 21 வயதான யுவதியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்தினால் இருவரது நண்பர்களும் சோகத்தில் உள்ளதாகவும், பேஸ்புக் பக்கம் முழுவதும் அவர்களது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

முகநூலில் அறிமுகமான அக்கா, தங்கைக்கு நேர்ந்த கதி!!

முகநூலில் அறிமுகமான அக்கா, தங்கையின் வாழ்வை சீரழித்த இளைஞர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டி, வடுகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்த ரசாஞ்சன என்ற ஜனக்க சுதர்ஷன மற்றும் ஜேசுபால என்ற தில்ஷான் ஆகிய இளைஞர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தெரியவருவதாவது,

முகநூலில் அறிமுகமான அக்கா மற்றும் தங்கையின் நிர்வாணப் படங்களை இணையத்தளத்தில் வெளியிடப் போவதாக கூறி இரண்டு இளைஞர்கள் அவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த இரண்டு இளைஞர்களையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிறந்த நாள் பரிசாக தந்தை வழங்கிய நவீன தொலைபேசியில் முகநூலை பயன்படுத்திய போது முதல் பெண்ணுக்கு ஒரு இளைஞன் அறிமுகமாகியுள்ளார்.

இளைஞனின் கோரிக்கைக்கு அமைய பெண் தனது நிர்வாணப் புகைப்படத்தை வழங்கியுள்ளார். அதனை இணையத்தளத்தில் பதிவேற்ற போவதாக கூறி அச்சுறுத்தி பணத்தையும் பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதனையடுத்து பெண்ணின் தங்கையுடன் உரையாடியுள்ள சந்தேக நபர் அக்காவின் புகைப்படத்தை இணையத்தளத்தில் பதிவேற்ற போவதாக கூறியுள்ளார்.

அக்காவை காப்பற்ற முன்வந்த தங்கையை கிரிபத்கொட பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று இரு இளைஞர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக கூறிய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தவிட்டதுடன் விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஏவுகணைக்கு தமிழில் பெயரிட்ட ஈழத்தமிழன்!!

தான் வடிவமைத்த ஏவுகணைக்கு “அகரன்” என்று தமிழில் பெயர் சூட்டியுள்ள ஈழத்தமிழர் ஒருவர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் விண்பொறியியல் ஆய்வுக்கல்வி மாணவர் ர.ரணேந்திரன் தனது கற்கை நெறி திட்டத்திற்காக வடிவமைத்த ஏவுகணை ஒன்றுக்கே “அகரன்” என பெயரிட்டுள்ளார்.

இது குறித்த செய்திகளும், காணொளிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், இவரின் திட்டத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் பெண் உட்பட மூவர் கைது!!

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், A9 வீதி வைத்தியசாலை சந்தியடியில் உள்ள டயர் கடையில் ஒன்றில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது குறித்த கடையில் இருந்து 2930 மில்லிகிராம், 400 மில்லிகிராம், மற்றும் 790 மில்லி கிராம் கேரள கஞ்சா பொதிகளில் சுற்றப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மூவரையும் கைது செய்துள்ளதாகவும் வவுனியா குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ள குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினர் நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இவர்கள் இன்று வவுனியா நீதிமன்றில் வேறு ஒரு வழக்கில் முன்னிலையாக வேண்டி இருந்ததாகவும் அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட இருந்தமையும் குறிப்ப்பிடத்தக்கது.

வவுனியா சீட்- வலுவூட்டல் வளாக விசேட பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!!

 
உட்படுத்தலை இலக்காகக் கொண்டு ‘சமுதாயமே நாம் வேண்டுவது உங்கள் பரிதாபத்தை அல்ல பங்குபற்றலையே’ என்ற கருப்பொருளுடன் சமூக பொருளாதார சூழல் அபிவிருத்தியாளர்கள் (SEED) சீட் நிறுவனத்தின் சீட் வலுவூட்டல் வளாக விசேட பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி நிகழ்வானது பல்வேறு பிரிவுகளாக நடைபெற்றிருந்தது.

இதன் ஒரு கட்ட நிகழ்வாக கடந்த (22.02.2017) அன்று 08 கிலோமீற்றர்களை உள்ளடக்கி வீதி ஒட்ட நிகழ்வு நடைபெற்றிருந்ததுடன். இறுதி நிகழ்வான மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி கடந்த (11.03.2017) அன்று வவுனியா யங்ஸ்டார் மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இதில் 450 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றிருந்ததுடன் விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்துவதாகவும் அவர்கள் சார்ந்த விழிப்புணர்வை சமூகத்திற்கு வழங்குவதாகவும் அமைந்திருந்தது.

இந்நிகழ்வின் கொடியேற்றும் நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக வவுனியா வடக்கு வலயக்கல்வி ஆசிரிய ஆலோசகர் சிதம்பரப்பிள்ளை மகேஸ்வரன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்ததுடன் மாவட்ட கொடியினை வவுனியா பிரதேச செயலகம், பிரதேச பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சுபாசினி சிவதர்சன் அவர்களும் பாடசாலை கொடியினை சீட் நிறுவன இயக்குனர் திருமதி.வாசுகி இராஜேந்திரா அவர்களும் ஏற்றி வைத்திருந்தனர்.

இன் நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் முகமாக வாழ்த்து செய்தியினை ஓய்வு பெற்ற கல்வியற்கல்லூரி உப பீடாதிபதி ஆ.தெய்வேந்திரன் கூறியிருந்தார். இதில் விசேட தேவை மற்றும் இயற்கைவளப் பாதுகாப்பினை வெளிப்படுத்தும் முகமாக இல்ல அமைப்புக்களும் வினோத உடை நிகழ்வுகளும் நடைபெற்றது விசேட அம்சமாகும்.

மேலும் இந் நிகழ்வை சிறப்பிக்க மாவட்ட சமூக சேவை அதிகாரி செ.ஸ்ரீனிவாசன், மற்றும் சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.வசந்தரூபன், அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள், வங்கி முகாமையாளர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

வவுனியாவில் 18வது நாளாகத் தொடரும் காணாமற்போன உறவுகளின் போராட்டம்!!

 
வவுனியாவில் கடந்த 18 நாட்களாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் கையளிக்கப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று (13.03.2017) 18வது நாளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கையளிக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறும் அரசியல்கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும் அவசரகாலச்சட்டத்ததை நீக்குமாறும் கோரி சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நீதி வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு பொதுமக்களால் கையப்பமிடப்பட்ட கடிதங்களை அனுப்பும் போராட்டமொன்றும் இடம்பெற்றுவருகின்றது.

இதன் முதற்கட்டமாக இன்று (13.03.2017) காலை 11.30 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் வவுனியா அஞ்சல் அலுவலகத்தில் 1000 கடிதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிகுளம் பிரதேச இளைஞர் சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்!!

 
செட்டிகுளம் பிரதேச இளைஞர் சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் நேற்று (12.03.2017) காலை 10 மணியளவில் செட்டிகுளம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

புதிதாக நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டு எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இப் பொதுக்கூட்டத்திற்கு வவுனியா மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான அபேயசிங்க, சுகானி, முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சங்கரன், சசிகுமார், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கேசவன், இளைஞர் சேவை அதிகாரிகளான சசிகரன், ரதித்திரா, மாவட்ட இளைஞர் சம்மேளனத் தலைவர் கிரிதரன், இளைஞர் கழக பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.