விடுதலைப்புலிகளின் காலத்தில் பெண்கள் வாழ்ந்த காலம் தற்போது இல்லை : சாள்ஸ் நிர்மலநாதன்!!

எங்களுடைய நாட்டில் எங்களுடைய பிரதேசத்தில் பெண்களுக்கு இருக்கின்ற அச்சுறுத்தல் பெண்கள் தனியாக ஒரு இடத்திற்குச் சென்று வர முடியாத சூழ் நிலைதான் இன்றைய நாட்களில் இருக்கின்றது. பெண்களுக்குரிய கௌரவம் இல்லை. அவர்களுக்கு தனிமனித சுதந்திரம் இல்லை தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் அனுபவிக்க முடியாமல் இருக்கின்றது.

இந்த நிலை மாற்றப்படவேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகள் கடந்த காலத்தில் ஆட்சி செய்தபோது ஒரு தன்னம்பிக்கையுடன், பெண்கள் ஒரு கௌரவமாக எந்தநேரத்திலும் போர்ச்சூழல் இருந்தாலும் ஒரு மன நிம்மதியாக வாழ்ந்த காலம் இருந்தது. இவ்வாறு இன்று (14.03) வவுனியாவில் இடம்பெற்ற சர்வதேச பெண்கள் தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அன்று எங்களுடைய பெண்களுக்கு இருந்த கௌரவம் தன்னம்பிக்கை, பெண் சுதந்திரம் இன்று இல்லை. 2009ம் ஆண்டிற்குப் பிற்பாடு எங்களுடைய காலச்சாரத்தை எடுத்துப் பாருங்கள், அந்தக்காலத்தில் ஏதாவது ஒது பத்திரிக்கையில் எங்களுடைய பிரதேசத்தில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான செய்திகள் வருவது மிகவும் அரிதானது.

ஆனால் தற்போது அது வாரத்திற்கு ஒரு முறை பத்திரிகையில் வருகின்ற ஒரு செய்தியாக நாங்கள் பார்க்கின்றோம். எங்களுடைய சமுதாயம் எந்த அளவிற்கு கலாச்சார ரீதியில் பின்னோக்கிப் போகின்றது என்பதை அந்தச் செய்திகள் மூலம் நாங்கள் அறிந்து கொள்ளமுடியும். கணவன்மாரை இழந்த அந்தப் பெண்கள் தங்களுடைய பிள்ளைகளையும் கொண்டு அவர்கள் எப்படி கௌரவமாக பெண் சுதந்திரத்துடன் வாழ முடியும்.

காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் இந்த இரண்டு குடும்பங்களுக்கும் இந்த அரசாங்கத்தினால் ஒரு சுயமாக தங்களுடைய சுயமுயற்சியில் தங்களுடைய குடும்பத்தை நடாத்தக்கூடிய அளவிற்கு அவர்களுக்குரிய வாழ்வாதார பொருளாதார உதவிகளை இந்த அரசாங்கம் வழங்க வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் காணாமற்போன உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேரணி!!

 
வவுனியாவில் கடந்த 19வது நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுழ்ற்சி முறையிலான காணாமற்போன உறவுகளின் உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு இன்று (14.03) வவுனியா கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினத்தின் இறுதியில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், சீடோ அறிக்கையகத்திற்கான பெண்கள் ஒன்றியம் என்பன இணைந்து பேரணியாக கலாச்சார மண்டபத்திலிருந்து போராட்டம் இடம்பெறும் இடத்திற்குச் சென்று தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

கடந்த 19 நாட்களாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் காணாமற் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை, அவசரகாலச்சட்டத்தினை உடனே இரத்துச் செய்து காணாமற் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு பதில் கூறவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தும் தமது மக்கள் பிரதிநிதிகள் குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் தமது நியாயமான போராட்டத்திற்கு நேரில் வந்து வாக்குறுதி அளிக்கும் வரையில் தமது போராட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

வவுனியாவில் சர்வதேச பெண்கள் தினம்!!

 
பெண்களுக்கு எதிரான சகலவிதமான பாரபட்சங்களுக்கும் எதிரான சமுதாயத்தை நடைமுறைப்படுத்திக் கொள்வதை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச பெண்கள் தின வைபவம் வவுனியா கலாச்சார மண்டபத்தில் இன்று (14.03) காலை 10 மணியளவில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் சீடோ அறிக்கையகத்திற்கான பெண்கள் ஒன்றியம் என்பனவற்றின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மகளிர் விவகார தேசிய அமைச்சின் செயலாளர் திருமதி எமில்டா சுகுமார், சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளான சி. தீஸ்குமார், ந.தேவகிருஸ்ணன், தே.தேவசாந்தன், வடமாகணத்திலுள்ள பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், தமிழ் முஸ்லிம் பெண்கள் அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இன் நிகழ்வில் கலை நிகழ்வுகள், வடபகுதி குடும்ப தலைமைத்துவப் பெண்கள் தொடர்பான 300 குடும்பங்களில் மேற்கொண்ட ஆய்வறிக்கை வெளியீடு அது தொடர்பான விளக்கம் இடம்பெற்றதுடன், முல்லைத்தீவு பிலக்குடியிருப்பு காணி போராட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்கிப் போராட்டத்தை வெற்றி கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பெண் கொளரவிக்கப்பட்டமை நிகழ்வில் சிறப்பம்சமாக இடம்பெற்றது.

இறுதியாண்டு பரீட்சைக்கு சென்ற பல்கலைக் கழக மாணவனுக்கு நேர்ந்த கதி!!

பிலியந்தலை – கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இறுதி பரீட்சையில் கலந்து கொள்வதற்காக சென்ற பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பொரலஸ்கமுவ மற்றும் வெரஹெர பிரதேசத்திற்கும் இடையே நேற்று மாலை இடம்பெற்ற இந்த வாகன விபத்திலேயே குறித்த மாணவன் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சொகுசு மோட்டார் வாகனம் ஒன்றும் உந்துருளியும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இணைந்த சுகாதார பீடத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்று வந்த மாணவர் எனவும், இறுதி பரீட்சையில் கலந்து கொள்வதற்காக சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த விபத்தில் உயிரிழந்த ஹெரகஸ்கட பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, படுகாயமடைந்த சக மாணவன் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவில் சைட்டம் (SAITM) பற்றிய திறந்த கலந்துரையாடல்!!

சைட்டம் – மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி பற்றியும் அதுசார்ந்த சமகாலப் பிரச்சினைகள் பற்றியும் ஒரு திறந்த கலந்துரையாடல், வவுனியா வைத்தியர்களின் ஒன்றிணைவில் இடம்பெறவுள்ளது.

நண்பர்கள் அமையத்தின் ஏற்பாட்டில் வரும் 19.03.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் முத்தையா மண்டபத்தில் இடம்பெறும் இந்நிகழ்வில் சைட்டம் பற்றிய கேள்விகள், சந்தேகங்கள் அனைத்தையும் கலந்துரையாட ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றார்கள்.

இந்நிகழ்வில் சிரேஸ்ட வைத்திய அதிகாரி சி.சுதாகரன், யாழ் மருத்துவபீட மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் வைத்தியக்கலாநிதி போல் பிறைற் பெனடிக்ட் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

கலந்துரையாடலை வைத்திய கலாநிதி செ.மதுரகன் ஒழுங்கமைக்கவுள்ளார். இதற்கு மேலாக பல மருத்துவர்கள், கல்வியியலாளர்கள், மருத்துவ மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பல தரப்பினரும் கலந்துகொள்ள உள்ளனர்.

சைட்டம் பற்றிய சார்பான, எதிரான, நடுநிலையான கருத்துக்களைக் கொண்டுள்ள பொதுமக்கள், பெற்றோர் அனைவரையும் பங்கேற்க ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றார்கள்.

யாழில் அழகுபடுத்தும் நிலையத்தில் வைத்து மனைவியை கோடாரியால் தாக்கிய கணவன்!!

யாழில் கணவனொருவர் மனைவி மீது கோடாரியால் தாக்கியதால் மனைவி படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். கல்வியங்காடு 03 ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த செந்தூரன் ஜெயவதனி என்பவரே இவ்வாறு கோடாரி வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், யாழ். திருநெல்வேலி சந்தியில் உள்ள அழகுபடுத்தல் நிலையத்தில் வைத்து மனைவி மீது கணவனால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளதுடன் மனைவியின் தகாத உறவுகளை அறிந்த கணவர் இவ்வாறு கொடூரமான முறையில் மனைவியை வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குறித்த பெண்னுடன் தொடர்பு வைத்திருந்ததுடன், கதிர்காமம் வரை சென்ற சம்பவம் பொலிஸ் நிலையத்திற்கு தெரியவந்ததை அடுத்து அந்த பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் திணைக்களத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் மனைவியின் இவ்வாறான தொடர்புகளை அறிந்தாலேயே குறித்த கணவர் மனைவியை அழகுபடுத்தல் நிலையத்தில்வைத்து கோடாரியால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

52 வயது பெண்ணின் கண்மூடித்தனமான காதல் : பணமும், நகையும் மோசடி!!

காதலுக்கு வயதெல்லை கிடையாது என்பது உண்மைதான். அந்த வகையில் 32 வயதுடைய ஆண் ஒருவருக்கும் 52 வயதுடைய பெண் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த போதே இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர். இருவரும் தங்கள் காதலை பகிர்ந்துக் கொண்டிருந்த சில நாட்களிலேயே ஹோட்டலில் சந்திப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

திருமணம் ஒன்றில் கலந்துகொள்ள வேண்டும், பணம் இருந்தால் தா என குறித்த 32 வயது நபர் கேட்டுள்ளார். காதலில் கண்மூடித்தனமாக இருந்த அந்த 52 வயது பெண், 10 ஆயிரம் ரூபா பணத்தையும் அணிந்திருந்த தங்க ஆபரணத்தையும் (chain) கொடுத்துள்ளார்.

இரண்டு நாட்களில் நான் திரும்பி வருவேன் என குறித்த நபர் அந்த பெண்ணிடம் சத்தியம் செய்துள்ளார். இருப்பினும் அவர் திரும்பி வரவில்லை.

இதனையடுத்து, குறித்த பெண் தன் 19 வயது மகனுடன் சென்று கொட்டாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிவித்துள்ள போதும், அந்த தகவலை சந்தேகநபரை அடையாளம் காண்பதற்கு போதுமானதாக இல்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

மொடலாக மாறிய ஸ்பெயினின் மச்சக்கன்னி!!

ஐந்நூறுக்கும் மேற்பட்ட மருக்கள், மச்சங்களுடன் பிறந்து, பலரது கேலிக்கும் கிண்டல்களுக்கும் ஆளான இளம் பெண் ஒருவர் மொடலாக மாறிய சம்பவம் ஸ்பெயினில் இடம்பெற்றுள்ளது.

அல்பா பெரிஜோ என்ற இந்தப் பதினாறு வயதுப் பெண், பிறக்கும்போதே ‘மெலனோசைட்டிக் நெவ்யூஸ்’ என்ற கோளாறுடன் பிறந்தவர். இந்தக் கோளாறு உடையவர்களது சருமத்தில் பல்வேறு அளவில் நூற்றுக்கணக்கான மருக்களும், மச்சங்களும் காணப்படும். அவற்றில் சிலவற்றில் முடி வளர்ந்தும் காணப்படும்.

இந்தக் கோளாறினால் சிறு வயது முதலே அல்பா பலரது கேலிக்கும் கிண்டல்களுக்கும் ஆளாகினார். ‘டெல்மேஷன்’ நாய் என்றும் வேற்றுக்கிரகவாசி என்றும் இவரது சக மாணவர்கள் இவரைக் கடுமையாகக் கிண்டல் செய்வது வழக்கம். இதனால், கடும் மன உளைச்சலுக்கும் ஆளானார் அல்பா.

இந்த நிலையில், கடந்த வருடம் இவர் தனது புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். அவர் சற்றும் எதிர்பார்த்திராத விதத்தில் ஆயிரக்கணக்கான பேர்களின் வரவேற்பைப் பெற்றது அல்பாவின் அந்தப் புகைப்படம்.

இது அவருக்கு மன தைரியத்தைத் தரவே, மொடல்களுக்கான போட்டியொன்றில் கலந்துகொண்டார் அல்பா. தனித்தன்மை வாய்ந்த அல்பாவின் தோற்றத்தைப் பயன்படுத்திக்கொள்ள பல்வேறு நிறுவனங்கள் முன்வந்தன.

இப்போது அல்பா பரபரப்பான ஒரு மொடல். பார்சிலோனா நகரின் பல விளம்பரப் பதாகைகளிலும், பேருந்துகளிலும், பத்திரிகைகளிலும் இப்போது சிரித்துக்கொண்டு காட்சி தருகிறார். அதுமாத்திரமன்றி, இதுபோன்ற குறைபாடு உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை வகுப்புகளும் நடத்துகிறார் அல்பா.

இரண்டே வாரங்களில் விமான நிலையம் தயார் : ஆனால் மக்களுக்குப் பயனில்லை!!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் திருத்த வேலைகள் மற்றும் விமான ஓடுபாதைகளைச் சீரமைக்கும் பணிகள் இன்னும் இரு வாரங்களில் பூர்த்தியாகும் எனத் தெரியவருகிறது.

இது பற்றித் தெரிவித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரியொருவர், இன்னும் இரண்டு வாரங்களில் விமான நிலையத்தை முழுமையாகத் திறந்துவிட ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும், எனினும், இதனால் பயணிகளுக்கு எந்தவித நன்மையும் உடனடியாகக் கிடைத்துவிடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

விமான நிலையத் திருத்தப் பணிகள் நிறைவுற்றாலும் சர்வதேச விமான சேவைகள் உடனடியாகத் தமது பயணத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்வதில் சிக்கல்கள் இருப்பதால், சர்வதேச விமானச் சேவைகள் தற்போது நடைமுறையில் இருப்பது போலவே மாலை 6 மணி முதல் காலை 8.30 மணிவரை மட்டுமே நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறெனினும், இந்தியாவுக்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானச் சேவைகளில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்களை உடனடியாகச் செய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பெரும்பாலான சீனர்கள் மத்தள விமான நிலையத்தையே பயன்படுத்துவதாகவும், இதனால் பண்டாரநாயக்க விமான நிலையம் இயல்பு நிலைக்கு வரும் வரையில் மத்தள விமான நிலையப் பயன்பாட்டை நிறுத்திவிட வேண்டாமென்றும் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பயண நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

உலகின் சிறந்த மற்றும் மோசமான நகரங்கள் எவை தெரியுமா?

உலகின் தலைசிறந்த நகரமாக ஒஸ்ரியாவின் வியன்னா நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மெர்சர் என்ற நிறுவனம் உலகின் தலைசிறந்த நகரங்கள் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. மொத்தம் 231 நகரங்களை வைத்து மெர்சர் நிறுவனம் நடத்திய ஆய்வில் ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் உலகின் தலைசிறந்த நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் 2-வது இடத்தை சுவிட்சர்லாந்தின் ஜுரிச் நகரமும், 3-வது இடத்தை நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரமும் 4-வது மற்றும் 5-வது இடங்களை ஜெர்மனியின் முனிச், கனடாவின் வான்கோவர் நகரங்களும் பிடித்துள்ளன.

ஆசியாவின் முக்கிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் இந்தப் பட்டியலில் 25-வது இடத்தையும், அமெரிக்காவின் சான் பிரான்ஸ்சிஸ்கோ நகரம் இதில் 29-வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்திருக்கும் பாக்தாத் உலகின் மோசமான நகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

தொடர்ந்து 8-வது வருடமாக வியன்னா இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற இளைஞன் கைது!!

ஹட்டன், வட்டவல, ரொசெல்ல, மாணிக்கவத்தை பிரதேசத்தை சேர்ந்த 14 வயதான பாடசாலை மாணவியை திருமணம் செய்வதாக கூறி, கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞனை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இளைஞனுக்கு உதவிய அவரது நண்பனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹட்டன் பிரதேசத்தில் இருந்து மாணவியை சில வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று சந்தேக நபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தொலைபேசி தொடர்பு மூலம் சந்தேக நபருக்கும் பாடசாலை மாணவிக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 23ஆம் திகதி பாடசாலை மாணவி காணாமல் போனதாக அவரது பெற்றோர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகள், சந்தேக நபர், பாடசாலை மாணவியை நண்பர் ஒருவரின் வீட்டில் தங்க வைத்து விட்டு, கொட்டகலை பிரதேசத்தில் தலைமறைவாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். பாடசாலை மாணவி, சந்தேக நபரின் நண்பரும் கடந்த 7ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

மாணவியை நாவலப்பிட்டி சட்டவைத்திய அதிகாரி அனுப்பி பரிசோதித்து அறிக்கையையும் பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்களையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SPLA-IO இயக்கத்தினால் கடத்தப்பட்ட தமிழர்கள்!!

தென் சூடானில் எண்ணெய் நிறுவனத்தில் பணிப்புரிந்த தமிழகத்தை சேர்ந்த இருவர் கடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

SPLA-IO இயக்கத்தினால் கடந்த 8ஆம் திகதி குறித்த இருவரும் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கன் குளத்தை சேர்ந்த மிதுன் கணேஷ் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எட்வர்ட் ஆகியோரே கடத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த இருவரையும் மீட்பதில் இரு நாடுகளும் ஆர்வம் காட்டவில்லை என கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடத்தப்பட்ட முதல் இரு நாட்களில் காட்டிய ஆர்வத்தை தற்போது இரு நாடுகளும் காட்டவில்லை. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கை ஆமை வேகத்தில் முன்னெடுக்கப்படுவதாக கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

பற்களுக்காக மாப்பிள்ளையை நிராகாரித்த பெண்!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அதிகமாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் நடைபெறுகிறது. தரகர்கள் மூலம் வரன் பாத்து, திருமண தளங்களின் வாயிலாக வரன் பார்த்து, தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.

ஆனால், இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால், பெரும்பாலான ஆண்கள் தங்களுக்கு வரப்போகும் மனைவி உயரமாகவும், நிறமாகவும், நல்ல ஊதியத்துடன் கூட வேலை பார்ப்பதாகவும் இருக்க வேண்டும் என திருமண தளங்களில் தெரிவிக்கின்றனர்.

அதன்படியே, பெண் பார்க்க செல்லும்போதும், தாங்கள் எதிர்பார்த்தபடி பெண் இல்லை என்றால் அந்த வரனை நிராகரித்துவிடுகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்களால் நாங்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறோம் என பெரும்பாலான பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், ஆண்கள் மட்டும்தான் இப்படி எங்களை நிராகரிப்பார்களா? நாங்களும் அவர்களை நிராகரிப்போம் என பெண் ஒருவர் நிரூபித்துள்ளார்.

Sesh என்ற பெண் தனது டுவிட்டர் பக்கத்தில், என்னை பெண் பார்க்க வந்த ஆணின் முன் பற்கள் நன்றாக இல்லை, அதனால் அவனை நிராகரித்துவிட்டேன் என பதிவிட்டுள்ளார்.

இவரது டுவிட்டிற்கு பல்வேறு பெண்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் பெண் ஒருவர், நான் அழகாக இல்லை என்ற காரணத்தால் என்னை ஒரு ஆண் நிராரித்தார் என்ற தனது கவலையையும் இதில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

மாணவனை அடித்து ஷூக்களை நக்க வைத்த உரிமையாளர் : அதிர வைக்கும் காரணம்!!

 
இந்தியாவில் வீட்டின் உரிமையாளர் ஒருவர் வாடகைக்கு தங்கியிருக்கும் மாணவனை அடித்து ஷூக்களை நக்க வைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.

பெங்களூருவில் தான் இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் நடந்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் பெங்களூருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வந்துள்ளான்.

மாணவன் அதிகப்படியான தண்ணீர் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டிய வீட்டின் உரிமையாளர் Hemanth Kumar, மாணவனை அடித்து ஷூக்களை நக்க வைத்துள்ளார்.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பொலிசில் புகார் அளித்ததையடுத்து, வீட்டு உரிமையாளர் Hemanth Kumarஐ அதிரடியாக கைது செய்த பொலிசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எனினும், தற்போது Hemanth Kumar பிணையில் வெளியே வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

14 வயது சிறுமியை விடுதிக்கு அழைத்துச் சென்று துஸ்பிரயோகம்!!

ஆணமடுவ பகுதியில் உள்ள 14 வயது சிறுமி ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பேருந்தில் பயணம் செய்யும் போது சந்தித்த நபர் ஒருவரே இவ்வாறு சிறுமியை 4 முறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் விடுதி ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி ஒருவரை விடுதிக்கு அழைத்துச் சென்றமை தொடர்பில் விடுதி உரிமையாளர், கவனத்திற்கொள்ளாமையால் உரிமையாளரையும் சந்தேநபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி, ஹலவத்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்!

இன்புளு வெண்சா என்று பொதுவாக அழைக்கப்படும் சுவாசத் தொற்று RNA வைரசினால் ஏற்படுகின்றது. RNA வைரசில் உள்ள புரதத்தினை அடிப்படையாகக் கொண்டு இன்புளுவெண்சா A, இன்புளுவெண்சா B, இன்புளுவெண்சா C என வேறுபட்ட நோய்த்தாக்கம் ஏற்படலாம்.

இதில் இன்புளுவெண்சா A – உலகம் முழுவதும் பரவும் வீரியம்மிக்க நோயாகும். இன்புளுவெண்சா B குறித்த பிரதேசத்தில் பரவும் நோயகும். இன்புளுவெண்சா C அரிதாகப் பரவும் நோயாகும்.

இன்புளுவெண்சா வைரசிலுள்ள கிளைக்கோபுரதம் Haemagglutin (H) விருந்து வழங்கியின் உட்கலத்துடன் இணைந்து பாதிப்பை ஏற்படுத்தும்.

இன்புளுவெண்சா வைரசைச் சூழவுள்ள நியூராமிடேஸ் நொதியம் (N) பெருகிய வைரசினை விருந்து வழங்கியினுள் விடுவிக்க உதவும்.

கிளைக்கோபுரதத்தில் Hஇல் 16 வகைகள் உண்டு.

H1, H2, H3, N1, N2 என்பவையே மனிதனில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. H1, N1 வகை 1918 – 1919ல் உலகில் 40 மில்லியன் மக்களின் இறப்பிற்குக் காரணமாக அமைந்தது.

H2, N2 வகை 1957இல் ஆசியாவில் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. H2, N2 வகை 1968இல் பாதிப்பை ஏற்படுத்தியது. H1, N1 வகை 1978இல் ஒன்றியாவில் நோயினை ஏற்படுத்தியது.

H1, N1 pdm 2009இல் பன்றித் தொற்றாக விகாரமடைந்தது. இதனையே பன்றிக் காய்ச்சல் என அழைத்தனர். Antigenic Shift – உலகம் முழுவதும் விரகக் காரணமாக அமையும்.

Antigenic drift – இன்புளுவெண்சாவிற்கு நிரந்தர நிர்ப்பீடணத்தைப் பெற முடியாமைக்குக் காரணமாக அமையும். ஒரு பிரதேசத்தில் பரவல் காரணம்.

1997இல் H1, N1 – Avion இன்புளுவெண்சா உருவானது இதுவே பறவைக்காய்ச்சல் எனப்பட்டது.. இது 2016இல் 15 நாடுகளில் காணப்பட்டது.

தற்போதைய பன்றிக்காய்ச்சல் 2009இல் மெக்சிக்கோவாவில் பரவியது. Antigenic drift – ஏற்படுவதால் இது பரவும் தன்மையைப் பெறுகின்றது.

பரம்பரை அலகு விகாரத்தினால் இலங்கையின் வடபகுதியில் குறிப்பாக வன்னியில் மக்களின் சுவாசப்பைகள் யுத்த வடுக்களைக் கொண்டவை.

பாதிக்கப்பட்ட சுவாசப்பைகளில் தொற்றும் இன்புளுவெண்சா வைரஸ் Antigenic drift – அடைவதற்கான சாத்தியம் அதிகம்.

யுத்த எச்சங்களின் பாதிப்பு மனிதரை மாத்திரமல்ல, வைரசுகளையும் தாக்கக்கூடியன. குறிப்பாக மீள்குடியமர்ந்த பிரதேசங்களின் சூழலில் குண்டு வீச்சுக்களின் இரசாயன நச்சு எச்சங்கள் சூழலில் இருக்கலாம்.

இவையும் வைரசின் புரதத் தொகுப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும். Antigonic drift இனை ஏற்படுத்தி இருக்கலாம்.

அதாவது யத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் எமது மக்களுக்கு இக் கிருமி தாக்கும்போது விகாரமடைந்த கிருமியாக மாறும் சாத்தியம் அதிகம்.

இதுவே தற்போது வடபகுதியில் இந்நோயின் தாக்கம் அதிகரிக்க முக்கிய காரணமாக அமையலாம். மாறாக மழைபெய்தபின் ஏற்பட்ட மாற்றம் அல்ல.

மீள் குடியேறிய பகுதிகளில் யுத்த நச்சுக்கள் பற்றிய சூழலியல் ஆய்வு மேற்கொள்ளாமை பெரிய தவறாகும்.

நோய் அறிகுறிகள்

பன்றிக்காய்ச்சல் மூன்று நிலைகளில் பரவுகின்றது. முதல் நிலையில் நோயாளிக்கு குறைந்த நிலையில் சளி, இருமல், தொண்டைவலி இருக்கம். சிலருக்கு வாந்தி அல்லது வயிற்றோட்டம் இருக்கும்.

இவர்கள் 1 – 2 நாட்கள் மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். குடும்ப அங்கத்தவர்களுக்கு தொற்று ஏற்படாது பாதுகாக்க வேண்டும். இரண்டாம் நிலையில் அதிக காய்ச்சல், தொண்டை வலி என்பன இருக்கும்.

மூன்றாம் நிலையில் மூச்சுவிடக் கடினமாகும், நெஞ்சுவலி ஏற்படும், குருதி அமுக்கம் குறைவடையும். இவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டே சிகிச்சை வழங்கப்படல் வேண்டும்.

பன்றிக்காய்ச்சல் நோய் குழந்தைகளை வெகுவாகப் பாதிக்கின்றது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் சோர்வாக காணப்படுவர். தொடர்ச்சியான கடுமையான காய்ச்சல் காணப்படும்.

வேகமாக மூச்சு எடுப்பர். சுவாசிக்கக் கஸ்ரப்படுவர். வாந்தி எடுப்பர், தோல் நீலநிறமாக மாறலாம். நீராகாரங்களை எடுப்பதைத் தவிர்ப்பர். காய்ச்சலுடன் சளி, இருமல் காணப்படும். தோலில் சிவப்புப் புள்ளிகள் ஏற்படலாம்.

பன்றிக்காய்ச்சல் கிருமி குளிரான இடத்தில் 2 நாட்கள் உயிருடன் இருக்கும். ஏனைய இடங்களில் பல மணிநேரம் உயிருடன் இருக்கும். நோயக்கிருமி நோயாளி இருமும்போதும், தும்மும்போதும் காற்றில் பரவும்.

சளித்திவலைகள் மூலம் பரவும். இத் திவலைகள் கதிரை, மேசை, கைபிடி போன்ற இடங்களில் உள்ளபோது தொடும்போது கையில் ஒட்டிக் கொள்ளும். பின் அதனை கண், மூக்கு, வாய் போன்ற பகுதிகளில் தொடும்போது தொற்றிக் கொள்ளும்.

நோயரும்பு காலம் அதாவது கிருமி தொற்றி நோய் அறிகுறி ஏற்படும் வரையான காலம் 1 – 3 நாட்கள் ஆகும்.

பொதுவாக நோய் அறிகுறிகள் காய்ச்சல், சளி, இருமல், தும்மல், தலைவலி, தொண்டைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூச்சுவிடுதல் சிரமம், நெஞ்சுவலி, மயக்கம், சளியுடன் இரத்தம் வெளிவரல் என்பனவாகும்.

சலரோக நோயாளிகளில் குருதியில் வெல்லத்தின் அளவு கட்டுப்பாட்டில் அமையாது. மனச்சோர்வு ஏற்படும். இருமல் சில கிழமைகளுக்குத் தொடரும்.

பன்றிக்காய்ச்சல் நோய் பரவாது இருப்பதற்கு உரிய அறிவுரைகள்

உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் பன்றிக்காய்ச்சலில் இருந்து காப்பாற்ற விழிப்படையுங்கள்.

கைகளைச் சவர்க்காரத்தினாலும், தண்ணீராலும் நன்கு கழுவவும். இருமும்போதும், தும்மும்போதும் கைக்குட்டையை உபயோகிக்கவும், முகத்தைமூடி முகக்கசவம் (MASK) உபயோகிக்கலாம்.

கண், மூக்கு, வாயினை கைகளால் தொடுவதைத் தவிர்க்கவும். தினமும் நன்றாகக் குளிக்க வேண்டும். வெளியில் சென்றுவிட்டு வீட்டில் குழந்தைகளை கைகழுவாது தூக்காதீர்கள்.

போசணையான உணவுகளை உண்ண வேண்டும்.

நோய்கிருமி பெருகுவதைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு வழங்கப்படும்.

நோயினை உறுதிப்படுத்தல்

பொதுவாக ஆய்வுகூடப் பரிசோதனைகள் தேவைப்படுவதில்லை. நோயாளியின் சரிதத்தில் இருந்து நோய்நிலையினை உய்த்தறியலாம்.

நோயாளியின் சளித்திவலையில் அல்லது தொண்டையில் இருந்த பெற்ற சளி மாதிரி நோயக்கிருமியினை உறுதிப்படுத்தலாம்.

மேலும் தொடர் குருதிப் பரிசோதனை மூலம் பிறபொருள் எதிரியினளவை அளவிட்டும் நோயினை உறுதிப்படுத்தலாம்.

நோய்க்கான சிகிச்சை

நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் வேதனையை அனுபவிப்பவர்களாகக் காணப்படுவர்.
அவர்களுக்க உடல் நோவினை நீக்கவும், காய்ச்சலை நீக்கவும், பரசிற்றமோல் மாத்திரைகளை வயதிற்கும், நிறைக்கும் எற்ப அளிக்கலாம்.
போதிய நீராகாரம் வழங்கப்படல் வேண்டும். ஜீவனியினைப் பாதிந்துரைக்கலாம்.
படுக்கையில் ஓய்வு தேவை.

இந்நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி குறைவதால் பக்றீரியாத் தாக்கம் ஏற்படலாம். எனவே பக்றீரியாவை எதிர்கொள்ளும் நுண்ணுயிர் கொல்லியும் வழங்கப்படல் வேண்டும்.

Tamiflu டாயி புறா மருந்து வைரசின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும். இதனை 5 நாட்களுக்கு கடுமையான நோயாளிக்கு அளிக்கலாம்.

போதிய போசணை உள்ள ஆதாரங்களை எடுத்தல் வேண்டும்.

சிறுவர்கள், முதியவர்கள், நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்தவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் போதிய கவனம் எடுத்தல் வேண்டும்.

பன்றிக் காய்ச்சல் விழிப்பு

வென்றிடுவோம் பன்றிக்காய்ச்சலினை இன்று

சென்றிடுவோம் வைத்தியத்திற்கு – நன்று

நின்றிடுவோம் எவர் எதிரில் இருமாது – என்றும்

கழுவிடுவோம் கைகளை மீண்டும் மீண்டும்

கண், வாய், மூக்கினைக் கைகளால் தீண்டாது

காத்திடுவோம் கிருமி பரவலை என்றும்.

இருமல், காய்ச்சல், சளி இவற்றுடன்

உடல்வலி, தொண்டைநோ

இவையே பிரதான அறிகுறிகள்

உடற்களைப்பு, சோர்வு, வாந்தி

உடன்சேர்ந்து காணப்படலாம் இத் தீத்துக்கள் சுரத்தில்

மூச்செடுத்தலில் சிரமம், வயிற்றோட்டம் உடன்

மனச்சோர்வும் காணப்படலாம்.

போதிய நீராகாரம் அவசியம் நோயுறின்

உடற் சுத்தம் அவசியம்

சுவாசக்காப்பு அவசியம்

போசணை மிக்க உணவு அவசியம்.

காச்சல் தணிப்பு மருந்தாக பரசிற்றமோல் அவசியம். விழிப்படைவோம் விழித்திடுவோம்.

வைத்தியர் சி. யமுனாநந்தா (MBBS, DTCD)