மறைக்கடிக்கப்படும் சுந்தர் பிச்சை : ஒரு தமிழர் என்பதாலா?

“அட.. சுந்தர் பிச்சை நம்ம ஆளுப்பா.. எங்களுக்கு தெரியாதா அவரைப்பற்றி..? நீ என்னத்த புதுசா சொல்லிடப்போற.? போங்க தம்பி போய் வேற ஏதாச்சும் தெரியாத மேட்டர் இருந்தா கொண்டு வா.!” என்று முன்கூட்டியே எதையும் கணித்து விடாதீர். சுந்தர் பிச்சை என்று அழைக்கப்படும் பிச்சை சுந்தரராசன் பற்றி தமிழ்நாட்டிற்க்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிற்குமே புதிய அறிமுகமொன்றும் தேவையில்லை என்பது வெளிப்படை.!

சுந்தர் பிச்சை பற்றி அப்படி உங்களுக்கு என்னத்தெரியும்..? தமிழ் நாட்டின் மதுரை மாவட்டதில் பிறந்தவர், அம்மா – லட்சுமி, அப்பா – ரகுநாத பிச்சை, சென்னை ஜவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பு, வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டம், வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம், 2004-ஆம் ஆண்டில் கூகுளில் இணைந்த சுந்தர் பிச்சை இப்பொது கூகுள் நிறுவனத்தின் சிஇஓ – இது எல்லோருக்குமே தெரியுமே..!! அவ்வளவு ஏன் விக்கிபீடியா கூட இதையெல்லாம் சொல்லி விடும்.

ஏன் மறைக்கப்படுகிறது.? ஆனால், எல்லாம் அறிந்த விக்கிப்பீடியா கூட அறியாத சிலசுந்தர் பிச்சை பற்றிய அசாதாரண, சுவாரசியமான உண்மைகள் சில உள்ளன. சுந்தர் பிச்சை பற்றிய பல விடயங்கள் ஏன் மறைக்கப்படுகிறது.? ஏன் பிரபலமாக்கப்படுவதில்லை – அவர் ஒரு தமிழர் என்பதாலே..? தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்பதாலோ.? – தெரியவில்லை.! அதையெல்லாம் வெளிக்கொணரும் ‘சுந்தர் பிச்சை ஸ்பெஷல்’ தொகுப்பே இது.!

பழக்கம் ஆழமான சிந்தனையின் போது வெளியே நடந்து செல்லும் பழக்கம் கொண்டவர் சுந்தர் பிச்சை. சில சமயங்களில் மீட்டிங்கில் இருந்து எழுந்து வெளியே சென்று விடுவாராம் திரும்பி உள்ளே வரும் போது பிரச்சினைக்கு சரியான தீர்வை கையோடு கொண்டு வருவாராம்.

ஸ்கூட்டர் வாங்க ஒரு மூத்த மின் பொறியாளரான சுந்தர் பிச்சையின் தந்தை, தனது குடும்பத்திற்காக ஒரு புதிய ஸ்கூட்டர் வாங்க மூன்று ஆண்டுகள் பணம் சேர்த்தாராம் இருப்பினும் சுந்தர் பிச்சை மற்றும் அவரது சகோதரர்கள் சிறப்பான கல்வியை வழங்க தவறியதில்லையாம்.

வகுப்புத்தோழி ஒரு இரசாயன பொறியாளர் ஆன சுந்தர் பிச்சையின் மனைவி அஞ்சலி பிச்சை, ஐஐடி காரக்பூரில் சுந்தர் பிச்சையின் வகுப்புத்தோழியாவார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இளம் சுந்தர் பிச்சையிடம் ஒரு மின் பொறியாளராக தன் வேலையில் சந்தித்த சவால்களை பற்றி இளம் சுந்தர் பிச்சையிடம் பேசியதின் மூலம் தான் தன் மகனுக்கு தொழில்நுட்பம் மீது ஆர்வம் ஏற்பட்டதாக சுந்தர் பிச்சையின் தந்தை நம்புகிறார்.

அசாதாரண பரிசு சுந்தர் பிச்சை குழந்தையாக இருக்கும் போதே அவரின் தீவிரமான ஆர்வத்தை விட, இறைவன் இன்னுமொரு அசாதாரண பரிசை சுந்தர் பிச்சைக்கு வழங்கி இருந்தார். அதாவது நம்ப முடியாத வண்ணம் (பைத்தியகாரத்தனமாக) எண்களை நினைவில் வைத்துக் கொள்வாராம். ஒரே ஒருமுறை டயல் செய்த தொலைபேசி எண்களை கூட நினைவில் வைத்துக் கொள்வாராம்.!

கிரிக்கெட் கேப்டன் ஐ.ஐ.டி கரக்பூரில், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில், வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் என அனைத்திலுமே சுந்தர் பிச்சை தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆவார்.

மெக்கன்சி & கம்பெனி கூகிள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை சேர்வதற்கு முன் மெக்கன்சி & கம்பெனியில் பொறியியல் மற்றும் தயாரிப்பு மேலாண்மையாளராக பணியாற்றினார்.

ஈடுபாடு 2004-ஆம் ஆண்டு கூகுள் க்ரோம் மற்றும் க்ரோம் ஓஎஸ்-க்கான தயாரிப்பு மேலாண்மையாளராக இணைந்த்தில் இருந்து சுந்தர் பிச்சை கூகுள் ட்ரைவ்-தனில் மிக ஈடுபாடோடு இருந்தார் உடன் ஜிமெயில் மற்றும் கோகுல் மேப்ஸ்-ஐயும் மேற்பார்வையிடுவாராம். இப்போது கூகுள் தேடல், விளம்பரங்கள், வரைபடங்கள், கூகுள் பிளே ஸ்டோர், யூட்யூப் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகியவைகள் சுந்தர் பிச்சையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அரசியல் மற்றும் நாடகம் சுந்தர் பிச்சை எப்போதுமே கூகுள் நிறுவனத்தில் நிகழும் அரசியல் மற்றும் நாடகங்களில் இருந்து வெளியே தங்கி இருக்கும் திறமை பெற்றவர் ஆவார்

குவைத்தில் தொடர் சித்திரவதையால் உணவின்றி உயிரிழந்த இலங்கை பணிப்பெண்!!

குவைத்துக்கு பணிப்பெண்ணாக சென்ற 22 வயது யுவதி ஒருவர் உணவின்றி உயிரிழந்த சோகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பு திடீர் மரண பரிசோதகர் அலுவலகத்தில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் இந்த மரணம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. வைத்தியர் கீர்தி சிறிஜயந்த விக்ரமரத்ன பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

குறித்த யுவதி பணி செய்த வீட்டின் உரிமையாளரினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளை பொறுத்த முடியாமல், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அந்தப் பகுதியில் பாழடைந்த வீட்டில் இரண்டு வாரங்கள் உணவின்றி வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஸ்கெலியாவை சேர்ந்த 22 வயதான திருமணமாகாத கருப்பையா தர்ஷினி என்ற யுவதியே மோசமான மரணத்திற்கு முகங்கொடுத்துள்ளார். தர்ஷினி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் குவைத் நாட்டுக்க பணிப் பெண்ணாக வெளிநாடு சென்றுள்ளார்.

அவர் அங்கு பணிக்கு சென்ற சந்தர்ப்பத்தில் இருந்தே பல சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்துள்ளார். இந்நிலையில் தன்னை இலங்கைக்கு மீள அழைத்துக் கொள்ளுமாறு தூதரகத்தில் தொடர்ந்து அறிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

எனினும் மறைந்திருந்த இரண்டு வாரங்கள் அவருக்கு உணவு நீர் ஒன்று கிடைக்காமையினால் பசியில் உயிரிழந்துள்ளார். வைத்தியரினால் மேற்கொண்ட பிரேத விசாரணைகள் மூலம் இந்த விடயங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கை பெண் வைத்தியர்!!

அமெரிக்காவில் மோசமான மருத்துவமனையை, பிராந்தியத்தின் சிறந்த மருத்துவமனையாக மாற்றிய இலங்கை பெண் வைத்தியர் விருது பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் ஹெல்த் செவன் பன்னாட்டு மருத்துவமனை குழுமத்திற்கான 140 புனர்வாழ்வு மருத்துவமனையின் இயக்குநர்களில் சிறந்தவர் யார் என்ற தெரிவு நடைபெற்றது. அதில் இலங்கை மருத்துவர் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

ஷிரானி ஜயசூரிய என்ற பெண் மருத்துவரே முதலாம் இடத்தை பிடித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மருத்துவர் ஷிரானி,

5 பிராந்தியங்களில் நான் சேவை செய்யும் மத்திய அட்லாண்டிக் பிராந்தியத்தில் கிட்டத்தட்ட 28 மருத்துவமனைகள் உள்ளன. அவற்றின் ஒன்றில் மருத்துவ இயக்குனராக நான் சேவை செய்கின்றேன். அங்கு வருடாந்தம் அனைத்து பிராந்தியங்களிலும் சிறந்த மருத்துவ இயக்குனர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

அதற்கமைய எனது பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி என்னால் வெற்றிபெற முடிந்தது. நான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கடமையை பொறுப்பேற்றேன். நான் இந்த மருத்துவமனையை பொறுப்பேற்கும் இறுதி 10 மருத்துவமனைகளில் ஒன்றாக காணப்பட்டது.

எனினும் தற்போது முதல் 10 இடங்களுக்குள் இந்த மருத்துவமனையை கொண்டுவர எங்களால் முடிந்தன. ஒரு வருடத்திற்குள் மருத்துவமனையை முழுமையாக மாற்றுவதற்கு என்னால் முடிந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்துவோம் : அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை!!

அமெரிக்கா மற்றும் தென் கொரிய நாடுகள் இணைந்து இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டால் ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தப்படும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி வடகொரியாவின் எல்லைப் பகுதிக்கு மிகவும் நெருக்கமாக எதிரிநாட்டு போர் விமானங்கள் பறந்துள்ளன.

அத்துடன், வடகொரியா மீது குண்டு வீசி தாக்குதல் நடத்துவதற்கும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது எமது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான ஒன்றாகவே கருதுகின்றோம்.

எனவே, இந்த பயிற்சி நடவடிக்கை தொடருமாக இருந்தால் தரை, கடல் மற்றும் ஆகாய மார்க்கமாக மிகவும் காடுரமான முறையில் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என வடகொரியா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனடாவில் பனிப்புயல் தாக்கத்தினால் நூற்று கணக்கான விமான சேவைகள் இரத்து!!

கனடா ரொறொன்ரோ பெரும்பாகத்தை தாக்கியுள்ள பனிப்புயல் காரணமாக 400ற்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை ரொறொன்ரோ பெரும்பாகத்தின் பெரும்பகுதிகளை பனிப்புயல் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காலை 8 மணியளவில் 222 வந்தடையும் மற்றும் 198புறப்படும் விமான சேவைகள் கால நிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

நாள் பூராகவும் மேலதிக தாமதங்கள் எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பயணிகள் தங்களது விமான நிலவரங்களை விமான நிலையத்திற்கு செல்ல முன்னர் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ரொறொன்ரோ பெரும்பாகத்தின் பெரும்பாலான பகுதிகள் விசேட காலநிலை எச்சரிக்கை தொடரந்து அமுலில் இருக்கும். செவ்வாய்கிழமை மாலை அளவில் 5 முதல் 10சென்ரி மீற்றர்கள் அளவிலான பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகின்றது.

தென்பாகத்தில் பனி தங்கிவிட்ட நிலையில் ரொறொன்ரோவின் கிழக்கு பாக-ஹமில்ரன், ஓக்வில் மற்றும் நயாகரா பிரதேசங்கள் இன்னமும் குளிர் கால புயல் எச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் 20 முதல் 30 சென்ரிமீற்றர்கள் வரையிலான பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகின்றது. கால நிலைக்கேற்ற வகையில் வாகனம் செலுத்தும் தன்மைகளை சரிசெய்யுமாறு அதிகாரிகள் சாரதிகளை அறிவுறுத்துகின்றனர்.

இரவு நேரம் மற்றும் செவ்வாய்கிழமை அதிகாலை எண்ணிக்கையான மோதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை 401 மில்ரனிற்கு அருகாமையில் டிரக்டர் டிரெயிலர் ஒன்று உருண்டு விபத்திற்குள்ளாகியது.

புறொக் பல்கலைக்கழக நடவடிக்கைகள் இரத்து செய்யப்பட்டன. மக்மாஸ்ரர் பல்கலைக்கழகம் மூடப்பட்டது.செவ்வாய்கிழமை மாலை வகுப்புக்கள் வழமைக்கு திரும்பலாம் என கூறப்பட்டுள்ளது.

153 ஆவது தட­வை­யாக குற்றம் புரிந்த பிக்­பொக்கெட் ராணிக்கு சிறைத்­தண்­டனை!!

153 ஆவது தட­வை­யாக பிக்­பொக்கெட் அடித்­­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்ட ஒரு பெண்­ணுக்கு பிரித்­தா­னிய நீதி­மன்றம் இரண்­டரை வருட சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது.

40 வய­தான மார்­கரெட் ஜோன்சன் எனும் இப் பெண், முதி­ய­வர்கள், கர்ப்­பி­ணிகள் உட்­பட பல­ரிடம் பொருட்­களை அப­க­ரித்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டவர். இதற்­காக ஏற்­கெ­னவே பல தடவை சிறைத்­தண்­ட­னையும் பெற்­றி­ருந்தார்.

இதனால், “பிக்­பொக்கெட் குயின் (பிக்­பொக்கெட் ராணி) எனும் பட்­டப்­பெ­யரும் இவ­ருக்குள்­ளது.

கடந்த மாதம் 2 ஆம் திகதி சுப்பர் மார்கெட் ஒன்றில் வைத்து 76 வய­தான பெண் ஒரு­வரின் கைப்­பையை இவர் இர­க­சி­ய­மாக பறித்துச் சென்றார். ஆனால், இவரின் நட­வ­டிக்கை கண்­கா­ணிப்பு கெம­ராக்­களில் பதி­வா­கின.

ஏற்­கெ­னவே செய்த குற்­ற­மொன்­றுக்­காக சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து, சிறை­யி­லி­ருந்து வெளி­யான 6 ஆவது நாளில் அவர் மீண்டும் குற்­றச்­செ­யலில் ஈடு­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இது தொடர்­பாக பேர்­மிங்ஹாம் நீதி­மன்­றத்தில் நடை­பெற்ற வழக்கில் மார்கரெட் ஜோன்­ச­னுக்கு நீதி­மன்றம் இரண்­டரை வருட சிறைத்­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­தது.

சமூ­கத்தில் பல­வீ­ன­மான நிலை­யி­லுள்ள மக்­களின் பொருட்­களை அப­க­ரிக்கும் “மார்கரெட் ஜோன்சனைப் பற்றி வர்ணிப்பதற்கு வார்த்தைகள் இல்லை என பொலிஸ் சேர்ஜன்ட் ஜூலியா ஸ்லேட்டர் தெரிவித்துள்ளார்.

இறந்துபோன தாயைக் கட்டியணைத்து அழுத குட்டிக் குரங்கு : நெகிழ்ச்சி வீடியோ!!

பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமேயானது அல்ல. பல விலங்குகள் இந்த விஷயத்தில் நம்மை மிஞ்சியிருக்கின்றன. அப்படி ஒரு நெகிழ்ச்சியான, சோகமான சம்பவம் ஒன்று தமிழக எல்லையில் சமீபத்தில் நடந்திருக்கிறது. அந்த வீடியோ வைரல் ஆக பரவி, அனைவரையும் கண்கலங்க செய்திருக்கிறது.

தமிழ்நாடு -கர்நாடாகா நெடுஞ்சாலை ஒன்றில் நடந்திருக்கிறது இச்சம்பவம். சாலையைக் கடக்க முயன்ற குரங்கு ஒன்றை, வேகமாக சென்று கொண்டிருந்த கார் அடித்துவிட்டு சென்றுவிட்டது. சம்பவ இடத்திலே குரங்கு இறந்துவிட்டது. இதைப் பார்த்த குட்டிக் குரங்கு உடனே அம்மா குரங்கை நோக்கி ஓடி வந்தது.

இறந்து கிடந்த அம்மாவின் காதில் எதோ கிசுகிசுத்தது. எந்த அசைவும் இல்லாததால் பயப்படத் தொடங்கியது. தாய்க்குரங்கின் மார்பின் மீது காது வைத்து கேட்டது. பின், அம்மாவை கட்டிப்பிடித்துக் கொண்டது குட்டி.

அங்கு கூடியிருந்தவர்கள் இந்தச் சம்பவத்தை கண்டு நெகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். பின், குட்டியை அம்மாவிடம் இருந்து விலக்கி, இறந்த அந்தக் குரங்கை புதைத்திருக்கிறார்கள். அப்போதும் மரம் விட்டு மரம் தாவி அம்மாவை நோக்கியே ஓடி வந்துக் கொண்டிருந்தது குட்டி.

குரங்குகளுக்கு மனிதர்களைப் போலவே எமோஷன்ஸ் உண்டு. இதற்காக பல ஆராய்ச்சிகளை பல நாட்டு ஆராய்ச்சியாளர்களும் மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவையெல்லாம் தேவையே இல்லை என்பது போல சில உண்மைச் சம்பவங்கள் நடக்கின்றன.

குரங்குகள் தனது குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் பல விஷயங்கள் மனிதர்களை போலவே நடந்து கொள்ளும். கைப்பிடித்து அழைத்துச் செல்வது, கட்டியணைத்து தூங்குவது என பெரும்பாலும் அவை மனிதர்களை போலவே வாழும்.

கம்யுனிகேஷுக்கு உடல்மொழியை பயன்படுத்துவதில் குரங்குகள் எக்ஸ்பெர்ட். முகபாவனைகள், கை அசைவுகள், உடல் அசைவுகள் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு

செடிகள், பூச்சிகள் என எல்லா வித உணவுகளையும் குரங்குகள் உட்கொள்ளும்.

குரங்குகள் வாழைப்பழத்தை சாப்பிடுவதை பார்த்திருக்கிறீர்களா? உரித்து தோலை தூக்கிப் போட்டுவிட்டு பழத்தை மட்டுமே சாப்பிடும்.

குரங்குக்கும், மனித குரங்குக்கும்(Apes) என்ன வித்தியாசம் தெரியுமா? குரங்குக்கு மட்டுமே வால் இருக்கும்.

குரங்குகள் தங்களை தொடுவதை ரசிக்காது. தொடாமல் விளையாடினால் எந்த பிரச்னையயும் செய்யாது.

மனிதர்களுக்கு செய்யப்படும் ஐ.க்யூ தேர்வுகள் விலங்குகளுக்கும் செய்யப்படுவதுண்டு. அதில் குரங்குதான் டாப் ஸ்கோரர். 174

ஒவ்வொரு தனிநபரினதும் தகவல்கள் களவாடப்படுகின்றன : சர்வதேச பாதுகாப்பு மையம் அதிர்ச்சித் தகவல்!!

நாம் அன்றாடம் பயன் படுத்தும் இணையவழி சார் பொதுவான இலத்திரனியல் உபகரணங்கள் மூலம் ஒவ்வொரு தனிநபர் மற்றும் நிறுவனசார் தரவுகள் களவாடப்படுகின்றன. என சர்வதேச பாதுகாப்பு விழிப்புணர்வு மையம் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.

அண்மையில் வெளிவந்த விக்கிலீக்ஸ் அமைப்பின் ரகசிய தகவல் கோவைகளுக்கினங்க, அமெரிக்க புலனாய்வுப்பிரிவு உலகிலுள்ள ஒவ்வொரு தனிநபரது செயற்பாடுகளையும் உளவு பார்ப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இணையதள வசதியுடைய செயலிகள் அனைத்து தொடர்பாடல் சாதனங்களிலும் பொறுத்தப்பட்டிருப்பதனால், ஒவ்வொரு தனிநபரது அல்லது நிறுவனங்களினதும் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதோடு, களவாடப்படும் ரகசிய கோப்புகள், சட்டவிரோத செயற்பாடுகள், மிரட்டல் மற்றும் உயர் மட்ட அரசியல் செயற்பாடுகள் உள்ளிட்ட மோசடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது.

குறித்த சட்ட விரோத செயற்பாடுகளை தடுப்பதற்காக, தேசிய இணையவழி பாதுகாப்பு மையம் மற்றும் தேசிய குற்றத் தடுப்புப் பிரிவு என்பன இணைந்தளவிலான தேடுதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் குறைந்தளவிலான குற்றவாளிகளே பிடிபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று சர்வதேச ரீதியில் தீவிரவாத செயற்பாடுகள், பண மோசடிகள், நிறுவன ஆவண திருட்டுகள், தனிநபர்களது தனிப்பட்ட பதிவுகள் மற்றும் தேசிய பாதுகாப்பு சார் அச்சுறுத்தல்களை, ஏற்படுத்துவதற்காக குறித்து மோசடி நபர்கள் தங்கள் மூளைகளை விரோதமான முறையில் பயன்படுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு தனிநபரும் அனுப்புகின்ற தகவல்கள், மின்னஞ்சல்கள், ஒளி வடிவ மற்றும் ஒலிவடிவ தகவல் பரிமாற்றுக்கள் யாவும், பிறிதொரு நபரால் கண்காணிக்கப்படுகிறது. எனும் விடயத்தை கவனத்திற் கொண்டு செயற்படுதல் என்பது மிகவும் முக்கியமான விடயமாகுமென சர்வதேச பாதுகாப்பு விழிப்புணர்வு மையம் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

96 வயது அம்மா மீதான பாசத்தால் 74 வயது மகன் பெண்ணாக மாறிவரும் விசித்திரம்!!

 
தன்னுடைய 96 வயது அம்மாவை மகிழ்விப்பதற்காக கடந்த 14 வருடங்களாக, 74 வயதாகும் மகன் ஒவ்வொரு வார இறுதியிலும் பெண்ணாக மாறும் விசித்திர நிகழ்வு சீனாவில் இடம்பெற்று வருகின்றது.

சீனாவைச் சேர்ந்த 74 வயதான லி யிங்லாய், என்பவர் கடந்த 14 வருடங்களாக, வார இறுதி நாட்களில் பெண்கள் அணியும் உடைகளை அணிந்து, பெண்களைப் போல் பாவனை செய்து, அந்நாட்டு குன்மிங் பகுதியிலுள்ள கிரீன் லேக் பூங்காவில் நடனமாடி, சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்து வருகிறார்.

செயற்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள லி யிங்லாய், தனது அம்மாவுக்கு இரண்டுமே ஆண் குழந்தைகளாக பிறந்ததால், ஒரு பெண் குழந்தை வேண்டும் என கருதி, லி யிங்லாய்வின் சிறு வயதில் அவருக்குப் பெண் குழந்தைகளுக்கான உடைகளைப் அணிவித்து அழகுபார்த்துள்ளார்.

இந்நிலையில் லி யிங்லாய் வளர்ந்தவுடன், பெண்களின் உடையை அணிவதற்கு மறுப்பு தெரிவிக்கவே, அவரது தாய் மிகவும் வேதனையுற்றுள்ளார். இந்நிலையில் அவரது தாய் மீதிருந்த அளவற்ற பாசம் மற்றும் மரியாதை காரணமாக, தாயின் ஆசையை உதாசீனம் செய்யாமல் அவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள தனது 60ஆவது வயதில் முடிவு செய்து, கடந்த 14 வருடங்களாக பெண்ணைப்போல் உடையணிந்து பாவனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது தாய் மிகவும் மகிழ்ச்சி அடைந்த நிலையில், அதிக அலங்காரம் செய்து வீட்டிலேயே ஏன் இருக்கவேண்டுமென கருதி, அவர் அருகிலுள்ள பூங்காவில் சென்று ஆடிப் பாடி படி பார்வையாளர்களை மகிழ்விப்பதாகவும், அவருடைய அலங்காரங்களை இன்று வரை அவரது தயார்தான் செய்வதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாரதி அனுமதி பத்திரம் கேட்ட கான்ஸ்டபிளை காரினால் மோதி ஒரு கிலோ மீற்றர் இழுத்துச் சென்ற பெண்!!

பாதை விதிமுறைகளை மீறிய கார் ஒன்றினை நிறுத்தி அதன் சாரதியிடம் சாரதி அனுமதிப்பத்திரத்தை கேட்ட கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய கான்ஸ்டபிளை அதே காரினால் மோதி காயப்படுத்தி, காரின் பொனட் மீது விழுந்த அவரை அதில் இருக்கத்தக்கதாகவே சுமார் ஒரு கிலோமீற்றர் வரை காரைச் செலுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நடமாடும் விபசார விடுதியொன்றினை நடத்திவரும் பெண் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்ணை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஜயராம் டொஸ்கி உத்தரவிட்டுள்ளார்.

தெற்கு களுத்துறையைச் சேர்ந்த கீதா சியாமலீ எனும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரகரி வீதியில் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள்களான உபுல், பிரதீப் ஆகியோர் போக்கு வரத்து கடமையில் இருந்துள்ளனர். இதன் போது டப்ளியூ.பி.சி.ஏ.எச். 9280 எனும் காரினை பொலிஸார் நிருத்தியுள்ளனர். அதில் 5 பெண்கள் இருந்துள்ளனர். காரினை கீதா எனும் தற்போது கைதகியுள்ள பெண்ணே செலுத்தியுள்ள நிலையில், அவரின் சாரதி அனுமதி பத்திரத்தை பொலிஸார் கோரியுள்ளனர்.

இதன் போது காரினை இயக்கிய குறித்த பெண் அந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதியுள்ளார். கார் மோதியதினால் காரின் பொனட் மீது அந்த கான்ச்டபிள் விழவே தொடர்ந்து அக்காரை அப்பெண் முன்னோக்கி வேகமாக செலுத்தி சென்றுள்ளார். இதன் போது காரின் பொனட்டில் காயத்துடன் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் காரின் இரு பக்கங்களை பிடித்தவாறு உயிரை காப்பாற்றிக்கொள்ள போராடியுள்ளார். இதன் போது அவ்வீதியால் வேன் ஒன்றில் வந்துள்ள கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த மொஹம்மட் மன்சூர் மொஹம்மட் மன்சான் எனும் நபர், பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஏதோ ஆபத்து என கருதி காரின் குறுக்காக வேனை நிறுத்தி பொலிஸ் கான்ஸ்டபிள் உபுலை காப்பாற்றியுள்ளார்.

இதன் போது காரில் இருந்த நான்கு பெண்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதுடன் காரைச் செலுத்திய பெண் தடுக்கி விழவே அவரை பொலிஸார் கைதுச் செய்துள்ளனர். காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இந்நிலையில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணையில், கைதான பெண் ஒரு நடமாடும் விபசார விடுதியை வாடகைக்கு எடுக்கும் வாகனங்கலில் நடத்துபவர் எனவும், அது தொடர்பிலேயே பணத்துக்கு பெண்கள் சிலரை ஆடவருக்கு விற்பனைச் செய்ய செல்லும் வழியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு மேலதிகமாக, சம்பவம் இடம்பெறும் போது காரில் ஒருந்த விபசாரிகள் என நம்பப்படும் ஏனைய பெண்களைத் தேடியும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தனியார் பஸ்ஸில் பயணிப்பவர்களா நீங்கள் : உங்களின் கவனத்திற்கு!!

மேல் மாகாணத்தில் இயங்கும் தனியார் பஸ்களில் இன்று (15) பயணச்சீட்டு வழங்குவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி இன்றிலிருந்து தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகள் கட்டயாமாக பயணச்சீட்டு பெற்றுக்கொள்வது அவசியமென மாகாண போக்குவரத்து அதிகாரசபை தலைவர் துஷித குலரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனியார் பஸ்களுக்கான பயணச்சீட்டை வழங்குவதற்கு முன்னர், தனியார் பஸ்கள் சேவையை அபிவிருத்தி செய்யவேண்டும் போன்ற பல்வேறு கருத்துக்களை அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்

வவுனியாவில் பணமோசடி செய்த பெண் கைது!!

வவுனியாவில் நேற்று (14.03) காலை வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பவதாகத் தெரிவித்து பலரிடம் பண மோசடி செய்த பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா மூனாமடு பகுதியைச் சேர்ந்த மோகன் சாந்தினி ஹரணி என்ற 39 வயதுப் பெண் வெளிநாட்டிற்கு அனுப்புவதாகத் தெரிவித்து 40 இலட்சத்திற்கு அதிகமான பணங்களை பெற்றுள்ளதாகவும், அதில் சிலர் தமது பணத்தைத்திருப்பிக் கேட்டுள்ளனர். எனினும் ஒருவருக்கு காசோலை மூலம் சிறு தொகைப்பணத்தினை வழங்கியுள்ளார்.

குறித்த நபர் வங்கி சென்றபோது வங்கியில் பணம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து நேற்று காலை பொலிசாரால் குறித்த பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் நேற்று மாலை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளர்.

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் அமலாபாலின் தம்பி!!

அமலாபாலின் தம்பி அபிஜித் பால். இவர் ஏற்கெனவே ஒருசில மலையாளப் படங்களில் நடித்துள்ளார். மோகன்லால் மற்றும் அமலாபால் இணைந்து நடித்த ‘லைலா ஓ லைலா’ திரைப்படம்தான் இவரின் முதல் திரைப்படம். தமிழில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெளிவந்த தேவி படததில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் அபிஜித் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கின்றார். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் அந்த படத்தை விஜய்ஸ்ரீ இயக்குகின்றார். இந்த படத்தின் இரண்டு சிறப்பம்சங்களும் இடம்பெற்றிருக்கின்றதாம். அதாவது இந்த படத்தில் இடைவேளை என்பதே கிடையதாம். அதேபோல், இப்படத்தில் பாடல்களும் கிடையாதாம்.

இப்படம் குறித்த மேலும் பல தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்திற்கான கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகையர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

வவுனியா பாடசாலைகளுக்கு இந்திய துணைத் தூதரகத்தினால் இசைக்கருவிகள் அன்பளிப்பு!!

 
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மற்றும் கனகராயன்குளம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு இந்தியத் துணைத் தூதரகத்தினால், இன்னிசை வாத்தியக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜனால், வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் அதிபரிடம் இவ் வாத்தியக்கருவிகள் இன்று (14.03.2017) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

அண்மையில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் நுழைவாயில் திறப்பு விழாவிற்கு இந்திய துணைத் தூதுவர் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தபோது, பாடசாலையின் அதிபர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே குறித்த இன்னிசை வாத்தியக்கருவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவராலயத்தின் அதிகாரிகள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

தனுஷ் பலவித திறமை கொண்டவர் : அமலாபால்!!

அமலாபால் தற்போது தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி 2, வடசென்னை படங்களில் ஜோடியாக நடிக்கிறார். இதுபற்றி கேட்ட போது அமலாபால் பின்வருமாறு தெரிவித்தார்..

தனுஷ் ஜோடியாக வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நடித்தேன். இப்போது அதன் 2வது பாகத்திலும் நாங்கள் சேர்ந்து நடிக்கின்றோம். தனுஷ் எனக்கு பிடித்த நடிகர். அவரிடம் பலவித திறமைகள் இருக்கின்றன.

கதை மற்றும் கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்வார். தனுஷ் படங்கள் என்றால் அவர் நினைவுக்கு வரமாட்டார். அவரது கதாபாத்திரங்கள் தான் கண்முன் நிற்கும். எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் திறமையாக நடித்துவிடுவார்.

தனுஷ் நடிக்கும் வட சென்னை திரைப்படத்தில் வடசென்னை பெண்ணாக வருகின்றேன். சவாலான வேடம். அது ஒரு காலகட்டத்தில் நடக்கும் படமாக தயாராகின்றது. கதை கேட்டதும் இரண்டு நாட்கள் அந்த பாத்திரமாகவே மாறிவிட்டேன்

ஹிந்தி ‘குயின்’ திரைப்படம் மலையாளத்தில் ரீமேக் ஆகின்றது. ரேவதி இயக்கும் இந்த படத்தில் நான் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது. அவர் எனக்கு பிடித்த நடிகை. சிறுவயதில் அவரைப் பார்த்து தான் வளர்ந்து இருக்கின்றேன். இது தவிர திருட்டுப்பயலே இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றேன்.

நாங்கள் பிரிந்து விட்டாலும் விஜய் இப்போதும் எனக்கு பிடித்தவர். நாங்கள் ஒருவர் மற்றவரிடம் இருந்து அற்புதமான வி‌டயங்களை கற்று இருக்கின்றோம். நான் சினிமாவை மிகவும் நேசிக்கின்றேன். எனக்கு பிடித்தமானது நடிப்பு. சினிமாவில் நடிப்பதற்காகவே வாழ்கின்றேன்.

எதிர் காலத்தில் தொழிலதிபராவேன். சென்னையில் ஹோட்டல் தொடங்குவேன். அங்கு யோகா, தியானப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்வேன் என்று தெரிவித்தார்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலையத்திற்கு மஸ்தான் எம்.பி திடீர் விஜயம்!!

 
வவுனியா தமிழ் மத்திய மகாவித்யாலயத்திற்கு நல்லெண்ண நோக்குடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் இன்று (14.03.2017) திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின்போது பாடசாலை அதிபர் T.அமிர்தலிங்கத்தினால் மஸ்தான் எம்.பி வரவேற்கப்பட்டதுடன் பாடசாலை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாகவும் பாடசாலையின் அத்தியாவசிய தேவைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

இதில் மைதானப்புணரமைப்பு, பாடசாலைத்தளபாடப்பற்றாக்குறை என்பனவற்றுடன் மழை காலங்களில் வவுனியா பிரதான பொலிஸ் நிலையம், வீடுகள் உட்பட மேட்டுப்ப்பகுதியில் இருந்துவரும் மழை நீர் பாடசாலை வளாகத்தினூடாக சென்றடைவதினால் பாரிய அசௌகரியங்களை தாம் எதிர்கொள்வதாக அதிபர் தர்மலிங்கம் தெரிவித்தார்.

இதனையப்டுத்து குறித்த சிக்கல் நிலைமையினை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாக மஸ்தான் எம்பி தெரிவித்தார்

குறித்த கலந்துரையாடலில் பாடசாலையின் ஆசிரியர்கள், அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்களும் கலந்துகொண்டனர்.

அத்துடன் பாடசாலை வளாகத்தின் பிரச்சினைக்குரிய பகுதிகளை அவதானித்த மஸ்தான் எம்.பி மிக விரைவில் தாம் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் வாக்குறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.