காதலிக்கு காதலர் அளித்த 33 தொன் பரிசு!!

முப்பத்து மூன்று தொன்கள் எடையுள்ள விண்கல்லைப் பரிசளித்து பெண் ஒருவரைத் திருமணம் செய்யச் சம்மதம் பெற்ற ருசிகரச் சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

லியு என்பவர் பெண் ஒருவரை கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்து வந்தார். அவரை மணந்துகொள்ள விரும்பிய லியு, குறித்த பெண்ணின் சம்மதத்தைப் பெற வித்தியாசமான முறையில் முயற்சி செய்தார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு தன் காதலியுடன் ஸிங்ஜியாங் மாகாணத்தில் உள்ள உரும்க்கி என்ற ஊருக்கு சுற்றுலாச் சென்றிருந்தார். அப்போது, பல ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் விழுந்திருந்த பாரிய விண்கல்லையும் அவர்கள் இருவரும் பார்வையிட்டனர். அந்த விண்கல்லைக் கண்டு லியுவின் காதலி பிரமித்துப் போனார்.

இதை ஞாபகம் வைத்திருந்த லியு, தனது காதலிக்குத் தெரியாமலேயே அந்தக் கல்லை பத்து இலட்சம் யுவானுக்கு (ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் டொலர்) விலைபேசி வாங்கினார். பின், நேற்று (14) தனது காதலியை உரும்கிக்கு அழைத்துச் சென்ற லியு, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் பெரிய பூங்கொத்து ஒன்றைக் கொடுத்து தன் காதலியிடம் திருமணத்துக்குச் சம்மதம் கேட்டார்.

இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோன அவரது காதலி, உடனடியாகத் தனது சம்தத்தைத் தெரிவித்தார். மேலும், “லியுவின் இந்த ஏற்பாடு என்னைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. ஒரு வருடத்துக்கு முன் நான் சொன்னதை ஞாபகம் வைத்து, மறக்க முடியாத பரிசை எனக்குத் தந்திருக்கிறார். என் வாழ்நாளில் இதுபோன்ற பிரமாண்டமான விண்கல்லை நான் பார்த்ததேயில்லை. இப்போது இந்தக் கல் எனக்கே சொந்தம் எனும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று குதூகலித்தார் அந்தப் பெண்!

எனினும், விண்கல் என்பது பொதுச் சொத்து, அதை யாரும் விற்கவும் முடியாது வாங்கவும் முடியாது, இது ஒரு பொய்ச் செய்தி என்றும் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

4 வயது சிறுவன் அடித்துக் கொலை : வளர்ப்புத்தாய் கைது!!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 04 வயது சிறுவன் ஒருவர் அடித்துக்கொலை செய்ததாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் வளர்ப்பு தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா மாதர் வீதியில் நேற்று இரவு 04 வயது சிறுவன் ஒருவர் அடித்துக்கொலைசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவனின் வளர்ப்பு தாயார் ஒருவர் சிறுவனை தாக்கிய நிலையில் அவரை ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த சிறுவன் ஏற்கனவே உயிரிழந்திருந்தாகவும், அது தொடர்பில் வைத்தியசாலை தரப்பினரால தகவல் வழங்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான விசாரணையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் குறித்த வளர்ப்பு தாய் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு குற்றதடவியல் பிரிவு பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள பெண் குறித்த சிறுவனை சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளதாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே ஒரு பெண்பிள்ளையினை தத்தெடுத்துவளர்த்து வந்த நிலையிலேயே, குறித்த சிறுவனையும் தத்தெடுத்து வளர்த்துவந்துள்ளதாகவும் அயவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்ற மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டார்.

13 வயதுச் சிறுமிக்கு 28 காதலர்கள்!!

மொபைல் போன்கள் எந்த அளவுக்கு மனிதனின் வளர்ச்சிக்கு சான்றாக இருக்கிறதோ, அதே அளவுக்கு மனிதர்களின் அழிவுக்கும் வழிவகுக்கிறது. குறிப்பாக இளம் வயது சிறுவர், சிறுமிகளையே இது அதிகம் பாதிக்கிறது.

மொபைல் போன்களை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டும் அவர்கள், அதன் மூலம் பயனுள்ள தகவல்களை பயன்படுத்துவதைவிட, பயனற்றவைகளை பயன்படுத்தி ஆபத்தில் சிக்கிகொள்கிறார்கள்.

பாடசாலை ஒன்றில் 8 ஆம் வகுப்பு பயின்று வந்த 13 வயது சிறுமிக்கு 28 காதலர்கள்.

பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பியவுடன், வீட்டுப்பாடங்களை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதை விட மொபைல் போனை பயன்படுத்துவதை அதிக ஆர்வம் காட்டியுள்ளார்.

தனது மொபைலில் , Rose Lover என்ற பெயரில் ஒரு போல்டர் வைத்துள்ளார். அதனுள் 28 ஆண்களின் பெயர்கள் இருந்துள்ளது. அவர்களுடன் தினமும் சட்டிங் செய்வது, இரவு நேரங்களில் மொபைலில் பேசுவதினை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த 28 ஆண்களும் இச்சிறுமியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளனர். பதிலுக்கு இவரும் நானும் உங்களை காதலிக்கிறேன் என ஒவ்வொருவரிடமும் தெரிவித்துள்ளார்.

அதன்படியே, ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்து வந்த பின்னர் மொபைல் போனின் வழியாக இந்த ஆண்களோடு காதல் ராகம் பாடி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில், தனது மகளின் மீது சந்தேகம் அடைந்த தாயார், இரவு தனது மகள் தூங்கிய பின்னர் அவளது மொபைல் போனை எடுத்து சோதனை செய்தததில் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அந்த ஆண்களின் வயது 17 முதல் 25 இருக்கும். இந்த சிறுவயதிலேயே 28 ஆண்களோடு காதல் வயப்படும் அளவுக்கு நம்முடைய மகள் மோசமடைந்துவிட்டாளே என கவலையடைந்துள்ளார்.

மேலும், மொபைலை பயன்படுத்தும் அவள் எதற்காக, எப்படி பயன்படுத்துகிறாள் என்பதை கவனிக்காமல் விட்டுவிட்டோமே என நொந்துகொண்டார்.

இளவரசன் தற்கொலை செய்துகொள்ளவில்லை : வெளியான திடுக்கிடும் தகவல்!!

கடந்த 2013ம் ஆண்டு தர்மபுரியில் அட்டவணைப் பிரிவைச் சேர்ந்த இளவரசன் மர்மமான முறையில் ரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடக்கிறார்.

அவரிடம் இருந்து பிரிக்கப்பட்ட அவரது மனைவியின் குடும்பத்துக்கும் அவருக்கும் இடையில் சட்ட ரீதியாக வாதங்கள் நடந்து வந்த நிலையில் மர்மமான முறையில் இளவரசன் இறக்கிறார்.

இளவரசனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், இளவரசன் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் சம்பத் குமார், ‘இளவரசன் கொலை செய்யப்பட்டாரா என்பதற்கு எங்களிடம் தற்போது போதிய ஆதாரம் இல்லை.

ஆனால், அவர் கண்டிப்பாக தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பதை நிரூபிக்க முடியும்’ என்று கூறியுள்ளார். இந்தத் தகவலை அவர் தி ஒயர் (The Wire) இணைய பத்திரிகையில் வெளியாகியுள்ள நேர்காணல் மூலம் கூறியுள்ளார்.

அவர் கொடுத்த பேட்டியில் சம்பத் குமார், ‘ஜூலை 5-ம் தேதி 2013-ம் ஆண்டு, இளவரசன் இறந்து ஒரு நாள் கழித்து, மருத்துவர் துந்தர் (Dr.K.Thunder) செய்த பிரேதப் பரிசோதனையிலும் நான் ஜூலை 11-ம் தேதி செய்த பிரேத பரிசோதனையின் போதும் அவர் உடம்பில் க்ரீஸ் கரை என்பது இல்லை.

ஆனால் எய்ம்ஸ் மருத்துவர்கள், ஜூலை 13-ம் தேதி மேற்கொண்ட பிரேத பரிசோதனையின்போது, இளவரசன் உடலில் க்ரீஸ் கரை தோன்றுகிறது. இதுதான், மிகவும் சந்தேகத்தைக் கிளப்பும் விஷயம்.’ என்று கூறியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம், எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கைபடியே, இளவரசன் மரணம் தற்கொலையே என்று தீர்ப்பளித்தது. இந்நிலையில், இளவரசன் மரணத்தை விசாரணை செய்வதற்கு ஒரு நபர் கொண்ட கமிட்டி நீதிபதி சிங்காரவேலுவை வைத்து அமைக்கப்பட்டது.

இவர், வரும் மார்ச் 14 முதல் 16-ம் தேதிகள் வரை தர்மபுரியில் மேலும் ஒரு சுற்று விசாரணையை நடந்த உள்ளார்.

இந்நிலையில், சம்பத் குமார் நீதிபதி சிங்காரவேலுவை சந்தித்துள்ளார். ‘என் கருத்தை எடுத்து நீதிபதிக்கு விளக்கினேன். அவரும் என் கருத்துகளை ஆழ்ந்து கவனித்து குறிப்பெடுத்துக் கொண்டார்.

எங்களால், இளவரசன் கொலை செய்யப்பட்டார் என்பதை நிரூபிக்க முடியவில்லை என்றாலும் அவர் கண்டிப்பாக தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதை நிரூபிக்க முடியும்.’ என்று கூறியுள்ளார் சம்பத் குமார்.

கடத்தப்பட்ட கப்பலில் உள்ள எனது கணவரை மீட்டுத்தாருங்கள் மனைவியின் உருக்கமான கோரிக்கை!!

சோமாலியா கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தனது கணவரை மீட்டுத் தருமாறு அந்த கப்பலின் பிரதான அதிகாரியின் மனைவி உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

குறித்த கப்பலின் பிரதான அதிகாரியாக செயற்பட்ட மத்துகமவை சேர்ந்த கே.டீ.ப்ரேமனாத் என்பவரது மனைவியே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கே.டீ.ப்ரேமனாத்தின் உறவினர்கள் வெளிவிவகார அமைச்சிக்கு சென்று சம்பவம் தொடர்பில் தகவல்களை கேட்டறிந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்தே இவரை மீட்டுத்தருமாறு இலங்கை அரசாங்கத்திடம் அவரது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சோமாலியா கடற்கொள்ளையர்களால் நேற்றைய தினம் கடத்தப்பட்ட கப்பலில் 8 இலங்கையர்கள் இருப்பதாக கடற்படை தரப்பினர் உறுதி செய்திருந்தனர்.

இந்த நிலையில் கடத்தப்பட்ட டுபாய் நாட்டுக்குச் சொந்தமான கப்பலையும், அதிலுள்ள 8 இலங்கையர்களையும் விடுவிக்க சோமாலிய கடற்கொள்ளையர்கள் கப்பம் கோரியுள்ளனர் என சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.

கப்பத் தொகை தொடர்பில் என்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் அந்த கப்பலின் பிரதான அதிகாரியான தனது கணவரையும் மீதமுள்ள 7 பேரையும் இயன்றளவு விரைவில் விடுவித்து தருமாறு அவரின் மனைவி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா செட்டிகுளம் இளைஞர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வு!!

 
வவுனியா செட்டிகுளம் பிரதேச பிரிவிற்குற்பட்ட இளைஞர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (15.03.2017) காலை 10 மணியளவில் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் செட்டிகுளம் பிரதேச சம்மேளன தலைவருமாகிய சங்கரன் சசிகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் செட்டிகுளம் பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர், இளைஞர் சேவை அதிகாரி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

புலமைப்பரிசில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

 
வவுனியா இறம்பைக்குளம் ஈஷி பூரண சுவிஷேச சபையின் ஆயர் பி.எம்.இராஜசிங்கம் தலைமையில் 2017ம் ஆண்டில் புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள 150ற்கும் மேற்பட்ட மன்னார் மாவட்டத்தில் நானாட்டான், அரிப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வறியமாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை 3மணியளவில் நானாட்டான் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதான பேச்சாளர் ஜே.அலன் நீல், பிரதான ஆயர், ஜக்கிய அமெரிக்கா எலியாவின் அப்பம் மிஷன், பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் பாலியக்கார, நானாட்டான், அரிப்பு பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் என பலரும் கலந்து கொண்ட நிகழ்வின் இறுதியில் வன்னி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 5 பொலிஸ் நிலையங்களின் தேவை கருதி கணணிகள் வழங்கிவைக்கப்பட்டது.

வவுனியாவில் தொடர்ச்சியாக 50 வருடம் ஒரே நிறுவனத்தில் பணியாற்றியவர் கௌரவிப்பு!!

 
வவுனியாவில் 1966 முதல் 2016வரை ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளரைக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் வவுனியாவிலுள்ள விருந்தினர் விடுதியில் வவுனியா வர்த்தக சங்கம் சார்பில் நிறுவனத்தின் உரிமையாளர் சி.ஞானசம்பந்தன் தலைமையில் இடம்பெற்றது.

50 வருடகாலம் நிறுவனத்தில் பணியாற்றிய திரு.திருமதி.சுப்பிரமணியம் நித்தியானந்தன் தம்பதியினர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராசலிங்கம், பிரபல தொழிலதிபர்களான நிறுவனத்தின் உரிமையாளர் சி.ஞானசம்பந்தன், மற்றும் எஸ்.இராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு கௌரவித்தனர்.

இவர் வவுனியா மாவட்டத்தில் 50 வருடங்கள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றியவர் என்ற பெயரையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடம்பெறும் உணவுதவிர்ப்புப் போராட்டத்திற்கு புகையிரதக் கடவைக் காப்பாளர் சங்கம் ஆதரவு!!

 
வவுனியாவில் கடந்த 20 தினங்களாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பினை மேற்கொண்டு வரும் காணாமற்போன உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று (15.03.2017) காலை 10 மணியளவில் போராட்ட இடத்திற்குச் சென்ற வவுனியா மாவட்ட புகையிரதக்கடவைக் காப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவாக வவுனியாவில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் கண்டனப் பேரணிகளும் இடம்பெற்றபோதும் இவர்களுக்கு சரியான தீர்வு வழங்கப்படாமையால் தொடர்ந்து 20வது நாளாகவும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவிலிருந்து ஆசிய மென்பந்து சுற்றுப்போட்டியில் பங்குபற்றவுள்ள விசேட தேவைக்குட்பட்ட இளைஞன்!!

 
அசாத்தியமான அடைவுகளை சாத்தியமாக்குவதற்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்படும் போது அது சாத்தியம். அந்த அடிப்படையில் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து தேக்கவத்தை சீட் – வலுவூட்டல் வளாகத்தில் கல்வி கற்று தற்போது விளையாட்டு துறையில் தனக்கென ஒரு இடத்தை வகித்து வரும் சிதம்பரபுரத்தை சேர்ந்த பாலகிருஸ்ணன் – தர்மசீலன் என்னும் காது கேட்க இயலாத மற்றும் வாய் பேச முடியாத இவ் இளைஞன் ஆசிய நாடுகளுக்கிடையே நடைபெறவுள்ள காது கேளாதோர்களுக்கான மென்பந்து சுற்றுப்போட்டியில் பங்கு பெற தெரிவாகியுள்ளார்.

இவர் தெரிவான இப்போட்டியானது வரலாற்று ரீதியாகவும் திறன் அடிப்படையில் விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கான ஒரு சந்தர்ப்பமும் ஆகும். அதே நேரத்தில் வடக்கில் அதிலும் வவுனியாவை சேர்ந்த ஒரு இளைஞரிற்கு இப்படியான வாய்ப்பு கிடைப்பது வவுனியாவிற்கும் அதே போன்று வட மாகாணத்திற்கும் பெருமை ஏற்படுத்தி தரும் செயற்பாடாகும்.

இப் போட்டியில் பங்கு கொள்வதற்காக 20.03.2017 அன்று இலங்கையில் இருந்து புறப்பட்டு 21.03.2017 தொடக்கம் தொடர்ந்து 29.03.2017 அன்று வரை 09 நாட்கள் தொடச்சியாக பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்று மீண்டும் அவர் 31.03.2017 அன்று இந்தியாவில் நடைபெறும் தொடர் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக 30.03.2017 அன்று இந்தியாவிற்கு சென்று அங்கு 31.03.2017 தொடக்கம் 13.04.2017 வரை போட்டியில் கலந்து கொண்டு மீண்டும் 15.04.2017 அன்று மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளார்.

எனவே இப்படியான ஒரு வீரர் எம் மண்ணிற்கு கிடைத்ததையிட்டு பெருமை கொள்வதோடு இவருக்கு கைகொடுக்க வேண்டிய கடமை எமக்குள்ளது.

இவர் இப் போட்டியில் கலந்து கொள்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதனால் உங்களால் முடிந்த நிதி உதவியினை இவரது வங்கி கணக்கிற்கு (தேசிய சேமிப்பு வங்கி கணக்கு 100880230120) செலுத்துவதன் மூலம் உங்களது பங்களிப்பும் ஆசிர்வாதமும் எங்கோ ஓர் மூலையில் பிறந்து சாதிக்க துடிக்கும் பாலகிருஸ்ணன் – தர்மசீலன் என்னும் இளைஞனின் சாதனைத் துடிப்பிற்கு பலமாக அமையும்.

17.03.2017 வெள்ளிக்கிழமை இவரைப்பாராட்டி கௌரவித்து வழி அனுப்பி வைக்கும் நிகழ்வு ஒன்று வைரவபுளியங்குளத்தில் 6ம் ஒழுங்கையில் உள்ள வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. விளையாட்டுத் துறையில் உள்ளோர் சமூக ஆர்வலர்கள் இவரை வாழ்த்தி வழிஅனுப்ப வருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றனர்.

வவுனியாவில் 20வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!

 
வவுனியாவில் கடந்த 20 நாட்களாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (15.03.2017) 20வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக வவுனியாவில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் கண்டனப் பேரணிகளும் இடம்பெற்றபோதும் இவர்களுக்கு சரியான தீர்வு வழங்கப்படாமையால் தொடர்ந்து 20வது நாளாகவும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா ஆனந்தர்புளியங்குளம் நொச்சிகுளம் கிராம மக்களுடன் வடக்கு சுகாதார அமைச்சர் சந்திப்பு!!

 
வவுனியா வடக்கு அனந்தர்புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள நொச்சிக்குளம் மீள்குடியேற்ற கிராம மக்களை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் நேற்று முன்தினம் சந்தித்து கலந்தரையாடினார்.

இதன்போது அங்கு மீள்குடியேறியுள்ள குடும்பங்கள் எதிர்நோக்கம் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது மக்களால் பின்வரும் விடயங்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன

கிராம அபிவிருத்தி சங்கம், கமக்காரர் அமைப்பு, மாதர் சங்கம் என்பனவற்றின் உருவாக்கம், நொச்சிக்குளம் முத்துமாரி வித்தியாலய பாடசாலைக்கான அடிப்படை வசதிகளை பெறல், மலசலகூடம்குடிநீர் வசதி, உள்ளக வீதிகள் புனரமைப்பு உன்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது அமைச்சர் பிரதேச சபை செயலாளருடன் கலந்துரையாடி ஒரு வாரத்திற்குள் முக்கியமான வீதியாகிய பழையவாடி – நொச்சிக்குளம் வீதி திருத்தம் செய்ய உறுதியளிக்கப்ட்டது.

முன்பள்ளி மற்றும் பாடசாலை ஆசிரியர் இன்மை, அத்துடன் பகுதிநேர ஆசிரியருக்கான கொடுப்பனவு வீட்டுத்திட்டம் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் படிப்படியாக மக்களின் குறைகள் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார்.

இந்தக் கூட்டத்தில் சுகாதார அமைச்சருடன் முன்னைநாள் வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பூபாலசிங்கம், அமைச்சரின் இணைப்பாளர் பா.சிந்துஜன், நொச்சிகுளம் பாடசாலை அதிபர் அகியோர் உட்பட கிராம மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

மேடையில் சரிந்த பிரித்தானியா குத்துச்சண்டை வீரர் பரிதாப மரணம்!!

பிரித்தானியாவில் இடம்பெற்ற கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் மேடையிலே உருக்குலைந்து இளம் வீரர் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹில்ஸ்போரோ பகுதியை சேர்ந்த 14 வயதான ஸ்காட் மார்ஸ்டன் என்ற இளம் வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சனிக்கிழமை இடம்பெற்ற கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற ஸ்காட் மார்ஸ்டன் இறுதி விநாடியின் போது மேடையிலேயே உருக்குலைந்து விழுந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

போட்டியின் போது அவர் நோய்வாய்ப்பட்டதாக கூறப்படுகிறது. நிகழ்வு அமைப்பாளர்களான லீட்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் கல்லூரி இளைஞன் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளனர்.

ஸ்காட் மார்ஸ்டன் நண்பர்களும், குடும்பத்தினரும் நெஞ்சை உருக்கும் அஞ்சலி வெளியிட்டுள்ளனர்.

இளம் வீரராக திகழ்ந்த ஸ்காட் மார்ஸ்டன், தன் நேர்மறையான பேச்சால் சந்தித்த அனைவரையும் கவர்ந்ததாக பாராட்டியுள்ளனர்.

சம்பவம் குறித்து வெஸ்ட் யார்க்ஷயர் பொலிஸ் கூறியதாவது, சந்தேகக் கண்ணோடு இச்சம்பவத்தை அணுகவில்லை என தெரிவித்துள்ளனர்.

புற்றுநோயுடன் போராடும் பிரபல பிரித்தானிய பாடகரின் மகள்!!

பிரபல பிரித்தானிய பாடகரான கென்னி தாமசின் 4 வயது மகள் புற்றுநோயுடன் போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் 1990 களில் மிகவும் பிரபலமான பாடகராக வலம் வந்தவர் கென்னி தாமஸ். இவரது 4 வயது மகள் கிறிஸ்டீனா தற்போது புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுமி கிறிஸ்டீனாவின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து கவலையடைந்த பாடகர் கென்னி நரம்பியல் மருத்துவர் ஒருவரை அணுகி சிறுமியின் உடல்நிலை குறித்து ஆலோசித்துள்ளார்.

மருத்துவரின் பரிசோதனைகளுக்கு பின்னர் சிறுமியின் மூளையில் புற்றுநோய் பாதித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்துள்ள சிகிச்சைகள் சிறுமியின் ஆயுளை சில நாட்கள் நீட்டிக்கலாம் ஆனால் உயிரை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கைவிரித்துள்ளனர்.

இதனைடையே பாடகர் கென்னியின் நண்பர்கள் இணைந்து சிறுமி கிறிஸ்டீனாவின் மருத்துவ செலவினங்களுக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 40,000 பவுண்டு வரை சேகரித்துள்ளதாகவும், கூடிய விரைவில் இந்த தொகை 80,000 பவுண்டுகள் தாண்டும் என நம்புவதாக பாடகரின் நண்பர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மொபைல் போன் கதிர்வீச்சிலிருந்து பாதுகாத்து கொள்ள செய்ய வேண்டியவை!!

உலக அளவில் 400 கோடிக்கும் அதிகமானோர் மொபைல்போன் பயன்படுத்துகின்றனர்.

2011ம் ஆண்டு உலக புற்றுநோய் கழகம் மேற்கொண்ட ஆய்வில் மொபைல் கதிர்வீச்சின் மின்காந்த அலைகள் புற்றுநோய்க்கு காரணமாக அமையலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

மொபைல்போனில் இருந்து வெளியிடப்படும் கதிர்வீச்சினால் புற்றுநோய் மட்டுமல்லாமல் தலைவலி, உடல்சோர்வு, உடல் சிதைவில் தொடங்கி புற்றுநோய் கட்டிகள் வரை பாதிப்பு ஏற்படலாம் என எலக்ட்ரோமேக்னடிக் பயாலஜி மற்றும் மருந்துகள் இதழ்(Electromagnetic Biology and Medicine Journal) மேற்கொண்ட ஆய்வில் அறியப்பட்டுள்ளது.

மொபைல் போனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சினை உள்வாங்கும் அளவினை ஸ்பெசிபிக் அப்சார்ப்சன் ரேட்(Specific absorption Rate) எனக் கூறுவர்.

ஒரு கிராமுக்கு 1.6வாட்ஸ் என்ற அளவினை விட குறைவாக இருக்க வேண்டும் என கட்டுப்பாடு உள்ளது.

ஸ்மார்ட் மொபைல் போனில் *07# என்ற எண்ணை டயல் செய்யும் போது 1.6என்ற அளவினை விட குறைவாக இருந்தால் அந்த போனானது பாதுகாப்பானது.

கதிர்வீச்சிலிருந்து பாதுகாத்து கொள்ள

சிக்னல் குறைவாக உள்ள இடங்களில் அதிகளவு கதிர்வீச்சினை மொபைல்போன் வெளிப்படுத்துவதனால் சிக்னல் குறைவாக உள்ள இடங்களில் மொபைல்போன் பயன்பாட்டினை தவிர்க்கலாம்.
சார்ஜ் 15 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள போதும், மொபைல் சார்ஜ் போடும் போதும் கதிர்வீச்சானது அதிகமாக இருக்கும். இந்த நேரங்களில் போன் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

அதிக நேரம் போனை காதில் வைத்து பேசும் போது கதிர்வீச்சின் அளவானது அதிகரித்து எளிதாக மூளையினை நேரடியாக பாதிக்கும் அபாயமுள்ளது. எனவே, ஹேண்ட் ஃப்ரீ மோட் (Hand free mode) அல்லது இயர் போன் (Earphone) பயன்படுத்தலாம்.

அன்றாடம் பயன்படுத்தும் டி.வி. மற்றும் ரேடியோக்களில் இருந்து குறைந்தபட்சம் 20 செ.மீ. தொலைவு இடைவெளியில் இருப்பதால் அதில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சில் இருந்து நம்மை பாதுகாத்துத் கொள்ளலாம்.

தூங்கும் போது தலையணை கீழ் அல்லது தலைக்கு அருகில் மொபைல் போனினை வைப்பதனை தவிர்க்க வேண்டும்.

கதிர்வீச்சின் அளவு குழந்தைகளுக்கு இரு மடங்காக இருக்கும் என்பதால், குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

தோலில் கதிர்வீச்சு உருவாவதை தடுக்கும் ரேடியேசன் டிபெண்டர் கேஸ்களை பயன்படுத்துவதால் கதிர்வீச்சு பாதிப்பினை சற்று கட்டுப்படுத்தலாம்.

அதிகமாக சூடாகும் பேட்டரி கொண்ட ஸ்மார்ட் போன்களை தவிர்க்கவேண்டும்

செல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படியுங்கள்!!

இன்றைய தலைமுறையினரில் ஸ்மார்ட்போன் உபயோகிக்காதவர்கள் மிக குறைவு. ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில் செல்பி எடுக்காதவர்களே இல்லை.

தொடர்ந்து அடிக்கடி செல்பி எடுப்பவர்களுக்கு முக சுருக்கம் ஏற்பட்டு விரைவில் வயதானோர் போல மாறிவிட வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கிலாந்தினை சேர்ந்த மருத்துவர் சைமன் ஜோகாய், தற்போது செல்பி எடுப்பவர்கள் அதிகம். அடிக்கடி செல்பி எடுக்கும் போது போனில் உள்ள நீல நிற ஒளியானது தோலை பாதிக்கும் தன்மை உடையது.

மொபைல் போனில் இருந்து வெளிவரும் எலக்ரோ மேக்னடிக் கதிர்கள் டி.என்.ஏ வை பாதிப்பதால், நாளடைவில் தோல் சுருக்கம் ஏற்பட்டு விரைவில் வயதானோர் போல் காட்சியளிப்பர்.

இதற்கு முகத்தினை பாதுகாப்பாக வைப்பதற்கு ஒரு அமைப்பினை ஏற்படுத்த வேண்டும். ஆனால், நாம் உபயோகப்படுத்தும் சன்ஸ்கீரீன்கள் முகத்திற்கு பாதுகாப்பை தராது எனக் கூறியுள்ளார்.