தற்கொலைக்கு சென்றவரை சாமர்த்தியமாக பேசி காப்பாற்றிய இளைஞர் : குவியும் வாழ்த்துக்கள்!!

தற்கொலை எண்ணம் கொண்டிருந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு நபரிடம் சரளமான உருது மொழியில் பேசி அவரை காப்பாற்றிய ஒருவர் கடவுளாக மாறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஒரு கட்டுமான தளத்தில், அதிக பளுவான பொருட்களை உயரத்துக்கு எடுத்துச் செல்ல பயன்படும் 65 அடி உயரமுள்ள ஒரு கிரேன் இயந்திரத்தின் மீது பாகிஸ்தான் நபர் ஏறியவுடன், சம்பவ இடத்துக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த இஃப்ஷால் ஜஃபர் என்ற இந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உடனடியாக தானும் அந்த கிரேன் இயந்திரத்தின் மீது ஏறி, தங்கள் இருவருக்கும் பொதுவான மொழியான உருதுவில் அவருடன் உரையாடியுள்ளார்.

அதன் பின்னர், தற்கொலை எண்ணம் கொண்டிருந்த அந்நபர் கீழே இறங்க சம்மதித்துள்ளார். பின்னர், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கேண்டனீஸ் மொழியிலும் சரளமாக பேசும் பொலிஸ் கான்ஸ்டபிளான ஜஃபர், தனது பொலிஸ் பயிற்சி முறைகளை தான் பின்பற்றியதாக கூறினார்.

இது குறித்து ஆப்பிள் டெய்லி ஊடகத்திடம் கருத்து தெரிவித்த அவர் கூறுகையில், ”நாங்கள் பொலிஸ் அகாடமியில் கற்ற உத்திகளை நான் கையாண்டேன். கிரேன் இயந்திரத்தின் மீதேறிய நபரிடம் நான் தாய் மொழியில் பேசியதும், அவர் பாதுகாப்பாக உணர்ந்ததாக நினைக்கிறேன் ” என்று தெரிவித்தார்.

பொலிஸ் துறையில் ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்துக்கு முன்பு பணியில் சேர்ந்த இந்த இளைஞர்தான், இம்மாவட்டத்தில் பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட ஒரே பொலிஸ் அதிகாரி என அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த சம்பவத்தினை தொடர்ந்து அவருக்கு பல்வேறு நாடுகளில் இருந்து பலர் தமது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அத்துடன் இந்த செயற்பாட்டின் பின்னர் 20 வயதான ஹாங்காங் நாட்டினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சமூகவலைத்தளத்தில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகப்புக்கு செல்ல

கால்கள் இல்லாத போதும் குழந்தை பெற்ற பிரித்தானிய பெண் : வியப்பில் வைத்தியர்கள்!!

பிரித்தானியாவில் கால்கள் ஊனமான (பிறவிக் கோணல்) பிறந்த பெண் ஒருவர் தாயாக மாறிய சம்பவம் வைத்தியர்களை பிரமிக்க வைத்துள்ளது.

26 வயதான Lizzy Georgeson என்ற பெண்ணே இவ்வாறு குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். கால்கள் ஊனமுற்ற குறித்த பெண், மேலதிக எடையை தாங்கி குழந்தையை பெற்றுக் கொள்வது குறித்து வைத்தியர்கள் கவலை தெரிவித்து வந்துள்ளனர்.

பிரித்தானியாவில் உள்ள முதல் இரண்டும் கால்களையும் இழந்த மொடல் எனவும் குறித்த பெண்ணை அழைப்பார்கள்.

இது தொடர்பில் குறித்த பெண் பின்வருமாறு தெரிவித்துள்ளார், கர்ப்பகாலம் முழுவதும் சக்கர நாற்காலியிலேயே நான் சென்றேன். எனக்கு இடுப்பு பகுதிகளில் அதிக வலி இருந்தது. ஆனால் என் அழகிய ஹென்றியை பெற்றெடுத்த பிறகு இந்த வழிகள் தொடர்பில் நான் கவலை கொள்ளவில்லை என அவர் கூறியுள்ளார்.

கர்ப்பம் தொடர்பில் Lizzy Georgeson மற்றும் அவரது கணவர் Lewis சந்தோசமடைந்துள்ளனர். குறித்த குழந்தை ஆரோக்கியமாக பிறந்துள்ளது.

பிறவியில் ஊனத்துடன் வாழ்ந்தவர் தனது வாழ் நாளில் 36 சத்திர சிகிச்சைகளுக்கு முகம் கொடுத்துள்ளார் என கூறப்படுகின்றது.

பாண்டிருப்பு இளைஞன் திடீர் மரணம் : கல்முனையில் நடந்த சோகம்!!

பாண்டிருப்பை சோ்ந்த நிலக்க்ஷன்(நிலா) என்பவர் டெங்கு காய்ச்சல் காரணமாக மயங்கி விழுந்த வேளையில் தலையில் பலமாக அடிபட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனாலும் இன்று சிகிச்சை பலனலிக்காத நிலையில் எதிர்பாராதவாறு மரணமடைந்தார்.

இவரது இழப்பு கல்முனை பிரதேசத்தில் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில தினங்களாக இவர் பூரண குணமடைய வேண்டும் என்று நண்பர்களும், உறவினர்களும் சமூக வலைத்தளங்கள் மூலமும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த வரும் சில நாட்களுக்கு அடை மழை : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

நாட்டின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மழையுடன் கூடிய காலநிலை நாளை வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான இடங்களில் பிற்பகல் இரண்டு மணியின் பின் இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்யும் என்பதால் மக்களை அவதானமான இருக்குமாறு தெரிவித்துள்ளனர்.

மத்திய, வடமத்திய, வடமேற்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளிலும் காலி மாவட்டத்திலும் மணிக்கு சுமார் 50 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பெய்யும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு மற்றும் வடமேற்கு கரையோரங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று பெய்த கடும் மழை காரணமாக கொழும்பில் பல வீதிகள் நீரில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் பலரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியிருந்தனர்.

மேலும் மத்திய மாகாணத்திலும் காற்றுடன் கூடிய மழை பெய்வதன் காரணமாக, குறிப்பாக நானுஓயா – கிளாரண்டன் மேற்பிரிவு தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புக்கள் சேதமடைந்தன.

பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய மாகாணங்களின் பல இடங்களிலும் இடி மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்பதால் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.

32 வருடங்களின் பின்னர் இலங்கையிலுள்ள பெற்றோரை தேடும் வெளிநாட்டு பெண்!!

32 வருடங்களுக்கு பின்னர் தனது சொந்த பெற்றோரை தேடி பெண்ணொருவர் வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு தம்பதிகளால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட பெண்ணொருவரே, தனது பெற்றோரை தேடி சுவீடனிலிருந்து வருகை தந்துள்ளார்.

ஷ்யாமலி என பெயர் கொண்ட ஆறு மாத குழந்தை, சுவீடன் தம்பதிகளுக்கு தத்துப் பிள்ளையாக வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வெளிநாட்டு தம்பதிகள் குழந்தையை சுவீடனுக்கு கொண்டு சென்று வளர்த்துள்ளனர். அவர் கடந்த 32 வருடங்களாக சுவீடனில் வளர்ந்துள்ளார்.

எனினும் தத்துப் பிள்ளைக்கு அறிந்து கொள்ளும் வயது வந்தவுடன், அவரின் சொந்த பெற்றோர் தொடர்பான தகவலை தெரிவித்துள்ளனர். அந்த தகவல்கள் உள்ளடக்கப்பட்ட ஆவணங்கள் அவரிடம் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த பெண் தற்போது சுவீடனில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணத்திற்காக இலங்கை வந்துள்ளார். எனினும் அவர் தனது பெற்றோரை தேடியே இலங்கை வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த பெண்ணின் தாயாரின் பெயர் காமர தேவாஆராச்சி ஸ்ரீயானி விஜேசிங்க, தந்தையின் பெயர் நிமல் கருணாதிலக்க மற்றும் அவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். ஷாந்த குமார மற்றும் அசங்க ராஜ்ய என்பது அவர்களின் பெயராகும்.

இவர்களின் சொந்த இடம் பேராதனையாகும். 1985ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் திகதி குருணாகல் வைத்தியசாலையில் அவர் பிறந்துள்ள நிலையில் ஷ்யாமலி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அந்த பெண் இந்த நாட்டிற்கு வருகை தந்து ஒரு மாதமாக தனது பெற்றோரை தேடிய போதும், அவரது முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

பேராதனைக்கு சென்று தனது பெற்றோரை தேடியுள்ளார். அவர்கள் வேறு இடத்திற்கு குடியேறி சென்றுள்ள நிலையில் அனுராதபுரத்தில் தங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

அவர் கடந்த ஒரு மாதமாக இலங்கைக்கு வருகை தந்து மத்துகம பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கும் ஹோட்டலில் தங்கியுள்ளார்.

இந்த இளம் பெண் ஹோட்டலுக்கு வந்து தனது பெற்றோரை கண்டுபிடித்து தருமாறு தன்னிடம் உதவி கோரியதாக ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் பெற்றோரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு பெற்றோரை பார்ப்பதற்கு ஆசையாக உள்ளதென தெரிவித்துள்ளார்.

சில நேரங்களில் தந்தை உயிரிழந்திருக்கலாம் என தான் நம்புவதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். எனினும் தாயார் உயிருடன் இருப்பார் என நம்பவதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இரவில் ஒளிரும் பச்சைத்தவளை ஆஜென்டினாவில் கண்டுபிடிப்பு!!

இரவு நேரங்களில் ஔிரும் புதிய வகை பச்சைத்தவளை இனம் அர்ஜென்டினாவில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பகற்பொழுதுகளில் பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் தவளை தென்படுகிறது. ஆனால், இரவு நேரங்களில் அதன் கண்களும், உடலில் உள்ள புள்ளிகளும் அடர் நீல நிறத்திலும் மற்ற பகுதிகள் புளோரசென்ட் பச்சை வண்ணத்திலும் மின்னுகின்றன.

குறுகிய அலை நீளம் கொண்ட ஒளியை உறிஞ்சி, பின்னர் நீண்ட அலை நீளத்தில் ஒளியை உமிழ்வது புளோரசென்ட்டின் இயல்பு. அந்த இயல்பு இந்த அரிய வகை தவளையிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பவளப்பாறைகள், மீன், சுறாக்கள், கடல் ஆமை போன்ற பெரும்பாலான கடல்வாழ் உயிரினங்களிடத்திலும், நிலத்தில் வாழும் சில வகை கிளிகள் மற்றும் தேள்களிடம் மட்டுமே புளோரசென்ட் இயல்பு இருந்தது முன்பு அறியப்பட்டது.

தற்போது தவளையிடமும் அந்த இயல்பு இருப்பது விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மனிதனைத் தவிர, பிற உயிரினங்களுக்கு இந்த இயல்பு ஏன் இருக்கிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். எனினும், பாலின ஈர்ப்பு, தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட காரணங்களாக இருக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

தென் அமெரிக்க நாடான சூரி நாமில் ஏற்கனவே ஊதா நிறத்துடன் மின்னும் தவளை 2006 ஆம் ஆண்டு மத்தியில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விமானத்தில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தபோது ஹெட்போன் வெடித்து பெண் முகத்தில் தீக்காயம்!!

பெய்ஜிங்கிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, பெண் ஒருவரின் ஹெட்போன் வெடித்து, அவரது முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

விமானப் பயணங்களின் போது பேட்டரியால் இயங்கும் சாதனங்களின் அபாயங்கள் குறித்து எச்சரிக்கப்பட்டிருந்தும், இந்தப் பெண் விமானத்தில் ஹெட்போன் மூலம் பாட்டுக்கேட்டுக் கொண்டு பயணித்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த பெப்ரவரி மாதத்தில் நடந்துள்ள போதும், இந்த செய்தியை தற்போது தான் அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புக் கழகம் வெளியிட்டுள்ளது.

குறித்த பெண் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த போது பயங்கர சத்தத்துடன் ஹெட்ஃபோன் வெடித்துள்ளது. இதனால் அவர் முகத்தில் கடும் எரிச்சல் ஏற்பட்டு, தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. உடனேயே ஹெட்போனைக் கழற்றி தரையில் வீசியுள்ளார்.

எவ்வாறாயினும், ஹெட்போன் வெடித்த சம்பவம் இதுவே முதல் முறை என அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புக் கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஹெட்போன் எரிந்ததால் ஏற்பட்ட பொசுங்கிய நாற்றத்துடனேயே பயணிக்க நேரிட்டுள்ளது. இதனால் பல பயணிகளுக்கு மூச்சுத்திணறலும் இருமலும் ஏற்பட்டதாக அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு கழகம் தெரிவித்துள்ளது

வாகன நெரிசல் காரணமாக நாளொன்றிற்கு வருமானத்தில் 500 மில்லியன் ரூபா நட்டம்!!

வாகன நெரிசல் காரணமாக நாளொன்றிற்கு 500 மில்லியன் ரூபா வருமானத்தை இழப்பதற்கு நேரிட்டுள்ளதாக மொறட்டுவை பல்கலைக்கழக போக்குவரத்து ஆராய்ச்சிப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அமல் குமாரகே சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுப் போக்குவரத்து சேவையை வலுவூட்டுவதே இந்த நிலைமையை சீர் செய்வதற்கான ஒரே வழி என சிரேஷ்ட விரிவுரையாளர் கூறியுள்ளார்.

பொலிஸ் அறிக்கைகளின் பிரகாரம் நாளாந்தம் கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது.

சுமார் 5 இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் கொழும்பிற்குள் பிரவேசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் 450000 இற்கும் அதிகமானவை தனியார் வாகனங்கள் எனறும் பொலிஸ் அறிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பொதுப் போக்குவரத்து சேவை அல்லது தனியார் வாகனங்கள் மூலம் நாளொன்றிற்கு 19 இலட்சத்திற்கும் அதிகமானோர் கொழும்பிற்குள் பிரவேசிக்கின்றனர்.

இதன் காரணமாக மருதானை, பொரள்ளை சந்தி, கனத்தை சுற்றுவட்டம், நாராஹேன்பிட்டி பகுதிகளில் தொடர்ந்தும் வாகன நெரிசல் ஏற்படுவதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பிரதி பொலிஸ் மாஅதிபர் பாலித பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வாகன நெரிசல் ஏற்படுவது தொடர்பில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்கவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

வீதிகளை விஸ்தரிப்பதன் ஊடாக மாத்திரம் வாகன நெரிசலைத் தவிர்ப்பதற்கான தீர்வைக் காணமுடியாதென அமைச்சின் செயலாளர் கூறினார்.

பொதுப் போக்குவரத்து சேவையில் ரயில் மற்றும் பஸ் சேவைகளை விரிவுபடுத்துவதன் ஊடாக வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்பொருட்டு 1.5 பில்லியன் ரூபா ஜப்பான் நிதியுதவியுடன் பொதுப் போக்குவரத்து சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

எஜ­மா­னர்­களால் கொடுமை : பாழ­டைந்த வீட்டில் இரு வாரங்களாக தங்­கி­யி­ருந்த பெண் உண­வின்றி உயி­ரி­ழந்தார்!!

பணிப்­பெண்­ணாக மத்­திய கிழக்கு நாடொன்­றுக்குச் சென்ற 22 வயது யுவதி ஒருவர் தாம் கட­மை­யாற்­றிய வீட்டின் உரி­மை­யா­ளர்­களால் கொடு­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தனை தாங்க முடி­யாமல் அந்த வீட்­டி­லி­ருந்து தப்பிச் சென்று அப்­பி­ர­தே­சத்தில் தனி­யா­க­விருந்த பாழ­டைந்த வீடு ஒன்­றுக்குள் இரண்டு வாரங்கள் எது­வித உண­வு­மின்றி உயி­ரி­ழந்த சம்­ப­வ­மொன்று குறித்த தகவல் நீர்­கொ­ழும்பு திடீர் மரண விசா­ரணை அதி­காரி டாக்டர் கீர்த்தி சிரி­ஜ­யந்த முன்­னி­லையில் நடை­பெற்ற மரண விசா­ர­ணையில் தெரிய வந்­துள்­ளது.

பழைய மஸ்­கெ­லி­யாவைச் சேர்ந்த கருப்­பையா தர்­ஷனி என்ற யுவ­தியே இவ்­வாறு உயி­ரி­ழந்­த­வ­ராவார். இந்த யுவதி இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் பணிப்­பெண்­ணாக குவைத்­துக்குச் சென்­றுள்ளார்.
இவர் குவைத்­தி­லுள்ள வீட்­டுக்குச் சென்ற நாள் முதல் வீட்டு உரி­மை­யா­ளர்­களால் கொடு­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

இந்த யுவதி தன்னை எப்­ப­டி­யா­வது மீண்டும் இலங்­கைக்கு அழைத்துக் கொள்­ளும்­படி தனது வீட்­டா­ருக்கும் இலங்கை தூத­ர­கத்­துக்கும் பல­முறை அறி­வித்தும் எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்­லை­யென மரண விசா­ர­ணை­யின்­போது தெரி­ய­வந்­துள்­ளது.

பின்னர் ர­க­சி­ய­மாக வீட்டை விட்டு வெளி­யே­றிய இந்த யுவதி அதே பிர­தே­சத்தில் கைவி­டப்­பட்ட வீடொன்றில் மறைந்­தி­ருந்­துள்ளார்.

சுமார் இரண்டு வாரங்கள் உணவோ தண்­ணீரோ இல்­லாத நிலையில் இந்த யுவதி பட்டினியால் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இம் மரணம் தொடர்பாக மரண விசாரணை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி பகிரங்க தீர்ப்பளித்தார்.

ஆடம்பர காரை கழுதைகள் மூலம் இழுத்துச் சென்று சேர்விஸ் சென்டரைக் கலங்கடித்த வாடிக்கையாளர்!!

 
இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், தனது ஆடம்பர கார் பழுதடைந்ததால் சேர்விஸ் சென்டருக்கு அக் காரை கழுதைகள் மூலம் இழுத்துச் சென்றுள்ளார்.

கார் கம்பெனிகள் என்னதான் தரமான காரைத் தயாரித்தாலும், சேர்வீஸ் விஷயத்தில் சொதப்பினால் அவ்வளவு தான். வாடிக்கையாளர் மிகப் பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார். புதுசா கார் வாங்கினீங்களே… எப்படி இருக்கு?’ என கார் வாங்கிய ஒருவரிடம் கேட்டால், ‘கார்லாம் நல்லாத்தான் இருக்கு… ஆனா ஏண்டா வாங்கினோம்னு இருக்கு’ என நூடுல்ஸாக நொந்துபோகும் வாடிக்கையாளர் களை நீங்கள் பார்த்திருக்கலாம்.

அண்மையில் இப்படித்தான் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கார் உரிமையாளர், கழுதைகளை வைத்து தன் காரைக் கட்டி இழுத்து தெருத்தெருவாக ஊர்வலம் சென்று தன் வெறுப்பின் உச்சத்தைக் காட்டியிருக்கிறார்.

லூதியானாவைச் சேர்ந்த ஒருவர், 2015ல் ஸ்கோடா நிறுவனத்தின் ஒக்டேவியா காரை புக் செய்திருக்கிறார். ஒக்டேவியா கார்கள் கட்டுமானத்தரத்துக்கும், ஸ்டைலுக்கும், ஃபன் டிரைவிங்குக்கும் பெயர் பெற்றவை. பாறை போன்ற இதன் டீரடைன குவாலிட்டியில் மயங்கித்தான் இதை புக் செய்தார் அவர்.

‘‘ஸ்கோடா கார்களின் இன்ஜின் ரீஃபைன்மென்ட் அவ்வளவு பிரமாதமாக இருக்கும் என்று நண்பர்கள் எல்லாரும் சொன்னார்கள். ‘அம்பாஸடரே நெளிந்து போகும்… அந்தளவு ஸ்ட்ரோங்காக இருக்கும்’ என்றார்கள். ரொம்ப ஆச்சரியப்பட்டுப் போனேன். அதனால்தான் சுமார் 25 இலட்சம் இந்திய ரூபா கொடுத்து ஒக்டேவியாவை புக் செய்தேன். ஆனால், நான் ஒரு மிகப் பெரிய தவறு செய்துவிட்டேன்.

இந்த ஆக்டேவியாவோடு சேர்த்து இரண்டு கழுதைகளையும் வாங்க மறந்து விட்டேன்’’ என மனம் வெதும்பிச் சொல்லியிருக்கிறார். கார ணம், ஆக்டேவியா அடிக்கடி பிரேக் டவுன் ஆவதுதானாம். வாரத்துக்கு இரண்டு முறை இது பிரேக்டவுன் ஆகி வீதிகளில் நின்று, பெரிய அவஸ்தைக்குள்ளாகி விட்டாராம் இவர்.

இதனால், கடுப்பான அவர், மீண்டும் சர்வீஸ் சென்டருக்குச் சென்றார்; எப்படி? இரண்டு கழுதைகளை வாடகைக்கு வாங்கி, கயிறு மூலம் கழுதைகளை விட்டு ‘டோ’ பண்ணி, சர்வீஸ் சென்டருக்கு காரை இழுத்துச் சென்றிருக்கிறார். இதைப் பார்த்துத் திடுக்கிட்ட சர்வீஸ் அதிகாரிகள், பிரச்னையை மேலிடத்துக்குக் கொண்டு சென்றார்கள்.

‘‘பிரேக் பிடித்தால் லொரியில் இருந்து வருவதுபோல் ஏதோ புதுமையான சத்தமெல்லாம் வருகிறது. சர்வீஸ் சரியில்லை; வாரன்ட்டி தர மறுக்கிறார்கள்; இன்ஜின் சரியில்லை’’ என்று குறைகளாக அடுக்கிக் கொண்டே செல்கிறார் இவர்.

கார் நிறுவனம் விளக்கம்

இது பற்றி ஸ்கோடாவின் டெக்னிக்கல் டீமில் இருந்து இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். ‘‘இந்த கஸ்டமர், காரின் இயல்பிலிருந்து மீறி ஏதோ மாடிஃபிகேஷன் செய்திருக்கிறார். அதனால்தான் இப்படிப்பட்ட பிரேக் டவுன்; டேமேஜ் எல்லாம். கம்பெனி சர்வீஸை மீறி ஆஃப்டர் மார்க்கெட் மூலம் அவர் காரில் கை வைத்ததால், எங்களால் வாரன்ட்டி தர இயலாது.

மேலும் அது எந்த மாதிரி தவறு என்பதைக் கண்டறியவும் முடியவில்லை. நாங்கள் எப்போதுமே கஸ்டமர் சர்விஸுக்குத்தான் முன்னுரிமை கொ டுப்போம். விரைவில் இவரது காரைத் திருப்தியாக சேர்வீஸ் செய்து தருவோம்!’’ என அறிக்கை விட்டிருக்கிறார்கள்.

இரவில் நீண்ட நேரம் செல்போனில் பேசிய மனைவி : ஆத்திரத்தில் கொலை செய்த கணவன்!!

மனைவி தொடர்ந்து இரவில் செல்­போனில் பேசி­யதால் ஆத்­தி­ர­ம­டைந்த கணவன் மனை­வியை கொலை செய்த சம்ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது. தமி­ழ­கத்தின் குன்­றத்தூர், திரு­நா­கேஸ்­வரம், துரை­சாமி வீதியைச் சேர்ந்­தவர் சுரேஷ்­குமார் முத்­து­ராமன் (31), பெயின்டர். இவ­ரது மனைவி தன­லட்­சுமி (20). அதே பகு­தி­யி­லுள்ள அலங்­காரக் கடையில் பணி­பு­ரிந்து வந்தார்.

இவர்­க­ளுக்கு கடந்த 10 மாதத்­துக்கு முன் திரு­மணம் நடந்­துள்­ளது. இந்­நி­லையில் கடந்த சில நாட்­க­ளாக தன­லட்­சுமியின் செல்­போ­னுக்கு அடிக்­கடி அழைப்பு வந்­த­தா­கவும், அப்­போ­தெல்லாம் அவர் யாரும் இல்­லாத இடத்­துக்கு செல்­போனை எடுத்துச் சென்று நீண்ட நேரம் பேசி­ய­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

இது­கு­றித்து சுரேஷ்­குமார் கேட்­ட­போது, சரி­யான பதி­ல­ளிக்­க­வில்லை எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதனால், சுரேஷ்­கு­மா­ருக்கு மனைவி மீது சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில், கடந்த வாரம் தன­லட்­சு­மியின் செல்­போ­னுக்கு அழைப்பு வந்­துள்­ளது.

அப்­போது, அவர் போனுடன் வெளியே சென்று நீண்ட நேரம் பேசி­யுள்ளார். இதனால், ஆத்­தி­ர­ம­டைந்த சுரேஷ்­குமார், வெளியே சென்று, ‘இந்த நேரத்தில் யாரிடம் போனில் பேசு­கிறாய்,’ என கேட்­டுள்ளார்.

அதற்கு, ‘என்­னுடன் வேலை செய்யும் தோழி­யிடம் பேசு­கிறேன்,’ என தன­லட்­சுமி கூறி­யுள்ளார். உடனே, ‘போனைக் கொடு நான் பேசு­கிறேன்,’ என சுரேஷ்­குமார் தன­லட்­சு­மி­யி­ட­மி­ருந்து செல்போனை பிடுங்­கி­யுள்ளார். அவர், போனைக் கொடுக்க மறுத்­ததால் இரு­வ­ருக்கும் இடையே கடும் வாக்­கு­வாதம் ஏற்­பட்­டுள்­ளது.

இதில், ஆத்­தி­ர­ம­டைந்த சுரேஷ்­குமார், வீட்­டினுள் சென்று சமை­ய­ல­றையிலிருந்த கத்­தியை எடுத்து வந்து தன­லட்­சு­மியை சர­மா­ரி­யாக குத்­தி­யுள்ளார். இதில், தன­லட்­சுமி இரத்த வெள்­ளத்தில் கீழே வீழ்ந்­துள்ளார். இத­னை­ய­டுத்து, அங்­கி­ருந்து சுரேஷ்­குமார் தப்பி ஓடி­யுள்ளார்.

தன­லட்­சு­மியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி­ச்சென்ற அக்கம் பக்­கத்­தினர், அவரை மீட்டு குரோம்­பேட்டை வைத்­தி­ய­சா­லைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்­றுள்­ளனர். ஆனால், செல்லும் வழி­யி­லேயே தன­லட்­சுமி பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­துள்ளார்.

இது­கு­றித்து, குன்றத்தூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, தனலட்சுமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், தப்பியோடிய சுரேஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வீட்டுக்கூரை மீது காரை நிறுத்திய ஓட்டுநர்!!(வீடியோ)

வீதி விபத்துக்கள் சில நடந்துள்ள விதத்தைப் பார்த்தால் விநோதமாக இருக்கும். அவ்வாறானதொரு விபத்து சீனாவில் இடம்பெற்றுள்ளது.

வீதியில் வேகமாக பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த வீட்டின் கூரை மீது ஏறி நின்றது.

காருக்கு குறுக்காகச் சென்ற முச்சக்கரவண்டி மீது மோதாமலிருக்க திடீரென காரைத் திருப்ப முயன்றுள்ளார் ஓட்டுநர்.

இதன்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியோரமாய் சற்றுத் தாழ்வாக இருந்த வீட்டின் கூரை மீது ஏறிவிட்டது.

வைத்­தி­ய­சா­லையில் நோயா­ளிக்கு துணை­யாகவிருந்த பெண் ஒரு­வரைக் காதல் வலையில் வீழ்த்தி பணம், தங்க நகை மோசடி!!

ஹோமா­கம வைத்­தி­ய­சா­லையில் நோயாளி ஒரு­வ­ருக்கு துணை­யாக தங்­கி­யி­ருந்த பெண் ஒரு­வரை காதல் வலையில் வீழத்தி அவ­ரி­ட­மி­ருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிச் சென்­ற­தாக அதே வைத்­தி­ய­சா­லையில் நோயாளி ஒரு­வ­ருக்கு துணை­யாக இருந்த நப­ரொ­ருவர் மீது முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக கொட்­டாவ பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

மஹ­ர­கம வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த தனது தாயை கவ­னித்துக் கொள்­வ­தற்­காக அங்கு தங்­கி­யி­ருந்த 52 வய­தான பெண் ஒருவர், தனது தாய் தங்­கி­யி­ருந்த கட்­டி­லை­ய­டுத்து தங்­கி­யி­ருந்த நோயா­ளியை கவ­னித்துக் கொள்­வ­தற்­காக இருந்த 32 வய­தான ஆண் ஒரு­வ­ருடன் காதல் தொடர்பை பேணி­யுள்ளார்.

இந்த நிலையில் இவர்கள் இரு­வரும் விடுதி ஒன்­றுக்கு சென்று உல்­லா­ச­மாக இருந்­துள்­ளனர். அதன்­போது குறித்த ஆண், தான் நாளை திரு­மண நிகழ்­வொன்றில் கலந்­துகொள்ளவுள்­ள­தா­கவும் அதற்கு தன்­னிடம் போதி­ய­ளவு பணம் இல்­லை­யெ­னவும் அப்­பெண்­ணிடம் தெரி­வித்­துள்ளார்.

இதன்போது அப்பெண் தன்­னி­ட­மி­ருந்த 10 ஆயிரம் ரூபா பணத்­தினை அவ­ரிடம் கொடுத்­த­துடன் தங்கச் சங்­கி­லி­யையும் கொடுத்­துள்ளார் என தெரி­ய­வந்­துள்­ளது.

அவற்றைப் பெற்­றுக்­கொண்ட அந்­நபர், இரண்டு நாட்­களில் நோயா­ளியை கவ­னித்துக் கொள்­வ­தற்­காக மீண்டும் வைத்­தி­ய­சா­லைக்கு திரும்­பி­வ­ரு­வ­தாக அப்­பெண்­ணிடம் உறு­தி­ய­ளித்­து­விட்டு சென்­றி­ருந்த போதிலும் அவர் திரும்­பி­யி­ருக்­காத கார­ணத்­தினால் குறித்த பெண் தனது 19 வய­தான மக­னுடன் இது­தொ­டர்பில் முறைப்­பாடு செய்ய கொட்­டாவ பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்­றுள்ளார்.

எனினும், அவ­ரது காதலன் பற்­றிய எவ்­வித தக­வல்­க­ளையும் அறிந்­தி­ராத கார­ணத்­தினால் முறைப்பாட்டை விசாரிக்க முடியாதெனவும், அவரை பற்றிய தகவல்களை தெரிந்துகொண்டு, மீண்டும் வந்து முறைப்பாடு செய்யுமாறும் கொட்டாவ பொலிஸார் அப்பெண்ணுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

நடைபிணங்களாக இருப்பதை விட குடும்பத்தோடு முள்ளிவாய்க்காலில் இறந்திருக்கலாம் : கதறி அழும் உறவுகள்!!

எங்கள் பிள்ளைகளை தொலைத்து விட்டு நடமாடும் பிணங்களாக அலைகின்றோம். இந்த கொடுமையை அனுபவிப்பதைவிட குடும்பமாக அன்று முள்ளிவாய்க்காலில் இறந்திருக்கலாம் என்று காணாமல் போனோரின் உறவினர்கள் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

காணாமல் போனோரின் உறவுகள் ஒன்றிணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராடடம் இன்று 9வது நாளாகவும் தொடர்கின்றது.

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். ஆனால் தானாக காணாமல் போனோரை தேடுகின்ற நபர்களாக எம்மை சித்தரிக்கின்றனர்.

எமது பிள்ளைகளை எம்மிடம் தாருங்கள். எமது பிள்ளைகளை தொலைத்து விட்டு நடமாடும் பிணங்களாக அலைகின்றோம். சொல்ல முடியாத வேதனைகளை அனுபவிக்கின்றோம். இந்த வேதனையை விட அன்று முள்ளிவாய்க்காலில் யுத்தத்தில் குடும்பமாக இறந்திருக்கலாம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கதறி அழுதனர்.

உயிரை பணயம் வைத்து பெண்ணை காப்பாற்றிய இலங்கையருக்கு கௌரவம்!!

பெண் ஒருவரை காப்பாற்றியமை தொடர்பில் தென் கொரியாவில் இலங்கையர் ஒருவருக்கு நேற்றைய தினம் மனிதாபிமான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக, எல்.ஜீ.பவுண்டேசன் தெரிவித்துள்ளது.

கட்டபில்லா கெட்டியகே நிமலசிறி என்ற 39 வயது இலங்கையருக்கே இந்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் தீப் பற்றிக் கொண்டிருந்த வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் அலறல் சத்தத்தை கேட்ட நிமலசிறி, விரைந்து செயற்பட்டு, அந்த வீட்டுற்குள் குதித்து பாதிக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றியுள்ளார்.

இந்த சம்பவத்தில் அப் பெண்ணை பத்திரமாக காப்பாற்றிய அவர் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைக் கேள்வியுள்ள பவுண்டேசன் சம்பந்தப்பட்ட இலங்கையருக்கு 30 மில்லியன் பணம் ($26,200) வழங்கி கௌரவித்துள்ளதோடு, இந்த விருதை பெறும் முதல் வெளிநாட்டவர் இவர் எனவும் தெரிவித்துள்ளது.

டெங்கு காய்ச்சல் (Dengu Fever) நாம் செய்யவேண்டியவை!!

 
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளும் கீழே தரப்பட்டுள்ளன..