ஜெயலலிதா சமாதியில் தீபா அமர்ந்ததன் பின்னணி என்ன?

ஜெயலலிதாவின் சமாதி முன்னிலையில் ஜெ.தீபா தியானம் மேற்கொண்டுள்ளது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இதுபோன்று தான் பன்னீர் செல்வமும் ஜெயலலிதாவின் சமாதியில் இருந்தே தனது ஆட்டத்தை ஆரம்பித்தார்.

அவர் ஆரம்பித்து வைத்த அந்த ஆட்டத்தால், இன்றைய தமிழக அரசியல் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் தனது கணவரோடு சென்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை வைத்து அங்கு தியானத்தில் அமர்ந்துள்ளார்.

வரவிருக்கின்ற ஆர்கே நகர் தேர்தலில், போட்டியிடுவேன் என அறிவித்துள்ள தீபா, அதற்காக ஆசிர்வாதம் வாங்குவதற்காக ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்றதாக தீபாவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், பன்னீர் செல்வத்தை போன்று தீபாவும் ஏதேனும் பூதாகரத்தை கிளப்புவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கிளிநொச்சியில் கடும் மழை : தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின!!

 
கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் பெய்து கடும் மழை காரணமாக பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. பிற்பகல் இரண்டு மணி முதல் நான்கு முப்பது மணி வரை தொடர்ச்சியாக கடும் மழை பெய்தது. வீதிகளில் வெள்ளம் நிரப்பி வழிந்ததோடு, பல கிராமங்களில் பல பகுதிகள் வெள்ளத்திலும் மூழ்கியது.

குறிப்பாக மீள்குடியேற்றத்தின் போது வழங்கப்பட்ட ஒரு வருட ஆயுளை கொண்ட தற்காலிக வீடுகளில் வசித்த மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.

அத்தோடு காலபோக நெற் செய்கையின் அறுவடை தற்போது முழுமையாக நிறைவு பெறாத நிலையில் விவசாயிகள் பாதிப்புக்களுக்குள்ளாகியதோடு, அறுவடை செய்த நெல்லை உலர வைக்க முடியாது திண்டாடி வருகினன்றனர்.

உலகின் அதிக விலை கொண்ட கோப்பி வகை நுவரெலியாவில்!!

உலக சந்தையில் அதிக விலையை பெற்றுக்கொள்ளக் கூடிய ஏற்றுமதி பயிர்செய்கை இலங்கையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இவ்வாறான பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முழுமையான ஆதரவு வழங்கப்படும் என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் 15000 கோப்பி கன்றுகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உலகில் அதிக விலைக்கு வழங்கப்படும் எரபிக்க எனப்படும் கோப்பியை கடல் மட்டத்திலிருந்து 2000 அடி உயரத்திலுள்ள நுவரெலியாவில் வளர்க்க முடியும்.

நுவரெலியா மாவட்டமே அதற்கு பொருத்தமான இடமாக கருதப்படுகின்றது. இந்த நிலையில் அதனை வளர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

நாடு முழுவதும் கோப்பி பயிர் செய்கையை மேற்கொள்வதற்கு 30 இலட்சம் கோப்பி கன்றுகள் அவசியமாக உள்ளதென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்களின் மகத்தான கண்டுபிடிப்பு : கொரியாவில் அங்கீகாரம்!!

பயன்பாட்டிலிருந்து நீக்கப்படும் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் பாகங்களை பயன்படுத்தி மின்சார முச்சக்கர வண்டி தயாரிக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றினால் இந்த மின்சார முச்சக்கர வண்டி தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த முச்சக்கர வண்டியை எலெக்ட்ரை என்ற அடையாளப்படுத்தப்படுகிறது. காற்று மாசுவை குறைக்கும் வகையில் முகத்துடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சிறிய அளவிலான வர்த்தகர்களுக்காக மிகவும் பொருத்தமான வடிவத்தில் இந்த முச்சக்கர வண்டி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் இயந்திரங்கள் தொடர்பான பொறியியலாளர்கள் பிரிவின் பேராசிரியர் ரஞ்சித் அமரசிங்கவின் வழிக்காட்டலின் கீழ், இறுதியாண்டில் கல்வி கற்கும் ஹன்சிக போகஹபிட்டிய, முதித சுப்புன் மற்றும் துலாஜ் குணவர்தன ஆகிய மாணவர்களினால் இந்த முச்சக்கர வண்டி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனங்களுக்கு பயன்படுத்தும் இரண்டு பட்டரிகளில் இந்த முச்சக்கர வண்டிக்கு சக்தி வழங்கப்படுகின்ற நிலையில் மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும்.

முழுமையான திறன்களை கொண்ட இரண்டு பட்டரிகளை ஒரே முறையில் சார்ஜ் செய்வதன் பின்னர் மணிக்கு 14 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும். 300 கிலோ கிராம் நிறையுடனான பொருட்களை கொண்டு செல்ல முடியும்.

பொதுவாக முச்சக்கர வண்டியுடன் ஒப்பிடும் போது ஏற்படும் காற்று மாசுவினை 20 வீதத்திற்கு குறைத்துக் கொள்ள கூடிய வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரியாவின் புசான் நகரத்தில் இடம்பெற்ற FISITA 2016 உலக மோட்டார் வாகன காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநhட்டிற்கு இந்த மோட்டார் வாகன திட்டம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு திட்டமாக இந்த முச்சக்கர வண்டி திட்டம் காணப்பட்டுள்ளது. எனினும் முச்சக்கர வண்டியை சமர்ப்பிப்பதற்கு அவர்கள் அந்த சந்தர்ப்பத்தில் நிர்மாணித்து முடிக்கவில்லை.

ஒரு வருடத்திற்கு அதிகமாக இந்த முச்சகர வண்டி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்சில் இலங்கை தமிழர் ஒருவர் மரணம்!!

பிரான்சில் வசித்து வந்த இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சசீஸ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தொடருந்துக்காக காத்திருந்த போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், தொடருந்திலிருந்து தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த மரணம் விபத்தா அல்லது கொலையா என்பது குறித்து நாளை அந்நாட்டு பொலிஸார் அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பையில் கிடந்த பச்சிளம் குழந்தை!!

பாணந்துறை பிரதேசத்தில் வீடொன்றுக்கு எதிரில் பை ஒன்றில் இட்டு வைத்து விட்டு சென்ற பச்சிளம் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குழந்தை தற்போது பாணந்துறை கேதுமதி பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை நகருக்கு அருகில் குறுக்கு வீதி ஒன்றில் உள்ள வீட்டுக்கு எதிரில் இந்த குழந்தை நேற்று காலை மீட்கப்பட்டது. அயல் வீட்டவர் குழந்தையை கண்டு வீட்டாருக்கு அறிவித்திருந்தார்.

குழந்தை போடப்பட்டிருந்த பையில் குழந்தையின் தாயாது இரத்தம் தோய்ந்த சில ஆடைகளும் காணப்பட்டன.

குழந்தையின் தாய் யார் என்பது குறித்து இன்னும் தகவல் கிடைக்கவில்லை. எனினும் அந்த பெண்ணை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் கூறியுள்ளனர்.

வவுனியாவில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 5ஆடுகள் கைப்பற்றப்பட்டது!!

 
ஆவணங்கள் இன்றி யாழ்ப்பாணத்தில் இருந்து மட்ட க்களப்பிற்கு கொண்டு செல்லப்பட்ட 4ஆடும் ஒரு குட்டி யும் நேற்று இரவு (12.03.2017) அதிகாலை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்ட திடீர் சோனையின்போது கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட 5 ஆடுகளையும் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு கொண்டு செல்லப்பட்டபோதே வவுனியாவில் வைத்து கைப்பற்றியதுடன் சந்தேகத்தில் இரு வரையும் கைது செய்துள்ளனர்.

விசாரணைகளையடுத்து நீதவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்படவுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

உணவுக் கறைகளைப் போக்கும் சலவை இயந்திரங்கள் : பெனசொனிக் அறிமுகம்!!

இந்திய பாவனையாளர்களின் வேண்டுகோளையடுத்து, தமது சலவை இயந்திரங்களில் ‘கறி’ கறைகளைப் போக்குவதற்கென்று தனியாக ஒரு சலவை முறையை பெனசொனிக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பத்து சதவீதமானோரே சலவை இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்களில் பலரும், சலவை இயந்திரங்கள் ஆடைகளில் பிரளும் கறிகளின் கறைகளை முழுவதுமாக நீக்குவதில்லை என்று புகார் அளித்தனர்.

இதன்மீது கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் பின்னர், ‘கறி’க் கறைக்கென்றே ஒரு தனியான சலவை முறையை பெனசொனிக் நிறுவனம் அறிவித்துள்ளது.

தண்ணீர் விறப்படும் விதம் மற்றும் வெப்ப நிலை என்பவற்றின் அடிப்படையில் ஆடைகளில் படும் கறிக் கறைகளை நீக்க முடியும் என்று பெனசொனிக் தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய வசதியுடன் கூடிய பெனசொனிக்கின் ஐயாயிரம் சலவை இயந்திரங்கள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டுக்குள் சுமார் 30 ஆயிரம் இயந்திரங்களை விற்பனை செய்துவிட பெனசொனிக் தீர்மானித்துள்ளது.

மேலும், இதே வசதியுடன் கூடிய இயந்திரங்களை ஆசியா எங்கும் வினியோகிக்கவும் பெனசொனிக் முடிவுசெய்துள்ளது.

அதிக எடையால் தவிக்கும் முன்னணி நடிகைகள்!!

நடி­கர்­கள் தான் முன்­பெல்லாம் எடையை ஏற்றி இறக்கி படங்­களில் நடித்து ஆச்­ச­ர்யப்­ப­டுத்­து­வார்கள். இப்­போது சில நடி­கை­க­ளுக்கு உடம்பு போட்டு விட்­டதால் எடை ஏறி விட்­டதாம். நடி­கை­க­ளா­யிற்றே… ஆச்­சர்­யப்­ப­டு­வ­தற்கு பதில் அதிர்ச்­சிதான் ஆகி­யி­ருக்­கி­றார்கள்.

கீர்த்தி சுரேஷ்

இப்­போ­துதான் பெரிய ஹீரோக்­க­ளுடன் ஜோடி போடும் வாய்ப்­புகள் வரத் தொடங்­கு­கி­றது. அதற்­குள்­ளா­கவே பூசினாற் போல் ஆகி­விட்­டாராம் கீர்த்தி சுரேஷ். முன்னாள் நடி­கை­யான அம்­மாவின் டயட் ஆலோ­ச­னைகள் கை கொடுக்­கா­ததால் ரொம்­பவே தவிக்­கிறார் கீர்த்தி. பாடல் காட்­சி­களில் தொப்புள் காட்­டவே மறுக்­கிறார். எனவே பெரிய ஹீரோக்கள் படங்கள் இனி கிடைப்­பது சிர­மம்தான்

லட்­சு­மி­மேனன்

கும்கி மூலம் அறி­மு­க­மான லட்­சு­மி­மே­ன­னுக்கு இன்னும் இரு­பத்­தி­ரண்டு வயது கூட ஆக­வில்லை. ஆனால் ஆண்ட்டி என்று சொல்லும் அள­வுக்கு எடை­யேறி விட்­டதாம். லட்­சு­மி­மேனன் சமீ­பத்தில் நடித்து வெளி­யான றெக்க படத்தில் இது நன்­றா­கவே தெரிந்­தது. நன்­றா­கத்தான் இருந்தார். டீச்­ச­ராக இருக்கும் அம்­மாவின் அட்வைஸ் படி இடையில் நடிப்பை விட்டு படிப்பில் சில காலம் ஆர்வம் காட்­டினார். அப்­போது கல்­லூரி கேண்­டீனில் இஷ்­டத்­துக்கு சாப்­பிட்­டதில் உடல் பெருத்­து­விட்­டதாம்.

எடையை குறைக்க முயன்றும் முடி­யா­ததால் எடை­யா­லேயே விஜய்­சே­து­ப­தி­யுடன் மீண்டும் ஜோடி சேரும் வாய்ப்பை இழந்­தி­ருக்­கிறார். இப்­போ­தைக்கு பிர­பு­தே­வா­வுடன் ஜோடி சேர்ந்­தி­ருக்கும் படம் மட்­டுமே கைவசம் இருக்­கி­றது.

அஞ்­சலி

ரீ எண்ட்ரி ஆன அஞ்­ச­லிக்கு கிடைத்த கேப்பில் ஏறிய எடையே எதி­ரி­யாகி போனது. ரீ எண்ட்­ரியில் அஞ்­சலி நடித்த சக­லகலா வல்­லவன், மாப்ள சிங்கம், இறைவி படங்­களில் ஏறிய உடம்பு உறுத்­த­லாக இருக்­கவே அடுத்­த­டுத்து

படங்கள் எதுவும் இல்லை. காதலர் ஜெய்­யுடன் நடிக்கும் பலூன் படம் மட்­டுமே கையில் இருக்­கி­றது. மேரேஜ் தான் அம்­ம­ணிக்கு இருக்கும் ஒரே வழி.

அனுஷ்கா

மற்­ற­வர்கள் எல்லாம் கவ­னக்­கு­றைவால் விருப்­பப்­பட்­டதை சாப்­பிட்டு உடலை ஏற்ற, அனுஷ்கா இஞ்சி இடுப்­ப­ழகி படத்­துக்­காக ஏற்­றிய உடலை இளைக்க வைக்க முடி­யாமல் தவிக்­கிறார். படத்தின் கதைக்­காக ரிஸ்க் எடுத்து உடலை ஏற்­றினார் அனுஷ்கா. அந்த எடை இறங்க மறுக்க பாகு­ப­லி­யையும் பதம் பார்த்­தது ஓவர் வெயிட். இன்­னமும் பழைய எடைக்கு வர முடி­யாமல் தவிக்­கிறார்.

ஆண் ஒருவரை இரு தடவைகள் வல்லுறவுக்குட்படுத்தியதாக யுவதி மீது குற்றச்சாட்டு!!

ஆண் ஒருவரை இரு தடவைகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக பிரித்தானிய யுவதி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. செத் ஷீல்ட்ஸ் நகரைச் சேர்ந்த 26 வயதான கெத்தி பிரனென் எனும் யுவதி மீதே இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இவர் குற்றத்தை புரிந்தார் என நியூகாசல் கிறவுண் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க் கிழமை நீதிமன்றத்தில் கெத்தி பிரெனன் ஆஜர்படுத்தப்பட்டார். தான் நிரபராதி அல்ல என அவர் கூறினார்.

இவ் வழக்கு விவாதம் டிசெம்பர் 7 ஆம் திகதி ஆரம்பமாகும் என நீதிபதி ரொபர்ட் ஸ்பரக் அறிவித்தார். அத்துடன் மீளாய்வு விசாரணை க்காக செப்டெம்பர் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் கெத்தி பிரனன் ஆஜராக வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.

அதுவரை நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல கெத்தி பிரெனனுக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். சௌத் ஷீல்ட்ஸ் நகரிலுள்ள குறித்த முகவரியில் கெத்தி பிரெனன் வசிக்க வேண்டும். பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபரை கெத்தி பிரெனன் தொடர்புகொள்ளக்கூடாது ஆகியனவும் இந்த நிபந்தனைகளில் அடங்கும்.

வீதியில் கிடந்த பணப்பையை கண்டெடுத்து பொலிஸில் ஒப்படைத்த இரு மாணவர்கள்!!

பாடசாலை மாண­வர்கள் இருவர் கண்டி, அள­வத்­து­கொடை நகர வீதியில் பணப்பை ஒன்றைக் கண்­டெ­டுத்து அள­வத்­து­கொடை பொலிஸில் ஒப்ப­டைத்­துள்­ளனர்.

அளவத்­து­கொடை தேசிய பாட­சா­லையில் 9 ஆம் ஆண்டு சீ வகுப்பில் கல்வி பயிலும் கே.நிரஞ்சன் மற்றும் 8 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் கே.எஸ்.செல்­வ­ரத்னம் நிலக் ஷன் ஆகிய மாண­வர்களே இவ்­வாறு ஒப்ப­டைத்­த­தாக பொலி­ஸார் ­தெ­ரி­வித்­தனர்.

இப்பணப் பையில் 3,430 ரூபா பணமும் அடை­யாள அட்டை உட்­பட சில ஆவ­ணங்­களும் இருந்­த­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இப்பணப்பையை பெற்றுக் கொண்ட பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி எம்.எம்.எச். ஜய­தி­லக்க, அதன்  உரிமை­யா­ளரை பொலிஸ் நிலை­யத்­துக்கு வர­ழைத்து பையை ஒப்­ப­டைத்தார்.

இம்­மா­ண­வர்­களின் செயல் முன்­மா­திரியாக ஏனைய மாண­வர்­க­ளுக்கு அமைய வேண்டுமென பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வவுனியாவில் காதல் விவகாரத்தில் வாள் வெட்டுத்தாக்குதல் : வீடு தீக்கிரை!!

 
வவுனியாவில் காதல் விவகாரத்தினால் வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் இனந்தெரியாத நபர்களினால் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா தரணிக்குளத்தில் வசித்து வரும் இருவருக்கிடையே காதல் ஏற்ப்பட்டுள்ளது. ஒருவருடகாலமாக இவர்களது காதல் பெற்றோர்களுக்கு தெரியாமலேயே இருந்துள்ளது. இவர்களது காதல் பெண் வீட்டாருக்கு தெரியவந்ததுடன் பெண் வீட்டார் குறித்த பெண்ணை வெளிநாடு ஒன்றிக்கு அனுப்புவதற்குறிய ஏற்ப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனையறிந்த பெண் தனது காதலனுக்கு இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார். வெளிநாடு சென்றால் நான் இறந்து விடுவேன் என்றும் தன்னை எங்காவது கூட்டிச் செல்லுமாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் நடைபெற்று ஒருவாரத்தின் பின்னர் இருவரும் வீட்டை விட்டு ஓடிச்சென்று கொழும்பில் தனிமையில் ஒருமாத காலம் வாழ்த்து வந்துள்ளனர்.

பெண் வீட்டார் இவர்களை தேடியுள்ளனர். இவர்கள் கிடைக்காவிடத்து பெண்ணின் புகைப்படத்தினை முகநூலில் பிரசுரித்து இவரை காணவில்லை கண்டுபிடித்த தருபவர்களுக்கு தகுந்த சர்மானம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இவர்களின் முகநூல் பதிவினை கண்ணுற்ற ஒருவர் இவர்களை கொழும்பில் வைத்து அடையாளம் கண்டுள்ளார். உடனே இவர்களின் முகநூல் பதிவில் காணப்பட்ட தொலைபேசிக்கு அழைப்பினை மேற்கொண்டு அவர்கள் இங்கு உள்ளனர் என தெரிவித்துள்ளார். கொழுப்பிற்கு விரைந்த பெண் வீட்டார் குறித்த பெண்ணை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து தப்பித்து வவுனியாவிற்று வந்த குறித்த பெண் தனது காதலனுக்கு தொலைபேசியில் அழைப்பினை மேற்கொண்டு தான் தற்போது வவுனியாவில் நிற்பதாகவும் என்னை அழைத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளார்.

உடனே வவுனியாவிற்று சென்ற குறித்த இளைஞன் பெண்ணை அழைத்து ஈச்சங்குளம் பொலிஸ்நிலையத்திற்கு சென்றுள்ளார். பெண் வீட்டாரிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு தருமாறு பொலிசாரிடம் வேண்டியுள்ளார்.

ஈச்சங்குளம் பொலிஸார் குறித்த பெண் மற்றும் இளைஞனை சேர்ந்து செல்லுமாறு பணித்துள்ளனர். இருவரும் குறித்த இளைஞனின் வீட்டில் இருந்த சமயத்தில் நேற்று (11.03.2017) மதியம் 2.30 மணியளவில் பெண் வீட்டார் வெள்ளை நிற வாகனத்தில் இளைஞனின் வீட்டிற்குச் சென்று வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொண்டு குறித்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் குறித்த பெண்ணின் வீட்டை இனந்தெரியாத நபர்கள் தீக்கிரையாக்கியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மற்றும் தடவியல் பிரிவினர் தீக்கிரையான வீட்டில் கைரேகையடையாளங்களை பார்வையிட்டதுடன் குறித்த இளைஞனின் வீட்டார் மீது தாக்குதல் மேற்கொண்ட வாள்கள் மற்றும் பாரிய கத்திகளை கைப்பற்றியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனத்திற்குச் சென்ற மாணவனைக் காணவில்லை!!

வவுனியாவிலுள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்குச் சென்ற தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் மாலையாகியும் வீடு வரவில்லை என்று தயார் இன்று (12.03) மாலை 6 மணியளவில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று (11.03) மாலை 3 மணிக்கு தனியார் கல்வி நிலையத்தில் தனது வகுப்புக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற அனுராஜா லலோசன் என்ற 14 வயது மாணவன் 3.30 மணியளவில் தனியார் கல்வி நிலையத்திலிருந்து வெளியேறிச் சென்றுள்ளதாகவும், தனது துவிச்சக்கரவண்டியை அதே கல்வி நிலையத்தில் கல்வி கற்று வரும் அவரது சகோதரரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துவிட்டு தனியார் கல்வி நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளதாக மாணவனுடன் கல்வி கற்கும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர் என்று தாயார் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவன் கடந்த வாரம் பாடசாலைக்கு சமூகளிக்கவில்லை என பாடசாலையினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு நேற்று (11.03) காலை பொலிசார் குறித்த மாணவனின் வீட்டிற்கு விளக்கத்திற்குச் சென்றுள்ளனர். சென்றபோது பெற்றோர் இல்லை வீட்டில் இருக்கவில்லை. குறித்த மாணவனுடன் பொலிசார் கலந்துரையாடிவிட்டுச் சென்றுள்ளனர்.

எனினும் இன்று மதியம் உணவருந்திவிட்டு தாயிடம் தனியார் வகுப்புக்குச் செல்வதாக தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். மாலை 6 மணியாகியும் மாணவன் வீடுவரவில்லை. இதையடுத்து தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைக்கு எதிராக கறுப்புக்கொடிகள்!!

 
ஐ.நா கடும் நிபந்தனையுடன் அத்தனை விடயங்களும் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் இன்று (12.03.2017) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் மேற்கொள்ளப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்ட கொட்டகைக்கு முன்பாகவும் வீதியின் இரு மருங்கிலும் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் நேற்றையதினம் (11.03) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கான சந்திப்பு வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் காலை 10 மணியில் இருந்து 4 மணிவரை இடம்பெற்றது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

ஐ.நா நிபந்தனையுடன் அத்தனை விடயங்களும் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதில் எமக்கு உடன்பாடில்லை என எதிர்ப்புத் தெரிவித்தே கறுப்புக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் 22பேருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று!!

 
வவுனியாவில் கடந்த சில தினங்களில் 22 பேருக்கு பன்றிக்காச்சல் தொற்று எற்பட்டுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கடந்த சில தினங்களில் 22பேருக்கு பன்றிக்காச்சல் தொற்று ஏற்ப்பட்டுள்ளது. அண்மையில் வவுனியாவில் பன்றிக்காச்சல் தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொற்று ஏற்பட வாய்புக்கள் உள்ளதால் சிறியவர்களை தேவையின்றி வைத்தியசாலையில் தங்கியுள்ள உறவினர்களைப் பார்வையிடுவதற்கு அழைத்து வருவதைத் தவிர்க்குமாறும் குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார், சிறுவர்கள் அவதானமாக இருக்குமாறும் தற்போது 22பேருக்கு பன்றிக்காச்சல் இனங்காணப்பட்டு 16 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு சென்றுள்ளதாகவும் 5பேர் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒருவர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலைக்கு வரும் குழந்தைகள், சிறுவர்கள் அனைவருக்கும் சுவாசத்தை பாதிக்காதவாறு முகக்கவசம் அணிந்து இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் மாணவிகளுடன் சேட்டைவிட்ட இளைஞன் நையப்புடைப்பு!!

வவுனியா வைரவபுளியங்குளம் 10ம் ஒழுங்கை புளியடி வீதியில் பாடசாலை மாணவியுடன் தகாத முறையில் சேட்டை புரிந்த சிங்கள இளைஞன் பொதுமக்களால் கையும்மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியா ஈரற்பெரியகுளம் அவுசுது பிட்டியவை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜானக்க என்ற 31 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு நையப்புடைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் பல நாட்களாக குறிப்பிட்ட பிரதேசத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களிற்கு முன் நின்று பெண்களுடன் சேட்டைவிட்டு வந்துள்ளதாகவும் ஒரு சில பெற்றோர் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளிடம் முறையிட்டும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று (12.03.2017) காலை 8.30 மணியளவில் வழமை போல் மாணவியுடன் கைசேட்டை புரியும்போது பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.