வவுனியாவில் 17வது நாளாகத் தொடரும் காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம்!!

 
வவுனியாவில் கடந்த 17 நாட்களாக தொடர்ந்து இடம்பெற்று வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று(12.03.2017) 17வது நாளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

கையளிக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும், அரசியல்கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும், அவசரகாலச்சட்டத்ததை நீக்குமாறும் கோரி சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

இப் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று புதிய மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்ப்பாட்டில் மாபெரும் கண்டனப் பேரணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மாடுவெட்டும் கொல்களம் மூடல் ! 15 தொழிலாளர்கள் பாதிப்பு!!

வவுனியா சோயா வீதியிலிருக்கும் மாடுகள் வெட்டும் கொல்களத்தில்  கடந்த நான்கு தினங்களாக மாடுகள் வெட்டும் பணிகள் இடம்பெறவில்லை. இதன் காரணமாக அங்கு பணிபுரியும் 15ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

நேற்று (11.03.2017) தமது பணிகளை மேற்கொள்வதற்கு கொல்களத்திற்கு  சென்ற தொழிலாளர்கள் கால்நடை வைத்திய அதிகாரி வருகை தந்திருந்தும் நகரசபை சுகாதார பரிசோதகர்கள் சமூகமளிக்கவில்லை. இதன் காரணமாக நேற்று மூன்றாவது நாளாகவும் பணிக்கு சமூகமளித்த தொழிலாளர்கள் பணி இடம்பெறவில்லை என்று திரும்பிச் சென்றனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில்,

நாங்கள் 15ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாடு வெட்டும் தொழிலினை நம்பி குடும்பத்தினை நடாத்தி வருவதாகவும் கடந்த சில தினங்களாக வேலைக்குச் சென்றும் அங்கு அதிகாரிகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகளை வைத்து தொழிலாளர்களின் வயிற்றில் அடித்துக் கொண்டுள்ளதாகவும் தமது பிள்ளைகள், மனைவிமார் பெரும் சிரமத்தில் தமது குடும்பங்களை நடாத்திக் கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும், இன்று (11.03.2017) மூன்றாவது நாளாகவும் பணிகள் இடம்பெறவில்லை இன்றும் ஏறமாற்றத்துடனனே வீடு செல்லவேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோருக்கு ஆதரவாக மாபெரும் ஆர்ப்பாட்டம்!!

 
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் மேற்கொள்ளப்படும் சுழற்ச்சி முறையிலான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக நேற்று (11.03.2017) ஜனநாயக மாக்சசிச லெனினிசக் கட்சி ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்திற்கு முன்பாக ஆரம்பமாகி கண்டி வீதிவழியாக, மணிக்கூட்டக்கோபுர ஊடாக பசார் வீதி, இலுப்பையடி, நீதிமன்ற வீதியூடாக காணாமற்போன உறவினர்கள் மேற்கொண்டு வரும் உணவு தவிர்ப்பு இடத்திற்குச் சென்று தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

இதில் கலந்து கொண்டவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை உடனே நிறுத்து, அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறு, காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேட உனக்கு எத்தனை ஆண்டுகள் தேவை? போன்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகளுடன் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கடும் நிபந்தனையுடன் கால அவகாசம் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்!!

வவுனியாவில் கூட்டமைப்பின் கலந்துரையாடல் நேற்று (11.03.2017) காலை 10 மணியளவில் வவுனியா வன்னி இன் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகி பிற்பகல் 4 மணியளவில் நிறைவு பெற்றது.

அதன் பின்னர் இக் கலந்துரையாடல் தொடர்பாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்,

இன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் இணைந்த ஒரு கூட்டம்நடைபெற்றது.

இதில் விசேடமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற பேச்சுவார்ததைகள் சம்பந்தமாகவும் இலங்கை சம்பந்தமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படுகின்ற சூழ்நிலையில் ஒரு உத்தியோகபூர்வமாக வரைவு ஒன்றை சில நாடுகள் முன்வைத்திருக்கின்றன.

இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்டுத்துகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக அதனுடைய தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் எங்களுடைய நிலைமையை எடுத்துச் சொல்லுவதற்காக நாள் முழுவதும் கருத்துப்பரிமாறல்கள் மேற்கொண்டோம். இதன் இறுதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நான் தற்போழுது வாசிக்கின்றேன்..

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையால் 2015 ஐப்பசி முதலாம் திகதி இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரனையுடன் நிறைவேற்றப்பட்ட எச் ஆர் சி 30 ஒன்று என்ற தீர்மானத்தில் இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்ட அத்தனை விடயங்களும் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும்.

இவை கடுமையான நிபந்தனைகளின் கீழ் நிறைவேற்றப்படுவதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கையில் ஒன்று நிறுவப்பட்டு மேற்பார்வை செய்யப்படவேண்டும்.

இலங்கை அரசாங்கம் மேற்சென்ன விடயங்களை தகுந்த பொறிமுறைகள் மூலம் நிறைவேற்றத்தவறினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தத் தீர்மானத்தின் கீழ் கிடைக்கவேண்டிய அனைத்து பெறுபேறுகளும் கிடைக்கும் வண்ணமாக சர்வதேச பொறிமுறைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை உறுதி செய்யவேண்டும்.

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் இந்தத் திர்மானத்தோடு தங்களுடைய கட்சிக்கு இணங்க உடன்பாடு இல்லை என்பதைத் தெரிவித்தார். அதையும் நாங்கள் குறித்திருக்கின்றோம் என்று மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அவரசக் கலந்துரையாடல்!!

 
வவுனியாவில் நேற்று (11.03) காலை 10.30 மணியளவில் வன்னி இன் விருந்தினர் விடுதியில் தமிழரசுக்கட்சியின் அவரச கலந்தரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை, மண் மீட்புப் போராட்டம், காணாமற்போன உறவுகளின் போராட்டம் தொடர்பாக அவசர கலந்தரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர்.

இக் கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளின் உறுப்பினர்கள், வடமாகாண சபை
உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

​வவுனியாவில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்!!

 
வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நேற்றுமுன்தினம் (10.03.2017) காலை 9.30 மணியளவில் சர்வதேச மகளிர் தினமும் உள்ளுர் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், சிறப்பு விருந்தினராக திரு.பொஜன் இலங்கைக்கான ஒக்ஸ்பாம் வதிவிட பிரதிநிதி , வைத்தியர் ஏ.ரேவதி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் , மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

உள்ளுர் உற்பத்தி பொருட்களின் விற்பனையும், பெண்கள் தொடர்பான விழிப்புனர்வு நாடகமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

 
வவுனியா பட்டானிச்சூர் முஸ்லீம் படசாலைக்கு முன்பாக நேற்று (11.03.2017) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வவுனியாவில் இருந்து மன்னார் வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் முஸ்லீம் பாடசாலைக்கு முன்பாக திரும்ப முற்பட்ட போது எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த முச்சக்கரவண்டி வீதியின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் மோட்டார் சைக்கிலுக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கில் ஓட்டுனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ முத்துமாரியம்பாள் மாசிமக இரதோற்சவம்!(படங்கள்)

வவுனியா  தோணிக்கல் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின்  மாசிமக  இரதோற்சவம் நேற்று 11.03.2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

காலை முதல் கிரியைகள்  ஆலய மகோற்சவ குரு சிவஸ்ரீ திவாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்று  காலை எட்டுமணியளவில்  வசந்தமண்டப பூஜை இடம்பெற்று ஒன்பதரை மணியளவில் அம்பாள் ரதமேறி உலா வந்த நிகழ்வு இடம்பெற்றது.

மேற்படி உற்சவத்தினபோது நூற்றுக்கணக்கான அம்பாளின்  பக்தர்கள் கலந்து கொண்டனர் .

வவுனியா பிரதேச சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்!!

 
வவுனியா பிரதேச சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் நேற்று (11.03.2017) காலை 10 மணியளவில் வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

புதிதாக நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டு எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இப் பொதுக்கூட்டத்திற்கு வவுனியா பிரதேச செயலாளர் கா உதயராஜா, நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச கலாசார உத்தியோகத்தர், வவுனியா மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திரு.அபேயசிங்க, திரு.சுகானி, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன், இளைஞர் சேவை அதிகாரிகளான ரதித்திரா, திரு.சசிக்குமார், மாவட்ட இளைஞர் சம்மேளன தலைவர் திரு.கிரிதரன், மற்றும் இளைஞர் கழக பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திடீரென நடந்த நிச்சயதார்த்தம், திருமணம் எப்போது- பதில் கூறிய நடிகை பாவனா!!

நடிகை பாவனா யாரையோ காதலிக்கிறார் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்று மட்டும் செய்திகள் வந்தன. இந்நிலையில் திடீரென நடிகை பாவனா, கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

இதுகுறித்து பாவனா பேசும்போது, என் அப்பா இறந்துவிட்டதால் தான் என்னுடைய திருமணம் தள்ளிப்போனது. நவீன் மற்றும் அவரது குடும்பத்தார் அவர்களுடைய சம்பிரதாயத்திற்காக மணப்பெண்ணை பார்க்க வந்தனர்.எல்லோரும் கூடியிருக்கிறோம் இப்போதே நிச்சயதார்த்தம் செய்துவிடலாம் என அனைவரும் விரும்பியதால் தான் உடனே நடந்தது. என்னுடைய நண்பர்களை கூட நான் அழைக்கவில்லை என்றார்.அதோடு பாவனாவின் திருமணம் ஓகஸ்டில் நடக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன.

ஒரு விஷயத்தை செய்தால் 10 மதுபான போத்தல்கள் இலவசம்- சிவகார்த்திகேயன் அதிரடி அறிவிப்பு!!


சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே காமெடி காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது. அதிலும் இவர் சூரியுடன் இணைந்தால் அந்த படமே அட்டகாசம் தான்.

அந்த வகையில் தற்போது மோகன்ராஜா இயக்கும் படத்தில் காமெடியனாக ரோபோ ஷங்கர் நடித்து வருகிறார். படத்தில் ஒரு காட்சியில் குடிமகன்களை கலாய்க்கும் வகையில் ஒரு போட்டி வைக்கிறார்களாம். அதாவது காலையில் மதுபானக் கடை திறந்ததும் யார் முதல் ஆளாக சரக்கு வாங்கிவிட்டு வருகிறார்களோ அவர்களுக்கு பத்து சரக்கு பாட்டில்கள் இலவசம், இதுதான் அந்த போட்டி.

இந்த போட்டி காட்சிகளை படக்குழு மிகவும் காமெடி நிறைத்த வண்ணம் எடுத்துள்ளார்களாம். இதில் சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர் காமெடி இன்னும் பஸ்ட் கிளாஸ் என படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

மேகங்களில் ஏற்பட்ட புயல்: உலக மக்களை பிரமிப்பில் ஆழ்த்திய புகைப்படங்கள்

தென் அமெரிக்காவை சேர்ந்த விமான ஓட்டுநர் ஒருவர் மேகங்களில் ஏற்பட்ட புயலை தத்ரூபமாக புகைப்படம் எடுத்து உலக மக்களை கவர்ந்துள்ளார்.தென் அமெரிக்காவில்உள்ள Ecador – ன் தலைநகரமான Quito வினை சேர்ந்த Santiago Borga என்பவர் போயிங்767-300ER விமானத்தின் விமான ஓட்டுநராக பணிபுரிகிறார்.

இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்ட இவர், விமானத்தில் செல்லும்போது மேகங்களில் ஏற்பட்ட இயற்கை மாற்றங்கள் குறித்து மிக அழகாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் அழகிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!!


அமெரிக்காவில் உள்ள ஒரு பூங்காவில் இருக்கும் மரம் இளம் பெண் மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள Snohomish கவுண்டியை சேர்ந்தவர் Diana Olidinchuk (17).

இவர் நேற்று அங்குள்ள புகழ்பெற்ற Edmonds பூங்காவுக்கு சென்றுள்ளார். பின்னர் பூங்காவில் இருக்கும் ஒரு மரத்தடியில் Diana உட்கார்ந்திருக்கிறார்.அப்போது யாரும் எதிர்பாராத வகையில் Diana மீது அந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது.

இதில் இளம் பெண் Diana சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் அருகில் உட்கார்ந்திருந்த சில பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.பின்னர் சம்பவ இடத்துக்கு வந்து Diana சடலத்தை கைப்பற்றிய பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்!!


ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியாக கைது செய்யப்பட்ட தமிழர்களை ஆந்திர பொலிசார் நடத்தும் விதம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.ஆந்திர வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் 212 தமிழர்கள் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஆந்திர பொலிசாரால் நடத்தப்படும் விதத்தை பார்த்தால் அத்தனையும் பகீர் ரகம்.செம்மரம் கடத்தியதாக கருதப்படும் தமிழர்கள் பாலீதின் பையால் மூடியுள்ள லொறி ஒன்றிலிருந்து இறக்கப்படுகிறார்கள்.

அதில் ஒருவரை மனிதனாக கூட மதிக்காத பொலிஸ் தோளில் இறுக்கமாக கை வைத்து அவரை இழுத்து செல்கிறார்.கைது செய்யப்பட்ட தமிழர்கள் அனைவரும் ஒரு அறையில் மொத்தமாக தரையில் உட்கார வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.கொடுமையின் உச்சமாக ஒரு தமிழர் உள்ளாடையோடு குவிந்திருக்கும் செருப்புகளை அள்ளிபோடுகிறார்.

அதன் பின்னர் கைது செய்யப்பட்ட தமிழர்கள் எல்லாரும் உள்ளாடையோடு அரை நிர்வாணமாக கூட்டமாக புகைப்படமும், வீடியோவும் எடுப்பதற்காக அமர வைக்கப்பட்டுள்ளனர்.இதில் மர்மம் என்னவென்றால், இவர்களை வேலைக்கு அமர்த்துவது யார்? அவர்களின் பின்னணி என்ன என்பன போன்ற விவரங்களும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் வெளிவருமா என்பது மில்லியன் டொலர் கேள்விகளாகவே உள்ளது.

தொலைபேசியில் உரையாற்றிக் கொண்டிருந்த இளைஞர் பலி!!


அவிசாவளை சாலாவ-கொஸ்கம பகுதிய சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞன் மின்னல் தாக்கியே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

கையடக்கத் தொலைப்பேசியில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே மின்னல் தாக்கி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கட்டுநாயக்க ஓடுபாதை புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் சீனப் பிரஜைகள் கைது!


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் சீனப் பிரஜைகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.6 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகைகளை இலங்கைக்குள் கடத்த முயற்சித்த குற்றத்திற்காகவே சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுவே இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக கடத்தப்படும் மிகப் பெரிய சிகரெட் தொகை என சுங்கத் திணைக்கள பிரதி பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பணிபுரியும் சீன தொழிலாளர்களுக்கு சீன சிகரெட்டுகளுக்கான தேவை அதிகம் உள்ளது. ஆனால் வெளிநாட்டு சிகரட்டுகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.சந்தேக நபர்களிடம் இருந்து தலா 1 லட்சம் அபராதம் பெற்றுக்கொண்டப் பின்னர், குறித்த சீனத் தொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.