கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பெண் கோர விபத்தில் பலி!!


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய பெண்ணொருவர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற திருமதி சர்மிளா விஜயரூபன் (வயது 37) என்பவரே இந்த அனர்த்தம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து நேற்றுமுன்தினம் புளியங்கூடலை நோக்கிப் சென்று கொண்டிருந்த வேளை எதிர்பாராதவிதமாக மண்கும்பான் எல்லையில் விபத்து ஏற்பட்டது. மோட்டார் சைக்கிள், கார், உழவு இயந்திரம் என்பன ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டது.விபத்தில் படுகாயமடைந்த சர்மிளா விஜயரூபன் யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தள்ளார்.

கனடாவில் வசித்து வரும் திருமதி சர்மிளா விஜயரூபன், தனது தாயாரை சுகயீனம் காரணமாக பார்வையிடுவதற்காக, இரு பிள்ளைகளுடன் தாயகம் வந்திருந்தார்.உயிரிழந்த சர்மிளா, யாழ் பல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் பட்டம் பெற்று, லண்டனில் உயர் கல்வி கற்றுள்ளார். பின்னர் குடும்பத்துடன் கனடா சென்று அங்கு குடியுரிமை பெற்றுள்ளார்.

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தேர்-2017(காணொளி)!!

இலங்கைத் தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருதநில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னித்திருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடைசூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீசக்கரத்துடன் கூடிய ஸ்ரீசக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீகருமாரி நாகபூசணி அம்பாளின்   ஒன்பதாம்  மகோற்சவ பெருவிழாவில் நேற்றைய தினம் 10.03.2017 வெள்ளிகிழமை  காலை 10 மணியளவில் தேர்த் திருவிழா இடம்பெற்றது.

காலை 5.30 மணிக்கு கோவிலின் பிரதமகுரு  சிவஸ்ரீ  முத்து ஜெயந்தி நாதகுருக்கள்  தலைமையில் காலைக் கிரியைகள் ஆரம்பமாகி காலை எட்டுமணிக்கு வசந்த மண்டபபூஜை இடம்பெற்று பின்னர் ஸ்ரீகருமாரி நாகபூசணி அம்பாள் உள்வீதி வலம்வந்து சரியாக காலை 9.30 மணியளவில் தேரில் ஆரோகணித்து 10.00 மணியளவில் ஆண் பக்தர்கள் ஒருபுறமும் பெண் பக்தைகள் மறுபுறமும் வடம் பிடிக்க அம்பாள் மயான வீதி ஊடாக கொரவபொத்தான வீதியை நூறுக்கணக்கான பக்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இருபுறமும் சூழ்ந்திருக்க வந்தடைந்தாள். .

செதில்,பால்காவடிகள் கற்பூரச் சட்டிகள் அத்துடன் அங்கபிரதட்சனம் செய்துகொண்டும் கொண்டு அம்பாளின் அடியார்கள் தம் நேர்த்திகடன்களை நிறைவேற்றிய வண்ணம் அம்பாளின் பின்னால் வலம்வந்தனர். காலை 11.00 மணியளவில் அம்பாளின் ரதம் இருப்பிடத்தை வந்தடைந்தது. தொடர்ந்து அர்ச்சனைகள் இடம்பெற்று மதியம் ஒருமணியளவில் அவரோகணம் என்று சொல்லகூடிய பச்சைசாத்தல் உற்சவம் இடம்பெற்றது.

 

மின்பாவனையாளர்களுக்கு அரசு வழங்கவுள்ள அரிய வாய்ப்பு!!

சூரிய சக்தி சமர் என்றதொரு புதிய திட்டம் இலங்கையில் அறிமுகமாகியுள்ளதுடன் மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு இத்திட்டத்தை இலங்கை மின்சாரசபை உள்ளிட்ட 3 அமைப்புகளுடன் இணைந்து செயற்படுத்தவுள்ளது. 2050 ஆம் ஆண்டளவில் இலங்கைக்குத் தேவையான முழு மின்சாரத்தையும் இந்த திட்டத்தினூடாகப் பெற்றுக்கொள்வதே நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் நாட்டில் 10 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வாய்ப்பும், அதனூடாக மின்சாரத்தை மின்சாரசபைக்கு விற்று பணம் பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பமும் கிடைக்கவிருக்கிறது.மின்பாவனையாளர்கள் தமது வீட்டுக்கூரைகளில் சூரியசக்தித் தொகுதிகளை பொருத்தி மின் உற்பத்தி செய்து தேவையான மின்சாரத்தை விட மேலதிகமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்சாரசபைக்கு விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2020 இல் 200MW மின் உற்பத்தி 2025 ஆகும் போது 1000MW கொள்ளவுடைய சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இதன் நோக்கமாகும்.மேலும், இதனை செயற்படுத்தத் தேவையான மூலதனத்திற்கு சலுகை அடிப்படையில் அரச அல்லது தனியார் வங்கியிடமிருந்து கடன் பெற ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இரவில் தூங்கும் முன் இதை மட்டும் செய்யுங்கள்: உங்கள் எடை எப்படி குறையும் தெரியுமா?


ஒருவருக்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது என்பது அனைவருக்குமே தெரியும். அதேப் போல் ஒருவருக்கு போதுமான அளவு தூக்கம் கிடைத்தால், உடல் எடையை குறைக்கலாம்.

ஆனால் அப்படி தூங்கும் முன் ஒருசில செயல்களை செய்தால், இன்னும் வேகமாக உடல் எடையைக் குறைக்கலாம் என்பது தெரியுமா, ஆம், இக்கட்டுரையில் தூங்கும் முன் எந்த செயல்களை செய்தால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

அதைப் படித்து பின்பற்றி, எளிய முறையில் உடல் எடையைக் குறையுங்கள்.

க்ரீன் டீ

க்ரீன் டீயில் உள்ள ப்ளேவோனாய்டுகள் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும். அதிலும் ஒரு நாளைக்கு 3 கப் க்ரீன் டீ குடித்தால், ஒரே நாளில் 3.5 கலோரிகள் எரிக்கப்படும். அதிலும் இரவில் தூங்கும் முன் ஒரு கப் க்ரீன் டீ குடித்தால், இன்னும் நல்லது.

குளியல்

இரவில் தூங்கும் முன் குளிர்ந்த நீரில் குளித்தால், உடலில் இருந்து 400 கலோரிகள் எரிக்கப்படுவதாக பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி

மாலை வேளையில் அலுவலகம் முடித்துவிட்டு, ஜிம் சென்று உடற்பயிற்சியை செய்வதன் மூலம், உடலின் மெட்டபாலிச அளவு அதிகரித்து, இரவில் தூங்கும் போது அதிகமான அளவில் கலோரிகள் எரிக்கப்பட்டு, வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவுமாம்

புரோட்டீன் ஷேக்கை மாற்றுங்கள்

வேகமாக உடலில் புரோட்டீனை வெளியிடும் புரோட்டீன் ஷேக்கைக் குடிப்பதற்கு பதிலாக, மாலையில் உடற்பயிற்சி செய்த பின், மெதுவாக புரோட்டீனை வெளியிடும் ஷேக்கைக் குடிப்பதால், இரவு நேரம் முழுவதும் உடலின் மெட்டபாலிச அளவு நீடித்து, உடல் எடை வேகமாக குறையும்.

குளிர்ச்சியான அறையில் தூக்கம்

வட அமெரிக்க பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்த ஆய்வில், குளிர்ச்சியான அறையில் தூங்குவதால் 7% அதிகமாக கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறைவதாக தெரிய வந்துள்ளது.

பாலியல் தொழிலில் மலர்ந்த காதல்!!


மத்தியபிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மகள் பாலியல் தொழிலாளியாக தான் இருக்க வேண்டும் என வற்புறுத்தி அவரை பாலியல் கும்பலிடம் தள்ளிவிட்டு கொடுமை செய்துள்ளார்.ஆனால், தனக்கு இந்த தொழில் பிடிக்கவில்லை என்றும் தான் படிக்கவேண்டும் என பூஜா ஆசைப்பட்டுள்ளார்.

Banchhara பிரிவை சேர்ந்த இந்த மக்கள் அதிகமாக பாலியல் தொழில் செய்வதையே விரும்புகின்றனர். அதன்படியே, தங்களுக்கு பிறக்கும் பிள்ளைகளையும் பாலியல் தொழிலுக்கு ஆளாக்குகின்றனர்.இந்த பிரிவை சேர்ந்த பூஜாவுக்கு இந்த நிலைமையே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாலியல் தொழில் நடைபெறும் இடத்திற்கு சோதனை செய்ய வந்த தன்னார்வு தொண்டு அமைப்பில் பணியாற்றிய விகாஷ் என்பவரிடம், தனக்கு பாலியல் தொழிலில் ஈடுபட விருப்பமில்லை என்று பூஜா கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அங்கிருந்து மீட்கப்பட்ட பூஜா, படிப்பதற்கான முயற்சிகளை தன்னார்வ நிறுவனத்தின் உதவியுடன் விகாஷ் செய்து கொடுத்துள்ளார்.இதற்கிடையில், பூஜாவின் மீது விகாஷ்க்கு காதல் ஏற்படவே, பூஜா படிக்கும்வரை 3 ஆண்டுகள் காத்திருந்த விகாஷ் அதன் பிறகு அவளிடம் திருமணம் செய்துகொள்ள தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தனது மகள் படிப்பதை அறிந்த பூஜாவின் தாயார், அவளை எப்படியாவது மீண்டும் பாலியல் தொழிலுக்கு தள்ளிவிட வேண்டும் என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.ஆனால், பொலிசார் சம்மதத்துடன் பூஜாவை விகாஷ் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினரை பலரும் வாழ்த்தியுள்ளனர்.

9 நாட்கள் 9 ஆண்கள்: சொந்த வீட்டிலேயே பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!


உத்திரகாண்ட் மாநிலத்தில் திருமணமான பெண் ஒருவரை 9 நாட்கள் 9 நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கார்டோலி என்ற கிராமத்தை சேர்ந்த சாந்தி என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.இவரது கணவர் இறந்துவிட்ட காரணத்தால் தனது 2 குழந்தைகளோடு தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், இவர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது Fayaz என்பவர், டிராப் செய்வதாக சாந்தியிடம் கூறி அவரை தனது வண்டியில் அழைத்து சென்று அவரது வீட்டில் விட்டுள்ளார்.வீட்டின் வாசலில் இறங்கிய சாந்தி, மாடிப்படி ஏறி தனது வீட்டுக்கு செல்கையில், அவரை பின்தொடர்ந்த Fayaz, சாந்தியை உள்ளே தள்ளி கதவை தாழ்ப்பாளிட்டுள்ளார்.

அதன்பின்னர் சாந்தியை பலாத்காரம் செய்து , அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். இந்த சம்பவம் நடைபெற்ற அன்று சாந்தியின் குழந்தைகள் அவரது அண்ணன் வீட்டில் இருந்துள்ளனர்.இதற்கு அடுத்த நாள் நடுஇரவு 1 மணியளவில், இரண்டு நபர்கள் சாந்தியின் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

அவரது முகத்தில் போதை மருந்து கலக்கப்பட்ட கேக்கினை தடவியதில், அவர் சுயநினைவை இழந்துள்ளார்.அதன்பின்னர் சாந்தியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் . பிப்ரவரி 25 ஆம் திகதி முதல் மார்ச் 6 ஆம் திகதி வரை ஒவ்வொருவராக சாந்தியின் வீட்டிற்கு வந்து அவரை பலாத்காரம் செய்துள்ளனர்.

அவர்கள் ஒவ்வொரு முறை வரும்போதும், கையில் ஏதேனும் ஒரு ஆயுதத்துடன் வருவதால் சாந்தியால் தப்பிக்க முடியவில்லை.இந்நிலையில், மார்ச் 6 ஆம் திகதி எப்படியாவது இவர்களை காட்டிக்கொடுக்க வேண்டும் என முடிவெடுத்த அவர், அன்றைய நாளில் 2 நபர்கள் வரும்போது, அருகில் வசிப்பவர்களின் உதவியுடன் அவர்களை அடித்து உதைத்துள்ளார்.

மேலும், அந்த 9 நபர்கள் மீதும் பொலிசில் புகார் அளித்தள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் Fayaz Mysorewale (23), Haroon Sarkavas (22), Sadiq Khan (25), Alif Syed (22), Jameel Desai( 26), Illiyas Ankolekar (22), Nasrollah Khan (23), Sadiq Bagewadi மற்றும் Niyaz ஆகியோர் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சாந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

படகில் தனியொருவராக அத்திலாந்திக்கை கடந்து சாதனை!!

நின்றபடியே வலிக்கும் துடுப்புக்களுடன், தன்னந்தனியே, முதன்முதலாக அத்திலாந்திக் சமுத்திரத்தைக் கடந்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார் கிறிஸ் பேர்ட்டிஷ் என்ற தென்னாபிரிக்க நீர்ச்சறுக்கு வீரர். இதன்போது, ஒரே நாளில் எந்தவிதத் துணையும் இன்றி 71.96 கடல் மைல் தொலைவைக் கடந்து மற்றுமொரு சாதனையையும் கிறிஸ் படைத்துள்ளார்.

தனது சாதனைப் பயணத்துக்காகவென்றே சிறு தங்கும் அறை, சுறா மீன்களை அடையாளம் கண்டு தடுக்கும் தொழில்நுட்பம் உட்பட, சில நவீன அம்சங்களைக் கொண்ட ஒரு படகை அவர் வடிவமைத்திருந்தார்.கடந்த டிசம்பர் மாதம் மொரோக்கோவுக்குச் சொந்தமான கெனரி தீவில் இருந்து தனது சாதனைப் பயணத்தை கிறிஸ் ஆரம்பித்தார். ஏறக்குறைய 4,500 கடல் மைல் தொலைவை 93 நாட்களில் கடந்து, நேற்று (9) காலை அன்ட்டிகுவாவின் இங்க்லிஷ் துறைமுகத்தை வந்தடைந்தார்.

பயணத்தின்போது, மீன்கள் மற்றும் ஆமைகளின் தாக்குதல்கள், வழியில் தன்னைக் கடந்து சென்ற இராட்சத சரக்குக் கப்பல்கள் பற்றிய பதிவுகளை அவர் தனது முகநூல் கணக்கில் பதிவிடத் தவறவில்லை.தனது சாதனைப் பயணத்திற்காகக் கிடைத்த நன்கொடையான சுமார் நான்கு இலட்சம் டொலர்களைக் கொண்டு, தென்னாபிரிக்காவில் ஐந்து பாடசாலைகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளார் கிறிஸ். எஞ்சும் பணத் தொகையில், அண்ணப்பிளவுகள் உள்ளிட்ட தோற்ற விகாரங்களுக்கு உள்ளானவர்களுக்கு மறுசீரமைப்பு சிகிச்சைகளை வழங்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

செவ்வாயில் வளரும் உருளை கிழங்கு : ஆய்வாளர்களின் அசத்தலான கண்டுபிடிப்பு!!

பெருவில் செவ்வாய் கிரகத்தின் நிலவமைப்பை கொண்டு, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்வது சாத்தியமான விடயம் என தெரியவந்துள்ளது.பெருவை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச உருளை கிழங்கு மையத்தில், செவ்வாய் கிரகத்தில் நிலவும் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் காலநிலையில் உருளை கிழங்கு பயிர்ச்செய்கை சாத்தியபடுமா என்ற வகையில், கடந்தாண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ளது.

குறித்த ஆய்வானது லிமா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஆய்விற்கு செவ்வாய் கிரகத்தில் நிலவும் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் காலநிலை என்பன உருவாக்கப்பட்ட நிலையிலேயே குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் குறித்த ஆய்விற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வழங்கிய, அறிவுரை மற்றும் வடிவமைப்பு மாதிரிகளை கொண்டு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கியூசாட்டில் உருளைக்கிழங்குகள் நடப்பட்டன. இதற்கான பிரத்தியேக கியூப்சாட்டினை லிமா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொறியாளர்கள் வடிவமைத்திருந்தனர்.

இந்நிலையில் ஆய்வின் பலனை கொண்டு, கியூப்சாட்டில் கட்டமைக்கப்பட்ட கடுமையான சுற்றுச்சூழலில், உருளைக்கிழங்கு வளரும் என்றால், இவை செவ்வாய் கிரகத்திலும் வளர்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும், அத்தோடு குறித்த பயிர்செய்கைகள் தொடர்பாக பல்வேறு கட்ட ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு, இலகுவாக வளரும் உருளை கிழங்கு வகை கண்டறியப்படும் என லிமா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொது இடத்தில் Wi-Fi இணைக்கும் முன் கவனிக்க வேண்டியவை!!


நம்மில் பெரும்பாலானோர் வெளியூருக்கோ அல்லது வெளியிடத்திற்கோ சென்றவுடன் Wi-Fi கிடைக்கிறதா என்று தான் பார்ப்போம்.அப்படி பொது இடங்களில் கிடைக்கும் Wi-Fi இணையத்தள வசதியை நாம் பயன்படுத்தும் போது தகவல்கள் பரிமாறப்படுகின்றன.இதனால் நமது மொபைல் போனில் பதியப்பட்டிருக்கும் போட்டோ, வங்கிக் கணக்குகளின் தகவல்களை எளிதாக ஹேக்கர்கள்(Hackers) திருடி விடக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.எனவே பொது இடங்களில் Wi-Fi பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய டிப்ஸ்,

பாதுகாப்பானதா என உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

பொது இடங்களில் நாம் பயன்படுத்தும் Wi-Fi பாதுகாப்பானது என்றால் அதில் Password போன்ற தகவல்கள் கேட்கப்படும்.Passwo rd பயன்படுத்தும் போது செய்திகள் பாதுகாப்பான மறைக்கப்பட்ட (Encrypted) தகவல்களாக இருக்கும்.வ்ப or WPA2 Password கேட்கவில்லையெனில், பாதுகாப்பில்லை என்று அர்த்தமாகும்.

பாதுகாப்பான தளங்களை பார்வையிடலாம்

நாம் பயன்படுத்தும் தளங்கள் பாதுகாப்பானதாக இருந்தால் அதன் முகவரியில்(URL Address) https எனக் காட்டும்.இதற்கு நாம் பயன்படுத்தும் மொபைல் போனை சரியான கால இடைவேளைகளில் அப்டேட் செய்வதன் மூலம் தகவல்களை திருடுவது கடினமாகிறது.
பணபரிவர்த்தனைகளை தவிர்க்கலாம்

பொது இடங்களில் ஓன்லைன் பணபரிவர்த்தனை செய்வதை தவிர்ப்பதன் மூலம் வங்கி கணக்குகள் திருடப்படுவதனை தடுக்கலாம்.
VPN இணைப்பினை பயன்படுத்தலாம்

பொது இடங்களில் Wi-Fi பயன்படுத்த வேண்டிய கட்டாய சூழல் இருப்பின் VPN (Virtual Private Network) இணைப்பினை பயன்படுத்தலாம். இதன் மூலம் நம்முடைய தகவல்கள் Encryption செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.இதுதவிர 2FA-வை பயன்படுத்துவதன் மூலமாக கூடுதல் பாதுகாப்பினை பெறலாம்.
Wi-Fi யை தேவையற்ற போது தவிர்க்கலாம்

பொது இடங்களில் தேவையற்ற போது Wi-Fi இணைப்பதனை தவிர்க்கலாம், ஒருவேளை நீங்கள் இணைக்கும் போது உங்கள் போனில் Logout செய்யப்படாமல் வைத்திருக்கும் Email, Facebook, Twitter உட்பட உங்கள் கணக்கிலிருந்து தகவல்கள் திருடப்படலாம்.

24 மணிநேரத்தில் வீடு கட்டலாம்! நம்பமுடியாத உண்மை!!


ரஷ்யாவில் அபிஸ் கோர்(Apis Cor) என்னும் நிறுவனம் தனது முப்பரிமான இயந்திரம் மூலம் 24 மணி நேரத்தில் வீடு கட்டி சாதனை படைத்துள்ளது.வீடு கட்டுவது என்பது சில காலம் எடுக்கும் விடயம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் எங்களுக்கு வீடுகட்ட ஒரு நாள் போதும் என ரஷ்யாவின் அபிஸ் கோர் நிறுவனம் நிரூபித்துள்ளது.

கொத்தனார், சித்தாள் போன்ற மனிதர்கள் இல்லாமல் அபிஸ் கோர் 3டி என்ற வீடு கட்டும் முப்பரிமாண இயந்திரம் மூலம் 24 மணி நேரத்தில் வீடு கட்டப்பட்டுள்ளது.ரஷ்யாவில் ஸ்டுபினோ என்ற இடத்தில் உறைபனிக் காலத்தில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது

சிமென்ட் கலவை, இரும்புக் கம்பிகள் போன்றவற்றை கையாளும் அபிஸ் கோர் 3டி இயந்திரம் 360 டிகிரி கோணங்களிலும் சுற்றிச் சுற்றி இயங்கும் திறன் கொண்டது.கிரேன் மூலம், வீட்டுமனையில் கொண்டு போய் இயந்திரத்தை வைத்து, சிமென்ட் கலவையை குழாய் மூலம் செலுத்த, அந்த இயந்திரத்தில் உள்ள பெரிய சிரிஞ்ச் போன்ற அமைப்பு வேகமாக சுவர்களை வடிக்க ஆரம்பிக்கிறது.

கணினியில் இருக்கும் வரைபடத்தின் படி வீட்டின் சுவர்கள் கண் முன்னே உருவம் பெறுகின்றன.இந்த வீடு கட்ட ஆன செலவு 6.77 லட்சமாகும். இந்த வீட்டின் ஆயுள் 50 ஆண்டுகள் என்றும், எளிதில் இடிக்க முடியாத அளவுக்கு உறுதியானது எனவும் அபிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

படப்பிடிப்பில் மயங்கி விழுந்து உயிரிழந்த நடிகை!!

தேசிய விருது பெற்ற கன்னட நடிகை பத்ம குமுதா, ஒரு தொலைக்காட்சி தொடரின் ஷூட்டிங்கின் போது மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார். இது கன்னட சினிமா பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திடீர் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

58 வயதான அவருக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். திங்கட்கிழமை அவர் ஷூட்டிங் செல்லும் முன் பார்த்ததுதான் கடைசியாக இருக்கும் என அவர்கள் கொஞ்சம் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.பத்ம குமுதாவின் மறைவுக்கு திரைபிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ் வழக்கு தனி அறையில் – நீதிபதி ரகசிய விசாரணை

நடிகர் தனு​ஷை உரிமை கொண்டாடும் வழககை மார்ச் 20-ம் திகதி வரை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது கதிரேசன் -மீனாட்சி தரப்பில் சில சான்றிதழ்கள் தாக்கல் செய்யப்பட்ட‌ன.இந்த சான்றிதழ்களில் உள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளனவா? என கண்டறிய அவரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மார்ச் 2 ஆம் திகதி தனுஷ் நேரில் ஆஜரானார்.

இதனிடையே, தனுஷிற்கு மரபணு பரிசோதனை‌ செய்ய வேண்டும் எனக்கோரி கதிரேசன் தம்பதியினர் புதிதாக ஒரு ‌‌மனுவையும் தாக்கல் செய்தனர். இதையடுத்து தனுஷின் அங்க அடையாளங்களை ஆராய்ந்த மருத்துவரின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இதனையடுத்து, தனுஷ் தொடர்பாக தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் வரும் நேற்று வரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில் தனுஷ் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தனுஷ் மற்றும் அவரை உரிமை கொண்டாடும் தம்பதி வழக்கறிஞர்கள் தனி அறையில் நீதிபதி முன் வாதம் செய்தனர். அப்போது தனுஷ் தொடர்பான வழக்கை மார்ச் 20-ம் திகதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பாலியல் தொல்லையா, யார் அந்த இயக்குனர்? அதிர்ச்சியில் திரையுலகம்!!

சினிமாவில் நடித்ததை விட தொலைக்காட்சியில் நடித்து பெயர் பெற்றவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் தொடர்ந்து தன் டுவிட்டர் பக்கத்தில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுப்பவர்.இந்நிலையில் இவர் ஒரு ஆங்கிலப்பத்திரிக்கையில் பேசுகையில் ‘ஒரு மலையாளர் இயக்குனர் எனக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்தார்.

அவர் தமிழிலும் படங்களை இயக்கியுள்ளார், நான் மறுத்த ஒரே காரணத்தால் படப்பிடிப்பில் என்னை அசிங்கப்படுத்தினார்.அதை தொடர்ந்து ஒரு முன்னணி இயக்குனர் அனுப்பியதாக ஒரு உதவி இயக்குனர் என்னிடம் கதை சொல்ல வந்தார். அவர் என்னிடம் மெல்ல அட்ஜெஸ்மெண்ட் குறித்து பேசினார்.

நான் கூட கால்ஷிட் பற்றி பேசுகிறாரோ என்று நினைத்தேன், பிறகு தான் அவர் எந்த நோக்கத்தில் என்னிடம் பேசினார் என்று, உடனே அவரை வெளியேற சொல்லிவிட்டேன்’ என கோபமாக பேசியுள்ளார். சரி யார் அந்த இயக்குனர்? என்பதே தற்போது பலரின் கேள்வி.

வீதி விதிமுறைகளை மீறியதால் 54 ஆயிரம் ரூபா அபராதம்!!

யாழில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய சாரதிகளுக்கு 54 ஆயிரம் ரூபா அபராத தொகையினை விதித்து சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வாரத்தில் மட்டும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய ஆறு சாரதிகளுக்கு இவ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவதால் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனடிப்படையில், எந்த வித பத்திரங்களுமின்றி மது போதையில் வாகனம் செலுத்திய நபருக்கு 16 ஆயிரத்து 500 ரூபாவும், அதேபோன்று மதுபோதையில் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி ஆபத்தான முறையில்லை மோட்டார் சைக்கிளை செலுத்தியவருக்கு 13 ஆயிரத்து 500 ரூபாவினையும் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி, வருமானவரி பத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்திய சாரதிக்கு 12 ஆயிரம் ரூபாவும் அபராதமாக வித்தித்துள்ளார்.

அத்துடன் விதி முறைகளை மீறி முறையற்ற முறையில் முந்திச்செல்ல முற்பட்ட இரண்டு பேருக்கு தலா 3000 ரூபாவும், மதுபோதையில் வாகனத்தினை செலுத்தியவருக்கு 6 ஆயிரம் ரூபாவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது பாரியளவில் விபத்துக்கள் பதிவாகி உயிரிழப்பு சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுவதால் சாரதிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை கவனத்திற்கொண்டு செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இலங்கை தமிழர் மீது கொடூர தாக்குதல் : மூவருக்கு சிறைத்தண்டனை!!

இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியில் இலங்கையை சேர்ந்த இளைஞர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தப் பகுதியில் கடையொன்றை நடத்திச் சென்ற 38 வயதான திருக்குமரன் சிற்றம்பலம் என்ற இலங்கையர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்று சிறுவர்கள் அடங்கிய குழுவினரே, கடைக்காரர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

16 வயதுடைய இரண்டு இளைஞர்கள் மற்றும் 15 வயதுடைய ஒரு இளைஞரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். 16 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் என்பதால், சட்டவிதிகளுக்கு அமைய அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

தாக்குதலுக்கு இலக்கான இலங்கையர் தனது கடையை திறக்க சென்ற போது, குறித்த குழுவினர் ஆயுதங்களுடன் வந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

ஆயத்தங்கள் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் “நீ வீட்டுக்கு செல்… இது எங்கள் நாடு” என இந்த இளைஞர்கள் கூச்சலிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் திகதி காலை 8 மணியளவில் நடைபெற்றுள்ளது.

நோரிஸ் கிரீன், லிவர்பூல் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலை அடுத்து சிற்றம்பலம் உடைந்த தாடை மற்றும் காயமடைந்த கண்களுடன் அங்கிருந்து சென்றுள்ளார்.

தாக்குதல் காரணமாக அவருக்கு பல முறிவுகள் ஏற்பட்டுள்ளமையுடன் அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் லிவர்பூல் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்தது.

நீதிமன்றில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் வேதனைமிக்க சிசிடிவி காணொளி காண்பிக்கப்பட்டது. அதில் சிற்றம்பலம் தைரியமாக தாக்குதல்காரர்களின் கத்தியை தட்டிவிட முயற்சித்துள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன் அவர் இளைஞர்களின் மிரட்டல்களுக்கு அடிபணியவும் இல்லை, அவர்களின் நடத்தைகளை கண்டு அஞ்சவுமில்லை எனவும், அவர் தனது கடையை திறக்கும் வேலையை தொடர்ந்துள்ளார் எனவும் நீதிபதி எலிசபெத் நிக்கோலஸ் தெரிவித்துள்ளார்.

கடையின் பூட்டை திறப்பதற்காக அவர் கீழே குனிந்த போது கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அந்த இளைஞர்களில் ஒருவர் அவரது முகத்தில் கடுமையாக உதைத்துள்ளார்.

ஒருவர் வேகமாக உதைத்தமையினால் அவர் பின் பக்கமாக விழுந்ததனை இந்த காணொளியில் பார்க்க முடிகின்றது. மற்றைய இருவரும் அவரது தலையில் உதைத்துள்ளனர்.

அந்த சந்தர்ப்பத்தில் இது ஒரு வினோத சம்பவமாக மற்றவர்களுக்கு காட்டுவதற்கு மூவரில் ஒருவர் சம்பவத்தை தொலைப்பேசியில் வீடியோ செய்துள்ளார். இதனை அவமானமாக பார்ப்பதோடு இந்த வழக்கில் கிட்டத்தட்ட உறைய வைக்கும் அம்சமாக இது பார்க்கப்படுகின்றது.

இந்த வழக்கின் ஒரு சாட்சியாளராக மத்தேயு மெக்லாரன், சம்பவத்தை நீதிமன்றில் விபரித்துள்ள நிலையில், இந்த இனவாத குழுக்கள் பயன்படுத்தி ஒவ்வொரு வார்த்தைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட இலங்கையர் தான் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் அல்ல என கூற முயற்சித்துள்ள போதிலும் அந்த இளைஞர் தங்கள் இனவாத துஷ்பிரயோகங்களை தொடர்ந்து முன்னெடுத்துள்ளதாக, இந்த வழக்கை முன்னெடுத்த நிக்கோலஸ் வாக்கர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் 16 வயதுடைய ஒரு இளைஞர் மற்றும் 15 வயதுடைய இளைஞருக்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு மற்றைய 16 வயதுடைய இளைஞருக்கு இரண்டு வருட சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

100 வயதில் ஆச்சரியப்படுத்தும் மூதாட்டி!!

உலக மகளிர் தினத்தை, பல விதங்களில் கொண்டாடுவோர், விதவிதமான வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ளும் நிலையில், 100 வயது பாட்டி லட்சுமி அம்மாள், அன்றாட நிகழ்வுகளை, நமது நாளிதழில் படித்து, விவாதித்து மற்றவர்களை ஆச்சரியப்படுத்துகிறார்.

தமிழ்நாடு, மதுரை, சத்யசாய் நகரில் வசிக்கும் இவர், 1917ல் கடலுாரில் பிறந்தார். அப்பா சீனிவாச ஐயர். இவருடன் பிறந்தவர்கள், ஒன்பது பேர்.

‘ராலிஸ் இந்தியா’ நிறுவனத்தில், உயர் பொறுப்பில் இவரது அப்பா பணிபுரிந்துள்ளார். அதனால், பல மாநிலங்களுக்கும், அவரோடு பயணப்பட்டுள்ளார்.

ஆந்திராவில் கடப்பா, விஜயவாடா, கர்னுால் என, பல ஊர்களில் படித்தாலும், விருத்தாசலத்தில், ஐந்தாம் வகுப்போடு, கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவருக்கு, 10 வயதில் திருமணம்; கணவர் ராஜாராமையர், மாயவரத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார்.

இப்போது, லட்சுமி அம்மாள், தன் தம்பி மகன் சுவாமிநாதனுடன், சத்யசாய் நகரில் வசித்து வருகிறார். தினமும், நமது நாளிதழை வரி விடாமல் படிக்கும் இவர், தற்போதைய அரசியல் களத்தை விளாசி தள்ளுகிறார். துல்லியமாக காது கேட்கவில்லை. எந்த கேள்வியை எழுதிக் கொடுத்தாலும், பதில் அளிக்கிறார்.

இனி அவரே பேசுகிறார்….வீட்டில் சுவாமிநாதனுடனும், அவரது மனைவி பானுமதியுடன் தான் விவாதிப்பேன். தினமலர் நாளிதழில் ஆன்மிக மலர், சிறுவர் மலர், வார மலர் என அத்தனை இணைப்புகளையும் படிப்பேன். சின்ன வயதில், அப்பாவுடன் பல ஊர்களுக்கு பயணித்ததால் அன்றாட நிகழ்வுகளை, மாறுதல்களை அறியும் வாய்ப்பு கிடைத்தது.

இது, புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தியது. இப்போது, வயதான நிலையிலும், என் அன்றாட பணிகளை நானே செய்கிறேன். யார் எங்கே இருந்தாலும், சௌக்கியமா இருக்கணும் என்பது தான் என் பிரார்த்தனை, ஆசீர்வாதம் என்று என்று அவர் கூறினார் .