பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் கிடைக்காமையினால், மாணவி ஒருவரின் எதிர்கால கனவு கலைந்துள்ளது.
சூரியவெவ, தெலவில்ல மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற மாணவிக்கு, அனுமதி கடிதம் கிடைக்காத காரணத்தினால் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.
எல்.ஜீ.எச் நாயனா சஞ்ஜீவனி என்ற மாணவி 2015ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ள நிலை, அவருக்கு A மற்றும் இரண்டு B சித்திகள் கிடைத்துள்ளன.
இந்த சித்தி பல்கலைக்கழக வாய்ப்பை பெற்றுக்கொள்ள போதுமானதாக இருந்தமையினால், நாயனா விண்ணப்பம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அவர் எதிர்பார்த்ததனை போன்று ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு அவர் தெரிவாகியுள்ளார்.
அதற்கமைய ஜனவரி மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் அவர் பதிவு செய்ய வேண்டும், எனினும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அனுப்பிய கடிதம் பெப்ரவரி மாதம் ஆறாம் திகதியே அந்த மாணவிக்கு கிடைத்துள்ளது.
நாயனா வசிக்கும் தெலவில்ல என்ற கஷ்டப்பட்ட கிராமத்திற்கு உப தபால் நிலையம் ஒன்று உள்ள போதிலும், கடிதங்களை பகிர்வதற்கு ஊழியர்கள் இல்லாமை பெரும் குறையாக உள்ளது. மக்கள் தங்களுக்கு வரும் கடிதங்களை பெற்றுக் கொள்ள பல கிலோமீற்றர் தூரம் செல்ல வேண்டும்.
தந்தையின் சுகயீனம் காரணமாக அவருக்கு குறித்த வாரத்தினுள் தபால் நிலையத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டமையால் அவரது பல்கலைக்கழக கனவு கலைந்து போயுள்ளது.
“என்னை எப்படியாவது பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி, நான் பட்டம் ஒன்றை பெறுவதனை எனது பெற்றோர் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர். அதற்காக அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியில் என்னை படிக்க வைத்தார்கள். எவ்வளவு கஷ்டப்பட்டும் பட்டதாரி கனவு தற்போது கலைந்துவிட்டது.
தன் கணவர் சுகயீனமாக இருந்த நிலையில் கூலி வேலை செய்து தனது மகளை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பும் அளவிற்கு கொண்டு வந்துள்ள போதிலும் அவரது பட்டதாரி கனவு கலைந்து விட்டது. தனது மகளின் வாய்ப்பை இல்லாமல் செய்ய வேண்டாம் என தான் அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்வதாக நாயானாவின் தாயார் கேட்டுக் கொண்டுள்ளார்.
போதுமான அளவு ஊழியர்கள் தபால் நிலையத்தில் இல்லாமையே இதற்கு காரணமாகும். இந்த மாணவின் எதிர்கால கனவு சிதைந்து போனமைக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். சலக கிராமங்களிலும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முந்தானை முடிச்சு, ஆண்பாவம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் தவக்களை இன்று சென்னை வடபழனியில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக் குறைவால் காலமானார். ஆந்திராவின் நெல்லூரை சேர்ந்தவர் தவக்களையின் இயற்பெயர் சிட்டிபாபு.
1983 ஆம் ஆண்டு ஏவி.எம்.புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே.பாக்கியராஜின் இயக்கத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற முந்தானை முடிச்சு படத்தைப் பார்த்திருப்பவர்கள் அதில் கதாநாயகி நடித்திருந்த ஊர்வசியையும் அவருடன் இணைந்து நடித்திருந்த மூன்று பொடியன்களையும் நிச்சயம் மறந்திருக்கமாட்டார்கள்.
இப்பொடியன்களை விலக்கி வைத்துவிட்டு அப்படத்தை நிச்சயமாக எவராலும் இரசித்திருக்க முடியாது. அவ்வாறு ஒரு வெற்றிக் கூட்டணியாக படம் முழுக்க கலாய்த்தவர்கள் இச் சிறுவர்கள்.
அவர்களில் குறிப்பிடத்தக்கவர்தான் தவக்களை என்ற சிறுவன். படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர்தான் தவக்களை. அந்தக் கதாபாத்திரத்தின் பெயரே பின்னாளில் அவருக்கு நிலைத்துவிட்டது. அத்துடன் ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு மேல் ஓஹோவென படங்களில் கொடிகட்டி பறந்தவர் இந்த தவக்களை. பார்ப்பதற்குத்தான் பொடியன். ஆனால் 1983லியே இச்சிறுவனின் வயது 13.
இவரது தாய் மொழி தெலுங்கு. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் முன்னணிக் கலைஞர்களுடன் நடித்துள்ளார். இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், நவாபேட்டை. இவருக்கு நன்றாக நடனமாட வரும். நடிகை அனுராதாவின் தந்தை கிருஷ்ணகுமாரிடம் நடனம் கற்றிருக்கிறார்.
தாயின் பெயர் சுப்புலட்சுமி, தந்தை பெயர் விஜயகுமார். இவரும் ஒரு நடிகர். ‘முந்தானை முடிச்சு’ படத்தில் நடிக்க வருவதற்கு முன்னரே தமிழ், தெலுங்கு மொழிகளில் குரூப் டான்சில் சுமார் 20 படங்களில் நடித்திருக்கிறார். ‘பயணங்கள் முடிவதில்லை’ தமிழில் சிட்டிபாபுவை ஓரளவிற்கு அடையாளம் காண வைத்த படம்.
‘பொய் சாட்சி’ படத்தின் துணை நடிகர் முகவராக இவரது தந்தை இருந்த காரணத்தால் ஒருநாள் அருணாசலம் ஸ்டுடியோவிற்கு படப்பிடிப்பின்போது தந்தையுடன் சென்றிருக்கிறார். அப்போது நடிகர் குள்ள மணிதான் இவனை நடிகர் பாக்கியராஜிடம் சென்று அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இயக்குநர் கே.பாக்கியராஜ் சென்னையில் தான் எப்போதோ பார்த்த இச்சிறுவனை ஞாபகத்திற்குக் கொண்டு வந்து ‘முந்தானை முடிச்சு’ படத்திற்குத் தேர்வு செய்து, ஏவி.எம்.மிற்கு அழைத்துச் சென்றார். கோபிச்செட்டிப் பாளையத்திற்கும் அழைத்துச் சென்றார். படம் வெளிவந்த பின் பையன் ஏகத்துக்கும் பிஸியாகிவிட்டான். ‘முந்தானை முடிச்சு’ ஆரம்ப, அறிமுக, பாராட்டு விழாக்களில் பங்கேற்றான். ஒரே வருடத்தில் பல மேடைகளைப் பார்த்து பெரிய ஆளாகிவிட்டான்.
தமிழ்ப் படங்களில் நடிக்கத் தொடங்கும் முன்பே இவர் ‘நேனு மா அவிடே’ [1981] போன்ற சில தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். மேலும், தமிழில் ‘ஆண் பாவம்’, ‘ஓசை’, ‘என் இரத்தத்தின் இரத்தமே’, ‘நீங்கள் கேட்டவை’, ‘தங்கமடி தங்கம்’, ‘நாலு பேருக்கு நன்றி‘, ‘பொண்ணு பிடிச்சிருக்கு‘, ‘நேரம் நல்ல நேரம்‘, ‘ஆத்தோர ஆத்தா‘, ‘மணந்தால் மஹாதேவன்‘ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த தவக்களையின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.
ஈழத்தின் தலைசிறந்த பாடகர் எஸ்.ஜி. சாந்தன் இன்று பிற்பகல் 2 மணியளவில் காலமானார்.
பிரபல தென்னிந்திய பாடகர் ஆலங்குடி சோமு தெய்வம் திரைப்படத்திற்காக பாடிய “மருதமலை மாமணியே முருகையா” என்ற பாடலை 1972ம் ஆண்டு கொழும்பில் சிறுவனாயிருந்தபோது ஏதேச்சையாக பாடியதிலிருந்து சாந்தனின் கலைப்பயணம் ஆரம்பமாகியது.
தொடர்ந்து பல புரட்சிப் பாடல்கள் பாடியதோடு எண்பதுகளின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்து பன்னூறு தமிழீழ எழுச்சிப் பாடல்களைப் பாடியிருந்தார். போராட்ட காலத்தில் தமிழீழத்தின் ஆஸ்தான பாடகராய் மிகுந்த மரியாதைக்குரியவராய் வலம்வந்தவர் சாந்தன்.
எண்பதுகளின் இறுதியில் “இந்த மண் எங்களின் சொந்த மண்” என்ற பாடலில் ஆரம்பித்து “களம் காண விரைகின்ற வேங்கைகள் நாங்கள்….”, “ஆழக்கடல் எங்கும் சோழ மகராஜன்..”, “கரும்புலிகள் என நாங்கள்…”, “எதிரிகளின் பாசறையை தேடிப் போகிறோம்” முதலான நூற்றுக்கணக்கான எழுச்சிப் பாடல்களும் “பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்” முதலான பக்திப் பாடல்களும் பாடியிருந்தார்.
போராட்ட எழுச்சியை ஈழத்தின் தமிழ் இளைஞர் யுவதிகளிடையே ஊட்டியதில் சாந்தனின் கணீரென்ற உச்ச ஸ்தாயி குரலுக்கு பெரும் பங்குண்டு.
கடும் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டுவந்த சாந்தன் கடந்த வருடம் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்துகொண்டர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் கடந்த மாதம் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டசம்பவம் தொடர்பில் பொலிசாரல் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த மாதம் 11ம் திகதி பிற்பகல் வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் உள்ள வீடுஒன்றில் இருந்து இளைஞன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம்தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா மன்னார் மாவட்ட உதவிப் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்சிசிர குமார ஆகியோரின் வழிநடத்தலில் வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்பியசிறி பெர்னாந்து அவர்களின் மேற்பார்வையில் பிராந்திய தீர்க்கப்படாதகுற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ரட்ணதிலக தலைமையில் ஜேசுதாசன் (42521),பம்பரதெனிய (2139), விதுர (27747), கருணாதிலக (52391), ஜீவானந்தம் (45401),வீரசேன (48448), நிசாந்த (59517), பிரசன்ன ( 81200), ஒந்திக (88610), சானக்(12159) அதுல (80891) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழு தீவிர விசாரணைகளைநடத்தியிருந்தது.
இதனடிப்படையில் இது கொலையென தெரிவித்த பொலிசார் சந்தேகநபரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் குறித்த கொலையுடன் தொடர்பு பட்டதாக கொலை நடந்த தினத்தன்று அவ்வீட்டில் நின்ற ஒருவரையே பொலிசார் தேடி வந்தனர்.
அவ்வகையில் மருதானை பகுதியில்ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் தெபுவன, மதுகம பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் சிலவற்றில் தொடர்புபட்டிருந்த நிலையில் தலைமறைவாகி வவுனியாவில் வசித்து வந்ததாகவும், வவுனியாவில்இடம்பெற்ற கொலையின் பின் மருதானைப் பகுதியில் சென்று வசித்து வந்ததாகவும்விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த நபரை வவுனியா நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கைஎடுத்துள்ளனர்.
புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் போட்டி கடந்த 23ம் திகதி புனேவில் ஆரம்பமானது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து, இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 441 ஓட்டங்களை நிர்ணயித்தது.
இன்னும் இரண்டு நாட்கள் மீதம் உள்ள நிலையில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மைதானத்தில் நடந்தது வேறு.
கடின இலக்கை துரத்திய இந்திய அணி, அவுஸ்திரேலிய அணியின் அசத்தல் சுழலில் மீண்டும் ஆட்டம் கண்டது. ஆரம்பம் முதல் தடுமாறிய இந்திய அணிக்கு முரளி விஜய் (2), ராகுல் (10) துவக்கத்திலேயே இருந்த இரண்டு ரிவியூவையும் வீணடித்தனர்.
பின் வந்த கோஹ்லி (13) ஸ்டீவ் ஓ கெபி பந்தை தவறாக கணித்தால், போல்டானார். அடுத்து வந்த ரகானே (18), அஷ்வின் (8), சகா (3), புஜாரா (31), ரவிந்திர ஜடேஜா (3) என ஒ கெபி சுழலை தாக்குபிடிக்க முடியாமல் வெளியேறினர்.
இதையடுத்து இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 107 ஓட்டங்களுக்குள் சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது
மேலும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் அவுஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் கீபே தெரிவு செய்யப்பட்டார். இவர் இரண்டு இன்னிங்சிலும் 12 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைக்கு மது கொடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் மொனராகலை பஹலகம ஒக்கம்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
33 வயதுடைய நபர் ஒருவரே இரண்டு வயதுடைய குழந்தைக்கு இவ்வாறு மதுவை கொடுத்துள்ளார்.
கைது செய்த நபரை வெல்லவாய மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றது.
வவுனியா பாரதிபுரம் விக்ஸ்காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் எனக் கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக கடந்த (22.02.2017) காலை 10 மணிக்கு ஆரம்பித்த போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
மேலும் சிறுவர்கள், முதியவர்கள் எனப் பலரும் இரவிரவாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றையதினம் இவர்களுக்கு வாக்குறுதியளித்து கடிதம் வழங்கப்படும் என வவுனியா மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வவுனியாவில் நேற்று (24.02.2017) காலை 11.30 மணியளவில் கந்தசாமி ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்ட கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணமால் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றினை சுழற்சி முறையில் இரண்டாவது நாளாக இன்றும் மேற்கொண்டுவருகின்றனர்.
கடந்த மாதம் சாகும்வரை உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு 4ஆவது நாளுடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் வாக்குறுதியை அடுத்து உணவுத் தவிர்ப்புப் போராட்டம் கைவிடப்பட்டதுடன் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவு ஏதும் எட்டப்படாத காரணத்தினால் தாம் தொடர் போராட்டம் ஒன்றை சுழற்சி முறையில் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
அப்பா, அம்மா, அண்ணன் என மற்றவர்களிடம் உதவி நாடி இருக்காமல், உங்கள் சொந்த காலில் நிற்கும் அளவிற்கு நீங்கள் நல்ல நிலையை அடைந்திருக்க வேண்டும்.
நால்வருக்கு உதவ வேண்டும் என்பதில்லை, யாருடைய உதவியும் இன்றி வாழ்வது என்பதே ஓர் பெரிய கெளரவம் தான்.
உலகம் சுற்றும் வாலிபன்
குறைந்தபட்சம் சிங்கபூர், மலேசியாவாவது சென்று வந்துவிட வேண்டும். புது இடம், புதிய கலாச்சாரம் உங்களை நீங்களே மெருகேற்றிக் கொள்ள, புத்துணர்ச்சி அடைய பெருமளவு உதவும்.
பேரார்வம்
பேரார்வம் என்பது உங்கள் வேலையை குறிப்பது. ஆரம்பத்தில், வேலை வேண்டும் என்பதற்காக ஏதாவது வேலையில் சேர்ந்திருக்கலாம். ஆனால், 30 வயதுக்குள்ளாவது உங்களுக்கு பிடித்த துறை / தொழில் / வேலையில் சேர்ந்துவிட வேண்டும்.
தோல்வி
தோல்வியில் கற்காத பாடத்தை நீங்கள், வேறு எங்கும் கற்க முடியாது. தோல்வி உங்களை ஒழுங்குப்படுத்தும் ஆசான்.
ஓர் தோல்வியையாவது நீங்கள் சந்தித்துவிட வேண்டும். இல்லையேல், 30 வயதை கடந்த வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை கையாள முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படலாம்.
முதலீடு
சம்பாதித்த பணத்தை, வருமானம் ஈட்டும் வகையில் எதிலாவது முதலீடு செய்து வைத்துவிட வேண்டும். அதை செலவு செய்யாமல், வருங்காலத்திற்காக சேமிக்க வேண்டும்.
தீய பழக்கம்
ஏதேனும் ஒரு கெட்டப் பழக்கத்தையாவது 30 வயதுக்குள் நிப்பாட்டி விட வேண்டும். புகை, மது, கெட்ட வார்த்தை பேசுதல், பெண்மையை கொச்சையாக எண்ணுதல் என எதையாவது ஒன்றையாவது.
எந்த கெட்டப் பழக்கமும் இல்லையா?. நீங்களே உங்களுக்கு ஒரு சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில், தூய நல்லவர்களை இந்த உலகம் கேலி கிண்டல் தான் செய்யும்.
உண்மையான நட்பு
எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், எவ்வளவு பெரிய வெற்றி வந்தாலும், உங்கள் அருகில் நின்று தோள் கொடுக்க ஓர் தோழமை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான தோழமை அமைத்துக் கொள்ள வேண்டும்.
பிடிக்காவிடில் பிரிவு
ஓர் நபருடன் பழகுவது பிடிக்கவில்லையா, உங்கள் சுற்றதிர்காகவும், அலுவலக நண்பர்களுக்காகவும் விட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்களா?. வேண்டவே வேண்டாம். முற்றிலுமாக பிரிந்துவிடுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு நல்லது நினைக்கும் நபர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு இனி நீங்கள் பயணம் செய்வது தான் நல்லது.
சேமிப்பு
பெரும்பாலும் 30 வயதை கடக்கும் போது, சிலர் திருமணம் ஆகியும், சிலர் குழந்தை குட்டி என இருப்பார்கள். எனவே, அடுத்த தலைமுறைக்கான சேமிப்பை அளவிற்கு குறையாமல் எடுத்து வைக்க வேண்டும். இது உங்களுடைய கடமை.
கைதேர்ந்தவர்
நீங்கள் செய்யும் பணியில் நீங்கள் கைதேர்ந்தவர் என்ற நற்பெயருடன் விளங்க வேண்டும். அட, அவரு கிட்ட இந்த வேலைய கொடுங்க, சரியா செய்வார் என நால்வர் கூற வேண்டும்.
ஆராய்ந்து செயல்படுதல்
கனிமங்களை ஆராய தெரிந்தவர்கள் தான் ஆராய்ச்சியாளர்கள் என்றில்லை. மனிதர்களை ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
நேரம் பொன் போன்றது
நேரத்தை அளந்து செலவு செய்ய வேண்டும். 30 வயதுக்கு மேல் நேரத்தை வீண் விரயம் செய்வது, உங்கள் வாழ்க்கையில் பெரும் இழப்பாக அமையும்.
நீங்களாக இருங்கள்
மற்றவர்களுக்காக உங்களை மாற்றி அமைத்துக் கொண்டு வாழ தேவையில்லை. நீங்கள் நீங்களாக வாழ வேண்டிய தருணம் இது.
படிப்பில் உயரம்
உங்கள் துறை சார்ந்த படிப்பில், முழுமை அடைந்திருக்க வேண்டும். பி.எச்.டி முடித்தால் முழுமை என்றில்லை. இன்றைய அப்டேட் என்ன என்று அறிந்து வைத்திருந்தாலே போதுமானது.
கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறும் என்ற பிரச்சாரம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.
இந்தாண்டு முதல் சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் நடத்தப்படாது எனவும், ஒக்ரோபர் மாதம் நடைபெறும் எனவும் இணையம் வழியாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு புலனாய்வுப் பிரிவிடம் கோருவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பேராசிரியர் அமல் குணரட்ன என்ற பெயரிலான ஒருவரினால் அரச இலச்சினை பொறிக்கப்பட்ட ஆவணமொன்றின் மூலம் இவ்வாறு சாதாரண தரப் பரீட்சை ஒக்டோபர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையிலான குழுவொன்று இவ்வாறு கூடி தீர்மானித்துள்ளதாக பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை வழமை போன்று எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ளதாகவும் ஒக்ரோபர் மாதம் பரீட்சை நடாத்துவது குறித்து எந்த இடத்திலும் பேசப்படவில்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் என்.ஜே. புஸ்பகுமார கொழும்பு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இங்கிலந்து கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் டய்ட் கிரிக்கெட் பயிற்சியின் போது பந்து தலையில் பலமாக தாக்கியதால் மைதானத்தில் சரிந்து விழுந்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் பிராட்போர்ட் பிரீமியர் லீக் போட்டி நடைப்பெற்று வருகின்றது. இந்த போட்டியில் பங்கேற்ற லைட்கிளிப் கிரிக்கெட் கிளப் வீரர் அலெக்ஸ் டய்ட் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அலெக்ஸின் இரு கண்களுக்கு இடையே பந்து மிக பலமாக தாக்கியது. இதனால் நிலை குழைந்து விழுந்த அலெக்ஸை மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
அலெக்ஸை சோதனை செய்த மருத்துவர்கள், அவர் தலையில் 15 எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதோடு, அவரின் கண்கள், காது ஆகிய உறுப்புகளுக்கான நரம்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டைட்டின் அறுவை சிகிச்சைக்காக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர் நன்கொடையளித்து வருகின்றனர்.
சர்வதேச அளவில் தற்கொலையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா போல குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 5 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 கோடி பேர் மனநலக் கோளாறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் சுமார் 32 கோடிக்கும் அதிகமானோர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் அதிகமான பேர் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வசித்து வருகின்றனர். இந்தியா, சீனா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
மேலும் 15 முதல் 29 வயதுடைய இளம் பருவத்தினரே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர். மட்டுமின்றி மன அழுத்த நோயால் ஆண்களை விட பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 7,88,000 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதேபோல், கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரையான 10 ஆண்டு காலகட்டத்தில் உலகம் முழுவதும் மன அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 18.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவில் சராசரியாக 40 விநாடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் மீது தமக்கு அக்கறை இல்லை என்றும் ஆனால் அவர் பயன்படுத்திய பேனா மட்டும் போதும் என ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு சென்று தீபா அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய தீபா, தனது சகோதரர் தீபக்கின் பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார் என்று குற்றம் சாட்டினார்.
போயஸ் தோட்ட இல்லம் தனக்கும் தீபாவிற்கு மட்டுமே சொந்தம் என்று தீபக் கூறியதற்கு, தமக்கு சொத்துக்களின் மேல் ஆசையில்லை என்றார். மேலும் ஜெயலலிதா பயன்படுத்தி வந்த பேனா ஒன்று மட்டும் போதும் எனவும் அவர் கூரியுள்ளார்.
ஆனால் ஜெயலலிதாவின் சொத்து மீது ஆர்வம் இல்லை என குறிப்பிடும் தீபா ஏன் ஜெயலலிதா பயன்படுத்திய பேனா மீது குறியாக இருக்கிறார் என்ற கேள்வி அரசியல் நோக்கர்களிடையே எழுந்துள்ளது.
ஜெயலலிதா பயன்படுத்தியதாக கூறும் அந்த பேனா ஒரு பென் டிரைவ் எனவும், அதில் தான் அவரது சொத்து தொடர்பான தகவல்களும் மற்றும் பல ரகசியங்களும் பாதுகாத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பிட்ட பேனா வெளிநாட்டில் இருந்து நண்பர் ஒருவரால் ஜெயலலிதாவுக்கு பரிசளிக்கப்பட்டது எனவும், அதன் பின்னர் அவர் அந்த பேனாவில் தான் அனைத்து தகவல்களையும் சேமித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதேபோன்று எம்.ஜி.ஆர் தனது சொத்து தொடர்பான அனைத்து தகவல்கள் அடங்கிய ரகசிய எண் ஒன்றை தனது கைக்கடிகாரத்தில் சேமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த கடிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் பல முயற்சிகளும் பலரால் மேற்கொள்ளப்பட்டது எனவும் பரவலாக கூறப்பட்டது.
தற்போது தீபா, ஜெயல்லிதாவின் பேனா மீது நோட்டம் விட்டுள்ளது, ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை அறிந்து கொள்ளவும் அல்லது ஜெயலலிதா தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளவுமே எனவும் பேசப்படுகிறது.
மட்டுமின்றி, இதுவரை சசிகலா தரப்பில் இருந்தோ அல்லது ஓ.பி.எஸ் அணி சார்பாகவோ அந்த பேனா குறித்து எவரும் பேச்செழுப்பாத போது, அந்த பேனாவின் முக்கியத்துவம் அறிந்தே தீபா தற்போது கோரிக்கை விடுத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
மேலும் எதிர்காலத்தில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கலாம் எனவும் சசிகலா தரப்புக்கு எதிராக அது திரும்பலாம் எனவும் கூறப்படுகிறது.
கொழும்பு புறக்கோட்டையில் நேற்று(24.02) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது காலாவதியான 2 ஆயிரத்து 600 கிலோகிராம் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சுற்றிவளைப்பு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, அரசங்கத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கும் அதிகமான விலையில் 3 ஆயிரம் கிலோகிராம் அரிசியும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், நாடு முழுவதும் இந்த மாதம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் மூலமாக 1762 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 1264 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாத் பதியூதீனின் டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
காணாமல் போனதாக கூறப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் 5.30 மணியளவில் குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு வாகரைப் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட அம்பந்தாம்வெளி கிராம அபிவிருத்திச் சங்க செயலராகிய விநாயகமூர்த்தி பிரேமகாந்த (வயது (29) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பாக வாகரைப் பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த நபர் காணாமல் போயிருந்தாக தெரிவித்து உயிரிழந்தவரின் பெற்றோர்களினால் வாகரைப் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தாக தெரியவருகின்றது.
காணாமல்போய் சுமார் ஆறு நாட்கள் கடந்த நிலையில் உயிரிழந்தவரின் வீட்டில் இருந்து சுமார் 800 மீற்றருக்கு அப்பால் உள்ள பாழடைந்த கிணற்றில் குறித்த சடலம் கிடப்பதை அறிந்து உடனடியாக பொலிசாருக்கு தெரியப்படுத்திய நிலையில் பொலிசார் குறித்த இடத்திற்கு வருகைதந்து மேலதிக விசாரணையை மேற்கொண்டனர்.