தனது வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக வவுனியா பிரதேச இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்ரீகரன் கேசவன் தெரிவித்துள்ளார்.
மேலும், இனம், மதம் பேதமின்றி அனைத்து இளைஞர் கழகங்களுக்கும் நன்றிகளையும், பாராட்டுக்களையும தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று இடம்பெற்ற நிலையில், அதன் முடிவுகள் இன்று வெளியாகியிருந்தன. இந்நிலையில் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் போட்டியிட்ட ஸ்ரீகரன் கேசவன் வெற்றி பெற்றிருந்தார்.
இதனையடுத்து, இன்று இரவு 7.30 மணியளவில் வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்து அவர், தனக்கு பாரிய பொறுப்பினை வழங்கியுள்ளீர்கள். தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை நிச்சயம் சரிவர மேற்கொள்வேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நகை மற்றும் பணத்துக்கு ஆசைப்பட்டு பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த மோசடி பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரை சேர்ந்தவர் மேகா பார்கவ் (28).
இவர் மீது கொச்சியை சேர்ந்த ஜஸ்டின் என்பவர் தன்னை திருமணம் செய்த மேகா தனது 15 லட்ச ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு தலைமறைவாகிவிட்டார் என பொலிசில் புகார் அளித்தார்.
இதையடுத்து தனது ஊரில் இருந்த மேகா மற்றும் அவரது சகோதரி பிராச்சி ஆகியோரை பொலிசார் கைது செய்தார்கள்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், தற்போது புகார் கொடுத்த ஜஸ்டீன் மேகாவின் நான்காவது கணவர் ஆவார்.
இதற்கு முன்னரே மூன்று பேரை திருமணம் செய்து அவர்களிடமும் பணம் மற்றும் நகையை மேகா ஏமாற்றியுள்ளார் என பொலிசார் கூறியுள்ளனர்.
இதனிடையில், தான் பல பேரை திருமணம் செய்தது உண்மை தான் எனவும், தான் யாரையும் ஏமாற்றவில்லை என மேகா பார்கவ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 15 வயது சிறுமியை பெற்றோரே எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜம்மாள், முன்னாள் ஊராட்சித் தலைவரான இவருக்கு 15 வயது மதிக்கத்தக்க மகள் ஒருவர் இருந்துள்ளார். இவரை கடந்த ஆண்டு தமது கிராமத்திற்கு அருகே உள்ள பொட்டனம் கிராமத்தைச் சேர்ந்தவரான ஓட்டுநர் சுரேஷ் குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
இத்திருமணம் குழந்தை திருமணம் என்பதால் மாவட்ட அதிகாரிகள் சிறுமியை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில் சிறுமியை படிக்க வைப்பதாக உறுதியளித்து பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் சிறுமியை படிக்க வைக்காமல், திருமணம் செய்து வைத்த சுரேஷ் குமாருடன் மீண்டும் இணைந்து வாழும்படி வற்புறுத்தியுள்ளனர்.
இதையறிந்து மீண்டும் சிறுமியை குழந்தைகள் நலக் காப்பகத்திற்கு அதிகாரிகள் அழைத்து வந்துள்ளனர்.
இந் நிலையில், கடந்த வாரம் சிறுமியை பெற்றோர் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், நேற்று அந்த சிறுமி திடீரென உயிரிழந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த பொலிசார் பெற்றோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் தான் அச்சிறுமியை துடிதுடிக்க எரித்து கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து பொலிசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்திய தலைநகர் டெல்லியில் 2 இளைஞர்கள் சேர்ந்து 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்திய சம்பவம் அகடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் உத்தம்நகர் பகுதியில் குறித்த வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. கடந்த 13 ஆம் அதிகதி குறித்த இளைஞர்கள் இருவரில் ஒருவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பாதிக்கப்பட்ட சிறுமியை அவர்கள் அழைத்துள்ளனர்.
நண்பர்கள் என்பதால் குறித்த சிறுமியும் அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் சிறுமிக்கு வழங்கிய குளிர் பானத்தில் போதை மருந்து கலந்துள்ளனர்.
இதனையடுத்து சுயநினைவை இழந்த சிறுமியை தோழி என்றும் பாராமல் அந்த இளைஞர்கள் இருவரும் மாறி மாறி பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கியுள்ளனர்.
தொடர்ந்து குறித்த சிறுமியை டெல்லியில் உள்ள மருத்துவமனை வளாகத்தின் அருகாமையில் கைநெகிழ்ந்துவிட்டு இருவரும் தப்பியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள பொலிசார் இளைஞர்கள் இருவர் பேரிலும் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை கடந்த 2 மாதங்களாக அடிக்கடி ஓயாமல் அழுது வந்துள்ளது. இதனால் அப்பகுதில் உள்ள மருத்துவர்களிடம் காட்டியபோது, வயிற்று வலி காரணமாக குழந்தை அழுகிறது எனக்கூறி மருந்து கொடுத்து அனுப்பினர்.
இருப்பினும் குழந்தையின் அழுகை நின்றபாடில்லை. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தையை அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் வயிற்றில் கட்டி உள்ளது, உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றவேண்டும் என தெரிவித்தனர்.
அதன்படி கடந்த 15ம் திகதி அறுவை சிகிச்சை செய்தபோது குழந்தையின் வயிற்றில் வளர்வது கட்டியல்ல, கட்டிபோன்ற உருவில் மற்றொரு சிசு வளர்வதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு குறித்த கட்டியை அகற்றியுள்ளனர். குழந்தையின் எடை சுமார் 7 கிலோ உள்ள நிலையில் அதன் வயிற்றில் வளர்ந்த சிசு சுமார் 100 கிராம் இருந்தது.
இதுகுறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தெரிவிக்க்ஃஐயில், ஹாங்காங் நகரிலுள்ள பிரபல ராணி எலிசபெத் மருத்துவமனையில் ஒரு சீன தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தையின் வயிற்றுக்குள் இரட்டைக் குழந்தைகள் வளர்வதை அறிந்த மருத்துவர்கள் பிரமிப்படைந்தனர்.
அந்த கருக்கள் 8 முதல் 10 வாரங்களாக சூல் கொண்டிருந்ததை அறிந்த மருத்துவர்கள், தொடர்ந்து அவைகளை ஆய்வு செய்தபோது, அவற்றுக்கு கால்கள், கைகள், ஒரு முதுகு, விலா மற்றும் தொப்புள் கொடி போன்ற முக்கிய உறுப்புகள் உருவாகி இருந்ததும்,
தோலால் மூடப்பட்ட அந்த இரண்டு கருக்கள் 14.2 மற்றும் 9.3 கிராம் எடை கொண்டிருந்ததும் தெரியவந்தது. 5 லட்சம் குழந்தைகளில் ஒன்றுக்கு இப்படி நடக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், மருத்துவ வரலாற்றில் இதுவரை 200 முறை இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் வயிற்றுக்குள் இருந்த கரு உருவாக காரணமாக ஒன்றை கருத முடிகிறது. அந்த குழந்தை தனது தாயின் வயிற்றில் தரித்த பின்னர்,
அந்தக் கருவுக்குக் காரணமான தம்பதியர் தாம்பத்திய உறவில் ஈடுபட்ட வேளையில் தந்தையின் விந்தணுக்களானது, தாயின் வயிற்றில் ஓரளவுக்கு வளர்ச்சி பெற்றிருந்த அந்த பெண் குழந்தையின் கருவறைக்குள் நீந்தி சென்றதால் இந்த விளைவு ஏற்பட்டிருக்கக் கூடும் என குறித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் பரிஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஞாயிற்று கிழமை (நேற்று) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், காயமடைந்த இருவரின் நிலையும் கவலைக்கிடமான முறையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, குறித்த பகுதியினை பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் பெரும் பதற்றமாக இருப்பதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, குற்றத்தடுப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் தொழில் நுட்ப பிரிவினர் இணைந்து தடயங்கயைம், சாட்சிகளையும் சேகரித்து வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தங்கைக்காக பரீட்சைக்குத் தோற்றிய தமக்கை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை பொலிஸார் குறித்த யுவதியை கைது செய்துள்ளனர். ஹம்பாந்தோட்டை சுச்சீ தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் சார்பில் அவரது சகோதரி பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
பரீட்சையின் போது ஆள் மாறாட்டம் ஏற்பட்டுள்ளதனை கண்டறிந்த பரீட்சை மேற்பார்வையாளர் இது குறித்து ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த யுவதியை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிலி நாட்டின் பொருளாதார அமைச்சருக்கு வர்த்தகர்களின் சங்கமொன்றினால் பாலியல் பொம்மையொன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிலியின் உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் வருடாந்த இராப்போசன விருந்து வைபவம் தலைநகர் சன்டியாகோவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட சிலி பொருளாதார அமைச்சர் லூயிஸ் செஸ்பெடஸுக்கு மேற்படி சங்கத்தின் சார்பில் பிரபல வர்த்தகர் ஒருவர் பாலியல் பொம்மையொன்றை அன்பளிப்பாக வழங்கினார்.
காற்றடைக்கப்படக் கூடிய, ஆளுயரமான இந்த பாலியல் பொம்மையை, “பொருளாதாரத்தை முன்னேற்றத்தை தூண்டுவதற்காக” வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
இச்சங்கத்தின் வருடாந்த இராப்போசன விருந்தில் கலந்து கொள்ளும் பிரமுகர்களுக்கு வேடிக்கையான பரிசுகளை வழங்குவது வழக்கமாகவுள்ளது. எனினும், அமைச்சர் ஒருவருக்கு பாலியல் பொம்மை வழங்கப்பட்டமை சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது.
சிலியின் ஜனாதிபதி மிஷெல் பச்செல்டும் இது குறித்து விமர்சித்துள்ளார். இவர் சிலி நாட்டின் முதலாவது பெண் ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
“பெண்களுக்கு மதிப்பளிப்பது எனது அரசாங்கத்தின் முக்கிய கொள்கை. உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நடைபெற்ற விடயத்தை சகித்துக் கொள்ள முடியாது” என ஜனாதிபதி மிஷெல் பச்லெட் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மகனின் சிகையலங்காரம் காரணமாக தனது வேலையை ராஜினாமா செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.
வடமேற்கு லண்டனில் வசிக்கும் கிறேக் இமானுவேல் (37), லூஸி தம்பதியின் 7 வயது மகனான மெக்கன்ஸி உள்ள ஆரம்பப் பாடசாலையொன்றில் கல்வி கற்று வருகிறான்.
அண்மையில் மெக்கன்ஸி தலைமயிர் வெட்டிக்கொண்ட பின்னர் பாடசாலைக்குச் சென்றபோது பாடசாலை அதிகாரிகள் மேற்படி சிகையலங்காரத்துக்கு ஆட்சேபம் தெரிவித்திருந்தனர்.
மெக்கன்ஸியின் தலையில் ஒரு புறத்திலுள்ள மயிர் மழிக்கப்பட்டு இருந்தது. கிறேக் இமானுவேலையும் அவரின் மனைவி லூஸியையும் பாடசாலைக்கு அழைத்த அதிகாரிகள், இத்தம்பதியின் மகனின் இச்
சிகையலங்காரம் பாடசாலை மாணவனுக்குப் பொருத்தமானதல்ல, இது ஏனைய மாணவர்களின் கவனத்தை திசைதிருப்பும் எனவும் தெரிவித்தனர்.
இதனால் மெக்கன்ஸியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அதிகாரிகள் கூறினர். மெக்கன்ஸியின் தலைமயிர் மீண்டும் வளர்ந்த பின்னரே அவனை மீண்டும் வகுப்பறைக்கு அனுமதிக்க முடியும் என அதிகாரிகள் கூறினர்.
இதனால் தனது மகனை முறையாக பராமரித்து அவன் மீண்டும் பாடசாலைக்குச் செல்வதை உறுதிப்படுத்துவற்காக, தனது தொழிலை ராஜினாமா செய்துள்ளதாக கிறேக் இமானுவேல் தெரிவித்துள்ளார்.
நிறுவனமொன்றின் களஞ்சியசாலையில் பணியாற்ற ஆரம்பித்து 5 நாட்களில் தான் இத் தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். “நான் அண்மையிலேயே அங்கு பணியாற்ற ஆரம்பித்தேன்.
எனவே எனக்கு அதிகம் அறிமுகம் இல்லாத சக ஊழியர்களுடன் பேசி எனது வேலைநேரத்தை மாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை. எனவே எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினேன்” என்கிறார் கிறேக் இமானுவேல்.
தனியியங்கி படிகள் மூலம் மேல் கட்டிடத்திற்கு செல்ல முனைந்தப் பெண் அணிந்திருந்த கீல்ஸ் வகை பாதணியால் சுயகட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளார்.
தென்சீனாவில் அமைந்துள்ள நான்னிங் புகையிரத நிலையத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்தப் பெண் அணிந்திருந்த பாதணியானது அவரின் உடல் சமனிலையை பேணமுடியாதவாறு சரியவே அவர் பிடிமானங்கள் எதுவும் இல்லாத நிலையில் கீழே விழுந்துள்ளார்.
அத்தோடு அவர் தொடர்ச்சியாக ஏழு தடவைகள் தழைகழாக உருண்டு சென்றுள்ளார் என்பது புகையிரத நிலையத்தில் உள்ள கண்கானிப்பு கமாராவில் பதிவாகியுள்ளது. எனினும் குறித்த பெண் சிரியளவிலான காயங்களுடன் தப்பித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் சீனாவில் இடம்பெறுவது வழக்கமாகியுள்ளது. அண்மையில் தந்தை ஒருவர் தனது இரண்டு வயது மகனை வணிகவளாகத்தின் மேல் தட்டிற்கு தூக்கி செல்கையில் படிகளில் பிடிமானம் இல்லாத நிலையில் கீழே விழுந்து அக்குழந்தை இறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி பிரேஸில் நாட்டின் கழகமொன்றின் கால்பந்து வீரர்கள் பயணம் செய்த விமானம் கொலம்பியாவில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 76 பேர் பலியானர்கள்.
குறித்த விமான விபத்தில் 6 பேர் மட்டுமே உயிர் பிழைத்தார்கள். அதில் ஒருவரான பிரேசில் உள்ளூர் அணியான செப்போசோஷஸ் கால்பந்தாட்ட கழக வீரர் ஆலன் ரூஸ்செல் (27) வைத்தியசாலை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தான் உயிர் பிழைத்ததை பற்றி கூறுகையில், நான் விபத்து நடக்கும் சில நிமிடங்களுக்கு முன்னர் வரை விமானத்தில் கடைசி ஆசனத்தில் அமர்ந்திருந்தேன்.
அப்போது என்னிடம் வந்த கால்பந்து சங்க தலைவர் கடு கௌசோ, நீங்கள் முன் ஆசனத்திற்கு சென்று அமருங்கள். பின்னர் பத்திரிக்கையாளர்கள் சிலர் அமர உள்ளார்கள் என கூறினார்.
நானும் முன் ஆசனத்திற்கு வந்து அமர்ந்தேன். பின்னர் சில நிமிடங்களில் நடந்த விபத்தில் பின் ஆசனத்தில் அமர்ந்து இருந்தவர்கள் எல்லோரும் உயிரிழந்து விட்டார்கள்.
நான் முன் ஆசனத்திற்கு வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 19.12.2016 திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக பூந்தோட்டம் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 11 பேரின் சடலங்களும் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த சடலங்களை விசேட விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. விசேட விமானம் மூலம் ரத்மலானை வான் தளத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து கொழும்பிற்கு கொண்டு வரப்படும் என யாழ்ப்பாணம் மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேர், சங்கத்தானையில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் ஹொரணை – மில்லனிய பிரதேசத்தை சேர்ந்த 5 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.கணபதிப்பிள்ளை நேரில் பார்வையிட்டு மரண விசாரணையை நடத்தினார். தொடர்ந்த யாழ்.போதனாவைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மயூதரன் மேற்கொண்டார்.
இதற்கமைய உயிரிழந்தவர்களின் நெஞ்சு பகுதி மற்றும் வயிற்று பகுதிகளில் பலமாக அடி பட்டிருப்பதாகவும் அதனாலேயே மரணம் சம்பவித்திருக்கிறது எனவும் கூறியுள்ள சட்டவைத்திய அதிகாரி விபத்து சம்பவித்து சில நிமிடங்களிலேயே இவர்கள் மரணித்திருப்பர்கள் எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த 11 பேரில் மாத்தளைப்பகுதியை சேர்ந்தவரின் சடலம் உறவினர்களால் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன் மற்றய 10 பேருடைய சடலங்கள் இலங்கை விமானபடையினரால் விசேட உலங்கு வானூர்தி மூலம் களுத்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வாகனங்கள் ஊடாக அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இதே வேளை உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இன்றைய தினம் அதிகாலை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்திருந்தனர்.
அவர்களுக்கான உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட சகல வசதிகளையும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஒழுங்கமைத்து வழங்கியிருந்தார். இதேவேளை உயிரிழந்தவர்களின் உறவினர்கள் யாழ்.மக்களுக்கு நன்றி கூறியுள்ளனர்.
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நீர் மின் உற்பத்தி இந்த வருடம் 80 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மின் சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.
நீர்த்தேக்கங்களில் 40 வீதம் நீர் மட்டம் காணப்படுவதாகவும், நீர் மின் உற்பத்தி நிலையங்கள் காணப்படும் பகுதிகளிலுள்ள நீரேந்துப் பகுதிகளில் நீர் வற்றிப் போயுள்ளமையே மின் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் நுகர்வோருக்கு தேவையான அளவு மின்சார விநியோகத்தை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மின் சக்தி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடும் வரட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிரமத்திற்கு மத்தியில் பயிற்செய்கையில் ஈடுபட்ட போதிலும், உரிய நேரத்தில் மழை நீர் கிடைக்காமையினால் அம்பாறை திருக்கோவில் விவசாயிகளும் நிர்க்கதியாகியுள்ளனர்.
அம்பாறை திருக்கோவில் பகுதியில் விவசாயத்தை நம்பி சுமார் 2,000 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களுக்கு சாகாமம் குளத்தின் ஊடாகவே நீர் பாய்ச்சப்படுகின்றது.
எனினும் இம்முறை ஏற்பட்ட வரட்சியை தொடர்ந்து சாகாமம் குளம் உள்ளிட்ட ஏனைய நீர்நிலைகள் வற்றிப்போனதால், 500 ஏக்கருக்கும் அதிகமான வயல்நிலம் இதுவரை அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.