மட்டக்களப்பு, கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய பாற்குடப் பவனி (படங்கள்)..!

மட்டக்களப்பு, கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் ஏற்பாட்டில் ஆடிப்பூர பாற்குடப் பவனி மட்டக்களப்பு நகரில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இவ் உற்சவத்தின்போது காவடியும் மயிலாட்டமும் இடம்பெற்றன.

இன்று காலை மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள கோட்டைமுனை வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய பாற்குடப் பவனி திருகோணமலை வீதிவழியாக கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தை வந்தடைந்தது.

அதனைத்தொடர்ந்து அம்பாளுக்கு உகந்த ஆடிப்பூர நட்சத்திரத்தில் பால் அபிஷேகம் நடைபெற்று விசேட பூஜைகளும் நடைபெற்றன.

(ரமணன்)

1 2 3 4 5 6

குத்துப்பாட்டு மூலம் மீண்டும் சினிமாவில் ஐஸ்வர்யா ராய்..!!

iswarya

உலக அழகி ஐஸ்வர்யா ராய் குத்துப்பாட்டுக்கு ஆடப் போகிறார் என்பது பொலிவுட்டின் இப்போதைய பரபரப்புச் செய்தி. அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார் ஐஸ்வர்யா. ஆனால் கர்ப்பமானதும் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

தற்போது ஐஸ்வர்யாவின் மகள் ஆரத்யாவுக்கு ஒன்றரை வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் மறுபடியும் நடிப்பதற்கு ஏகப்பட்ட அழைப்புகள் வருகிறதாம். பொலிவுட் இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி, ராம்லீலா என்ற படத்தை இயக்கி வருகிறார். ரன்வீர் சிங் ஹீரோவாகவும், தீபிகா படுகோன் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் ஐஸ்வர்யாவும் இடம்பெற வேண்டுமென விரும்புகிறாராம் பன்சாலி. எனவே, குத்துப்பாடல் ஒன்றுக்கு நடனமாடும்படி ஐஸ்வர்யாவிடம் கேட்டுள்ளாராம். ஆனால் ஐஸ்வர்யா இன்னும் பதில் சொல்லவில்லையாம்.

ஏற்கெனவே பன்சாலியும், ஐஸ்வர்யாவும் “ஹம் தில் தே சுகே சனம்”, தேவதாஸ், குஸாரிஸ் ஆகிய 3 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். ஐஸ்வர்யா ஓ.கே. சொன்னால் தங்களுடைய படங்களில் நடிக்க வைக்க நிறைய தயாரிப்பாளர்கள் காத்துக் கிடக்கிறார்களாம்.

சென்னையில் திரியும் நாய்களை பட்டிகளில் அடைக்க கூடாது : நடிகை திரிஷா வற்புறுத்தல்!!

trihsa1

நாய்களை பிடித்து பட்டிகளில் அடைக்கும் நடவடிக்கைக்கு நடிகை திரிஷா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து மேயர் சைதை துரைசாமிக்கு திரிஷா எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

30 ஆயிரம் நாய்கள் தெருக்களில் இருந்து கிட்டத்தட்ட 30,000 நாய்களை பிடித்து அவைகளை சென்னையில் 15 புதிய பட்டிகளில் சிறைவைக்கும் ‘பி’ திட்டத்தை கைவிடுமாறு நான் உங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நாய்கள் அவை சுகவீனமாக அல்லது வயதானதாக இருந்தாலும்கூட அவற்றின் ஆயுள்காலம் முழுவதும் பட்டிகளில் அடைத்து வைப்பது கொடுமையானது. அனைத்து வயதில் உள்ள நாய்களுக்கும் அன்றாடம் உடற்பயிற்சி, மன தூண்டுதல் மற்றும் புதிய மணங்களை ஆராயும் வாய்ப்பு மற்றும் இதர நாய்களுடன் சமூக பிணைப்பை உருவாக்குவது தேவைப்படும்.

ஒரு பட்டியில் இந்த விஷயங்கள் எதையும் அவைகளால் செய்ய முடியாது. மற்றும் அதுபோன்ற சூழ்நிலைகளில் பல நாய்கள் கடுமையான சோர்வுக்கு ஆளாகின்றன. மற்றும் அவற்றின் மனங்களை இழக்கின்றன.

இந்த அணுகுமுறையை ஜோத்பூரில் முயற்சித்தபோது விளைவுகள் பயங்கரமாக இருந்தது. அடைத்து வைத்தது பல நாய்களை முரட்டுத்தனமாக மாற்றியது. சண்டைகள் மற்றும் பட்டினியால் இறந்தன. இதேபோன்ற ஒரு நிலை பூட்டானில் தெரு நாய்களை சிறைப்படுத்த அந்நாடு முயற்சித்த போது ஏற்பட்டது.

நாய்களை அவற்றின் ஆயுள் முழுவதும் பட்டிகளில் அடைத்து வைப்பது மிகவும் குரூரமானது மற்றும் இது நாய்களை அவற்றுக்கு சிகிச்சை அளித்தப்பிறகு அல்லது கருத்தடை செய்தப்பிறகு அவைகள் கண்டறியப்பட்ட இடத்திலேயே விட வேண்டும் என உத்தரவிடும் விலங்கு கருத்தடை (நாய்கள்) விதிமுறைகள், 2001ஐ மீறிய ஒரு செயலாகும்.

கடந்த காலத்தில் சென்னையில் நாய் பட்டிகள் பயன்படுத்தப்பட்டன. மற்றும் இந்த அணுகுமுறையானது நாய்கள் பெருக்கத்தையோ அல்லது ரேபிஸ் பரவலையோ கட்டுப்படுத்த தவறி விட்டது. தெருக்களில் இருந்து நாய்களை அப்புறப்படுத்துவதால் அவைகள் இருந்த இடம் காலியாகின்றன. இது அக்கம் பக்க பகுதிகளில் இருந்து வேறு நாய்கள் அங்கு வர வழிவகுக்கிறது.

மேலும் நாய்கள் இனப்பெருக்கம் வேகமாக நடக்கிறது. ஆகவே கருத்தடை செய்யப்படாத நாய்கள் தெருக்களில் இருக்கும் வரை தெரு நாய் பிரச்சினை நீடிக்கத்தான் செய்யும். சிறைக்கைதிகளை போல் நாய்களை அடைத்து வைப்பது சென்னையின் அளவுக்கதிகமான விலங்குகள் பிரச்சனையை ஒருபோதும் தீர்க்காது.

இந்த பிரச்சினைக்கு அதன் மூல ஆதாரத்திலிருந்து நிறுத்துவதன் மூலம் புத்திசாலித்தனமாக மற்றும் மனிதாபிமான முறையில் தீர்வு காண நான் பணிவுடன் உங்களை கேட்டுக் கொள்கிறேன். சென்னையில் தீவிரமான விலங்கு கருத்தடை மற்றும் ரேபிஸ்-எதிர்ப்பு திட்டத்தில் கவனம் செலுத்த தயவுசெய்து முயற்சியுங்கள்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

போருக்குத் தப்பி காட்டில் 40 ஆண்டுகள் வாழ்ந்த தந்தையும் மகனும் கண்டுபிடிப்பு!!

images

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வியட்நாம் போரின் போது காணாமல் போன ஒரு தந்தையும் அவரது மகனும், அங்கு ஒரு காட்டுப் பிரதேசத்தில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது 82 வயதாகும் ஹோ வான் தான் மற்றும் அவரது மகன் ஹோ வான் லாங் (41), ஆகிய இருவரும் வியட்நாம் போரின் போது ஒரு குண்டுத் தாக்குதலில் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டதை அடுத்து தாங்கள் வசித்து வந்த கிராமத்தை விட்டு வெளியே தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

வியட்நாமின் மத்திய பகுதியில் இருக்கும் குவாங் இங்காய் மாகாணத்தில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் அப்பகுதிவாசிகள் சுள்ளி சேகரிக்கச் சென்றிருந்தபோது, இவர்கள் இருவரையும் கண்டனர்.

பழம் மற்றும் கிழங்குகளை சாப்பிட்டு இந்த இருவரும் உயிருடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் சோளமும் பயிரிட்டனராம்.

தரை மட்டத்திலிருந்து சுமார் ஐந்து மீட்டர் உயரத்தில் ஒரு மரக்குடிசையைக் கட்டி, வெளியுலகத் தொடர்பே இல்லாமல் அவர்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

தமிழக ரசிகர்களை ஏமாற்றிய தலைவா திரைப்படம்..!!

thalaivaa

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, கடுமையாக விளம்பரங்கள் கொடுக்கப்பட்ட விஜய், அமலா பால் நடித்த தலைவா படம் இன்று வெளியாகாததால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

திரையரங்குகளில் ரசிகர்கள் விஜய்யின் கட் அவுட், மற்றும் கொடி, தோரணங்கள் என்று ஆர்பாட்டமாக காத்திருந்தனர்.
தலைவா’ படத்தை திரையிடக்கூடாது என்று தியேட்டர்களுக்கு திடீரென்று வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் வந்தன.

இதனால் தியேட்டர் அதிபர்கள் அதிர்ச்சியானார்கள். பாதுகாப்பு இல்லாமல் படத்தை திரையிட இயலாது என மறுத்தனர். தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டம் அபிராமி ராமநாதன் தலைமையில் இரு முறை கூடி இப்பிரச்சினை குறித்து விவாதித்தது. நேற்று நள்ளிரவு வரை கூட்டம் நடந்தது. இதற்கிடையில் தலைவா படத்துக்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் அளித்திருந்ததால் வரிவிலக்கு குழுவினருக்கு திரையிட்டு காட்டப்பட்டது.

படம் பார்த்த அக்குழு உறுப்பினர்கள் சில காட்சிகளுக்கும் விஜய் பேசும் சில வசனங்களுக்கும் ஆட்சேபம் தெரிவித்தனர். தியேட்டர் அதிபர்களும் படத்தை திரையிட மறுத்தனர். இதனால் தலைவா இன்று தமிழகம் முழுவதும் ரிலீசாகவில்லை. பாண்டிச்சேரியிலும் வெளியாக வில்லை. தமிழகம் முழுவதும் சுமார் 500 தியேட்டர்களில் படத்தை திரையிட திட்டமிட்டு இருந்தனர்.

கேரளா, ஆந்திரா, கர்நாடகம், மும்பையில் தலைவா படம் இன்று திரையிடப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் இருந்து விஜய் ரசிகர்கள் கார், வேன்களில் கேரளா, ஆந்திராவுக்கு படம் பார்க்க புறப்பட்டு சென்றனர். இதனால் இரு மாநிலங்களின் எல்லையோர தியேட்டர்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலை மோதியது.

வெளி மாநிலங்களில் இருந்து தலைவா படத்தின் திருட்டு சி.டி. உள்ளே வரலாம் என்று தயாரிப்பு தரப்பில் அச்சம் ஏற்பட்டு உள்ளது.

யாழ்ப்பாண மாணவனும் கேரள மாணவியும் இராமேஸ்வரம் பொலிஸில் சரண்

police

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலம்பெயர் மாணவர் ஒருவரும் கேரளாவைச் சேர்ந்த மாணவியும் இராமேஸ்வரத்தில் உள்ள மகளிர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

19 வயதான ஸ்டெபி எங்கெஸ் என்ற மாணவியும், 20 வயதான கஜேந்திரன் என்ற இலங்கைத் தமிழ் மாணவனும் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக பல் மருத்துவ கல்லூரியில் பயில்கின்றனர்.

இந்தநிலையில் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்த நிலையில், அண்மையில் பழனி முருகன் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

எனினும் குறித்த மாணவியின் தந்தையான இராணுவ அதிகாரி தமது மகளைக் காணவில்லை என்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து தமது பெற்றோரால் தங்கள் இருவருக்கும் பிரச்சினை ஏற்படும் என்ற அச்சத்திலேயே தாம் இருவரும் சரணடைந்ததாக கேரள மாணவி இராமேஸ்வரம் மகளிர் பொலிஸில் முறையிட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வடபகுதி முகாமையாளர் வவுனியாவில் சடலமாக மீட்பு!

suicide_image

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வடக்கு மாகாண முகாமையாளர் வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பணியகத்தின் வவுனியா மாவட்ட கிளை அலுவலகத்தில் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட 50 வயதான எஸ்.புருஷோத்தமன் என்ற அதிகாரியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் அலுவலக வளாகத்தில் தங்கியிருந்து வந்துள்ளார்.

அவரது சாரதி இன்று அதிகாலையில் அவரை நித்திரையில் இருந்து எழுப்பிய போது, அவர் எழுந்திருக்கவில்லை. இதனையடுத்து அவர் உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளது.

ஜிமெயிலில் தகவல்களை Backup செய்வது எப்படி?

gmail backup

ஜிமெயிலுக்கு Backup தேவையா? என ஆச்சரியத்துடன் நீங்கள் கேள்வி கேட்கலாம். ஜிமெயில் தரும் 10 ஜிபி அளவிற்கு மேலாகவும் நாம் மின்னஞ்சல்களை அடுக்கி வைக்கப் போகிறோமா?

ஜிமெயில் தான் நம் மின்னஞ்சல்களை தேவை இல்லாமல் நீக்கப்போவது இல்லையே என்ற சமாதானங்கள் இருந்தாலும், அவ்வாறு ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் மனதில் தோன்றுகிறது.

நம் முக்கிய ஆவணங்கள் பலவற்றை, ஜிமெயில் மின்னஞ்சல்களில் சேமித்து வைத்திருக்கிறோம். குறிப்பாக, சிறிய அளவில் இயங்கும் நிறுவனங்கள் பல தங்களின் ஆண்டு கணக்குகளை, கோப்புகளாக சேமித்து வைத்துள்ளன.

எனவே, இலவசமாக இயங்கும் இந்த ஜிமெயில் சேவை என்றாவது மூடப்பட்டால், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் நிலை திக்கற்றதாகிவிடும். எனவே தான் மற்ற மின்னஞ்சல் நிறுவனங்களின் அஞ்சல்களுக்கு Backup எடுப்பது போல ஜிமெயில் தளத்தில் உள்ள அஞ்சல்களையும், அதன் கோப்புகளுடன் Backup எடுத்து வைப்பது நல்லது.

இதற்கான பயன்பாட்டு மென்பொருள் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. ஜிமெயில் Backup என்னும் அந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக்கொள்வதன் மூலம் உங்களுக்கு தேவையான கோப்புகளை Backup செய்துகொள்ள முடியும்.

குறித்த மேலதிக தகவல்கள் வேண்டும் எனில், http://www.gmailbackup.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

தரவிறக்க சுட்டி..

மனைவியைக் கொன்று பேஸ்புக்கில் படம், தகவல் பரிமாறிய நபர்!!

fb

மனைவியைக் கொன்று அவரது சடலத்தை புகைப்படங்களாக பேஸ்புக்கில் வெளியிட்ட அமெரிக்கக் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தைச் சேர்ந்தவர் 31 வயது டெரக் மெடினா. இவரது மனைவி ஜெனிபர் அல்போன்சா, வயது 26. இவர்களுக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. டெரக் தனது மனைவியைக் கொன்று அவரது புகைப்படங்களை பேஸ்புக்கில் போட்டுள்ளார். கூடவே, பேஸ்புக் நண்பர்களுக்கு செய்தியும் வெளியிட்டுள்ளார்.

அதில், “விரைவில் என்னை செய்திகளில் பார்க்கலாம். நான் என் மனைவியைக் கொன்று விட்டேன். இதற்காக சிறைக்குச் செல்கிறேன். உங்களை எல்லாம் மிகவும் மிஸ் செய்வேன்” என உருக்கத்தைப் பொழிந்ததோடு, மனைவியின் சடலப் போட்டோக்களையும் அத்தோடு இணைத்துள்ளார்.

அதில் இரத்த வெள்ளத்தில் ஜெனிபர் பிணமாகக் கிடக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மனைவியை சுட்டுக் கொன்ற போட்டோக்களை பேஸ்புக்கில் பரிமாறிய கையோடு மியாமி பொலிஸ் நிலையத்தில் போய் சரணடைந்துவிட்டார் டெரக்.

டெரக் எதற்காக தனது மனைவியைக் கொலை செய்தார் என்ற காரணம் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை. அது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெரக்கின் தந்தை இது குறித்து போலீசாரிடம் கூறுகையில், “தனது மகன் குடும்ப சண்டை காரணமாக மனைவியை இவ்வாறு கொடூரமாகக் கொன்றிருக்கலாம்” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

கோச்சடையான் கதை வெளியானது!

Rajinikanth-in-Kochadaiyaan

கோச்சடையான் படம் கைவிடப்பட்டது என்ற செய்திகளையடுத்து படத்தின் தயாரிப்பாளர் இந்த ஆண்டே படம் வெளியாகும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் கோச்சடையான் கதை என்ன என்று அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

வெளியான இந்தக் கதையை சரியென்றே இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த்தும் ஆமோதித்துள்ளாராம்.

தந்தை ரஜினிகாந்த் ஒரு நாட்டை திறம்பட நல்லமுறையில் ஆண்டு வருகிறார். நாட்டின் செல்வங்களை மக்களுக்கு பகிர்ந்தளிக்கிறார்.
ஆனால் நல்ல ஆட்சியை நடக்கவிடுவார்களா துரோகிகள் அவரது அமைச்சரவையிலிருந்தே சதி செய்கின்றார்கள்.

இப்போதுதான் மகன் ரஜினிகாந்த் பிறக்கிறார். இவர் தனது திறமையான தந்தையின் பயிற்சியில் திறமைசாலியாக வளர்கிறார். பிறகு காட்டில் மறைவாக தனி குழுவொன்றை அமைக்கிறார் மகன் ரஜினிகாந்த். தந்தையின் ஆட்சியை கவிழ்த்த துரோகிகளின் கையிலிருக்கும் நாட்டை மீண்டும் புரட்சி செய்து வெல்கிறார். இதுதான் கதையின் மையக்கருவாம்.

சுறா ஒன்றுடன் ரஜினி சண்டையிடும் காட்சி ஹொலிவுட்டின் அவதார், மற்றும் டின் டின்னிற்கு நிகராக படமாக்கப்பட்டுள்ளதாம்.

நாளை தொடக்கம் மூன்று நாட்களுக்கு இலங்கையில் எரிகல் பொழிவு!!

asteroid-nasa

நாளை 10ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 13ம் திகதி வரையான 3 நாட்களுக்கு எரிகல் பொழிவை தெளிவாக காணும் வாய்ப்பு இலங்கை மக்களுக்கு கிடைக்கவுள்ளது.

நாளைய தினம் மணித்தியாலத்திற்கு 15 எரிகற்களை காண முடியும் எனவும் அடுத்துவரும் நாட்களில் அது 50ஆக அதிகரிக்கக் கூடும் எனவும் இலங்கை கோள்மண்டலம் தெரிவித்துள்ளது.

பிரகாசத்துடன் பொழியும் எரிகற்களை கண்களால் தெளிவாக காண முடியும் என கோள்மண்டலம் குறிப்பிட்டுள்ளது.

மேகமூட்டமற்ற காலநிலை காணப்படுமாயின் நள்ளிரவு தொடக்கம் அதிகாலை வரை வானத்தின் ஈரான திசை பகுதியில் எரிகல் பொழியை காண முடியும்.

மீண்டும் சுவாதியுடன் ஜோடி சேரும் ஜெய்..!!

swathi-jai

சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய்-சுவாதி இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் இவர்கள் இருவரின் காதல் காட்சிகள் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த கூட்டணி மீண்டும் இணையப் போகிறார்கள். தயாநிதி அழகிரி தயாரிப்பில் உருவாக இருக்கும் வடகறி என்ற படத்தில் ஜெய்யும், சுவாதியும் இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை சரவணராஜன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். மேலும், மற்ற கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஜெய் தற்போது “திருமணம் என்னும் நிக்காஹ்” என்ற படத்தில் நஸ்ரியாவுடன் இணைந்து நடித்து வருகிறார். சுவாதியும் “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் தொடங்கப்படும் என தெரிகிறது.

இலங்கையில் அதிகரித்துள்ள சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்கள்!!

childabusepaஇலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்களை கட்டுப்படுத்த நீதித்துறையை வலுப்படுத்த வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்படுகிறது.

சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் 30 ஆண்டுகள் பழமையானவை என சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. சாட்சியங்கள் தொடர்பான சட்டங்களும் ஒரு நூற்றாண்டு பழமையானது என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

உத்தேச சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ள அவர் உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே நாட்டின் சட்ட விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

5 மகள்களை கொடூரமாக கொன்ற தந்தைக்கு தூக்கு தண்டனை!!

hang

இந்திய மத்திய பிரதேச மாநிலத்தில் வறுமையால் தனது 5 மகள்களின் தலையை கொடூரமாக வெட்டி கொலை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் சேஹோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகன்லால் பரிலா. இவருக்கு 2 மனைவிகளும் லீலா(6), சவீதா(5), ஆர்த்தி(4), பூல் கன்வர்(2), ஜமுனா(1) என 5 மகள்களும் உள்ளனர்.

வறுமையின் பிடியில் இருந்த இவருக்கும் இவரது மனைவிகளுக்கும் இடையே 2010ம் ஆண்டு யூன் 11ம் திகதி சண்டை ஏற்பட்டது.
இதனால் கோபம் அடைந்த மகன்லால் கோடாரியை எடுத்து தனது 5 மகள்களின் தலையை வெட்டி கொலை செய்தார்.

இது தொடர்பான வழக்கில் மகன்லாலுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்பு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மகன்லால் தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

மேலும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் மகன்லாலின் கருணை மனுவை கடந்த யூலை 22ம் திகதி நிராகரித்தார். இதனைத் தொடர்ந்து மகன்லாலுக்கு தூக்கு தண்டனையை ஓகஸ்ட் 8ம் திகதி நிறைவேற்ற சேஹோர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு கடந்த ஆண்டு நவம்பரில் தூக்கு தண்டனையை நிறைவேற்றியவர் ஜபல்பூர் மத்திய சிறையில் மகன்லாலை தூக்கிலிடுவார் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குழந்தையைத் தத்தெடுக்கும் ஹன்சிகா!!

hansika

த்ரிஷா, ஸ்ரேயா, சமந்தா என சமூக அக்கறையும், அடுத்தவருக்கு உதவும் உள்ளமும் கொண்ட நடிகைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஹன்சிகா மோத்வானியும் இப்படித்தான். தன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து, அவர்களுக்குத் தேவையான கல்வி மற்றும் பிற உதவிகளை வழங்கி வருகிறார்.

ஹன்சிகா பிறந்தபோது அவருடைய பெற்றோர்கள் ஆரம்பித்த இந்தப் பழக்கம், இப்போதும் தொடர்கிறது. இதுவரை 22 குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளார்.

ஓகஸ்ட் 9ம் திகதி தான் ஹன்சிகாவின் பிறந்தநாள். இந்தப் பிறந்தநாளுக்கும் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க தீர்மானித்து இருக்கிறார்.

கூடுதலாக, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 பெண்களின் மருத்துவச் செலவையும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

விரைவில் முடிவிற்குவரும் அப்பிளின் MobileMe சேவை..!!

அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த MobileMe ஒன்லைன் சேமிப்பு சேவையானது செப்டெம்பர் மாதம் 30ம் திகதியுடன் நிறுத்தப்படவுள்ளது.

mobilme

இச்சேவைக்கு பதிலாகவே அந்நிறுவனத்தினால் iCloud எனும் புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும் MobileMe சேவையினூடாக தனது பயனர்களுக்கு 20GB சேமிப்பு வசதியினை இலவசமாக வழங்கி வந்தது.

icloud

இச்சேவை மூடப்படும்போது தற்போது இதனைப் பயன்படுத்துவர்கள் iCloud இன் 5GB சேவையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இதற்கு மேலதிகமாக பயன்படுத்த வேண்டுமாயின் வருடத்திற்கு 20 டொலர்கள் செலுத்தி 10GB வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.