ஹொலிவுட்டில் நடிக்கும் மாதவன்!

madhavanதமிழ், இந்திப் படங்களில் கலக்கிய மாதவன் இப்போது ஹொலிவுட்டில் நடிக்கப் போகிறார். அமீர்கான், மாதவன், ஷர்மான் ஜோஷி நடித்த இந்திப் படம் 3 இடியட்ஸ். இந்தப் படம்தான் தமிழில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா நடிப்பில் நண்பன் படமாக எடுக்கப்பட்டது.

3 இடியட்ஸ் படத்தைப் பார்த்த ஹொலிவுட் தயாரிப்பாளர் சைமன் வெஸ்டுக்கு மாதவனின் நடிப்பு ரொம்பவே பிடித்து விட்டதாம்.
ஏஞ்சலினா ஜூலி நடித்த டூம்ப் ரைடர், சில்வர்ஸ்டார் ஸ்டாலோன் நடித்த எக்ஸ்பென்டபிள்ஸ், நிக்கோலஸ் கேஜ் நடித்த கான் ஏர் உள்ளிட்ட பல பிரபல படங்களைத் தயாரித்தவர் வெஸ்ட்.

எனவே தான் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்குமாறு மாதவனுக்கு அழைப்பு விடுக்க அவரும் ஓ.கே. சொல்லிவிட்டார்.1968ம் ஆண்டு வெளியான நைட் ஒப் தி லிவிங் டெட் என்ற ஹொலிவுட் படத்தின் ரீமேக்கில் தான் மாதவன் நடிக்கிறார். இது 3டி படமாகும்.

இந்தப் படத்தில் மாதவன் முன்னாள் கடற்படை அதிகாரியாக வருகிறாராம். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

நீச்சல் தடாகமாக மாறிய கார்!!( படங்கள்)

ஜேர்மனின் எய்பன்ஸ்டொக் பகுதியில் வசிக்கும் 27 வயதான நபர் ஒருவர் தனக்கு சொந்தமான பழைய BMW காரை நடமாடும் நீச்சல் தடாகமாக மாற்றியுள்ளார்.

இதனை வடிவமைப்பதற்கு தனது 3 நண்பர்களையும் பயன்படுத்திய குறித்த நபர் தற்போது நடமாடும் நீச்சல் தடாகத்தில் நகரை வலம் வருகிறார்.

இதனை அறிந்த பொலிசார் இவ்வாறு உருமாற்றம் செய்த வாகனங்களை வீதியில் செலுத்துவதற்கு அனுமதியளிப்பது குறித்து தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

2 1

தீ மிதியின்போது தவறி விழுந்து பெண் மரணம்!!

thee

சென்னையில் கோவில் விழாவின்போது நடந்த பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 45 வயதுப் பெண் தடுமாறி உள்ளே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை ஏழு கிணறு வரத அய்யர் தெருவைச் சேர்ந்தவர் ஷகீலா. 45 வயதான இவர் செளகார்ப்பேட்டையில் நடந்த பாஞ்சாலி அம்மன் கோவில் தீ மிதி விழாவில் பங்கேற்றார். அவரு்ம் பூக்குழியில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்.

அப்போது தடுமாறி நெருப்புக் கிடங்கில் விழுந்து விட்டார். படுகாயமடைந்து துடித்த அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். உடல் முழுவதும் தீக்காயமடைந்த அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடாமல் 100வது ஒருநாள் போட்டியில் ஆடிய ரோகித் ஷர்மா!!

rohit

சிம்பாவேக்கெதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்திய வீரர் ரோகித் ஷர்மாவுக்கு 100வது ஒருநாள் போட்டியாகும். ஒரு ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் ரோகித் ஷர்மாவுக்கு இந்த போட்டி நினைவில் கொள்ளத்தக்கதாக அமையாமல் போகலாம்.

ஆனால் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடாத ரோகித் ஷர்மா 100வது ஒருநாள் போட்டியில் விளையாடி இருப்பது ஒரு வகையில் சாதனையாகும். அதாவது இதற்கு எந்தவொரு வீரரும் டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் 100 ஒருநாள் போட்டியை கடந்தது கிடையாது.

டெஸ்ட் போட்டியில் கால் பதிக்காமல் 100 ஒருநாள் போட்டியில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை 30 வயதான ரோகித் ஷர்மா பெற்றுள்ளார். 100 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கும் ரோகித்ஷர்மா 2 சதம், 17 அரை சதத்துடன் 2480 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் அறிமுகம் காணாமல் அதிக ஒருநாள் போட்டியில் விளையாடிய சிறந்த –5 வீரர்கள்:

ரோகித் ஷர்மா (இந்தியா) – 100 போட்டிகள்
பொலார்ட் (மேற்கிந்திய தீவுகள்) – 85 போட்டிகள்
ஜேம்ஸ் ஹோப்ஸ் (அவுஸ்திரேலியா) – 84 போட்டிகள்
இயான் ஹார்வே (அவுஸ்திரேலியா) – 73 போட்டிகள்
டேவிட் ஹசி (அவுஸ்திரேலியா) – 69 போட்டிகள்

இதயம் இல்லாது இரண்டு வருடங்கள் வாழ்ந்த இளைஞன்!!

heart

இங்கிலாந்தில் உள்ள பாப்வெத்தை சேர்ந்தவர் மத்யூகிரீன் என்ற 42 வயது நபர். கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் இவரது இதயம் முற்றிலும் பழுதடைந்து செயல் இழந்தது.

அதைத்தொடர்ந்து பாப்வெத்தில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மாற்று இதய சிகிச்சை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கு உடனடியாக இதயம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் பழுதடைந்த அவரது இதயம் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அதற்கு மாற்றாக வெளியில் இருந்தபடியே ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சும் வசதி செய்யப்பட்டது.

அதன் மூலம் இதயம் இல்லாமல் சுமார் 2 ஆண்டுகள் மத்யூகிரீன் உயிர் வாழ்ந்தார். இந்த நிலையில் சமீபத்தில்தான் அவருக்கு மாற்று இதய சத்திரசிகிச்சை நடத்தப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கிரீன் நான் மிக அதிர்ஷ்டசாலி என்பதை என்னால் நம்பமுடியவில்லை. ஏனெனில் இருதய மாற்று சத்திரசிகிச்சை மூலம் நான் 3வது தடவையாக உயிர் பிழைத்து இருக்கிறேன் என்றார்.

சிக்கலில் தலைவா?

Vijay Thalaivaa Photosவிஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தலைவா படத்திற்கு சிக்கல் ஏற்பட்டு இருப்பது தான் தற்போதைய பேச்சு. தலைவா படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, படத்தினைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் U/A சான்றிதழ் அளித்து இருக்கிறார்கள். ஆனால், படக்குழு இதனைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

தலைவா படத்தின் தயாரிப்பாளருக்கு அன்று முதல் வேந்தர் மூவிஸ் நிறுவனம் குடைச்சல் கொடுத்து வருகிறதாம். தலைவா படத்தினை பெரும் விலைகொடுத்து வாங்கி அதனை பல்வேறு ஏரியாக்களுக்கும் விற்றுவிட்டது வேந்தர் மூவிஸ்.

தற்போது U/A சான்றிதழ் என்றால் படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காது. கிடைக்கும் வருமானத்தில் பெரும் தொகை வரிக்கே போய்விடும். அதுமட்டுமன்றி வேந்தர் மூவிஸ் நிறுவனம் படத்தினைப் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்த வேண்டும் என வாங்கியது முதலே விளம்பரப்படுத்தும் பணியைத் தொடங்கிவிட்டது.

தலைவா படக்குழுவோ படத்தினை மீண்டும் சென்சாருக்கு அனுப்ப தீர்மானித்து இருக்கிறார்கள். அதிலும் U சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் படத்தினை டெல்லியில் உள்ள சென்சார் குழுவிற்கு அனுப்ப இருக்கிறார்களாம்.

விளம்பரத்திற்கு என்று வேந்தர் மூவிஸ் நிறுவனமோ பல கோடிகளை வாரி இறைத்து விட்டது. ஆகையால் எங்களுக்கு U சான்றிதழ் தான் வேண்டும்.. அதற்கு என்ன முடியுமோ பாருங்கள் என்று தயாரிப்பாளருக்கு தெரிவித்து விட்டதாம் வேந்தர் மூவிஸ்.

இந்த பஞ்சாயத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியும். இந்தப் பிரச்னை நடைபெற்று வருவதால் தான் இன்னமும் படத்தின் வெளியீட்டு திகதியை அறிவிக்காமல் தாமதப்படுத்தி வருகிறார்கள்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு வவுனியாவில் இன்று வேட்பு மனு தாக்கல்!! (படங்கள்)

வடமாகாணசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான வவுனியா மாவட்டத் தமிழ்தேசிய கூட்டமைப்பு இன்று மதியம் 12 மணியளவில் வவுனியா கச்சேரியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கு முன்னதாக வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சிந்தாமனி பிள்ளையார் ஆலயத்தில் வழிபட்டு சிறப்பு பூசைகளிலும் ஈடுபட்டனர். வவுனியா மாவட்டத்திலிருந்து 6 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் விபரம்
இலங்கை தமிழரசுக்கட்சி
1. எம்.எம்.ரதன் ஆசிரியர் (பதில் தலைவர் – நகரசபை வவுனியா)
2. வைத்திய கலாநிதி எஸ்.சத்தியலிங்கம்
ரெலோ
3. செந்தில்நாதன் மயூரன் (வர்த்தகர்)
4. துரைச்சாமி நடராஜசிங்கம் (துணை தவிசாளர் வவுனியா பிரதேசசபை)
ஈ.பீ.ஆர்.எல்.எப்
5. எம்.நடராஜா (முன்னாள் கோட்டக்கல்விப்பணிப்பாளர்)
6. ஆர்.இந்திரராஜா (முன்னாள் பிரதிகல்விப்பணிப்பாளர்)
7. எஸ். தியாகராஜா (ஓய்வு பெற்ற கிராம அலுவலர்)
புளொட்
8. ரீ.லிங்கநாதன் ((வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவர்)
9. க.சந்திரகுலசிங்கம் (வவுனியா நகரசபையின் முன்னாள் உப தலைவர்)

vavuniya-e2 vavuniya-e1

புதிய விதிமுறையால் ஓட்டங்கள் சேர்ப்பது கடினம் : தவான்!!

Shikhar-Dhawan

சிம்பாவே அணிக்கெதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகார் தவான் சதம் அடித்து முத்திரை பதித்தார். இந்த ஆண்டில் அவர் 3 சதம் அடித்து முன்னிலையில் உள்ளார். இதேபோல ஒருநாள் போட்டி ஓட்டங்கள் குவிப்பிலும் (637 ஓட்டங்கள்) அவர் முதலிடத்தில் உள்ளார்.

இந்நிலையில் புதிய விதிமுறைகளால் ஒருநாள் போட்டியில் ஓட்டங்களை குவிப்பது கடினம் என்று தவான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் ஒருநாள் போட்டியின் புதிய விதிமுறை காரணமாக இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது முதல் ஓவரில் ஒரு புதிய பந்து பயன்படுத்தப்பட்டால் அடுத்த ஓவரில் மற்றொரு பந்து பயன்படுத்தப்படுகிறது. இதனால் பந்து அதிக அளவில் சுழல் ஆகின்றன.

தற்போதுள்ள நிலையில் முதல் 10 ஓவரில் தொடக்க வீரர்களால் மிகப்பெரிய அளவில் ஓட்டங்கள் எடுக்க முடியவில்லை. மிகவும் கவனமாக விளையாட வேண்டி உள்ளது. தொடக்கத்திலேயே விக்கெட் சரிந்துவிடாமல் இருப்பதற்கு எந்த வகையான ஷொட் அடிப்பது என்பது முக்கியமானது.

சம்பியன் கிண்ண , மேற்கிந்திய தீவுகளில் நடந்த 3 நாடுகள் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றதோடு அணி வீரர்களின் ஒற்றுமையே காரணம். இளம் வீரர்கள் அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் உள்ளனர். களத்தடுப்பிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அனைத்து விடயங்களில் சரியான பாதையில் இருப்பதாக உணர்கிறேன்.

நாம் அண்ணன் தங்கையா.. மனம் உடைந்த காதலர்கள் தற்கொலை!!

couple

அண்ணன் தங்கை உறவு வரும் இருவர் காதலித்துள்ளனர். இந்தப் பொருந்தாக் காதலுக்கு உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

மங்களக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயதான பாபு. அதே ஊரைச் சேர்ந்தவர் 16 வயதான பாண்டியம்மாள். இருவரும் உறவினர்கள், உறவு முறையில் அண்ணன் தங்கை ஆவார்கள்.

ஆனால் இருவரும் காதல் கொண்டனர். உறவு முறை பற்றிக் கவலைப்படாமல் காதலித்து வந்தனர். இந்த விவகாரம் இரு குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்குத் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது பொருந்தாக் காதல் என்று கண்டித்தனர். இதனால் மனம் உடைந்தனர் இருவரும். வாழ்க்கையில் இருவரும் சேரவே முடியாது என்ற நிலையை உணர்ந்த அவர்கள் விஷம் குடித்து உயிரிழந்தனர். போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் 5இல் ஆரம்பம்..!

vavuniyaகல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

இப்பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளன.

நாடு முழுவதிலுமுள்ள 2,164 பரீட்சை மத்திய நிலையங்களில் உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்தார்.

பேஸ்புக்கில் இணைந்தார் தனுஷ்..!

dhanushதன்னுடைய நெருங்கிய நண்பர்களான சிவகார்த்திகேயன், சதீஷ், அனிருத் கூட்டணியோடு தனது 30வது பிறந்தநாளை லண்டனில் கொண்டாடினார் தனுஷ்.
தனுஷ் தனது பிறந்தாளில் இருந்து ஃபேஸ்புக் இணையத்திலும் இணைந்திருக்கிறார்.

அதுமட்டுமன்றி, பிறந்த நாள் அன்று ஒளிப்பதிவாளரை இயக்குனராகவும் அறிமுகம் செய்து வைத்தார்.

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘3’, தற்போது ‘நய்யாண்டி’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்து வரும் வேல்ராஜை இயக்குனராக்கி படம் தயாரிக்கத் திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ்.

இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் அமலா பால். முதலில் இக்கூட்டணி ‘3’ படத்திலேயே நடிப்பதாக இருந்தது. ஆனால், படப்பிடிப்பு தொடங்க இருந்த நேரத்தில் அமலா பால் விலகிவிடவே ஸ்ருதிஹாசன் நடித்தார்.

தற்போது மீண்டும் இக்கூட்டணியை இணைத்து இருக்கிறார்கள். இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் அனிருத்.

தனுஷ் தனது ‘வுண்டர்பார் நிறுவனம்’ மூலம் தயாரிக்க இருக்கிறார். விரைவில் இப்படத்தின் தலைப்பு மற்றும் FIRST LOOK வெளியிடப்படும் என்று அறிவித்து இருக்கிறார் தனுஷ்.

‘நய்யாண்டி’ படத்தின் பாடலுக்காக லண்டனில் இருந்து சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்ல இருக்கிறார் தனுஷ். ‘நய்யாண்டி’ படத்தினை முடித்துவிட்டு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வேங்கைசாமி’, வேல்ராஜ் இயக்கும் படம், ‘Raanjahnaa’ இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் படம் என்று வரிசையாக தனுஷின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது.

https://www.facebook.com/dhanushchannel – இதுதான் தனுஷின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம்.

சீமானின் திருமண திகதி அறிவிப்பு!!

seeman

நாம் தமிழர் கட்சித் தலைவரும், இயக்குனருமான சீமானுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று திருமணம் நடைபெற உள்ளது.
மறைந்த முன்னாள் தமிழக சட்டசபை சபாநாயகரும், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சருமான பா. காளிமுத்துவின் மகள் கயல்விழியை சீமானுக்கு திருமணம் செய்ய பேசி நிச்சயிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமையன்றுதான் முறைப்படி பெண்கேட்டு நிச்சயிக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை நந்தனம் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ள இந்த திருமணத்தை தமிழர் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தலைமை வகித்து நடத்துகிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு முன்னிலை வகிக்கிறார். மேலும் பல தமிழ் தேசிய அமைப்புகள் வெளிநாட்டு வாழ் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களும், தமிழ் திரையுலக மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும் இத்திருமணத்தில் பங்கேற்க உள்ளனர்.

மேற்கிந்திய தீவு அணியை வீழ்த்தி 20-20 தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்!!

Pakistani cricketers celebrating after the dismissal of a Indian player during the India-Pakistan 2nd Twenty20 International cricket match at Sardar Patel Stadium, Motera, Ahmedabad. (Photo: IANS)

பாகிஸ்தான் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய 2வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கிங்ஸ்டனில் நேற்று நடந்தது.

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களை எடுத்தது. உமர் அக்மல் 36 பந்தில் 46 ஓட்டங்களும் தொடக்க வீரர் அகமது சேஷாத் 44 ஓட்டங்களும் எடுத்தனர்.

மேற்கிந்திய தீவுகள் தரப்பில் சுனில் நரின் 3 விக்கெட்டும் பத்ரி 2 விக்கெட்டும், டேரன் சேமி, பொலாட் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 136 ஓட்ட இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி பின்னர் களம் இறங்கியது.

பாகிஸ்தான் வீரர்களின் அபார பந்து வீச்சால் மேற்கிந்திய தீவுகள் அணியால் இலக்கை நோக்கி முன்னேற முடியவில்லை. மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இதனால் பாகிஸ்தான் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டரன் பிராவோ 35 ஓட்டங்களும் , சுனில் நரேன் 28 ஓட்டங்களும் எடுத்தனர். சோகைல் தன்வீர், சுல்பிதார் பாபா, அஜ்மல் தலா 2 விக்கெட்டும், ஹபிஸ், அப்ரிடி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் 2–0 என்ற கணக்கில் 20 ஓவர் தொடரை கைப்பற்றியது. நேற்று முன்தினம் நடந்த முதலாவது 20 ஓவர் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இருந்தது. ஒருநாள் தொடரையும் பாகிஸ்தான் அணி 3–1 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றியது.

மேற்கிந்திய தீவுகள் அணி தனது சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரையும், 20-20 தொடரையும் இழந்தது.

நடித்து கொண்டே படிப்பை தொடரும் நஸ்ரியா!!

nasriya

கேரளத்து வரவான நஸ்ரியா நஸீம் படங்களில் நடித்துக் கொண்டே பி.கொம் படிப்பை தொடர இருக்கிறார். நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நஸ்ரியா.

தன்னுடைய நடிப்பாலும் அழகாலும் எளிதாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விட்டார். அத்துடன் படவாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நடிப்புடன் சேர்த்து தனது கல்லூரி படிப்பையும் தொடர உள்ளாராம் நஸ்ரியா.

இதுகுறித்து அவர் கூறுகையில் சிறுவயதிலேயே நடிக்க வந்து விட்டதால், படித்து கொண்டே நடிக்கவும் செய்தேன். பிளஸ் 2 படித்த போது ஒரு மலையாள படத்தில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது.

தற்போது பல படங்களில் நடிப்பதால், ரொம்பவே பிஸியாகி விட்டேன்.
நடிப்பை போன்றே, படிப்பிலும் மிகுந்த ஆர்வம் உள்ளதால் தற்போது பி.கொம் படித்து வருகிறேன். முடிந்தவரை படிப்பு பாதிக்காத வகையில் படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் 100 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்து: 36 பக்தர்கள் பலி!!

Italy Bus Plunges

இத்தாலியில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் பலியாகினர். இத்தாலியில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து நேற்று இரவு அவெல்லினோ பகுதியில் சென்று கொண்டிருக்கையில் போக்குவரத்து அதிகமுள்ள நெடுஞ்சாலையில் செல்கையில் மலைப் பகுதியில் உள்ள பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

பள்ளத்தில் விழும் முன்பு அந்த வழியாக சென்ற கார்கள் மீது பேருந்து மோதியது. 100 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த பேருந்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் 36 சடலங்களை எடுத்தனர். மேலும் காயம் அடைந்த 11 பேரை மீட்டனர். இறந்தவர்களில் பேருந்து ஓட்டுநரும் அடக்கம்.

பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது தான் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் அமரலாம். அந்த பேருந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனிதத்தலமான தென்கிழக்கு பக்லியா பகுதிக்கு சென்றுவிட்டு ஊர் திரும்புகையில் தான் இந்த விபத்து நடந்துள்ளது.

மலைப் பகுதியில் பேருந்து மிதமான வேகத்தில் தான் சென்றது என்றும், ஆனால் திடீர் என்று அவ்வழியாக சென்ற கார்களை இடித்தது என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

எங்கள் அணி சூதாட்டத்தில் ஈடுபட்டதா? பாகிஸ்தான் முன்னணி வீரர்கள் மறுப்பு!!

pakistan

மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் சூதாட்டம் நடந்திருப்பதாக வந்த செய்தியை, லத்திப், மோயின் கான் உள்ளிட்ட முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் மறுத்துள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள பாகிஸ்தான் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இதில் பாகிஸ்தான் அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.

இத்தொடரின் மூன்றாவது மற்றும் ஐந்தாவது போட்டியில் சூதாட்டம் நடந்திருப்பதாக, இங்கிலாந்தில் வெளியாகும் “டெய்லி மெயில்’ நாளிதழில் செய்தி வெளியானது. இதில், போட்டியின் குறிப்பிட்ட ஓவரில் ஓட்ட வீதம் வித்தியாசமானதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தவிர ஒரு சூதாட்டம் தொடர்பான இணையதளத்தில் மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது அதிக அளவில் பணப்பரிமாற்றம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படும் போது அல்லது தொடரை கைப்பற்றும் போது இதுபோன்ற ஆதாரமற்ற செய்திகள் வெளியாகின்றன. இது அணியில் உள்ள வீரர்களிடம் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம். வீரர்கள் தொடர்ந்து போட்டியில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷித் லத்திப் கூறுகையில்

இவ்விஷயத்தை ஐ.சி.சி அல்லது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கவனமாக கையாள வேண்டும். இல்லையென்றால் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும். இவ்விவகாரத்தை சட்ட பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் மோயின் கான் கூறுகையில்

ஆதாரமற்ற இந்த செய்தி குறித்து ஐ.சி.சி சார்பில் இதுவரை எவ்வித அறிக்கையும் வெளியிடப்படவில்லை. ஒட்டுமொத்த செய்தியும் சந்தேகத்தின் பேரில் வெளியானது. இது பாகிஸ்தான் வீரர்களை வருத்தமடைய செய்யும். எனவே பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விரைவில் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றார்.