இதை ஆண்களின் தியாகம் என்பதா சாபம் என்பதா..?

bee_beard_3

இயற்கையில் மனித ஆணுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண்களின் கதை தனிக்கதையாகத் தான் உள்ளது.

இவ்வாண்டு இலைதளிர் காலத்தில் (வசந்த காலத்தில் ) நிலவிய அசாதாரண குளிர் காலநிலையால் பிரிட்டனில் குளவிகளின் எண்ணிக்கை குறைந்து போயுள்ள கவலை ஒரு புறம் இருக்க இந்தக் குளவிகளின் வாழ்க்கை வட்டத்தில் இராணி குளவிகள் வேறு சமூக ஆண் குளவிகளுடன் இனக் கலப்புச் செய்த பின் குளிர் காலநிலை வந்ததும் ஆண் குளவிகள் செத்துமடிய இடமளிக்கின்ற நடத்தையியல் என்பது ஆச்சரியமடையவும் வைக்கிறது.

ஆண்கள் குளிருக்கு இறந்து போக பெண் இராணிக்கள் மட்டும் தாம் கூடி கட்டி அதற்குள் ஒளித்துக் கொள்கின்றன அடுத்த தவணைக்கு குளவிகளை உருவாக்க..!

இதில் ஆண்களின் இந்த இறப்பை தியாகம் என்பதா சாபம் என்பதா? இயற்கை எவ்வளவு பாரபட்சமா இருகின்றது பார்த்தீர்களா? எப்படி எல்லாம் இயற்கை உயிரின வாழ்க்கை வரலாற்றை தனக்கேற்ப மாற்றி அமைக்கிறது!!

மீண்டும் விளையாட ஆசைப்படும் அஜய் ஜடேஜா!!

ajay-jadejaஅஜய் ஜடேஜாவுக்கு மீண்டும் கிரிக்கெட் மீது ஆசை பிறந்துள்ளது. இவர் ரஞ்சிக் கிண்ணத் தொடரில் விளையாட தயாராக இருக்கிறாராம்.
கடந்த 1992ல் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் முதன்முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா 2000ம் ஆண்டு வரை விளையாடினார்.

42 வயதான இவர் இதுவரை 15 டெஸ்ட் (576 ஓட்டங்கள்), 196 ஒருநாள் (5359 ஓட்டங்கள்) போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன்பின் சூதாட்டப்புகாரில் சிக்கிய இவருக்கு ஐந்து ஆண்டுகள் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அப்பீல் செய்த இவருக்கு, 2003ல் டெல்லி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தடை நீக்கப்பட்டு உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் வயது, உடற்தகுதி காரணமாக இந்திய அணியில் அணியில் இடம் கிடைக்கவில்லை. கடந்த 2005ல் ரஞ்சிக் கிண்ணத்துக்கான ராஜஸ்தான் அணியின் அணித்தலைவர் மற்றும் பயிற்சியாளராக களமிறங்கினார்.

அதன்பின் 2007ல், ஹொங்காங் சர்வதேச சிக்சஸ் தொடரில் விளையாடினார். இந்நிலையில் சமீபத்தில் இவர், சென்னையில் நடந்த புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் அரியானா அணியின் அணித்தலைவராக விளையாடினார்.

இதன்மூலம் ஆறு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார். இதனையடுத்து இவர் அடுத்தாண்டு நடக்கவுள்ள ஏழாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து அஜய் ஜடேஜா கூறுகையில் இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் எண்ணம் கிடையாது. ஏனெனில் T20 போட்டியில் விளையாடுவதற்கேற்ப உடற்தகுதி என்னிடம் இல்லை.

டெஸ்ட் ஒருநாள் போட்டிகளில் இருந்து T20 போட்டி முற்றிலும் மாறுபட்டது. எனவே ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் போது, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவே தொடர விரும்புகிறேன்.

அதேவேளையின் உள்ளூர் தொடர்களில் ஒன்றான வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சிக் கிண்ணத் தொடரில் அரியானா அணிக்காக விளையாட விரும்புகிறேன். இத்தொடரில் விளையாடுவதற்குரிய தகுதியும், திறமையும் என்னிடம் உள்ளது. வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இளம் வீரர்களுடன் இணைந்து விளையாட தயாராக உள்ளேன்.

ஆனால் அணியில் தெரிவு செய்யப்படுவது என் கையில் இல்லை. இது, அரியானா அணி நிர்வாகத்திடம் உள்ளது என்றும் புச்சிபாபு தொடர் மூலம், மீண்டும் கிரிக்கெட் போட்டியில் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் அணியின் பயிற்சியாளராக அசாருதீன்!!

azar

இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் அசாருதீன் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட ஒப்புக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா பதவி வகிக்கிறார். இவர் இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் அசாருதீனை ஜம்மு காஷ்மீர் அணிக்கான பயிற்சியாளராக வருமாறு அழைப்பு விடுத்து இருந்தார்.

இதனையடுத்து இருவரும் கடந்த சில மாதங்களாக ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் அசாருதீன் பயிற்சியாளராக செயல்பட ஒப்புக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போது லோக்சபா எம்.பியாக இருக்கும் அசாருதீன் முழு நேரப் பணியாக பயிற்சியாளராக செயற்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சிம்பாவே தொடரில் லசித் மலிங்கவுக்கு ஓய்வு!!

malinga

சிம்பாவே கிரிக்கெட் விஜயத்துக்கான இலங்கை 27 பேர் கொண்ட முன்னோடி குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

சிம்பாவே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் 2 டெஸ்ட், 3 சர்வதேச ஒருநாள் மற்றும் 2 சர்வதேச 20-20 போட்டிகள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடருக்கான 27 பேர் கொண்ட இலங்கை முன்னோடி குழாமில் லசித் மலிங்க இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 10ம் திகதி சிம்பாவேயில் ஆரம்பமாகவுள்ளது.

இந்திய அணியின் வெற்றியில் அனைத்து மூத்த வீரர்களுக்கும் பங்குண்டு: யுவராஜ் சிங்!!

Yuvraj-Singh

இந்திய அணியின் வெற்றியில் அனைத்து மூத்த வீரர்களுக்கும் பங்குள்ளதுள்ளது என்பதை எளிதில் மறந்து விடக்கூடாது. நாங்களும் ஹீரோ தான் என யுவராஜ் சிங் தெரிவித்தார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் 2011ல் நடந்த உலக கோப்பை போட்டியில், தொடர் நாயகன் விருது வென்றார். இதன் பின் ஏற்பட்ட நுரையீரல் கேன்சர் நோயிலிருந்து மீண்ட இவர் 2012 20-20′ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.

தற்போது சிறந்த பெறுபேறுகளை வெளிக்காட்டததால் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். இருப்பினும், 2015 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இதற்காக, பிரான்ஸ் சென்று புகழ் பெற்ற டிம் எக்செட்டரிடம் பயிற்சி எடுத்து திரும்பினார்.

இது தொடர்பில் யுவராஜ் சிங் தெரிவித்ததாவது,

அணியில் நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்தியா திறமையான லெவன் அணியை தேர்ந்தெடுக்கும். அதேநேரம் இதில் இளமை மற்றும் அனுபவம் கலந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த தேர்வின் போது வீரர்களின் முந்தைய அசத்தல்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறப்போவது இல்லை.

ஆனால், கடந்த காலத்தில் இந்த வீரர்கள் பெற்றுத்தந்த வெற்றி மற்றும் தேசத்துக்காக என்ன சாதித்தனர் என்பதை மறந்து விடக் கூடாது.
சமீபத்தில் இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். தவிர இந்திய அணி சம்பியன்ஸ் கிண்ணம், சிம்பாவே தொடரில் அசத்தியது மகிழ்ச்சி தருகிறது. இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல சகுனம் தான்.

அடுத்த உலக கோப்பை தொடருக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. இந்நிலையில் நாளை என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. இருப்பினும், விரைவில் இந்திய அணியில் இடம் பெற முயற்சிப்பேன்.

என்னைப் பொறுத்தவரை இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். இதனால் தான் பிரான்ஸ் சென்று பயிற்சியில் ஈடுபட்டேன். இதன் மூலம் நல்ல உடற்தகுதியை பெற்றுள்ளேன். என்னுடன் வந்த சகிர் கான், உடல் எடையில் 6 கிலோகிராம் குறைத்துள்ளார்.

நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இதனால் பயிற்சியின் போது ஒருங்கிணைந்து செயல்பட உதவியாக இருந்தது என யுவராஜ் சிங் கூறினார்.

பனடோல் மாத்திரை தொண்டையில் இறுகி குழந்தை பலி!!

1-day-old

பனடோல் மாத்திரையின் பாதி ஒன்றரை வயது குழந்தையின் தொண்டைப் பகுதியில் அடைத்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தை இறந்துள்ளது. இந்த சம்பவம் இன்று மதியம் சிலாபம் வைத்தியசாலையில் இடம்பெற்றது.

சிலாபம் கரவிடாகாரய பிரதேசத்தை சேர்ந்த சங்கல்ப என்ற குழந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக பெற்றோர் குழந்தைக்கு பாதி பனடோல் மாத்திரையின் பாதியை கொடுத்துள்ளனர்.

குழந்தையால் அதனை விழுங்க முடியாத நிலையில் அது தொண்டையை அடைத்துள்ளது.

இதனையடுத்து குழந்தை சிலாபம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட போதிலும், ஆரம்ப சிகிச்சை பிரிவிலேயே குழந்தை இறந்து போனது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தனுஷின் நய்யாண்டி பாடல்களை எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்கள்..!!

danush

சற்குணம் இயக்கத்தில் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் படம் நய்யாண்டி. இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நஸ்ரியா நசீம் நடிக்கிறார். மேலும், பரோட்டா சூரி, சத்யன் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். இவர் ஏற்கெனவே வாகை சூடவா படத்தி இயக்குனர் சற்குணத்துடன் இணைந்து பணிபுரிந்துள்ளார்.

நய்யாண்டி படத்திற்காக ஜிப்ரான் 5 பாடல்கள் மற்றும் ஒரு சிறிய பாடலையும் பதிவு செய்துவிட்டாராம். இப்பாடல்களை வரும் செப்டம்பரில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம். சொனி நிறுவனத்திற்கு இந்த பாடல்கள் உரிமையையும் வழங்கப் போவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜிப்ரான் கூறும்போது, இப்படத்தின் பாடல்கள் முழு கமர்ஷியல் ஆல்பமாக இருக்கும். இதில் இசையின் பல நுட்பங்களை கையாண்டுள்ளேன் என கூறினார்.

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான மயக்கம் என்ன, 3, மரியான் ஆகிய படங்களின் பாடல்கள் பெரும் பாராட்டை பெற்றனர். அந்த வரிசையில் இந்த படத்தின் பாடல்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை : விஜய் அதிரடி தகவல்..!!

vijay

பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து தமிழகத்தில் தலைவா திரைப்படம் தற்போது திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

இதற்கிடையில் ரசிகர் மன்றங்கள் சார்பில் விஜயின் பிரமாண்ட கட் அவுட்டுகள், பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில பேனர்களில் அரசியல் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த விஜய் ரசிகர்களுக்கு கண்டிப்புடன் கூடிய வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை. தயவுசெய்து பேனர்களில் அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்களை போடவேண்டாம். அதையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட மன்றங்களை கலைக்கக்கூட தயங்க மாட்டேன். இனி ரசிகர் மன்ற விஷயங்களில் நானே நேரடியாக ஈடுபடுவேன். என் தந்தையோ, வேறு யாரோ மன்ற விஷயங்களில் தலையிடமாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வீரம் படத்தில் அஜீத்தின் வேஷ்டி டான்ஸ்..!!

ajith

ஆரம்பம் படத்திற்கு பிறகு அஜீத் நடித்து வரும் படம் வீரம். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாயின. அதில் அஜீத் வேஷ்டியுடன் அமர்ந்து டீ குடிப்பது போன்ற படங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

தற்போது நாகரீகமான உடையிலேயே நடித்து வரும் அஜீத், இந்த படத்தில் முதன்முறையாக கிராமத்து பின்னணியில் தோன்றுகிறாராம். இப்படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இவருடைய இசையில் அமைந்துள்ள பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இப்படத்தில் ஒரு பாடலுக்கு அஜீத் வேஷ்டியுடன் ஆட்டம் போடுகிறாராம். இந்த பாடலும், நடனமும் ரசிகர்களிடையே பெருத்த ஆதரவை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜீத், ஏற்கெனவே அட்டகாசம் படத்தில் வேஷ்டியுடன் நடனமாடியிருந்தார். அந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் இந்த பாடலும் ரசிகர்களை வெகுவாக கவரும் என கூறப்படுகிறது.

அனைத்து பெண்களையும் சகோதரிகளாக நினைத்து பாதுகாப்போம் : அமிதாப் பச்சன்..!!

amirthap

மும்பையில் நேற்று முன்தினம் மாலை பெண் போட்டோகிராபர் கற்பழிக்கப்பட்ட சம்பவத்திற்கு இந்தி நடிகர் அமிதாப் பச்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அமிதாப் பச்சன் செய்தியாளர்களிடம் கூறியதாவது..

மும்பையில் நடந்திருக்கும் இந்த கொடூர சம்பவம் அவமானத்திற்குறிய செயலாகும். இது நம் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றத்தை செய்தவர்களை உடனடியாக கைது செய்து விரைவாக உரிய தண்டனை வழங்க வேண்டும்.

இச்சம்பவம் நடைபெற்ற ஒரு நாளைக்கு முன்னர்தான் பெண்களை சகோரரிகளாக ஏற்றுக்கொள்ளும் ராக்கி திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தோம். இனி அனைத்து பெண்களையும் சகோதரிகளாக நினைத்து பாதுகாப்போம் என்று நாம் உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நாம் கொண்டாடும் அனைத்து விதமான விழாக்களும் பெண்களை மதிப்பது எப்படி என்பதை நமக்கு கற்றுத் தருகின்றன. இத்தகைய பண்பு வாய்ந்த நம் நாட்டில் இதைபோன்ற கொடூர சம்பவங்கள் நடப்பதை இனியும் நாம் அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

மொசக்குட்டி படத்தில் ஸ்ரேயா கோஷல் பாடல்!!

sriya

ஸ்ரேயா கோஷல் பின்னணி பாடகியான இவருடைய குரல் மட்டுமல்ல, முகமும் அனைவரையும் வசீகரிக்கும். இவர் பாடிய பாடல்கள் பெரும்பாலும் சூப்பர் டூப்பர் ஹிட்டானவை. குறிப்பாக மைனா’படத்தில் நீயும் நானும், சாட்டை படத்தில் சகாயனே சகாயனே போன்ற பல பாடல்கள் இவரது திறமையை வெளிக்காட்டும்.

இந்நிலையில் ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், எம்.ஜீவன் இயக்கும் மொசக்குட்டி என்ற படத்தில் கள்ளப்பயலே கள்ளப்பயலே என்ற பாடலை பாடியுள்ளார் ஸ்ரேயா கோஷல். ரமேஷ் விநாயகம் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஆதித்யா, மகிமா, பசுபதி, எம் எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடிக்கின்றனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

சூடானில் பயங்கர மழை 53 பேர் நீரில் மூழ்கி பலி!!

sudan

சூடான் நாட்டில் பெய்து வரும் கன மழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. 3 லட்சம் பேர் தங்கள் உடமைகளை இழந்து தவிக்கின்றனர்.

மழையால் இதுவரை 53 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்துள்ளனர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. சூடானில் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளது.

தொடர் மழை காரணமாக கர்டோம் மாகாணத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள நைல் நதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது. கர்டோம் கிழக்கு பகுதியில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு வெள்ளம் சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். வெள்ளத்தால் 3 லட்சத்து 20ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் இப்ராகிம் முகமது ஹமீது கூறுகையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணி துரிதமாக நடந்து வருகிறது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை மழையால் 53 பேர் இறந்துள்ளனர் என்றார்.

திருமணமான 2 மாதத்தில் கணவனுக்கு விஷம் கொடுத்த மனைவி!!

poison

தூத்துக்குடி மாவட்டம் செபத்தையாபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 27), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலா. இவர்களுக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது.

இந்நிலையில் மணிமேகலாவுக்கு அவரது கணவரை பிடிக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த மணிமேகலா தற்கொலை செய்வதென முடிவு செய்தார். அதன்படி கடந்த 19ம் திகதி அவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடிக்க முயன்றார்.

அந்த சமயம் ராஜேந்திரன் வரவே குளிர்பானத்தை அவரிடம் கொடுத்துவிட்டார். அதில் விஷம் கலந்திருப்பது தெரியாமல் ராஜேந்திரன் குடித்து விட்டார். பின்னர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அவரை அவரது உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாயர்புரம் பொலிசில் புகார் செய்யப்பட்டது. பொலிசார் விசாரணை நடத்தி மணிமேகலாவை கைது செய்தனர்

தமிழர்களுக்கு எதிரான மெட்ராஸ் கபே திரைப்படம் தமிழகத்தில் வெளியாகவில்லை..!!

madrascafe

ஷூஜித் சர்கார் இயக்கத்தில், ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாக்கப்பட்ட மெட்ராஸ் கபே திரைப்படம் இன்று ஆகஸ்ட் 23ம் திகதி இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வெளியானது. ஆனால் தமிழகத்தில் வெளியாகவில்லை.

இத்திரைப்படம் இலங்கைத் தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் படத்தில் தவறாக சித்திரித்திருப்பதாக புகார் கூறி மதிமுக கட்சி தலைவர் வைகோ, நாம் தமிழர் இயக்கதின் தலைவர் சீமான் மற்றும் சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்தும் திரைப்படத்திற்கு தடை விதிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர். திரைப்படத்தை தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றதில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு தடை விதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இருப்பினும் இத்திரைப்படத்தின் ஹிந்தி மற்றும் தமிழ் மொழிமாற்ற பதிப்புகள் இன்று தமிழ் நாட்டில் வெளியாகவில்லை. எதிர்ப்பாளர்களின் கோரிக்கையின்படி படத்தை போட்டுக் காண்பித்த பின்னரும் எதிர்ப்பு வலுத்தபடியால் பொலிஸ் பாதுகாப்பு கோரியிருந்தனர்.

பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தயாராக இருக்கும் நிலையில் திரையரங்குகள் எதுவும் ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஆனால், தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கான ஆதரவு நிலை அதிகரித்திருப்பதாலேயே படத்தை திரையரங்குகள் வெளியிட மறுத்துள்ளதாக தமிழக விநியோகஸ்தர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கலைப்புலி சேகர் கூறினார்.

இந்நிலையில் திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த வருடத்தில், தமிழகத்தில் எதிர்ப்பு காரணமாக குறித்த திகதியில் திரைப்படம் ஒன்றை வெளியிடாமல் போன மூன்றாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, விஸ்வரூபம், தலைவா ஆகிய படங்கள் பிரச்சினையை எதிர்நோக்கியிருந்தன. மெட்ராஸ் கபே திரைப்படத்துக்கு எதிராக இணையங்களில் செய்யப்பட்ட பிரசாரத்தை பிரிட்டனிலும் இந்தப் படம் திரையிடப்படவில்லை என்று தமிழ் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

பிரிட்டனில் இந்தப் படம் திரையிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ள திரைப்படத் தரப்பினர், பாதுகாப்பு காரணங்களால் தான் அந்தப் படம் வெளியாகவில்லை என்றும் கூறியுள்ளனர்.

ஆட்டோவில் கழுத்தை வெளியில் நீட்டிக்கொண்டு பயணித்தவர் பலியான பரிதாபம்..!!

auto

கழுத்தை வெளியில் நீட்டிக்கொண்டு முச்சக்கரவண்டியில் பயணித்த இளைஞர் ஒருவர் பலியான பரிதாபகரமான சம்பவமொன்று களுத்துறையில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் 21 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியில் கழுத்தை வெளியில் நீட்டிக்கொண்டு பயணித்த போது எதிரே வந்த லொறியில் மோதியே அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது பலியாகி விட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை களுத்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் 60 மாணவர்கள் விபத்துக்களினால் பாதிப்பு..!!

students

இலங்கையில் நாளை நடைபெறவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் 60 மாணவ மாணவியர் திடீர் விபத்துக்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாகன விபத்து உள்ளிட்ட வித்துக்களினாலும் திடீர் சுகயீனம் காரணமாகவும் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் 60 மாணவ மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இவர்களில் சிலர் பரீட்சைக்கு தோற்ற முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதான பரீட்சைக்குத் தோற்றும் தமது பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.