ஒரே தடவையில் 3 இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய மாணவிக்கு கத்திக் குத்து!!

 

Murder1

காதலிப்பதாக நாடகமாடி மூன்று மாணவர்களை ஏமாற்றிய போலி காதலிக்கு சரமாரி கத்திகுத்து விழுந்தது. இது தொடர்பாக 3 வாலிபர்களை பொலிசார் கைது செய்தனர்.

ஆண்கள் தான் பல பெண்களை காதலித்து ஏமாற்றுவர். ஆனால், ஒரு பெண் மூன்று மாணவர்களை காதலித்து ஏமாற்றிய சம்பவம் கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் நடந்துள்ளது.

பெல்காம் மாவட்டம் அதணி கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதாதொட்டமணி, கடந்த 15ம் திகதி அவரது சொந்த ஊரான தெலசங்கா கிராமத்தில் 3 மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார். அதை பார்த்த அருகில் இருந்தவர்கள் காயமடைந்த சங்கீதாவை மீட்டு வைத்தியசாலையில் கொண்டு சேர்த்தனர்.

அவருக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தினர்.

கெலசங்கா கிராமத்தினர் கொடுத்த தகவலின் பேரில் பசப்பா மாகரா (22), பசப்பா கம்பளி (23) மற்றும் சுரேஷ் கல்மட்டி (22) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் சங்கீதாவை கொலை செய்ய திட்டமிட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தியபோது, பொலிசாருக்கே தலைசுற்றியது. பிஜாப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் சங்கீதா இரண்டாம் ஆண்டு பியுசி படித்த போது, அதே கல்லூரியில் பசப்பா மாகரா, பசப்பா கம்பளி, சுரேஷ் கல்மட்டி ஆகிய 3 பேரும் படித்தனர்.

சக மாணவர்களுடன் அன்பாக பழகிய சங்கீதா பின் மூன்று பேரையும் காதலர்களாக்கி கொண்டார். மூன்று பேரையும் தனித்தனியாக சந்திக்கும்போது உன்னைத்தான் காதலிக்கிறேன் என்று பொய் கூறினார். இதையடுத்து ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவருடன் ஜாலியாக ஊர்சுற்றி ஆடம்பர வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

மூன்று பேரும் தன்னை ஒரே நேரத்தில் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்காமல் மிக கவனமாக நிலைமையை சமாளித்து வந்தார். அதேபோல், மூன்று இளைஞர்களும் ஒன்றாக சந்தித்து கொள்ள முடியாதபடி பகைமையை உருவாக்கி வைத்திருந்தார்.

இந்நிலையில் மூன்று பேரை தனித்தனியாக காதலித்து சுக போக வாழ்க்கை நடத்திய சங்கீதாவுக்கு மேலும் பல ஆண்களை தன் வலையில் வீழ்த்த திட்டமிட்டார்.

இதற்காக மூன்று இளைஞர்களையும் மெல்ல புறக்கணிக்க தொடங்கினார். சங்கீதாவின் போக்கில் மாற்றம் இருப்பதை தெரிந்துகொண்ட மூன்று இளைஞர்களும் ஒரு கட்டத்தில் ஒன்றாக சந்தித்து தங்கள் மனக்குறைகளை கொட்டிதீர்த்தனர். அப்போது தான் சங்கீதாவின் குட்டு வெளிச்சத்திற்கு வந்தது.

காதல் நாடகமாடி ஏமாற்றிய சங்கீதாவை உயிருடன் விடக்கூடாது என்று முடிவு செய்து, மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்து சங்கீதாவை கொலை செய்ய திட்டமிட்டு, கடந்த 15ம் திகதி தொலைபேசியில் பேசி தனி இடத்துக்கு வரவழைத்தனர்.

அங்கு மூன்று பேரும் தங்கள் ஆத்திரம் தீர சங்கீதாவை சரமாரியாக கத்தியால் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து சங்கீதா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பொலிசார் மூன்று மாணவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் கூறிய தகவலை கேட்டு பொலிசாரே குழப்பமடைந்துள்ளனர். அவர்கள் சொல்வது உண்மையா, பழி வாங்கும் நோக்கத்தில் சங்கீதாவை கொலை செய்ய முயற்சித்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை முடுக்கிவிட்டுள்ளனர்.

தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் சங்கீதாவுக்கு நினைவு திரும்பிய பின், அவர் கொடுக்கும் வாக்கு மூலத்தை வைத்து என்ன காரணத்திற்காக கொலை முயற்சி நடந்தது என்பது தெரியும் என்று பொலிசார் கூறினர்.

இலங்கை மகளீர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த மட்டக்களப்பு தமிழ் மாணவி..!

இலங்கை தேசிய மகளீர் அணிக்கு மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் மாணவியொருவர் தெரிவுசெய்யப் பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மகாஜன கல்லூரியைச் சேர்ந்த NJ. ஐடா என்ற மாணவியே இலங்கை அணி சார்பாக சர்வதேச போட்டிகளில் களமிறங்குகிறார்.

இவர் தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டமைக்கு பல்வேறு துறையினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவர் சர்வதேச மகளீர் கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிய நாமும் வாழ்த்துவோம்.

 

ida2

ida1
aust
(தகவல் மற்றும் படங்கள் – ரமணன்)

தங்கத்தின் விலையில் தொடர் வீழ்ச்சி: 24 கரட் ரூ45,800, 22 கரட் ரூ41,000..!

goldஉலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதாக தேசிய இரத்தினம் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 45,800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தேசிய இரத்தினம் மற்றும் ஆபரண அதிகார சபையின் தங்க தர பிரிவு ஆலோசகர் சிறிசந்திர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 41,000 ரூபாவிற்கு விற்பனையாவதாக அவர் கூறினார்.

இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 10 சதவீத வரி அறவிடப்படுவதால் இலங்கையில் தங்கத்தின் விலை ஒரு நிலையான அளவில் இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

2050இல் 64% இலங்கையர்களுக்கு நீரிழிவு நோய்..!

diabetes2050ம் ஆண்டு ஆகும்போது இலங்கையின் மொத்த சனத்தொகையில் 64 சதவீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பர் என உலக சுகாதார அமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதனால் நீரிழிவு நோயில் இருந்து பாதுகாப்பு பெற அதிகூடிய கவனம் செலுத்த வேண்டும் என அந்த அமையம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது இலங்கை சனத்தொகையில் கிராம புரத்தில் 10 வீதமான மக்களும் நகர் புரத்தில் 15 வீதமான மக்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 10-15 வீதமான பாடசாலை மாணவர்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தவறான உணவு, உடற்பயிற்சி இன்மை மற்றும் மன அழுத்தம் என்பன நீரிழிவு நோய் ஏற்பட காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய எதிரணி போராட்டத் தலைவருக்கு 5 ஆண்டு சிறை..

Alexei-Navalnyரஷ்யாவில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துவந்த அலெக்ஸி நவால்னி மீதான பண மோசடிக் குற்றங்களை உறுதிப்படுத்தியுள்ள நீதிமன்றமொன்று அவருக்கு5ஆண்டுகால சிறைத்தண்டனை அளித்துள்ளது.

எதிரணி போராட்டங்களை முன்னின்று நடத்திவரும் இளம் தலைவராக அவர் பார்க்கப்பட்டார். அரசுக்குச் சொந்தமான மரப்பலகை நிறுவனத்தின் அரை மில்லியன் டாலர்கள் பணத்தை கையாடியதாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை அலெக்ஸி நவால்னி மறுத்திருந்தார்.

தன்மீதான குற்றச்சாட்டு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று அவர் கூறியிருந்தார்.

தன்மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தி நீதிபதி தீர்ப்பளித்தபோது நவால்னி நக்கலாக புன்முறுவல் காட்டியுள்ளார். வரும் செப்டம்பரில் நடக்கவுள்ள தேர்தலில் நவால்னி மாஸ்கோ மேயர் பதவிக்காக போட்டியிடவிருந்தார்.

ஆனால், தனது தண்டனைக்கு எதிரான மேன்முறையீட்டில் வெற்றிபெற முடியாமல்போனால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது போகலாம் என்று செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனிடையே இவரது இந்த 5 ஆண்டுகால சிறைத்தண்டனை, 2018-ம் ஆண்டில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விடாமலும் இவரைத் தடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கில் தனி இராணுவ அலகை அமைக்க சாத்தியமில்லை – பசில்..!

basilமாகாண பொலிஸ் அதிகாரங்களின் அடிப்படையில் தனியான இராணுவ அலகுகளை உருவாக்க எவ்வித சாத்தியமும் கிடையாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ´தி ஹிந்து´ பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மாகாண இராணுவ அதிகாரங்களை வழங்குவதற்கு சந்தர்ப்பம் கிடையாது என 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் குறிப்பிட்டார்.

1988ம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எப். வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய இராணுவமொன்றை அமைக்க முயற்சித்ததாக பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கிற்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் மீளவும் இவ்வாறான ஓர் நிலைமை ஏற்படாது என்பதனை தின்னமாக குறிப்பிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாகவே மாகாணசபைகளுக்கு முழு அளவில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை – இந்திய நல்லுறவு தொடரும்: சல்மான் குர்ஷித் உறுதி..!

salmanஇலங்கை அரசுடன் இந்தியா கொண்டுள்ள நல்லுறவு தொடரும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நேற்று அமைச்சர் சல்மான் குர்ஷித், நிருபர்களிடம் கூறியதாவது,

இந்திய – சீன எல்லையை ஒட்டி இந்திய பகுதியில் உள்ள இளைஞர்களை சேர்த்து தனிப்படைப் பிரிவு ஏற்படுத்தும் எண்ணம் இல்லை.

போர் காலங்களிலும் அமைதியான முறையில் தீர்வு காண விரும்புபவர்கள் நாம். எனவே, தேசிய நலனை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அணுசக்தி தொடர்பான உடன்பாடு குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பல துறைகளில் நல்லுறவு நிலவுகிறது. அந்நாட்டை புனரமைக்க நாம் முழுவீச்சில் இறங்கியுள்ளோம்.

அந்த நல்லுறவு தொடரும் என நம்புகிறோம். இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கம் குறித்து கவலைப்பட தேவையில்லை. இவ்வாறு குர்ஷித் கூறினார்.

5 வயதிற்கு குறைந்த பிள்ளைகள் உடைய தாய்மார் வெளிநாட்டு வேலைக்குச் செல்லத் தடை..!

slவெளிநாட்டு வேலைக்கு செல்லத் தயாராகும் பெண்களின் குடும்ப பின்னணி குறித்து தகவல் திரட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தீர்மானித்துள்ளது.

பிரதேச செயலகங்கள் ஊடாக குறித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 வயதிற்கும் குறைந்த குழந்தைகள் உள்ள பெண்கள் வெளிநாடு செல்வதை தடை செய்வதே இத்திட்டத்தின் நோக்கம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை இன்று தொடக்கம் குறுந்தகவல் மூலம் அவர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

ஒரு பயணத்தில்..

Payanam

ஒரு பயணத்தின் முடிவுகள்
முடிவிலியாய்..

பேருந்து பயத்தின்
நெருசல்களின்
உரசல்களால்
யார் யாரோ
விட்டு சென்ற
வியா்வை நாற்றங்கள்
இன்னும் என்னுள்
அருவருக்க……

காலைத் தேநீரும்
காலவதியாகி
களைப்பும் இளைப்பும்
சடுதியாய் வந்துவிட

தோற்றுப் போன
பயணத்தின் வெறுமை
தனிமையை நொந்து கொள்ள

கரை தொட்டும்
கடல் மேவும்
அலையாகி
நுளைவாயில்
நோக்கி நடந்து கொண்டிருந்தேன்
அத்தனை வெறுமைகளையும்
விழுங்கி ..

கொட்டும் வெயிலையும்
குளிருட்டி
கணப்பொழுதொன்றை
கனதியானக்கியது
அவன் வருகை

உயிரள்ளிப் போகும்
கனத்த நினைவக்குள்
தொலைகிறது மௌனம்
கால நீட்சியில் அவன்
உருவத்தில்
எழிலும்
பதவியில் உயா்வும்
கூடியேருந்தது..

பாசம் நிறைந்த -அவன்
பார்வைக்குள் அடங்கியே
போனது பயணக்களைப்புகள்

இத்தனை காலப்
பிரிவில்
அவனும் என்னை
போலவே தவித்த படி
உதடுகள் அசைய
மறுக்க
கைகள் பற்றிக் கொண்டன

மாறும் உலகில்
மாறாத அதே
பள்ளித் தோளனாய்
நீ உயிருடன்
இருக்கின்றாயா?
பதறிப் போனன்
அவன் கண்ணீா்
துளிகளை யாருக்கும்
தெரியாமல் காற்று
உலா்த்தி சென்றது
காலத்தின்
அவசரத்தில்
கதை பேசா
பிரிவுகளால்…

நேரில்
பேசும் நினைவுகள்
சுமந்தபடி
அவனைப் போலவே
நானும்
உணா்வுமிக்க பொழுதொன்றிற்காய்
காத்திருக்கின்றேன்.

மித்யா -கானவி.

பூனைகளாக மாறிய புலிகள்(படங்கள் இணைப்பு)

தாய்லாந்திலுள்ள கன்சனபுரி எனுமிடத்திலுள்ள சர்ச்சைக்குரிய பௌத்த புலிக் கோயியிலுள்ள புலிகள். 100க்கும் அதிகமான பிக்குகள் உள்ள இந்தக் கோயிலில் பூனைகளாக புலிகள் வளர்க்கப்படுகின்றன.இது பார்போரை வியப்பில் ஆழ்த்துகின்றது.

p5 p4 p3 Tigers at the Tiger Temple in Kanchanaburi, Thailand - 26 May 2013 p1

வணக்கம் சென்னை திருட்டு கதையா?

vanakkam chennai

உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கும் புதிய படம் “வணக்கம் சென்னை”.இப்படத்தில் சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் கதை 1955 – ஆம் ஆண்டு ஜெமினி கணேசன்-சாவித்திரி நடித்த “மிசியம்மா” படத்தின் தழுவல் என்று படக்குழுவினர் வாயிலாக செய்தி கசிந்தது. இதுகுறித்து, தகவல் அறிந்ததும் கிருத்திகா கடுப்பாகி விட்டார்.

இதுகுறித்து அவர் கூறும்போது “வணக்கம் சென்னை” படத்தின் கதை “மிசியம்மா” படத்தின் தழுவல் என்று கூறுவதில் உண்மை இல்லை.

அது வெறும் வதந்திதான். நான் இலக்கியம் படித்தவள். கல்லூரியில் படிக்கும்போதே நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். அதில் ஒரு சிறுகதைதான் “வணக்கம் சென்னை”. இது முழுக்க முழுக்க என்னுடைய கதைதான் இவ்வாறு அவர் கூறினார்.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா எதிர்வரும் 27-ம் திகதி நடைபெறவுள்ளது.

கவிஞர் வாலி இன்று மாலை காலமானார்..!

TH-VAALIசினிமா பாடலாசிரியர் வாலி (வயது 82) உடல நலக் குறைவால் இன்று காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த கவிஞர் வாலி, கடந்த மாதம்  உடல்நிலை மோசமானதை அடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

சில தினங்களில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட் டது. பின்னர் சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதித்ததை அடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த சில நாட்களாக அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அவரது உடல்நிலை நேற்று முன்தினம் இரவு மோசமானது.

அவருக்கு வைத்தியர்கள் செயற்கை சுவாசம் பொருத்தி தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கவிஞர் வாலி இன்று காலமானார். அவரது மறைவிற்கு ஏராளமான திரையுலகத்தை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வாலி 1931-2013 (வரலாறு)

தமிழில் ஆயிரம் படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியவர் கவிஞர் வாலி, புதிய வானம் புதிய பூமி, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, ஏமாற்றாதே ஏமாறாதே, கண் போன போக்கிலே கால் போகலாமா, காற்று வாங்க போனேன் கவிதை வாங்கி வந்தேன், வெள்ளிக் கிண்ணம்தான் தங்க கையிகளில், நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை, நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன், மண்ணிக்க வேண்டுகிறேன், அவளா சொன்னால் இருக்காது என எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் இருந்து இக்கால நடிகர்கள் படங்கள் வரை ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதி உள்ளார்.

பத்மஸ்ரீ விருது பெற்றவர். கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் எழுதிய உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. வாலி ஐந்துமுறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர். சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ளார். தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திரிஷாவின் சினிமா வாழ்க்கை இனிமே அவ்ளோதானா?

trishaகடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாகவே நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகை திரிஷா தான். மார்க்கெட்டில் நிலைத்திருக்க என்ன தேவையோ அதைக் கச்சிதமாகப் புரிந்து கொண்டு செயல்பட்டவர்.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கிலும் கோலோச்சிய நடிகை த்ரிஷா. இடையில் இந்திப் பக்கம் கூட போய் வந்தார். ஆனால், அவர் நடித்த “கட்டா மிட்டா” ப்ளாப் ஆனதால், தமிழ் – தெலுங்கு இரண்டில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

தற்போது தெலுங்கில் திரிஷாவுக்கு சுத்தமாக மார்க்கெட் இல்லை. தமிழிலும், ஜெயம் ரவியுடன் “பூலோகம்”, ஜீவாவுடன் “என்றென்றும் புன்னகை” படங்கள் மட்டுமே கைவசம் இருக்கின்றன.

அதைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கும் “துருவ நட்சத்திரம்” படத்தில் சூர்யாவுக்கு த்ரிஷா தான் ஜோடி என்றார்கள். ஆனால், அந்தப் படம் கைவிடப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கும் திரிஷாவைப் பார்த்து போரடித்து விட்டதால், இயக்குநர்கள் யாரும் அவரைக் கண்டு கொள்வதில்லையாம். கையில் இருக்கும் இரண்டு படங்களும் முடிந்துவிட்டால் திரிஷாவுக்கு வேறு படமே இல்லை.

இதுவரை சிங்கிள் ஹீரோயின் மட்டும்தான் என்று கண்டிஷன் போட்டவர் தற்போது இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட்டாக இருந்தாலும் ஓ.கே. என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

அப்படி இருந்தும் வாய்ப்புகள் எட்டிப் பார்க்கவே இல்லையாம். ஒருவழியாக 3 ஹீரோயின்களில் ஒருவராக திரிஷாவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

“ரம்” படத்தில் 3 கதாநாயகிகளில் திரிஷாவும் ஒருவர். அவருடன் ஓவியா, பூனம் பாஜ்வா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

அப்போ திரிஷா இனிமே அவ்ளோதானா? என்கிறார்கள் கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள்.

தெஹிவளையில் 31 அனகொண்டா மலைப் பாம்புக் குட்டிகள்!!

anakonda

 

 

 

 

 

 

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் நேற்று இரவு 31 புதிய அனகொண்டா மலைபாம்பு குட்டிகள் பிறந்துள்ளன.

இவை சிறந்த உடல்நிலையில் இருப்பதாக மிருகக் காட்சிசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இங்கு மேலும் இரண்டு தடவைகள் அனகொண்டா பாம்புகள் பிறந்திருந்தன.

அவை பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்துக்கது.

மோதலுக்கு தயாரான அஜித்-விஜய் படங்கள்..!

vijay_ajithவிஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கிற 53-வது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்து வெளியாகும் நிலையில் உள்ளது.
இன்னமும் பெயரிப்படாத இப்படத்தில் ஆர்யா, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு பின்பு தற்போது 54-வது படமாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித்.

விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்குமார் ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார்.

மேலும் சந்தானம், பாலா, விதார்த், ‘நாடோடிகள்’ அபிநயா, ரமேஷ் கண்ணா, இளவரசு, அப்புக்குட்டி உட்பட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்து விட்டதால், வரும் பொங்கலன்று வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல், விஜய் தற்போது நடித்து முடித்துள்ள ‘தலைவா’ படம் அடுத்த மாதம் வெளியாகிறது.

இதையடுத்து நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜில்லா படமும் பொங்கலுக்கு வெளியாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொங்கல் நாளில் ‘தல’-‘தளபதி’ஆகியோரின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது ரசிகர்களிடேயே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அடுத்த வருட பொங்கல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏறிக்கொண்டே போகும் நயன்தாராவின் சம்பளம்!

nayanthara

ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் நயன்தாரா. ரஜினி தொடங்கி சூர்யா, விஜய், அஜித், ஆர்யா, சிம்பு, தனுஷ், ஜீவா என தமிழின் அத்தனை முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்துவிட்டார்.

சிம்பு, பிரபுதேவா, ஆர்யா என காதல் சூறாவளிகள் சுற்றிச் சுற்றி அடித்தாலும், எல்லாவற்றையும் தாக்குப்பிடித்து இன்று வரை தன்னுடைய மார்க்கெட்டை டொப் கியரில் கொண்டு செல்கிறார்.

தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளத்திலும் இவருடைய மார்க்கெட் உச்சத்தில்தான் உள்ளது. தற்போது ஆர்யாவுடன் “ராஜா ராணி”, அஜித்தின் 53-வது படம், உதயநிதியுடன் “இது கதிர்வேலன் காதல்” என தமிழில் அவர் பிஸியோ பிஸி.

அதேபோல் தன்னுடைய சம்பளத்தையும் அதிரடியாக உயர்த்தி விட்டார் நயன்தாரா. “இது கதிர்வேலன் காதல்” படத்தில் நடிப்பதற்காக ஒரு கோடியே 20 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறாராம் நயன்தாரா.

இந்த நிலையில், ஜெயம் ரவியுடன் ஜோடியாக நடிப்பதற்காக நயனிடம் பேசியுள்ளனர். ஜெயம் ராஜா இயக்கும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம் நயன். அதைக்கேட்டு ஆடிப்போன தயாரிப்பு தரப்பு சம்பளத்தைக் குறைக்கும்படி கேட்டிருக்கிறார்களாம்.