எகிப்து ராணுவ தாக்குதலில் 525 பேர் பலி : போராட்டம் தொடர்கிறது..!!

egypt

எகிப்தில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 525 பேர் கொல்லப்பட்டபோதும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முன்னாள் ஜனாதிபதி முர்ஷியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எகிப்தில் ஜனநாயக முறைப்படி முதல் முறையாக ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது முர்ஷி அடக்குமுறையை கையாள்வதாக கூறி அந்நாட்டு மக்களில் ஒரு பகுதியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கடந்த ஜூலை 3ம் திகதி, முர்ஷியை கைது செய்த ராணுவம், அவரை தனது காவலில் வைத்துள்ளது.

இந்நிலையில் முர்ஷி தலைமையிலான முஸ்லிம் பிரதர்ஹுட் கட்சியினர் அவரை மீண்டும் பதவியில் நியமிக்கக் கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கெய்ரோவின் இரு பகுதிகளில் முகாம்கள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்களை ஒடுக்குவதற்காக தற்காலிக ஜனாதிபதி முடிவு செய்தார். இதையடுத்து நேற்று முன்தினம் ராணுவம் களத்தில் இறங்கியது. முகாம்களில் இருந்தவர்களை விரட்டியடிக்க முயன்றபோது அவர்கள் வன்முறையில் இறங்கினர். ராணுவத்தினர் மீது வெடிகுண்டுகளை வீச ஆரம்பித்தனர். வேறு வழியின்றி ராணுவம் அவர்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தது.

இதில் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் உட்பட 525 பேர் கொல்லப்பட்டனர். போராட்டக்காரர்கள் முகாம் அமைத்திருந்த பகுதியே போர்க்களம் போல் காணப்படுகிறது. இந்த செயலை கண்டித்து நாடு முழுவதும் முர்ஷியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எல்லா இடங்களிலும் ராணுவம் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. எகிப்தில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுவதால் ஒரு மாதகாலம் அவசர நிலையையும் ராணுவம் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், துணை ஜனாதிபதி எல்பராடி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் சமரசம் மூலம்தான் தீர்வு காணவேண்டும். அவ்வாறில்லாமல் அடக்குமுறையை கையாள்வது சரியல்ல. மேலும் பொதுமக்கள் மீது ராணுவத்தை ஏவிவிடும் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை.

இம்முடிவை நிர்வாகம் என்னை ஆலோசிக்காமலேயே எடுத்துள்ளது. இதுபோன்ற செயல்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் பதவி விலகுகிறேன் என்று கூறியுள்ளார். எல் பராடியின் பதவி விலகலுக்கு ஒரு தரப்பு ஆதரவும், மற்றொரு தரப்பு எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, முஸ்லிம் பிரதர்ஹுட் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கெஹாத் எல் ஹதாத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் எங்களில் எத்தனை பேரை ராணுவம் கொன்றாலும், தொடர்ந்து எங்கள் போராட்டம் நடக்கும். முர்ஷியை மீண்டும் பதவியில் நியமிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார்.

ரஜினியின் தங்கை ரகசிய திருமணம்..!

rukminiகோச்சடையான் படத்தில் ரஜினியின் தங்கையாக நடிக்கும் ருக்மணி ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இயக்குனர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ருக்மணி.

இதன் பின்பு ஆனந்த தாண்டவம் படத்திலும் நடித்துவிட்டு பரதநாட்டிய பள்ளியில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் தற்போது கோச்சடையான் படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்து கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து ருக்மணி கூறுகையில், முதன்முறையாக அனிமேஷன் படத்தில் நடித்த அனுபவம் மிகவும் வித்தியாசமானதாக இருந்தது.

இப்படத்தில் நான் டான்சராக நடிக்கிறேன், நடனம் தெரியும் என்பதால் இதுமாதிரியான வேடங்கள் வருகிறது.

இப்படத்திலும் நடன சீன் ஒன்று உள்ளது, இதில் கமெராக்கள் பொருத்தப்பட்ட உடையை அணிந்து நடித்தது வித்தியாசமானதாக இருந்தது.

ரஜினியுடன் ஒரு மணி நேரம் பணியாற்றிய அனுபவத்தில் அவர் ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு தகுதியானவர் என்பதை அறிந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ரோஹன் மோகன் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், தன் சொந்த வாழ்க்கை பற்றி பேச விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

டெஸ்டில் இருந்தும் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு?

sachine200 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய பிறகு சச்சின் டெண்டுல்கர் என்ற சகாப்தம் டெஸ்ட் போட்டிகளில் முடிவுக்கு வரும் என்று முன்னாள் வீரர் கர்சான் காவ்ரி தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கர்சன் காவ்ரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:

இந்திய வீரர் சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட்டில் எல்லா சாதனைகளையும் படைத்து விட்டார். அடுத்ததாக அவர் 200-வது டெஸ்ட் மைல்கல்லை எட்டும் ஆவலில் இருப்பார் என்று உறுதியாக கூற முடியும்.

இந்த ஆண்டின் இறுதியில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் விளையாடும் போது அவர் 200-வது டெஸ்டில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார்.

அதன் பிறகு அவர் டெஸ்டில் இருந்தும் ஓய்வு பெற்று விடுவார் என்று நினைக்கிறேன்.ஓய்வு பெற்றாலும் தெண்டுல்கர் கிரிக்கெட்டை விட்டு முழுமையாக ஒதுங்கக்கூடாது. எப்போதும் கிரிக்கெட்டுடன் தொடர்பு வைத்து கொண்டு ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு அளிக்க வேண்டும். அவரது சாதனைகளை ஏறக்குறைய யாராலும் முறியடிக்க முடியாது. 200 டெஸ்ட் போட்டி என்பதை நம்ப முடியவில்லை.

இவ்வாறு காவ்ரி கூறினார்.

40 வயதான தெண்டுல்கர் இதுவரை 198 டெஸ்டில் ஆடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ராமேஸ்வரம் மீனவர்கள் எண்மர் விடுதலை..!

rameswaramஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் இரண்டு படகுகளில் கடந்த ஜூன் மாதம் 15ம் திகதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படை எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்திருந்தது.

இவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அனுராதபுரம் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 8 மீனவர்களையும், மன்னார் மாவட்ட நீதிபதி ஆனந்தி கனகரத்தினம் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

கூண்டுக்குள் அடைக்கப்பட் சிங்கம் திடீரென குரைத்த வினோதம்!!

dog

சீனாவில் மிருகக் காட்சிசாலையொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆபிரிக்க சிங்கமொன்று திடீரென குரைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சீனாவில் மிருககாட்சி சாலையொன்றில் ஆபிரிக்க சிங்கமொன்று அடைத்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த சிங்கம் பார்வையாளர்கள் முன்பு திடீரென குரைத்ததால் போலி என வெட்ட வெளிச்சமானது. உண்மையான சிங்கத்துக்கு பதிலாக திபெத்தில் வளரும் மஸ்டிப் வகை நாயை அடைத்து வைத்திருந்ததாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மிருககாட்சி சாலையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், உடல் முழுதும் ரோமம் வளரும் திபெத்திய மாஸ்டிப் நாய் தூரத்தில் இருந்து பார்கும் போது சிங்கத்தைப் போலத் தோன்றும்.

இனப்பெருக்கத்துக்காக ஆண் சிங்கம் வேறு ஒரு இடத்துக்கு அந்த அனுப்பப்பட்டதால், அந்த கூண்டில் ஊழியர் ஒருவர் வளர்த்த நாயை அடைத்து வைத்ததாக தெரிவித்துள்ளார்.

படம் வெளிவராவிட்டால் கடனாளி ஆகிவிடுவேன் : ஜெயலலிதாவுக்கு தலைவா தயாரிப்பாளர் வேண்டுகோள்..!!

thalaiva

தலைவா திரைப்பட தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது..

அம்மா நான் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். இதற்கு முன் இரண்டு படங்கள் தயாரித்து நல்ல விதமாக வெளியிட்டு இருக்கிறேன். நான் ஒரு நல்ல தயாரிப்பாளனாகவும், நாணயமான தயாரிப்பாளனாகவும் தமிழ் திரை உலகில் பேர் எடுத்து இருக்கிறேன்.

கடந்த 4 வருடங்களாக முயற்சி செய்து நடிகர் விஜய்யின் கால்ஷீட் பெற்று பல கோடிகள் கடன் வாங்கி மிகுந்த பொருட்செலவில் இந்த தலைவா திரைப்படத்தை தயாரித்து இருக்கிறேன்.

கடந்த 9.8.2013 அன்று படத்தை வெளியிடுவதாக விநியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் செய்து இருக்கிறேன். இந்த தலைவா திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தியேட்டர்களுக்கு யாரோ இந்த திரைப்படத்தை வெளியிட கூடாது என்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள். இதனால் தியேட்டர் அதிபர்கள் படத்தை திரையிட பயந்து படம் 9ம் திகதி வெளியிட முடியாமல் ஆகிவிட்டது.

ஆனால் அதே நாளில் வெளிநாடுகளிலும், கேரளா, கர்நாடக, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களிலும் படம் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் வெளிவராமல் நின்றுவிட்டது. இதற்கு இடையில் இன்டர்நெட்டிலும் திருட்டு வி.சி.டிகளிலும் படம் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனால் எனக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் நிலைமை உருவாகிவிட்டது.

இந்த படம் இந்த வாரம் கூட வெளியாகாவிட்டால் நான் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாவேன். இந்த திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரைஅரங்கு உரிமையாளர்களும் மிகவும் நஷ்டத்திற்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி உள்ளார்கள்.

ஆகவே முதல்–அமைச்சர் ஜெயலலிதா மனமிறங்கி இந்த திரைப்படம் வெளிவர வேண்டிய நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று தாழ்பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.

இந்திய கொடியுடன் கச்சத்தீவு செல்ல முயன்ற 69 பேர் கைதாகி விடுதலை..!

arrest1கச்சத்தீவை மீட்கக் கோரியும், அங்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றப்போவதாகவும் தேவர் தேசியப் பேரவையினர் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து பேரவையின் தலைவர் கே.சி.திருமாறன் தலைமையில் அரசரடியில் உள்ள மூக்கையாத் தேவர் சிலை முன்பு வியாழக்கிழமை கூடினர்.

சிலைக்கு மாலை அணிவித்த அவர்கள் கச்சத்தீவுக்குச் செல்வதாகக் கூறி புறப்பட்டனர்.

தகவலறிந்த பொலிஸார் அங்கு விரைந்து வந்து கே.சி.திருமாறன் உள்ளிட்ட 69 பேரையும் கைது செய்தனர்.

அவர்களை திருமண மண்டபத்தில் தங்கவைத்த பின்னர் மாலையில் விடுவித்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

படித்தது மறந்து போனதால் கழுத்தை அறுத்துக் கொண்ட பட்டதாரி ஆசிரியர்..!!

cut

தமிழ்நாட்டில் பட்டதாரி ஒருவர் படித்த பாடம் மறந்து போனதால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலை மீமிசல் கிராமத்தில் உணவு விடுதி நடத்தி வந்த ஒருவரின் பேரன் பாஷா. இவர் பி.எட் படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்.

18ம் திகதி நடக்க உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி நிலையத்தில் அறை எடுத்து தங்கி இருந்து படித்து வருகிறார். துறை சம்மந்தமாக எந்த கேள்விகள் கேட்டாலும் உடனுக்குடன் பதில் சொல்லும் திறமையுடன் படித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தன் அறை நண்பர்களிடம் பேசும் போது படித்தது எல்லாம் மறந்துகிட்டே இருக்கு. நான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வது போல எண்ணம் வருகிறது. என்னை நானே அழித்துக் கொள்வேனோ என்று பயமாக உள்ளது என்று பேசியுள்ளார்.

இதனைக் கேட்ட அறை நண்பர்கள் பாஷா வீட்டிற்கு தகவல் சொல்லி அவரை மீமிசலுக்கு அனுப்பிவிட்டனர்.

இந்நிலையில் பேருந்து நிறுத்தம் அருகில் சோர்வாக நின்றவரிடம் அப்பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் என்ன பிரச்சனை ஏன் இப்படி இருக்கிறார் என்று கேட்ட போது படித்தது எல்லாம் மறந்து விட்டது. அதனால் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று சொல்லியுள்ளார்.

சாதாரணமாக சொல்கிறார் என்று அவர்களும் பேசாமல் இருந்துவிட்டனர். ஆனால் பாஷா சொன்னது போலவே தற்கொலை செய்து கொளவதற்காக தன் கழுத்தை தன்னை தானே அறுத்துக் கொண்டு கதறியுள்ளார்.

இதனைப் பார்த்த பெற்றோர்கள் அவரை திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அதிகம் படித்து மறந்து போனதால் கழுத்தை அறுத்துக் கொண்ட பட்டதாரி ஆசிரியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

150 கி.மீ வேகத்தில் சீனாவைத் தாக்கியது உடோர் புயல்..!

chinaதெற்கு சீனாவில் உள்ள கடலோர பகுதிகளை உடோர் புயல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேரை காணவில்லை. குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மாவோமிங் நகரை உடோர் புயல் தாக்கியபோது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.5 பேரை காணவில்லை. புயல் தாக்குவதற்கு முன்பே 88,000 பேர் மாவோமிங் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர்ச் சேதம் தடுக்கப்பட்டது.

பலத்த மழையால் கியூகிவா நதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஜான்ஜியாங்,உஜூவன் பகுதிகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக குவாங்ஜி நீர்வள பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஹூனன் மாகாணத்தில் வெள்ளநீர் ரயில் பாதையை சூழ்ந்ததால் பல இடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த வாரம் இதே உடோர் புயல் பிலிப்பின்ஸைதாக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர்.

பிணங்களை சாப்பிடும் வாலிபரை கொடூரமாக தாக்கிய பொதுமக்கள்..!!

psychoஇந்திய உத்திரபிரதேசத்தில் இறந்தவர்களின் உடல் எச்சங்களை சாப்பிட்டதாக இளைஞர் ஒருவரை பிடித்து பொதுமக்கள் பொலிசில் ஒப்படைத்தனர்.

உத்திரபிரதேசத்தின் கான்பூர் சகேரி பகுதியில் உள்ள மயானத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் குந்தன் என்ற 25 வயது இளைஞர் சுற்றி திரிந்துள்ளார்.

இவர் இறந்தவர்களின் உடல் எச்சங்களை சாப்பிடுவதாக சந்தேகமடைந்த சிலர் அவரை தாக்கியுள்ளனர்.

இதனால் பலத்த காயங்களுக்கு உள்ளான குந்தனை விரைந்து வந்த பொலிசார் அழைத்து சென்றனர்.

இதன் பின்பு குந்தனிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், மனநிலை சரியில்லாதவர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பங்களாதேஷின் 9 சூதாட்ட வீரர்கள் ஐ.சி.சியால் இடைநிறுத்தம்..!!

icc

பங்களாதேஷ் பிரீமியர் லீக் 20-20 கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்டம் தொடர்பாக 9 பேரை சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) இடைநீக்கம் செய்துள்ளது.

இந்த 9 பேரில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதற்காக 7 பேரும் ஆட்ட நிர்ணயத்திற்காக சூதாட்டத்தரகர்கள் தங்களை அணுகியது தொடர்பாக புகார் தெரிவிக்காமல் இருந்ததற்காக இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளையில் இடைநீக்கம் செய்யப்பட்ட 9 பேர் குறித்த விபரங்களை ஐ.சி.சி. வெளியிடவில்லை அவர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது முடிந்த பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டவர்களின் பெயர் வெளியிடப்படும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

வெல்லாவெளி இருவேறு விபத்துக்களில் ஒருவர் பலி மூவர் படுயாகம்..!

ACCIDENT_logoமட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

வெல்லாவெளி வெள்ளப்பாலம் அருகில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் நற்பிட்டிமுனையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது நற்பிட்டிமுனையை சேர்ந்த முகம்மது நவாஸ் (26வயது) என்பவரே உயிரிழந்ததாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

நெல்அறுவடை செய்யும் இயந்திரத்துடன் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றதாகவும் குறித்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் நெல்அறுவடை செய்யும் இயந்திரத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் நெல்அறுவடை செய்யும் இயந்திரமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று பிற்பகல் வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

மண்டூரில் இருந்துவந்த முச்சக்கரவண்டியும் களுவாஞ்சிகுடியில் இருந்துசென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவரும் முச்சக்கர வண்டியில் சென்றவர்களுமாக மூன்று பேர் காயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய ஆயுள் தண்டனைக் கைதிகள் 9 பேர் இலங்கையிலிருந்து விடுவிப்பு..!

jailசார்க் ஒப்பந்தத்தின்படி, இலங்கை அரசு ஆயுள் தண்டனை கைதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க தொடங்கி உள்ளது.

முதல் கட்டமாக ஒரு பெண் உள்பட 4 கைதிகளை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்திய தூதரக அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

அடுத்ததாக நேற்று 5 கைதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கை நாட்டின் நீதித்துறையால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.

இவர்கள் மீதி தண்டனை காலத்தை இந்திய சிறையில் கழிக்கவுள்ளனர்.

இலங்கையில் தண்டனை அனுபவித்து வந்த இதேபோல 20 கைதிகள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வசம் ஒப்படைக்கப்பட்டார்கள்.

கள்ளக்காதலிலையை கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு மனைவியுடன் தப்பிய கணவர்!!

MURDER

திருமணம் செய்து கொள்ளுமாறும் மனைவியை விட்டுப் பிரிந்து வந்து விடுமாறும் வற்புறுத்திய தனது கள்ளக்காதலியை கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு பின்னர் தனது மனைவி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த நண்பருடன் தலைமறைவான நபரை போலீஸார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி நாச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதான பிரகாஷ் குமார். இவரது மனைவி 32 வயதான சத்யபாமா. இவர்கள் இருவரும் ஊஞ்சவேலமபட்டி கிராமத்தில் சமீபத்தில் வாடகைக்கு குடியமர்ந்தனர். சில நாட்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றனர்.

ஆனால் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் பிரகாஷ் குமார் குடியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே பொலிஸாருக்குத் தகவல் போனது. பொலிஸார் விரைந்து வந்து கதவை உடைத்துப் போய் பார்த்தபோது அங்கு ஒரு இளம் பெண் பிணமாகக் கிடந்தார். அவரது உடல் சிதைந்து போயிருந்தது.

இதையடுத்து பொலிஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். விசாரணையில் இறந்து கிடந்த பெண்ணின் பெயர் ஜெகதாம்பாள் என்றும் 28 வயதாவதும், அவர் நாகேந்திர குமார் என்பவரின் மனைவி என்றும் தெரிய வந்தது. ஜெகதாம்பாளும், பிரகாஷ் குமாரும் கள்ளக்காதலர்கள்.

இந்த நிலையில் சத்யபாமாவை விட்டு விட்டு தன்னுடன் வந்து விடுமாறும் திருமணம் செய்து கொள்ளுமாறும் வலியுறுத்தி வந்துள்ளார் ஜெகதாம்பாள். ஆனால் இதை ஏற்கவில்லை பிரகாஷ் குமார். மேலும் தனது மனைவி மற்றும் நண்பர் ரூபன்ராஜ் என்பவரிடமும் கூறியுள்ளார். இதையடுத்து ஜெகதாம்பாளை வீட்டுக்கு வரவழைத்துள்ளார் பிரகாஷ் குமார்.

அங்கு வைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு மூன்று பேரும் தப்பியோடி விட்டனர். பொலிஸார் அவர்களைத் தீவிரமாக தேடி வந்தனர். அதில் நாகர்கோவில் அருகே பதுங்கியிருந்த மூன்று பேரையும் பொலிஸார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

17 மொழிகளில் வெளிவருகின்றது “ஐ”..!!

Shankar Vikram I Tamil Movie First Look Wallpapers

கொலிவுட்டின் தற்போதைய எதிர்பார்ப்பாக இருப்பது ஷங்கர் இயக்கத்தில், விக்ரம், எமிஜக்சன் நடித்து வரும் ’ஐ’ படத்தைப் பற்றியதுதான்.

’ஐ’ படத்தின் படப்பிடிப்பு 75 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக கொலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. அந்தவகையில் ‘ஐ’ திரைப்படத்தினை 17 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

இதற்குமுன் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் படத்தினை 9 மொழிகளில் வெளியிட்டார்கள்.

ஷங்கர் இயக்கிவரும் ’ஐ’ படத்திற்கு, நீண்ட இடைவெளிக்குப் பின்பு இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை கவனிக்கிறார், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படம் தாமதமாவதற்கு காரணம் என்னவென்று விசாரித்தபோது, விக்ரமிற்கு பிசிகல் சேஞ்ச், மோல்டிங், ஸ்கேனிங், செயற்கை உறுப்புக்கான பொருட்களை தயார் செய்தல் என கிட்டத்தட்ட இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்து ஒருவருடம் ஆகிவிட்டதாம்.

’ஐ’ குழு தற்போது சென்னை மருத்துவமனையில் இறுதிக்கட்ட காட்சியை படமாக்கி வருகிறது.

நடனம் என்றால் இதுதான்..(வீடியோ)

“நாக்கு மூக்கா” பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடும் பெண்..