கேட்டதை விட அதிகமாக தமிழகத்திற்கு அதிக காவிரி நீரை வழங்கி விட்டோம் – கர்நாடகா

krs_thumb

தமிழகத்திற்கு தேவைப்பட்டதை விட அதிக அளவு காவிரி நீரைத் திறந்து விட்டதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தின் சம்பா மற்றும் குருவை சாகுபடிக்கு காவிரியில் இருந்து போதுமான நீரைத் திறந்துவிடாத கர்நாடக அரசு ரூ.2,500 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அதிமுக அரசு தெரிவித்தது.

இந்நிலையில் இது குறித்து கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 2012-2013ம் ஆண்டில் கர்நாடகாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட காவிரிப் பகுதியில் உள்ள பயிர்களை வாடவிட்டுவிட்டு தமிழகத்தின் சம்பா மற்றும் குருவை சாகுபடிக்கு தேவைக்கு அதிகமாகவே காவிரி நீர் திறந்துவிட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.

தமிழ்நாடு நஷ்ட ஈடு கேட்டுள்ளது குறித்து எங்களுக்கு நோட்டீஸ் வந்தால் எங்கள் சட்டக்குழுவை வைத்து எங்கள் பதிலை முறையாக தெரிவிப்போம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பின்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்படாததால் பயிர்கள் கருகின.

இதனால் கர்நாடக அரசு தமிழகத்திற்கு ரூ.2, 479 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கூறி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

IPL சூதாட்டம் – சீனிவாசன் ராஜினாமா செய்வாரா?

srini

IPL சூதாட்டம் விவகாரத்தில் BCCI எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் பதவி விலக நெருக்கடி அதிகரித்து வருகிறது. அவர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி BCCI செயலர் ஜக்தாலே, பொருளாளர் அஜய் ஷிர்கே ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

IPL சூதாட்ட விவகாரத்தில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் என்ற நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.

BCCI பொருளாளர் அஜய் ஷிர்கே மிக மோசமான முறையில் சீனிவாசனை விமர்சித்து ராஜினாமா செய்ய வலியுறுத்தினார். இந்த நிலையில் BCCI. பொருளாளர் அஜய் ஷிர்கேயும், செயலாளர் சஞ்சய் ஜக்தாலேவும் தங்கள் பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர். கிரிக்கெட்டில் சமீபத்திய சம்பவங்கள் தன்னை மிகவும் காயப்படுத்தியதால் பதவியை ராஜினாமா செய்ததாக ஜக்தாலே கூறியுள்ளார்.

மேலும், சூதாட்டம் தொடர்பாக குருநாத் மெய்யப்பன், இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ்  உரிமையாளர்களிடம் விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட 3 நபர் குழுவில் பணியாற்ற மாட்டேன் என்றும் ஜக்தாலே கூறியுள்ளார். இதே கருத்தை அஜய் ஷிர்கேவும் தெரிவித்திருக்கிறார்.

 

முகத்தினைப் பிரகசமக்கும் தேங்காய்..!

faci

நமது சமையலில் முக்கிய இடம்பெறும் தேங்காய், நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தலை முதல் பாதம் வரை மென்மை, பளபளப்பை தாராளமாய் அள்ளித்தரும் தேங்காய், நம்மை தன்னம்பிக்கையுடன் நடைபோட வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

* வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூடிய விரைவில் அவை காணாமல் போய்விடும்.

* வெயில் காலங்களில் சூரியஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். முகம் கருப்பாவதை தடுக்கவும் தேங்காய் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்­ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்.

 

பட்டுப் போன்று மேனியைப் பாதுகாக்க….

faci

தோல் வறட்சி, கட்டம் கட்டமாகத் தோலின்மீது மெலிதான வெடிப்பு எதுவுமில்லாத பட்டுப் போன்ற மேனி வேண்டுமா? இதைப் படியுங்கள் முதலில்!

தண்ணீர் மருந்து

ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துபவர்களுக்கு வயிற்றுப் பிரச்சினை அவ்வளவாக வருவதில்லை!

வயிறு நலமாக இருந்தால், நமது உடம்பின் சருமமும் சுத்தமாக இருக்கும்.

எலுமிச்சை உடம்புக்கு நல்லது!

குளிப்பதற்கு முன் – ஒரு வாளித் தண்ணீரில் ஒரு மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளுங்கள். சோப்பு தேய்த்துக் குளித்த பின், கடைசியாக எலுமிச்சை கலந்த தண்ணீரில் குளியுங்கள்.

இதன் புத்துணர்வையும் சரும மினு மினுப்பையும் அனுபவித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

தேமலை விரட்டுங்க!

நாட்டுமருந்துக் கடைகளில் கார்போக அரிசி என்று கேட்டால் தருவார்கள். இதைப் பொடி செய்து, மெல்லிய துணியில் அரித்து எடுத்தது , ஒருபாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் இதில் கொஞ்சம் எடுத்துத் தண்ணீர் விட்டு பசை மாதிரி செய்து தோலில் தடவுங்கள். விரைவில் தேமல் இருந்த இடம் தெரியாமல் போகும்!

மெருகுக்கு பப்பாளி!

நன்கு பழுத்த பப்பாளியை நறுக்கி, மிக்ஸியில் போட்டு அடித்து, அத்துடன் ஒரு மூடி எலுமிச்சை சாறை விட்டுக் கலந்து, உடம்பில் தேய்த்து, ஒரு மணி நேரம் போல ஊறியபின் குளிக்கலாம்.

 

பஸ் எழுந்து நடந்து வந்தால் எப்படியிருக்கும்?

 

செக் குடியரசு நாட்டை சேர்ந்த பிரபல சிற்பி டேவிட் செர்னி. சர்ச்சை மன்னனான இவர் பழைய டபுள் டெக்கர் பஸ்சுக்கு எந்திர கைகளை பொருத்தி வியக்க வைத்துள்ளார்.

1957ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அந்த டபுள் டெக்கர் பஸ்சில் ஹைட்ராலிக் முறையில் இயங்கும் வகையில் இரண்டு கைகளை பொருத்தப்பட்டுள்ளது. அந்த கைகளை வைத்து அந்த பஸ் மேலும், கீழும் நகர்வது எழுந்து நடந்து வருவது போன்று இருப்பதால் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

லண்டன், இஸ்லிங்டன் நகரில் ஒலிம்பிக் போட்டிகளின்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அந்த பஸ்சை கீழே காணலாம்..

 

bus6
bus5
bus4
bus3
bus2
bus1

இந்தச் குட்டீஸ்களின் நடனத்தைக் கொஞ்சம் பாருங்களேன்!!

 

உறங்காத இரவுகளுக்குப் பின்னே நிஜமான கனவு……

ஒவ்வொரு மாதமும்
கலைந்து போயின
எதிர்பார்ப்புகள்…..

எட்டு வருடங்களாக
நுகரவில்லை நாசி
பால் மணம் வீசும்
மழலையின் நறுமணத்தை…..

குருதியோடு சேர்ந்து
கரைந்து ஓடின கனவுகள்…

கடவுள்களும் மருந்துகளும்
அன்றாட அவசியங்கள்…

கிழித்தும் நிருத்தும்
பார்த்தாகிவிட்டது உடலின்
அத்தனை செல்களையும்…..

ஏதோ ஒரு அற்புத கணத்தில்
கிட்டியிருக்கக்கூடும்
தேவதையின் கருணை…….

இன்னும்
மாதங்கள் இருக்கின்றன
ஒரு பிஞ்சு பிரபஞ்சத்தை
மார்பணைத்து மகிழ …!!!

இன்றைய விஞ்ஞானம்

எதை தேடிச் செல்கிறது
இன்றைய விஞ்ஞானம்…

மருந்தறியா நோய்களோடு
அல்லாடும் மக்கள் தீர்வு தேடி..

ஆணென்றும் பெண்ணென்றும் அறியாமல்
வாழ்வோடு போராடும் திருநங்கைகள்..

இன்னும் இன்னும் ஏராளமாய்..

ஆடம்பரமாக பகட்டு வாழ்விற்கு ஆதரவாய்..
வியாபார நோக்கில்
விலை கொடுத்து வாங்கும் பொருளாய்
விஞ்ஞானம் இன்று எதையோ தேடிக்கொண்டு..

-kavitha-

கண்டேன் = கொண்டேன்

தோகையில்லா
மயில்
ஒன்றை கண்டேன்
கூண்டில் சிக்காத
பறவை
என்று எண்ணிக்கொண்டேன் !

சிறகில்லா
அன்னப்பறவை
ஒன்றை கண்டேன்
சிற்பியால் செதுக்கப்பட்ட
சிற்பம்
என்று எண்ணிக்கொண்டேன் !

வண்ணமில்லா
ஓவியம்
ஒன்றை கண்டேன்
பெண்ணாய் வந்த
வான்நிலவோ
என்று எண்ணிக்கொண்டேன் !

நுரையில்லா
அலை
ஒன்றை கண்டேன்
நுரையீரலின் துடிப்பே
அவள் தான்
என்று எண்ணிக்கொண்டேன் !!!
-சௌமியாசுரேஷ்-

அழகுத் தெய்வம்

மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்
புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து
தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா!
அழகென்னுந் தெய்வந்தான் அதுவென்றே யறிந்தேன்.

யோகந்தான் சிறந்ததுவோ தவம்பெரிதோ என்றேன்;
யோகமேதவம் தவமே யோகமென வுரைத்தாள்.
ஏகமோ பொருளன்றி இரண்டாமோ என்றேன்;
இரண்டுமாம் ஒன்றுமாம் யாவுமாம் என்றாள்.
தாகமறிந் தீயுமருள் வான்மழைக்கே யுண்டோ
தாகத்தின் துயர்மழைதா னறிந்திடுமோ வென்றேன்
வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான்
விருப்புடனே பெய்குவதோ வேறாமே என்றாள்.

காலத்தின்விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்
காலமே மதியினுக்கோர் கருவியா மென்றாள்.
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்
நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலா மென்றாள்.
ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை யென்றேன்
எண்ணினால் எண்ணியது நண்ணுங்கா ணென்றாள்
மூலத்தைச் சொல்லவோ வேண்டாமோ என்றேன்
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்.

-பாரதியார்-

அறிஞரின் மகன் – சிறுகதை

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.

”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!

கடவுள் வரம்

காலம் வரும் எனக்
காத்திருந்தால் நம்முடைய
இளமை போய்விடும் …!

பலன் கிடைக்கும் எனக்
காத்திருந்தால் நம்முடைய
முயற்சி போய்விடும் …!

எதையும் யாரையும்
எதிர்பார்த்துக் கொண்டிருந்தால்
நம் திறமைகள் அனைத்தும் போய்விடும் …!

நம்பிக்கையோடு நம்முடைய
பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தால்
இனிதான பயணம் வெற்றியாய் முடியும்…!

சிறுகதையான வாழ்வைத்
தொடர்கதையாக்க நாம் நம்பிக்கையோடும் உறுதியோடும் கடமையைச் செயலாற்றுவதே
கடவுள் தந்த வரமாம் …!

-ஜெய ராஜரெத்தினம்-

காதல்…… என்னவென்று கூற

மாதம் பன்னிரெண்டும்
எனை மதியாது கழிந்தோட,
ஈகைப் பண்புள்ள வெறுமையோ
நாளும் எனை வாட்ட,
நித்திரைப் பொழுதில்
நிசப்த்த நாளங்கள்,
ஒத்திகை நடத்துதே
என் விழியோர ஈரங்கள்..

நேசம் வீசி
நாடி வந்தேன்,
உன் சுவாசம் தேடி
ஓடி வந்தேன்,
என் பாதைகள் என்றும்
உன் பாதங்கள் தேட,
என் வீதிகள் முடியுமிடம்
என்றும் உன் வீடு தானே..

தனியொரு நாளில்
தவிப்புகள் நிறைய,
துணையிவள் வந்தால்
ஏக்கங்கள் கழிய,
விடையொன்று சொல்லிவிட்டு
வீடு செல்லு தளிரே,
நடைபிணம் நானுன்னை
நாளும் நாடுகிறேனே..

வீசும் காற்றுக்கு
விலைதான் என்னவோ,
வாடிய பயிராய்
வீதியில் நிற்கிறேன்,
எனை ஏசும் உன் விழிக்கு
என்னதான் கோபமோ,
அது சாடிய என்னுயிரும்
உடலிடத்தே பிரிந்தது..

எதுகை மோனையில்
போட்டி போட்டு,
ஏட்டுக் கவிதை வடிக்க
நான் வரவில்லை,
பதுமையிவள் பேசும்
மௌன மொழி கேட்டு,
மனப் பிதற்றலைத்
தீர்க்க வந்துள்ளேன்..

-பிரதீப்-

தோழி

இனையம்
நம்மை
இணைத்தது
உன் முகம் பார்க்காமல்
தொடங்கிய நட்பு
இன்று நம் முகவரிகள்
கூட மனனமானது

விருப்பம் விடுகதை
கவிதை கதை
பரிசுகள்
பகிர்ந்தோம்
கண்ணியமாய்
கைகோர்த்து நடக்கிறோம்
நட்பின் எல்லைகளில்

என்றோ ஒருநாள்
முகம் சந்திப்போம்
அட!
பேச ஒருவிஷயம்
கூட இல்லாமல்
சத்தமிட்டு சிரிப்போம்:)

-nandhalala-

 

நட்பில் நான்கு

cute-little-friends

 

நட்பில் நாற்பது இருக்கட்டும்
நமக்கோ ! நான்கு தான் தேவை !
அவைகள்
1.அக நட்பு
2.முக நட்பு
3. யுக நட்பு
4. சக நட்பு
உன்னை அன்பு செய்தல் – அகமாக !
மற்றவரை அன்பு செய்தல் – முகமாக !
உலகை அன்பு செய்தல் – யுகமாக !
நம் சொந்தங்களை அன்பு செய்தல் – சகமாக !
எனும் நான்கில் மனம் மகிழ்வோம் !!

எழுதியவர் : சி.எம்.ஜேசு

என் உயிர் தோழி

எனக்கு உயிரை கொடுத்து
உலகை பரிசாக காட்டிய
எனது முதல் உயிர் தோழி
என் ” அன்னை”

உலகை பரிசாக கொடுத்த
என் அன்னைக்கு அடுத்து
என் உள்ளத்தை எப்போதும்
குழந்தையாய் வைத்திருப்பவள்
நீயடி…

நீ என்ன இயற்கையின் அவதாரமோ
உன் அருகில் இருந்தால் மட்டும் சோகம்
என்ற எதிரி எட்டிபார்க்க
கூட தயங்குகிறது,

சண்டைகள்தான் நமது இனிய
மொழியோ ,
சங்கீதம் போல் தினமும்
ஒலிக்கிறது ,

வாழ்கையில் வழிகாட்ட பல
நண்பர்கள் இருந்தாலும்
என் வலிகளை நீக்க நீ
ஒரு தேவதை போதுமடி,

இறந்துபோ என்று சொல்
இன்பமாக இறந்து விடுவேன்
ஆனால்
பிரிந்து போ என்று சொல்லி
விடாதே
இறுதி வரை
என் நட்பை!

-முத்து ஸ்ரீ-