இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறதாம் -ஆய்வில் தகவல்!!

poverty_india

வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற ஏழைகளின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து வருவதாக, இந்திய திட்ட கமிஷன் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த புள்ளி விவரத்தின் படி 2011-12ம் ஆண்டில் 26 கோடியே 93 இலட்சம் பேர் தான் ஏழைகள் ஆவார். இது 2004-05ஆம் ஆண்டின் எண்ணிக்கையான 40 கோடியே 71 இலட்சத்தை விட இது குறைவானதாகும்.

அதாவது மொத்த மக்கள் தொகையில் 37.2%ஆக இருந்த ஏழைகளின் எண்ணிக்கை தற்போது 21.9ஆக குறைந்துள்ளது. சுரேஷ் டெண்டுல்கர் குழுவின் பரிந்துரை படி கிராமப்புறத்தில் தினமும் ரூ.27.20 (இந்திய ரூபாய்) செலவளிக்க முடிந்தால் அவர் ஏழையில்லை.

அதே போல் நகர்புறங்களில் ரூ.33.33 செலவளிக்க முடிந்தால் அவர் ஏழையாக கருதப்பட மாட்டார். சுரேஷ் டெண்டுல்கர் பரிந்துரைபடி ஏழைகளின் குறைக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த குழுவின் மறு ஆய்வு செய்வதற்கு பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் சி.ரங்கராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதன் அறிக்கை அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலியா சென்ற படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4ஆக உயர்வு..!

boatஇந்தோனேசிய ஜாவா தீவில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்வடைந்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு தஞ்சக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று மோசமான வானிலை காரணமாக இந்தோனேஷியாவின் ஜாவா தீவுக்கு அருகில் கடலில் மூழ்கியது என்றும், தத்தளித்தவர்களில் நூற்றைம்பதுக்கும் அதிகமானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்றும் இந்தோனேஷிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

குறைந்தது நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர், அவர்களில் இரண்டு பேர் பிள்ளைகள் ஆவர்.

வேறு யாரும் உயிர் பிழைத்துள்ளார்களா என மீட்புப் பணியாளர்கள் தேடிவருகின்றனர்.

இராக், ஈரான், இலங்கை, சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இப்படகில் வந்ததாக உயிர்தப்பியவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவதற்காக ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்ளும் மக்களை நிறுத்த வேண்டிய அவசியத்தை படகு கவிழ்ந்த இந்த சம்பவம் வலியுறுத்துகிறது என அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் கூறினார்.

கடல் வழியாக அவுஸ்திரேலியா வரும் தஞ்சக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் குடியமர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சென்ற வாரம் பிரதமர் ரட் அறிவித்திருந்தார்.

இந்தியா – சிம்பாப்வே அணிகள் இன்று மோதல்!!

india

வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக சிம்பாப்வே சென்று உள்ளது. இந்தியா– சிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது.

இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த சம்பியன்ஸ் கோப்பை மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடந்த மும்முனைப் போட்டியில் வெற்றி பெற்றது. இதனால் சிம்பாப்வே தொடரில் இந்திய அணி சாதிக்கும் என்று ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடரில் தலைவர் டோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளதால் வீராட் கோலி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே சம்பியன்ஸ் கிண்ண ஆட்டத்தில் தலைவராக பணியாற்றி இருந்தார்.

அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களுடன் இந்திய அணி களம் காண்கிறது. புஜாரா, மொகித் சர்மா, அம்பதி ராயுடு, பர்வேஸ் ரசூல், ஜெய்தேவ் உனகட் ஆகியோர் முதல் முறையாக ஒருநாள் போட்டி அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, ஷிகார் தவான் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளன. தினேஷ் கார்த்திக், ரெய்னா, ரவிந்திர ஜடேஜா ஆகியோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

சிம்பாப்வே அணிக்கு பிரெண்டன் டெய்லர் தலைவராக செயற்படுகிறார். தனது நாட்டில் போட்டி நடைபெறுவதால் அந்த அணி இந்தியாவின் சவாலை எதிர்கொள்ளும்.

இரு அணிகளும் கடைசியாக 2010–ம் ஆண்டு ஜூன் மாதம் ஹராரேயில் நடந்த போட்டியில் மோதின. இதில் சிம்பாப்வே அணி 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

2010-ம் ஆண்டு அங்கு நடைபெற்ற 3 நாடுகள் போட்டித்தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. இலங்கை, சிம்பாப்வே அணிகள் தகுதி பெற்றன. இதனால் இந்திய அணி ஒருநாள் தொடரில் கவனமுடன் ஆட வேண்டும்.

இரு அணிகளும் இதுவரை மோதிய 51 ஆட்டத்தில் இந்தியா 39 போட்டியில் வெற்றி பெற்றது. சிம்பாப்வே 10 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 2 ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

இரு அணி வீரர்கள் விவரம்

இந்தியா: வீராட் கோலி (தலைவர்), தவான், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, அம்பதிராயுடு, புஜாரா, ரகானே, அமித்மிஸ்ரா, வினய்குமார், பர்வேஷ் ரசூல், முகமது சமி, ஜெய்தேவ் உனகட், மொகித்சர்மா.

சிம்பாப்வே: பிரெண்டன் டெய்லர் (தலைவர்), சிங்கும்புரா, மைக்கேல் சினோவ்யா, சாட்ரா, கீரிமர், ஜார்விஸ், முடோம்பாட்சி, சிபந்தா, ராய் பிரைஸ், உட்செயா, மால்கம் வாலர், பிரைன் விக்டரி, சியாக் வில்லியம்ஸ், மசங்வா, சிக்கந்தர் ராசா மருமா.

தனது காதலியை கரம் பிடித்த இந்திய அணி வீரர் அசோக் டிண்டா!!

ashok

இந்திய கிரிக்கெட் அணியின் டிண்டா தனது காதலியான ஸ்ரேயாசியாவை கரம் பிடித்தார். இந்திய அணியின் வீரர் அசோக் டிண்டா(வயது 29).

வேகப்பந்துவீச்சாளரான இவர் 13 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார். இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலியான ஸ்ரேயாசி ருத்ராவை திருமணம் முடித்துள்ளார்.

இது குறித்து டிண்டா கூறுகையில் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரேயாசியை பார்த்தேன். அதன் பின் நண்பர் மூலம் அவரின் மொபைல் எண் கிடைத்தது.

இதன் மூலம் எங்களின் காதல் வளர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம். தற்போது இது நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

யாழில் 13 படைமுகாம்களுக்கு மூடுவிழா! காணிகளும் மீளளிக்க ஏற்பாடு!

jaffna

யாழ். மாவட்டத்தில் உள்ள 13 இராணுவ முகாம்கள் இந்த வாரம் மூடப்படவுள்ளதாக யாழ். கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் வெளியேறிய முகாம் அமைந்திருந்த காணிகளின் உறுதிப்பத்திரங்கள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் மாதமளவில் காணி அமைச்சு உரிய காணி உரிமையாளர்ளுக்கு இந்த ஆவணங்களை வழங்கும் பணிகளை ஆரம்பிக்கும் என யாழ். கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.
காணி உரிமையாளர்களை அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டிருந்த 16 முகாம்களில் 13 முகாம்களிலிருந்து இராணுவம் வெளியேறியுள்ளதாகக் கட்டளைத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இளம் ஆசிரியை தற்கொலை – வவுனியாவில் சம்பவம்..!

vavuniyaபன்னிரெண்டு வருட காதலன்  திருமணம் செய்ய சீதனம் கோரியதால் இளம் விஞ்ஞான பட்டதாரியான ஆசிரியை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கனகபுரம் கிளிநொச்சியினை சொந்த இடமாகக்கொண்டவரான செல்வி. சர்மினி கதிர்காமு(வயது 28) என்பவரே  நேற்று தற்கொலை செய்த நிலையினில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவர் வவுனியா இரம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய ஆசிரியையென கூறப்படுகின்றது.

முன்னதாக இவரை கடந்த 12 வருடமாக காதலித்து வந்த இளைஞன் திருமணம் செய்வதற்கு ஜம்பது இலட்சம் சீதனம் கோரியதாக கூறப்படுகின்றது.அதையடுத்து மனமுடைந்த யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சம்பவத்தையடுத்து குறித்த இளைஞன் தலைமறைவாகியிருப்பதாகவும் பொலிஸார் தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஞ்சுளாவுக்கு அஞ்சலி செலுத்த திரண்டு வந்த திரையுலகம் (படங்கள்)

நடிகை மஞ்சுளாவின் மரணம் தமிழ் சினிமா கலைஞர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. தமிழ் திரையுலகமே ஒட்டுமொத்தமாக அவருக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டுவந்ததே அதற்கு சாட்சியாக அமைந்தது.

காரணம், மஞ்சுளா – விஜயகுமார் தம்பதிகள் திரையுலகில் பழகிய விதம் அப்படி. அவர்களுக்கு அனைவருமே நண்பர்கள்தான். மஞ்சுளா மறைவுச் செய்தி கேட்டதுமே, சமூக வலைத்தளங்களில் மிகுந்த வருத்தத்துடன் அதைத் தெரிவித்த கலைஞர்கள், அவருடன் பழகிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

1

19 18 17 16 12 13 14 15 11 9 8 7 3 4 5 6 2

கார் ஏற்றிக் கொன்ற வழக்கில் சல்மான் மீது கொலைக் குற்றம்!

salman

2002ம் ஆண்டில் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது கார் ஏற்றிக் கொன்ற வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது இன்று கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு மும்பை பந்த்ரா பகுதியில் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது சல்மான் கானின் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் கார் ஏறியது.

இதில் ஒருவர் பலியானார் 4 பேர் காயம் அடைந்தனர். சல்மான் கான் குடிபோதையில் மரணம் ஏற்படுத்தும் வகையில் காரை ஓட்டியதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து சல்மான் மீதான வழக்கை மறுவிசாரணை செய்ய மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சல்மான் கான் மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் சல்மான் கான் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.

அவரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அப்போது அவர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டது. சல்மான் கான் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிக்கு இடமாற்றம் கிடைத்துள்ளதால் வழக்கு வேறு ஒரு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி சல்மான் கான் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அவரது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. ஆனால் சம்மன் அனுப்பும்போது மட்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனுஷ்கா மீது கத்திக்குத்து??

anuska

ருத்ரமாதேவி படத்தை சுமார் 120 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து இயக்கி வருகிறார் குணசேகர். இந்தியாவில் தயாராகி வரும் முதல் வரலாற்று 3D STEREOSCOPIC படம் இது.

இந்தப் படத்தில் அனுஷ்கா, ராணா, பிரகாஷ்ராஜ், கிருஷ்ணம் ராஜு, சுமன், மகேஷ்பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை அணிந்து நடித்து வருகிறார் அனுஷ்கா.

மேலும் இந்தப் படத்தில் நடிப்பதற்காக உடம்பைக் குறைத்து, குதிரை சவாரி, வாள் சண்டை என அனைத்தையும் கற்றுள்ளார்.
சமீபத்தில் மகேஷ்பாபுவும், அனுஷ்காவும் மோதிக்கொள்வது போல சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது.

அனுஷ்கா குதிரையில் ஏறி தப்பித்துப் போகும்போது மகேஷ்பாபு அவரை நோக்கி கத்தியை வீசுவார். இந்தக் காட்சியைப் படமாக்கும்போது மகேஷ்பாபு வீசிய அட்டைக்கத்தி நிஜமாகவே அனுஷ்காவைக் குத்திவிட்டதாம். குத்தியது அட்டைக்கத்தி என்பதால் சிறிய காயம் தானாம்.

உடனடியாக முதலுதவி செய்யப்பட்டு, தொடர்ந்து அந்தக் காட்சியில் நடித்தாராம் அனுஷ்கா.

கல்லூரியில் நான் பெரிய ரவுடி – சமந்தா!!

Samantha

தெலுங்கில் பிசியாக இருக்கிறார் சமந்தா. தமிழிலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. “நான் ஈ” படத்தில் நடித்ததற்கான சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதும் அவருக்கு கிடைத்துள்ளது.

சினிமாவுக்கு வரும் முன் கல்லூரியில் படித்த போது நடந்த சம்பவங்களை மலரும் நினைவுகளாக சமந்தா வெளியிட்டார். அவர் கூறியதாவது…

கல்லூரியில் படித்த போது நான் அடங்காத பெண். சுட்டித்தனமாக இருப்பேன். பேராசியர்களுக்கு நான் அமைதியான பெண் படிக்கிற பெண். ஆனால் என் தோழிகளுக்கு மட்டுமே எனது உண்மையான சுயரூபம் தெரியும். பேராசிரியர்கள் முன்பு நல்ல பெண் மாதிரி இருப்பேன். அவர்கள் போனதும் வகுப்பில் அட்டகாசம் செய்வேன்.

சகமாணவிகளை கிண்டல், கேலி என கலாய்ப்பேன். ரவுடித்தனங்கள் செய்வேன். பேராசிரியர்கள் வந்ததும் ஒன்றும் தெரியாதது போல் அப்பாவியாக இருப்பேன். இதனால் நான் செய்யும் தப்புகள் என் தோழிகள் தலையில் விழும்.

ஆசிரியைகளிடம் திட்டு வாங்குவார்கள். இதனால் வெளியே வந்ததும் என் மேல் கோபமாக இருப்பார்கள். நான் கெஞ்சி சமாதானம் செய்து விடுவேன். சினிமாவுக்கு அடிக்கடி போவேன். காலேஜுக்கு கட் அடித்துவிட்டு படத்துக்கு போய் இருக்கிறேன்.

கல்லூரி சுவர் ஏறி குதித்தும் படத்துக்கு போய் உள்ளேன். ஒரு தடவை சுவர் ஏறும் போது வாட்ச்மேன் பிடித்து பிரின்ஸ்பாலிடம் நிறுத்தி விட்டார். அவர் அமைதியான பெண்ணுன்னு நினைச்சேன். நீயா இப்படி என்று கண்டித்தார். நிறைய அறிவுரை சொன்னார். அன்று முதல் அடாவடித்தனங்களை மூட்டை கட்டி விட்டு அமைதியான பெண்ணாக மாற ஆரம்பித்தேன் என்றார்.

கழுதை மீது வந்த நபர் தற்கொலை தாக்குதல் – கழுதையுடன் நால்வர் பலி!!

donkey

கிழக்கு ஆப்கானிஸ்தான் வர்டான் மாகாணத்தில் கழுதை மீது ஏறிவந்த ஒருவர் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் மூன்று நேட்டோ படை வீரர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலைநகர் காபூலின் தெற்கு பகுதியில் உள்ள வர்டான் மாகாணத்தில் நேட்டோ படை வாகனங்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தன. அப்போது, சாலையோரம் கழுதை மீது ஏறி அமர்ந்து வந்த தலிபான் தீவிரவாதி திடீரென்று கழுதையை அதட்டி விரட்டி வேகமாக ஓட வைத்து நேட்டோ வாகனங்கள் மீது மோதியுள்ளார்.

இந்த தாக்குதலில் மூன்று நேட்டோ வீரர்கள் பலியாகினர். மேலும் கழுதையும் அதன்மீது அமர்ந்து வந்த மனித குண்டு தீவிரவாதியும் இச்சம்பவத்தில் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் நடைபெற்ற பகுதி தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த முக்கிய பகுதிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பரில் பிரியாணி விருந்து!

Karthi’s-Biriyani

கார்த்தி – ஹன்சிகா இருவரும் ஜோடியாக நடித்துள்ள படம் பிரியாணி. வெங்கட்பிரபு இந்தப் படத்தை இயக்கி உள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

திரில் கலந்த காமெடியுடன் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இது யுவனுக்கு 100வது படம்.

இந்தப் படத்தில் கவிஞர் வாலி எழுதிய பாடலை கார்த்தியும், பிரேம்ஜியும் பாடியுள்ளனர். கூடுதலாக இயக்குநர் வெங்கட்பிரபுவும் அந்தப் பாடலுக்கு ஜதி சொல்லியிருக்கிறார்.

படத்தில் பெரும்பாலான வேலைகள் முடிந்துவிட்டதாம். ஒரு பாடல் மற்றும் கொஞ்ச வேலைகள் மட்டுமே பாக்கி இருக்கிறதாம். அந்த வேலைகளையும் முடித்துவிட்டு செப்டம்பர் 6-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளாராம் வெங்கட்பிரபு.

வவுனியாவில் பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் திருட்டு – பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சூறை..!

robberyவவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள பிரபல பலசரக்கு மற்றும் மருந்தாக வியாபார நிலையமொன்றில் நேற்று இரவு திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் வழமைபோன்று வியாபார நடவடிக்கைகள் முடிவடைந்து கடையினை அடைத்துச்சென்ற நிலையிலேயே இன்று காலை இக்கொள்ளைச் சம்பவம் தெரியவந்திருக்கிறது.

கடையினை உடைத்து உட்புகுந்த கொள்ளையர்களால்  கடையில் பொருத்தப்பட்டிருந்தபாதுகாப்பு கமெராவும் (CCTV) கொள்ளையர்களால் சேதப்படுத்தப் பட்டிருப்பதாக தெரியவருகிறது.

இக்கொள்ளைச் சம்பவத்தினால் பல இலட்சங்கள் பெறுமதியான பொருட்கள் சூரையாடப்பட்டிருக்காலாமென தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் அண்மைகாலமாக இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

(சந்தோஷ்)

கணவனை ஏமாற்றுவதில் அமெரிக்கப் பெண்களுக்கு தான் முதலிடமாம்!!

images

கணவனை ஏமாற்றுவதில் அமெரிக்கப் பெண்கள்தான் செம கில்லாடிகளாக இருக்கிறார்களாம். கணவருக்குத் தெரியாமல் இரகசிய உறவுகளைப் பேணுவதிலும் அமெரிக்கப் பெண்கள்தான் முன்னோடிகளாக உள்ளனராம். கடந்த 20 வருடங்களில் இந்த போக்கு கிடுகிடுவென அதிகரித்து காணப்படுகிறது என ஆய்வு ஒன்று கூறுகிறது.

கணவருக்குத் தெரிந்தும், தெரியாமலும் வேறொரு கள்ளக்காதலுடன் வாழ்க்கை நடத்துவது, இரகசிய வாழ்க்கை நடத்தும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாம். அதேசமயம், அமெரிக்க ஆண்கள் தாங்கள் தவறு செய்தால் அதை ஒப்புக் கொள்கிறார்களாம். அத்தகையவர்களின் எண்ணிக்கை 21 சதவீதமாக உள்ளது.

பெரும்பாலான பெண்கள் கணவரைத் தவிர இரகசிய உறவுகளைப் பேணுவதற்கு கையில் வேலையும், பணமும் புரளுவதுமே முக்கியக் காரணம் என்கிறது இந்த ஆய்வு.

தானியங்கி ஹெலிகொப்டரை கண்டுபிடித்த சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள்!! (வீடியோ இணைப்பு)

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரத்திலுள்ள ETH எனும் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் தானியங்கி ஹெலிகொப்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு Multi Rotor ஹெலிகொப்டர் என பெயரிடப்பட்டுள்ளது.

அதாவது தனித்தனியாக காணப்படும் சிறிய ஹெலிகொப்டர்கள் தாமாகவே ஒன்றை ஒன்று நோக்கி அசைந்து பொருந்தி கொள்கின்றன. இதனையடுத்து இவை அனைத்தும் ஒன்றாகவே சேர்ந்து இயங்குகின்றன. இதனாலேயே Multi Rotor ஹெலிகொப்டர் என அழைக்கப்படுகின்றது.

1 2 3

சிம்புவுக்குப் போட்டியாக சிவகார்த்திகேயன்?

MINOLTA DIGITAL CAMERA

சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வருவோம் என நினைத்து கூடப் பார்த்திருக்க மாட்டார். ஆனால், தமிழ் சினிமாவின் இன்றைய ஹீரோ அவர் தான்.

சின்னத்திரையில் பார்த்த சிவகார்த்திகேயனை நடிகராக ஏற்றுக்கொண்ட மக்கள் இப்போது பாடகராகவும் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய பாடலை யு-டியூப்பில் வெளியிட சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கிறது.

இந்த ஹிட்டைப் பார்த்து சிவகார்த்திகேயனே ஆச்சர்யப்பட்டுப் போனாராம். கோடம்பாக்கம் முழுவதும் இப்போது இந்தப் பாட்டைப் பற்றித்தான் பேச்சாகக் கிடக்கிறது. சூட்டோடு சூடாக சில விஷயங்களைச் செய்வதில் கோடம்பாக்கத்துக்காரர்கள் தான் கெட்டியாச்சே. வேறு சில நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கும் பாடச்சொல்லி சிவகார்த்திகேயனுக்கு அழைப்பு விடுக்கிறார்களாம்.

ஆனால், இது சரிப்பட்டு வருமா என அவர் யோசிக்கிறாராம். முதல் பாட்டு பாடுறதுக்கு முன்னாடியும் இப்படித்தான் சொன்னீங்க. இப்போ பாட்டு பயங்கர ஹிட். துணிஞ்சி இறங்குங்க என தைரியம் கொடுத்திருக்கிறார்களாம் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இப்போதுள்ள நடிகர்களில் சிம்பு தான் எல்லா ஹீரோக்களுக்கும் பாடுகிறார். விஜய், தனுஷ் இருவரும் தாங்கள் நடிக்கும் படங்களில் மட்டுமே பாடுகிறார்கள். எனவே, சிம்புவுக்குப் போட்டியாக தானும் களத்தில் குதிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.