கார்பந்தயத்தை அறிமுகம் செய்த சச்சின்!!

sachine

பிஎம்டபுள்யு 1 சீரீஸ் கார் பந்தயத்தை நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் நேற்று தொடங்கி வைத்தார்.

பிரபல கார் பந்தய வீரர் அர்மான் இப்ராகிம் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

டெல்லி நொய்டாவில் உள்ள புத்தா சர்வதேச பந்தயக் களத்தில் கடந்த ஆண்டு நடந்த போமுலா 1 கார் பந்தயத்தையும் சச்சின் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

திரிஷாவுக்கு விரைவில் திருமணம்!!

trisha

திரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் மாப்பிள்ளை தெலுங்கு நடிகர் ராணா என்றும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திரிஷாவின் சம காலத்து நடிகைகளான சிம்ரன், ஜோதிகா, லைலா, ரம்பா, மீனா போன்றோர் திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என செட்டில் ஆகி விட்டனர்.

ஆனால் திரிஷாவுக்கு முப்பது வயது கடந்த பிறகும் இன்னும் திருமணம் நடக்கவில்லை. திரிஷா தாய் உமா கிருஷ்ணன் விரைவில் திருமணம் நடத்தி விட அவசரப்படுகிறார். திரிஷாவுக்கு இப்போது படங்களும் இல்லை. முன்னணி ஹீரோக்கள் புதுவரவுகளான இளம் நாயகிகளுடன் ஜோடி சேரவே விரும்புகிறார்கள்.

எனவே திரிஷாவும் திருமணத்துக்கு சம்மதித்துள்ளாராம். தெலுங்கு நடிகர் ராணாவை திருமணம் செய்து கொள்ள அவர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவின. நண்பர்களாகத்தான் பழகுகிறோம் என்று அதற்கு பதில் அளித்தார்கள். ஆனால் அது உண்மையல்ல என்றும் காதலிப்பது உறுதி என்றும் தற்போது தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் சென்னையில் நடந்த ஜெயம்ரவி உறவினர் வீட்டு திருமணத்துக்கு திரிஷாவும் ராணாவும் கைகோர்த்தபடி வந்து பரபரப்பு ஏற்படுத்தினார்கள். திருமண கூட்டத்தினர் அவர்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்தனர். ஐதராபாத்தில் திரிஷா தந்தை இறந்தபோது திரிஷா கூடவே ராணா இருந்தார்.

பட விழாவுகளுக்கும் ஜோடியாக போனார்கள். ராணா வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் திருமணத்துக்கு தாமதம் ஆனதாகவும் இப்போது அவர்கள் சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே ஒரு சில மாதங்களில் திரிஷா–ராணா திருமணம் நடக்கும் என நெருக்கமானவர்கள் கூறினர்.

இரண்டு குடும்பங்கள் முற்றாக சுட்டுக்கொலை – ஈராக் தீவிரவாதிகள் வெறியாட்டம்..!

iraqஈராக்கில் இரண்டு ஷியா குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பதினாறு பேரை துப்பாக்கிதாரிகள் சுட்டுக்கொன்றதுடன், அருகருகே இருந்த அக்குடும்பங்களின் வீடுகளையும் அவர்கள் வெடிவைத்து தகர்த்துள்ளனர்.

பாக்தாத்துக்கு தெற்கே லதீஃபியா என்ற நகரில் நேற்றிரவு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. சகோதரர்கள் இருவரின் வீடுகளை இலக்குவைத்து நடந்த தாக்குதலில் இறந்தவர்களில் ஆறு பேர் குழந்தைகளும் ஐந்து பேர் பெண்களும் ஆவர்.

கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கிதாரிகள் சுட்டுத் தள்ளியதாக உயிர் பிழைத்தவர் ஒருவர் கூறுகிறார்.

தந்தையின் சாதனையை முறியடித்தார் ஷான் மார்ஷ்!!

shane_marsh

ஸ்கொட்லாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் தந்தையின் சாதனையை முறியடித்துள்ளார் அவுஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ்.
இங்கிலாந்து எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா விளையாட உள்ளது.

இதற்கு முன்பாக ஸ்கொட்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி ஒன்றில் நேற்று மோதியது. எடின்பர்க் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 362 ஓட்டங்கள் எடுத்தது.

முதலாவது சதத்தை பூர்த்தி செய்த தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் 148 ஓட்டங்களும் 3வது சதத்தை எட்டிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷான் மார்ஷ் 151 ஓட்டங்களும் விளாசினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 246 ஓட்டங்கள் எடுத்தனர்.

ஒருநாள் போட்டி வரலாற்றில் அவுஸ்திரேலிய தொடக்க ஜோடி ஒன்று எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும்.

இதற்கு முன்பு ஜெப் மார்ஷ்– டேவிட் பூன் ஜோடி கடந்த 1986ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 212 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

27 ஆண்டு கால அவர்களின் சாதனையை பிஞ்ச்–ஷான் மார்ஷ் கூட்டணி முறியடித்திருக்கிறது. முந்தைய சாதனையாளரான ஜெப் மார்ஷ்சின் மகன் தான் ஷான் மார்ஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

பிச்சை எடுத்து வந்த 93 வயது மூதாட்டி பலாத்காரம்!!

old

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்த 93 வயது மூதாட்டி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், அகமத் நகர் மாவட்டம் புன்டாம்பா என்ற கிராமத்தில் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட 93 வயது மூதாட்டி பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்தார்.

சாலையோரத்தில் சிறிய குடிசை அமைத்து இரவு நேரங்களில் தங்கியிருந்தார். சம்பவம் நடைபெற்று அன்று குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை மர்ம ஆசாமிகள் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும் அவரை கடுமையாக தாக்கியதோடு அவரிடம் இருந்த 2,000 மற்றும் மூக்குத்தியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

கயவர்கள் தாக்கியதில் மயங்கிக் கிடந்த மூதாட்டியை மறுநாள் காலையில் அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து பொலிசிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிசார் பிரவரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டியை கொண்டுச் சென்றுள்ளனர்.

அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து பலாத்காரம் மற்றும் திருட்டு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பிறகு மூதாட்டி உயிர் பிழைத்தார். இருப்பினும் அவர் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளாததால், அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளின் விவரங்களை திரட்ட முடியவில்லை.

நடிகை ரஞ்சிதா வீடியோ ஒளிபரப்பு வழக்கு : 7 நாட்களுக்கு தொடர்ந்து வருத்தம் தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவு!!

ranjitha

நடிகை ரஞ்சிதா சாமியார் நித்யானந்தா பற்றி ஒரு தனியார் தொலைக் காட்சியில் “நடந்தது என்ன குற்றமும் பின்னணியும்’’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் இடம் பெற்றது. இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடிகை ரஞ்சிதா வழக்கு தொடர்ந்தார்.

அதில் தன்னையும் நித்தியானந்தாவையும் இணைத்து ஒளிபரப்பான வீடியோ காட்சிகள் போலியாக சித்தரிக்கப்பட்டவை என்று கூறியிருந்தார். இது தனிப்பட்ட முறையில் தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

வீடியோவை ஒளிபரப்பிய டி.வி.செய்தி சனல் அல்ல, பொழுது போக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் டி.வி.என்பதால் இது பற்றி டி.வி. ஒளிபரப்பு புகார்கள் குழு விசாரணை நடத்த கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான இந்தக்குழு விசாரணை நடத்தியது. நேற்று முன்தினம் அந்த வழக்கில் அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அந்த வீடியோ காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் மனுதாரரின் மதிப்பையும் மரியாதையும் கெடுப்பதாக உள்ளது. சம்பந்தப்பட்டவர்களிடம் எந்த கருத்தும் கேட்காமல் ஒளிபரப்பு செய்யப்பட்டு உள்ளது. இது ஒளிபரப்பு உரிமையை மீறும் செயலாகும்.

தனிப்பட்ட நபரின் உரிமையை அப்பட்டமாக மீறிவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட தனியார் டி.வி. வருகிற 9ம் திகதி முதல் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை எழுத்துக்கள் மூலம் ஆங்கிலத்திலும் தமிழிலும் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து 7 நாட்களுக்கு வருத்தத்தை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சிரிய கொள்ளையர்களிடம் இருந்து தப்பித்த ஜேர்மனியர்!!

Syrian-Rebels

சிரியா கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட ஜேர்மன் தொண்டு நிறுவன தொழிலாளி ஒருவர் 111 நாட்களுக்கு பின்பு தப்பித்துள்ளார்.

ஜேர்மனைச் சேர்ந்த பொறியாளர் சியாத் நூரி. 72 வயதான இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் சிரியா கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டார்.

மேலும் இவருடன் சேர்த்து இரண்டு நபர்களும் கடத்தப்பட்டு ஒரு மலைப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 111 நாட்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் தற்போது அந்த கொள்ளை கும்பலிடம் இருந்து தப்பித்துள்ளனர்.

இது குறித்து நூரி கூறுகையில், எங்களை கடத்தி வைத்து பணம் கேட்டனர், மேலும் எங்களுக்கு முன்னதாக கடத்தப்பட்டவர்கள் கடந்த யூலை மாதம் தப்பித்துவிட்டார்கள்.

நாங்கள் கொள்ளையர்கள் தூங்கிய போது தப்பித்து வந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

சிரியா மீதான தாக்குதலுக்கு பான் கி மூன், புடின் எச்சரிக்கை!!

UN-Secretary-General-Ban-Ki-moon

சிரியா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிரியா அரசப்படைகள் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி அப்பாவி குழந்தைகள் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்களை கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனையடுத்து அமெரிக்கா தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது.
அமெரிக்காவின் நட்பு நாடுகளான இஸ்ரேலும், பிரான்ஸும் இந்த இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

இந்நிலையில் சிரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் சிரியா மீது முழு அளவிலான போர் நடவடிக்கையை வலியுறுத்தும் விதமாக இந்த தீர்மானம் இருக்கிறது என்று சில எம்.பி.க்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து தற்போது அந்த தீர்மானத்தை அமெரிக்காவின் வெளிநாட்டு உறவுகளுக்கான எம்.பி.க்கள் குழு மாற்றியுள்ளது.
அதாவது சிரியா மீதான ராணு தாக்குதலுக்கான காலக்கெடுவை 60 நாட்களாக்கியிருக்கிறது. சிரியாவில் உடனடியாக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளாது என்றும் அதில் திருத்தப்பட்டிருக்கிறது.

பான் கி மூன் எச்சரிக்கை..

ரசாயன குண்டு வீச்சு தொடர்பாக சிரியா மீது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் அனுமதி பெறாமல் ராணுவ தாக்குதல் நடத்த கூடாது. அதனால் குழப்பமும், ரத்தம் சிந்த வேண்டிய நிலையும் ஏற்படும்.

ரசாயன குண்டு வீசியது குறித்து ஐ.நா. கண்காணிப்பாளர்கள் ஆய்வில் உறுதி செய்யப்பட்டால் சிரியா அரசு மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏனெனில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது சர்வதேச போர் விதிமுறைகளுக்கு எதிரான குற்றமாகும் என்று தெரிவித்துள்ளார்.

புடின் எச்சரிக்கை..

சிரியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது என்பதற்கான ஆதாரம் இருந்தால் அதை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் முன்புதான் தாக்கல் செய்ய வேண்டும்.

அதைவிட்டுவிட்டு வதந்தந்திகளின் அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறார்.

அப்படி ஒரு ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் ஒப்புதல் அவசியமானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பொலிசாருக்கு பயந்து கடலில் குதித்த அகதி!!(படங்கள்)

ஸ்பெயின் நாட்டிற்கு சட்ட விரோதமாக குடியேற முயன்ற ஆபிரிக்க நாட்டை சேர்ந்த ஒரு கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜரோப்பிய நாடுகளில் நிதி நெருக்கடி இருந்தபோதிலும் நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஸ்பெயின் நாட்டிற்கு சட்டவிரோதமாக நுழைபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

ஆபிரிக்கா நாட்டில் உள்ள மொராக்கோ என்னும் பகுதியில் இருந்து 7 பேர் கொண்ட கும்பலானது ரப்பர் படகின் மூலம் ஸ்பெயின் நாட்டிற்கு சட்டவிரோதமாக குடியேற முயன்றுள்ளனர்.

இவர்கள் ரப்பர் படகின் மூலம் வரும்போது ஸ்பெயின் நாட்டு பொலிசாரிடம் சிக்கியுள்ளனர். இவர்களில் ஒருவர் பொலிசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக தண்ணீரில் குதித்துள்ளார்.

ஆனால் ஸ்பெயின் கடற்படை பொலிசார் அந்த நபரை கடலில் இருந்து மீட்டு கைது செய்துள்ளனர்.

இதேபோன்று கடந்த 1988ம் ஆண்டு முதல் ஸ்பெயினுக்கு புலம்பெயர்ந்து வந்தவர்களில் 20,000 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 2 3 4 5

சச்சின் இடத்தை கோலியால் நிரப்ப முடியாது : கிறிஸ்டன்!!

Gayr_Kirsten_Vivek__521838g

ஐ.பி.எல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆபிரிக்காவின் கிறிஸ்டன் நியமிக்கப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கரி கிறிஸ்டன்.

தென் ஆப்ரிக்காவை சேர்ந்த இவரது பயிற்சியில் இந்திய டெஸ்ட் அணி நம்பர்-1 இடத்துக்கு முன்னேறியது. 2011ல் சொந்த மண்ணில் இந்திய அணி உலக கிண்ணம் வென்றது.

இதன் பின் தென் ஆப்ரிக்க அணிக்கு பயிற்சியாளராக சென்று அந்த அணியை டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற வைத்தார். கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் பதவி விலகிய இவர் தற்போது ஐ.பி.எல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

தற்போதுள்ள எரிக் சைமன்ஸ் உதவி பயிற்சியாளராக செயல்படவுள்ளார். கடந்த ஆறாவது தொடரில், 8வது இடம் பெற்ற டெல்லி அணி கிறிஸ்டன் பயிற்சியில் கிண்ணம் வெல்லும் என்று நம்பப்படுகிறது.

இது குறித்து 45 வயதான கிறிஸ்டன் கூறுகையில் இது சவாலான பணி தான். என்னை ஒப்பந்தம் செய்ய எரிக் சைமன்ஸ் தான் பரிந்துரை செய்தார். என் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புகிறேன்.

எனவே தான் ஆண்டுக்கு மூன்று மாதம் மட்டும் பணி புரியும் ஐ.பி.எல் தொடருக்கு முன்னுரிமை அளித்தேன். இதில் வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வர முயற்சிப்பேன்.

ஐ.பி.எல் தொடரில் அடுத்தடுத்து போட்டிகள் இருக்கும். இதற்கேற்ப அணியை தயார் செய்ய வேண்டும் என்றும் இதற்கு இந்தியாவில் ஏற்கனவே பணிபுரிந்த அனுபவத்தின் அடிப்படையில் சில வீரர்களை அணியில் இடம்பெற செய்வேன் எனவும் கூறினார்.

வீராட் கோலி குறித்து கிறிஸ்டன் கூறுகையில் இவர் அபூர்வமான திறமை படைத்தவர். பெரிய வீரராக வருவார் என்று தொடக்கத்திலேயே நம்பினேன். சில ஆண்டுகளில் பெரியளவில் வளர்ச்சி பெற்றுள்ளார்.

இவர் சச்சின் இடத்தை நிரப்புவார் என கூற முடியாது என்றும் சச்சின் இடத்துக்கு ஒருவரை பரிந்துரை செய்வது கடினமான செயல் எனவும் கூறினார்.

இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கை பலப்படுத்தப்படும் – பான் கீ மூன்..!

banKeeஇலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பான் கீ மூன் தமது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் வருடாந்த பணிகளுக்கான அறிக்கையில் இலங்கையும் குறிப்பிடப்படடுள்ளது.

ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூனின் அறிக்கை இன்று ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் வெளியிடப்பட்டது.

அதில் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை கொண்டு அங்குள்ள பிரச்சினைக்கான தீர்வைக் காண விரும்புவதாக பான் கீன் குறிப்பிடடுள்ளார்.

இலங்கையின் இறுதிப் போரின் போது ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக உரிய முறையில் செயற்படாது தோல்வி கண்டது என்று ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பான் கீ மூன் தமது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த பணிக்காக ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொறுப்புக்கூறலை பாதுகாத்தல் என்ற அடிப்படையில் செயற்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கலைஞர்களின் படைப்புகளை பயன்படுத்தி நன்றி என டைட்டில் போடுவது நொண்டி, முடம் போன்றது : இளையராஜா!!

ilayaraja

தமிழ் சினிமாவில் இசைஞானியான திகழ்பவர் இளையராஜா. இவர் 950க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் ஒரு ரேடியோ எப்.எம். உடன் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தனது பாணியில் விடையளித்தார்.

இளையராஜாவுக்குள்ளும் ஒரு கதையாசிரியர் இருக்கிறாராமே என்று கேட்டதற்கு, கதையாசிரியர் இருக்கிறார். ஆனால் இசை மட்டும்தான் எனக்கு தெரியும் என்றார்.

மேலும் சமீபத்தில் பாடகர்கள் தாங்கள் பாடும் பாடலுக்கு ரோயல்டி கேட்கிறார்கள். இது தொடர்பாக சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பையும் நடத்தினார்களே என்று கேட்டதற்கு,

அவர்கள் பாடியதற்கு சம்பளம் வாங்குகிறார்கள். வேறு எதற்கு ரோயல்டி. ரோயல்டி கேட்பது அவர்களை உரிமை. அதனால் கேட்கிறார்கள்.

உங்களைப்போன்ற மிகச்சிறந்த படைப்பாளர்களின் படைப்புகளை தற்போது சிலர் பயன்படுத்தி விட்டு நன்றி என்று போட்டுக்கொள்கிறார்களே இதைப்பற்றி தங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு,

இப்படி அடுத்தவர்களின் படைப்புகளை பயன்படுத்திக் கொண்டு நன்றி என்று போடுவது நொண்டி, முடம், கையாளாகாத தனம் என்றார்.

இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது பற்றி தாங்கள் கூறுவதென்ன என்று கேட்டதற்கு,

தொழில்நுட்பத்தை பயன்படுத்துவன் மூலம் இளம் இசையமைப்பாளர்கள் சோம்பேறியாகிறார்கள் என்றார்.

இலங்கையில் சீனத் தலையீடு கவலைக்குரியது – இந்திய பாதுகாப்பு நிபுணர் எச்சரிக்கை..!

baratஇந்தியாவின் பின்வாசலாக உள்ள இலங்கையில், அதிகரித்து வரும் சீனாவின் தலையீட்டை, கவலைக்குரிய விடயமாக இந்தியா எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கொள்கை ஆய்வு மையத்தின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான ஆய்வுப் பேராசிரியர் பாரத் கர்நாட் தெரிவித்துள்ளார்.

நொய்டாவில் உள்ள அமிதி பல்கலைக்கழக சட்ட பாடசாலை மாணவர்கள் மத்தியில் நேற்று நிகழ்த்திய உரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

புவிசார் அரசியலும் இந்திய மூலாபாயமும் என்ற தலைப்பில் உரையாற்றிய பேராசிரியர் பாரத் கர்நாட்,

பாகிஸ்தானுடன் மட்டுமன்றி சீனாவுடனும் கூட, இந்தியா பாதுகாப்பு ரீதியாக செற்பாட்டு நிலையில் இருக்க வேண்டும்.

பாகிஸ்தான், நேபாளம். பூட்டான் உள்ளிட்ட ஏனைய அண்டை நாடுகளிலும் சீனத் தலையீடு அதிகமாக உள்ள நிலையில், இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீதிமன்றில் ஆஜராகுமாறு ஸ்ரீசாந்த், சவானுக்கு உத்தரவு..!

cricketஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகிய 3 வீரர்கள் சிக்கினார்கள்.

இதில் சண்டிலா மட்டும் சிறையில் உள்ளார். மற்ற இருவரும் பிணையில் வெளியே வந்துள்ளனர். இந்த 3 பேரையும் விசாரணை முடியும் வரை கிரிக்கெட் வாரியம் தற்காலிக பணிநீக்கம் செய்தது.

கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைமை அதிகாரி ரவிசவானி இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்து இருந்தார்.

இந்த நிலையில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் ஆகியோருக்கு கிரிக்கெட் வாரியம் சம்மன் அனுப்பி உள்ளது. ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு வருகிற 13–ம் திகதி டெல்லியில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள ஹர்மித்சிங், சித்தார்த் திரிவேதி ஆகியோருக்கும் சம்மன் அனுப்பபட்டுள்ளது.

கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு அவர்களிடம் விசாரணை நடத்துவார்கள். அவர்கள் மீதான நடவடிக்கை பற்றி ஒழுங்கு நடவடிக்கை குழு கிரிக்கெட் வாரிய செயற்குழுவில் பரிந்துரை செய்யும்.

செயற்குழுவில் இறுதி முடிவு எடுக்கப்படும். கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கை குழுவில் துணைத் தலைவர்களான அருண்ஜேட்லி, நிரஞ்சன் ஷா இடம்பெற்று உள்ளனர்.

அமெரிக்க கடற்படையின் இணையத்தை முடக்கிய சிரியா..!

hackedசிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் புரட்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர்.

போர் நிறுத்தத்திற்காக உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றன. இலட்சக்கணக்கான மக்களைப் பலி வாங்கியுள்ள இந்த சண்டையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதியன்று அரசு துருப்பு ரசாயன வெடிகுண்டுகளைப் பயன்படுத்தியதில் 426 குழந்தைகள் உட்பட 1429 பேர் பலியானதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கு தக்க பாடம் புகட்டும்விதமாக சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்க அரசு முடிவெடுத்தது. ஆயினும், இவர்களின் நட்பு நாடான இங்கிலாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போருக்கு எதிராக வாக்களித்ததால் அமெரிக்கா தனியாக இதனை எதிர்கொள்ளும் நிலைமை தோன்றியுள்ளது.

இதனிடையில் அமெரிக்க கடற்படையினரின் வர்த்தக வேலைவாய்ப்புத் தளம் ஒன்று சிரியாவின் எலெக்ட்ரானிக் படை என்ற ஒரு அமைப்பால் நேற்று பல மணி நேரம் முடக்கப்பட்டது. அவர்களால் வெளியிடப்பட்ட ஏழு வாக்கியங்கள் கொண்ட செய்தி மட்டுமே அந்த இணையதளத்தில் தொடர்ந்து வெளியானது.

இந்த அமைப்பு ஆறு புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது. அந்தப் படங்களில் உள்ள வாசகங்கள் சிரியாவில் இருக்கும் அல்கொய்தா தீவிரவாதிகளுக்காக நான் போராடமாட்டேன் என்று கையினால் எழுதப்பட்டிருந்தது. இதன்மூலம் சிரியா அரசை எதிர்த்து அல்கொய்தா தீவிரவாதிகள் போரிட்டுக் கொண்டிருப்பதை அந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

அமெரிக்கா, சிரியா ஆகிய இரு நாடுகளுக்கும் பொதுவான எதிரி தீவிரவாதம்தான் என்றும், சிரியாவின் துருப்புகள் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டுபவை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், சமூக இணையதளமான டுவிட்டர் மற்றும் பல ஊடக தளங்களையும் முடக்கியதற்கு தாங்கள் பொறுப்பேற்பதாக எஸ்.ஈ.ஏ. தெரிவித்துள்ளதாக சீனப் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அரசின் ராணுவத் தலைமையகமான பென்டகனின் இணையதளப் பிரிவு இதனால் பாதிக்கப்படவில்லை என்று கடற்படைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் எரிக் பிளானகன் தெரிவித்துள்ளார்.

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 10 இலங்கை மீனவர்கள் கைது!!

Indian-fishermen

இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்படி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவேறு பகுதிகளில் வைத்து இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஒகஸ்ட் 31ம் திகதி விஸ்வாஸ்ட் (ICGS Vishwast ) பகுதியில் வைத்து ஒரு மீன்பிடி படகில் இருந்து ஐந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இன்று விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு மீன்படி படகில் இருந்து ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.