கொழும்பில் நடந்த பயங்கரம் : கடத்தப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்ட நபர்!!

கொழும்பில்..

கடுவெல – கொரதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினராக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கொரதொட்ட பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்திச் சென்று சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஹெல்மெட் அணிந்திருந்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களால் அவரது தலையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபருக்கு 34 வயது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழில் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!!

ஜெயபாலன் சிவதர்சன்..

யாழ்ப்பாணம் – அனலைதீவில் நேற்று புதன்கிழமை மாலை 5:00மணியளவில் உழவு இயந்திரத்திலிருந்து தூக்கி வீசிய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அனலைதீவு பகுதியைச் சேர்ந்த ஜெயபாலன் சிவதர்சன் வயது 25 என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார் .

உயிரிழந்தவரின் சடலம் உடல் கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இளஞனின் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் மேலதிக விசாரணைகளை அனலைதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

வவுனியா வைத்தியசாலையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்கள் போராட்டம்!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று (11.01.2024) காலை 10 மணியளவில் வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சம்பள அதிகரிப்பு, ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய், வாழ்வாதாரத்தினை அதிகரி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 30 நிமிடங்கள் அமைதியான முறையில் இப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

வைத்தியசாலை சிற்றூழியர்கள் சுகயீன விடுமுறை வழங்கி கடமையிலிருந்து விலகி குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

2024ஆம் ஆண்டின் பிரபலமான 10 தனிப் பயண சுற்றுலா பட்டியலில் இலங்கை பிடித்த இடம்!!

இலங்கையில்..

2024ஆம் ஆண்டின் மிகவும் பிரபலமான 10 தனிப் பயண சுற்றுலா இலக்குகளுக்கான பட்டியலில் இலங்கை 4 வது இடத்தைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல வணிக சஞ்சிகையான ஃபோர்ப்ஸ் இந்த தரப்படுத்தலை மேற்கொண்டுள்ளது.

30 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட சுற்றுலாப் பயணிகளை சிறு குழுவாக இணைத்து அவர்களுக்கான பயணங்களை ஏற்பாடு செய்யும் ஃப்ளாஷ் பேக் என்ற நிறுவனத்தின் சமீபத்திய கணக்கெடுப்புக்கு அமைய இந்த தரப்படுத்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் தனிப் பயணிகளுக்கு 4 வது மிகவும் பிரபலமான இடமான இலங்கை, பயணிகளுக்கு மெதுவான ரயில் பயணம் உள்ளிட்ட முக்கிய பயணப் போக்கை அனுபவிக்க வாய்ப்பளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானதன் பின்னர், இலங்கை மீண்டும் ஒரு பாரிய மீட்சியை நோக்கி முன்னேறி வருகின்ற நிலையில் இந்த தரப்படுத்தல் மேலும் பல சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கு வழிவகுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், ஜப்பான், அர்ஜென்டினா, எகிப்து, கொலம்பியா, ஈக்வடோர், ஜோர்தான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் பாலி தீவுகளுக்கு மத்தியில் இலங்கை 4 வது நாடாக பட்டியல் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளவத்தையில் உயிரிழந்த யாழ் பெண் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

வெள்ளவத்தையில்..

கொழும்பு, வெள்ளவத்தை உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் 8வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வெள்ளவத்தை, தயா வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 49 வயதுடைய பிரேமிலா ஞானகணேசன் என்ற ஆசிரியையே உயிரிழந்துள்ளார்.

பம்பலப்பிட்டி ராமநாதன் இந்து கல்லூரியின் ஆசிரியை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியை சேர்ந்தவர் ஆவார். உயிரிழந்த ஆசிரியை திருமணமான பெண் என்பதுடன் வர்த்தகரான அவரது கணவர் கடந்த 7ஆம் திகதி தனிப்பட்ட தேவைக்காக யாழ்ப்பாணம் சென்றிருந்தார். சம்பவத்தன்று இவரது மகன் வீட்டில் இருந்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் க.பொத. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவன் எனவும், வீட்டில் படித்துக் கொண்டிருந்தாத தெரிவிக்கப்படுகிறது. ஆசிரியர் வீட்டில் இருந்த நாற்காலியை எடுத்துக்கொண்டு 8ஆம் மாடிக்கு சென்றுள்ளதாகவும் அங்கிருந்து ஏறி கீழே குதித்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தரப் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த மாணவன் தனது தாயின் மரணத்தினால் மிகவும் அதிர்ச்சியடைந்த நிலையில் இருந்த போதிலும் நேற்று நடைபெற்ற பரீட்சையில் பங்கேற்கச் செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரை மாய்த்துக் கொண்ட ஆசிரியை மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரை மாய்த்துக் கொண்ட ஆசிரியை உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி ஜனக கொடிகார விசாரணைகளை மேற்கொண்டார்.

வரி செலுத்த தவறியவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!!

வரி..

வரி செலுத்தத் தவறிய வர்த்தகர்கள் குறித்து ஆய்வு செய்ய குழுவொன்றை நியமிக்க உள்நாட்டு இறைவரி திணைக்களம் முடிவு செய்துள்ளது. இவ்வாறான வர்த்தகர்கள் வரி செலுத்தாததற்கான காரணங்களை உரிய குழு ஆராயும் என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பதிவு செய்து வரி செலுத்தாத வர்த்தகர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் வரிக் கோப்புகளைத் திறக்கத் தொடங்கியுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், ஆண்டுக்கு 12 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த வேண்டும் என்றும், ஏனைய நபர்கள் வரி செலுத்தும் அடையாள எண்ணைப் பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பெண்ணை கொலை செய்துவிட்டு வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றவர் விமான நிலையத்தில் கைது!!

கஹதுடுவவில்..

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் பெண்ணொருவரை கொடூரமாக கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

கஹதுடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் நேற்று மாலை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் ஊழியராக பணியாற்றிய 41 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மடபாத்த, பிரியன்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண், வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, ​​தாக்கப்பட்டுள்ளார். விசாரணையில், திருமணத்துக்கு புறம்பான தொடர்பு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த பெண்ணைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் 45 வயதுடைய நபர், நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பல வருடங்களாக வெளிநாட்டில் வசித்த அவர் நாட்டிற்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடுதியாக அதிகரித்த சிவப்பு சீனியின் விலை!!

இலங்கையில்..

வற் வரி 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் சந்தையில் ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை அதிகரித்துள்ளது. நேற்றைய(09) நிலவரத்தின் படி சிவப்பு சீனி ஒரு கிலோ கிராமின் விலை 415 ரூபாவாக அதிகரித்துள்ளது. பெல்வத்த மற்றும் செவனகல ஆகிய தொழிற்சாலைகளில் இருந்து மாத்திரமே சிவப்பு சீன உற்பத்தி செய்யப்படுகின்றது.

இந்தநிலையில், முந்தைய விலையில் இருந்து பதினெட்டு வீதம் (18%) வற் வரியும் 2.6% சமூக பாதுகாப்பு வரியும் சேர்த்து ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை 390 ரூபாவைத் தாண்டியுள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர். அதனுடன் தமது இலாபத்தையும் சேர்த்த பின்னர் ஒரு கிலோ சிவப்பு சீனியின் விலை 415 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி சந்தையில் 265 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சிவப்பு சீனியின் விலையை விட இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை சுமார் 150 ரூபா குறைவாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வாழ வழிதேடி சவூதிக்கு சென்ற இலங்கையருக்கு நேர்ந்த துயரம்!!

அரேபியாவில்..

சவூதி அரேபியாவில் பணிபுரியும் போது விபத்துக்குள்ளான இலங்கையர் ஒருவர் தற்போது மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் பஸ்யால பிரதேசத்தை சேர்ந்த ரசிந்த என்ற நபரே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பாதிப்புக்குள்ளானவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ரசிந்த பணிபுரிந்த நிறுவனம் அவரை வைத்தியசாலையில் இருந்து எவ்வித வசதிகளும் அற்ற இடத்தில் தடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் தற்போது ஒரே இடத்தில் இருக்கும் ரசிந்தவை கவனிப்பதற்கு அங்கு யாரும் இல்லை என இலங்கையில் இருக்கும் அவரது மனைவி கூறுகிறார்.

அத்துடன் வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்ற வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்துக்கு இது தொடர்பில் அறிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் வாழ வழிதேடி அரேபியா சென்ற நபர் விபத்தில் சிக்கிய சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்குள்ள இலங்கையர் ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

கேரள ரயில் நிலையமாக மாறிய மருதானை ரயில் நிலையம்!!

கொழும்பில்..

கொழும்பு மருதானை ரயில் நிலையம் கேரளாவின் கோழிக்கோடு ரயில் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த ரயில் மார்க்கமாக பயணித்த பயணிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து தெரியவந்ததாவது, இந்திய திரைப்படக் காட்சியொன்று மருதானை ரயில் நிலையத்தில் எடுக்கப்படுகிறது.

இதன் காரணமாக மருதானை ரயில் நிலையத்தின் பெயர் பலகை கேரளாவில் உள்ள கோழிக்கோடு ரயில் நிலையமாக பெயர் மாற்றப்பட்டு இங்கு கரிக்கோச்சி ரயில் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் மக்கள் முன்னிலையில் இடம்பெற்ற பயங்கரம் : துடிதுடித்து உயிரிழந்த இளம் பெண்!!

கொழும்பில்..

நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்த வேளையில் காரில் வந்த சந்தேகநபர் ஒருவர் கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் சிவில் விமான சேவையின் பெண் உத்தியேகத்தர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். சம்பவத்தில் பிலியந்தலை, மடபட, ஜபுரலிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 39 வயதான ஒரு குழந்தையின் தாயான சிவில் விமான சேவை அதிகாரி துலாஞ்சலி அனுருத்திகா என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த பெண் வைத்தியர் ஒருவரின் மனைவி என்றும் , சிவில் விமான சேவை அதிகார சபையில் பணியாற்றுபவர் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் பெண் தனது முடித்துக் கொண்டு அலுவலக சேவை பேருந்தில் மென்ஹோ ரண கொழும்பு வீதிக்கு வந்து, ஹொரணை கொழும்பு வீதிக்கு வந்து கொண்டிருந்தார்.

இதன்போதுபோது காரில் வந்த நபர் ஒருவர் கத்தியால் பெண்மீது குத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அத்துடன் தாக்குதலை நடத்தியவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். கஹதுடுவ அதிவேக வீதி நுழைவாயிலில் இருந்து மென்ஹோ ரண கொழும்பு வீதிக்கு பஸ்ஸில் வந்த போது காரில் வந்த நபர் ஒருவர் அவரது கழுத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையாளியின் காரின் பதிவு எண் அனுராதபுரத்தைச் சேர்ந்தது என விசாரணையில் கண்டறியப்பட்டது. அதேவேளை திருமணத்திற்குப் புறம்பான உறவே இந்தக் கொலைக்குக் காரணம் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதோடு சந்தேகநபர் விசா ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல வர்த்தக நிலைய கட்டிடம் ஒன்றில் அவரது அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில் கொலையாளி நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட சமயத்தில் இன்று (10) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக்ல பொலிஸார் கூறியுள்ளனர்.

மகனை கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற தந்தை!!

ஆந்திராவில்..

ஆந்திர மாநிலத்தில் வசித்து வருபவர் சைதன்யா . இவருக்கு வயது 33. இவர் சென்னை தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார். சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கம் பார்வதி நகர் மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். நள்ளிரவில் சைதன்யா தனது மூத்த மகன் 8 வயது பத்ரியின் கழுத்தை நெரித்து, தூக்கில் தொங்கவிட்டும் கொலை செய்துள்ளார்.

வீட்டில் மற்றொரு அறையில் இளைய மகன் கவுசிக்குடன் தூங்கிக் கொண்டிருந்த மனைவி வைதேகிக்கு இவை எதுவும் தெரியவில்லை. மெரினாவுக்கு சென்ற சைதன்யா,அங்கிருந்து செல்போனில் தனது நண்பரிடம் “என் மகனை கொன்றுவிட்டேன். நானும் சாகப்போகிறேன். என் மனைவிக்கு உதவி செய்யுங்கள்” எனக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர், உடனே காவல்துறைக்கு தகவல் அளித்தார். இதன் பேரில் மெரினா கடற்கரையில் உள்ள ரோந்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த போலீசார் கடற்கரையில் பதற்றத்துடன் நின்ற சைதன்யாவை தடுத்து பத்திரமாக மீட்டு விசாரித்தனர். விசாரணையில் அவர்,மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்ய வந்ததாக கூறியுள்ளார். சைதன்யாவின் வீட்டுக்கு சென்று அவரது மனைவி வைதேகியிடம் விசாரணை நடத்த சென்ற போது அவரது மனைவிக்கு தெரியவந்தது.

அடுத்த அறையில் தூக்கில் பிணமாக தொங்கிய மகனின் உடலை பார்த்து வைதேகி கதறி துடித்தார். இதனையடுத்து பத்ரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

ஆன்லைன் சூதாட்டத்தில் சைதன்யா அதிக அளவில் பணத்தை இழந்ததாகவும், இதனால் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். தனது சொத்துக்கள் முழுவதையும் விற்றும், கடனை அடைக்க முடியவில்லை.

கடன் தொல்லை காரணமாக விடுப்பு எடுத்துவிட்டு சைதன்யா சொந்த ஊருக்கு சென்றார். டிசம்பர் 20ம் தேதி மீண்டும் சேலையூர் வந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொல்லை கொடுத்தனர்.

கடனை அடைக்க முடியாமல் திணறிய சைதன்யா, தான்உயிரை இழந்து விட்டால் அந்த வேலை மனைவிக்கு கிடைத்துவிடும். இளைய மகனை அந்த பணத்தில் அவர் காப்பாற்றி கொள்வார் என திட்டமிட்டுள்ளார்.

இதனால் மூத்த மகனை கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயற்சித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். சைதன்யா வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது.

அதில் “என் மூத்த மகன் பத்ரி என் மீது அதிக பாசம் கொண்டவன். என்னைவிட்டு இருக்கவே மாட்டான். அதனால் என்னுடன் அவனை அழைத்து செல்கிறேன். என் மனைவி 2வது திருமணம் செய்து கொண்டு மகன் கவுசிக்கை நல்லபடியாக பார்த்து கொள்ள வேண்டும்” என எழுதி இருந்தார்.

திடீரென கல்லூரியின் 6வது மாடியிலிருந்து குதித்த கல்லூரி மாணவி!!

தெலுங்கானாவில்..

தெலுங்கானா முழுவதுமே நேற்று அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது. கல்லூரி ஒன்றின் 6வது மாடியில் இருந்து, பல்கலைக்கழக மாணவி திடீரென குதித்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி தெலுங்கானா மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பட்டாஜ்செருவில் கீடெம் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் மாதாபூர் பகுதியைச் சேர்ந்த ரேணு ஸ்ரீ என்ற மாணவி பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வகுப்பு முடிந்த பிறகு கல்லூரியின் 6வது தளத்திற்கு சென்ற ரேணு ஸ்ரீ திடீரென்று கைப்பிடி சுவர் மீது ஏறி அமர்ந்தார்.

அப்போது மாணவியின் தற்கொலை முயற்சியை பார்த்த சக மாணவ, மாணவிகள் குதிக்க வேண்டாம் என அவரை கேட்டுக்கொண்டனர். ஆனாலும் அவர் கல்லூரியின் 6வது தளத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவி ரேணு ஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் உயரிய விருது பெறும் ஈழத்தமிழர்!!

கலாநிதி சபேசன்.

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒருவருக்கு பிரித்தானியாவில் உயரிய விருது கிடைக்கவுள்ளதாக தகவலறியப்பட்டுள்ளது. பொருட்களின் இருப்பிடத்தை கண்டரிவதற்கான புதிய மின்னணு பொறிமுறையொன்றை கண்டுபிடித்த இலங்கையரை பாராட்டி பிரித்தானியா உயரிய விருது வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட கலாநிதி சபேசன் சிதம்பர என்பரே இந்த சாதனையை படைத்துள்ளார். மருத்துவ பீடங்களில் இந்த தொழிநுட்பத்தை பயன்படுத்தி மருத்துவ உபகரணங்களை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த தொழிநுட்பத்தை உலகிலுள்ள அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்ப்பதே தமது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் கரையொதுங்கிய புத்த பெருமான் அமர்ந்திருக்கும் மிதப்பு ரதம்!!

யாழில்..

யாழ். வடமராட்சி பகுதியில் புத்த பெருமான் அமர்ந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட ரதம் ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் அதனை மக்கள் பலரும் அதிசயமாக பார்வையிட்டு வருகின்றனர். சமீப காலமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் பல்வேறு மர்ம பொருட்கள் உட்பட இவ்வாறான அலங்கரிக்கப்பட்ட மிதப்புக்கள் கரையொதுங்கி வருகின்றது.

யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரையில் சந்தேகத்துக்கிடமான படகொன்று கரையொதுங்கியுள்ளது. மேலும், வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் பௌத்த கொடியுடன் மிதப்பு ஒன்றும், மூடிய கொள்கலன் ஒன்றும் கரை ஒதுங்கியிருந்தது. மறுபுறம் நாகர்கோவில் பகுதியிலும் மரத்தினாலான மிதப்பு ஒன்றும் அண்மையில் கரை ஒதுங்கியமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் செங்குத்தாக கவிழ்ந்த முச்சக்கர வண்டி!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று செங்குத்தாக கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் இரு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் நேற்று திங்கட்கிழமை (08.01) காலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.